Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    உடல் ஆரோக்கியம்

    உடல் ஆரோக்கியம் என்பது ஓர் ஆசீர்வதாம்; இந்த மதிப்பை உணர்ந்தவர்கள் வெகுசிலர்தாம். ஆனாலும், மன - சரீரத் திறன்கள் சிறப்பாகச் செயல்பவது அதிகமாக இதைச் சார்ந்தே உள்ளது. நம் உணர்வுத் தூண்டல்களும் உணர்ச்சியார்வங்களும் நம் சரீரத்தில் தான் வீற்றுள்ளன. சரீரமானது நல்ல அரோக்கிய நிலையிலும் ஆவிக்குரிய செல்வாக்குகளின் கட்டுப்பாட்டிலும் இருந்தால் தான் நம் தாலந்துகளை மிகச்சிறப்பாகப் பயன்படுத்த முடியும்...COLTam 349.2

    உடல் பெலத்தைக் குறைக்கிற எதுவும் மனதைப் பெலவீன மாக்குகிறது ; எது சரி, எது தவறு என்று பகுத்தறிகிற திறனைக் குறைக்கிறது. சரியானதைத் தெரிந்துகொள்கிற திறனில் குன்று கிறோம்; சரியானதென தெரிந்ததைச் செய்யவேண்டு வேண்டுமென் கிற விருப்பம் குறைகிறது.COLTam 349.3

    உடலின் ஆற்றல்களை தவறாகப் பயன்படுத்துவது தேவ மகிமைக்காக நாம் வாழ்கிற காலக்கட்டத்தைக் குறைக்கிறது. தேவன் நமக்கு நியமித்திருக்கிற வேலையைச் செய்து முடிக்க நம்மைத் தகுதியற்றவர்களாக்குகிறது. தவறான பழக்கவழக்கங்கள் உருவாகவும், இரவில் வெகுநேரம் விழித்திருக்கவும், ஆரோக் கியத்தை விலைகொடுத்து சிற்றின்ப வேட்கையைத் தணிக்கவும் நாம் இடமளித்தால், உடல் பெலன் கெடுவதற்கு அளித்தளமிடு கிறோம். உடற்பயிற்சியே செய்யாமல், மனதுக்கோ உடலுக்கோ அதிகமாக வேலாகொடுக்கும் போது, நரம்பு மண்டலம் சமநிலையை இழக்கிறது. இவ்வாறு தங்கள் வாழ்நாளைக் குறைத்து, இயற்கை விதிகளுக்கு புறம்பாக நடந்து சேவை செய்யதகுதியற்றவர்களாகக் காணப்படுபவர்கள் தேவனைக் கொள்ளையடித்த குற்றத்தைச் செய்கிறார்கள். தங்கள் சகமனிதர்களையும் அவர்கள் கொள்ளையடிக்கிறார்கள். பிறருக்கு ஆசீர்வாதமாக வாழ்வதற்கான வாய்ப்பும், தேவன் இந்த உலகத்தில் அவர்களை அனுப்பி செய்யச்சொன்ன பணியும், அவர்களுடைய தவறான செய்கையால் முற்றிலும் நிறைவேறாமல் போகின்றன. ஒரு குறுகிய காலக்கட்டத்தில் நிறைவேற்றவேண்டிய பணியைக்கூட செய்யத் தகுதியற்றவர் களாகிறார்கள். தீயப் பழக்கவழக்கங்களால் உலகத்திற்கு நன்மை செய்யாமல் போவோரை குற்றவாளிகளாக ஆண்டவர் தீர்க்கிறார்.COLTam 349.4

    ஆரோக்கிய விதிகளை மீறுவது ஒழுக்க விதிகளை மீறுவதற்கு சமமாகும். ஏனெனில் ஒழுக்கவிதிகளைக் கொடுத்த தேவன்தாமே ஆரோக்கிய விதிகளைக் கொடுத்தவராகவும் இருக்கிறார். மனி தனிடம் அவர் ஒப்படைத்துள்ள தம்முடைய பிரமாணத்தை ஒவ்வொரு நரம்பிலும், ஒவ்வொரு தசையிலும், ஒவ்வொரு மனத்திறனிலும் தம் சொந்த விரலினால் எழுதியிருக்கிறார். நம் உடலில் எந்த உறுப்பை நாம் தவறாகப் பயன்படுத்தினாலும், அது கற்பனையை மீறுவதாகும்.COLTam 350.1

    கர்த்தருடைய வேலையைச் செய்வதற்கான தகுதியுடன் தங்கள் சரீரங்களைப் பாதுக்கும்படி உடல் குறித்த ஆழமான அறிவை எல்லாருமே பெற்றிருக்கவேண்டும். மனித வாழ்வில் தெய்வீக தன்மை பரிபூரணமாக வெளிப்படும் படியாக உடலைப் பத்திரமாகப் பாதுகாக்கவேண்டும். மனத உடலுக்கும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் இடையையான தொடர்பானது, கல்வியில் மிக முக்கியமான ஒரு பிரிவாகும். பள்ளியிலும் குடும்பத்திலும் இது சி றப்பு கவனத்தைப் பெறவேண்டும். தங்கள் உடல் அமைப்பு பற்றியும், இயற்கை வாழ்வைக் கட்டுப்படுத்துகிற விதிகள் பற்றியும் அனைவருமே நன்றாக அறிந்திருக்க வேண்டும். தன் உடல் நலன் சம்பந்தப்பட்ட விதிகளை வேண்டுமென்றே அறியாமல் இருந்து, அதனால் அவற்றை மீறுகிறவன் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்கிறான். நல்ல உடல் ஆரோக்கியத்துடன், சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு சாதகமான நிலையில் அனைவரும் தங்களை வைக்க வேண்டும். தேவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிற ஒரு சிந்தையின் கட்டுப்பாட்டிற்குள் நம் பழக்கவழக் கங்களைக் கொண்டுவரவேண்டும்.COLTam 350.2

    அப்போஸ்தலனாகிய பவுல், “உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்க ளுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவை களாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள் ” என்று சொல்கிறார். 1கொரிந்தியர் 6:19,20.COLTam 351.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents