Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மகா சர்ச்சை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம் 20 - சீர்திருத்தம்

    அநேக சாட்சிகள் துன்புறுத்தப்பட்டும், கொலைச் செய்யப்பட்டும் வந்தபோதும், புதிய சாட்சிகள் எழும்பிக் கொண்டே இருந்தனர். தேவ தூதர்கள் தங்களுடைய சேவைகளை செவ்வன செய்து வந்தார்கள். இருளான இடங்களிலிருந்து, தேவனிடத்தில் விசுவாசமுள்ள நபர்களை தேவதூதர்கள் தேடிப்பிடித்தார்கள். பாவத்திலிருந்து சவுலை தெரிந்துக்கொண்டது போல, அநேகரை தெரிந்துக்கொண்டு, அவர்கள் மூலமாக தனது சத்தியத்தை தாங்கவும், பாவத்திற்கு எதிராக குரல் எழுப்பவும் தேவன் முற்பட்டார். மார்ட்டின் லூத்கரின் மீதும், மெலன்க்தான் மீதும், வேறு அநேகரின் மீதும் தேவ தூதர்கள் அசைவாடினார்கள். எதிராளியானவன் வெள்ளம் போல் புகுந்திருந்தான். எனவே அவனை எதிர்கொள்ள சபையின் தரம் திடமாக உயர்த்தப்படவேண்டும். விழுந்துப் போன திருச்சபையின் கோபத்தை எதிர்த்துப் போராடி, விசுவாசத்தில் நிலைத்திருந்த சிலரை பெலப்படுத்துவதற்காக மார்ட்டின் லூத்தர் தெரிந்துக்கொள்ளப்பட்டார். தேவனை வேதனைப் படுத்துவதைக் கண்டு மிகவும் பயந்திருந்த லூத்தர், கிரியைகளின் மூலமாக தேவனின் கிருபையை பெற்றுக்கொள்ள முடியும் என்று விசுவாசித்து வந்தான். ஆகிலும், அதில் திருப்தியில்லாமல் இருந்த அவனுக்கு பரலோகிலிருந்து கிளம்பிய ஒரு ஒளி, சத்தியத்தை தெளிவுப் படுத்தியது. அதிலிருந்து, தனது கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவின் இருத்தத்தினாலே எல்லாம் கூடும் என்று விசுவாசித்தான். அஃதோடு, தான் பிதாவினிடத்தில் வருவதற்கு இயேசுதான் ஒரே வழி என்றும், போப்பாண்டவர் மூலமாகவோ, வேறு ஆசாரியர்கள் மூலமாகவோ செல்ல அவசியமில்லை என்றும் புரிந்துக்கொண்டான். இந்த அறிவு லூத்தருக்கு மிகவும் விசேஷமானதாக இருந்தது! தனது இருளான சிந்தையிலிருந்து உதித்த வெளிச்சத்தைக் குறித்த மிகவும் மகிழ்ந்தான். தேவ வசனம் புதிதாக தோன்றியது. எல்லாம் மாறிப்போயிற்று. எவ்வித அழகுமில்லை என்று தான் நினைத்திருந்த வேதப்புத்தகம், இப்பொழுது லூத்தருக்கு ஜீவனாக இருந்தது!! அது அவனுடைய மகிழ்ச்சியும், ஆறுதலும், ஆசிரியனுமாய் இருந்தது. அதனை தியானிப்பதை விட்டு நகர மனதில்லாதிருந்தான். மரணத்தைக் குறித்து பயந்திருந்த அவன், இப்பொழுது சகல பயங்களையும் மேற்கொண்டவனாக, தேவனை ஆழமாக நேசிக்க ஆரம்பித்தான். வேதாகமத்தை ஆழமாகப் படித்தான். அதிலிருந்த அநேக பொக்கிஷங்களைக் கண்ட அவன், திருச்சபையைக் குறித்த விளக்கங்களை தேடினான். தனது இரட்சிப்பிற்காக எவர் மீதெல்லாம் நம்பிக்கை வைத்திருந்தானோ, அவர்களுடையGCt 57.1

    பாவங்களை கண்டு கோபமடைந்தான். தன்னை மறைத்திருந்த இருள் இன்னமும் அநேகரை மறைத்திருப்பதை உணர்ந்தான். உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கும் ஒரே ஆட்டுக்குட்டியை அவர்களுக்கு காட்டவேண்டும் என்று வாஞ்சித்து, ஒரு நல்ல வாய்ப்பிற்காக காத்திருந்தான். கத்தோலிக்கக் திருச்சபைக்கு எதிராக தனது குரலை எழுப்பிய லூத்தர், இருளில் அடைப்பட்டிருந்த அனைவரையும் விடுவிக்கவிரும்பினான். அத்திருச்சபையின் பாவங்களையும் பிழைகளையும் தெளிவுப் படுத்திய லூத்தர், கிறிஸ்துவின் கிருபையையும் அவர் மூலமாக கிடைக்கக்கூடிய உன்னத இரட்சிப்பையும் அறியாதவர்களுக்கு அதனை அறிவிக்கவும் துடித்தான். உற்சாகமாக தனது குரலை எழுப்பி, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலே, திருச்சபையில் நிலவிய பாவங்களையும், அத்திருச்சபை தலைவர்களின் துன்மார்க்கத்தனத்தையும் வெளிக்காட்டினான். ஆசாரியர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியபோதிலும் அவன், தளர்ந்துவிடவில்லை. ஏனெனில் அவன், தேவனின் புயத்தில் உறுதியாக சாய்ந்து, அவரை முற்றிலுமாக நம்பினான். சபையின் தலைவர்களோ சீர்த்திருத்தங்களை விரும்பவில்லை. மாறாக, உல்லாசமான சுகபோகத்திலும், துன்மார்க்கத்திலும், இருளிலும் இருப்பதையே விரும்பினார்கள். திருச்சபையையும் இருளிலேயே வைக்க விரும்பினார்கள்.GCt 58.1

    சத்தியத்தை எடுத்துறைப்பதிலும், பாவத்தை நிந்திப்பதிலும், லூத்தருக்கு இருந்த தைரியத்தையும், பயமின்மையையும், உற்சாகத்தையும் நான் கண்டேன். தீய மனிதர்களைக் குறித்தோ பிசாசுகளைக் குறித்தோ அவன் கலங்கவில்லை. அவர்கள் அனைவரைக் காட்டிலும் அதிக வல்லமையுள்ளவர் தன்னுடன் இருப்பதை லூத்தர் அறிந்திருந்தான். வைராக்கியத்தையும், தைரியத்தையும் பெற்றிருந்த லூத்தருக்கு உதவியாக குணத்தில் முற்றிலும் மாறுபட்ட மெலன்க்தானை கர்த்தர் தெரிந்துக்கொண்டார். மெலன்க்தான் பயந்த சுபாவமுள்ளவனும் மிகுந்த பொறுமையுள்ளவனுமாய் இருந்தான். தேவனை மிகவும் நேசித்த அவன், வேத அறிவில் தேறியவனும், சிறப்பான ஞானத்தை பெற்றவனுமாக இருந்தான். லூத்தரைப் போலவே தேவ ஊழியத்தில் நாட்டம் கொண்டிருந்தான். இவர்கள் இதயங்களை தேவன் இணைத்தார். இணைபிரியாத தோழர்கள் ஆனார்கள். மெலன்க்தான் பயந்து மெதுவாகச் சென்றபோது, லூத்தர் அவனை உற்சாகப்படுத்தி உதவினான்; லூத்தர் வெகு விரைவாக அவசரமாக செயல்பட்டுவிடபாதபடி மெலன்க்தான் கட்டுப்பாடுகளை விதித்து வந்தான். மெலன்க்தானின் ஜாக்கிரதையான போக்கு, அநேக பிரச்சனைகளை தவிர்த்தது. லூத்தரின் வேகத்தினால், சீர்திருத்த வேலைகள் துரிதமாக நடந்தன. சீர்திருத்தப் பணிகளுக்காக இரண்டு மாறுபட்ட நபர்களை தெரிந்துக்கொண்ட தேவனின் ஞானத்தை எண்ணி நான் பிரமித்தேன்.GCt 58.2

