Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    காணாமற்போன ஆடு

    இந்தமுறை அங்கிருந்தவர்களிடம், வேதவசனங்களிலிருந்து கிறிஸ்து போதிக்கவில்லை. அவர்களுடைய சொந்த அனுபவத்தின் காட்சிகளைச் சுட்டிக்காட்டினார். யோர்தானுக்கு கிழக்கே பரந்து விரிந்து காணப்பட்ட மேட்டுச் சமவெளி பகுதி யானது, மேய்ச்சலுக்கேற்ற பகுதியாக இருந்தது. அங்கிருந்த மலை இடுக்குகளிலும் மரங்கள் அடர்ந்த குன்றுகளிலும் ஆடுகள் தொலைந்து போவதுண்டு. மேய்ப்பர்கள் தேடிச்சென்று, அவற்றை மீட்டு வருவார்கள். இயேசுவைச் சுற்றியிருந்த ஜனங்களில் மேய்ப்பர்கள் இருந்தார்கள்; கால்நடைகளிலும் மந்தைகளிலும் பணம் முதலீடு செய்தவர்கள் இருந்தார்கள். அவர் சொன்ன எடுத்துக்காட்டு அவர்கள் எல்லாருக்குமே புரிந்தது: “உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணுற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு காணாமற் போன ஆட்டைக் கண்டு பிடிக்குமளவும் தேடித் திரியானோ?” என்றார்.COLTam 185.1

    நீங்கள் புறக்கணிக்கிற இந்த ஆத்துமாக்கள் தேவனுடைய சொ த்துக்கள் என்று இயேசு சொன்னார். அவரே அவர்களைச் சிருஷ்டித்தார், அவர்களை மீட்டார், அவருடைய பார்வையில் அவர்கள் மதிப்புமிக்கவர்கள். ஒரு மேய்ப்பன் தன் ஆடுகளை நேசி க்கிறான், அவற்றில் ஒன்று காணாமல் போனாலும், கண்டு பிடிக்கும் வரை அமர்ந்திருக்கமாட்டான். அப்படியானால், புறக் கணிக்கப்படுகிற ஒவ்வோர் ஆத்துமா மேலும் தேவன் எவ்வளவு அதிகாமக அன்பு காட்டுவார்! தேவன் தாம் அன்பாயிருப்பதாகச் சொல்வதை மனிதர்கள் மறுக்கலாம்; அவரைவிட்டு வழிவிலகிச் செல்லலாம்; வேறே எஜமானைத் தெரிந்துகொள்ளலாம்; ஆனாலும் அவர்கள் தேவனுடையவர்கள். தம்முடையவர்களை மீட்டுக் கொள்ள அவர் ஏங்குகிறார்: ‘ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறது போல, நான் என் ஆடுகளைத் தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டு போன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பிவரப்பண்ணுவேன் என்று சொல்லுகிறார்.’” எசேக்கியேல் 34:12.COLTam 185.2

    ஒரே ஒரு ஆட்டைத் தேடி மேய்ப்பன் செல்வதாக உவமை சொல்கிறது; அது ஒரு அற்ப எண்ணிக்கைதான். எனவே, ஒரு ஆத்துமா தொலைந்துபோயிருந்தாலும் கூட, அந்த ஆத்துமாவுக்காக கிறிஸ்து மரித்திருந்திருப்பார்.COLTam 186.1

    மந்தையை விட்டு வழிதப்பிய ஆடுதான், மற்ற ஆடுகளை விட மிகவும் உதவியற்ற நிலையில் இருந்தது. அதால் திரும்பிவர முடியாது; மேய்ப்பன்தான் அதைத் தேடிச் செல்ல வேண்டும். அது போலத்தான், தேவனைவிட்டு வழிதவறிய மனிதனும் இருக்கிறான்; தொலைந்துபோன ஆட்டைப்போல உதவியற்ற நிலையில் இருக்கிறான். தேவ அன்பு அவனை விடுவிக்காவிட்டல், அவன் தேவனிடம் திரும்பிவரவே முடியாது.COLTam 186.2

    ஒரு ஆடு தொலைந்து போனதைக் கண்டதும், மந்தையில் பத்திரமாக இருக்கும் ஆடுகளைப் பார்த்துவிட்டு, எனக்கு தொண்ணூற்றொன்பது ஆடுகள் இருக்கின்றன ; வழிதவறிப்போன ஒரு ஆட்டைத் தேடிச் செல்வதால் அதிக தொந்தரவுதான் மிஞ்சும். அது தானே திரும்பி வரட்டும். அது உள்ளே செல்லும்படி பட்டியின் கதவைத் திறந்துவிடுவேன்” என்று மேய்ப்பன் அக்கறையின்றி கூறமாட்டான். ஆடு காணாமல் போனது தெரிந்ததுமே வருத்தமும் பதற்றமுமடைகிறான். ஆடுகளை மறுபடியும் மறுபடியும் எண்ணு கிறான். ஒரு ஆடு தொலந்துபோனதென உறுதி செய்த பின், தூக்கம் வராமல் போகிறது. தொண்ணூற்றொன்பதையும் மந்தையில் விட்டுவிட்டு, காணாமற்போன ஆட்டைத் தேடிச் செல்கிறான். வெளிச்சம் மறைந்து இருள் அதிகமாக அதிகமாக, செல்லும் பாதையில் ஆபத்து மேலும் மேலும் அதிகரிக்க, அந்த மேய்ப்பனின் பதற்றமும் அதிகரிக்கிறது; தேடு தலும் தீவிரமாகிறது. தொலைந்துபோன அந்த ஒரு ஆடைக் கண்டுபிடிக்க, தன்னால் முடிந்த முயற்சிகளை எல்லாம் செய்கிறான்.COLTam 186.3

    எங்கேயோ தொலைவில், முதன் முதலாக லேசாக சத்தம் கேட்ட தும், பதற்றம் தணிகிறது ! சத்தம் வந்த திசையில் செ ங்குத்தான மேடுகளில் ஏறுகிறான், செங்குத்துப் பாறையின் விளிம்பிற்கே சென்ல்கிறான். ஆட்டின் சத்தம் வரவர குறைவதைக் கேட்டு, அது சாகிற நிலையில் இருப்பது புரிகிறது. இறுதியில் அவனது முயற்சிக்கு பலன் கிடைக்கிறது; தொலைந்ததைக் கண்டுபிடிக்கிறான். தனக்கு ஏராளமான தொந்தரவைக் கொடுத்து விட்டதாக அதை அவன் திட்டவில்லை. சாட்டையால் அதை அடிக்கவு மில்லை. அதை நடத்திச் செல்லவும் அவன் முயல வில்லை. நடுங்கிக்கொண்டிருக்கும் அந்த ஆட்டை மகிழ்ச்சியோடு தன் தோள்களில் போட்டுக்கொள்கிறான்; அது அடிபட்டு, காயப்பட் டிருந்ததாகக் கண்டால், அதை தன்னுடைய மடியில் வைத்து, கரங்களுக்குள் அணைத்து, தன்னுடைய இதய வெப்பத்தால் அது பிழைக்கும்படி அனல் மூட்டுகிறான். தன் முயற்சி வீண்போக வில்லையென்கிற நன்றியுணர்வோடு, அதை மீண்டும் மந்தைக்குக் கொண்டு செல்கிறான்.COLTam 186.4

    தேவனுக்கு நன்றி. ஆட்டைக் கண்டுபிடிக்காமல் மேய்ப்பன் வருத்தத்தோடு திரும்பி வந்ததாக அவர் நமக்குக் காட்டவில்லை. தோல்வியைப் பற்றியல்ல, வெற்றிகரமாகக் கண்டுபிடித்து, மகிழ்ச்சியடைந்தது பற்றிதான் கூறுகிறது. தேவ மந்தையலிருந்து தொலைந்து போகும் எந்த ஆட்டையும் அவர் கண்டுகொள்ளாமல் விடுவதில்லை, யாரும் உதவியின்றி விடப்படுவதில்லை என்பதற்கு தேவன் தருகிற நிச்சயம் இது. கிரயத்திற்கு வாங்கப் படுவதற்கு தங்களை ஒப்புக்கொடுக்கிற ஒவ்வொருவரையும் பாவக்குழியிலிருந்தும், பாவப்புதர்களினின்றும் கிறிஸ்து மீட்பார்.COLTam 187.1

