Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள் - Contents
 • Results
 • Related
 • Featured
No results found for: "".
 • Weighted Relevancy
 • Content Sequence
 • Relevancy
 • Earliest First
 • Latest First

  20 - நஷ்டமாக இருக்கிற ஆதாயம்

  கிறிஸ்து போதித்துக் கொண்டிருந்தார், வழக்கம் போல அவருடைய சீடர்களும் மற்றவர்களும் அவரைச்சுற்றிலும் இருந்தார்கள். சீடர்களுடைய வாழ்க்கையில் சீக்கிரத்தில் நிகழவிருந்த சம்பவங்களை அவர்களிடம் பேசிவந்தார். அதாவது, தங்களிடம் ஒப்புவிக்கப்பட்ட சத்தியங்களை தூர இடங்களிலும் அவர்கள் அறிவிக்க வேண்டியிருந்தது. அப்போது இவ்வுலகத்தின் அதிகாரிகளோடு அவர்களுக்கு போராட்டம் ஏற்படவிருந்தது. அவருடைய நாமத்தின் நிமித்தமாக நீதிமன்றங்களுக்கும், ராஜாக்களுக்கும் நீதிபதிகளுக்கும் முன்பாக அழைக்கப்பட இருந்தார்கள். யாரும் எதிர்பேசமுடியாத ஞானத்தைத் தருவதாக அவர்களுக்கு உறுதியளித்தார். அவர் பேசின வார்த்தைகள் திரளான ஜனங் களின் இருதயங்களை அசைத்தன ; தந்திரமாக அவரை எதிர்த்து வந்தவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தின. உள்ளத்தில் ஆவியான வர்வாசஞ்செய்கிற வல்லமைக்கு அந்த வார்த்தைகள் அடையாள மாக இருந்தன; அதே ஆவியானவரை தம் சீடர்களுக்கும் தருவ தாக வாக்குரைத்திருந்தார்.COLTam 249.1

  ஆனால் அநேகர் தங்களுடைய சுயநல நோக்கங்களை நிறை வேற்றும்படி பரலோகத்தின் கிருபையைப் பெற விரும்பினார்கள். மகத்தான வல்லமையோடு சத்தியத்தை மிகத்தெளிவாக கிறிஸ்து எடுத்துச் சொன்னார். அதிகாரிகளுக்கும் நீதிபதிகளுக்கும்COLTam 249.2

  முன்பாகப் பேசுவதற்கான ஞானத்தை தம்முடைய பின்னடி யார்களுக்குக் கொடுப்பதாக அவர் வாக்குரைத்தார். அப்படியா னால் அவர்களுடைய உலக நலனுக்காகவும் தம் வல்லமையை அவர் அருளமாட்டாரா?COLTam 250

  “அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி : போதகரே, ஆஸ்தியைப் பாகம்பிரித்து என் வீதத்தை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும்” என்று கேட்டுக்கொண்டான். சொத்துக்களைப் பாகம்பிரிப்பது குறித்து மோசே மூலம் தேவன் விதிமுறைகளைக் கொடுத்திருந்தார். தகப்பனுடைய சொத்தில் மூத்தவனுக்கு இரண்டு பங்கு கொடுக்க வேண்டும். உபா 21:17. மீதமுள்ளதை மற்ற சகோதரர்கள் சரி சமமாகப் பங்கிடவேண்டும். ஆனால் தன்னுடைய சகோதரன் சொ த்து விஷயத்தில் தன்னை வஞ்சித்துவிட்டதாக இந்த மனிதன் நினைத்தான். தனக்குச் சேரவேண்டிய பங்கென அவன் நினைத்த பங்கு கிடைக்கவில்லை ; கிறிஸ்து தலையிட்டால் அது தனக்கு நிச்சயமாக்க்கிடைக்குமென நினைக்கிறான். மனதைத் தூண்டும்படி கிறிஸ்து வேண்டுகோள் வைப்பதையும், பரிசேயர்களையும் வேதபாரகர்களையும் பக்தி விநயத் தோடு அவர் கடிந்து கொண்ட தையும் கேட்டிருக்கிறான். அப்படிப்பட்ட அதிகாரத்தோடு அவர் தன் சகோதரனுக்குக் கட்டளையிட்டால் தன்னுடைய பங்கை தனக்குக் கொடுக்காதிருக்க அவன் துணியமாட்டானென்று எண்ணினான்.COLTam 250.1

  பக்திக்கேதுவான அறிவுரைகளை கிறிஸ்து வழங்கிவந்தார்; ஆனால் இந்த மனிதன் தன்னுடைய சுயநல சுபாவத்தை வெளிப்படுத்தினான். இவ்வுலகப்பிரகாரமான முன்னேற்றத்திற்காக செயல்படக்கூடிய திறன் கிறிஸ்துவிடம் இருப்பதை உணர்ந்தாரன்; ஆனால் அவர் கூறிய ஆவிக்குரிய சாத்தியங்கள் அவனுடைய மனதிலும் இதயத்திலும் பதிந்திருக்கவில்லை . தன்னுடைய சொத்தைப் பெற்றுவிடவேண்டும் என்பதில் குறியாக இருந்தான். தாம் ஐசுவரியவானாக இருந்தும் நமக்காக மகிமையின் ராஜாவான இயேசு, தேவ அன்பின் பொக்கிஷங்களை அவனுக்கு விளக்கிக்கொண்டிருந்தார். பரிசுத்த ஆவியானவர் அவனிடம், ‘அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய’ சுதந்தரத்தைப் பெறும் படியாக மன்றாடிக் கொண்டிருந்தார். கிறிஸ்துவின் வல்லமையைக் கண்ணாரக் கண்டிருந்தான். அந்த மகாபோதிகரிடம்COLTam 250.2

  பேசி, தன் இருதயத்தின் மேலான வாஞ்சையை அவரிடம் தெரிவிக்கிற வாய்ப்பு இப்போது கிடைத் திருந்தது. ஆனால் பன்யனின் உருவகக் கதையில் வரும் கோல் சொல்லி போல, இவ்வுலகக்காரியங்களிலேயே அவனுடைய கண்நிலைத்திருந்தது. தன் தலைக்கு மேலிருந்த கிரீடத்தை அவன் பார்க்கவில்லை. மாயவித்தைக்காரனாகிய சீமோனைப் போல உலக ஆதாயத்திற்கு உதவுகிற ஒரு கருவியாக தேவ ஈவை எண்ணினான்.COLTam 251.1

  இவ்வுலகத்தில் இரட்சகரின் ஊழியப்பணி முடிகிற தருணம் நெருங்கிக்கொண்டிருந்தது. அவர் தமது கிருபையின் இராஜ்யத்தை ஸ்தாபிக்கவே இங்கு வந்தார்; அதை நிறைவற்று வதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியிருந்தன. மனிதப் பேராசையோ அவர் செய்ய வந்த பணியை விட்டுவிட்டு, ஒரு துண்டு நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அவரைத் தலையிட வைக்க முயன்றது. ஆனால் இயேசு தம்முடைய ஊழியப்பணியிலிருந்து திசைதிரும்புபவர் அல்ல. அவனைப் பார்த்து, “மனுஷனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிற வனாகவும் வைத்தவன் யார்? என்று கேட்டார்.COLTam 251.2

  எது நியாயம் என்று இயேசு அவனுக்குச் சொல்லியிருக்கக் கூடும். அந்த வழக்கில் யார் பக்கம் நியாயம் உண்டென்பதும் தெரியும். ஆனால் சகோதர்ர்கள் இருவருமே பேராசையால், சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். இதுபோன சர்ச்சைகளைத் தீர்ப்பது என்னுடைய வேலை அல்ல என்று மறைமுகமாக கிறிஸ்து சுட்டிக்காட்டினார். அவர் வந்த நோக்கம் வேறு ; சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, நித்திய நிஜங்கள் குறித்த உணர்வை மனிதர்களில் உருவாக்கவே வந்தார்.COLTam 251.3

  இந்தச் சம்பவத்தில் கிறிஸ்து நடந்து கொண்ட விதமானது, அவருடைய நாமத்தைச் சொல்லி ஊழியம் செய்கிற அனைவருக் கும் ஒரு பாடமாக இருக்கிறது. பன்னிருவரை தாம் அனுப்பைவத்த போது, “போகையில், பரலோகராஜ்யம் சமீபமாயிருக்கிறது என்று பிரசங்கியுங்கள். வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம் பண்ணுங்கள், மரித்தோரை எழுப் புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள், இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்” என்று சொன்னார். மத் 10:7, 8. மக்களின் உலகப்பிரகாரமான பிரச்சனைகளைத் தீர்க்க அவர்களை அனுப்பவில்லை. தேவனோடு ஒப்புரவாகும் படி மக்களை COLTam 251.4

  வலியுறுத்துவதே அவர்களுடைய வேலை. மனுகுலத்திற்கு ஆசீர்வா தங்களை அருளும் வல்லமை அந்தப் பணியில் தான் இருந்தது. மனிதர்களுடைய பாவங்களுக்கும் துன்பங்களுக்கும் கிறிஸ்து மட்டுமே தீர்வு. சமுதாயத்தின் சாபங்களான தீமைகளை அவருடைய கிருபையின் சுவிசேஷம் மட்டுமே போக்க முடியும். ஐசுவரியவான்கள் ஏழைகளை அநியாயமாக நடத்துவதற்கும், ஏழைகள் ஐசுவரியவான்களை வெறுப்பதற்கும் மூலகாரணம் அவர்களது சுயநலமே. கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிந்தால் மட்டுமே இதை ஒழிக்கமுடியும். அவர் மட்டுமே சுயநலமுள்ள பாவ இருத யத்தை மாற்றி, அன்பு நிறைந்த புதிய இருதயத்தைத் தரமுடியும். கிறிஸ்துவின் ஊழியர்கள் பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட ஆவியோடு சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, மனுகுலத்தின் நன்மைக் காக அவர் பாடுபட்டது போல பாடுபடவேண்டும். மனிதவல்லமை யால் சாதிக்கவே முடியாத அளவுக்கு மனிதர்கள் ஆசீர்வதிக்கப்படு வதையும், உயர்த்தப்படுவதையும் அப்போது காணலாம்.COLTam 252.1

  தம்மிடம் வந்த அந்த மனிதனுடைய பிரச்சனைக்கான அடிப்படை காரணத்தை நம் தேவன் சரியாக வெளிப்படுத்திக் காட்டினார்; எனவே இதுபோன்ற பிரச்சனைகளில் உள்ளோரிடம் அவர் சொல்வது போலவே, “பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல ” என்று சொன்னார்.COLTam 252.2

  அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அப்பொழுது அவன் நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிற தற்கு இடமில்லையே; நான் ஒன்று செய்வேன், என்களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசி த்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி : மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்” என்றார்.COLTam 252.3

  தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கி ஷங்களைச் சேர்த்து வைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.COLTam 253.1

  இந்த உலகம்தான் தங்களுக்கு எல்லாமே என்று இருப்பவர்கள் மூடர்கள் என்பதைத்தான் மதிகெட்ட அந்த ஐசுவரியவான் பற்றிய உவமையின் மூலமாக கிறிஸ்து வெளிப்படுத்தினார். தேவன் அவனுக்கு அனைத்து ஆசீர்வாதங்களையும் கொடுத் திருந்தார். நல்லோர் மேலும் பொல்லார் மேலும் சூரியன் தன் வெளிச்சத்தை வீசுகிறபடியே அவனுடைய நிலத்திலும் சூரிய வெளிச்சம் கிடைத்தது. கர்த்தர் நல்லோர் மேலும் பொல்லார் மேலும் வானத்திலிருந்து கர்த்தர் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். தாவர வகைகைள் செழித்து வளரச் செய்கிறார், வயல்கள் பூரணமான விளைச்சல்களைத் தருகின்றன. மிகுதியான விளைச்சலை வைத்து என்ன செய்வதென்று அந்த ஐசவரியவான் குழம் பினான். இடமில்லாமல் போகுமட்டும் களஞ்சியங்களில் சேர்த் தாயிற்று; விளைச்சல் மிகுதி என்பதால் அதற்குமேல் களஞ்சியத்தில் வைப்பதற்கு இடமில்லை. தன்மேல் இத்துணை இரக்கங்கள் காட்டிய தேவனை அவன் நினைக்கவில்லை. ஏழைகளுக்கு உதவும்படி கர்த்தர் தன்னை தமது பொருட்களுக்கு உக்கிராணக் காரனாக வைத்திருக்கிறாரென்பதை அவன் உணரவில்லை. தேவன் நியமித்த தயாள பிரபு என்கிற அருமையான வாய்ப்பு அவனுக்குக் கிடைத்திருந்தது; ஆனால் தான் வசதியான வாழ் வதற்கு தேவையானவற்றைச் செய்வதிலேயே இருந்தான்.COLTam 253.2

  மோசமான நிலையில் இருந்த ஏழைகள், அநாதைகள், விதவைகள் பற்றியும், இடுக்கணிலும் வேதனையிலும் இருக்கி றவர்கள் பற்றியும் அவனிடம் சொன்னார்கள்; அவன் தன்னுடைய விளைச்சல்களால் ஏராளமான இடங்களில் நன்மை செய்திருக்க முடியும். மிகுதியான விளைச்சலிலிருந்து ஒரு பகுதியைக் கொடுப் பது அவனுக்கு கடினமே இல்லை. அதனால், அநேக்குடும்பங்களில் காணப்பட்ட பற்றாக்குறை நீங்கியிருக் கும், பசியோடிருந்த அநேகர் போஷிக்கப்பட்டிருப்பார்கள்; நிர்வாணிகள் அநேகர் ஆடைகளைப் பெற்றிருப்பார்கள், பலருடைய இருதயங்களில் அது சந்தோஷத்தை உண்டாக்கியிருக்கும், உணவுக்காகவும், உடைக்காகவும் ஜெபித்த அநேகருடைய ஜெபங்கள் பதிலளிக் கப்பட்டிருக்கும். துதியின் பாடில் மெல்லிசையாக எழும்பி பரலோகத்தைச் சென்றடைந்திருக்கும். ஏழைகளின் விண்ணப்பங்களை தேவன் கேட்டார்ர். தம்முடைய தயையால் ஏழைகளைப் பராமரித்தார். சங் 68:10. அநேகருடைய தேவைகளைச் சந்திப் பதற்கான ஏராளமான வசதி வாய்ப்புகளை அந்த ஐசுவரியவா னுக்குக் கொடுத்து தேவன் ஆசீர்வதித்திருந்தார். ஆனால் ஏழை களின் கூக்குரலுக்கு அவன் தன் இருதயத்தை செவியை அடைத்து, தன்ஊழியர்களிடம் : நான் ஒன்று செய்வேன், என்களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட் டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன்” என்றான்.COLTam 253.3

  அழிந்துபோக்க்கூடிய மிருகங்களின் உள்ளுணர்வு எப்படி யிருக்குமோ, அப்படித்தான் இவனுடைய எண்ணமும் இருந்தது. தேவனோ, பரலோகமோ, எதிர்கால வாழ்வோ இல்லாதது போல வும், தான் பெற்றிருந்த அனைத்துமே தனக்கே சொந்தமானைவ போலவும், தேவனுக்கும் அல்லது மனிதனுக்கும் தான் எவ்விதத் திலும் கடமைப்பட்டவன் அல்ல என்பது போலவும் வாழ்ந்தான். இந்த ஐசுவரியவானைப் பற்றி சங்கீதக்காரன் பின்வருமாறு எழுதுகிறார்: “தேவன் இல்லை என்று மதி கெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான். சங்கீதம் 14:1.COLTam 254.1

  இவன் தனக்காகவே வாழ்ந்தான்; தனக்காகவே திட்டமிட் டான். எதிர்காலத்திற்காக ஏராளம் சேர்த்துவிட்டதாகக் கருதினான். தன் உழைப்பின் பலன்களின் மேல் மகிழ்ந்து, அனுபவித்தால் போது மெனக் கருதினான். மற்றவர்களைக் காட்டிலும் தன்னை பாக்கியவானென்று நினைத்து, தான் ஞானமாக நிர்வகித்துவிட்டதாக தன்னைத்தானே மெச்சிக்கொண்டான். அவனுக்கு நல்ல பகுத் திறவு திறன் இருப்பதாகவும், செல்வமிக்க பிரஜை என்றும் பட்டணத்தார் அவனைக் கனப்படுத்தினார்கள். ‘நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுஷர் அவனைப் புகழ்ந்(தார்கள்.” சங் 49:18.COLTam 254.2

  ஆனால் இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தி யமாயிருக்கிறது” 1கொரி 3:19. பல வருடங்கள் தான் சந்தோஷமாக வாழலாமென அந்த ஐசுவரியவான் எண்ணிக்கொண்டிருந்தபோது, தேவனோ முற்றிலும் வித்தியாசமான திட்டத்தை வைத் திருந்தார். உண்மையற்ற அந்த உக்கிராணக்காரனுக்குச் சொல்லப்பட்ட செய்தி இதுதான் : “மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப் படும்.” பணத்தால் பதில் சொல்லமுடியாத கேள்வி இது. அவன் பெரிதாக மதித்த செல்வங்கள், அந்தத் தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்ற முடியாது. தன் வாழ்நாள் முழுவதும் கஷ் டப்பட்டு அவன் சம்பாதித்திருந்தவை ஒரு கனப்பொழுதில் பயனற்றுப்போகும். “நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்?” பரந்துவிரிந்து கிடந்த அவனுடைய வயல்களும், நிரம்பியிருந்த களஞ்சியங்களும் அவனுடைய கையை விட்டுப்போகும். “ஆஸ்தியைச் சேர்க்கிறான், யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்.”சங் 39:6.COLTam 254.3

  இப்படிப்பட்ட சமயத்தில் அவனுக்குப் பயன் தந்திருக்கக் கூடியதை அவன் சம்பாதிக்கவில்லை. தனக்காகவே அவன் வாழ்ந்ததால், தன் சகமனிதர்களுக்கும் பாய்ந்து சென்றிருக்கக் கூடிய தேவ அன்பை அவன் புறக்கணித்துவிட்டான். இவ்வாறு ஜீவனையே புறக்கணித்தான். தேவன் அன்பாக இருக்கிறார். அன்பே வாழ்க்கையாக இருக்கவேண்டும். ஆவிக்குரிய விஷயங்களைவிட உலகத்திற்குரிய விஷயங்களைத் தேர்ந்தெடுத்திருந்தான்; உலகத் தோடு கூட அவனும் கடந்து போகவேண்டிய தாயிற்று. ‘கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.” சங்கீ தம் 49:20.COLTam 255.1

  “தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக் கிறான்.” இந்த உண்மை எல்லாக் காலங்களுக்கும் பொருந்தும். வெறுமனே சுயநலனை மனதில் வைத்து நீங்கள் திட்டமடலாம், சொத்துக்களைக் குவிக்கலாம், பண்டைய பாபிலோனியர்களைப் போல் பெரிதும் உயரமுமான மாளிகைகளைக் கட்டலாம். ஆனால் அழிவின் தூதுவர்களை நெருங்கவிடாத அளவுக்கு உயரமான மதிலையோ, பெலம் வாய்ந்த கதவுகளையோ உருவாக்கமுடாயது. ராஜாவாகிய பெல்ஷாத்சார் தன் அரண்மனையில் விருந்து பண்ணி, “பொன்னும் வெள்ளியும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தான்.” ஆனால் கண்ணுக்குப் புலப்படாதகையுறுப்பு ஒன்று தோன்றி, அவன் அழிக்கப்படுவானெ மதில்களின் மேல் எழுதிற்று ; எதிரி படையினர் வருகிற காலடி சத்தம் அரண்மனை வாசல்களிலே கேட்டது. அன்று இராத்திரியிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலை செய்யப்பட்டான். ‘‘ தானி. 5:30. வேறொரு அரசன் அவனுடைய சிங்காசனத்தில் அமர்ந்தான்.COLTam 255.2

  சுயநலமான வாழ்க்கை அழிவில் முடியும். சுயநல ஆசைக்கு இடமளித்து, இச்சையோடு வாழ்வது, ஜீவனிடமிருந்து ஆத்துமாவைத் துண்டித்துவிடும். சுயத்திற்காகப் பெறுவதும், சேர்ப்பதும் சாத்தானின் ஆவியாகும். பிறர் நலனுக்காகக் கொடுப் பதும் சுயத்தைத் தியாகம் செய்வதும் கிறிஸ்துவின் ஆவியாகும். “தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.’‘1 யோவான் 5:11,12.COLTam 256.1

  ஆகவே இயேசு கூறுகிறார்: “பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல.”COLTam 256.2