    அப்போஸ்தலரின் நாட்களுக்கு நான் எடுத்துச் செல்லப்பட்டேன். அங்கு தேவன், ஆர்வம் கொண்ட பேதுருவையும், சாந்தமும் பொறுமையும் நிறைந்த யோவானையும் ஊழியத்திற்கென்று தெரிந்துக்கொண்டதைக் கண்டேன் சில சமயங்களில் பேதுரு தீவிரமிக்கவனாக இருந்தான். யோவானின் அன்பான சிந்தனைகள் பேதுருவை ஆரம்பத்தில் திருத்தவில்லை. ஆகிலும், இயேசுவை மறுதலித்து, மனந்திரும்பிய பின்னர், யோவான் கூறிய சிறிய விஷயங்கள் கூட பேதுருவின் வேகத்தை கட்டுப்படுத்தின. பேதுருவின் தைரியமும், மன உற்சாகமும் அவர்களது எதிராளிகளை அமைதியாக்கி, அநேக இக்கட்டுகளுக்கு அவர்களை தப்புவித்தது. யோவானின் சாந்த குணத்தால் அநேகரை கிறிஸ்துவினிடத்தில் கொண்டு வந்தான்.GCt 58.3

    போப்பாண்டவரின் சபையின் பாவங்களை எதிர்த்து, சீர்த்திருத்தப் பணியை துரிதப்படுத்தும்படி, தேவன், மனிதர்களை எழுப்பினார். இத்தகைய சாட்சிகளை அழிக்க சாத்தான் வகைதேடினான். ஆனால், தேவன் அவர்களைச் சுற்றிலும் காப்பு வேலி அமைத்தார். சிலர், தங்களது இரத்தம் சிந்தி தேவ நாமத்திற்கு மகிமை சேர்த்தார்கள். பிறர் (லூத்தர், மெலன்க்தான் போன்றவர்கள்), போப்பாண்டவர்கள், ஆசாரியர்கள் மற்றும் ராஜாக்களுக்கு எதிராக தங்களது குரலை உயர்த்தி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். தெரிந்துக்கொள்ளப்பட்ட இம்மனிதர்கள் மூலமாக இருளை நீக்கும் சத்திய ஒளி உண்டாயிற்று. அநேகர் இந்த ஒளியை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார்கள். ஒரு சாட்சி கொல்லப்பட்டபோது வேறு சிலர் எழும்பி அவ்விடத்தை நிரப்பினார்கள்.GCt 59.1

    ஆகிலும் சாத்தான் திருப்தியடையவில்லை. சரீரத்தின் மேல் மட்டுமே அவனுக்கு அதிகாரம் இருந்தது. விசுவாசிகளை, தங்கள் நம்பிக்கையை துறக்கச் செய்ய இயலவில்லை. மரண இக்கட்டுகளிலும் கூட, உயிர்த்தெழுதலின் நம்பிக்கையில் பூரணப்பட்டவர்களாக, உற்சாகமாகவும் உறுதியாகவும் இருந்து வந்தனர். மனித வலிமையைக் காட்டிலும் அதிகமான வலிமையை அவர்கள் பெற்றிருந்தார்கள். ஆவிக்குரிய எதிரிகளை எதிர்கொள்ளவும், மனிதரூபத்தில் பிரச்சினைகளை உண்டாக்கி சாத்தானை எதிர்த்து நிற்கவும், எப்பொழுதும் விழிப்புடன் இருந்தார்கள். தமது நாமத்தை தரித்திருக்கும் கோடான கோடி மாந்தரைக் காட்டிலும், மரணபரியந்தமும் விசுவாசத்தில் உறுதியாய் நின்ற சாட்சிகளின் மீது தேவன் மிகவும் பிரியமாயிருந்தார். திருச்சபை துன்புறுத்தப்பட்ட சமயங்களில் விசுவாசிகள் ஒற்றுமையாகவும் அன்பாகவும் இருந்தார்கள். கர்த்தரின் பட்சத்தில் பெலனடைந்திருந்தார்கள். இந்த ஜக்கியத்தில், பாவத்தை விரும்பியவர்களுக்கு இடமில்லாமல் போயிற்று. கிறிஸ்துவிற்காக அனைத்தையும் விட்டு வர மனதாயிருந்தவர்கள் மாத்திரமே சீடர்களாக இருந்தார்கள். அவர்கள் கிறிஸ்துவைப்போல, ஏழ்மையையும் தாழ்மையையும் தரித்தவர்களாக இருந்தார்கள்.GCt 59.2

    பார்க்க : லூக்கா 22 : 61-62
    யோவான் 18:10
    அப்போஸ்தலர் 3 : 1-26
    அப்போஸ்தலர் 4 : 1-37

    * மேலும் படிக்க : கலைக்களஞ்சிய நூலில் “சீர்திருத்தம்” என்கிற தலைப்பின் கீழ் படிக்கவும்.GCt 59.3