Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மகா சர்ச்சை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம் 31 - பேராசை

    சாத்தானும் அவனுடைய தூதர்களும் கலந்தாலோசிப்பதை நான் கண்டேன். இயேசுவின் வருகைக்காக காத்திருப்பவர்களுக்காகவும், அவருடைய கற்பனைகளை உண்மையாக கைக்கொள்கிற வர்களுக்காகவும் சிறப்பான கண்ணிகளை வைக்கும்படி சாத்தான் கட்டளையிட்டான். சபைகள் அனைத்தும் உறங்கிக்கொண்டிருக்கின்றன என சாத்தான் தனது தூதர்களிடம் அறிவித்தான். எனவே, தனது வல்லமையை அதிகரித்து, மாயையான அற்புதங்களையும் அதிகரித்து, சபைகளை தன் வசப்படுத்திக்கொள்ள முடியும் என்று கூறினான். ஆனால், ஓய்வுநாளை கடைபிடிப்போரை தான் வெறுப்பதாக விளம்பினான். ஏனெனில், அவர்கள் சாத்தானுக்கு எதிராக வேலை செய்து, சாத்தான் வெறுக்கும் ஓய்வுநாள் கற்பனையை கடைபிடிக்கும்படியாக வலியுறுத்தி வந்தார்கள்.GCt 89.1

    மேலும் சாத்தான் தனது தூதர்களுக்கு கொடுத்த அறிவுரைகள் யாவன :GCt 89.2

    உலகத்தின் ஐசுவரியவான்களை ஆசைகளால் நிரப்புங்கள். உலக ஆசைகளில் அவர்களுடைய மனதை லயிக்கச் செய்துவிட்டால், அவர்கள் நம் வசம்தான். அவர்களுக்கு பிரியமானதையே அவர்கள் சொல்லக்கூடும். ஆனாலும், கிறிஸ்துவின் இராஜ்ஜியத்தைக் காட்டிலும் அவர்களுக்கு பண ஆசையை தூண்டிவிடுங்கள். அவர்களுக்கு முன்பாக உலகத்தை வசீகரப்படுத்தி காட்டுங்கள். அவர்கள் அதனை விரும்பவும், வணங்கவும் செய்யுங்கள். அவர்களுக்கு உண்டான வழிகளெல்லாம் நம் வசமாக வேண்டும். அவர்கள் வசத்தில் நிறைய வாய்ப்புகள் இருக்குமேயானால், நமக்கு எதிராக அநேக காரியங்களை அவர்கள் செய்யக் கூடும், அவர்கள் பற்பல இடங்களில் கூடி ஆலோசித்தால், நமக்கு ஆபத்தாகிவிடும். எனவே எச்சரிக்கையாயிருங்கள். உங்களால் முடிந்த தடுமாற்றங்களை உண்டுபண்ணுங்கள். ஒருவரிடத்தில் ஒருவர் கொண்டுள்ள அன்பை அழியுங்கள். நாம் வெறுக்கின்ற அவர்களுடைய ஊழியக்காரர்களை சோர்வடையச் செய்யுங்கள். வழிமுறைகளை பெற்றவர்களுக்கு ஏதாவது ஒரு சாக்குபோக்கை காட்டி, பிறருக்கு அவைகளை காட்டிவிடாதபடி தடுத்துவிடுங்கள். உங்களால் கூடுமானால் பண விஷயங்களை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள். அவர்களுடைய ஊழியக்காரர்களை வறுமைக்குள் தள்ளிவிடுங்கள். அப்பொழுது, அவர்களுடைய தைரியமும் உற்சாகமும் பெலவீனமாகும். பொருளாசையும், இச்சையும் அவர்களுடைய குணாதிசயங்களை ஆளுகின்ற தன்மைகளாக மாற்றுங்கள். இத்தகைய தன்மைகள் ஆளுகை செய்யும் வரை இரட்சிப்பும் கிருபையும் பின் தங்கி இருந்துவிடும். அவர்களை வசீகரப்படுத்தும்படியாக எதை எல்லாம் செய்ய இயலுமோ, அதையெல்லாம் செய்யுங்கள். அவர்கள் நம் வசப்படுவது மட்டுமின்றி, பிறரை பரலோகத்திற்கு வழி நடத்துவதையும் நிறுத்திவிடுவார்கள். பிறருக்கு கொடுத்து உதவவேண்டும் என நினைப்பவர்களின் உள்ளத்தில் பொறாமையை வளர்த்து விடுங்கள். அவர்கள் கொடுப்பதை குறைத்துக்கொள்வார்கள்.GCt 89.3

    சாத்தான் தனது திட்டங்களை நன்றாக செயல்படுத்தியதை நான் கண்டேன். தேவனின் ஊழியர்கள் ஒன்றுகூடியபோதெல்லாம், அவர்களது நோக்கங்களை சாத்தானும் அவனுடைய தூதர்களும் அறிந்து, அவர்களுக்கு இடைஞ்சல்களை உண்டுபண்ணினார்கள். தேவ ஜனங்களின் உள்ளங்களில் பல யோசனைகளை சாத்தான் விதைத்துக்கொண்டே இருந்தான். சிலரை ஒரு வழியாகவும், பிறரை வேறு வழியாகவும் திருப்பி, அவர்களுடைய பெலவீனங்களை பயன்படுத்தி, அவர்களுக்கிடையில் குழப்பங்களை உண்டுபண்ணினான். அவர்களில் யாராவது சுயநலவாதியாகவும் ஆசை நிறைந்தவராயும் இருந்தால், சாத்தான் அவர்கள் அருகே இருந்துக்கொண்டே அந்த பாவங்களை வெளியே கொண்டு வந்தான். ஒரு வேளை தேவனின் கிருபையும், சத்திய சுடரும் அந்த நபரை சுயநலத்திலிருந்தும் இச்சைகளிலிருந்தும் சற்று விடுவித்தால், அவர்களில் காணப்படும் இதர நல்ல பண்புகள் அனைத்தையும் கட்டவிழ்த்துவிட்டு, அவர்களை அளவுக்கதிகமாக நல்ல காரியங்களை செய்ய வைப்பான். இதனிமித்தமாக, நன்மை செய்வதில் அவர்கள் சோர்ந்துப்போய், சாத்தானின் பிடியிலிருந்து தங்களை மீட்கும் பொருட்டு இயேசு செய்த தியாகத்தை மறந்து விடுவார்கள்.GCt 90.1

    சாத்தான், யூதாசின் இச்சையையும் சுயநலத்தையும் பயன்படுத்தி, மரியாள் இயேசுவின் பாதத்தில் அர்ப்பணித்த தைலத்தைக் குறித்து முறுமுறுக்க வைத்தான். அத்தைலம் வீணாக்கப்பட்டது என்றும், அதனை விற்று தரித்திரருக்கு கொடுத்திருக்கலாம் என்றும் அவன் யோசனை தெரிவித்தான். அவன் தரித்திரரைக் குறித்து கவலை கொள்ளவில்லை. மாறாக, இயேசுவுக்கு அளிக்கப்பட்ட காணிக்கை ஊதாரித்தனமானது என்று விளம்பினான். அவனுடைய ஆண்டவருக்கே சில வெள்ளிக் காசுகளை கிரயமாக நிர்ணயித்தான். கர்த்தருக்காக காத்திருப்பவர்களிலும் சிலர், யூதாசைப் போலவே இருக்கிறார்கள் என்று நான் கண்டேன். சாத்தான் அவர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்; ஆனால், அவர்கள் அதை அறியாதிருந்தார்கள். ஒரு துளி இச்சையையோ, சுயநலத்தையோ தேவன் ஆதரிக்கப்போவதில்லை. இவைகளை தேவன் வெறுக்கிறார். இக்குணாதிசயங்களை பெற்றிருப்பவர்களின் ஜெபங்களையும் அவர் வெறுக்கிறார். தனது காலம் குறுகலாக இருப்பதை உணர்ந்திருக்கும் சாத்தான், மனிதரை அதிக அதிகமாக சுயநலவாதிகளாகவும், பொருளாசைப் பிடித்தவர்களாயும் மாற்றி வந்தான். இப்படிப்பட்டவர்கள் தங்கள் கண்களை மட்டும் திறந்து பார்ப்பார்களாகில், சாத்தான் குதூகலிப்பதையும், அவர்கள் மீது அவன் கரம் ஓங்கியிருப்பதையும், அவர்களுடைய மதியீனத்தின் நிமித்தமாக அவன் கேலி செய்வதையும் நிச்சயமாக பார்க்கமுடியும். இதன் பின்னர் சாத்தான், இவர்களை இயேசுவிடம் காட்டி, ஏளனமாக, “இவர்கள் கிறிஸ்துவின் சீடர்கள்! இவர்கள் மறுரூபமடைவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினான். மேலும் சாத்தான், அவர்கள் சென்ற மாறுபாடான வழியை வேத வசனங்களோடு ஒப்பிட்டு, பரிசுத்த தூதர்கள் எரிச்சலடையும்படியாக, “இவர்கள் கிறிஸ்துவையும் அவருடைய வார்த்தையையும் பின்பற்றுகிறவர்கள்! கிறிஸ்துவின் தியாகத்தினாலும் மீட்பினாலும் கிடைத்த கனிகள்!” என்று பரியாசம் செய்தான். இக்காட்சியிலிருந்து தேவதூதர்கள் வெறுப்புடன் திரும்பிக்கொண்டார்கள். தமது ஜனங்களிடமிருந்து இடைவிடாமல் கீழ்ப்படிதலை எதிர்பார்க்கும் தேவன், அவர்கள் நன்மை செய்வதில் சோர்ந்து போகும்பொழுது, அவரும் அவர்கள் மீது சோர்ந்து போகிறார். இயேசு தமது ஜீவனை பொருட்படுத்தாமல் பெற்று தந்த இரட்சிப்பை பெற்ற மக்களிடத்தில் காணப்பட்ட சுயநலத்தைக் கண்டு, தேவன் வெகுவாக வேதனையுற்றார். சுயநலமும் பேராசையும் பிடித்த நபர்கள் வழியருகே விழுந்து விடுவார்கள். யூதாசு தனது ஆண்டவரை விற்றது போல, பேராசைப் பிடித்தவர்களும், கிடைக்கக் கூடிய சிறிய லாபத்திற்காக நன்மையை விற்றுவிடுவார்கள். இப்படிப் பட்டவர்கள் தேவ ஜனத்திலிருந்து சலித்து எடுக்கப்படுவார்கள். பரலோகத்தை நாடுகிறவர்கள், தங்களுக்கு உண்டான முழு பெலத்தோடும் பரலோகத்தின் கோட்பாடுகளை ஆதரிக்க வேண்டும். அவர்களுடைய ஆத்துமாக்கள் சுயநலத்தினால் தளர்ந்துபோகாமல், தயையினால் வளர்ந்து, நன்மைகளினால் நிரம்ப வேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் ஒருவருக்கொருவர் நன்மை செய்வதற்காகவும், பரலோக கோட்பாடுகளுக்குள்ளாக முதிர்ச்சியைப் பெறவும், பயன்படுத்த வேண்டும். இயேசுவே இதற்கு சரியான முன் உதாரணம் என்பதை நான் கண்டேன். அவருடைய வாழ்க்கை சுய வாஞ்சையற்றதாக இருந்தது. அவருடைய ஜீவன் எதிர்பார்ப்புகளற்ற தயையினால் நிறைந்திருந்தது.GCt 90.2

    பார்க்க : மாற்கு 14 : 3 -11,
    லூக்கா 12 : 15 - 40,
    கொலோசேயர் 3 : 5 -16,
    I யோவான் 2 : 15-17