    துன்மார்க்கமாக நடந்துவிட்டதால், நம்பிக்கை இழந்திருக்கும் ஆத்துமாவே, தைரியங்கொள். தேவன் ஒருவேளை உன் மீறுதல்களை மன்னித்து, தம்முடைய பிரசன்னத்திற்குள் வர உன்னை அனுமதிக்கலாமென நினைக்கவேண்டாம். தேவன் முதல் அடி எடுத்து வைத்துவிட்டார். நீ அவருக்கு விரோதமாகக் கலகம் செய்தபோதே, உன்னைத் தேடி வந்தார். மேய்ப்பனின் கனிவான இதயத்துடன் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் விட்டு விட்டு, தொலைந்ததைத் தேடி காட்டுக்குள் அலைந்தார். அடி பட்டு, காயப்பட்டு, மரணத்தருவாயிலிருக்கும் ஆத்துமாவைதம் அன்பின் கரங்களால் அணைத்து, சந்தோஷமாக அதை பாதுகாப்பான மந்தைக்குச் சுமந்து செல்கிறார்.COLTam 187.2

    பாவி மேல் தேவன் அன்புகாட்டவேண்டுமானால் முதலாவது அவன் மனந்திரும்பவேண்டும் என்று யூதர்கள் போதித்தார்கள். பரலோகத்தின் தயவைச் சம்பாதித்துத் தருகிற கிரியைதான் மனந் திரும்புதல் என்பது அவர்களுடைய கருத்து. ‘இவர் பாவிகளை ஏற்றுக்கொள்கிறார்” என்று பரிசேயர்கள் திகைப்போடும், கோபத்தோடும் பேசியதற்கு இந்த எண்ணம்தான் காரணமாக இருந்தது. மனந்திருந்தியவர்களைத் தவிர வேறு யாரையும் அவர் தம் பக்கம் வரவிடுவதில்லை என்று நினைத்திருந்தார்கள். ஆனால், நாம் தேவனைத் தேடிச்செல்வதால் அல்ல, தேவன் நம்மைத் தேடிவருவதால் தான் இரட்சிப்பு கிடைக்கிறது என்பதை காணாமற்போன ஆடு குறித்த உவமையில் கிறிஸ்து போதிக்கிறார். “உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்.” ரோமர் 3:11,12. மனந்திரும்புதல் என்பது தேவனை நம்மேல் அன்புகூரச்செய்கிற கருவியல்ல; மாறாக, நாம் மனந்திரும்பும்படி அவர் தம் அன்பை நமக்கு வெளிப்படுத்தி யிருப்பதாலேயே நாம் மனந்திரும்புகிறோம்.COLTam 187.3

    காணாமற்போன ஆட்டை மந்தைக்குக் கொண்டுவந்ததும், மேய்ப்பன் நன்றிப் பெருக்கோடு மகிழ்ச்சிப்பொங்க இனிமை யாகப் பாடுகிறான். அவன் தன் சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து, ‘காணாமற்போன என் ஆட்டைக் கண்டு பிடித்தேன். என்னோடேகூடச் சந்தோஷப்படுங்கள் என்று சொல்கிறான். அதுபோல, ஆடுகளின் பிரதான மேய்ப்பர் காணா மற்போன ஓர் ஆட்டைக் கண்டுபிடிக்கும் போது, வானமும் பூமியும் இணைந்து, நன்றிபெருக்கால், களிகூர்ந்து பாடுகிறது.COLTam 188.1

    ” மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணுற்றொன்பது நீ திமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டா யிருக்கும்.” ‘பரிசேயரே நீங்கள்தாம் பர லோகத்திற்குச் செல்லக்கூடுமென நினைக்கிறீர்கள். உங்கள் செ ந்த நீதி உங்களைக் காப்பாற்றுமெனக் கருதுகிறீர்கள். நீங்கள் மனந்திரும்ப அவசியமில்லையென்று கருதினால், என் ஊழியம் உங்களுக்கு பயன்தராதென அறியுங்கள். தங்களது தரித் திரத்தையும் பாவ நிலையையும் உணருகிற இந்த ஆத்துமாக்களையே மீட்கும் படி நான் வந்திருக்கிறேன். நீங்கள் புறக்கணிக் கிற தொலைந்து போன இந்த ஆத்துமாக்கள் மேல் பரலோகத் தூதர்கள் அக்கறை கொண்டுள்ளார்கள். இந்த ஆத்துமாக்களில் ஒருவர் என்னுடன் இணையும் போது, நீங்கள் குற்றஞ்சாட்டி, அவர்களைப் பரிகசிக்கிறீர்கள். ஆனால் பரலோகத் தூதர்கள் களிகூருகிறார்கள் என்பதையும், பரலோக மன்றங்களில் வெற்றிக் கீதம் முழங்குவதையும் அறிந்துகொள்ளுங்கள்” என்று இயேசு சொன்னார்.COLTam 188.2

    தேவனுக்கு எதிராக பாவம் செய்த ஒருவர் அழிக்கப்படும் போது, பரலோகத்தில் மகிழ்ச்சியுண்டாகிறதென ரபிமார்கள் சொல்வதுண்டு. ஆனால் அழிப்பது தேவனுக்கு புறம்பான ஒரு காரிய மென இயேசு போதித்தார். தேவன் சிருஷ்டித்த ஆத்துமாக்கள் தேவசாயலை மீண்டும் பெரும் போதுதான் பரலோகம் களிகூறுகிறது.COLTam 189.1

    பாவம் செய்து, தேவனைவிட்டு வெகுதூரம் சென்ற ஒருவர், தேவனிடம் திரும்ப முயலும் போது, விமர்சனம் எழும், அவரை நம்ப மறுப்பார்கள். அவர் உண்மையாகத்தான் மனந்திரும்பி யிருக்கிறாவென்று சிலர் சந்தேகப்படுவார்கள் அல்லது இந்த நபரிடம் உறுதி இல்லை . இவர் நிலைத்திருப்பார் என்று எனக்கு நம்பிக்கையில்லை” என்று கிசுகிசுப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் தேவனைப்போல அல்லாமல், சகோதரரைக் குற்றஞ்சாட்டு கிறவனான சாத்தானைப் போலச் செயல்படுகிறார்கள். இந்தத் துன்மார்க்கர் விமர்சனம் செய்து, அந்த ஆத்துமாவை அதைரியப் படுத்தவும், அவருக்கு மீண்டும் நம்பிக்கை உண்டாகதபடியும், தேவனைவிட்டு விரட்டவும் நினைக்கிறார்கள். தொலைந்து போன ஒருவர் மனந்திரும்புவதால், பரலோகத்தில் மகிழ்ச்சியுண்டாகிறது என்பதை மனந்திரும்புகிற பாவி தியானிப்பானாக. அவன் தேவ அன்பையே சார்ந்திருக்க வேண்டும், பரிசேயர்களின் சந்தேகத்தையும் பரிகாசத்தையும் கண்டு அதைரியமடையக் கூடாது.COLTam 189.2

    கிறிஸ்துவின் உவமை ஆயக்காரர்களுக்கும், பாவிகளுக்கும் பொருந்தக்கூடியதென ரபிமார்கள் கருதினார்கள்; ஆனால் அதில் விசாலமான அர்த்தம் அடங்கியிருந்தது. காணாமற் போன ஆடானது ஒவ்வொரு பாவியையும் மட்டுமல்ல, தேவதுரோகம் செய்து, பாவத்தால் அழிந்த உலகத்தையும் சுட்டிக்காட்டுவதாக கிறிஸ்து சொன்னார். தேவன் அரசாளுகிற பிரபஞ்சம் மிகமிகப் பெரியது; அதில் இந்த உலகம் சிறு அணுதான். ஆனாலும் விழுந்து போன இந்தச் சிறிய உலகம், அதாவது காணாமற் போன இந்த ஆடு, மந்தைதியிலிருக்கும் மற்ற தொண்ணூற்றொன்பது ஆடுகளை விட, அவருடைய பார்வையில் மிகவும் விலையேறப்பெற்றதாக இருக்கிறது. தொலைந்து போன இந்த உலகத்தை இரட்சிக்கும் படிக்கு, பரலோகமன்றங்களில் மிகவும் பிரியத்திற்குரிய கிறிஸ்து, தமது உன்னத நிலையிலிருந்து இறங்கினார்; பிதாவுடன் தாம் பெற்றிருந்த மகிமையை ஒதுக்கினார். இதற்காகவே பாவம் செய்திராக, அவரை நேசித்த தொண்ணுற் றொன்பது ஆடுகளான மேலோக ஜீவிகளை விட்டு இறங்கி வந்தார்; “நம்முடைய மீறுதல் களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினி மித்தம் அவர் நொறுக்கப்பட்டார்.” ஏசாயா 53:5. காணாமற்போன ஆட்டை திரும்பக்கிடைத்த சந்தோஷத்தை தாம் பெறும்படிக்கு, தமது குமாரனில் தம்மையே தேவன் தந்தார்.COLTam 189.3

    “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படு வதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்.” யோவான் 3:1. கிறிஸ்து கூறுகிறார்: ‘நீ ர் என்னை உலகத்தில் அனுப்பினது போல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்” யோவான் 17:18. கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய ச பைக்காக, என் மாம்சத்திலே நிறைவேற்று கிறேன்.’” கொலோ. 1:24. கிறிஸ்துவால் தப்புவிக்கப்பட்ட ஒவ் வோர் ஆத்துமாவும், தொலைந்து போனோருக்காக அவருடைய நாமத்தினாலே ஊழியம் செய்யும்படி அழைக்கப்படுகிறது. இஸ்ரவேலர்கள் இந்த ஊழியத்தைச் செய்ய மறுத்தார்கள். கிறிஸ்துவைப்பின்பற்றுவதாகச் சொல்லுகிறவர்களும் கூட இன்று இவ்வூழியத்தைச் செய்ய மறுப்பதில்லையா?COLTam 190.1

    வாசகரே, வழிதப்பிப்போன எத்தனை பேரை நீங்கள் தேடிச் சென்று, மீண்டும் மந்தைக்குள் அழைத்து வந்திருக்கிறீர்கள்? உங்கள் பார்வைக்கு பயனற்றவர்களாகத் தெரிவதால், உங்களுக்குப் பிடிக்காததால் ஆத்துமாக்களைப் புறக்கணிக்கும் போது, கிறிஸ்து தேடுகிற அந்த ஆத்துமாக்களை நீங்கள் அலட்சியப்படுத்துகிறீர் களென்பதை உணர்கிறீர்களா? அவர்களை நீங்கள் புறக்கணிக்கிற அந்தக் கணத்தில் தானே, நீங்கள் அவர்கள் மேல் மனதுருகியிருக்க வேண்டிய அவசியம் அதிகமாக இருந்திருக்கலாம். தொழுகைக்காகக் கூடுகிற இடங்களில், இளைப்பாறுதலுக்கா கவும் சமாதானத்திற்காகவும் ஏங்கும் ஆத்துமாக்கள் உண்டு. அவர்கள் பொறுப்பற்று வாழ்வது போலத் தெரியலாம்; ஆனால், பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலுக்கு இணங்குகிறவர்களாக இருப்பார்கள். அவர்களில் அநேகர் கிறிஸ்துவுக்காக ஆதாயப் படக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.COLTam 190.2

