Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பொக்கிஷத்தைத் தேடுதல்

    தேவவார்த்தையே நமது ஆராய்ச்சியாக இருக்கவேண்டும். அதிலுள்ள சத்தியங்களை நம் பிள்ளைகளுக்குப் போதிக்க வேண்டும். அது வற்றாத ஒரு பொக்கிஷம்; ஆனால், அது தங்கள் வசம் இருக்கும் வரையிலும் அதிலுள்ள பொக்கிஷத்தைக் கண்டடைய மக்கள் தவறுகின்றனர். சத்தியம் குறித்த அனுமானங் களில் பலர் திருப்தியடைகின்றனர். அதை மேலோட்டமாக வாசி த்து, அவசியமான தெல்லாம் தங்களிடம் இருப்பதாக முடிவு செய்கிறார்கள். மற்றவர்கள் சொல்வதை சத்தியமென ஏற்றுக்கொள்கிறார்கள்; வார்த்தையில் சொல்லப் படுவதுபோல மறைந்திருந்த பொக்கிஷத்தை விழிப்போடும், கருத்தோடும் தேடாமல் சோம்பேறிகளாக இருக்கின்றனர். ஆனால், மனிதனுடைய கண்டுபிடிப்புக்கள் நம்பமுடியாதவை ; ஆபத்தானவைகளும் கூட ; ஏனெனில், அவை தேவன் இருக்க வேண்டிய இடத்தில் மனிதனை வைக்கின்றன. “என்று கர்த்தர் சொல்கிறார் என்பதைப் பார்க்காமல், மனிதனின் கருத்துகளைப் பார்க்கச் செய்கின்றன.”COLTam 106.1

    கிறிஸ்துவே சாத்தியம். அவருடைய வார்த்தைகள் சத்திய முள்ளவை; மேலே தெரிவதைவிட ஆழமான அர்த்த முள்ளவை. கிறிஸ்து சொல்லியுள்ள அனைத்தும் உண்மை என்பதற்கும் அதிகமான மதிப்பு வாய்ந்தவை. பரிசுத்த ஆவியானவரால் புதுப்பிக்கப்படுகிற இருதயங்கள் மட்டே அவற்றின் மதிப்பைக் கண்டறிய முடியும். அவை புதைக்கப் பட்ட பொக்கிஷங்களாக இருந்தாலும், சாத்தியமென்னும் விலையுயர்ந்த முத்துக்களைக் கண்டடைவார்கள்.COLTam 106.2

    தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள, மனிதர்களுடைய கருத்துகளும், ஊகங்களும் ஒருபோதும் உதவ முடியாது. தங்களுக்கு தத்துவ அறிவு இருப்பதாக நினைக்கிறவர்கள், அறிவுப்பொக்கிஷங்களை முடிச்சவிழ்க்கவும், சபைக்குள் மதத் துரோகம் நுழையாமல் தடுக்கவும் தாங்கள் விளக்கமளகிக்க வேண்டியது அவசியமென்று நினைக்கிறார்கள். ஆனால், அவர்களது விளக்கங்கள் தாம் பொய்க்கொள்கைகளையும் மதத் துரோகங்களையும் நுழையச்செய்துள்ளன. கடினமான வேதப் பகுதிகளென தாங்கள் நினைப்பவைகளுக்கு விளக்கமளிக்க துணிச்சலான முயற்சிகளில் மனிதர்கள் இறங்கியிருக்கிறார்கள்; ஆனால் பெரும் பாலும், அவர்கள் விளக்கமளிக்க முயன்ற பகுதிகளை அவை மேலும் சிக்கலாக்கியுள்ளன.COLTam 106.3

    தேவ வார்த்தைக்கு தங்கள் சுயவிளக்கத்தைக் கொடுத்து, போதகர்களாக தாங்கள் மகத்தான பங்காற்றுவதாக ஆசா ரியர்களும் பரிசேயர்களும் நினைத்தார்கள்; ஆனால், கிறிஸ்து அவர்களிடம் : ‘நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியவில்லை ‘‘ என்றார். மாற்கு 12:24. “மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதிப்ப தாக” அவர்களைக் குற்றஞ்சாட்டினார்.’” மாற்கு 7:7. தேவவாக் குகளைப் போதிக்கிற ஆசிரியர்களாக இருந்தும், அவருடைய வார்த்தைகளைப் புரிந்து கொண்டிருந்ததாக நினைத்தும், வார்த்தையின்படி அவர்கள் நடக்கவில்லை. அதன் மெய்யான கருத்தை விளங்கிக்கொள்ள முடியாதபடி சாத்தான் அவர்களுடைய கண்களைக் குருடாக்கியிருந்தான்.COLTam 107.1

    இதே வேலையைத்தான் இன்று அநேகர் செய்கிறார்கள். அநேக சபைகள் இந்தப் பாவத்தைச் செய்துவருகின்றன. இன்று தங்களை ஞானி என்று எண்ணிக்கொள்வோர், யூத ஆசிரியர்கள் செய்தது போலவே செயல்பட்டால், அது ஆபத்திற்குமேல் ஆபத்தை உண்டாக்கும். தேவவாக்குகளுக்கு தவறான அர்த்தங்கற்பிக்கிறார்கள்; தேவனுடைய சத்தியத்தை தவறாகப் புரிந்துள்ளதால் ஆத்துமாக்களைக் குழப்பமடையச் செய்து, இருளுக்குள் ஆழ்த்துகிறார்கள்.COLTam 107.2

