Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    16 - “காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்”

    தம்மை விட்டுப் பிரிந்து செல்கிறவர்கள் மேல் தேவன் எவ்வளவு பரிவாக அன்பு காட்டுகிறார் என்பதை காணாமற்போன ஆடு, காணாமற்போன வெள்ளிக்காசு, காணாமற் போன மகன் குறித்த உவமைகள் தெள்ளத்தெளிவாகக் கூறுகின்றன. அவர்கள் தேவனைவிட்டுப் பிரிந்து சென்றாலும், அந்தப் பரிதாப நிலையிலேயே அவர்களை அவர் விடவில்லை . தந்திரமிக்க எதிரியின் சோதனைகளுக்கு ஆளாகக்கூடிய அனைவர்மேலும் அவர் முற்றிலும் இரக்கமும், பரிவும் உள்ளவராக இருக்கிறார்.COLTam 198.1

    பிதாவின் அன்பை முன்பு ருசித்திருந்தும், சோதனைக்காரன் தன் விருப்பப்படி தங்களைச் சிறைப்படுத்த அனுமதித்தவர்களை ஆண்டவர் எவ்வாறு அணுகுகிறார் என்பதை கெட்ட குமாரன் உவமை நமக்கு வெளிப்படுத்துகிறது.COLTam 198.2

    “ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர் களில் இளையவன் தகப்பனை நோக்கி : தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தர வேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத்தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான். சில நாளைக்குப்பின்பு, இளைய மகன் எல்லாவற்றையும் சேர்த்துக் கொண்டு, தூர தேசத்துக்குப் புறப்பட்டுப்போனான்.COLTam 198.3

    வீட்டில் அப்பா விதித்த கட்டுப்பாடுகள் அந்த இளைய மகனுக்கு சலிப்பூட்டின . தன்னுடைய சுதந்தரம் அடக்கப்படுவதாக நினைத் தான். தன் அப்பாவின் அன்பையும், அக்கறையையும் அவன் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை ; தன் மனம் போன போக்கில் செல்லத் தீர்மானித்தான்.COLTam 199.1

    தன் தகப்பனுக்குச் செய்யவேண்டிய கடமைகளை அந்த வாலிபன் எண்ணவில்லை; நன்றியுள்ளவனாகவும் இல்லை; ஆனாலும் அவருடைய பிள்ளை என்பதால் உரிமைப்படி அவருடைய சொத்தில் பங்கு கேட்கிறான். அப்பா மரித்த பிறகுதான் அந்தச் சொத்துக்கள் அவனைச் சேரும்; ஆனால் உடனடியாக அதைப் பெற விரும்புகிறான். தற்சமயம் கிடைக்கிற சந்தோஷம் தான் பெரிதாக இருந்த்து ; எதிர்காலம் பற்றி கவலையே இல்லை.COLTam 199.2

    பூர்வீகச் சொத்தைப் பெற்றுக்கொண்டு தன் தகப்பன் வீட்டைவிட்டு தூரதேசத்துக்கு” செல்கிறான். அளவுக்கு மிஞ்சி பணம், விருப்பப்படி வாழ்வதற்கான சுதந்தரம், தான் விரும்பியது கிடைத்து விட்டதாக தன்னையே வஞ்சித்துக் கொள்கிறான். “இதைச் செய்யாதே, இது உனக்கு தீங்காக முடியும்; அல்லது, இதைச் செய், இதுதான் சரி” என்று அவனிடம் சொல்வதற்கு எதுவுமே இல்லை. தீய நண்பர்கள் அவனை மேலும் மேலும் பாவத்திற்குள் ஆழ்த்துகின்றனர்; துன்மார்க்கமாய் ஜீவனம் பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.”COLTam 199.3

    “தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராக ” சிலர் இருப்பதாக வேதாகமம் சொல்கிறது. ரோமர் 1:22. இந்த உவமையில் வரும் வாலிபனின் வாழ்க்கையும் அப்படித்தான். சுயநலத்தோடு தன் அப்பாவிடமிருந்து பெற்ற சொத்தை, வேசிகளிடத்தில் அழித்துப்போட்டான். பொக்கிஷம் போன்ற வாலிபப் பருவம் சீரழிந்தது.COLTam 199.4

    வாழ்வின் பொன்னான வருடங்களும், அறிவுத்திறனும், வாலிபத்தின் உயர்வான கனவுகளும், ஆவிக்குரிய உத்வேகங்களும் இச்சை எனும் அக்கினியில் பொஷிங்கின.COLTam 199.5

    கொடிய பஞ்சமுண்டாகிறது; உணவுக்கு வழியில்லை ; அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். இவனை அவன் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். ஒரு யூதனைப் பொறுத்தவரை இது மிகவும் இழிவான, கீழ்த்தரமான வேலையாகும். தனக்கு விடுதலை கிடைத்ததாக பெருமைப்பட்ட வாலிபன் இப்போது அடிமைப்பட்ட நிலைக்குத் தள்ளப்படுகிறான். மிகக்கொடிய அடிமைத்தனம்; அதாவது, “தன் பாவக்கயிறுகளால் கட்டப்பட் டான்.” நீதி 5:22. தன்னை அழகுப்படுத்தின பளபளப்பான, மினு மினுப்பான அணிகலன்களை இழந்தான், இப்போது அவன் கட்டுண்டிருந்த ச ங்கிலி பாரமாக இருந்தது. பன்றிகளைத் தவிர தன்னுடன் யாருமில்லாத, பஞ்சம் நிலவிய அந்த இடத்தில் உட்கார்ந்து, பன்றிகள்தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான். அவன் வசதியாக இருந்த சமயங்களில் அவனோடேயே சுற்றி வந்து, அவனுடைய செலவில் புசித்து, குடித்த அவனுடைய ஆண்நண்பர்கள் யாரும் இப்போது அவனோடு இல்லை. அவனுடைய கட்டுக்கடங்காத மகிழ்ச்சி எங்கே போனது? மனச் சாட்சியை மழுக்கி, உணர்வுகளை மரக்கச்செய்து தான் சந்தோஷமாக இருப்பதாக நினைத் துக்கொண்டான்; இப்போது பணமெல்லாம் செலவழிந்துவிட்டது, பசி அடங்கவில்லை, பெருமை போனது, ஒழுக்கநிலை குன்றிப்போனது, அவனது சித்தம் பலவீனப்பட்டு, நம்பிக்கைக் குத் தகுதியற்று போனது, மேலான உணர்வுகளெல்லாம் மறைந்தன; மனிதரிலேயே மிகவும் நிர்ப்பந்தமான நிலைக்குத் தள்ளப் பட்டிருந்தான்.COLTam 199.6

    ஒரு பாவியின் நிலை எவ்வளவு அருமையாக இங்கு சித்தரிக் கப்படுகிறது! தேவனுடைய அன்பின் ஆசீர்வாதங்கள் அவனைச் சூழ்ந்திருந்தாலும், பாவியானவன் சிற்றின்பத்திலும் பாவ ஆசை யிலும் திளைத்திருந்தால், தேவனைவிட்டுப் பிரிவதைவிட வேறு எதையும் அதிகமாக விரும்பமாட்டான். நன்றி கெட்ட அந்தக் குமாரனைப்போல, தேவனுடைய நன்மைகளைப் பெறுவது தன் உரிமையென சொந்தங்கொண்டாடுகிறான். எல்லாரையும் போல தனக்கும் கிடைத்ததாக நினைக்கிறான்; திரும்ப நண்றியுணர்வைக் காட்டுவதுமில்லை, அன்பின் சேவையைச் செய்வது மில்லை. இருப்பிடம் தேடி கர்த்தருடைய பிரசன்னத்தை விட்டு புறப்பட்ட காயீனைப்போல, ‘தூரதேசத்தில் அலைந்து திரிந்த கெட்ட குமாரனைப் போல, பாவிகள் தேவனை மறந்திருப்பதில் மகிழ்ச்சி யைத் தேடுகிறார்கள். ரோமர் 1:28.COLTam 200.1

    சுயத்தைமையமாகக் கொண்ட வாழ்க்கை பார்ப்பதற்கு எப்படியும் காட்சியளிக்கட்டும்; ஆனால் அது வீணானதே. தேவனை விட்டுப் பிரிந்து வாழ நினைக்கிற எவரும் தன் ஆஸ்திகளைச் செலவழித்துப் போடுகிறார். பொன்னான வருடங்களை வீணடிக்கிறார், மன - இருதய - ஆத்தும் ஆற்றல்களை வீணடிக்கிறார், நித்திய வாழ்க்கையை முற்றிலும் இழக்கும்படி செயல்படுகிறார். சுயத்தைச் சேவிப்பதற்காக தேவனை விட்டுப் பிரிந்து போகிறவன், இவ்வுலகிற்கு அடிமையாகிறான். தூதர்களோடு ஐக்கியம் கொள்வதற்காக தேவன் சிருஷ்டித்த சிந்தையானது பூமிக்கடுத்த, மிருகத்தனமான சேவை செய்யு மளவிற்குச் சீர்கெடுகிறது. சுயத்தைச் சேவிக்கிற போக்கின் முடிவு இதுதான்.COLTam 201.1

    இப்படிப்பட்ட வாழ்க்கையை நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால், அப்பமல்லாத ஒன்றிற்காக பணம் செலவழிக்கிறீர்கள், திருப்தி தராத ஒன்றிற்காகப் பிரயாசப்படுகிறீர்கள். நீங்கள் சீர்கெட்டுப் போனதை உணர்கிற சமயம் வரும். தூரதேசத்திலே தனிமையில் துக்கத்தோடு இருக்கும் போது, ‘நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்திலிருந்து யார் என்னை விடுதலையாக்குவார்?” என்று நம்பிக்கையிழந்து கதறுவீர்கள். ரோமர் 7:24. தீர்க்கதரிசியின் பின்வரும் வார்த்தைகள் உலகம் முழுவதிலும் காணப்படு கிற ஓர் உண்மையாகும் : “மனுஷன் மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமான தைத் தன் புயபலமாக் கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லு கிறார். அவன் அந்தரவெளியில் கறளையாய்ப் போன செடியைப் போலிருந்து, நன்மை வருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர் நிலத்திலும் தங்குவான்.’” எரேமியா 17:5,6.தேவன் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.” மத்தேயு 5:45. ஆனால் சூரிய ஒளியையும் மழையையும் பெறாத படி, தங்களை அடைத்துக்கொள்கிற அதிகாரம் மனிதர்களுக்கு உள்ளது. எனவே நீதியின் சூரியன் உதிக்கும் போது, கிருபையின் மாரி அனைவர்மேலும் இலவசமாகப் பொழியும் போது, தேவனை விட்டு நாம் பிரிந்திருப்போமானால், வனாந்தரத்தில் வறட்சியான இடங்களில் குடியிருப்பது போன்ற நிலை ஏற்படும்.COLTam 201.2

    யாராவது தம்மை விட்டுப் பிரிந்து செல்லத் தீர்மானித்தால், தேவன் அன்போடு அவனுக்காக ஏங்குகிறார்; அவனை மீண்டும் அப்பாவின் வீட்டிற்கு அழைத்துவருவதற்கான செல்வாக்குகளை உருவாக்குகிறார். கெட்டகுமாரன் தன் நிர்ப்பந்தமான நிலையில் புத்தி தெளிந்தான். அவனைக் கட்டியிருந்த சாத்தானுடைய வஞ்சக வல்லமை உடைக்கப்பட்டது. தன்னுடைய மூடத்தனமே தன்னுடைய உபத்திரவத்திற்கு காரணமென்பதைக் கண்டு கொண்டான்; “என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்கு பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்னிடத்திற்குப் போவேன்” என்று சொன்னான். கெட்டகுமாரன் இக்கட்டான நிலையில் இருந்தாலும், தன்னுடைய அப்பாவின் அன்பை உணர்ந்த போது, அவனுக்குள் நம்பிக்கை வந்தது. அந்த அன்புதான் அவனை வீட்டுக்குச் செல்லவைத்தது. அதுபோல, தேவன் அன்பாக இருக்கிறார் என்கிற நிச்சயம்தான் தேவனிடம் திரும்பிச் செல்வதற்கு பாவியை நெருக்கி ஏவுகிறது. “தேவதயவு நீ குணப்படும் படி உன்னை ஏவுகிறது.’” ரோமர் 2:4. தேவன் தம் அன்பால் காட்டும் இரக்கமும் மனதுருக்கமும் பொற்சங்கிலி போல, அழிந்துபோகிற நிலையில் இருக்கிற ஒவ்வோர் ஆத்துமா வைச் சுற்றிலும் வைக்கப்பட்டுள்ளது. “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்கிறேன்” என்று ஆண்டவர் சொல்கிறார். எரேமியா 31:3.COLTam 202.1

    தன்னுடைய குற்றத்தை அறிக்கையிட அந்தக் குமாரன் தீர்மானிக்கிறான். தன் தகப்பனிடத்திற்குப்போய் “பரத்துக்கு விரோத மாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு, நான் பாத்திர னல்ல” என்று சொல்ல நினைக்கிறான். தன்னுடைய அப்பாவின் அன்பை தான் கொஞ்சங்கூட உணரவில்லை என்பதையும் காட்டுவதற்கு, “உமது கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் ” என்று சொல்ல நினைக்கிறான்.COLTam 202.2

    அந்த வாலிபன், பன்றிக்கூட்டத்தையும் தவிட்டையும் விட்டு எழுந்து, வீட்டை நோக்கிச் செல்கிறான். நலிந்த உடல் நடுங்குகிறது; பசியால் மயக்கம் வருகிறது; எதிர்பார்ப்போடு நடக்கிறான். கந்தையான நிலையை மூடி மறைக்க ஒன்றும் இல்லை; ஆனால் அவனுடைய இக்கட்டான நிலை பெருமையை அடக்கியிருந்தது, முன்பு ஒரு மகனாக வளர்ந்த இடத்தில் ஒரு கூலிக்காரனாக வேலை கேட்டு கெஞ்ச விரைகிறான்.COLTam 202.3

    கவலையற்ற, புத்தியற்ற அந்த வாலிபன், அப்பாவிடமிருந்து பிரிந்து வாசலைவிட்டு வெளியேறியபோது, அப்பாவின் இரு தயம் எவ்வளவுக்கு வலித்திருக்கும், ஏங்கியிருக்குமென அவன் கொஞ்சமும் யோசிக்கவில்லை. துன்மார்க்கரான தன் தோழர்களோடு விருந்துண்டு, ஆடிப்பாடியபோது, தன்னுடைய குடும் பத்தின் மேல் எவ்வளவுக்கு களங்கம் ஏற்பட்டிருக்குமென கொஞ்சமும் யோசிக்கவில்லை. இப்போதுகளைப்போடும் வேதனை யோடும் வீட்டை நோக்கி நடந்தான்; அவனுடைய வருகைக்காக ஒருவர் ஏங்கிக்கொண்டிருந்ததை அவன் அறியவில்லை. ஆனால், அவன் ‘தூரத்தில் வரும்போதே அப்பா அவனை இனங்கண்டு கொள்கிறார். அன்பு கனப்பொழுதில் இனங்கண்டு கொள்ளும். பலவருட பாவ்வாழ்க்கை அவனைச் சிதைத்திருந்தாலும் கூட, அது அப்பாவின் கண்களுக்கு மகனை மறைக்க முடியவில்லை. அவர் மனதுருகிஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு ” நீண்ட நேரமாக அவனை விடாமல், கனிவோடு அணைத்துக் கொள்கிறார்.COLTam 203.1

    கந்தை கோலமாக, பெருந்துயரத்தில் இருந்த தன் மகனை யாரும் ஏளனமாகப் பார்க்க அப்பா அனுமதிக்கவில்லை. தன் தோள்களில் கிடந்த அகலமான, விலையுயர்ந்த மேலாடையை எடுத்து, மெலிந்து போயிருந்த தன் மகனைச் சுற்றிலும் மூடிகிறார். அந்த வாலிபன் மனம் வருந்தினவனாக, ” தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல” என்று சொல்லி தேம்பி அழுகிறான். அப்பொழுது தகப்பன் அவனை நெருக்கமாக அணைத்துக் கொண்டு வீட்டிற்குள் அழைத்துச்செல்கிறார். கூலிக்காரனாக தன்னை வைக்கும்படி அவன் மீண்டும் கெஞ்சுவதற்கு அவர் சந்தர்ப்பமே கொடுக்கவில்லை . அவன் அவருடைய குமாரன் ; வீட்டில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் பெற்று கனப் படுத்தப்பட வேண்டியவன். வீட்டுப் பணியாளர்கள் மரியாதை யோடு, சே வை செய்யத் தகுதியுள்ளவன்.COLTam 203.2

    ” அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டு வந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான் ; காணாமற் போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.”COLTam 203.3

    கெட்டகுமாரன் தான் இஷ்டத்திற்கு திரிந்த வாலிப நாட்களில், தகப்பனை பொறுமையற்றவராக, கடுமையானவராக எண்ணி யிருந்தான். இப்போது அவரைப்பற்றி அவன் கண்டுகொண்டது எவ்வளவு வித்தியாசமாக இருந்தது! அதுபோல, சாத்தானால் வஞ்சிக்கப்படுகிறவர்கள் தேவனைக் கடினமானாவராக, நியாயமின்றி பறிப்பவராக எண்ணுகிறார்கள். பாவியைப் புறக்கணித்து, அவனை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்க ஆயத்தமா யிருப்பதாகவும், அவன் தப்பிக்கும்படி சட்டப்பூர்வமான காரணம் கிடைக்கும் வரை அவனை ஏற்றுக்கொள்ளவே விரும்பாதவராக வும் நினைக்கிறார்கள். அவருடைய கற்பனைகள் தங்ள் சந்தோ ஷத்திற்குக் கட்டுப்பாடு விதிப்பதாகவும், பாரமான அந்த நுகத்தி லிருந்து தப்புவதுதான் மகிழ்ச்சியென்றும் நினைக்கிறார்கள். ஆனால் கிறிஸ்துவின் அன்பு கண்களைத் திறந்திருந்தால், தேவன் முற்றிலும் மனதுருக்கம் நிறைந்தவரெனக் கண்டு கொள்வார்கள். அவர் கொடுமையானவராக, மனமிரக்கமில்லாதவராக தெரியமாட்டார், மனந்திருந்துகிற மகனைக் கட்டியணைக்க ஏக்கத்தோடிருக்கும் அப்பாவாகத் தெரிவார். அப்படிப்பட்ட பாவி சங்கீதக்காரனோடு சேர்ந்து, “தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறது போல கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்கு கிறார் ” என்று சந்தோஷமாகப் பாடுவான். சங்கீதம் 103:13.COLTam 204.1

    கெட்டகுமாரன் தீயவழியில் சென்றதற்காக உவமையில் அவனைப் பற்றி இழிவாகவோ, அவதூறாகவோ சொல்லப்பட வில்லை. தன்னுடைய கட்டந்த கால வாழ்க்கை மன்னிக்கப்பட்டு, மறக்கப்பட்டு, காணாமலே போனதென அந்த இளையகுமாரன் உணர்கிறான். அதுபோலவே பாவியிடம் தேவன் பின்வருமாறு சொல்கிறார்: “உன் மீறுதல்களை மேகத்தைப் போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப் போலவும் அகற்றி விட்டேன்; என்னிடத்தில் திரும்பு ; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.” ஏசா 44:22; ‘நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன் .” எரே 31:34; “துன்மார்க் கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன் மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக் கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.’” ஏசா. 55:7; “அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேலின் அக்கிரமம் தேடப் பட்டாலும் அது காணாதிருக்கும்; யூதாவின் பாவங்கள் தேடப்பட்டாலும் அவைகள் கிடையாதிருக்கும்.” எரேமியா 50:20.COLTam 204.2

    மனந்திரும்புகிற பாவியை ஏற்றுக்கொள்ள தேவன் சி த்தமுள்ளவராக இருக்கிறாரென்பதற்கு எத்தகயை நிச்சியம் இது! வாசரே, மனம்போன போக்கில் செல்ல நினைத்தவரா நீங்கள்? தேவனை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டீர்களா? அக்கிரமத்தின் கனிகளைப் புசிக்க வகை தேடி, அவை உங்கள் உதடுகளில் சாம்ப லாகிப் போனதுதான் மிச்சமெனக் கண்டு கொண்டீர்களா? இப் போது உங்கள் ஆஸ்திகள் அழிந்து, வாழ்க்கையில் போட்ட திட்டங்கள் தகர்ந்து, எதிர்பார்ப்புகளெல்லாம் கெட்டு, யாருமில்லாத இடத்தில், தனிமையாக உட்கார்ந்திருக்கிறீர்களா? வெகு காலமாக உங்கள் இருதயத்தில் பேசிவந்தும் நீங்கள் கேட்க மறுத்த அந்தச் சத்தமானது இப்போது மிகத் தெளிவாகவும், துல்லியமாகவும் உங்களிடம் பேசுகிறது : எழுந்திருந்து போங்கள்; இது நீங்கள் இளைப்பாறும் இடம் அல்ல, இது தீட்டுப்பட்டது, இது உங்களை நாசப்படுத்தும், அந்த நாசம் மிகவும் கொடியதாயிருக்கும். ‘‘ மீகா 2:10. உங்கள் தகப்பனின் வீட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள். ‘என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக் கொண்டேன் ” என்று உங்களை அவர் அழைக்கிறார். ஏசாயா 44:22.COLTam 205.1

    நீங்கள் நல்லவர்களாக மாறும் வரை, தேவனிடம் செல்வதற்கான தகுதியைப் பெறும் வரை கிறிஸ்து விடமிருந்து தள்ளியே இருங்களென சத்துரு கொடுக்கும் ஆலோசனைக்குச் செவிசாய்க்காதீர்கள்; நீங்கள் தாமதித்தால் ஒருபோதும் கிறிஸ்துவிடம் வரமுடியாது. சாத்தான் உங்களுடைய அழுக்கான கந்தைகளைச் சுட்டிக்காட்டும் போது, “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை என்கிற வாக்குறுதியை அவனி டம் சுட்டிக்காட்டுங்கள். யோவான் 6:37. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கிச் சுத்திகரிக்கிறதென சத்துருவிடம் சொல்லுங்கள். “நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன் என்ற தாவீது ஏறெடுத்த ஜெபமே உங்களுடைய ஜெபமாகட்டும். சங்கீதம் 51:7.COLTam 205.2

    எழுந்து, உங்கள் தகப்பனிடம் செல்லுங்கள். நீங்கள் வெகு தூரத்தில் இருக்கும் போதே அவர் உங்களை வந்து சந்திப்பார். மனந்திரும்புதலோடு அவரை நோக்கி ஒரு அடி நீங்கள் எடுத்து வைத்தாலும், தம்முடைய நித்திய அன்பின் கரங்களில் உங்களை அரவணைக்க ஓடிவருவார். நொறுங்குண்ட ஆத்துமாவின் கூக் குரலுக்கு அவருடைய செவிகள் திறந்தேயிருக்கும். முதன் முதலாக இருதயத்தில் தேவனை தேடின அந்தக் கணப்பொழுதை அவர் அறிவார். தயங்கிதயங்கி ஏறெடுத் ஜெபத்தையும், இரகசியமாகச் சிந்தின கண்ணீரையும், உள்ளத்தின் ஓர் ஓரத்தில் தேவனைத் தேடவேண்டுமென்கிற மெய்யான ஆசை வளர்த்து வந்ததையும் அவர் ஒருபோதும் காணாமல் இருக்க மாட்டார்; அந்த ஆத்துமாவைச் சந்திக்க ஆவியானவர் உடனே புறப்படுவார். ஜெபிப்பதற்கு முன்னரேயே அல்லது உள்ளத்தின் ஏக்கத்தை வெளிப்படுத்துவதற்கு முன்னரே மனித ஆத்துமாவில் கிரியை நடப்பிக்கிற கிருபையை கிறிஸ்துவின் கிருபை சென்றடையும்.COLTam 206.1

    பாவத்தால் தீட்டுப்பட்ட வஸ்திரங்களை உங்கள் பரமபிதா உங்களிடமிருந்து அகற்றுவார். சகரியாவுக்கு உருவகமாகக் கொடுக்கப்பட்ட அந்த அருமையான தீர்க்கதரிசனத்தில், பிரதான ஆசாரியனாகிய யோசுவா அழுக்கு வஸ்திரங்களைத் தரித்தவனாக கர்த்தருடைய தூனுக்கு முன்பாக நிற்கிறான். அது ஒரு பாவியைச் சுட்டிக்காட்டுகிறது. அப்போது கர்த்தர் பேசுகிறார்: ‘இவன்மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக்களைந்து போடுங்கள் என்றார். பின்பு அவனை நோக்கி : பார், நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன் என்றார்...... அப்பொழுது சுத்தமான பாகையை அவன் சிரசின் மேல் வைத்து, அவனுக்கு வஸ்திரங்களைத் தரிப்பித்தார்கள்.” சகரியா 3:4,5. இவ்விதமாக கர்த்தர், “இரட்சிப்பின் வஸ்திரங்களை ” உங்களுக்கு டூத்தரித்து,’ ‘நீதியின் சால்வையால் ” மூடுவார். ஏசாயா 61:10. “நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாயிருந்தாலும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாச்சிறகுகள் போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பீர்கள். சங்கீதம் 68:13.COLTam 206.2

    தம்முடைய விருந்து அறைக்கு அவர் உங்களை அழைத்துச் செல்வார். அவருடைய நேசக்கொடி உங்கள் மேல் பறக்கும். உன்னதப்பாட்டு 2:4. ‘நீ, என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், ” சிங்காசனத்தைச் சுற்றிலும் நிற்கிற பரிசுத்த தூதர்கள் மத்தியில் ‘உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளை யிடுவேன்.”சகரியா 3:7.COLTam 207.1

    “மணவாளன் மணவாட்டியின் மேல் மகிழ்ச்சியாயிருப் பதுபோல, உன் தேவன் உன் மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.” ஏசாயா 62:5. “அவர் இரட்சிப்பார்; அவர் உன் பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன் பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்.” செப்பனியா 3:17. பிதாவானவர் சந்தோஷமாகப்பாட, வானுலகம் பூவுலகும் இணைந்து பாடும் : ‘என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான் ; காணாமற் போனான், திரும் பவும் காணப்பட்டான்.COLTam 207.2

    இரட்சகரின் உவமையில் இதுவரை சந்தோஷமான காட்சி யையே பார்த்தோம்; முரணாக எதுவும் சொல்லப்பட வில்லை; ஆனால் கிறிஸ்து இப்பொழுது வேறொரு விஷயத்தைச் சொல்கிறார். கெட்ட குமாரன் வீட்டிற்குத் திரும்பி வந்த சமயத்தில் மூத்தகுமாரன் ” வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு, ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து : இதென்ன என்று விசாரித்தான். அதற்கு அவன் : உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்த படியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான். அப்பொழுது அவன் கோபமடைந்து உள்ளே போக மனதில்லாதிருந்தான்.” இந்த மூத்த குமாரன் அப்போவோடு சேர்ந்து கவலைப்படவில்லை ; காணாமற்போன சகோதரனைத் தேடவுமில்லை. அதனால் தான் காணாமல் போனவன் திரும்பி வந்த்தும், அப்பைப்போல இவன் சந்தோஷப்படவில்லை. களிப்பின் சத்தமானது இவனுடைய உள்ளத்தில் களிப்பைத் தூண்டவில்லை. கொண்டாட்டத்திற்காகான காரணம் என்னவென்று ஒரு வேலைக்காரனிடம் கேட்கிறான்; அவன் சொன்ன பதில் இவனுக்கு பொறாமையைத் தூண்டுகிறது. காணாமல் போன தன் தம்பியை வரவேற்க உள்ளே செல்லவில்லை. கெட்டகுமாரனுக்கு தயவு காட்டப்பட் டதை தனக்கு நேர்த்த அவமானமாகக் கருதுகிறான்.COLTam 207.3

    அவனை வருந்தி அழைப்பதற்கு அப்பா வெளியே வரு கிறார், அப்போதுதான் அவனுடைய பெருமையும் வெறுப்புணர்வும் வெளிப்படுகிறது. அப்பாவின் வீட்டில் தான் ஓடி ஓடி வேலை செய்து வந்ததை யோசிக்கிறான்; பிறகு, திரும்பிவந்திருந்த தகுதி யற்ற அந்தச் சகோதரனுக்குக் காட்டப்பட்ட தயவையும் ஒப்பிட் டுப்பார்க்கிறான். இதுவரையிலும் ஒரு மகனாக அல்ல, ஒரு வேலைக்காரனாக தான் வேலை செய்துவிட்டதாக அடித்துச் சொல்லுகிறான். அப்பாவின் அருகில் இருப்பதே போதுமென சந்தோஷமடைந்திருக்க வேண்டும்; ஆனால் விபரத்துடன் வாழ்வதால் கிடைக்கிற சொத்திலேதான் அவன் எண்ணமெல்லாம் இருந்தது. பாவ இன்பங்களை அவன் ஒதுக்கியதற்கு இது தான் காரணமென்பதை அவனுடைய வார்த்தைகள் காட்டு கின்றன. அப்பாவன் சொத்துக்களில் இனியும் இளைய குமார னுக்குப் பங்குகிடைத்தால், அது தனக்குச் செய்யப்படுகிற அநியாயமென்று எண்ணுகிறான். தன் சகோதரன் மேல் தயவு காட்டப்பட்டதால் காழ்ப்புணர்வு அடைகிறான். தகப்பனுடைய ஸ்தானத்தில் தான் இருந்திருந்தால், கெட்டகுமாரனை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டானென்று தெளிவாகக் காட்டுகிறான். அவனை ஒரு சகோதரனாகவே இவன் ஏற்றுக்கொள்ளவில்லை ; “உம்முடைய குமாரன்” என்று அன்பில்லாமல் கூறுகிறான்.COLTam 208.1

    அவனையும் அந்தத் தகப்பன் கனிவோடுதான் அணுகுகிறார். “மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ள தெல்லாம உன்னுடையதாயிருக்கிறது” என்கிறார். இத்தனை வருடங்களாக உன் சகோதரன் எங்கேயோ வாழ்ந்தானே, உனக்கு என்னோடு சேர்ந்து வாழ்கிற சிலாக்கியம் கிடைக்கவில்லையா? தன்னுடைய பிள்ளைகளின் மகிழ்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் இலவசமாக்க் கொடுத்திருந்தார். சொத்தையோ பிரதிபலனையோ அந்த மகன் கேட்க வேண்டியதில்லை. “எனக்குள்ள தெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.” என்னுடைய அன்பில் நம்பிக்கை வைப்பதும், இலவசமாக அளிக்கும் வெகுமதியைப் பெற்றுக்கொள்வதும் மட்டுமே உன் வேலை.COLTam 208.2

    ஒரு மகன் தன் அப்பாவின் அன்பை சரியாகப்புரிந்துகொள்ளா மல், சிலகாலம் அவரை விட்டுப் பிரிந்து சென்றிருந்தான். இப்போது திரும்பிவிட்டான்; அவனைப் பற்றிய கவலைகள் மறைந்து, சந்தோஷம் அலைபாய்ந்தது. “உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான் ; காணாமற் போனான், திரும்பவும் காணப்பட்டான்.”COLTam 208.3

    தான் நன்றி கெட்டவனாக, அற்பமாக நடந்துகொண்டதைக் கண்டுகொள்ளும் வாய்ப்பு மூத்த குமாரனுக்குக் கிடைத்ததா? தன் னுடைய சகோதரன் துன்மார்க்கமாக நடந்திருந்தாலும் கூட, அவன் தன் சகோதரன்தானே என்பதை யோசிக்கிற வாய்ப்பு கிடைத்தா? அந்த மூத்த குமாரன் பொறாமையையும் மனக்கடி னத்தையும் விட்டு மனந்திரும்பினானா? இதுகுறித்து கிறிஸ்து எதுவும் சொல்லவில்லை . இந்த உவமையின்படி இன்றும் நடந்து வருகிறது; இதற்கு முடிவை எழுது கிற பொறுப்பு வாசகர்களிடமே விடப்பட்டுள்ளது.COLTam 209.1

    கிறிஸ்துவின் நாட்களிலிருந்து மனமாற்ற மடையாத யூதர்களுக் கும், ஒவ்வொரு காலக்கட்டத்தையும் சேர்ந்த பரிசேயர்களுக்கும் அந்த மூத்த குமாரன் அடையாளமாயிருக் கிறான். ஏனென்றால், ஆயக்காரர்கள், பாவிகள் என்று தாங்கள் கருதுகிறவர்களை இவர்கள் ஏளனமாகப் பார்க்கிறார்கள். தாங்கள் அளவுக்கு மீறி தீயச் செயல்களில் ஈடுபடாததால், சுயநீ தியால் நிறைந்திருக்கிறார்கள். இந்த ஆட்சேபனக்காரர்களின் உண்மை நிலையை கிறிஸ்து புட்டு வைத்தார். உவமையில் வரும் மூத்தகுமாரனைப்போல இவர்கள் தேவனிடத்திலிருந்து விசே ஷித்த சிலாக்கியங்களைப் பெற்றிருந்தார்கள். தேவனுடைய வீட்டின் குமாரர்களாகச் சொல்லிக்கொண்டவர்கள், கூலிக்கார ஆவியைப் பெற்றிருந்தார்கள். அன்பினால் அள்ல, பிரதிபலனை எதிர்பார்த்து ஊழியம் செய்து வந்தார்கள். கடுமையாக வேலை வாங்குகிற எஜமானாக தேவனைப் பார்த்தார்கள். கிருபையின் ஈவை இலவசமாகப் பெறும்படி ஆயக்காரர்களையும் பாவிகளையும் கிறிஸ்து அழைப்பதைப் பார்த்தார்கள்; அந்த ஈவை கடுமையாகப் பிரயாசப்பட்டு, கிரயத்திற்குதான் பெறமுடியுமென ரபிமார்கள் நினைத்திருந்தார்கள். அதனால் தான் அவர்களுக்குக் கோபமந்தது . கெட்டகுமாரன் திரும்பி வந்தது தகப்பனுக்கு மனம் நிறைய மகிழ்ச்சியைக் கொடுத்தது; ஆனால் அவர்களுக்கோ பொறாமையைத் தூண்டியது. COLTam 209.2

    உவமையில் அந்தத் தகப்பன் தன் மூத்த குமாரனை எவ்வாறு வருந்தி அழைத்ராரோ, அதுபோலத்தான் பரிசேயர்களை பரி சேயர்களைக பரலோகம் கனிவுடன் அழைத்தது. “எனக் குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.” அதைச் சம்பளமாக அல்ல, ஈவாகப் பெறவேண்டும். தகப்பன் தன் அன்பால் தகுதியற்ற அந்தக் கெட்டகுமாரனுக்குக் கொடுத்தது போல, நாமும் பெறவேண்டும்.COLTam 209.3

    சுயநீதியானது, தேவனை தவறாகச் சித்தரிக்கத் தூண்டுகிறது; அதுமட்டுமல்ல, சகமனிதர்கள் மேல் அன்பில்லாதவர்களாக, அவர்களை விமர்சிக்கிறவர்களாக மாற்றுகிறது. சுயநலமும் பொறாமையும் கொண்ட மூத்த குமாரன் தன் சகோதரனை எடைபோடவும், அவனுடைய ஒவ்வொரு செயலையும் விமர் சி க்கவும், சிறுதவறு செய்தால் கூட அவனைக் குற்றஞ்சாட்ட வும் ஆயத்தமாக இருந்தான். அவன் என்னென்ன தவறு செய்கிறான் என்று கண்டுபிடித்து, முடிந்தவரை பட்டியல் போட விரும்பினான். இவ்வாறு செய்து, மன்னிக்கிற ஆவி தனக்கு இல்லாததை நிரூபிக்கவிருந்தான். இதே தவறை இன்றும் அநேகர் செய்கிறார்கள். வெள்ளம் போன்று சோதனைகளில் சிக்கி, அதிலிருந்து விடுபடுகிற போராடுகிற தருணத்தில் தானே அந்த ஆத்துமாவுக்கு உதவாமல் மனக்கடினத்துடன், ஒத்துழைப்பு கொடுக்காமல், குறை கூறி, குற்றஞ்சாட்டி நிற்கிறார்கள். இவர்கள் தங்களை தேவ பிள்ளைகளெனச் சொல்லிக்கொண்டாலும், சாத்தானின் ஆவியோடு செயல்படுகிறார்கள். தங்கள் உடன் சகோதரர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிற மனநிலையை வெளிப்படுத்துவதால், தேவன் தம் முகத்தின் பிரகாசத்தை தங்களுக்கு தரமுடியாத நிலைக்குச் சென்று விடுகிறார்கள்.COLTam 210.1

    ‘என்னத்தைக் கொண்டு நான் கர்த்தருடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்து கொள்வேன்? தகனபலிகளைக் கொண்டும், ஒரு வயது கன்றுக்குட்டிகளைக் கொண்டும் அவர் சந்நிதியில் வரவேண்டுமோ? ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின் பேரிலும், எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின் பேரிலும், கர்த்தர் பிரியமாயிருப் பாரோ?” என்று அநேகர் தொடர்ந்து கேள்வி எழுப்புகிறார்கள். என் அக்கிரமத்தைப் போக்க என் முதற்பேறானவனையும், என் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க என் கர்ட்டாக்கனியையும் கொடுக்க வேண்டுமோ? ஆனால் “மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.’” மீகா 6:6-8.COLTam 210.2

    “அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலை பாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப் போடுகிறதும்,.... உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காம லிருக்கிறதும்தான் ” தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிற சேவையாகும். ஏசாயா 58:6,7. உங்களுடைய பரலோகப் பிதா வின் அன்பினால் இரட்சிக்கப்படக் கூடிய பாவிகளாக நீங்கள் உங்களைக் கருதுவீர்களானால், பாவத்தினால் அவதியுறுகிறவர்கள்மேல் பரிவுமிக்க அன்பைக் காட்டுவீர்கள். இக்கட்டில் அகப்பட்டு, மனந்திருந்தி வருகிறவர்களை பொறாமையோடும் வெறுப் போடும் நோக்கமாட்டீர்கள்.COLTam 211.1

    சுயநலமென்னும் பனிக்கட்டி உங்கள் இருதயங்களிலிருந்து உருகும் போது, தேவனைப்போன்ற பரிவுள்ளவர்களாக மாறி, காணாமற் போனவர்கள் இரட்சிக்கப்படும் போது அவரோடு சேர்ந்து சந்தோஷப்படுவீர்கள்.COLTam 211.2

    நீங்கள் உங்களை தேவபிள்ளையெனச் சொல்வது உண்மை தான். இது உண்மையானால், “உன் சகோதர (னே) .... மரித்தான், திரும்பவும் உயிர்த்தான், காணாமற் போனான், திரும்பவும் காணப்பட்டான்.’” தேவன் அவனையும் தம் மகனாகக் கருது வதால், உங்கள் இருவருக்குமிடையேயான பந்தம் நெருக்கமான து. அவனுக்கும் உங்களுக்கும் உறவில்லையென நினைத் தால், தேவகுடும்பத்தில் உங்களை ஒரு பிள்ளையாக அல்ல, ஒரு கூலிக்காரனாகத்தான் கருதுகிறீர்கள்.COLTam 211.3

    காணாமற் போய் திரும்பி வருபவரை வரவேற்பதில் நீங்கள் கலந்துகொள்ளாவிட்டாலும், திரும்பி வந்தவனுக்கு பிதாவின் அருகில் அமருகிற, பிதாவின் ஊழியத்தைச் செய்கிற சிலாக்கியம் கிடைக்கும். எவனுக்கு அதிகமாக மன்னிக்கப்பட்டதோ அவன் அதிகமாக அன்பு கூருகிறான். ஆனால் நீங்களோ புறம்பான இருளில் தள்ளப்படுவீர்கள். ஏனெனில், “அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.” 1யோவான் 4:8.COLTam 211.4