Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மகா சர்ச்சை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    அத்தியாயம் 41 - இரண்டாம் மரணம்

    சாத்தான் நடுவில் நுழைந்து, ஜனக்கூட்டத்தை குழப்பிவிட முயற்சி செய்தான். ஆனால், பரலோகத்திலிருந்து வந்த அக்கினி அவர்கள் அனைவரையும் பட்சித்துப் போட்டது. சிலர் துரிதமாக அழிந்துப்போனதையும், சிலர் நீண்ட நேரம் தவித்ததையும் நான் கண்டேன். சரீர கிரியைகளின் பிரகாரமாக அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். சிலர் அநேக நாட்களாக எரிந்துக்கொண்டிருந்தார்கள். “அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய அக்கினி அவியாமலும் இருக்கும்” என்று தூதன் கூறினான்.GCt 110.1

    சாத்தானும் அவனுடைய தூதர்களும் நீண்ட நாட்களாக வேதனை அனுபவித்தார்கள். சாத்தான் தன்னுடைய பாவ பாரத்தை மட்டுமல்லாது, இரட்சிக்கப்பட்ட யாவருடைய பாவபாரங்களையும் சேர்த்து, தாங்கவேண்டியிருந்தது. அவன் செய்வித்திருந்த ஆத்தும அழிவுகளுக்காகவும் அவன் தண்டனை அனுபவிக்கவேண்டும். பின்பு, சாத்தானும், துன்மார்க்கரும் அழிக்கப்பட்டார்கள். தேவனின் நீதி விளங்கிற்று. பரம தூதர்களும், இரட்சிக்கப்பட்ட பரிசுத்தவான்களும், உரத்த சத்தத்தில், “ஆமென்” என்றார்கள்.GCt 110.2

    சாத்தான் வேரென்றும், அவனுடைய பிள்ளைகள் கிளைகள் என்றும் தேவதூதன் விளக்கினான். நித்திய மரணத்தை அவர்கள் அடைந்தாயிற்று. அவர்கள் இனி உயிர்த்தெழப்போவது இல்லை. சுத்தமான உலகத்தை தேவன் பெற்றிருப்பார். துன்மார்க்கரை அழித்த நெருப்பு, உலகின் அழுக்கை சுட்டெரிப்பதை நான் கண்டேன். பின்பு நான், உலகம் சுத்திகரிக்கப்பட்டிருப்பதை கண்டேன். சாபத்தின் யாதொரு அடையாளமும் இல்லாதிருந்தது. உடைந்து, கரடுமுரடாக இருந்த பூமி, இப்பொழுது, சீரான, பரந்த பூமியாக இருந்தது. தேவனின் முழு பிரபஞ்சமும் சுத்தமாய் இருந்தது. எழுந்திருந்த மகா சர்ச்சையும் நிறைவுபெற்றிருந்தது. கண்கள் கண்ட இடமெல்லாம் அழகாகவும், பரிசுத்தமாகவும் இருந்தது. மீட்கப்பட்ட யாவரும் - சிறியோரிலிருந்து பெரியோர் மட்டும் தங்கள் கிரீடங்களை இறக்கி வைத்து, தங்கள் அதிபதியாகிய தேவன் முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து, பணிந்துக் கொண்டார்கள். அழகான புதிய பூமி பரிசுத்தவான்களின் நிரந்தர குடியிருப்பாக மாறிற்று. கர்த்தரின் பரிசுத்தவான்களின் கரத்தில் இந்த ராஜ்ஜியம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியமும், பரலோகத்தின் கீழ் இருந்த சகல அதிகாரமும் பரிசுத்தவான்களின் கைகளில் கொடுக்கப்பட்டது.GCt 110.3

    பார்க்க : ஏசாயா 66 : 24
    தானியேல் 7 : 26-27
    வெளிப்படுத்தல் 20 : 9-15; 21:1; 22:3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents