Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    பணம்

    வசதிவாய்ப்புகளையும் மனிதர்களுக்கு தேவன் கொடுக் கிறார். ஐசுவரியத்தைச் சம்பாதிப்பதற்கான ஆற்றலைக் கொடுக் கிறார். மலர்ச்சி தரும் மழையாலும், பரலோகத்தின் பனியாலும் பூமிக்கு நீர்ப்பாய்ச்சுகிறார். பூமிக்கு உஷ்ணம் கொடுத்து, இயற்கையை உயிர்க்கச்செய்து, செழித்து, கனிகொடுக்கச் செய்கின்ற சூரிய ஒளியை அவர் கொடுக்கிறார். பிறகு, தமக்குச் சொந்தமானவற்றில் அவர் பிரதிபலனை எதிர்பார்க்கிறார்.....COLTam 354.1

    நம்மை நாமே புகழவும், கனப்படுத்தவும் பணம் நமக்குக் கொடுக்கப்படவில்லை. உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாக அதை நாம் தேவனுடைய மகிமைக்காக, கனத்திற்காகப் பயன்படுத்த வேண்டும். தங்களுடைய வசதி வாய்ப்புகளில் ஒரு பகுதிதான் தேவனுக்கு சொந்தமானவை என்று சிலர் நினைக்கிறார்கள். ஊழியத்திற்கும் தர்ம காரியங்களுக்கும் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து விட்டு, மீதமுள்ளதை தங்கள் விருப்பப்படி பயன்படுத்த லாமென நினைக்கிறார்கள். இந்த எண்ணம் தவறானது. நாம் பெற்றிருக்கிற அனைத்துமே தேவனுக்கு சொந்தமானவை; அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிற மோமென தேவனுக்கு நாம் கணக்கு சொல்லவேண்டும். ஒவ்வொரு பைசாவை நாம் செல விடும் போதும், தேவனை நாம் அதிகமாக நேசிக்கிறோமா, நம்மைப்போல பிறரையும் நேசிக்கிறோமா என்பது தெரியும்.COLTam 354.2

    பணம் முக்கியமானதுதான்; ஏனெனில் பணத்தால் ஏராளமான நன்மைகளைச் செய்யமுடியும். தேவபிள்ளைகளின் கரங்களில் அது இருந்தால், பசியுள்ளோரைப் போஷிக்கவும், தாகமுள்ளோ ரின் தாகங்தணிக்கவும், வஸ்திரமில்லாதோரை உத்துவிக்கவும் பயன்படும். ஒடுக்கப்படுவோருக்கு அது ஒரு பாதுகாப்பு. நோயுற்றோருக்கு உதவுவதற்கான ஒரு வழி. ஆனால் வாழ்வின் தேவைகளைச் சந்திக்கவும், மற்றவர்களுக்கு உதவி செய்யவும், கிறிஸ்துவின் நோக்கத்தை முன்னெடுக்கவும் பயன்பட்டாலொழிய பணம் வெறும் மணலுக்குத்தான் சமம்.COLTam 355.1

    ஐசுவரியத்தைக் குவிப்பது பயனற்றது மட்டுமல்ல, அது ஒரு சாபமும் கூட. இவ்வுலகில் அது ஆத்துமாவுக்கு ஒரு கண்ணியாக இருந்து, பரலோக பொக்கிஷத்தில் நமக்கு பற்று ஏற்படாமல் செய்கிறது. பயன்படுத்தப்படாததாலந்துகள், புறக்கணிக்கப்பட்ட வாய்ப்புகள் குறித்து, தேவனுடைய மகாநாளில் அது சாட்சியிட்டு, ஐசுவரியமுடையோரை அது குற்றவாளிகளாகத் தீர்க்கும். “ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள் மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள். உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின . உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்து, அக்கினியைப் போல உங்கள் மாம்சத்தைத்தின்னும். கடைசி நாட்களிலே பொக்கிஷத் தைச் சேர்த்தீர்கள். இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக் காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக் குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது” என்று வேதாகமம் சொல்கிறது. யாக்கோபு 5:1-4.COLTam 355.2

    ஆனால் நம் வசதி வாய்ப்புகளை நாம் ஊதாரித்தனமாக அல்லது கவனக்குறைவாகச் செலவழிக்க கிறிஸ்து அனுமதிக்க வில்லை. ‘ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக் கைகளைச் சேர்த்துவையுங்கள்” என்கிற கட்டளை அவரைப் பின் பற்றுகிற அனைவருக்குமுரியது . யோவான் 6:12. பணமானது தேவன் தனக்கு தந்துள்ள ஒரு தாலந்து என்று உணர்கிறவன், அதை சிக்கனமாகச் செலவிடுவான்; மற்றவர்களுக்குக் கொடுக்கும்படி அதைச் சேமிப்பது தன்னுடைய கடமையென அறிவான்.COLTam 355.3

    நம் வசதி வாய்ப்புகளை எவ்வளவு அதிகமாக ஆடம்பரத்திற் கும், சிற்றின்பத்திற்கும் செலவிடுகிறோமோ, அவ்வளவு குறை வாக பசியுள்ளவனைப் போஷிக்கவும், உடையற்றவனை உடுத்து விக்கவும் செலவிடுவோம். தேவையின்றி செலவழிக்கப்படும் ஒவ்வொரு, நன்மை செய்வதற்கான ஒரு மகத்தான வாய்ப்பைப் பறித்துவிடுகிறது. அவர் அருளிய தாலந்துகளை மேம்படுத்து வதன் மூலம், அவருக்கு திரும்பச் செலுத்தவேண்டிய கனத்தையும் மகிமையையும் தேவனுக்குக் கொடுக்கவிடாமல் செய்கிறது.COLTam 356.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents