Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள் - Contents
 • Results
 • Related
 • Featured
No results found for: "".
 • Weighted Relevancy
 • Content Sequence
 • Relevancy
 • Earliest First
 • Latest First
  Larger font
  Smaller font
  Copy
  Print
  Contents

  22 - சொல்வதும் செய்வதும்!

  “ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து : மகனே நீ போய் இன்றைக்கு என் திராட்சத் தோட்டத்தில் வேலை செய் என்றான். அதற்கு அவன் : மாட்டேன் என்றான்; ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டு போனான். இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன் : போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போக வில்லை . இவ்விருவரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள் : மூத்தவன்தான் என்றார்கள்.” மத்தேயு 21:28-31.COLTam 271.1

  மலைப்பிரசங்கத்தின் போது பரலோகத்திலிருக்கிற என் பிதா வின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப் பானேயல்லாமல், என்னை நோக்கி : கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை” என்று கிறிஸ்து சொன்னார். மத் 7:21. வார்த்தைகளில் அல்ல, செயல்களில் தான் நேர்மையைச் சோதிக்க முடியும். கிறிஸ்து யாரிடமும், “மற்றவர்களைவிட நீங்கள் விசேஷமாகச் சொல்லப்போவது என்ன?” என்று கேட்கவில்லை. “நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன?’ என்று கேட்கிறார். மத்தேயு 5:47. நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடி யினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப் பீர்கள்” என்று கிறிஸ்து சொல்வதில் அர்த்தமிருக்கிறது. யோவான் 13:17. சொன்னபடி செய்யாவிட்டால், சொன்ன வார்த்தைகளால் எந்தப் பயனுமில்லை. இரண்டு குமாரர் குறித்த உவமை சொல்லிக் கொடுக்கிற பாடம் அதுதான்.COLTam 271.2

  கிறிஸ்து மரிப்பதற்கு முன்பு கடைசியாக எருசலேமிற்குச் சென் றிருந்தேபாது, இந்த உவமையைக்கூறினார். அங்கே தேவாலயத்தில் விற்பவர்களையும் வாங்குபவர்களையும் விரட்டியிருந்தார். தேவ வல்லமையோடு அவர் பேசின வார்த்தைகள் மக்களுடைய இரு தயங்களைத் தொட்டன . ஆச்சரியமும் திகைப்பும் அடைந்தவர்களாக , எவ்வித சாக்குப்போக்கோ மறுப்போ சொல்லாமல் அவர் கட்டளையிட்டபடி செய்தார்கள்.COLTam 272.1

  திகைப்பிலிருந்து மீண்ட பிறகு, தேவாலயத்திற்கு திரும்பிவந்த பிரதான ஆசாரியர்களும், மூப்பர்களும், வியாதியிலும் மரணத்தரு வாயிலிரும் இருந்தவர்களை கிறிஸ்து குணமாக்கினதைக் கண்டார்கள். அங்கே மக்கள் சந்தோஷமாகப் பேசிக்கொண்டதையும், துதித்துப்பாடினதையும் கேட்டார்கள். தேவாலயத்தில் தானே சரீர சுகம்பெற்றிருந்த சிறுவர்கள், குருத்தோலைகளை அசைத்து தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்று பாடிக்கொண்டிருந்தார்கள். அந்த மாபெரும் வைத்தியரை பாலகரும் கூட தங்களது மழலை மொழி யால் துதித்தனர். ஆனாலும் ஆசாரியர்களிடமும் மூப்பர்களிடமும் காணப்பட்ட தப்பெண்ணங்களையும் பொறாமையையும் போக்க இவையெல்லாம் போதுமானவையாக இல்லை.COLTam 272.2

  மறுநாளில், கிறிஸ்துதேவாலயத்தில் போதித்துக்கொண்டிருந்த போது பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அவரிடத்தில் வந்து, நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்கு கொடுத்தவர் யார்?’ என்று கேட்டார்கள்.COLTam 272.3

  பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் கிறிஸ்துவின் வல் லமை குறித்து ஆணித்தரமான ஆதாரங்களைப் பெற்றிருந்தார்கள். தேவாலயத்தை அவர் சுத்திகரித்தபோது, பரலோக அதிகாரம் அவரது முகத்தில் பளிச்சிட்டதைக் கண்டிருந்தார்கள். அதிகாரத் தோடு அவர் பேசியபோது, அவர்களால் எதிர்ப்பு தெரிவிக்க முடிய வில்லை. குணமாக்கும் அற்புதங்கள் தாமே அவர்களுடைய கேள்விகளுக்குப் பதிலளித்திருந்தன. தம் அதிகாரத்தில் சர்ச்சை எழுப்ப முடியாத அளவுக்கு ஆதாரத்தைக் கொடுத்திருந்தார். ஆனால் அவர்கள் ஆதாரத்தை விரும்பவில்லை. கிறிஸ்து தம்மை மேசியாவென்று ஆசாரியர்களும் அதிபதிகளும் விரும்பினார்கள்; அப்போதுதானே, அவருடைய வார்த்தைகளைத் திரித்துக்கூறி, அவருக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட முடியும். அவருடைய செல்வாக்கை அழித்து, அவரைக் கொல்ல விரும்பினார்கள்.COLTam 272.4

  தேவன் தம்மில் இருப்பதை அவர்கள் காணாவிட்டால் அல்லது தேவனுடைய குணத்தைதம்முடைய கிரியைகளில் காணா விட்டால், தம்மைக்கிறிஸ்துவென்று தாம் சொன்னாலும் கூட அவர்கள் நம்பமாட்டார்களெனகிறிஸ்து அறிந்திருந்தார். அவர்கள் எதிர் பார்த்த விஷயம் எதையும் பேசாமல், அவர்கள் மேலேயே குற்றத் தைச் சுமத்தி, பதிலளிக்கிறார்.COLTam 273.1

  “நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் இன்ன அதிகாரத் தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லு வேன். யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ ?” என்று கேட்டார்.COLTam 273.2

  ஆசாரியர்களும் அதிகாரிகளும் குழம்பிப்போனார்கள். “மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக் குப் பயப்படுகிறோம், எல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி, இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது அவர்: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.”COLTam 273.3

  “எங்களுக்குத் தெரியாது.” அவர்கள் பொய் சொன்னார்கள். தங்களது நிலைமையைப் புரிந்துகொண்ட ஆசாரியர்கள் தங்களைக் காப்பாற்றும்படி பொய் சொன்னார்கள். யோவான் ஸ்நானன் யாரைக் குறித்த சாட்சியை உடையவனாக வந்திருந்தானோ, அவருடைய அதிகாரத்தையே இப்போது கேள்வி கேட்டார்கள். அவரைக் காண்பித்து, ‘இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று சொல்லியிருந்தான். யோவான் 1:29. அவ ருக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். ஞானஸ்நானம் பெற்று, கிறிஸ்து ஜெபித்தபோது, வானங்கள் திறக்கப்பட்டது; தேவனுடைய ஆவியானவர் புறாவைப்போல வந்து அவர்மீது அமர்ந்தார். வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்று சொல்லிற்று. மத் 3:16,17.COLTam 273.4

  மேசியாவைக் குறித்த தீர்க்கதரிசனங்களை யோவான் சொல்லியிருந்தான், இயேசுவின் ஞானஸ்நானத்தில் நிகழ்ந்த காட்சி யைக் கண்டிருந்தார்கள்; அவையனைத்தும் நினைவில் நின்றாலும், யோவான் கொடுத்த ஞானஸ்நானம் தேவனால் உண்டாயிருந்த தென்று சொல்லத் துணியவில்லை. யோவானை ஒரு தீர்க்கதரிசி யென நம்பினார்கள்; அப்படியானால், நாசரேத்தின் இயேசுதான் தேவனுடைய குமாரன் என்று யோவான் ஸ்நானன் சாட்சியிட்டதை எப்படி மறுக்கமுடியும் ? யோவானை தீர்க்கதரிசியென மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள்; அதனால் தான் யோவான் கொடுத்த ஞானஸ்நானம் மனிதரால் உண்டாயிருந்ததென்று சொல்லமுடிய வில்லை . எனவே, “எங்களுக்குத் தெரியாது” என்றார்கள்.COLTam 274.1

  அதன்பிறகு, இரு குமாரரையும் ஒரு தகப்பனையும் குறித்த உவமையை கிறிஸ்து சொன்னார். அந்தத் தகப்பன் மூத்த குமாரனிடம், ” மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலை செய்” என்று சொன்னான். உடனே அந்தக் குமாரன் “மாட்டேன்” என்று சொல்லிவிட்டான். அவன் கீழ்ப்படியாமல் தவறான வழிகளில் சென்றான், தீய நண்பர்களுடன் சுற்றினான். பிற்பாடு அவன் மனந்திரும்பி, தகப்பன் சொன்னபடி செய்தான்.COLTam 274.2

  பின்பு தகப்பன் தன் இளைய மகனிடம், “மகனே, நீ போய் இன்றைக்கு என்திராட்சத்தோட்டத்தில் வேலை செய்” என்று அதே கட்டளையைக் கொடுத்தான். அவனோ ” போகிறேன் ஐயா” என்று சொல்லியும் போகவில்லை.COLTam 274.3