    காணாமற்போன ஆட்டை மீண்டும் மந்தையில் சேர்க்காவிட் டால், அது அலைந்து திரிந்து, மடிந்து போகும். கரம் நீட்டி தங்களைக் காப்பாற்ற ஆளில்லாமல், அழிவைச் சந்திக்கிற ஆத்து மாக்கள் பலர் உண்டு. பாவிகளான இவர்களைப் பார்ப்பதற்கு கடினமானவர்களாக, பொறுப்பற்றவர்களாகத் தெரியலாம். காணப்படலாம். ஆனால் மற்றவர்களுக்குக் கிடைத்த அனுகூலங்கள் இவர்களுக்கும் கிடைத்திருந்தால், உண்மையுள்ள ஆத்துமாக் களாக விளங்கியிருப்பார்கள்; பிறருக்குப் பயன்படும் விதத்தில் மேலான தாலந்தை வெளிப்படுத்தியிருப்பார்கள். அலைந்து திரியும் இந்த ஆத்துமாக்களை பரலோகத்தூதர்கள் பரிவோடு பார்க்கிறார்கள். மனிதர்களுடைய கண்கள் உலர்ந்து, இருதயங்கள் பரிதாபமற்று காணப்பட்டாலும், தேவதூதர்கள் கண்ணீர் சிந்துகிறார்கள்.COLTam 191.1

    ஓ, சோதிக்கப்பட்டு, பாவத்தில் விழுகிற ஆத்துமாக்கள் மேல், ஆத்துமாவைத் தொடுகிற அளவுக்கு ஆழமான பரிவு காணப்படு வதில்லை! - உருக்கமான உணர்வை ஆ ! காண்பதே அரிதாக இருக்கிறது. ஓ, கிறிஸ்துவின் ஆவி அதிகமாகவும், சுயத்தின் ஆவி முற்றிலும் இல்லாமலும் காணப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!COLTam 191.2

    கிறிஸ்துவின் உவமை தங்களைக் கடிந்து கொண்டதை பரிசேயர்கள் புரிந்து கொண்டார்கள். தம்முடைய ஊழியம் குறித்து அவர்கள் சொன்னவிமர்சனங்களுக்கு அவர் செவிகொடுக்காமல், ஆயக்காரர்களையும் பாவிகளையும் அவர்கள் புறக்கணித்ததை அவர் கடிந்துகொண்டார். அவர்கள் தங்கள் இதயக்கதவுகளை நிரந்தரமாக தங்களுக்கு அடைத்துவிடாதபடிக்கு, வெளிப்படை யாக அவர்களை அவர் கண்டிக்கவில்லை. ஆனால் அவர்களிடம் தேவன் எதிர்பார்க்கிற, ஆனால் அவர்கள் செய்யத்தவறிய ஊழியம் என்னவென்பதை அந்த உவமையின் மூலம் உணர்த் தினார். இஸ்ரவேலின் தலைவர்களாகிய அவர்கள் மெய்யான மேய்ப்பர்களாக இருந்திருந்தால், மேய்ப்பனின் பணியைச் செய்திருப்பார்கள். கிறிஸ்துவின் அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்தி, அவரோடு சேர்ந்து ஊழியப்பணியைச் செய்திருப்பார்கள். அவ்வாறு செய்ய மறுத்ததால், தங்களை பக்திமான்களென அவர்கள் சொன்னது பொய்யென நிரூபனமான து. கிறிஸ்துவின் இந்தக் கடிந்துகொள்ளுதலை அநேகர் கண்டுகொள்ளவில்லை; ஆனாலும் ஒரு சிலர் அவருடைய வார்த் தைகளால் உணர்வடைந்தார்கள். கிறிஸ்து பரலோகம் சென்ற பிறகு, இவர்கள் மீது பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டார். காணாமல்போன ஆடு பற்றிய உவமை சுட்டிக்காட்டிய ஊழியத்தை இவர்கள் அவருடைய சீடர்களுடன் சேர்ந்து செய்தார்கள்.COLTam 191.3