Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள் - Contents
 • Results
 • Related
 • Featured
No results found for: "".
 • Weighted Relevancy
 • Content Sequence
 • Relevancy
 • Earliest First
 • Latest First

  15 - “இவர் பாவிகளை ஏற்றுக்கொள்கிறார்”

  இயேசுவைச் சுற்றிலும் ஆயக்காரரும் பாவிகளும்” இருந்த தைக் கண்ட ரபிமார்கள் முறுமுறுத்தார்கள். “இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் ” என்றார்கள்.COLTam 183.1

  இவ்வாறு குற்றஞ்சாட்டி, பாவிகளோடும் தீயவர்களோடும் பழகு வது கிறிஸ்துவுக்குப் பிடிக்கிறதென்றும், அவர்களுடைய துன்மார்க்கத்தை அவர் கண்டுகொள்வதில்லை என்றும் மறைமுக மாகச் சுட்டிக்காட்டினார்கள். ரபிமார்கள் எதிர்பார்த்தபடி இயேசு நடந்துகொள்ளவில்லை. உயர்ந்த குணம் படைத்தவரெனச் சொல்லிக்கொள்பவர் தங்களோடு சேர்ந்து கொண்டு, தங்களைப் போல் போதிக்காமல் இருப்பது ஏன்? எந்தப் பாசாங்கும் இல்லா மல், எல்லா வகுப்பினருக்கும் ஊழியம் செய்வது ஏன்? அவர் மெய்யான தீர்க்கதரிசியாயிருந்தால், தங்களோடு ஒத்துப்போய், ஆயக்காரர்களையும் பாவிகளையும் அவர்களுடைய தகுதிக்கேற்ப மதிப்பின்றி நடத்தவேண்டயதுதானே என்று கூறினார்கள். இத னால் சமுதாயத்தின் பாதுகாவலர்களாக தங்களை நினைத்துக் கொண்ட அவர்கள், சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களை வெளிப்படையாகவே பரிவுடன் நடத்துகிறாரே என்று கோபமடைந்தார்கள். அவரோடு எப்போதும் சர்ச்சை செய்தார்க; ஆனால் அவருடைய . பரிசுத்தமான வாழ்க்கை அவர்களுக்கு ஆச் சரியமாகவும், அவர்களைக் கண்டிப்பதாகவும் இருந்தது. அவருடைய செயல்முறைகளை அவர்கள் அங்கீகரிக்கவில்லை. அவர்கள் தங்களை படித்தவர்களாக, சுத்தமானவர்களாக, மிகுந்த பக்கிமிக்கவர்களாகக் கருதினார்கள்; கிறிஸ்துவின் முன்மாதிரி யான வாழ்க்கை அவர்களுடைய சுயநலத்தைத் தோலுரித்துக் காண்பித்தது.COLTam 183.2

  ரபிமார்கள் மேல் அதிருப்திகொண்டு, தேவாலயங்களுக்குச் செல்லாதவர்கள் எல்லாம் இயேசுவுக்கு பின்னால் பெருந்திரளாகச் சென்றதையும், அவருடைய வார்த்தைகளைக் கூர்ந்து கேட்டதையும் கண்டபோதும் கோபமடைந்தார்கள். அவருடைய ஆக்கினை உணர்வே அடைந்தார்கள்; அப்படியானால் ஆயக்காரர்களும் பாவிகளும் எவ்வாறு இயேசுவண்டை ஈர்க்கப்பட்டார்கள்?COLTam 184.1

  “இவர் பாவிகளை ஏற்றுக்கொள்ளுகிறார் ” என்று ஏளனமாக அவர்கள் தொடுத்த குற்றச்சாட்டில் தானே இந்தக் பதில் இருந்ததை அவர்கள் அறியவில்லை . இயேசுவிடம் வந்த ஆத்துமாக்கள், தாங்களும் கூட பாவக்குழியிலிருந்து தப்புவதற்கு வழியிருக்கிறதென உணர்ந்தார்கள். ஆனால் பரிசேயர்களோ அவர்களைப் பரிகசித்து, குற்றவாளிகளெனத் தீர்த்தார்கள்; ஆனால் கிறிஸ்துவோ, அவர்கள் தேவனுடைய குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றிருந்தாலும், பிதா அவர்களை மறக்க வில்லையெனச் சொல்லி அவர்களை தேவனுடைய பிள்ளைகளென வரவேற்றார். அவர்ளுடைய இக்கட்டான நிலையும் பாவமும்தானே அவர்கள் மேல் அவர் அதிகமாக மனதுருகுவதற்கு காரணமாக இருந்தன. எவ்வளவு தூரம் அவரைவிட்டு வழிவிலகிச் சென்றார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் மேல் வாஞ்சை வைத்து, அவர்களின் விடுதலைக்காக அதிகமாகத் தியாகம் செய்தார்.COLTam 184.2

  காவலாளிகளாகவும், வியாக்கியானர்களாகவும் இருப்பது தங்களுக்கு கிடைத்த சிலாக்கியம் என்பதை இஸ்ரவேலின் போதகர்கள் அனைவரும் பரிசுத்த வேதவாக்கியங்களிலிருந்து அறிந்திருக்கவேண்டும். கொடிய பாவத்தில் விழுந்த தாவீது, பின்வருமாறு எழுதியிருக்கவில்லையா? : “காணாமற் போன ஆட்டைப்போல வழிதப்பினேன்; உமது அடியேனைத் தேடுவீராக. ‘‘ சங் 119:176. பாவி மேல் தேவன் காட்டுகிற அன்பை மீகா இவ் வாறு சொல்லுகிறார். தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால், அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.” மீகா 7:18.COLTam 184.3