    பாரம்பரியம் அல்லது மனித ஊகம் என்கிற மங்கிய வெளிச் சத்தில் வேதவாக்கியங்களை வாசிக்கக்கூடாது. மனித பாரம்பரியம் அல்லது மனித ஊகத்தின் மூலம் வேதாகமத்தை விளக்க முற்படுவது, தீவட்டியைக் கொளுத்தி சூரியனுக்கு வெளிச்சம் கொடுக்க முயல்வது போன்றதாகும். தேவனுடைய பரிசுத்த வார்த்தைகளை மகிமையாகப் பிரகாசிக்கச் செய்வதற்கு, பூலோக தீவட்டிகளன் மங்கலான வெளிச்சம் தேவை யில்லை. தேவவார்த்தை தன்னிலே வெளிச்சம் பெற்றுள்ளது; ஏனெனில் தேவவார்த்தை அங்கே வெளிப்பட்டுள்ளது; அதன் பக்கத்தில் மற்ற அனைத்தும் மங்கிய வெளிச்சமாகவே இருக்கும்.COLTam 107.3

    ஆனால் ஊக்கமாக வாசித்து, நுட்பமாக ஆராயே வண்டும். சோம்பலாக இருந்தால், சத்தியத்தை தெளிவாக அறிந்து கொள்ளவே முடியாது. ஊக்கத்தோடும், பொறுமையோடும், விடாமுயற்சியோடும் முயற்சிக்காமல், எந்த ஒரு உலக ஆசீர்வாதத்தையும் பெற இயலாது. தொழிலில் வெற்றியடை வதற்கு, அதைச் செய்வதற்கான விருப்பமும், நல்ல பலன் கிடைக்குமென்கிற விசுவாசமும் அவசியம். அது போல, ஊக்கத்துடன் பிரயாசப்படாமல் ஆவிக்குரிய அறிவைப் பெற இயலாது. சத்தியமாகிய பொக்கிஷங்களைக் கண்டடைய விரும்புகிறவர்கள், நிலத்தில் மறைந்துள்ள பொக்கிஷத்தைத் தேடுகிற சுரங்கத்தொழிலாளி போல, தோண்டி, தேடவேண்டும். அரைமனதோடு, அலட்சியத்தோடு பிரயாசப்படுவதால் எப்பயனுமில்லை. முதியோரும் வாலிபரும் தேவவார்த்தையை வாசிப்பதோடு நிறுத்தாமல், முழுமனதோடும் ஆவலாக அதை ஆராயவேண்டும், மறைக்கப்பட்ட பொக்கிஷத்தைத் தேடுவது போல சத்தியத்தை ஜெபித்து, தேடவேண்டும். அப்படிச் செய்தால் பலன்கிடைக்கும்; ஏனெனில் கிறிஸ்துதாமே சிந்தையைப் புதுப்பிப்பார்.COLTam 108.1

    வேதவாக்கியங்களின் சத்தியத்தை அறிந்திருப்பதைச் சார்ந்து தான் நம் இரட்சிப்பு அமைகிறது. அந்த அறிவை நாம் பெற்றிருக்க தேவன் விரும்புகிறார். ஓ, பசிதாகமுள்ள இதயத்தோடு ஆராயுங்கள், விலையேறப்பெற்ற வேதாகமத்தை ஆராயுங்கள். தங்கப்படிவங்களைக் கண்டு பிடிக்க சுரங்கத்தொழிலாளிகள் நிலத்தைத் தோண்டுவது போல தேவவார்த்தையை ஆராய்ச்சி செய்யுங்கள். தேவனோடான உறவையும், உங்களைக்குறித்த அவரது சித்தத்தையும் நிச்ச மாக அறிந்து கொள்ளு மட்டும் தளராதிருங்கள் . “நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்” என்று கிறிஸ்து சொல்கிறார். யோவான் 14:13,14.COLTam 108.2

    பக்தியிலும் தாலந்திலும் சிறந்த மனிதர்கள் நித்தியத்திற்கடுத்த உண்மைகளைக் கண்டும், பெரும் பாலும் அவற்றைப் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள். மறைந்திருக்கும் பொக்கிஷத்தை வெற்றிகரமாகத் தேடிக்கண்டுபிடிக்கவிரும்புகிறவர், இந்த உலகக்காரியங்களைவிட மேலானவற்றை நாடவேண்டும். அதைத் தேடும் படி தன்னுடைய ஆர்வங்களையும் திறமைகளையும் அர்ப்பணிக்க வேண்டும்.COLTam 108.3

