Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாபெரும் ஆன்மீகப் போராட்டம்! - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    4—வால்டென்னியர்கள்!

    (மூலநூல் : The Great Controversy பக்கம் : 61—78)

    போ ப்புமார்க்கத்தின் நீண்டகால மேலாதிக்கத்தினால் பூமியின்மீது நிலவியிருந்த இருளுக்கு மத்தியில், சத்தியத்தின் ஒளி முற்றிலுமாக அழிக்கப்படவில்லை. தேவனுக்கும்-மனிதனுக்கும் இடையிலுள்ள மத்தி யஸ்தர் கிறிஸ்து ஒருவரே; வேதாகமம்தான் வாழ்க்கையின் சட்டம்; அதனைப் பற்றிக்கொண்டு மெய்யான ஓய்வு நாளைப் பரிசுத்தமாக ஆசரிப் பதே கிறிஸ்துவின்மீதுள்ள விசுவாசமாகும்; இப்படிப்பட்ட விசுவாசத்தை வளர்த்திருந்த தேவனுடைய மனிதர்கள் ஒவ்வொரு காலத்திலும் இருந்தனர். இந்த மனிதர்களுக்கு உலகம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறதென்பதை பின்சந்ததியார்கள் அறியார்கள். அவர்கள் மதவிரோதிகளென்று அடையாள மிடப்பட்டனர். அவர்களது எழுத்துக்கள் அடக்கப்பட்டு, தவறெனத் திரித்துக் கூறப்பட்டன அல்லது சிதைக்கப்பட்டன. அப்படியிருந்தும் காலங் காலமாக தங்களுடைய விசுவாசத்தை அவர்கள் அதன் தூய்மையில் காத்துக்கொண்டிருந்தனர். இதை அவர்கள் தங்களின் பின்சந்ததியினருக்குப் பரிசுத்தமான பிறப்புரிமையாக வைத்துச் சென்றனர். (1)GCTam 53.1

    ரோமன் கத்தோலிக்க சபையின் மேலாதிக்கத்தைத் தொடர்ந்து இருண்டகாலம் உண்டானது. இந்தக் காலத்தில் இருந்த தேவனுடைய மக்களின் வரலாறு பரலோகத்தில் எழுதப்பட்டுள்ளது; ஆனால் மனித ஆவணங் களில் அவை சொற்ப இடம்தான் பெற்றுள்ளன. அவர்களை உபத்திரவப்படுத்தினவர்கள் அவர்கள்மீது சுமத்திய குற்றச்சாட்டுகளைத் தவிர அவர்களது வாழ்க்கையைப்பற்றிய சில அறிகுறிகள் மட்டுமே காணப்படக்கூடும். ரோமன் கத்தோலிக்க சபையின் கோட்பாடுகளுக்கு எதிரான மனிதர்களானாலும் எழுத்துக்களானாலும் அனைத்தும் அழிக்கப் போப்புமார்க்கத்தின் பிடிவாதமான கோட்பாட்டின்மேல் ஒரு சந்தேகமோ அல்லது அதன் அதிகாரம்பற்றி ஒரு கேள்வியோ வெளிக் காட்டப்பட்டால், செல்வந்தர்களானாலும்-ஏழைகளானாலும், மேலானவர் களானாலும்-கீழானவர்களானாலும் உயிரை இழப்பதற்கு அதுவே அவர் களுக்குப் போதுமானதாக இருந்தது. இணங்காதவர்களைக் கொடுமைப் படுத்தின ஒவ்வொரு ஆதாரத்தையும் அழித்துவிட ரோமன் கத்தோலிக்க சபை முயன்றது. அப்படிப்பட்ட ஆதாரங்களை உடைய புத்தகங்களும் எழுத்துக்களும் ஆவணங்களும் எரிக்கப்படவேண்டும் என்றக் கட்டளையை போப்புவின் ஆலோசனைக் கூட்டம் பிறப்பித்தது. அச்சுப்பதித்தல் கண்டுபிடிக்கப்படும் முன்பு, புத்தகங்கள் எண்ணிக்கையில் சிலதாகவும் பாதுகாக்க இயலாதவையாகவும் இருந்தன. எனவே, ரோமன் கத்தோலிக்க சபையினருக்கு அவர்களது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான தடைகள் கொஞ்சமாகத்தான் இருந்தது. (2)GCTam 53.2

    மனசாட்சியின் சுதந்திரத்தை அனுபவிப்பதில் தொந்தரவு செய்யப் படாத ஒரு சபையும் ரோமன் கத்தோலிக்க சபையின் எல்லைக்குள் இருக்கவில்லை. அதிகாரத்தைக் கைப்பற்றியதும், தன் போக்கை அங்கீகரிக்க மறுத்த அனைவரையும் நொறுக்கும்படி, அது தன் கரத்தை நீட்டினது. எனவே, சபைகள் ஒன்றன்பின் ஒன்றாக, அதன் ஆளுகைக்குக் கட்டுப்பட்டு அடங்கின. (3)GCTam 54.1

    பிரிட்டன் நாட்டில், கிறிஸ்தவ மார்க்கம் ஆதியிலேயே வேரூன்றி யிருந்தது. முதலாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் பெற்றுக்கொண்ட சுவிசேஷம் அப்போது ரோமன் கத்தோலிக்க சபையின் மருளவிழுகையால் கறைபடாமலிருந்தது. மிகத்தொலைவிலிருந்த இந்த இடத்திற்கும் நீட்டப் பட்டிருந்த, அஞ்ஞானப் பேரரசர்களால் உண்டான உபத்திரவங்கள்தான் பிரிட்டனிலிருந்த இந்த முதல் சபைகள் ரோமிடமிருந்து பெற்ற பரிசுகள். உபத்திரவத்தின் காரணமாக, இங்கிலாந்தை விட்டு அநேக கிறிஸ்தவர்கள் ஓடிப்போனார்கள். இவர்கள் ஸ்காட்லாந்தில் அடைக்கலம் புகுந்தனர். அங்கிருந்து சத்தியம் அயர்லாந்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. இந்த தேசங்களிலெல்லாம் அது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. (4)GCTam 54.2

    சாக்சோனியர்கள் பிரிட்டனின்மீது படையெடுத்தபோது அஞ்ஞான மார்க்கம் ஆளுகையைக் கைப்பற்றியது. வெற்றி பெற்றவர்கள் அவர்களது அடிமைகளால் போதிக்கப்படுவதை வெறுத்தனர். அதனால் கிறிஸ்தவர்கள் மலைகளுக்கும் புதர்களடங்கிய மறைவிடங்களுக்கும் பின்வாங்கிச்செல்ல வற்புறுத்தப்பட்டனர்; அப்படியிருந்தும் சொற்ப நேரத்திற்கு மறைந்திருந்த ஒளி, தொடர்ந்து எரிந்தது. ஒரு நூற்றாண்டுக்குப்பின், ஸ்காட்லாந்தில் அது வீசிய மிகவும் பிரகாசமான ஒளி தூரமான இடங்களுக்கும் விரிவடைந் தது. பக்திமிக்க கொலம்பா என்பவரும் அவரது உடன் ஊழியர்களும், சிதறிப்போன விசுவாசிகளை ஐயோனா என்னும் இடத்தில் ஒன்று திரட்டி, அந்த இடத்தை அவர்களது ஊழியத்தின் தலைமை இடமாக ஏற்படுத்தினார்கள். இந்த சுவிசேஷகர்களுக்கு நடுவில் வேதாகம் ஓய்வுநாளை ஆசரிக்கின்ற ஒருவர் இருந்தார். அவர்மூலமாக, ஓய்வுநாள் சத்தியம் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஐயோனாவில் ஒரு பள்ளி ஏற்படுத்தப்பட்டது. அங்கிருந்து ஊழியக்காரர்கள் ஸ்காட்லாந்து, இங்கிலாந்து போன்ற இடங்களுக்கு மட்டுமல்லாது, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய இடங்களுக்கும் இத்தாலிக்குங்கூடச் சென்றார்கள்.(5)GCTam 54.3

    ஆனால் ரோமன் கத்தோலிக்க மார்க்கம் பிரிட்டனின்மீது அதன் கண்ணை வைத்திருந்து, அதைத் தனது மேலாதிக்கத்திற்குக் கீழாக்கத் தீர்மானித்தது. ஆறாம் நூற்றாண்டில், அதன் மிஷனரிமார்கள் அஞ்ஞான சாக்சோனியர்களை மதம்மாறச்செய்தனர். அகந்தைமிக்க மிலேச்சர்கள் அவர்களை ஆதரித்து வரவேற்றனர். அவர்கள் ரோமன் கத்தோலிக்க விசுவாசத்தை ஏற்றுக்கொள்ளும்படி ஆயிரக்கணக்கானவர்களை ஊக்கப் படுத்தினார்கள். இந்த வேலை முன்னேற்றமடைந்தது. அப்போது போப்பு மார்க்கத் தலைவர்களும் அவர்களால் மதமாற்றம் அடைந்தவர்களும் பழங்காலக் கிறிஸ்தவர்களை எதிர்த்தனர். தெளிவான ஒரு வேற்றுமை இதில் காணப்பட்டது, முன்சொல்லப்பட்டவர்கள் மூடநம்பிக்கையையும் ஆடம்பரத்தையும் போப்புமார்க்க அகந்தையையும் வெளிக்காட்டினர்; பின்சொல்லப்பட்டவர்கள் எளிமையும் தாழ்மையும் உள்ளவர்களாகவும், சுபாவத்திலும் கோட்பாட்டிலும் நடக்கையிலும் வேதாகமத்தைப் பின்பற்று கிறவர்களாகவும் இருந்தனர். இந்தக் கிறிஸ்தவ சபைகள் ரோமன் கத்தோலிக்க சபையின் மேலாதிக்கத்தை அங்கீகரிக்கவேண்டுமென்று, ரோமன் கத்தோலிக்க சபையின் பிரதிநிதி கோரினார். தாங்கள் எல்லோரையும் நேசிக்க விரும்புவதாகவும், சபையின் மேலாதிக்கத்தின் உரிமை போப்புவிற்கு இல்லை என்றும், கிறிஸ்துவின் பின்னடியார்கள் ஒவ்வொருவரிடமும் தாங்கள் காட்டவேண்டிய அதே கீழ்ப்படிதல்தான் போப்புவிடமும் காட்டப்படுமென்றும் பிரிட்டன் மக்கள் மிகவும் பணிவாகப் பதில் அளித்தார்கள். அவர்களை ரோமன் கத்தோலிக்க சபையுடன் இணைக்க திரும்பத்திரும்ப முயற்சிகள் செய்யப்பட்டன; ஆனால், இந்தத் தாழ்மையான கிறிஸ்தவர்கள் ரோமப்பிரதி நிதிகள் வெளிக்காட்டின அகந்தையைக்கண்டு ஆச்சரியமடைந்து, கிறிஸ்துவைத்தவிர வேறு எஜமானர்களை அறியோம் என்று பதிலளித்தனர். போப்புமார்க்கத்தின் உண்மையான ஆவி இப்பொழுது தெளிவாக வெளிப் படுத்தப்பட்டது. “உங்களுக்குச் சமாதானத்தைக் கொண்டுவரும் சகோதரர் களை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால், உங்கள்மீது போரைக் கொண்டுவரும் விரோதிகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள நேரிடும்” என்று ரோமன் கத்தோலிக்கசபைத் தலைவர் கூறினார். வாழ்க்கை நெறிகளை சாக்சோனியர்களுக்குக் காண்பிக்க நீங்கள் எங்களுடன் சேராவிட்டால், அவர்களிடமிருந்து மரணஅடி பெறுவீர்கள் என்றார்.--J. H. Merle D'Aubigne, History of the Reformation of the Sixteenth Century, b. 17, ch. 2. இவை வீணான பயமுறுத்தல்களாக மட்டுமிருக்கவில்லை. பிரிட்டனிலிருந்த சபைகள் போப்புவின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படியும்வரை அல்லது அழியும்வரை, வேதாகம விசுவாசத்திற்குச் சாட்சிகளாக இருந்த இவர்களுக்கெதிராகப் போர்-சதியாலோசனை-வஞ்சகம் ஆகியன செயல்படுத்தப்பட்டன. (6)GCTam 55.1

    ரோமின் எல்லைக்கு அப்பாலிருந்த நாடுகளில், நூற்றுக் கணக்கான வருடங்களாக, ரோமன் கத்தோலிக்க சபையின் கறையினால் முற்றிலுமாகப் பாதிக்கப்படாத கிறிஸ்தவர்கள் இருந்தனர். அவர்கள் அஞ்ஞான மார்க்கத்தினால் சூழப்பட்டிருந்து, காலம் கடந்து சென்றபோது அதன் தவறுகளால் பாதிக்கப்பட்டனர்; ஆனாலும் தங்களின் விசுவாசச் சட்டங்களுக்கு வேதாகமத்தையே ஆதாரமாகக் கொண்டிருந்து, அதன் அநேக சத்தியங்களைத் தழுவி வந்தனர். இந்தக் கிறிஸ்தவர்கள் தேவப் பிரமாணங்களின்மீது நம்பிக்கைவைத்து, நான்காம் கற்பனையான ஓய்வுநாளையும் ஆசரித்து வந்திருந்தனர். மத்திய ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலுமிருந்த அர்மேனியர்களுக்கு மத்தியிலும் இந்த விசுவாசத்தையும் நடத்துதலையுமுடைய சபைகள் இருந்திருந்தன. (7)GCTam 56.1

    போப்புமார்க்கத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்தவர்களில் வால்டென்னி யர்கள் முன்னணியில் நின்றிருந்தனர். போப்புமார்க்கம் அதன் ஆளுகையை அமைத்திருந்த அதன் இருப்பிடத்திலேதானே அதன் தவறுகளும் ஊழல்களும் எதிர்க்கப்பட்டன. பிட்மாண்ட் சபைகள் அவைகளின் சுதந்திரத்தை நூற்றுக் கணக்கான ஆண்டுகள் காத்துவந்திருந்தன; ஆனால் அவைகள் ரோமன் கத்தோலிக்க சபைக்குக் கீழ்படியவேண்டுமென்று வற்புறுத்தப்பட்ட நேரம் வந்தது. ரோமன் கத்தோலிக்க சபையின் கொடுங்கோன்மைக்கு எதிராக, அவர்கள்வெற்றியடையமுடியாத போராட்டத்தை நடத்தினர். அதன்பின் உலகம் முழுவதும் வணங்குவதுபோல் காணப்பட்ட இந்த சபையின் மேன்மையை, அந்த சபையின் தலைவர்கள் மனமின்றி அங்கீகரித்தனர். அப்படி இருந்தும் போப், குருமார்கள் ஆகியோரின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிய மறுத்த சிலர் இருந்தனர். அவர்கள் தங்களுடைய தூய்மையையும் விசுவாசத்தின் எளிமையையும் தேவனுடனுள்ள பிணைப்பையும் காத்துக்கொள்வதில் தீர்மானமுள்ளவர்களாக இருந்தனர். ஒரு பிரிவினை உண்டாயிற்று. பண்டைய விசுவாசத்தைப் பற்றிக்கொண்டிருந்தவர்கள் இப்பொழுது பின்வாங்கினார்கள். சிலர் தங்களுடைய பிறப்பிடமான ஆல்ப்ஸ் மலையைத் துறந்து, சத்தியத்தின் கொடியை அயல்நாடுகளில் உயர்த்தினார்கள். மற்றவர்கள் பின்வாங்கி, தனிமையான பள்ளத்தாக்குகளிலும் மலை இடுக்குகளிலும் தங்கி, தேவனைத் தொழும் சுதந்திரத்தைக் காத்துக்கொண்டனர். (8)GCTam 56.2

    ரோமன் கத்தோலிக்க மார்க்கம் தவறான கோட்பாடுகளை முன்வைத்திருந்தது. வால்டென்னியக் கிறிஸ்தவர்களால் நூற்றாண்டுகளாகக் காக்கப்பட்டு போதிக்கப்பட்ட விசுவாசம் வேறுபட்டதாக இருந்தது. அவர் களுடைய சமய நம்பிக்கை, தேவனால் எழுதப்பட்ட வார்த்தைகளை அஸ்திவார மாகக்கொண்ட மெய்யான கிறிஸ்தவமாக இருந்தது. உலகத்திலிருந்து ஒதுக்கப்பட்டு, தங்களுடைய மந்தைகளிலும் திராட்சைத் தோட்டங்களிலும் வேலைசெய்திருந்த அந்தத் தாழ்மையான விவசாயிகள், மருளவிழுந்த சபையினால் உண்டான-சத்தியத்திற்கெதிரான மதப்புரட்டிற்கும் பிடிவாதமான கோட்பாட்டிற்கும் தாங்களாகவே வந்துவிடவில்லை. அவர்களது விசுவாசம் புதிதாகப் பெற்றுக்கொண்ட ஒன்றாகவும் இருக்கவில்லை. அவர்களுடைய சமய நம்பிக்கை அவர்களுடைய முற்பிதாக்களிடம் இருந்து அவர்கள் பெற்ற பரம்பரைச் சொத்தாக இருந்தது. “பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட” (யூதா : 3) அவர்களுடைய விசுவாசத்திற்காக—அப்போஸ்தல சபையின் விசுவாசத்திற்காக அவர்கள் போராடினார்கள். வனாந்தரத்திலிருந்த சபை, உலகின் பெரும் தலைநகரில் இருக்கவில்லை. உலகின் பெரும் தலைநகரில் (ரோம் நகரம்) சிங்காசனத்தில் அமர்ந்திருந்த, அகந்தைமிக்க மதத்தலைமையைப்போல் அது இருக்கவில்லை. உலகத்திற்குக் கொடுக்கப் படும்படி தேவன் ஒப்படைத்த சத்தியமாகிய பொக்கிஷத்திற்கு-கிறிஸ்துவின் மெய்யான சபைக்கு அவர்கள் காவலாளர்களாக இருந்தனர். (9)GCTam 57.1

    வேதாகம ஓய்வுநாளின்மீது ரோமன் கத்தோலிக்க சபைக்கு வெறுப்பு உள்ளது. உண்மையான சபை, ரோமன் கத்தோலிக்க சபையை விட்டுப் பிரிவதற்கான பல காரணங்களில், ஓய்வுநாள் மிக முக்கியமான ஒன்றாகும். தீர்க்கதரிசனத்தில் முன்னுரைக்கப்பட்டபடி, போப்புவின் வல்லமை சத்தியத்தைத் தரையிலே விழத் தள்ளிற்று. மனிதர்களின் சடங்காச்சாரங்களும் சம்பிரதாயங்களும் அதில் உயர்த்தப்பட்டது. தேவப்பிரமாணம் பூமியின் தூளில் தள்ளப்பட்டு, காலின்கீழ் மிதிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையை பரிசுத்தநாளாக மேன்மைப்படுத்தும்படி, ஆரம்ப காலத்திலேயே போப்பு மார்க்கத்தின் ஆட்சியின் கீழிருந்த சபைகள் வற்புறுத்தப்பட்டன. தவறுகளுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் இடையில் அநேகர் குழப்படைந்தனர். தேவனுடைய உண்மையான ஜனங்களுங்கூட, செய்வதறியாது, ஓய்வுநாளை ஆசரித்த அதே சமயத்தில், ஞாயிற்றுக்கிழமையில் வேலைசெய்வதிலிருந்தும் விலகினார்கள்; ஆனால் இது போப்புமார்க்கத் தலைவர்களைத் திருப்திப்படுத்தவில்லை. அவர்கள் ஞாயிற்றுக்கிழமையை மேன்மைப்படுத்தினால்மட்டும் போதாது, ஓய்வுநாளை அவமதிக்கவும்வேண்டுமென்று வற்புறுத்தினார்கள். அதை மேன்மைப்படுத்தினவர்களைக் கடினமான வார்த்தைகளினால் எதிர்த்தனர். ரோமன் கத்தோலிக்க சபையின் வல்லமையிலிருந்து ஓடிப்போவதினால் மட்டுமே, அவர்களால் தேவப்பிரமாணங்களுக்குச் சமாதானமாகக் கீழ்ப்படிய முடிந்தது. (10)GCTam 57.2

    ஐரோப்பிய மக்களில் வால்டென்னியர்கள்தான் பரிசுத்த வேதாகம மொழிபெயர்ப்பை முதன்முதலாகப் பெற்றார்கள். சீர்திருத்தம் உண்டாவதற்கு நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பே, வால்டென்னியர்கள் அவர் களது சொந்த மொழியில் வேதாகமத்தைக் கையெழுத்துப் பிரதியாகக் கொண்டிருந்து, கலப்படமில்லாத சத்தியத்தைக் கொண்டிருந்தனர். அதுவே வெறுப்பிற்கும் உபத்திரவத்திற்கும் அவர்களை இலக்காக்கிற்று. கடைசிக்காலத்தில் தோன்றக்கூடிய பாபிலோன், ரோமன் கத்தோலிக்க சபைதான் என்று அவர்கள் அறிவித்தனர். அவர்களது உயிருக்கு ஆபத்து என்ற நிலையிலும் அதன் ஊழல்களைத் தடுப்பதற்கு எழுந்து நின்றனர். தொடர்ச்சியான உபத்திரவத்தின் அழுத்தத்தினால், சிலர் விசுவாசத்தில் சமரசம் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக அதன் கோட்பாடுகளுக்கு இணங்கினர். மற்றவர்கள் விசுவாசத்தை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தனர். இருண்ட காலத்திற்கும் மருள விழுகைக்கும் ஊடாக வால்டென்னியர்கள் ரோமன் கத்தோலிக்க சபையின் மேலாதிக்கத்தை மறுத்து, சிலைவழிபாட்டை விக்கிரக ஆராதனையென்று நிராகரித்து, மெய்யான ஓய்வுநாளை ஆசரித்திருந்தார்கள். மிகப்பயங்கரமான எதிர்ப்பு என்னும் புயலின்போதும் தங்களுடைய விசுவாசத்தைக் காத்துக்கொண்டனர். ரோமன் கத்தோலிக்க சபையினரால், குவிக்கப்பட்ட விறகுக்கட்டைகளுக்கு நடுவே நாட்டப்பட்ட கம்பங்களில் கட்டப்பட்டு எரிக்கப்பட்டனர்; வாளினால் வெட்டப்பட்டனர்; ஈட்டியினால் குத்தப்பட்டனர்; அப்போதும் தேவனுடைய வார்த்தைக்காகவும் அவரது மேன்மைக்காகவும் அவர்கள் தடுமாற்றமின்றி நின்றனர்.(11)GCTam 58.1

    காலம்நெடுகிலும் உபத்திரவப்பட்டு, ஒடுக்கப்பட்ட வால்டென்னியர் களுக்கு உயர்ந்த மலைகள் அடைக்கலம் தரும் மறைவிடங்களாயிருந்தன. இங்கு மத்திய காலத்திலிருந்த இருளுக்கிடையில், சத்தியத்தின் ஒளி, எரிந்து பிரகாசிக்கும்வண்ணம் காக்கப்பட்டது; சத்தியத்திற்குச் சாட்சிகளாக இருந்தவர்கள் இங்கு ஆயிரம் வருடங்கள் அவர்களது பண்டையக்கால விசுவாசத்தைக் காத்திருந்தனர். (12)GCTam 58.2

    அவர்களது நம்பிக்கைக்குப் பொருத்தமாக, வல்லமைமிக்க சத்தியம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதைப் பாதுகாக்குமிடமாக, வியக்கத்தக்க சரணாலயத்தை தேவன் அவர்களுக்கு ஏற்படுத்தி இருந்தார். நாடுகடத்தப்பட்ட அந்த விசுவாசிகளுக்கு, அந்த மலைகள், யேகோவாவின் மாறாத நீதியின் அடையாளமாக இருந்தன. மாறாத, அரச மேன்மையில் உயர்ந்துநின்றிருந்த அந்த மலைகளை, அவர்கள், அவர்களுடைய பிள்ளைகளுக்குக் காட்டி, எந்தவித வேற்றுமையும் மாறுபாடும் இல்லாத யேகோவாவைப்பற்றி அவர்களிடம் பேசினார்கள். நிலைத்து நிற்கின்ற இந்தக் குன்றுகளைப்போல, அவரது வசனங்கள் என்றும் நிற்பவை என்று அவர்களிடம் கூறினார்கள். தேவன் இந்த மலைகளை ஸ்தாபித்து, அவைகளைப் பலத்தினால் இடைக்கட்டினார். முடிவில்லாத அவரது வல்லமை யுள்ள கரமேயன்றி வேறொன்றும் அவைகளை அவ்விடத்திலிருந்து அசைக்க முடியாது. அதைப்போலவே வானத்திலும் பூமியிலும் உள்ள அவரது அரசாங்கத்தின் அஸ்திவாரமாயிருக்கும்படி அவருடைய பிரமாணங்களை அவர் ஏற்படுத்தியிருக்கிறார். இந்த மலைகளை வேருடன் பெயர்ததுக் கடலில் எறிந்துவிடமுடியும் என்றும், யேகோவாவின் கற்பனைகளில் ஒன்றை மாற்றிவிடமுடியும் அல்லது அவரது சித்தத்தின்படிச் செய்கிறவர்களுக்கு அருளப்பட்ட வாக்குத்தத்தங்களில் ஒன்றை இல்லாமல் செய்துவிடமுடியும் என்றும் எண்ணி தன் உடன் மனிதனை அழிப்பதற்கு, மனிதனின் கரம் எட்டலாம்; என்றாலும் தேவப் பிரமாணத்தின்மீதுள்ள விசுவாசத்தைக் காப்பதில் தேவனுடைய ஊழியக்காரர்கள் அசையாத குன்றுகளைப்போல உறுதியாக இருக்கவேண்டும். (13)GCTam 59.1

    தாழ்வான பள்ளத்தாக்குகளிலுள்ள மலைகள், தேவனுடைய சிருஷ் டிக்கும் வல்லமைக்கு எப்போதுமுள்ள சாட்சிகளாயிருக்கின்றன. அந்த யாத்ரீகர்கள் யேகோவாவின் பிரசன்னத்தைக் காட்டுகின்ற மௌனமான அந்த அடையாளங்களை நேசித்தனர். தங்களுக்கு உண்டான கஷ்டங் களுக்காக அவர்கள் ஒருபோதும் முணுமுணுக்கவில்லை. தனிமையான அந்த மலையில், அவர்கள் ஒருபோதும் தனிமையாக இருக்கவில்லை. மனிதர்களின் கோபத்திலும் கொடுமையிலுமிருந்து தேவன் அவர்களைக் காக்கும்படி ஒரு புகலிடம் தந்திருந்தார். அதற்காக அவர்கள் தேவனுக்கு நன்றி சொன்னார்கள். அவர்முன் நின்று அவரைத் தொழும்படி அவர்களுக்குக் கிடைத்த சுதந்திரத்திற்காக அவர்கள் மகிழ்ந்தனர். எதிரிகளால் அடிக்கடி பின்தொடரப்பட்டபோது, இக்குன்றுகளின் பெலன் அவர்களுக்கு நிச்சயமான பாதுகாப்பாக இருந்தது. அநேக மலைச்சிகரங்களிலிருந்து அவர்கள் தேவனை ஸ்தோத்திரித்தனர். நன்றி தெரிவிக்கும் அவர்களது பாடல்களை ரோமன் கத்தோலிக்க சபையின் இராணுவத்தினால் மௌனமாக்கிட இயலவில்லை. (14)GCTam 59.2

    கிறிஸ்துவின் இந்தப் பின்னடியார்களின் பக்தி தூய்மையும் எளிமையும் வாஞ்சைமிக்கதாயும் இருந்தது. வீடுகள், நிலங்கள், நண்பர் கள், இனத்தார் ஆகிய அனைத்தையும்விட, உயிருக்கும் மேலாக, சத்தியத்தின் கொள்கைகளை அவர்கள் மதித்தனர். இந்தக் கொள்கைகளை அவர்களது இதயங்களில் பதிக்க அவர்கள் வாஞ்சையுடன் முயன்றனர். இளைஞர்கள் சிறுவயதிலிருந்தே வேதவாக்கியங்களில் போதிக்கப்பட்டனர். தேவப்பிரமாணத்தின் உரிமையைப் பரிசுத்தமாகக் கருதும்படி கற்பிக்கப் பட்டனர். வேதாகமப் பிரதிகள் அபூர்வமாயிருந்தன. எனவே, அதன் விலையேறப்பெற்ற வசனங்கள் மனப்பாடம் செய்யப்பட்டன. பழைய ஏற்பாடு, பதிய ஏற்பாடு ஆகியவைகளின் பெரும் பகுதிகளை அவர்கள் மனனம் செய்திருந்தபடியால், அவைகளைத் திரும்பச் சொல்லக் கூடியவர்களாகவும் இருந்தனர். இயற்கையின் எழில்மிக்க காட்சிகளுடனும் அன்றாட வாழ்க்கை யில் உண்டாகும் எளிமையான ஆசீர்வாதங்களுடனும், தேவனைப்பற்றிய எண்ணங்கள் பிணைக்கப்பட்டன. சகலவிதமான அனுகூலங்களையும் வசதிகளையும் தேவையான ஒவ்வொன்றையும் தருகிறவர் தேவன் என்ற நன்றியுணர்வுடன் அவரை நோக்கும்படி சிறுபிள்ளைகள் கற்றறிந்திருந்தனர். (15)GCTam 60.1

    மென்மையும் அன்பும் நிறைந்த பெற்றோர் அவர்களது பிள்ளைகளுக்கு சுறுசுறுப்பைக் கற்றுத்தரும்படி அவர்களை ஞானமாக நேசித்தார்கள். அவர்களுக்குமுன் சோதனையும் கடினமிக்க வாழ்க்கையும், ஒருவேளை இரத்தசாட்சியாக மரிக்கக்கூடிய நிலைமையும் இருந்தது. துன்பத்தை அனுபவிக்கவும், கட்டுப்பாட்டிற்குக் கீழ்ப்படியவும் தங்களுக்காகத் தாங்களே சிந்திக்கவும் செயல்படவும் அவர்கள் கற்பிக்கப்பட்டனர். பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவும், பேசும்போது வார்த்தைகளைக் காத்துக்கொள்ளவும், மௌனத்தின் ஞானத்தைப் புரிந்துகொள்ளவும் அவர்கள் சிறுவயது முதல் கற்பிக்கப்பட்டனர். பொறுப்பற்ற ஒரு வார்த்தையை அவர்களது விரோதிகள் கேட்க நேரிட்டால்கூட, அது அதைப் பேசியவரின் உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணும்; அதுவுமல்லாமல், நூற்றுக்கணக்கான அவரது சகோதரரின் உயிரையும் அது ஆபத்துக்குள்ளாக்கிவிடக்கூடும். ஏனெனில், ஓநாய்கள் அவைகளின் இரையை வேட்டையாடுவதுபோல, சமயச் சுதந்திரத்தின்மீது உரிமைபாராட்டுகின்றவர்களைப் பின்தொடர, சத்தியத்தின் விரோதிகள் துணிந்திருந்தனர். (16)GCTam 60.2

    வால்டென்னியர்கள் அவர்களது உலகப்பிரகாரமான செல்வச்செழிப்பை, சத்தியத்திற்காகத் தியாகம் செய்தனர். விடாமுயற்சியினாலும் கடின உழைப்பினாலும் அவர்களது உணவைச் சம்பாதித்தனர். மலைகளிலிருந்த— விவசாயம் செய்வதற்குத் தகுதியான ஒவ்வொரு இடமும், கவனத்துடன் பண்படுத்தப்பட்டன. பள்ளத்தாக்குகளும் செழுமைக்குறைவான குன்று களுங்கூட, பயன்தரும்படி விவசாயம்செய்யப்பட்டன. சிக்கனமும் சுயமறுப்பும் பிள்ளைகளின் கல்வியின் ஒருபகுதியாக இருந்தது. அவைகளை அவர்கள் பரம்பரைச் சொத்தாகப்பெற்றனர். அவர்களுடைய தேவைகள்— அவர்களது சுய உழைப்பு, முன்யோசனை, விசுவாசம் ஆகியவைகளினால் மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கும் என்றும், தேவன் வாழ்க்கையைச் சீருள்ளதாக வடிவமைக்கிறார் என்றும், அவர்கள் போதிக்கப்பட்டனர். இந்த முறையானது, உழைப்புமிக்கதும் களைப்பூட்டுவதாகவும் இருந்தது. ஆனாலும் விழுந்துபோன மனிதனுக்குத் தேவையான முழுமையுள்ளதாகவும் அவனுடைய பயிற்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் தேவன் ஏற்படுத்தின பள்ளியாகவும் இருந்தது. (17)GCTam 61.1

    உழைக்கவும், கடுமையாகப் பாடுபடவும் இளைஞர்கள் பழக்கப் படுத்தப்பட்டனர். அவர்களது புத்திக்கூர்மையின் அவசியம் அலட்சியப் படுத்தப்படவில்லை. அவர்களது முழுப்பலமும் தேவனுக்குச் சொந்தமானது என்றும், அவை அனைத்தும் தேவனுடைய சேவைக்கென்று மேம்பாடடையச் செய்யவேண்டும் என்றும் அவர்கள் கற்பிக்கப்பட்டனர். (18)GCTam 61.2

    வௌடாயிஸ் (வால்டென்னிய) சபைகள் அவைகளின் தூய்மையிலும்சரி-எளிமையிலும்சரி—அப்போஸ்தலர்களின் காலத்திலிருந்த சபைகளைப்போன்றே இருந்தன. போப், குருமார்கள் ஆகியோரின் மேலாதிக் கத்தை நிராகரித்த அவர்கள், வேதாகமம் ஒன்றுதான் மேலாண்மையும் தவறாமையின் அதிகாரமும் கொண்டது என்று அதைப் பற்றிக்கொண்டிருந்தனர். அவர்களது போதகர்கள் ரோமன் கத்தோலிக்க குருமார்களைப்போல- பிரபுக்களைப்போல இருக்கவில்லை. அவர்கள் “ஊழியம்கொள்ள வராமல், ஊழியம்செய்யவந்தார்” என்ற அவர்களது எஜமானனின் உதாரணத்தைப் பின்பற்றுபவர்களாக இருந்தனர். அவருடைய பரிசுத்த வார்த்தைகள் என்னும் புல்லுள்ள இடங்களுக்கும் ஜீவஊற்றுக்கும் அவர்கள் தேவனுடைய மந்தையை நடத்திப் போஷித்தனர். மனித டாம்பீகத்தையும் பெருமையையும் காட்டுகின்ற பெரிய சபைகளிலும் பெரிய ஆலயங்களிலும் அவர்கள் கூடவில்லை. கிறிஸ்துவின் ஊழியர்களிடமிருந்து சத்தியத்தின் வார்த்தைகளைக் கவனிப்பதற்கு, அவர்கள் மலைகளின் நிழல்களிலும் ஆல்பைன் பள்ளத்தாக்குகளிலும், ஆபத்தான வேளைகளில் மலைகளில் பாதுகாப்பாயிருந்த இடங்களிலும் கூடியிருந்தனர். அந்தப் போதகர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தது மட்டுமன்றி, நோயாளிகளையும் சந்தித்தனர். சிறுவர்களுக்கு வேதபாடம் கற்றுக்கொடுத்தனர். தவறுகிறவர்களைக் கண்டித்தனர். விவகாரங்களுக்குப் பரிகாரம் தேடினர். இசைவையும் சகோதர சிநேகிதத்தையும் உண்டுபண்ண உழைத்தனர். சமாதானகாலத்தில் மக்கள் கொடுத்த மனமுவந்த காணிக்கைகளினால் அவர்கள் தாங்கப்பட்டனர்; ஆனால் கூடாரவேலை செய்திருந்த பவுலைப்போலவே, தேவைப்பட்டபோது, தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளும் வகையில் ஏதாவதொரு தொழிலையும் கற்றிருந்தனர். (19)GCTam 61.3

    இளைஞர்கள் போதகர்களால் போதிக்கப்பட்டிருந்தனர். பொதுவான கல்வியின் பல பிரிவுகளில் கவனம் செலுத்தப்பட்டிருந்தாலும் வேதாகமம்தான் முக்கிய பாடமாக இருந்தது. அநேக நிரூபங்களுடன் மத்தேயு, யோவான் எழுதின சுவிசேஷங்களை மனப்பாடம் செய்திருந்தனர். அவர்கள் வேதாகமங் களின் பிரதிகளை நகல் எடுப்பதிலும் ஈடுபட்டிருந்தனர். வேதாகமம் முழுவதும் சில கையெழுத்துப் பிரதிகளில் இருந்தது. மற்றவைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்மட்டும் இருந்தன. அவைகளில் வசனங் களுக்கு வேதாகமத்தை விளக்கக்கூடியவர்களால் கொடுக்கப்பட்ட விளக்கங் களுமிருந்தன. இவ்விதமாக, தேவனுக்குமேலாகத் தங்களை உயர்த்த வகைதேடினவர்களால் மூடிவைக்கப்பட்டிருந்த சத்தியத்தின் பொக்கிஷங்கள் வெளியே கொண்டுவரப்பட்டன. (20)GCTam 62.1

    சில சமயங்களில் இருண்ட பெரும் குகைகளில் இருந்து, தீவட்டிகளின் வெளிச்சத்தில் பொறுமையுடனும் ஓய்வற்ற உழைப்புடனும் வசனம் வசன மாக, அதிகாரம் அதிகாரமாக, வேத வாக்கியங்கள் எழுதப்பட்டன. இவ்வித மாக சுத்தமான பொன் பிரகாசிப்பதுபோல, வெளிப்படுத்தப்பட்ட தேவ னுடைய சித்தத்தை வெளியிடும் வேலை தொடர்ந்தது. அவை எவ்வளவு ஒளிமிக்கதாகவும் தெளிவானதாகவும் வல்லமை உள்ளதாகவும் உள்ளன என்பதை அவைகளுக்காக சோதனைகளை அனுபவித்தவர்களாலும் அந்தப் பணியில் ஈடுபட்டவர்களாலும் மட்டுமே உணரமுடிந்தது. பரலோகத்திலிருந்து வந்த தூதர்கள் விசுவாசமிக்க இப்பணியாளர்களைச் சூழ்ந்திருந்தனர். (21)GCTam 62.2

    மதப்புரட்டு, தவறுகள், மூடநம்பிக்கை என்னும் குப்பைகளுக் கடியில் சத்திய வார்த்தைகளைப் புதைத்துவிட சாத்தான் போப்புவின் குருமார்களையும் பாதிரிகளையும் நெருக்கி ஏவினான்; ஆனால் இருண்டகாலத்திற்கும் ஊடாக, அது கறைபடாததாக மிகவும் ஆச்சரியப்படத்தக்கவிதத்தில் பாதுகாக்கப்பட்டிருந்தது. அது மனிதனின் முத்திரை அற்றதாக தேவனுடைய முத்திரையை ஏற்றதாக இருந்தது. வேதவாக்கியங்கள் எளிமையும் தெளிவு மிக்க அர்த்தத்தை உடையவைகளாயுமிருந்தன. அவைகளை இருளடையச் செய்யவும் தங்களது சொந்த சாட்சியங்களுக்கெதிராக ஆக்கும் முயற்சியிலும் மனிதர்கள் களைப்படையாதவர்களாக இருந்தனர். அழிப்பதற்கென்று வீசும் புயலுக்கும் பயங்கரமான கடல் அலைகளுக்கும் நடுவில் அகப்பட்டக் கப்பலைப்போல தேவனுடைய வார்த்தைகள் அவைகளை மேற்கொண்டு பயணம்செய்கின்றன. பூமிக்கடியிலுள்ள சுரங்கங்களில் ஏராளமான பொன்னும் வெள்ளியும் அதைத் தோண்டுபவர்களுக்குக் கிடைக்கும்; அதைப்போல் மிகுந்த ஆர்வத்துடனும், ஜெபத்துடனும் தேடுபவர்களுக்குமட்டுமே சத்தியத்தின் கருவூலங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. சிறுவயதிலும், இளமைப்பருவத்திலும், பெரிய மனிதனாக இருக்கும்போதும், காலம் நெடுகிலுமாகக் கற்பதற்கென தேவன் வேதாகமத்தை வடிவமைத்தார். அவர் தம்மை வெளிப்படுத்துவதற்காக, வேதாகமத்தை மனிதர்களுக்குக் கொடுத்தார். புதிதாக அறிந்து கொள்ளப்படும் ஒவ்வொரு சத்தியமும் அதன் ஆசிரியரின் பண்பை வெளிக்காட்டுபவையாக உள்ளன. வேதவாக்கியங்களை வாசிப்பது, மக்களை அவர்களது சிருஷ்டிகருடன் நெருங்கிய உறவிற்குக் கொண்டுவரும் கருவியாக அமைந்துள்ளது; அவரது சித்தத்தைப்பற்றிய தெளிவான அறிவைத் தருவதாக உள்ளது; அதுவே தேவனுக்கும்— மனிதனுக்கும் இடையில் உள்ள செய்தித் தொடர்புக் கருவியாகவும் இருக்கிறது.(22)GCTam 62.3

