Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள் - Contents
 • Results
 • Related
 • Featured
No results found for: "".
 • Weighted Relevancy
 • Content Sequence
 • Relevancy
 • Earliest First
 • Latest First

  27 - “எனக்குப் பிறன் யார்?”

  “எனக்குப் பிறன் யார்?” என்ற கேள்வி யூதர்கள் மத்தியில் தொடர் தர்க்கமாகியிருந்தது. சமாரியர்களும் அஞ்ஞானிகளும் யாரென அறிந்திருந்தார்கள். அவர்களை அந்நியர்களாக, எதிரி களாகக் கருதினார்கள். ஆனால் தங்களுடைய தேசத்தாருக்குள், தங்களுடைய வெவ்வேறு சமுதாயப் பிரிவினருக்கள் யாரை பிறனாகப் பார்க்வேண்டுமெனத் தெரியவில்லை. ஆசாரியனும், போதகனும், மூப்பனும் யாரை பிறனாகக் கருத முடியும்? தங்களைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ள சடங்காச்சாரங்கள் எனும் வட்டத்திற்குள் வாழ்ந்து வந்தார்கள். அறிவில்லாத, அக்கறையில்லாத மக்களோடு தொடர்பு கொள்வதும் தீட்டுப் படுத்துமென்றும், பயங்கரமாகப் பிரயாசப்பட்டுத்தான் அதை நீ க்க முடியுமென்றும் போதித்தார்கள். “தீட்டுள்ளவர்களை ” தங்களுக்கு பிறனாக அவர்கள் கருதவேண்டுமா?COLTam 383.1

  நல்ல சமாரியன் பற்றிய உவமையில் இந்தக் கேள்விகக்கு ஆண்டவர் பதிலளித்தார். நமக்குப் பிறன் என்றால், அவர் நம் ச பையில் ஓர் அங்கத்தினராகவோ, நம் விசுவைசத்தைச் சேர்ந்த ஒருவராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை என்றார். குறிப்பிட்ட இனத்தினரை, நிறத்தினரை அல்லது பிரிவினரை அது குறிக்கவில்லை. நம் உதவி தேவைப்படுகிற ஒவ்வொருவரும் நமக்குப் பிறன்தான். சத்துருவால் புண்பட்டுள்ள, காயப் பட்டுள்ள ஒவ்வோர் ஆத்துமாவும் நமக்குப் பிறன்தான். தேவனுடைய சொ த்தான ஒவ்வொருவனும் நமக்குப் பிறன்தான்.COLTam 383.2

  நியாயசாஸ்திரி ஒருவன் கிறிஸ்துவிடம் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலாகத்தான் நல்ல சமாரியன் பற்றிய உவமையைச் சொன்னார். இரட்சகர் போதித்துக்கொண்டிருக்கும்போது, நியாயச் ாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும் படி : போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும் படிக்கு நான் என்ன செய்யவேண்டும்” என்று கேட்டான். கிறிஸ்துவை அவருடைய வார்த்தைகளால் சிக்கவைக்கிற நோக்கத்துடன் பரிசேயர்கள்தாம் அந்த நியாயசாஸ்திரியிடம் அந்தக் கேள்வியைக் கேட்கத் தூண்டியிருந்தார்கள்; அவர் என்ன பதில் சொல்கிறாரென உன்னிப்பாகக் கவனித்தார்கள். ஆனால் இரட் சகர் எந்தச் ச ர்ச்சையிலும் இறங்கவில்லை. கேள்வி கேட்டவனே அதற்கான பதிலைச் சொல்ல விரும்பினார். ‘நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன?’ என்று கேட்டார். சீனாயில் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்திற்கு கிறிஸ்து போதிய முக்கித்துவம் அளிக்கவில்லையென யூதர்கள் அப்போதும் குற்றஞ்சாட்டி வந்தார்கள். எனவே, இரட்சிப்பு பற்றி அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, பிரமாணங்களைக் கைக்கொள்ளுவது குறித்துக் கேட்கிறார்.COLTam 384.1

  நியாயசாஸ்திரி அவரிடம்,” உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச் சிந்தையோடும் அன்பு கூர்ந்து, உன்னிடத்தில் அன்பு கூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக என்று எழுதியிருக்கிறது” என்றான். உடனே கிறிஸ்து, “நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய்” என்றார்.COLTam 384.2

  பரிசேயர்களின் நிலைபாடும் கிரியைகளும் அந்த நியாயச ாஸ் திரிக்கு திருப்திகரமாக இல்லை. வேதவாக்கியங்களின் மெய்யான பொருளை அறியும் படி அவற்றை ஆராய்ந்து வந்திருந்தான். அதை அறிந்துகொள்ளும் மிகுந்த ஆர்வத்தால், மெய்விருப்பத்தோடு ‘நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். அனைத்து சடங்காச்சார முறைமைகளையும் ஆச்சாரக் கட்டளைகளையும் அவன் சரிவரி செய்து வந்தான் என்பது பிரமாணத்தின் கோரிக்கைகள் பற்றி அவன் பதிலளித்ததில் தெரிகிறது. அவற்றை அவன் பெரிதாக மதிக்கவில்லை ; மாறாக, சகல பிரமாணங்களையும் தீர்க்கதரிசனங்களையும் உள்ளடக்கிய இருபெரும் நியதிகளைக் கூறுகிறான். அவனுடைய பதிலை இரட்ச கரே பாராட்டியதால், ரபிமார்களைவிட சரியான புரிதலுடன் அவன் இருந்தது தெரிகிறது. நியாயாசாஸ்திரி ஒருவனே சொன்ன ஒன்றை ஆமோதித்ததற்காக இரட்சகரை அவர்களால் குற்றஞ்சாட்டமுடியவில்லை .COLTam 384.3

  “அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய்” என்று கிறிஸ்து கூறினார். தேவனுடன் ஒன்றிணைந்த்து பிரமாணமானம் என்று எப்போதும் போதித்து வந்தார்; ஒரே நியதியே பிரமாணம் முழுவதும் பரவியிருப்பதால் ஒன்றை மீறி, இன்னொன்றைக் கைக் கொள்ள சாத்தியமில்லை என்று காட்டினார். பிரமாணம் முழுவ திற்கும் கீழ்ப்படிவதை பொறுத்துதான் ஒருவனுடைய இறுதி முடிவு தீர்மானிக்கப்படும்.COLTam 385.1

  ஒருவனும் தன் சுயபெலத்தால் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிய முடியாதென கிறிஸ்து அறிந்திருந்தார். அந்த நியாயச ாஸ்திரி சத்தியத்தை அறியும்படி தெளிவாகவும், திறமையாகவும் ஆராய வழிநடத்தினார். கிறிஸ்துவின் நல்லொழுக்கத்தையும் கிருபையையும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே நியாயப்பிர மாணத்தை நாம் கைக்கொள்ள முடியும். பாவத்திற்கான பரிகாரத்தை விசுவாசிப்பதே, தேவனை முழுமனத்தோடு நேசிக்கவும் தன்னைப்போல பிறரை நேசிக்கவும் விழுந்து போன மனிதனை ஊக்குவிக்கிறது.COLTam 385.2

  முதல் நான்கு கட்டளைகளையோ, அடுத்த ஆறு கட்டளைகளையோ தான் கைக்கொண்டதில்லை என்பதை அந்த நியாயச ாஸ்திரி அறிந்திருந்தான். உள்ளத்தை ஊடுருவும் கிறிஸ்துவின் வார்த்தைகளே அவன் குற்றத்தை உணர்த்தின. ஆனால் தனது பாவங்களை அறிக்கை செய்வதற்குப் பதிலாக சாக்குப்போக்குச் சொல்ல முயன்றான். சாத்தியத்தை ஏற்றுக் கொள்ளுவதற்குப் பதிலாக, கட்டளைகளின்படி நடப்பது எவ்வளவு கடினமெனக் காட்ட முயற்சித்தான். தான் உணர்த்தப் பட்டதை மறைத்து, தன்மேல் நியாயமிருப்பதாக மக்கள் நினைக்க வேண்டுமென இதன்மூலம் முயன்றான். அவன் கேட்ட கேள்விக்கு அவனே பதிலளித்ததால், அவன் கேட்ட கேள்வி அவசியமற்றதென இரட்ச கர் தெளிவுப்படுத்தினார். ஆனாலும், “எனக்குப் பிறன் யார்?” என்று மற்றொரு கேள்வியை எழுப்பு கிறான்.COLTam 385.3

  கிறிஸ்து மீண்டுமாக சர்ச்சைக்குள் சிக்காமல் நழுவினார். ஒரு சம்பவத்தைச் சொல்லி, அந்தக் கேள்விக்குப் பதிலளித்தார்; கேட் டுக்கொண்டிருந்தவர்களின் மனதில் ஆழமாகப் பதியும்படி அது இருந்தது. ‘ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில்கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்து கொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப்போனார்கள்.”COLTam 386.1

  எருசேலமிலிருந்து எரிகோவிற்குச் செல்லவேண்டுமானால், யூதேய வனாந்திரத்தின் ஒரு பகுதியைக் கடக்க வேண்டும். கரடு முரடான பாறைகளின் வழியே அந்தப் பாதை சென்றது. அங்கே ஏராளமான கொள்ளையர்கள் இருந்தார்கள்; அங்கே அடிக்கடி குற்றச்செயல்களும் நிகழ்ந்து வந்தன. அங்குதான் அந்தப் பயணி யைத் தாக்கி, அவனிடமிருந்ததை எல்லாம் உறிந்து கொண்டு, அவனை அரை குறை உயிருடன் வழியருகே விட்டுச்சென்றார்கள். அப்படிப்பட்ட நிலையில் அவன் கிடந்தபோது, அந்த வழியாக ஒரு ஆசாரியன் வந்தான்; படுகாயத்துடன் இரத்தத்தில் புரண்டு கொண்டிருந்தவனைக் கண்டான். ஆனாலும் எந்த உதவியும் செய்யாமல், அவனைக் கடந்து சென்றான். அதாவது, “பக்கமாய் விலகிப்போனான்.” பின்னர் லேவியன் ஒருவன் வந்தான்; நடந்ததை அறிய விரும்பினவனாக, நின்று, அடிபட்டுக்கிடந்தவனைப் பார்த்தான். அந்தச் சமயத்தில் என்ன செய்ய வேண்டு மென்று உணர்த்தப்பட்டான்; ஆனால் அது அவனுக்குப் பிடித்த பணியல்ல. தான் அந்த வழியே வந்திருக்காவிட்டால், காயப்பட்ட வனைப் பார்த்திருக்கவேண்டாமே என்று எண்ணினான். அவனுக் கும் தனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று தன்னையே சமாதா னப்படுத்திக் கொண்டு, ” பக்கமாய் விலகிப்போனான்.”COLTam 386.2

  ஆனால் அதே வழியில் பயணித்த சமாரியன் ஒருவந், காயப் பட்டுக் கிடந்தவனைக் கண்டான். மற்றவர்கள் செய்யத் தவறியதை அவன் செய்தான். காயப்பட்டுக் கிடந்தவனுக்கு தயவோடும் இரக்கத்தோடும் உதவினான். அவனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுய வாகனத்தின் மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். மறுநாளிலே தான் புறப்படும் போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து : நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பி வரும்போது அதை உனக்குத் தருவேன்” என்றான். ஆச ாரியனும் லேவியனும் தங்களைப் பக்திமான்களெனச் சொல்லிக்கொண்டவர்கள்; ஆனால் மெய்யாக மனமாறியிருந்தவன் அந்தச் சமாரியன் . ஆசாரியனும் லேவியனும் அடிபட்டுக் கிடந்தவனுக்கு உதவ எவ்வளவு அறுவறுத்தார்களோ அப்டித்தான் சமாரியனுக்கும் இருந்திருக்கும்; ஆனால் தான் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ்ந்ததை தன் ஆவி யிலும் கிரியைகளிலும் வெளிப்படுத்தினான்.COLTam 386.3

  இந்தப் பாடத்தைச் சொல்லி, நியாயப்பிரமாணத்தின் நியதிகளை நேரடியாக, ஆணித்தரமாக கிறிஸ்து எடுத்துரைத்தார்; இந்த நியதிகளை அவர்கள் கைக்கொள்ளத் தவறியதையும் அங்கிருந்தவர்களுக்கு காண்பித்தார். அங்கிருந்தவர்கள் ஆட்சேபனம் தெரிவிக்க எந்த வாய்ப்பையும் கொடுக்காத அளவுக்கு அவரது வார்த்தைகள் மிகத் தெளிவாக, உறுதியாக இருந்தன. அந்த நியாயசாஸ்திரி குற்றங் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அந்தப் படிப்பினை இருந்தது. கிறிஸ்துவைக் குறித்த தவறான அபிப்பிராயத்திலிருந்து விடுபட்டான். ஆனால் சமாரியர்களை யூதர்கள் வெறுத்ததால், சமாரியனின் பெயரைச் சொல்லி புகழுமளவிற்கு அந்த வெறுப்பை அவன் மேற்கொள்ள முடியவில்லை . அதனால் தான், “இப்படியிருக்க,கள்ளர் கையில் அகப்பட்ட வனுக்கு இந்த மூன்று பேரில் எவன் பிறனாயிருக் கிறான்?” என்று கிறிஸ்து கேட்டபோது, அவனுக்கு இரக்கஞ்செய்தவனே” என்று சொன்னான்.COLTam 387.1

  “இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய்” என்றார். தேவையிலிருப்போருக்கு அதே பரிவைக் காட்டு. நியாயப்பிரமாணம் முழுவதையும் நீ கைக்கொள்வதை அது சாட்சியிடும்.COLTam 387.2

  யூதர்களும் சமாரியர்களுக்கும் இடையே மார்க்கச்சம்பந்தமான நம்பிக்கையில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது. எது மெய்யான தொழுகை என்பதில் வெவ்வேறு நம்பிக்கை கொண்டிருந்தார்கள். சமாரியர்களைப் பற்றி பரிசேயர்கள் ஒரு நல்லதும் சொல்லமாட்டார்கள்; பயங்கரமாகச் சபிப்பார்கள். சமாரியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையேயான வெறுப்பு கடுமையாக இருந்ததாலேயே, அந்த சமாரியப்பெண்ணிடம் கிறிஸ்து தாகத்திற்கு தண்ணீர் கேட்டபோது, அவளுக்கு விநோதமாக இருந்தது. ஒரு வித்தியாசமான செயலாகத் தோன் றியது..’ ‘நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம்” என்று சொன்னாள். யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியினால் என்று நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார். யோவான் 4:9. கிறிஸ்துவைக் கொலை செய்யுமளவிற்கு வெறுப்பு நிறைந்த வர்களாக, தேவாலயத்தில் அவரைக் கல்லெறிய நின்ற போது, அந்த வெறுப்பைக் கக்குவதற்கு “உன்னைச் சமாரியனென்றும், பிசாசுபிடித்தவனென்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதான்” என்று அவர்மலே சாடுவதவிைட சிறந்தது வேறெதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை . யோவான் 8:48. ஆனாலும் ஆசாரியனுக்கும் லேவியனுக்கும் தேவன் நியமித் திருந்த வேலையை அவர்கள் புறக்கணித்தார்கள்; தங்களுடைய தேசத்தானுக்கு உதவி செய்ய தாங்கள் வெறுத்து, ஒதுக்கிய ஒரு சமாரியன் முன்வரும்படி செய்தார்கள்.COLTam 387.3

  “உன்னைப்போல பிறனையும் நேசி” என்கிற கட்டளையை அந்தச் சமாரியன் நிறைவேற்றினான். அதன்மூலம், தன்னைப் புறக்கணித்தவர்களைவிட தான் அதிக நீதிமானாக இருப்பதை நிரூபித்தான். தன் உயிரையும் பொருட்படுத்தாமல், காயப்பட்ட வனை தனது சகோதரனைப் போலக் கருதி, சிகிச்சை கொடுத்தான். இந்தச் சமாரியன் கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டுகிறான். மனித அன்பினால் ஈடுகட்ட முடியாத ஓர் அன்பை நம் இரட்சகர் வெளிப்படுத்தினார். நாம் காயப்பட்டு மரிக்கும் தருவாயில் இருந்தபோது, நம்மேல் பரிவுகாட்டினார். அவர் அந்தப் பக்கமாக விலகிச்செல்லவில்லை; நம்மைக் கைவிடவில்லை; நாம் அழிந்து போகும்படி உதவியற்றவர்களாக, நம்பிக்கையற்ற வர்களாக விடவில்லை. பரலோகத்தின் சர்வ சேனையாலும் நேசி க்கப்பட்டவர், மகிழ்ச்சியான, பரிசுத்தமான அந்த வீட்டி லேயே இருந்து விடவில்லை. நமது மிகப்பெரிய தேவையை அவர் கண்டார், நமது வழக்கில் தலையிட்டார், மனிதர்களின் நலனையே தம் நலனாக்கினார். தம்முடைய சத்துருக்களை இரட் சிக்கும் படி மரித்தார். தம்மைக் கொலை செய்தவர்களுக்காக ஜெபித்தார். தம்மை முன்மாதிரியைகக் காட்டி, தம் சீடர்களிடம், “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன்.” “நான் உங்களில் அன்பாக இருப்பது போல நீங்களும் அன்பாயிருங்கள்” என்று சொல்கிறார். யோவான் 15:17,13:34.COLTam 388.1

  ஆசாரியனும் லேவியனும் தேவாலயத்தில் ஆராதனைபணி செய்வதற்குச் சென்றார்கள். தேவன்தாமே அந்தப் பணியை அவர்களுக்கு நியமித்திருந்தார். அந்தச் சேவையில் பங்கெடுப்பது மேன்மையான ஒரு சிலாக்கியம். தாங்கள் அவ்வளவு கனமான பணியைப் பெற்றிருந்ததால், அடிபட்டு வழி யோரத்தில் கிடந்த முன்பின் தெரியாத ஒருவனுக்கு உதவுவதை கீழ்த்தரமாகக் கருதினார்கள். எனவே தம்முடைய பிரதிநிதிகளாக தங்கள் சக மனிதர்களுக்கு உதவும்படி தேவன் ஏற்படுத்திக் கொடுத்த ஒரு விசேஷித்த தருணத்தைப் புறக்கணித் தார்கள்.COLTam 389.1

  இன்றும் பலர் இதே தவறைச் செய்கிறார்கள். தங்களது கடமைகளை இரண்டு குறிப்பிட்ட பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். ஒரு பிரிவில், தேவனுடைய பிரமாணத்தால் கட்டுப்பட்ட, மேலான விஷயங்கள் இடம்பெறுகின்றன. அடுத்த பிரிவில் சின்ன சின்ன விஷயங்கள் இடம்பெறுகின்றன; அதில், ‘உன்னைப்போல் பிறனையும் நேசி” போன்ற கட்டளையைப் புறக்கணிக்கிறார்கள். இத்தகைய பணிகளை தங்களுடைய மனத்தூண்டல்களுக்கோ மனப்போக்கிற்கோ இணங்கி, தங்கள் சலனபுத்தியின்படி கையாளுகிறார்கள். அதனால் குணம் சீர் கெடுகிறது; கிறிஸ்து வலியுறுத்தின மார்க்கம் திரித்துக்காட்டப் படுகிறது.COLTam 389.2

  பாடுகளிலிருக்கும் மனிதர்களுக்குச் சேவை செய்வது தங்கள் மதிப்புக்கு இழுக்கென நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். தங்களது ஆத்துமாவாகிய ஆலயத்தை அழிகிற நிலையில் வைத்திருப்பவர்களை அநேகர் அலட்சியத்தோடும் அவமதிப் போடும் பார்க்கிறார்கள். மற்றவர்கள் வேறு ஏதாவது நோக்கத்திற்காக தரித்திரரைப் புறக்கணிக்கிறார்கள். ஆனால் கிறிஸ்து வுக்காக தாங்கள் பாடுபடுவதாகவும், தகுதிவாய்ந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் நினைக்கிறார்கள். தாங்கள் மிகப்பெரிய பணியைச் செய்வதால், தரித்திரர் மற்றும் இக்கட்டில் இருப்போரின் தேவைகளை நின்று கவனிக்க இயலாதென்றும் நினைக்கிறார்கள். மிகப்பெரும் பணியென தாங்கள் நினைத்துக் கொண்டிருப்பதை தொடர்ந்து செய்யும் படி, தரித்திரரை ஒடுக்கவும் செய்வார்கள். அவர்களை கடினமான, சோதனையான சூழ் நிலைகளுக்கு ஆளாக்கி, அவர்களுடைய உரிமைகளைப் பறிப்பார்கள் அல்லது அவர்களுடைய தேவைகளைப் புறக்கணிப்பார்கள். ஆனாலும், தாங்கள் கிறிஸ்துவின் நோக்கத்தை நிறை வேற்றுவதாக அவர்கள் நினைப்பதால், இவை அனைத்திலும் எந்தத் தவறுமில்லையென நியாயப்படுத்துவார்கள்.COLTam 389.3

  மோசமான சூழ்நிலைகளில், தங்கள் சகோதரனோ பிறனோ உதவியின்றி பாடுபடுவதை அநேகர் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கிறிஸ்தவர்களெனச் சொல்லிக் கொள்வதால், கிறிஸ்துவைப் பிரதிபலிப்பவர்களாக அந்தச் சுய நலக்காரர்களைக் கருதுவதற்கு அவன் வழிநடத்தப்படுகிறான். தேவனுடைய ஊழியர்களெனச் சொல்பவர்கள், அவரோடு ஒத்துழைக்காததால், அவர்களிடமிருந்து பாய்ந்தோடவேண்டிய தேவ அன்பானது, சக மனிதர்களுக்கு கிடைக்காமலேயே போகிறது. வாயாலும் இருதயத்தாலும் தேவனைத் துதித்து, நன்றி சொல்லி, தங்களுடைய நன்றிகடனை மனிதர்கள் செலுத்த முடியாமல் போகிறது. தேவனுடைய பரிசுத்த நாமத்திற்குரிய மகிமை அவருக்குச் செலுத்தப்படாமல் வஞ்சிக்கப்படுகிறது. எந்த ஆத்துமாக்களுக்காக கிறிஸ்து மரித்தாரோ, எந்த ஆத்துமாக்களை தம்முடைய ராஜ்யத்திற்குள் கொண்டு வந்து, அவர்கள் நித்திய காலமும் தம்முடைய சமுகத்தில் வாழவேண்டு மென ஏங்குகிறாரோ, அந்த ஆத்துமாக்களை அவரிடமிருந்து கொள்ளையாடுகிறார்கள்.COLTam 390.1

  தேவனுடைய சத்தியம் நம் நடவடிக்கையில் வெளிப்பட்டு அதிக தாக்கத்தை உலகில் உண்டாக்கியிருக்க வேண்டும், ஆனால் குறைவான தாக்கமே உண்டாகிறது. மார்க்கம் பற்றி வெறுமனே அதிகமாகப் பேசுகிறார்கள்; ஆனால் அது சொற்ப தாக்கத்தையே உண்டாக்குகிறது. நாம் கிறிஸ்துவைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளலாம், தேவ்வார்த்தையின் ஒவ்வொரு சாத்தி யத்தையும் நம்புவதாகச் சொல்லிக்கொள்ளலாம்; ஆனால் நம்முடைய நம்பிக்கை நம் அனுதினவாழ்வில் வெளிப்படாதப்பட்சத்தில் நம்முடைய பிறனுக்கு அதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. வானுயரத்திற்குப் பேசலாம்; ஆனால் மெய்யான கிறிஸ்தவர்களாக வாழாவிட்டால், நம்மையும் நம் சகமனிதர்களையும் அது இரட்சிக்காது. பேசுவதைவிட நல்ல முன்மாதிரிகளாக வாழ்ந்து காட்டுவதுதான் உலகத்திற்கு அதிக நன்மையை உண்டாக்கும்.COLTam 390.2

  எப்படிப்பட்ட சுயநல நடவடிக்கைகளாலும் கிறிஸ்துவின் நோக்கத்தை நிறைவேற்ற முடியாது. சிறுமைப்பட்டோருக்கும் தரித்திர ருக்கும் உதவுவதே அவருடைய நோக்கமாக இருந்தது. அவரைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்வோரின் இருதயங் களிலே கிறிஸ்துவின் பரிவுமிக்க உணர்வு காணப்படவேண்டியது அவ சியம். அதாவது, யாரை மதிப்புமிக்கவர்களாகக் கருதி, அவர்களுடைய இரட்சிப்பிற்காக தம்முடைய உயிரையும் கொடுத்தாரோ அவர்கள் மேல் ஆழமான அன்பு இருக்கவேண்டும். அந்த ஆத்து மாக்கள் விலையேறப்பெற்றவர்கள்; தேவனுக்கு நாம் செலுத்து கிற எந்தக் காணிக்கையையும் விட சொல்லமுடியாத அளவுக்கு விலையேறப்பெற்றவர்கள். உதவி தேவைப்படுகிற ஒருவரைப் புறக்கணித்து அல்லது அந்நியன் ஒருவனுடைய உரிமையைப் பறித்துக்கொண்டு, ஏதாவது பெரிய பணியில் நம் ஆற்றல்களை எல்லாம் செலவிட்டாலும், அதை அவர் அங்கீகரிக்கமாட்டார்.COLTam 391.1

  பரிசுத்த ஆவியானவரின் கிரியையினால் ஆத்துமா பரிசு த்தமாக்கப்படுவதென்றால், கிறிஸ்துவின் தன்மை மனிதனுக்குள் விதைக்கப்படுதலாகும். கிறிஸ்துவானவர் நம்முடைய வாழ்க்கையில் உயிருள்ள, செயல்படுகிற ஒரு நியதியாக்க் காணப்படுவதே சுவிசேஷம் சொல்கிற மார்க்கம். அதனால் கிறிஸ்துவின் கிருபை நம் குணத்தில் பிரதிபலிக்கும், நற்கிரியை களில் அது வெளிப்படும். சுவிசேஷத்தின் நியதிகளை, அந்றாட வாழ்க்கையின் எந்த விஷயத்திலிருந்தும் பிரித்துப்பார்க்கவே முடியாது. ஒவ்வொரு கிறிஸ்தவ அனுபவமும் பிரயாசமும் கிறிஸ்துவின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும்.COLTam 391.2

  தேவபக்திக்கான அடிப்படை அன்புதான். எப்படிப்பட்ட ஊழியத்தைச் செய்தாலும், தன் சகோதரன் மேல் சுயநலமற்ற அன்பைக் காட்டாதவன், தேவன்மேல் மெய்யான அன்புள்ளவன் அல்ல. ஆனால் பிறர்மேல் அன்பு காட்ட முயற்சித்து இந்த அன்பை நாம் பெறவே முடியாது. இருதயத்தில் கிறிஸ்துவின் அன்பு காணப்படவேண்டியது அவசியம். சுயமானது கிறிஸ்து வோடு கலக்கும் போது, அன்பு தானாகவே ஊற்றெடுக்கிறது. பிறருக்கு உதவியாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்கவேண்டு மென்கிற தூண்டுதல் உள்ளேயிருந்து வெளியே தொடர்ந்து புறப்படும் போது, பரலோகத்தின் வெளிச்சம் இருதயத்தை நிரப்பி, நம் முகத்தில் அது வெளிப்படும் போது, கிறிஸ்தவ குணம் நம்மில் பூரணப்படுகிறது.COLTam 391.3

  கிறிஸ்து வாசஞ்செய்கின்ற இதயத்திலே அன்பிற்குப் பஞ்சம் இருக்க வாய்ப்பில்லை. தேவன் நம்மை முந்தி நேசித்தாரென்று அவரை நாம் நேசிக்கும்போது, யாருக்காகவெல்லாம் கிறிஸ்து மரித்தாரோ அவர்களை நாம் நேசிப்போம். மனிதர்களோடு தொடர்பில்லாமல் தேவனோடு தொடர்பு கொள்ள வாய்ப்பே இல்லை; ஏனெனில், இப்பிரபஞ்சத்தின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் அவரில் தானே தெய்வதன்மையும் மனித்தன்மையும் இணைந்து காணப்படுகின்றன . கிறிஸ்துவோடு தொடர் பிருந்தால், அன்பென்னும் சங்கிலியின் பொன் இணைப்புகளால் மனிதர்களோடு இணைக்கப்பட்டிருப்போம். அப்போது, கிறிஸ்துவின் பரிவும் கருணையும் நமது வாழ்விலும் வெளிப் படும். எளியவர்களும் துயரப்படுபவர்களும் நம்மிடத்தில் கொண்டு வரப்பட நாம் காத்திருக்கமாட்டோம். பிறருடைய வேதனைகளை உணர்ந்து கொள்ளுமாறு யாரும் நம்மிடம் மன்றாடவேண்டிய அவசியமிருக்காது. கிறிஸ்து எவ்வாறு நன்மை செய்பவராகச் சுற்றித்திரிந்தாரோ, அதேபோன்று எளிய வர்களுக்கும் துயரப்படுவோருக்கும் ஊழியம் செய்வது நம் இயல் பாக மாறிவிடும்.COLTam 392.1

  எங்கெல்லாம் அன்பும் பரிவும் காட்டும்படி தூண்டுதல் உண்டாகிறதோ, எங்கெல்லாம் மற்றவர்களை ஆசீர்வதித்து, உயர்த் தும்படி இருதயம் விரைந்து செல்கிறதோ அங்கு தேவனுடைய பரிசுத்த ஆவியானவரின் கிரியைகள் வெளிப்படும். தீவிர அஞ்ஞானமார்க்கம் நிலவிய காலத்தில், எழுதப்பட்ட தேவ கற்பனை பற்றி எந்த அறிவுமில்லாத, கிறிஸ்துவின் பெயரைக் கூட கேள்விப்பட்டிராத மனிதர்கள் தங்களுடைய ஊழியக்காரர் களிடம் அன்புகாட்டி, தங்களது உயிரையும் பணையம் வைத்து அவர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள். தேவ வல்லமை செயல்பட்டு வந்ததை அவர்களுடைய நடவடிக்கை காட்டுகிறது. கொடூரகுணமுள்ள மனிதனின் இருதயத்திலும் பரிசுத்த ஆவி யானவர் கிறிஸ்துவின் கிருபையைப் புகுத்தினார், அவனது இயல்புக்கும் அறிவுக்கும் மாறாக அவனில் பரிவுணர்வுகளை எழச்செய்தார். “உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளி ” அவனுடைய ஆத்துமாவில் பிரகாசிக்கிறது; தேவைப்பட்டால் இந்த ஒளியானது அவனை தேவராஜ்யத்திற்கு வழிநடத்தும். யோவான் 1:9.COLTam 392.2

  விழுந்து போனவர்களை தூக்கி விடுவதிலும், துயரப்பட் டோரை ஆறுதல் படுத்துவதிலும் தான் பரலோகத்தின் மகிமை காணப்படுகிறது. கிறிஸ்து வாசஞ்செய்கிற இருதயங்களிலெல்லாம் இவ்வாறே அவர் வெளிப்படுவார். இது எங்கெல்லாம் செயலில் வெளிப்படுகிறோ அங்கு கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படும். இது எங்கெல்லாம் செயல்படுகிறதோ, அங்கே பிரகாசம் நிறைந்திருக்கும்.COLTam 393.1

  தேசம், இனம் அல்லது சாதி அடிப்படையில் எத்தகைய பிரிவினை ஏற்படுவதையும் அவர் அங்கீகரிப்பதில்லை. மனுக்குலத்தைச் சிருத்தவர் அவர். சிருஷ்டிப்பின்படி அனைத்து மனிதர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மீட்பின்படியும் அவர்கள் அனைவரும் ஒன்றுதான். பிரிவினையாகிய சுவர்களைத் தகர்த்துப்போடவும், ஒவ்வோர் ஆத்துமாவும் தடையின்றி தேவனிடம் செல்லும்படி தேவாலயத்தின் ஒவ்வோர் அறையையும் திறந்துவிடவும் கிறிஸ்து வந்தார். அவருடைய அன்பின் அகலமும், ஆழமும், முழுமையும் ஆராயமுடியாதது ; எங்கும் அது ஊடுருவிச்செல்கிறது. சாத்தானின் வஞ்சகங்களால் வஞ்சி க்கப்பட்ட ஆத்துமாக்களை அவனுடைய வளையத்திற்குள்ளிருந்து தூக்கிவிடுகிறது. வாக்குறுதியாகிய வானவில் சூழப் பட்டதேவனுடையசிங்காசனத்திற்கருகில் அவர்களை வைக்கிறது.COLTam 393.2

  கிறிஸ்துவுக்குள் யூதனென்றோ கிரேக்கனென்றோ, அடிமை யென்றோ சுயாதீனனென்றோ இல்லை. கிறிஸ்துவின் இரத்தத்தினாலே அனைவரும் சமீபமாகக் கொண்டுவரப்பட் டிருக்கிறார்கள். கலா 3:28; எபே. 2:13.COLTam 393.3

  மார்க்க சம்பந்தமாக என்னதான் வேறுபாடு இருந்தாலும், படுகளிலுள்ள மனிதர்கள் அழைக்கும் போது, அதற்குச் செவி சாய்த்து, உடனே பதிலளிக்க வேண்டும். மத வேறுபாட்டினிமித்தம் கசப்பான உணர்வுகள் காணப்படும் இடங்களில், தனிநபர் ஊழியத்தால் அதிக நன்மையைச் செய்யலாம். அன்பினால் செய்யப்படும் ஊழியமானது தப்பெண்ணத்தைத் தகர்த்து, தேவ னுக்காக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தும்COLTam 393.4

  மற்றவர்களுக்கு என்னென்ன துன்பங்கள், பிரச்சனைகள், இக் கட்டுகள் வரக்கூடுமென முன்னரே அறியவேண்டும். உயர்ந்தவர் - தாழ்ந்தவர், ஏழை - பணக்காரர் என யாராக இருந்தாலும் அவர்களுடைய இன்பதுன்பங்களில் பங்கெடுக்க வேண்டும். “இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்” என்று கிறிஸ்து சொல்கிறார். மத்தேயு 10:8. ஏழ்மையான, சோதிக்கப்பட்ட ஆத்துமாக்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள்; அவர்களிடம் பரிவான வார்த்தைகளைப் பேசி, உதவிகளைச் செய்யவேண்டும். பரிவையும் உதவியையும் எதிர் பார்க்கிற விதவைகள் இருக்கிறார்கள். தேவன் தங்களிடம் ஒப்படைத்துள்ளவர்களென ஏற்றுக்கொள்ளும் படி இயேசு தம் சீடர்களுக்கு கட்டளையிட்டதிக்கற்ற பிள்ளைகள் இருக்கிறார்கள்; பெரும்பாலும் இவர்களைக் கண்டுகொள்ளாமல் பக்கமாக விலகிச்செல்கிறோம். அவர்கள் கந்தை கோலமாக, அருவருப்பாக, கொஞ்சமும் மனதிற்கு பிடிக்காதவர்களாகத் தெரியலாம். ஆனால் அவர்கள் தேவனுடைய சொத்துக்கள். விலை கொடுத்து அவர்களை வாங்கியிருக்கிறார், அவருடைய பார்வையில் அவர்கள் விலையேறப்பெற்றவர்கள். அவர்கள் தேவனுடைய மாபெரும் குடும்பத்தின் அங்கத்தினாகள்; தேவனுடைய உக்கிராணக்காரர் களான கிறிஸ்தவர்கள் அவர்களுக்கு பொறுப்பாளிகளாக இருக்கிறார்கள். அவர்களுடைய ஆத்து மாக்களை’ ‘உன்கையிலே கேட்பேன்” என்று இயேசு சொல்கிறார்.COLTam 394.1

  தீமைகளிலெல்லாம் பெரியது பாவம், பாவிகள் மேல் பரிவுகாட்டி அவர்களுக்கு உதவவேண்டியது நம் கடமை. ஆனால் எல்லாரையும் இதே பாணியில் சந்திக்க முடியாது. தங்கள் ஆத்துமப் பசியை வெளிகாட்டாத அநேகர் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட வர்களுக்கு அன்பான ஒரு வார்த்தையால் அல்லது அன்போடு அவர்களை நினைவுகூர்வதால் அதிகமாக உதவலாம். தாங்கள் மிகப்பெரும் தேவையிலிருந்து அதுபற்றி அறியாதவர்களும் இருக்கிறார்கள். ஆத்துமா கடுமையான வறட்சியில் இருப்பதை அவர்கள் உணர்வதில்லை. பெருந்திரளானவர்கள் எவ்வளவுக்கு பாவத்தில் மூழ்கியிருக்கிறார்களென்றால், நித்திய உண்மைகள் குறித்த உணர்வுகளை இழந்திருப்பார்கள்; தேவனுக்கொத்த தன்மைகளை இழந்திருப்பார்கள்; ஆத்தும் இரட்சிப்பு தேவையா தேவையில்லையை என்பதே தெரியாமல் போயிருக்கும். தேவனில் விசுவாசமோ மனிதனில் நம்பிக்கையோ அவர்களுக்கு இருக்காது. பாரபட்சமற்ற அன்போடு அணுகினால் மட்டுமே அவர்களை ஆதாயப்படுத்த முடியும். சரீரப்பிரகாரமான தேவைகளை முதலில் சந்திக்க வேண்டும். அவர்களுக்கு உணவு கொடுத்து, சுத்தப்படுத்தி, சிறந்த உடைகளை உடுத்துவிக்க வேண்டும். உங்கள் சுயநலமற்ற அன்பை செயலில் காணும் போது, கிறிஸ்துவின் அன்பில் அவர்கள் நம்பிக்கை கொள்வது எளிதாக இருக்கும்.COLTam 394.2

  தவறு செய்கிற அநேகர் அதற்காக வெட்கப்படுகிறார்கள்; தாங்கள் முட்டாளதனமாக நடந்ததை உணர்கிறார்கள். தங்களுடைய குற்றங்களையும் தவறுகளையுமே யோசித்து, நம்பிக்கையற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த ஆத்துமாக்களை நாம் புறக்கணிக்கக்கூடாது. நீரோட்டத்திற்கு எதிராக ஒருவர் நீந்த வேண்டியிருந்தால், நீரின் போக்கு பலத்த ஆற்றலுடம் அவரைப் பின்னுக்குத் தள்ளும். மூழ்கிக்கொண்டிருந்த பேதுருவைத் தூக்க நம் மூத்த சகோதர்ர் எவ்வாறு கரம் நீட்டினாரோ, அது போல அவர்களுக்கு உதவ கரம் நீட்ட வேண்டும். நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை அவரிடம் பேசவேண்டும்; அந்த வார்த்தைகள் அவரில் தன்னம்பிக்கையை உண்டாக்கி, அன்பை விழிப்படையச் செய்யவேண்டும்.COLTam 395.1

  முன்னர் உங்களுக்கு ஒரு சகோதரனின் அன்பு எவ்வாறு தேவைப்பட்டதோ அவ்வாறுதான் ஆத்துமப்பணியிலுள்ள உங்களுடைய சகோதரருக்கு நீங்கள் தேவை. தன்னைப்போல பெலவீனங்களை எல்லாம் கண்ட ஒருவரிடமிருந்து பரிவான வர்த்தைகளும் உதவியும் அவருக்குத் தேவைப்படுகிறது. நம்முடைய பெலவீனங்கள் குறித்த அறிவானது, அதேபோன்ற மோசமான அனுபவத்தில் இருக்கிற ஒருவருக்கு உதவியாக இருக்கவேண்டும்.COLTam 395.2

  நம்மை தேவன் எவ்வாறு ஆறுதல் படுத்தினாரோ, அதேபோன்ற ஆறுதலை துயரத்திலிருக்கும் ஓர் ஆத்துமாவுடன் பகிர்ந்து கொள்ளாமல், அவரைக் கடந்து நாம் செல்லக்கூடாது.COLTam 395.3

  கிறிஸ்துவுடனான ஐக்கியமும், ஜீவனுள்ள இரட்சகருடனான தனிப்பட்ட தொடர்பும் தான் கீழ்த்தரமான சுபாவத்திலிருந்து வெற்றிபெற மனதிற்கும் இருதயத்திற்கும் ஆத்தமாவிற்கும் திறனளிக்கிறது. அலைந்து திரிகிற ஒருவனிடம் அவனைத் தாங்கிப்பிடிக்க சர்வவல்ல கரம் உண்டென்றும், அவனிடம் பரிவுகாட்ட மனித்தன்மையும் பெற்ற கிறிஸ்து உண்டென்றும் சொல்லுங்கள். பரிவுகாட்டத் தெரியாத, உதவி கேட்கும் போது அந்தச் சத்தத்தைக் கேட்க முடியாத சட்டத்தையும் ஒழுங்கையும் அவன் நம்புவது போதாது. அன்புள்ள ஒருவரின் கரத்தைப் பற்றிப்பிடிக்க வேண்டும், கனிவு நிறைந்த இருதயமுள்ள ஒருவரை நம்பவேண்டும். எப்போதும் தன் அருகிலேயே தேவ பிரசன்னம் இருக்கிறது, பரிவுமிக்க அன்போடு எப்போதும் என்னை நோக்கிப் பார்க்கிறது என்கிற சிந்தையே அவனில் நிலைத்திருக்கச் செய்யவேண்டும். பிதாவின் இருதயம் பாவத்தைக் கண்டு எப்போதும் துக்கப்படுவதையும், பிதாவின் கரம் அவனைப் பற்றிப்பிடிக்க எப்போதும் நீட்டப்பட்டிருப்பதையும், அவன் என் பெலனைப்பற்றிக்கொண்டு என்னோடே ஒப்புரவாகட்டும்; அவன் என்னோடே ஒப்புரவாவான்” என்று பிதா சொல்வதையும் சிந்திக்கும்படி அவனிடம் கூறுங்கள். ஏசாயா 27:5.COLTam 395.4

  இந்த ஊழியத்தில் நீங்கள் ஈடுபடும் போது, மனிதக் கண்களால் காணமுடியாத நண்பர்கள் உதவுவார்கள். காயப்பட்ட அந்த அந்நியனைப் பராமரித்த சமாரியனருகே பரலோகத் தூதர்கள் இருந்தார்கள். தங்களுடைய சகமனிதர்களுக்கு ஊழியம் செய்வ தால் தேவனுக்குச் சேவை செய்கிற அனைவரின் பக்கத்திலும் பரலோக மன்றங்களிலுள்ள தூதர்கள் நிற்கிறார்கள். கிறிஸ்துவின் ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். அவர் புதுப்பிக் கிறவர், அவருடைய மேற்பார்வையில் நீங்கள் ஊழியஞ்செய்யும் போது மாபெரும் பயன்களைக் காணமுடியும்.COLTam 396.1

  இந்த ஊழியத்தில் நீங்கள் உண்மையாக இருப்பதைப் பொறுத்துதான் பிறருடைய நலன் மட்டுமல்ல, உங்களுடைய நித்திய வாழ்வும் உள்ளது. கிறிஸ்துவும் பிதாவும் ஒன்றாயிருப்பது போல நாமும் கிறிஸ்துவோடு ஒன்றாயிருக்கும்படி, அவரோடு நண்பர்களாகிற நிலைக்கு நம்மை உயர்த்துவதற்கு அவர் வகை தேடுகிறார். நம்மை நம்முடைய சுயநலத்திலிருந்து வெளியேற்று வதற்கு, உபத்திரவத்திலும் பேரழிவிலும் உள்ளவர்களை நாம் நாடிச் செல்ல அவர் அனுமதிக்கிறார். மனதுருக்கம், கனிவு, அன்பு போன்ற அவரைடய சாற்றுப்பண்புகளை நம்மில் உருவாக்க அவர் முயல்கிறார். ஊழியத்தின் இந்தப் பணிக்கு நம்மை அர்ப்பணிக்கும் போது, தேவனுடைய மன்றங்களுக்குச் செல்லத் தகுதியைப் பெற அவருடைய பள்ளியில் கற்றுக்கொள்ளத் துவங் குகிறோம். இதை மறுக்கும் போது, அவருடைய வழிநடத்து தலை மறுக்கிறோம். அவருடைய பிரசன்னத்தைவிட்டு நித்திய மாகப் பிரிந்து செல்லத் தீர்மானிக்கிறோம்.COLTam 396.2

  “நீ ..... என் காவலைக் காத்தால், இங்கே நிற்கிறவர்களுக் குள்ளே (அவருடைய சிங்காசனத்தைச் சுற்றிலும் நிற்கிற தூதர்களுக்குள்ளே) உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளை யிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” சகரியா 3:7. பூமியில் பரலோக ஜீவிகள் செய்கிற ஊழியத்தில் நாமும் ஒத்துழைக்கும் போது, பரலோகத்தில் அவர்களது தோழமையைப் பெறத் தகுதிப்படுகிறோம். ‘இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும் படிக்கு அனுப்பப்பட்ட பணி விடையின் ஆவிகளாயிருக்கிற பரலோகத் தூதர்கள், பூமியில் “ஊழியங்கொள்ளாமல், ஊழியஞ்செய்பவர்களாக வாழ்ந்தவர்களை வாழ்த்தி வரவேற்பார்கள். எபிரெயர் 1:14; மத்தேயு 20:28. “எனக்குப் பிறன் யார்?’ என்பதில் என்னவெல்லாம் அடங்கியுள்ளன என்பதை அந்தப் பாக்கியமான ஐக்கிய நிலையில் நம் நித்திய சந்தோஷத்திற்கு ஏதுவாக அறிந்துகொள்வோம்.COLTam 397.1