    வேதவாக்கியங்களிலிருந்து பெற்றிருக்கக்கூடிய ஏராளமான அறிவுக்கு கீழ்ப்படியாமைதான் கதவை அடைத்துவிட்டது. புத்தி என்பது தேவகட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதாகும். மனிதனுடைய அவநம்பிக்கைக்கும், தவறான அபிப்பிராயத்திற்கும் இசைந்துசெல்ல வேதவாக்கியங்களைப் பயன்படுத்தக் கூடாது. சத்தியம் குறித்த அறிவைப்பெற்று, அதற்குக்கீழ்ப்படியும்படிதாழ்மையோடு முயல்கிறவர்கள் மட்டுமே அவற்றைப் புரிந்துகொள்ள முடியும்.COLTam 109.1

    இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்கிறீர்களா? முன் அபிப்பிராயக்கருத்துகளையும், பாரம்பரியக் கருத்துகளையும், நீங்கள் வளர்த்துக்கொண்ட கருத்துகளையும் வாசலிலேயே விட்டுவிட்டு, ஆராய்ந்து பாருங்கள். உங்கள் சொந்தக் கருத்துக்களை நியாயப்படுத்துவதற் காக வேதாகமத்தை ஆராய்ந்தால், சத்தியத்தைக் கண்டடையவே மாட்டீர்கள். கர்த்தர் என்ன சொல்லுகிறாரென அறிந்து கொள்ளும்படி ஆராயுங்கள். ஆராய்ச்சியின் போது உணர்த்தப் பட்டால், நீங்கள் பெரிதாகக் கருதுகிற கருத்துகள் சாத்தியத்திற்கு ஒத்துப்போகாதவை என்று கண்டால், உங்கள் சொந்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு சாத்தியத்திற்கு தவறான அர்த்தங்கற்பிக்காமல், கொடுக்கப்படும் வெளிச்சத்தை ஏற்றுக்கொள் ளுங்கள். தேவவார்த்தையின் மகத்துவமான காரியங்களைக் காணும்படி, உங்கள் மனதையும் இதயத்தையும் திறந்து கொடுங்கள்.COLTam 109.2

    அறிவுக்கூர்மை படைத்தவர்கள், பரலோகப் பொக்கிஷத்தைப் பகுத்தறிந்து, போற்ற வேண்டும்; அவ்வாறு இருதயம் கட்டுப்படுத்தினால் தான் கிறிஸ்துவே இந்த உலகத்தின் மீட்பர் என்கிற விசுவாசம் உண்டாகும். இப்படிப்பட்ட விசுவாசத்தையும், மனமாற்றம் மற்றும் குணமாற்றத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. விசுவாசம் என்பது, சுவிசேஷப் பொக்கிஷத்தை அதன் சகல கடமைகளோடுங்கூட கண்டறிந்து, ஏற்றுக்கொள்வதாகும்.COLTam 109.3

    “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்யத்தைக் காணமாட்டான்.” யோவான் 3:3. அவன் ஊகிக்கலாம், கற்பனை செய்யலாம்; ஆனால் விசுவாசக் கண்ணில்லாமல் பொக்கிஷத்தைக்காணமுடியாது; விலைமதிப்பற்ற இந்தப் பொக்கிஷத்தை நமக்குப் பெற்றுத் தரும்படி கிறிஸ்து தமது ஜீவனைக் கொடுத்தார்; ஆனால், அவர் இரத்தத்தை விசு வாசிப்பதால் கிடைக்கிற புதிய வாழ்வைப் பெறாமல், அழிந்து போகிற ஆத்துமாவானது பாவமன்னிப்பையோ பொக்கிஷத் தையோ பெறமுடியாது.COLTam 109.4

    தேவவார்த்தையின் சாத்தியங்களைப் பகுத்தறிவதற்கு, பரிசு த்த ஆவியானவருடைய வெளிச்சம் அவசியம். சூரியன் தன் ஒளிக் கதிர்களைப் பரப்பி, இருளை விரட்டாதப்பட்சத்தில், இயற்கை உலகின் அற்புதங்களைக் காணமுடியாது. அதுபோலவே, நீதியின் சூரியனுடைய பிரகாசமான தேவவார்த்தையின் பொக்கிஷங்களை வெளிப்படுத்தாமல், அவற்றை அறிந்து, போற்றமுடியாது.COLTam 110.1

    நித்திய அன்பின் அருட்கொடையாக பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவர், கிறிஸ்துவை முற்றிலும் விசுவாசிக்கிற ஒவ்வோர் ஆத்துமாவுக்கும் தேவனுக் கடுத்த விஷயங்களை எடுத்து, வெளிப்படுத்துகிறார். ஆத்தும இரட்சிப்பிற்குத் தேவையான முக்கிய சத்தியங்களை அவர் தம் வல்லமையால் மனதில் பதியவைக்கிறார்; ஜீவவழி குறித்து யாரும் தடுமாறாதபடிக்கு அதைத் தெளிவாக்குகிறார். வேத வாக்கியங்களை ஆராயும் போது, தேவனுடைய பரிசுத்த ஆவியானவருடைய வெளிச்சம் வார்த்தையில் பிரகாசிக்கும்படி நாம் ஜெபிக்க வேண்டும்; அப்போதுதான் அதன் பொக்கிஷங்களைக் கண்டு, போற்றமுடியும்.COLTam 110.2