  இந்த உவமையில் அந்தத் தகப்பன் தேவனை அடையாளப் படுத்தினான், திராட்சத்தோட்டம் சபையைச் சுட்டிக்காட்டியது. இரு குமாரரும் இரண்டு வகையான மக்களைச் சுட்டிக்காட்டினார்கள். கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் ‘ மாட்டேன்” என்று சொன்ன குமா ரன், வெளிப்படையாகவே மீறுதலில் வாழ்கிற மக்களைச் சுட்டிக் காட்டினான். அவர்கள் பக்தியின் வேஷத்தைத் தரிப்பதில்லை; தேவனுடைய கட்டளை சுட்டிக்காட்டுகிற கட்டுப்பாடுகள், கீழ்ப் படிதல் எனும் நுகத்திற்குள் வரமுடியாதென வெளிப்படையாக மறுத்தார்கள். ஆனால் இவர்களில் பலர் பிற்பாடு மனந்திரும்பி, தேவனுடைய அழைப்பிற்குக் கீழ்ப்படிந்தார்கள்.” மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று யோவான் ஸ்நானன் சுவிசேஷத்தை அறிவித்தபோது, அவர்கள் மனந்திரும்பி, தங்கள் பாவங்களை அறிக்கை செய்தனர். மத்தேயு 3:2.COLTam 274.4

  “போகிறேன் ஐயா என்று சொல்லியும் போகாமலிருந்த குமாரன், பரிசேயர்களின் குணத்தைச் சுட்டிக்காட்டினான். இந்தக் குமாரனைப் போன்று யூதத் தலைவர்கள் மனந்திரும்பாமல், தன்னிறைவு மனப்பான்மையுடன் காணப்பட்டார்கள். யூத தேசமே பக்தியாக வாழ்வதுபோல வேடமிட்டிருந்தது. சீனாய் மலையில் தேவன் கட்டளையைக் கொடுத்தபோது, தாங்கள் கீழ்ப்படிவதாக மக்கள் அனைவருமே வாக்குப்பண்ணினார்கள். அவர்கள் “போகிறேன் ஐயா” என்று சொல்லியும் போகவில்லை. கிறிஸ்து நேராக அவர்களிடம் சென்று, பிரமாணத்தின் நியதிகளை அவர்களுக்கு விளக்கிச் சொன்ன போது, அவரைப் புறக்கணித்தார்கள். கிறிஸ்து தம்முடைய காலத்திலிருந்த யூதத் தலைவர்களுக்கு தமது அதிகாரம், தெய்வீகவல்லமை குறித்து முழுமையான ஆதாரத்தைக் கொடுத்திருந்தார். அது உண்மைதானென்று மனதில் பட்டாலும் கூட ஆதாரத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கீழ்ப்படிதலுக்கு வழிநடத்துகிற ஆவி அவர்களிடம் இல்லாததால், அவர்கள் அவிசு வாசத்திலேயே நிலைத்திந்ததை கிறிஸ்து அவர்களுக்குக் காட்டி னார்.’‘உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள் ... மனுஷருடைய கற்பனைகளை உபதேச ங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்” என்று அவர்களிடம் சொன்னார். மத்தேயு 15:6,9.COLTam 275.1

  கிறிஸ்துவுக்கு முன்பாகக் கூடியிருந்தவர்களில் வேதபாரகர்களும் பரிசேயர்களும், ஆசாரியர்களும் அதிபதிகளும் இருந்தார்கள். இரண்டு குமாரர்கள் குறித்த உவமையைச் சொன்ன பிறகு, அங்கிருந்தவர்களிடம், ‘இவ்விருவரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன்” என்று கேட்டார். பரிசேயர்கள் தங்களையே மறந்தவர்களாக, மூத்த வன்தான்” என்று பதில் சொன் னார்கள். தங்களுக்கு எதிராக தாங்களை தீர்ப்புச்சொன்னதை அறியாமல் அப்படிச் சொன்னார்கள். அதன்பிறகு அவர்களைக் கண்டித்து கிறிஸ்து பேசினார்: “ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும் நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை.என்றார்.COLTam 275.2

  யோவான் ஸ்நானன் சத்தியத்தைப் பிரசங்கித்தபோது, பாவிகள் உணர்த்தப்பட்டு, மனந்திரும்பினார்கள். எச்சரிப்பை ஏற்க மறுத்த சுயநீதிக்காரர்களைவிட பரலோக இராஜ்யத்திற்குள் பிர வேசிக்கிற தகுதியைப் பெற்றுவந்தார்கள். ஆயக்காரர்களும் வேசிகளும் அறியாமையில் இருந்தார்கள். ஆனால் இந்த கல்விமான்கள் சத்தியத்தின் வழியை அறிந்திருந்தும், தேவனுடைய பரதீசிற்கு வழிநடத்துகிற பாதையில் நடந்து செல்ல மறுத்தார்கள். ஜீவனுக் கேதுவான ஜீவவாசனையாக இருந்திருக்கவேண்டிய சாத்தியமானது மரணத்திற்கேதுவான மரணவாசனையாக அவர்களுக்கு மாறிவிட் டது . தங்களை பாவிகளென அருவருத்து அறிக்கையிட்டவர்கள், யோவானின் கையிலே ஞானஸ்நானம் பெற்றார்கள்; ஆனால் இந்தப் போதகர்களோமாய்மாலக்காரர்களாக இருந்தார்கள். அவர்களுடைய இருதயக்கடினம்தான் சத்தியத்தை ஏற்றுக்கொள் ளாதபடிக்கு அவர்களைத் தடுத்தது. தேவ ஆவியானவரின் உணர்த் துதலுக்கு எதிர்த்து நின்றார்கள். தேவனுடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படியவும் மறுத்தார்கள்.COLTam 276.1

  கிறிஸ்து அவர்களிடம், “நீங்கள் பரலோக ராஜ்யத்திற்குச் செல்லமுடியாது” என்று சொல்லவில்லை; மாறாக, அங்கே செல்ல முடியாதபடிக்கு அவர்களே தடையை உருவாக்கியதைக் காட்டி னார். அந்த யூதத் தலைவர்களுக்கு அப்போதும் வாசல் திறந்தே இருந்தது; அழைப்பு கொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. அவர்கள் உணர்வடைந்து, மனந்திரும்ப கிறிஸ்து ஏங்கினார்.COLTam 276.2

  இஸ்ரவேலின் ஆசாரியர்களும் மூப்பர்களும் மதச் சடங்கு களிலேயே காலங்கழித்தார்கள். வாழ்க்கையின் பிறவிஷயங்களோடு தொடர்புபடுத்தமுடியாத அளவுக்கு அவற்றை பரிசுத்தமான தாகக் கருதினார்கள். தாங்கள் முற்றிலும் பக்தியான வாழ்க் கையில் மூழ்கியிருப்பதாக நினைத்தார்கள். ஆனால் உலகத்தார் தங்களை பக்தியுள்ளவர்கள், அர்ப்பணிப்புமிக்கவர்கள் என்று எண்ணுவதற்கே சடங்குகளைச் செய்தார்கள். கீழ்ப்படிவதாகச் சொல்லிக்கொண்டே, தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள். எந்தசத்தியத்தைப் போதிப்பதாகச் சொல்லிக்கொண்டார்களோ அதன்படி அவர்கள் நடக்கவில்லை .COLTam 276.3

  மாபெரும் தீர்க்கதரிசிகளில் யோவான் ஸ்நானனும் ஒருவ னென்று கிறிஸ்து சொன்னார். மேலும், அவன் தேவனால் அனுப்பப்பட்ட தூதுவன் என்பதற்கு போதிய சான்றை அவர்கள் பெற்றிருந்ததையும் எடுத்துக்காட்டினார். வனாந்தரத்தில் பேசினவனுடைய வார்த்தைகளில் வல்லமை இருந்தது. சிறிதும் பயமின்றி பிரச ங்கித்தார்; ஆசாரியர்கள் மற்றும் அதிபதிகளுடைய பாவங்களைக் கண்டித்தார், பரலோக ராஜ்யத்திற்கேற்ற கிரியைகளைச் செய்யும் படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். தங்களுக்கு நியமிக்கப்பட்ட வேலையைச் செய்ய மறுத்ததால், பிதாவின் அதிகாரத்தை அவ மதித்த குற்றத்திற்கு அவர்கள் ஆளானதைச் சுட்டிக்காட்டினார். பாவத்துடன் சமரசம் செய்யவில்லை, அநேகர் தங்கள் அநீதியான வாழ்வை விட்டுத் திரும்பினார்கள்.COLTam 276.4

  யூதத்தலைவர்கள் தாங்கள் சொன்னபடி வாழ்ந்திருந்தால், யோவானின் சாட்சியை ஏற்றுக்கொண்டு, கிறிஸ்துதான் மேசியா வென அங்கீகரித்திருப்பார்கள்; மனந்திரும்புதலுக்கும் நீதிக்கும் ஏற்ற கனிகள் அவர்களிடம் காணப்படவில்லை . அவர்கள் வெறுத்து ஒதுக்கிய ஜனங்கள் தாமே, அவர்களுக்கு முன்பாக தேவ னுடைய ராஜ்யத்திற்குள் செல்கிற தகுதியைப் பெற்றுவந்தார்கள்.COLTam 277.1

  அந்த உவமையில் “போகிறேன் ஐயா” என்று சொன்ன குமாரன் கீழ்ப்படிகிற, உண்மையுள்ள மகன் போலக்காட்டிக்கொண்டான்; அவன் சொன்னது பொய் என்பதை காலம் வெளிப்படுத்தியது. தகப்பன்மேல் அவனுக்கு உண்மையான அன்பு இல்லை. அது போல பரிசேயர்களும் தங்களை பரிசுத்தவான்களென பெருமை யடித்தார்கள்; ஆனால் பரிசோதனையில் அது தவறென நிரூபணமான து. தங்களுடைய நலனுக்காகக் கடைபிடிக்க வேண்டியிருந்த சட்டங்களை, மிகக்கடுமையான சட்டங்களாக மாற்றியிருந்தார்கள். ஆனால் அவர்கள் கீழ்ப்படிய வேண்டியதிருந்த விஷயங்களில், தேவனுடைய கட்டளைகளின் மதிப்பை வஞ்சகத் தந்திரங்களால் குறைத்துக்காட்டினார்கள். அவர்களைக்குறித்து கிறிஸ்து,“அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்” என்று சொன்னார். மத்தேயு 23:3. தேவன் மேலும் மனிதன் மேலும் அவர்களுக்கு மெய்யான அன்பிருக்கவில்லை. உலகத்தை ஆசீர்வதிக் கும்படி, தமது உடன் ஊழியர்களாகதேவன் அவர்களை அழைத்தார். அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார்களே தவிர, கீழ்ப்படிய மறுத்தார்கள். சுயத்தின் மேல் நம்பிக்கை வைத்தார்கள், தங்களுடைய நற்குணங்களைக் குறித்து பெருமை பாராட்டினார் கள்; தேவனுடைய கட்டளைகளுக்கு எதிர்த்து நின்றார்கள். தேவன் நியமித்திருந்த பணியைச் செய்ய மறுத்தார்கள். அவர்களுடைய மீறுதலினிமித்தம் கீழ்ப்படியாத அந்தத் தேசத்தாரிடமிருந்து தேவன் விலகிச் செல்லவிருந்தார்.COLTam 277.2

  சுயநீதி மெய்யான நீதியல்ல ; சுயநீதியில் பற்றுள்ளவர்கள் கொடும் வஞ்சனையின் மோசமான விளைவுகளைச் சந்திக்கும்படி விடப்படுகிறார்கள். இன்று அநேகர் தேவனுடைய கட்டளைகளுக் குக் கீழ்ப்படிவதாகச் சொல்கிறார்கள். ஆனால் மற்றவர்களுக்கும் பாய்ந்தோடக்கூடிய தேவ அன்பு அவர்களது இதயங்களில் காணப் படுவதில்லை. உலக இரட்சிப்புக்காக தம்மோடு சேர்ந்து பணியாற்றும்படி அவர்களை அழைக்கிறார். ஆனால் அவர்களோ “போகிறேன் ஐயா” என்று சொல்வதோடு சரி. அவர்கள் போகிறதில்லை. தேவ பணியைச் செய்பவர்களோடு ஒத்துழைப்பதில்லை; அவர்கள் சோம்பேறிகள். உண்மையற்ற குமாரனைப்போல தேவனிடம் பொய் வாக்குறுதிகளைக் கொடுக்கிறார்கள். சபையின் பரிசுத்த உடன்படிக்கைக்குக் கட்டுப்பட்டு, தேவவார்த்தையை அங் கீகரித்து, அதற்குக் கீழ்ப்படிவதாகவும், தேவபணிக்கு தங்களை ஒப்படைப்பதாகவும் வாக்குப்பண்ணியும் அவ்வாறு செய்வதில்லை. தங்களை தேவனுடைய குமாரர்களெனச்சொல்லிக்கொண்டாலும், தங்கள் வாழ்க்கையிலும் குணத்திலும் அந்த உறவுக்கு இட மளிப்பதில்லை. தேவசித்தத்திற்கு தங்களை ஒப்புக்கொடுப்பதில்லை. பொய் வாழ்க்கை வாழ்கிறார்கள்.COLTam 278.1

  தியாகம் அவசியப்படாத விஷயங்களில், கீழ்ப்படிதலின் வாக்குறுதிக்குக் கீழ்ப்படிவது போலக் காட்டுகிறார்கள். சுயத்தை மறுத்து, சுயத்தைத் தியாகம் செய்யவேண்டிய விஷயங்களில், சிலு வையைச் சுமக்கவேண்டிய நிலையில் பின்வாங்கி விடுகிறார்கள். இப்படியாக கடமையுணர்வு குறைகிறது, தேவனுடைய கட்டளைகளை தெரிந்தே மீறுகிற வழக்கமாகிறது. தேவ வார்த்தைகளை காதுகள் கேட்டாலும் கூட, ஆவிக்குரிய பகுத்தறிவு திறன்களை இழந்துவிடுகிறார்கள். இருதயம் கடினப்பட்டு, மனசாட்சி மழுங்கி விடுகிறது.COLTam 278.2

  கிறிஸ்துவின் மேல் வெளிப்படையாக வெறுப்பைக் காட்ட வில்லை என்பதற்காக, அவருக்கு நீங்கள் சேவை செய்வதாக நினைக்காதீர்கள். நேரமாக இருந்தாலும், அல்லது வசதிகளாக இருந்தாலும், அல்லது அவர் நம்மை நம்பி ஒப்படைத்துள்ள எந்த ஈவாக இருந்தாலும், தேவன் தம்முடைய சேவைக்காகத் தந்திருப்ப வற்றைப் பயன்படுத்தாவிட்டால், அவருக்கு எதிராகச் செயல்படு கிறோம்.COLTam 278.3

  கிறிஸ்தவர்களெனச் சொல்பவர்கள், சோம்பேறிகளாக சலிப் புடனும்களைப்புடனும் காணப்பட்டால், சாத்தான் தன்னுடைய படைகளை வலுப்படுத்தவும், ஆத்துமாக்களை தன் பக்கம் இழுக் கவும் அவர்களைப் பயன்படுத்துவான் . கிறிஸ்துவுக்காக எதுவுமே செய்யாமல் அவருடைய பக்கத்தில் இருப்பதாக நினைக்கிற அநே கர், சத்துருவுக்கு இடம்பிடித்துக் கொடுக்கவும், அனுகூலங்களை ஏற்படுத்தவும் உதவுகிறார்கள். எஜமானுக்காக கருத்தோடு வேலை செய்யாததால், கடமைகளை நிறைவேற்றாமலும், சொன்னபடி செய்யாமலும் இருப்பதால், கிறிஸ்துவுக்காக ஆயத்தமாக்கப்பட் டிருக்கவேண்டிய ஆத்துமாக்களை சாத்தான் கட்டுப்படுத்த அனு மதித்துவிடுகிறார்கள்.COLTam 279.1

  எதுவுமே செய்யாமல், சோம்பேறிகளாக இருந்துகொண்டு இரட்சிக்கப்படவே முடியாது. மெய்யான மனமாற்றம் பெற்ற ஒரு வர் பயனற்றவராக, ஆற்றலற்றவராக வாழ வாய்ப்பே இல்லை . கால் தடுக்கியாவது பரலோகம் சென்றுவிடலாம் என்று நினைக்கவே கூடாது. சோம்பேறி அதில் பிரவேசிக்கவே இயலாது. பரலோகத்திற் குள் செல்ல நாம் பிரயாசப்படாவிட்டால், அதுசம்பந்தமான கட்ட ளைகளைக் கற்றுக்கொள்ள ஊக்கமாக முயலாவிட்டால், அதில் பங்குபெறுகிற தகுதியைப் பெறமுடியாது. பூமியில் தேவனோடு ஒத்துழைக்க மறுக்கிறவர்கள், பரலோகத்திலும் அவரோடு ஒத்து ழைக்க மாட்டார்கள். அவர்களை பரலோகத்திற்கு அழைத்துச்செல்வது பாதுகாப்பாக இருக்காது.COLTam 279.2

  தேவவார்த்தையை அறிந்தும் அதற்குக் கீழ்ப்படிய மறுப்பவர்களைக் காட்டிலும், ஆயக்காரர்களுக்கும் பாவிகளுக்கும் அதிக நம்பிக்கையுண்டு. தன்னுடைய பாவத்தை மறைக்காமல் தன்னை பாவியென்று கண்டு கொள்கிறவனும், தேவனுக்கு முன்பாக தன் னுடைய ஆவியும், ஆத்துமாயும், சரீரமும் சீர்கெட்ட நிலையில் இருப்பதை உணர்கிறவனும், பரலோக ராஜ்யத்தை விட்டு தான் நித்தியமாகப் பிரிந்துவிடாதபடிக்கு எச்சரிக்கையோடிருப்பான். அவன் தன்னுடைய பாவநிலையை உணர்ந்து,’‘என்னிடத்தில் வரு கிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை’ என்று சொன்ன மாபெரும் வைத்தியர் தன்னைக் குணமாக்க வேண்டுமென்று விரும்புகிறான். யோவான் 6:37. இத்தகைய ஆத்துமாக்களையே தமது திராட்சத்தோட்டத்தில் பணியாற்ற கர்த்தர் பயன்படுத்த முடியும்.COLTam 279.3

  சற்று நேரம் தகப்பனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் இருந்த குமாரனை கிறிஸ்து குற்றவாளியென்று சொல்லவில்லை; அவனைப் பாராட்டவுமில்லை. முதல் குமாரனைப்போல கீழ்ப் படிய மறுக்கிற மக்களை அத்தகைய செயலுக்காகப் பாராட்டமுடி யாது. அவர்கள் வெளிப்படைத்தன்மையை நற்குணமாகக்கருதமுடி யாது. சத்தியத்தாலும் பரிசுத்தத்தாலும் பரிசுத்தமாக்கப்படுபவர், கிறிஸ்துவைக் குறித்து தைரியமாகச் சாட்சி பகருவார். ஆனால் பாவி வெளிப்படையாகப் பேசினாலுமே, அது நிந்தனையான, எதிர்த்துப்பேசுகிற பேச்சாக இருக்கும்; அது தேவ தூஷணத்தில் முடியும். ஒருவன்மாய்மாலக்காரனாக இல்லாததால், அவன் பாவியில்லை என்று சொல்லமுடியாது . பரிசுத்த ஆவியானவர் இரு தயங்களில் வேண்டும் போது, அந்த வேண்டுதல்களுக்கு தாமதிக் காமல் இணங்குவதில் தான் பாதுகாப்பு உள்ளது. ‘நீ போய் இன் றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலை செய்” என்கிற அழைப்பு கொடுக்கப்படும் போது, அந்த அழைப்பை மறுக்கவேண்டாம். ‘இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.” எபிரெயர் 4:7. கீழ்ப் படியாமல் தாமதிப்பது பாதுகாப்பல்ல. மீண்டும் அந்த அழைப்பு கிடைக்காமலேயே போகலாம்.COLTam 280.1

  சிலகாலமாகவே பேணிவளர்த்துவருகிற ஒரு பாவத்தை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிவது எளிதென யாரும் தங்களை வஞ்சிக்கவேண்டாம். அது முடியாது. பேணிவளர்க்கிற பாவம் குணத்தைப் பெலவீனப்படுத்துகிறது; பாவவழக்கத்தை வலுவாக்குகிறது; அதனால் உடற்திறனும் மனத்திறனும் சரீரத்திறனும் குறைகிறது. செய்த தவறிலிருந்து மனந்திருந்தி, சரியான பாதைகளில் செல்லத் தீர்மானிக்கலாம்; ஆனால் அந்தப் பாவத்தில் பரிச்சயமாகி, அதற்கேற்றாப் போல சிந்தையை வளைத்திருந்தால், நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வித்தியாசத்தைப் பகுத்தறிவதை அது கடினமாக்கிவிடும். உங்களுடைய தவறான பழக்கங்கள் மூலம், ச ராத்தான் உங்களை மீண்டும் மீண்டும் தாக்குவான்.COLTam 280.2

  “நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலை செய்” என்கிற கட்டளை நேர்மைக்கான ஒரு சோதனை ; ஒவ்வோர் ஆத்துமாவுக்கும் இச்சோதனை கொடுக்கப்படுகிறது. ஒருவர் தான் சொல்கிறபடி செய்கிறாரா? தான் பெற்ற அறிவைக் கொண்டு செய்லபட அழைக்கப்படுகிறவர், திராட்சத்தோட்டதின் எஜமானுக் காக உண்மையாக, தன்னலமின்றி செயல்படுகிறாரா?COLTam 280.3

  எப்படிப்பட்ட திட்டத்தோடு நாம் செயல்படவேண்டுமென அபோஸ்தலனாகிய பேதுரு வலியுறுத்துகிறார்: “தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது. தம் முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத் தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவ பக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத்தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும் பொருட்டு, மகாமேன்மையும் அருமையுமானவாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அருளப்பட்டிருக்கிறது.COLTam 281.1

  “இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சை யடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தி யையும், தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதரசிநே கத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.” 2பேதுரு 1:5-7.COLTam 281.2

  உங்கள் ஆத்துமாவாகிய திராட்சத்தோட்டத்தை உண்மை யோடு பேணிப்பாதுகாத்தால், தேவன் உங்களை தமது உடன் வேலையாளாக ஏற்றுக்கொள்வார். உங்களுக்காக மட்டுமே பிரயா சப்படாமல் பிறருக்காகவும் பிரயாசப்படுவீர்கள். கிறிஸ்துவானவர் சபையை திராட்சத்தோட்டத்துடன் ஒப்பிடுவதால், சபை அங்கத் தினர்கள் மேல் மட்டுமே பரிவுகாட்டி, பிரயாசப்படும்படிச் சொல்ல வில்லை. கர்த்தரின் திராட்சத்தோட்டத்தை விரிவுப்படுத்தவேண்டும். பூமியின் சகல பகுதிகளுக்கும் அது பரவிச்செல்ல விரும்பு கிறார். தேவனிடமிருந்து கிருபையையும், அறிவுரைகளையும் பெற்று, மதிப்புமிக்க அந்தச் செடிகளை பாதுகாப்பது பற்றி பிறருக் குச் சொல்லிக்கொடுக்கவேண்டும். அப்படித்தான் கர்த்தருடைய திராட்சத்தோட்டத்தை விரிவுப்படுத்தமுடியும். அன்பு, விசுவாசம், பொறுமைக்கான ஆதாரத்தை தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார். மீறுதலால் ஆதாமும் ஏவாளும் இழந்த ஏதேன் வீடாகிய தேவனுடைய பரதீசில் நாம் பிரவேசிக்கும்படிக்கு, நாம் பெற்றுள்ள ஒவ்வொரு ஆவிக்குரிய சிலாக்கியத்தையும் பயன்படுத்தி, பூமியிலுள்ள தம்முடைய திராட்சத்தோட்டத்தின் திறம்மிக்க ஊழியர்களாக மாறு கிறோமா என்று காண ஆசைப்படுகிறார்.COLTam 281.3

  தேவன் தம்முடைய மக்களுக்கு ஒரு தகப்பனாக இருக்கிறார்; உண்மையோடு பணியாற்றும்படி ஒரு அப்பாவாக கோரிக்கை வைக்கிறார். கிறிஸ்துவின் வாழ்க்கையை சிந்தித்துப்பாருங்கள். மனுகுலத்தின் தலைவனாக நின்று, தம்முடைய பிதாவைச் சேவிக் கிறார்; ஒவ்வொரு மகனும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய லாம் என்பதற்கு அவர் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். கிறிஸ்து வானவர் தேவனிடம் காட்டிய அதே கீழ்ப்படிதலை, இன்று மனிதர் களிடம் எதிர்பார்க்கிறார். அன்போடும் விருப்பத்தோடும் சுதந்தரத் தோடும் அவர் தம் பிதாவைச் சேவித்தார். ‘என் தேவனே, உமக் குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிர மாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது” என்று சொன்னார். சங் 40:8. கிறிஸ்து தாம் எதை நிறைவேற்ற வந்தாரோ அதை நிறை வேற்றும் படிக்கு எந்த ஒரு தியாகத்தையும் பெரிதாகவோ எந்த ஒரு உழைப்பையும் கடினமாகவோகருதவில்லை. என் பிதாவுக்கடுத்த வைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா?” என்று தம் பன்னிரண்டாம் வயதில் தானே சொன்னார். லூக்கா 2:49. அழைப்புக்குச் செவிகொடுத்து, பணியை ஏற்றுக்கொண்டார். “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது” என்றார். யோவான் 4:34.COLTam 282.1

  இவ்வாறு, நாமும் தேவனுக்கு ஊழியஞ்செய்யவேண்டும். உயர்தரகீழ்ப்படிதலுடன் செயல்படுகிறவனே சேவை செய்கிறவன். தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாக மாற விரும்புகிற வர்கள், தேவனோடும்கிறிஸ்துவோடும் பரலோகத்தூதர்களோடும் சேர்ந்து வேலை செய்யவேண்டும். ஒவ்வோர் ஆத்துமாவிற்குமான சோதனை இது. தமக்கு உண்மையோடு சேவை செய்பவர்களைக் குறித்து,’‘என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என் னுடையவர்களாயிருப்பார்கள். ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறது போல நான் அவர்களைக் கடாட்சிப்பேன் என்று ஆண்டவர் சொல்கிறார்.” மல்கியா 3:17. தேவன் தம்முடைய முன்யோசனைகளின்படி செயல்படுவ திலுள்ள முக்கிய நோக்கம் என்னவென்றால், மனிதர்களைச் சே பாதித்து, அவர்களுடைய குணம் மேம்படுவதற்கான வாய்ப்பை வழங்குவதுதான். அவர்கள் தம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப் படிகிறார்களா இல்லையை என்று இவ்வாறுதான் அவர் சோதித் தறிகிறார். நற்கிரியைகளால் தேவ அன்பை விலைக்கு வாங்க முடியாது. ஆனால் அந்த அன்பு நம்மிடத்தில் இருப்பதை நம் நற் கிரியைகள் வெளிப்படுத்துகின்றன. நம்முடைய சித்தத்தை நாம தேவனிடம் அர்ப்பணித்தால், அவருடைய அன்பைச் சம் பாதிக் கும்படி நாம் கிரியை செய்யமாட்டோம். அவருடைய அன்பை ஓர் இலவச ஈவாக ஆத்துமாவில் ஏற்றுக்கொள்வோம்; பிறகு அவர் மேலான அன்பினால் அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படி வதில் பிரியப்படுவோம்.COLTam 282.2

  இரண்டுவகையான மக்கள் இன்று உலகத்தில் இருக்கிறார்கள்; நியாயத்தீர்ப்பிலும் இரண்டு வகையான மக்கள் காணப்படுவார்கள்; தேவகட்டளைகளுக்குக் கீழ்ப்படியாதவர்கள் - அவற்றிற்குக் கீழ்ப்படுகிறவர்கள். நாம் உண்மையுள்ளவர்களா அல்லது உண்மையற்றவர்களா என்பதற்கு கிறிஸ்து வைக்கிற சோதனை இது தான் : ‘நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள் .... என் கற்பனைகளைப் பெற்றுக் கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார். என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப் பின பிதாவினுடையதாயிருக்கிறது.” “நான் என் பிதாவின் கற் பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறது போல, நீங்களும் என்கற்பனைகளைக்கைக் கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.”யோவான் 14:15-24. யோவான் 15:10.COLTam 283.1

  Larger font
  Smaller font
  Copy
  Print
  Contents