    “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” என்று வால்டென்னியர்கள் கருதியிருந்த அதே நேரம், மனதை விரிவடையச் செய்வதும், உணர்ந்துகொள்ளும் திறனை அதிகப்படுத்திக் கொள்ளுவதும், மனிதர்களைப்பற்றிய அறிவும் செயலாக்கமும் அவசியமானது என்பதை அறியாத குருடர்களாக இருக்கவில்லை. விரிவான கல்வி, சிந்தனை, கண்டுபிடிப்புகள் ஆகியவைகளைக் கற்றுத்தரக்கூடிய பிரான்சிலோ, அல்லது இத்தாலியிலோ இருந்த பெரிய கல்விக்கூடங்களுக்கு அவர்களது சுயதேசமான ஆல்ப்ஸ் மலைப்பள்ளிகளிலிருந்து சில இளைஞர்கள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர். அப்படி அனுப்பப்பட்டவர்கள், மிகவும் தந்திரமான மதப்புரட்டுக்களையும் மிகவும் பயங்கரமான அபாயங்களையும் கொண்டுவருகின்ற வஞ்சகங்களடங்கிய சோதனைகளைச் சந்தித்தனர். தீயபழக்கங்களைக் கண்டனர், சாத்தானின் தீய ஏவலாளர்களைச் சந்தித்தனர்; ஆனால், சிறுவயதிலிருந்தே அவர்கள் கற்ற கல்வி, இவைகளையெல்லாம் சந்திப்பதற்கு அவர்களைத் தகுதிப்படுத்தும் தன்மையோடு இருந்தது. (23)GCTam 63.1

    அந்தப் பள்ளிகளில், அவர்கள் எங்கு சென்றபோதிலும், ஒருவர்மீதும் நம்பிக்கைவைக்காமலிருக்க வேண்டியதிருந்தது. அவர்களது பெரும் செல்வ மாகிய வேதவாக்கியக் கையெழுத்துப் பிரதிகளை மறைத்துவைக்கும் விதத்தில், அவர்களது உடைகள் ஆயத்தம் செய்யப்பட்டிருந்தன. மாதக்கணக்கிலும் வருடக்கணக்கிலும் அவர்களது உழைப்பினால் உண்டான இந்தக் கனிகளை அவர்கள் தங்களுடன் எடுத்துச்சென்றிருந்தனர். சந்தேகத்தை எழுப்பாமல் செயல்படக்கூடியபோதெல்லாம், சத்தியத்தை ஏற்றுக்கொள்ள இதயம் திறக்கப்பட்டவர்களாகக் காணப்பட்ட சிலரின் பாதையில் அவைகளின் சில பகுதிகளை மிகவும் எச்சரிக்கையுடன் வைத்தனர். இந்த நோக்கத்தைச் செயல்படுத்திட, வால்டென்னிய இளைஞர்கள் அவர்களது அன்னைகளின் மடிகளில் இருக்கும்போதிலிருந்தே பழக்கப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் தங்களுடைய வேலையைப் புரிந்துகொண்டு, விசுவாசத்துடன் அதைச் செய்தனர். இந்தப் பள்ளிகளிலிருந்து மெய்யான விசுவாசத்திற்கு மனம் மாறினவர்கள் ஆதாயஞ்செய்யப்பட்டனர். அதன் கொள்கைகள், அதன் சுகந்தத்தை அந்தப் பள்ளிகளெங்கிலும் பரவச்செய்தன. அப்படி இருந்தும் போப்புமார்க்கத் தலைவர்கள் மிகநெருக்கமான விசாரணையினால்கூட, அவர்களுடைய கோட்பாடுகளுக்கு எதிரான மதப்புரட்டுகள் என்று கருதப்பட்டவைகளின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க இயலவில்லை.(24)GCTam 64.1

    கிறிஸ்துவின் ஆவி, ஒரு ஊழியக்காரனின் ஆவியாக உள்ளது. புதுப்பிக்கப்பட்ட இதயத்திலிருந்து வருகிற முதல் துடிப்பு-மற்றவர்களை மீட்பரிடம் கொண்டுசெல்லவேண்டும் என்பதே. சத்தியத்தை அதன் தூய்மையுடன் தங்கள் சபைகளில் மட்டும் காத்துக்கொண்டால் போதாது; அவர்களிடமிருந்து தேவன் இன்னும் அதிகமானவர்களை எதிர்பார்க்கிறார் என்பதை அவர்கள் உணர்ந்தனர். இருளில் இருப்பவர்களின்மீது வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்யும் பக்திவிநயமான பொறுப்பு அவர்களிடம் உள்ளது என்பதையும் அவர்கள் உணர்ந்தனர்; எனவே, ரோமன் கத்தோலிக்க சபை புகுத்தியிருந்த அடிமைத்தளையை உடைக்க, தேவனுடைய பலமிக்க வார்த்தைகளின் வல்லமையை அவர்கள் நாடினார்கள். வௌடாயிஸ் மக்கள் ஊழியக்காரர்களாகப் பயிற்றுவிக்கப்பட்டனர். இந்த ஊழியத்தில் ஈடுபட விரும்பின ஒவ்வொரு ஊழியரும் ஒரு சுவிசேஷகரின் அனுபவத்தை அடைந்தாகவேண்டும் என்று கோரப்பட்டனர். தங்கள் ஊர்களில் இருந்த சபையின் பொறுப்பை அவர்கள் ஏற்பதற்குமுன், ஒவ்வொருவரும் மூன்று வருடங்கள் ஏதாவதொரு பணிக்களத்தில் சேவைசெய்தாக வேண்டும். சுயவெறுப்பையும் தற்தியாகத்தையும் எதிர்பார்த்த இந்த சேவை, மனிதருடைய ஆத்துமாக்கள் சோதிக்கப்பட்ட அக்காலத்தில் ஊழியர்களுடைய வாழ்க்கைக்கு மிகச்சரியான அறிமுகமாயிருந்தது. இந்தப் பரிசுத்தமான பதவிக்கென்று அபிஷேகம் செய்யப்பட்ட இளம் போதகர்கள்முன் உலகப்பிரகாரமான செல்வமும் மகிமையும் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவர்கள் அவைகளைப் பார்க்காமல், உழைப்பும் ஆபத்தும் இரத்தசாட்சியாக மாறக்கூடிய நிலைமையும் இருப்பதைக் கண்டனர். இயேசு அவரது சீடர்களை இருவர் இருவராக அனுப்பி இருந்தார். அதைப்போலவே, இந்த ஊழியக்காரர்களும் இருவர் இருவராக வெளியே சென்றனர். வழக்கமாக ஒரு இளைஞனுடன் அனுபவத்தில் முதிர்ந்த ஒருவர் சென்றிருந்தார். இளைஞனின் பயிற்சிக்கு அவர் பொறுப்புள்ளவராக இருந்தார். இளைஞன் அந்த முதியவரின் போதனைக்குச் செவிசாய்க்கவேண்டியதிருந்தது. இந்த இரு உடன்ஊழியர்களும் எப்பொழுதும் ஒருமித்திருக்கவில்லை. ஆனால் ஜெபம் செய்வதற்காகவும் ஆலோசனைகளுக்காகவும் அதிகமாக சந்தித்து விசுவாசத்தில் ஒருவரையொருவர் பலப்படுத்திக் கொண்டிருந்தனர். (25)GCTam 64.2

    அவர்களது ஊழியத்தின் நோக்கத்தை அவர்கள் வெளிக்காட்டி இருந்தால், தோற்கடிக்கப்பட்டிருந்திருப்பார்கள். எனவே, மிகுந்த கவனத் துடன் அவர்களது உண்மையான நோக்கத்தை மறைத்திருந்தனர். ஒவ்வொரு ஊழியக்காரனும் ஏதாவதொரு தொழிலைக் கற்றிருந்தான். இந்த ஊழியக்காரர்கள் மதச்சார்பற்ற வேலைக்காகச் செல்லுகிறோம் என்ற திரைமறைவில் அவர்களது பணியினைத் தொடர்ந்தனர். அலைந்துதிரிந்து செய்கின்ற வியாபாரத்தை அவர்கள் வழக்கமாகத் தேர்ந்தெடுத்தனர். (26)GCTam 65.1

    தூரமான இடத்திலன்றி அந்நாட்களில் வாங்கப்படமுடியாத பட்டுத் துணிகள், ஆபரணங்கள் மற்றும் அநேக பொருட்களைச் சுமந்துசென்றனர். மிஷனரிகளாகச் சென்றிருந்தால், அவமரியாதையாக நடத்தப்பட இருந்த இடங்களில், அவர்கள் வியாபாரிகளாக வரவேற்கப்பட்டிருந்தனர். பொன்னையும் வைரத்தையும்விட விலை உயர்ந்த ஒரு செல்வத்தை மக்கள் முன் வைக்கவேண்டியதாக இருந்தது.— Wylie, b. 1, ch. 7. அதற்கான ஞானத்திற்காக, அவர்களது இதயங்கள் எப்பொழுதும் தேவனை நோக்கி உயர்த்தப்பட்டவையாக இருந்தன. அவர்கள் தங்களுடன் முழு வேதாகமத் தையோ, அதன் ஒருபகுதியையோ இரகசியமாக எடுத்துச்செல்லும் வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம், அவர்களிடம் பொருள் வாங்குவதில் ஈடுபட்டிருந்தவர்களை, இந்தக் கைப்பிரதிகளின்மீது கவனம் வைக்கும்படிச் செய்தனர். இவ்வாறாக, தேவனுடைய வார்த்தையை வாசிக்கும்படியான ஆர்வம் அடிக்கடி எழுப்பப்பட்டது. அவைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பின வர்களுக்கு அவைகளின் சில பகுதிகள் மகிழ்ச்சியுடன் தரப்பட்டன. (27)GCTam 65.2

    இந்த ஊழியம் அவர்களின் சொந்த மலை அடிவாரங்களில் இருந்த சமவெளிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் ஆரம்பமாகி, எல்லைகளைக் கடந்து விரிவடைந்தது. அவர்களது எஜமானனைப் போலவே, அவர்களும் காலணிகள் இல்லாதவர்களாகவும், முரட்டு உடைகளை அணிந்தவர்களாகவும், பயணத்தால் அழுக்கடைந்தவர்களாகவும், தூரமான இடங்களில் இருந்து பெரும் நகரங்களுக்குள் நுழைந்தனர். விலைமதிப்புமிக்க விதைகளை அவர்கள் எங்கும் விதைத்தார்கள். அவர்களது பாதையில் சபைகள் எழும்பின. இரத்தசாட்சிகளின் இரத்தம் சத்தியத்திற்குச் சாட்சியாக இருந்தது. விசுவாசமிக்க இந்த மனிதர்களின் ஊழியத்தினால், ஏராளமான ஆத்துமாக்கள் பெருகின. இந்த அறுவடையை தேவனுடைய நாளானது வெளிப்படுத்தும். தேவனுடைய வார்த்தைகள் தங்களைத் திரையிட்டு மறைத்துக்கொண்டு, மௌனமாக, அவைகளின் பாதையை வகுத்துச்சென்றன. மகிழ்ச்சிமிக்க வரவேற்பை அவை வீடுகளிலும் மனிதர்களின் இதயங்களிலும் சந்தித்தன. (28)GCTam 65.3

    வேதவாக்கியங்கள் வால்டென்னியருக்கு, கடந்தகாலத்தில் தேவன் மனிதர்களுடன் இடைப்பட்டதன் ஆதாரமாகவும் நிகழ் காலத்திலுள்ள பொறுப்பு கள், ஊழியங்கள் ஆகியவைகளின் வெளிப்படுத்தலாகவும்மட்டும் இருக்க வில்லை; எதிர்காலத்திலுள்ள ஆபத்துக்களையும் மகிமைகளையுங்கூட விவரிக்கின்றவையாக இருந்தன. எல்லாவற்றிற்கும் முடிவு வெகுதூரத்தில் இல்லையென்று அவர்கள் நம்பினர். ஜெபத்துடனும் கண்ணீருடனும் அவர்கள் வேதாகமத்தை வாசித்தனர். அப்போது மிகுந்த விலைமதிப்புள்ள அதன் வார்த்தைகளால், ஆழமாக உணர்த்தப்பட்டனர். மீட்கும் இந்த சத்தியங்களைப் பிறருக்கு அறிவிக்கவேண்டிய அவர்களது கடமையையும் அவர்கள் உணர்ந்தனர். வேதாகமத்தின் பரிசுத்தமான பக்கங்களில், மீட்பின் திட்டம் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருப்பதையும், இயேசுவை நம்புவதால் உண்டாகும் ஆறுதல், நம்பிக்கை, சமாதானம் ஆகியவைகளையும் அவர்கள் கண்டனர். அவர்களது அறிவை ஒளிபெறச்செய்யும்வண்ணம் அவர்களது இதயங்களில் அது பிரகாசித்தது. அது அவர்களை மகிழச்செய்தபோது, போப்புமார்க்கத்தின் இருளில் இருந்தவர்களின்மீது, அந்த ஒளிக்கதிர்கள் பாயவேண்டுமென்று அவர்கள் வாஞ்சித்தனர். (29)GCTam 66.1

    போப், குருமார்கள் ஆகியோரின் வழிகாட்டுதலில், திரளானவர்கள் அவர்களது ஆத்துமாக்களின் பாவமன்னிப்பைப் பெறும்முயற்சியில், தங்களது சரீரங்களை வீணாக வதைத்துக் கொண்டிருந்ததைக் கண்டனர். தங்களை இரட்சிக்கும்படியாக, தங்களது நற்செயல்களின்மீது நம்பிக்கை வைக்கும்படி அவர்கள் கற்பிக்கப்பட்டிருந்தனர். எனவே, அவர்கள் எப்பொழுதும் தங்களையே நோக்கிக்கொண்டிருந்தனர். அவர்களது மனங்கள் அவர்களது பாவகரமான நிலைமையையே சிந்தித்துக்கொண்டு இருந்தன. தாங்கள் தேவகோபத்திற்கு ஆளாகி இருப்பதைக் கண்டு, சரீரத்தையும் ஆத்துமாவையும் வதைத்துக்கொண்டிருந்தும், இளைப்பாறுதல் இல்லாதவர்களாக இருந்தனர். இவ்வாறாக, நேர்மையான ஆத்துமாக்கள் கத்தோலிக்கமார்க்கத்தின் கோட்பாடுகளினால் கட்டப்பட்டிருந்தன. ஆயிரக் கணக்கானவர்கள் நண்பர்களையும் உறவினர்களையும் விட்டுப்பிரிந்து, தங்களுடைய வாழ்க்கையை மடங்களின் அறைகளில் கழித்தனர்; அடிக்கடி செய்யப்பட்ட உபவாசங்கள், தங்களுக்குத் தாங்களே கொடுத்துக் கொண்ட கொடுமையான சவுக்கடிகள், இரவெல்லாம் கண்விழித்திருத்தல், தங்குமிடங்களில் இருந்த மிகக் குளிர்ச்சிமிக்க கற்களின்மீது சாஷ்டாங்கமாக மணிக்கணக்கில் விழுந்துகிடத்தல், புண்ணிய ஸ்தலங்களுக்கு நீண்ட பயணம்செய்தல், தாழ்மைப்படுத்தும் பாவமன்னிப்புச் செயல்கள், பயங்கர மான சித்திரவதைகள்-இவைபோன்ற செயல்களினால், ஆயிரக்கணக்கான வர்கள், மனசாட்சியில் சமாதானத்தைக்காண வீணாக முயன்றிருந்தனர்; பாவப் பாரத்தால் அழுத்தப்பட்டவர்களாக, பழிவாங்கும் தேவகோபம்பற்றிய பயத்துடன் நடமாடி, களைப்படைந்து, இயற்கை வழிவிடும்வரை வேதனையுடன் இருந்து, அநேகர் ஒளியின் ஒரு கீற்றையோ நம்பிக்கையையோகூடக் காணாமல் கல்லறைகளில் அடங்கினர். (30)GCTam 66.2

    ஆவிக்குரிய உணவின்றி பட்டினிகிடந்த இந்த ஆத்துமாக் களுக்கு ஜீவ அப்பம் கொடுக்கவும், தேவனுடைய வாக்குத்தத்தம் என்னும் தூதினால் வரும் சமாதானத்தைக் கொடுக்கவும், அவர்களது மீட்பின் ஒரே நம்பிக்கையாகக் கிறிஸ்து இருப்பதை அவர்களுக்குச் சுட்டிக்காட்டவும் வால்டென்னியர்கள் வாஞ்சித்தனர். தேவப் பிரமாணங்களை மீறினதற்கு, தங்களுடைய நற்கிரியைகளினால் பாவநிவாரணம் உண்டுபண்ணலாம் என அவர்கள் நம்பியிருந்த இந்தக் கோட்பாடு, தவறை அடிப்படையாகக்கொண்டது என்று வால்டென்னியர்கள் அவர்களிடம் கூறினார்கள். மனித மேன்மைகளைச் சார்ந்து இருப்பது, கிறிஸ்துவின் அன்பைப்பற்றிய நோக்கிற்குக் குறுக்கே வளருகிறது; விழுந்துபோன மனித இனத்தினால், அதன் மீட்பிற்காக எந்த ஒரு செயலையும் தேவனுக்குமுன் வைக்க இயலாது; அப்படி இருந்ததால்தான் இயேசு மனிதனுக்காக அவரது ஜீவனைத் தியாகபலியாகச் செலுத்தினார். சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்தவரின் மேன்மைகள்தான் கிறிஸ்தவ விசுவாசத்தின் அஸ்திவாரமாக உள்ளது. உடலுடன் கையும் காலும் பிணைக்கப்பட்டிருப்பதுபோல், ஆத்துமா கிறிஸ்துவுடன் பிணைக்கப்பட்டதாக இருந்து, கிறிஸ்துவைச் சார்ந்திருக்கிறது என்பதே உண்மை. (31)GCTam 67.1

    போப், குருமார்கள் ஆகியோரின் போதனைகள், தேவ சுபாவத்தையும் கிறிஸ்துவின் சுபாவத்தையும் மிகவும் ஈவு இரக்கம் அற்றதாகக் காட்டி யிருந்தன. விழுந்து கிடக்கும் நிலைமையிலுள்ள மனிதனிடம், அனுதாப மில்லாதவராக இரட்சகர் காட்டப்பட்டு, அதினிமித்தம் குருமார்கள் பரிசுத்தவான்கள் ஆகியோரின் மத்தியஸ்தம் கெஞ்சிக் கேட்கப்படவேண்டும் என்பதாக அவர்கள் போதித்திருந்தனர். தேவனுடைய வார்த்தையினால், மனங்களில் வெளிச்சமடைந்த அவர்கள், இயேசுவை மனஉருக்கமுள்ள அன்புமிக்க இரட்சகராக, மனிதர்கள் அனைவரையும் அவர்களுடைய பாவப்பாரத்தோடும் சோர்வுகளோடும் கவலைகளோடும் தம்மிடம் வரும்படியாக கரம்நீட்டி அழைக்கிறவராக அவர்களுக்குக் காட்டுவதற்கு வாஞ்சித்தனர். தேவனுடைய வாக்குத்தத்தங்களைக் காணாமலும், தேவனிடம் நேரடியாக வந்து தங்கள் பாவங்களை அறிக்கைசெய்ய முடியாமலும் இருப்பதற்காக சாத்தான் அவர்கள்முன் அடுக்கிவைத்திருந்த தடைகள் அனைத்தையும் நீக்கிட அவ்வூழியர்கள் வாஞ்சித்தனர். (32)GCTam 67.2

    வௌடாயிஸ் ஊழியக்காரர்கள், சுவிசேஷத்தின் விலைமதிப்புமிக்க சத்தியங்களை, விசாரித்தவர்களுக்கு வாஞ்சையுடன் விவரித்தனர். மிகக்கவனமாக எழுதப்பட்டிருந்த வேதாகமப் பகுதிகளை, அவர்கள் எச்சரிக்கையுடன் கொடுத்தனர். பழிவாங்கும் நோக்கத்துடன் நியாயத்தீர்ப்பைச் செயல்படுத்தக் காத்திருக்கும் ஒரு கடவுளை மட்டுமே அவர்களது மனசாட்சியால் காணமுடிந்திருந்தது. இவ்விதமாக, பாவத்தால் நொறுங்குண்ட ஆத்துமாவிற்கு நம்பிக்கையை ஊட்டுவது அவர்களது (வௌடாயிஸ் ஊழியர்களது) பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. அடிக்கடி நடுங்கும் உதடுகளுடனும் கண்ணீர்வடியும் கண்களுடனும் முழங்காலில் நின்று, பாவியின் ஒரே நம்பிக்கையாக இருந்த விலைமதிப்புமிக்க வாக்குத்தத்தத்தை அந்தச் சகோதரர்களுக்கு எடுத்துக்காட்டினார்கள். இப்படியாக, தமது செட்டைகளின் கீழ் ஆரோக்கியத்தையுடைய, நீதியின் சூரியன் பிரகாசிக்கும்படி, அநேக இருண்ட மனங்களிலிருந்த துயரம் என்னும் கார்மேகத்தை சத்தியத்தின் ஒளி ஊடுருவிச் சென்றது. வேத வசனங்களில் சில பகுதிகளைச் சரியாகப் புரிந்துகொண்டதாக உறுதியுண்டாகவில்லையெனில், அதைக்கேட்க விரும்பியவர்களுக்கு, அவர்கள் புரிந்துகொள்ளும்வரை, திரும்பத்திரும்ப அடிக்கடி அவைகள் வாசித்துக்காட்டப்பட்டது. “அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (1 யோவான் 1:7) “சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:14-16) என்னும் இந்த வசனங்கள் திரும்பத்திரும்பச் சொல்லப்படுவதற்கு ஆவலுடன் விருப்பப்பட்டன. (33)GCTam 68.1

