Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மகா சர்ச்சை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம் 18 - பாவத்தின் மர்மம்

    ஜனங்களின் கவனத்தை இயேசுவினின்று திருப்பி, மனிதர்களிடத்தில் கொண்டுவந்து, தனி நபரின் பொறுப்புகளை அழித்துவிடவேண்டும் என்பது, சாத்தானின் எண்ணமாக இருந்து வந்தது. தேவகுமாரனை சோதித்தபோது, சாத்தான், தனது எண்ணங்களில் தோல்வியடைந்தான். ஆனால், வீழ்ந்த மானிடனிடம் சற்றே வெற்றி கண்டான். கிறிஸ்தவ தத்துவங்கள் கெட்டுப்போயிற்று. போப்பும், ஆசாரியர்களும் தங்களையே உயர்த்திக்கொண்டார்கள். பாவ மன்னிப்பை பெறுவதற்காக, இயேசுவை நோக்க அவசியமில்லை என்றும், தங்களைப் பார்த்தாலே போதும் என்றும் போதித்தார்கள். வேதத்தை புறம்பே வைத்துவிட்டார்கள்.GCt 51.1

    ஜனங்கள் முழுமையாக ஏமாற்றப்பட்டார்கள் நிஜத்தில் சாத்தானின் பிரதிகளாக இருந்த ஆசாரியர்களை தேவனின் பிரதிகளாக ஏற்றுக்கொள்ளும்படி போதிக்கப் பட்டார்கள். பிரதான குருவையும், ஆசாரியர்களையும் வணங்கியபொழுது சாத்தானையே வணங்கினார்கள். தேவ வசனத்தை ஜனங்கள் நாடியபொழுது, அஃது அவர்களுக்கு கிடைக்காமல் செய்தார்கள். ஏனெனில், வேதத்தைப் படித்தால், தங்களுடைய சாயம் வெளுத்து, சத்தியம் வெளிச்சமாகி விடும் என்று பயந்தார்கள். எனவே, இந்த ஏமாற்றுக்காரர்களையே நோக்கி, இவர்களின் வாயிலிருந்து புறப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் தேவனிடத்தில் இருந்து வந்ததாக நம்பவேண்டும் என்று ஜனங்கள் போதிக்கப்பட்டார்கள். தேவன் மாத்திரமே கட்டுப்படுத்தவேண்டிய மனதை இவர்களே கட்டுப்படுத்தி வந்தார்கள். ஒருவேளை, தன்னுடைய மனச்சாட்சிக்கு அஞ்சி மாறாக முடிவெடுக்க ஒருவன் துணிவானானால், இயேசுவின் மீது காட்டப்பட்ட அதே கோபத்திற்கும் வெறுப்பிற்கும் அவன் ஆளாக நேரிடும். இச்சமயங்களில் சாத்தான் மிகுதியாக வெற்றிக் கண்டதை நான் கண்டேன். தங்களுடைய விசுவாசத்தின் தூய்மையை காத்துக்கொள்ள துடித்த திரளான கிறிஸ்தவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள்.GCt 51.2

    பரிசுத்த வேதாகமம் வெறுக்கப்பட்டு, முற்றிலுமாக அழிக்கப்படுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களுக்காக கிறிஸ்து, தம்மையே அளிக்க முன் வந்தார். கிறிஸ்துவின் மரணம் பிதாவின் கற்பனையை அழித்துவிடவில்லை. மாறாக, அவருடைய மரணம், கற்பனைகளை கனப்படுத்தி, கீழ்ப்படிதலின் அவசியத்தையும் உணர்த்தியது. திருச்சபை தூய்மையாகவும், கற்பனைகளில் உறுதியாகவும் இருந்திருந்தால், சாத்தான் அவர்களை வஞ்சித்திருக்கக் கூடாமல் போய் இருக்கும். இப்புதிய திட்டத்தில், தேவ இராஜ்ஜியத்தின் அஸ்திவாரத்தை நேரிடையாக தாக்கினான். அவனுடைய கலகம் அவன் பரலோகிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு வழி வகுத்தது. அவனுடைய கலகத்திற்குப் பின், தன்னை காத்துக் கொள்வதற்காக, கற்பைனையை சற்றே மாற்றி அமைக்க வேண்டும் என விரும்பினான். ஆனால் தேவனோ, கற்பனை மாற்றப்படக் கூடியதல்ல என்று திட்டமாக கூறிவிட்டார். எனவே, கற்பனையை மீறுவதற்கு ஏதுவாக ஜனங்களை திசை திருப்பிவிட்டால், அவர்களை எளிதாக தன் வசப்படுத்திக் கொள்ளலாம் என்று சாத்தான் நினைத்தான். கற்பனையை மீறுகின்ற யாவரும் மரித்தாக வேண்டுமே!GCt 51.3

    சாத்தான் இன்னமும் ஆழமாக செல்ல யோசித்தான். சிலர், தேவ கற்பனையின் மீது எல்லையற்ற ஈடுபாட்டுடன் இருந்ததினால், அவர்களை தன் வசப்படுத்திக் கொள்ள இயலாமல் சாத்தான் தவித்தான். எனவே, தேவன் வெளிப்படக்கூடிய கற்பனையாகிய நான்காம் கற்பனையின் மீது தன் கவனத்தை திருப்பினான். பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கின ஒரே தேவனை காட்டிய ஓய்வுநாளின் கற்பனையை சிதைக்க முற்பட்டான். அப்படியே, இயேசுவின் மகிமையான உயிர்த்தெழுதலைக் காட்டி, ஏழாம் நாளிலிருந்து ஓய்வுநாளை முதலாம் நாளுக்கு மாற்றும்படி தூண்டினான். தன்னுடைய நோக்கம் நிறைவேற, இயேசுவின் உயிர்த்தெழுதலை சாத்தான் பயன்படுத்திக்கொண்டான். கிறிஸ்துவின் நண்பர்கள் கூட இக்குழப்பத்திற்கு ஆளானதில் சாத்தானின் குழுவிற்கு ஏக மகிழ்ச்சி. சிலர் பயந்தாலும், பிறர் ஏற்றுக்கொண்டார்கள். இத்தவறுகள் ஏற்கப்பட்டு, உற்சாகத்துடன் ஆதரிக்கவும் பட்டன.GCt 52.1

    வேத வாசிப்பு தடை செய்யப்பட்டது. கிடைத்த இப்பரிசுத்த புத்தகத்தின் பிரதிகள் அனைத்தும் சுட்டெரிக்கப் பட்டன. ஆகிலும், அவருடைய வசனத்தை தேவன் பாதுகாத்தார். வெவ்வேறு சமயங்களில் வெகு சில வேத பிரதிகளே இருந்தன. ஆகிலும், தேவன் தமது வார்த்தையை அழிக்க விடவில்லை. கடைசி நாட்களிலே ஏறக்குறைய அனைத்து இல்லங்களிலும் இப்புத்தகம் இருக்கும் அளவிற்கு தேவன் இதனை பெருக்கினார். வெகு சில பிரதிகள் மாத்திரமே இருந்த நாட்களில், அதனை வாசித்தவர்கள் அதன் மீது வைத்த வாஞ்சையையும், அதனை வாசித்தவர்கள் தங்களுக்கு தேவனோடும், இயேசுவோடும், சீடர்களோடும் சம்பாஷிக்கும் திருப்தியை அளிப்பதையும் நான் கண்டேன். அநேகரின் ஜீவன் இதனிமித்தமாக அழிக்கப்பட்டது. வேதப்புத்தகம் மிக இரகசியமாக வாசிக்கப்பட்டது. வாசிப்பது கண்டுபிடிக்கப்பட்டால், தலை துண்டிக்கப்படும் இடத்திற்கோ, கழுமரத்திற்கோ, பசியால் வாடிச் சாவதற்கோ அவர்கள் இழுத்துச் செல்லப்படும் நிலை இருந்தது.GCt 52.2

    மீட்பின் திட்டத்தை சாத்தானால் தடுக்க இயலவில்லை. இயேசு, சிலுவையில் மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இச்சம்பவத்தையும் தனக்கே சாதகமாக்கிக் கொள்ளமுடியும் என்று தன் தூதர்களிடம் சொல்லியிருந்தான். இயேசுவின் மரணத்தோடு முற்றுப்பெற்றிருந்த யூத பலிகளும் காணிக்கைகளும் மட்டுமல்லாது, பத்து கற்பனைகளும் முற்றுப்பெற்றதாக அறிவித்து, போதிக்கவேண்டும் என திட்டமிட்டான்.GCt 52.3

    சாத்தானின் இந்த உபாயத்திற்கு அநேகர் அடிமைகளானதை நான் கண்டேன். தேவனின் பரிசுத்த கற்பனைகள் மிதிக்கப்படுவதை, பரலோகமே வெறுப்புடன் கலந்த கோபத்தோடு பார்த்துக்கொண்டிருந்தது. தேவ கற்பனைகளின் இயல்பை இயேசுவும், தூதர்களும் நன்கு அறிந்திருந்தார்கள். இக்கற்பனை மாற்றப்படவோ அழிக்கப்படவோ தேவன் ஒருக்காலும் சம்மதியார். மனிதனின் சீர்கேடான இந்த நிலைதான் பரலோகத்தில் மிகுந்த துக்கத்தை உண்டாக்கியது. முடிவாக, இயேசு, கற்பனைகளை மீறியவர்களுக்காகமரிப்பதற்காக தம்மையே ஒப்புகொடுத்தார். அவருடைய வார்த்தைகளில் காட்டப்பட்டிருந்த தேவனின் சித்தம், பிழைகளாலும் சம்பிரதாயங்களினாலும் மூடப்பட்டு, இதுதான் தேவனுடைய உண்மையான கற்பனை என்று போதிக்கப்பட்டது. பரலோகத்தை எதிர்த்து செய்யப்பட்ட இந்த ஏமாற்று வேலை, இயேசுவின் இரண்டாம் வருகை மட்டும் அநேகரை வஞ்சித்துக்கொண்டே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆகிலும், தேவனுக்கேற்ற விசுவாச சாட்சிகள் தோன்றிய வண்ணமே இருந்தனர். திருச்சபையின் துன்பங்களின் மத்தியிலும், இருளின் மத்தியிலும், தேவனுடைய உண்மையான கற்பனைகளை முழுமையாக கடைபிடித்து வந்த திரளான சாட்சிகள் வந்த வண்ணமே இருந்தனர்.GCt 52.4

    மகிமையின் ராஜாவின் பாடுகளையும் மரணத்தையும் ஆச்சரியத்தோடு பார்த்த தேவதூதர்கள், அவர் மரணக்கட்டுகளை தறித்து உயிருடன் எழும்பி வந்ததை ஆச்சரியத்தோடு பார்க்காதிருந்ததை நான் கவனித்தேன். இந்த இரண்டு நிகழ்ச்சிகளின் ஞாபகாரத்தமாக அமைந்தது கிறிஸ்துவின் சிலுவை மரணமே. ஆகிலும், இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் தேவனுடைய கற்பனையை மாற்றவோ அழிக்கவோ எத்தனிக்கவில்லை என்பதையும், மாறாக, கற்பனையின் மாறாத தன்மைக்கு இவைகள் பெரும் சாட்சிகளாக இருந்தது என்பதையும் நான் கண்டேன்.GCt 53.1

    முக்கியம் வாய்ந்த இவ்விரண்டு நிகழ்வுகளுமே தங்களுடைய ஞாபகார்த்த சின்னங்களை கொண்டிருந்தன. கர்த்தரின் இராப்போஜனத்தில் பங்கு கொள்வதின் மூலமாக, கர்த்தரின் வருகை மட்டும் அவருடைய மரணத்தை நாம் நினைவுக் கொள்கிறோம். இந்த ஞாபகார்த்த நிகழ்ச்சியின் மூலமாக அவருடைய பாடுகளும் மரணமும் நமது உள்ளங்களில் புதுமைப் படுத்தப்படுகின்றன. ஞானமுழுக்கின் மூலமாக, கிறிஸ்துவைப் போல அடக்கம் செய்யப்பட்டு, அவர் உயிர்த்தெழுந்ததின் அடையாளமாக, தண்ணீரிலிருந்து ஒரு புதுவாழ்வை தொடங்குவதற்காக வெளியே வருகிறோம்.GCt 53.2

    கர்த்தரின் கற்பனைகள் நித்தியமாக இருக்கப்போவதை நான் கண்டேன். இப்பூமியின் அஸ்திபாரங்கள் போடப்பட்ட சிருஷ்டிப்பின் நாளிலே பரலோகின் குடும்பமே களிகூர்ந்தது. அப்பொழுதே ஓய்வுநாளின் அஸ்திபாரமும் போடப்பட்டது. ஆறு நாட்களில் தனது சிருஷ்டிப்பின் வேலைகளை முடித்துவிட்டு, ஏழாம் நாளில் கர்த்தரே ஓய்ந்திருந்து, அதனை ஆசீர்வதித்து, பரிசுத்தமாக்கினார். மானிடனின் வீழ்ச்சிக்கு முன்பே, ஏதேன் தோட்டத்தில், ஆதாமும், ஏவாளும், பரம சேனைகளும், ஓய்வு நாளை அனுசரித்தார்கள். தேவன் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்து, அதனை ஆசீர்வதித்து, பரிசுத்தப்படுத்தியதினால், ஓய்வுநாள் ஒருபோதும் அழிந்துப்போவதில்லை என்று நான் கண்டேன். மாறாக, பரிசுத்தவான்களும், தேவதூதர்களும் கர்த்தரை கனப்படுத்தும்படியாக, ஓய்வுநாளை நித்தியமாக அனுசரிப்பார்கள் என்றும் கண்டேன்.GCt 53.3

    பார்க்க : தானியேல் 7 : 1-28
    II தெசலோனிக்கேயர் 2 : 1-17