    கத்தோலிக்கமார்க்கத்தின் உரிமைபாராட்டுதலைக்குறித்து, அநேகர் வஞ்சிக்கப்படவில்லை. பாவிக்காக மனிதர்களோ, அல்லது தேவதூதர்களோ மத்தியஸ்தம்செய்வது எவ்விதம் வீணானது என்பதை அவர்கள் கண்டனர். அவர்களது மனங்களில் உண்மையான வெளிச்சம் உதித்தது. அப்போது அவர்கள்: “கிறிஸ்து என் ஆசாரியர்; அவரது இரத்தம் எனக்கான தியாகபலி; அவரது பலிபீடம் நான் பாவ அறிக்கை செய்யுமிடம்” என்று மகிழ்சியுடன் கூறினார்கள். “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்” (எபி. 11:6) “நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே, அவருடைய நாமமே அல்லாமல், வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” (அப். 4:12) என்னும் வசனங்களைத் திரும்பத்திரும்பச் சொல்லி, இயேசுவின் மேன்மைகளின்மீது தங்களை முற்றிலுமாகச் சார்ந்திருக்கச் செய்தனர். (34)GCTam 69.1

    புயலால் அலைக்கழிக்கப்பட்ட ஏழ்மையான சில ஆத்துமாக்களுக்கு, மீட்பரின் அன்பைப்பற்றிய நிச்சயத்தை நடைமுறைப்படுத்துவது மிகமிக மேன்மையானதாகக் காணப்பட்டது. அது கொண்டுவந்த இளைப்பாறுதல் அவ்வளவு பெரிதாக இருந்தது. அவர்கள்மீது வீசப்பட்ட ஒளிவெள்ளம் அவர்களைப் பரலோகத்திற்கே எடுத்துச்சென்றதுபோல் காணப்பட்டது. அவர்களுடைய கரங்கள் நம்பிக்கையுடன் இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டன. நித்திய கன்மலையின்மீது அவர்களது பாதங்கள் ஊன்றப் பட்டன. மரணத்தைப்பற்றிய எல்லா பயமும் நீங்கிவிட்டது. சிறையினாலும் எரியும் அக்கினியினாலும் தங்களுடைய இரட்சகரின் நாமத்தை மேன்மைப் படுத்தும்படி, அவர்கள் அதை விரும்பினார்கள். (35)GCTam 69.2

    சத்தியத்தையும் அதன் ஒளியையும் வாஞ்சித்த சிலருக்குச் சில சமயங்களிலும், பலருக்குப் பல சமயங்களிலும், சில வேளைகளில் தனி நபருக்கும், இரகசியமான இடங்களில் வேதவசனங்கள் வாசித்துக்காட்டப் பட்டன. அடிக்கடி முழுஇரவுகளும் இவ்விதமாக கழிக்கப்பட்டன. இரக்கத்தின் தூதுவன் இரட்சிப்பைப் பற்றிக்கொண்டதன் ஆரவாரம் அடங்கும்வரை அவர்களுக்கு வேதவாக்கியங்களை வாசித்துக்காட்டியிருந்தான். அந்தத் தூதுவனை வாசிப்பதை நிறுத்த வற்புறுத்தும்படி, அதனைக் கேட்டிருந்த வர்களின் வியப்பும் கொண்டாட்டமும் அவ்வளவு பெரிதாக இருந்தது. எனது காணிக்கையை தேவன் அங்கீகரிப்பாரா? அவர் என்னை நோக்கிப் புன்முறுவல் செய்வாரா? என்னை மன்னிப்பாரா என்பதுபோன்ற வார்த்தைகள் அடிக்கடி சொல்லப்பட்டன. “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத். 11:28) என்ற வசனம் அவர்களின் கேள்விகளுக்குப் பதிலாக வாசிக்கப்பட்டது. (36)GCTam 69.3

    விசுவாசம் வாக்குத்தத்தத்தைப் பற்றிக்கொண்டபோது “இனிமேல் தீர்த்த யாத்திரைகள் இல்லை; இனிமேல் புண்ணிய ஸ்தலங்களுக்கான வேதனை மிக்க பயணங்கள் இல்லை; நான் பாவியாகவும் பரிசுத்தமில்லாதவனுமாக, இருக்கிறவண்ணமாகவே இயேசுவிடம் வரலாம்; எனது பாவ மன்னிப்பிற்கான மன்றாட்டை, அவர் அலட்சியப்படுத்தமாட்டார். ‘உன்னுடைய பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது’ என்னுடைய பாவங்களுங்கூட எனக்கு மன்னிக்கப்படும்” என்ற மகிழ்ச்சிமிக்க பதில்கள் உண்டாயின.(37)GCTam 70.1

    துதித்தலினாலும் நன்றி தெரிவிப்பதினாலும் பரிசுத்தமான மகிழ்ச்சியின் ஆரவாரம் இதயத்தை நிரப்பும். இயேசுவின் பெயர் உயர்த்தப்படும். இந்த மகிழ்ச்சிமிக்க ஆத்துமாக்கள் தங்களால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு வெளிச்சத்தைப் பரப்பினார்கள். தங்களுடைய அனுபவங்களைத் திரும்பச் சொல்லுவதற்காக, மெய்யான ஜீவப்பாதையை அவர்கள் கண்டுகொண்டதைச் சொல்லுவதற்காகத் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பினார்கள். சத்தியத்தின்மீது ஏக்கமாயிருந்தவர்களின் மனங்களில் நேரடியாகப் பேசின பக்திவிநயமான ஒரு வல்லமை அவ்வேதவாக்கியங்களில் இருந்தது. அது தேவனுடைய குரலாக இருந்து, அதைக் கேட்டவர்களுக்குள், அவர்கள் குற்றவாளிகள் என்ற உணர்வைக் கொண்டுவந்தது. (38)GCTam 70.2

    சத்தியத்தின் தூதுவன் அவனது வழியே சென்றுவிட்டான்; ஆனால் அவனுடைய தாழ்மையான தோற்றமும் உண்மையும், அவனது அக்கரை, ஆழ்ந்த ஊக்கம் ஆகியவையும் அடிக்கடி குறிப்பிடப்பட்டன. அநேக சமயங்களில் அவன் எங்கிருந்து வந்தானென்றோ, அல்லது எங்கே சென்றா னென்றோ, அவனைச் செவிமடுத்தவர்கள் கேட்கவில்லை. அவர்கள் முதலில் ஆச்சரியத்தினாலும், அதன்பின் நன்றியுள்ள மகிழ்ச்சியினாலும் பிரமிப்படைந்து போனார்கள். அதனால் அவர்கள் அவனைப்பற்றி விசாரிப்பதற்கு நினைக்க வில்லை. அவர்களுடைய வீட்டிற்கு வரவேண்டுமென்று அவர்கள் அவனை வற்புறுத்தினபோது, மந்தையிலிருந்து காணாமல்போன ஆட்டைத் தேடிச் செல்ல வேண்டியதாக உள்ளது என்று அவன் பதில் கூறினான் “அவன் பரலோகத்திலிருந்து வந்த ஒரு தேவதூதனாக இருப்பானோ” என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். (39)GCTam 70.3

    அநேக சமயங்களில் சத்தியத்தின் அந்தத்தூதன் பின்னர் காணப்படவேயில்லை. ஒருவேளை அவன் வேறொரு இடத்திற்குச் சென் றிருக்கலாம்; அல்லது அறியப்படாத நிலவறை எதிலாவது தனது உயிரை இழந்திருக்கலாம்; சத்தியத்திற்காகச் சாட்சிபகர்ந்த இடத்தில், அவனது எலும்புகள் உரிக்கப்பட்டிருந்திருக்கலாம்; ஆனால் அவன் விட்டுச் சென்ற வசனங்கள், அழிக்க இயலாதவையாக இருந்தன; அவை மனிதர்களின் இதயங்களில் கிரியைசெய்துகொண்டிருந்தன. நியாயத்தீர்ப்பின்போதுதான், ஆசீர்வாதமான அதன் பலன்கள் முழுவதுமாகத் தெரியும். (40)GCTam 70.4

    வால்டென்னிய தூதுவர்கள் சாத்தானுடைய ராஜ்ஜியங்களிலும், மிக ஜாக்கிரதையாக எழுப்பப்பட்ட அந்தகார வல்லமையின் எதிர்ப்புகளுக் குள்ளும் நுழைந்தனர். தீமையின் அதிபதியினால், சத்தியத்தின் முன்னேற்றத் திற்கான முயற்சிகள் ஒவ்வொன்றும் கண்காணிக்கப்பட்டது. அவனுடைய பிரதிநிதிகளைப்பற்றிய பயங்களை ஏவினான். அந்த தாழ்மையுள்ள- அலைந்துதிரிந்து ஊழியம்செய்யும் ஊழியர்களின்மூலம், தங்களுடைய குறிக்கோளுக்கு ஆபத்து ஏற்படுவதைப் போப்பதிகாரத் தலைவர்களால் பார்க்கமுடிந்தது. சத்திய ஒளி தடையின்றிப் பிரவேசிக்க அனுமதிக்கப் பட்டிருந்தால், மக்களைச் சூழ்ந்திருந்த தவறான போதனைகளாகிய, காரிருள் நீக்கப்பட்டிருக்கும்; அது மனிதர்களுடைய மனதை தேவனுக்கு நேராகமட்டும் திருப்பி, ரோமினுடைய அதிகாரத்தை முற்றிலுமாக அழித்துவிட்டிருக்கும்.(41)GCTam 71.1

    பண்டைய சபையின் விசுவாசத்தை உடையவர்களான இவர்கள் உயிருடனிருப்பது, ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தின் மருள விழுகைக்குத் தொடர்ச்சியான சாட்சியாயிருந்தது. ஆனால் அது மிகக் கசப்பான வெறுப்பையும் உபத்திரவத்தையும் எழுப்பிவிட்டது. வேதாகமங்களை ஒப்படைத்துவிட அவர்கள் தெரிவித்த மறுப்பு, கத்தோலிக்க சபையினால் சகித்துக்கொள்ளமுடியாத ஒரு குற்றமாக இருந்தது; எனவே, அந்த சபை அவர்களைப் பூமியிலிருந்து அழித்துவிடத் தீர்மானம்செய்தது. அப்பொழுது அவர்களிருந்த மலை வீடுகளில், அவர்களுக்கெதிரான சிலுவைப்போர் ஆரம்பமாயிற்று. மதவிரோதக் குற்ற விசாரணைக்காரர்கள் அவர்களது பாதையில் வந்ததால் குற்றமற்ற ஆபேலைக் கொலைபாதகனான காயீன் கொன்றதுபோன்ற நிகழ்ச்சிகள் அடிக்கடி திரும்பத்திரும்ப நிகழ்ந்தன. (42)GCTam 71.2

    மீண்டும் மீண்டும் அவர்களது செழிப்பான நிலங்களும் வீடுகளும் ஆலயங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. ஒருசமயம் செழுமையாயிருந்த வயல்களும், குற்றமற்றவர்களாலும் உற்சாகமானவர்களாலும் நிறைந்திருந்த வீடுகளும், பாழிடங்களாக்கப்பட்டன. கடித்துக் குதறும் மிருகம் இரத்தத்தின் ருசியினால் மேலும் வெறிகொள்ளுவதுபோல், போப்பு மார்க்கத்தாரின் ஆங்காரம், அவர்களால் துன்புறுத்தப்பட்டவர்களின் வேதனைகள் அதிகரித்தபோது, மேலும் அதிகரித்தது. மலைப் பள்ளத்தாக்குகளிலும் மலைச் சிகரங்களின் பாறைகளிலும் மறைந்திருந்த தூய்மையான விசுவாசத்தை உடையவர்களில் அநேகர் பின்தொடரப்பட்டு, வேட்டையாடப்பட்டனர். (43)GCTam 71.3

    தடைசெய்யப்பட்டிருந்த சமுதாயத்தினரின் பண்பைக்குறித்த எந்த விதமான குற்றச்சாட்டையும் கொண்டுவரமுடியவில்லை. அவர்கள் சமாதான மும் அமைதியும் பக்தியுமிக்க ஜனங்கள் என்று அவர்களது விரோதிகளுங் கூடக் கூறினார்கன். போப்புவின் மாறுபட்ட விருப்பத்தின்படி தேவனைத் தொழமாட்டோம் என்றதுதான் அவர்கள் செய்த பெரும் குற்றமாக இருந்தது. இந்தக் குற்றத்திற்காக, கொடிய மனிதர்களும் பேய்களும் கண்டுபிடித்த தாழ்த்தப்படுத்துதல், அவமானங்கள், சித்திரவதைகள் ஆகிய கொடுமைக ளெல்லாம் அவர்கள் மீது குவிக்கப்பட்டன. (44)GCTam 72.1

    ஒரு சமயம் இவர்களைப் பூமியிலிருந்தே அழித்துவிட ரோமன் கத்தோலிக்கச் சபை தீர்மானித்தபோது, அவர்களை மதவிரோதிகள் எனக் கண்டனம்செய்யும் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதன்படி அவர்கள் கொலைஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் சோம்பேறிகள் என்றோ, நாணயமில்லாதவர்களென்றோ, ஒழுக்கம் இல்லாதவர்கள் என்றோ, குற்றம் சாட்டப்படவில்லை; மாறாக மெய்யான தொழுவத்திலுள்ள ஆடுகளை ஈர்த்துக்கொள்ளும் பக்தியும் பரிசுத்தமுமான தோற்றம் கொண்டவர்களென்று அறிவிக்கப்பட்டனர். எனவே அருவருக்கத்தக்கவர்களும், தீமையை அதிகரிப்பவர்களுமாக இருந்த அந்த இனத்தினர் அவர்களது உரிமையை விட்டுவிடும் அறிக்கையைச் செய்ய மறுத்தால், நச்சுப் பாம்புகளைக் கொல்லுவதுபோல் அவர்கள் கொல்லப்படவேண்டும் என்ற கட்டளையை போப்பு பிறப்பித்தார்.- Wylie, b. 16, ch. 1. அதிகார இருமாப்புமிக்க அவர் அதே வார்த்தைகளை மறுபடி சந்திக்க எதிர்பார்த்திருக்கிறாரா? “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” (மத்தேயு 25:40) என்று சொல்லப்பட்டுள்ளதன்படி நியாயத்தீர்ப்பில் போப்புவிற்கு எதிராக நிற்கத்தக்கதாக, அவைகள் பரலோகப் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளன என்பதை அவர் அறிந்திருந்தாரா? (45)GCTam 72.2

    இந்த மதவிரோதிகளுக்கெதிரான சிலுவைப் போரில், சபை அங்கத்தினர்களனைவரும் கலந்துகொள்ளவேண்டுமென்று அந்த அறிக்கை அழைத்தது; இப்படிப்பட்ட கொடுமையான செயலில் ஈடுபடுவதற்கான ஊக்கப்பரிசும் அறிவிக்கப்பட்டது. அப்பரிசு-சபை அங்கத்தினர்கள் சபைக் கெதிராகச் செய்துள்ள செயல்களுக்காக (பொதுவாகவும் குறிப்பாகவும்) உண்டாகக்கூடிய வேதனைகளில் இருந்தும் தண்டனைகளில் இருந்தும் அனைவருக்கும் விடுதலை தரப்படும்; சிலுவைப்போரில் பங்குபெறும் அவர்கள் நிறைவேற்றாமல் விட்டுவிட்ட எல்லாவிதமான ஆணைகளில் இருந்தும் அவர்களுக்கு விடுதலை கொடுக்கப்படும்; அவர்கள் சட்டவிரோதமாகச் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் சட்டப்படியானவைகள் என்று அறிவிக்கப்படும்; ஏதாவது ஒரு மதவிரோதியைக் கொன்றால், அவர்களின் பாவம் அனைத்தும் மன்னிக்கப்படும்; வௌடாயிஸ் மக்களுடன் செய்யப்பட்டிருந்த எல்லா ஒப்பந்தங்களையும் அது நீக்கி, அவர்களுடைய வீட்டுப்பொருள்களை விட்டுவிட்டுச்செல்லவும் உத்தரவிட்டது. எந்தவிதமான உதவியும் அவர்களுக்கு ஒருவரும் செய்யக்கூடாது என்றுகூறி, சகலரும் அவர்களது சொத்துக்களைக் கைப்பற்றிக்கொள்ள அதிகாரம் கொடுத்தது.- Wylie, b. 16, ch. 1. இந்த அறிவிப்பு திரைமறைவிலிருந்து செயல்பட்ட சத்துருவின் ஆவியைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது; இது வலுசர்ப்பத்தின சீற்றமாகும்; அங்குள்ளதாகக் கூறப்படும் கிறிஸ்துவின் குரல் அல்ல! (46)GCTam 72.3

    தேவப்பிரமாணத்தின் மாபெரும் தரத்திற்கு இசைவாக, தங்களுடைய சுபாவத்தை மாற்றிக்கொள்ள போப்புமார்க்கத் தலைவர்கள் இணங்கமறுத்து, தங்களுக்குப் பொருந்தக்கூடிய ஒரு தரத்தை நிர்ணயம்செய்தனர். ரோமன் கத்தோலிக்கமார்க்கம் அதை விரும்பினபடியால், அனைவரும் அதற்கு இசையவேண்டும் என்று அது எல்லோரையும் வற்புறுத்தி, மிகப் பயங்கரமான-துயரம் தருகின்ற முடிவுகளைச் சட்டமாக்கிற்று. ஊழலும் தேவதூஷணமுமிக்க குருமார்களும் போப்புகளும் சாத்தான் அவர்களைச் செய்யும்படி ஏவின வேலையைச் செய்தனர். இரக்கம் அவர்களது இயல்பில் இல்லாததாகிவிட்டது. கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து, அப்போஸ்தலர்களைக் கொலைசெய்த அதே ஆவி, நீரோ மன்னனை இரத்த வெறியனாக்கிய அதே ஆவி, தேவனால் நேசிக்கப் பட்டிருந்தவர்களைப் பூமியிலிருந்து அழித்தொழிப்பதற்காக வேலைசெய்தது! (47)GCTam 73.1

    அநேக நூற்றாண்டுகளாக தேவனுக்குப் பயந்த அந்த ஜனங் களுக்கு நேரிட்ட உபத்திரவங்கள், தங்கள் மீட்பரை கனப்படுத்தும் பொறுமையுடன் சகிக்கப்பட்டன. அவர்களுக்கு எதிராக சிலுவைப்போர்கள் நடந்தபோதும், மனிதத்தன்மை சற்றுமில்லாத கொலைபாதகங்களுக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டபோதும், தங்களுடைய மிஷனரிமார்களை- விலைமதிப்புமிக்க சத்தியங்களை எங்கும் பரப்பும்படியாக அவர்கள் அனுப்பி வைத்திருந்தனர். சாகும்படி வேட்டையாடப்பட்டனர்; அப்படியிருந்தும் அவர்களுடைய இரத்தம் விதைக்கப்பட்ட விதைகளுக்குத் தண்ணீராக அமைந்தது; அது கனிகொடுக்கத் தவறவில்லை.(48)GCTam 73.2

    இவ்வாறாக, லுத்தரின் பிறப்பிற்கு நூற்றாண்டுகளுக்குமுன், வால்டென்னியர்கள் தேவனுக்குச் சாட்சி பகர்ந்தனர். அநேக நாடுகளில் பரவி, விக்ளிஃபின் காலத்தில் ஆரம்பமான சீர்திருத்தத்தின் விதைகளை அவர்கள் விதைத்தனர். அந்த விதைகள் லுத்தர் காலத்தில் ஆழமாகவும் அகலமாகவும், பெரிதாகவும் வளர்ந்தது. “தேவ வசனத்தினிமித்தமும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியினிமித்தமும்” (வெளி. 1:9) பாடுகளைச் சகித்துக்கொள்ள முன்வருபவர்களால் அது இன்னமும், காலத்தின் முடிவுவரை, முன்னேறிச்செல்ல வேண்டியதிருக்கிறது.(49)GCTam 73.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents