Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ஆராய்வதால் கிடைக்கிற பலன்!

    இனியும் நான் அறிந்துகொள்ள எதுவுமில்லையென யாரும் நினைக்க வேண்டாம். மனித அறிவின் ஆழத்தை அளந்து விடலாம்; இவ்வுலக ஆசிரியர்களின் படைப்புகளில் நிபுணர்களாக லாம்; ஆனால் எவ்வளவு உயரமாக, ஆழமாக, அகலமாக கற்பனையைப் பற்றவிட்டாலும் தேவனைக் கண்டு பிடிக்க முடியாது. நாம் புரிந்துகொள்ளக்கூடிய விஷயங்களையும் தாண்டி ஏராளம் உள்ளன. தேவமகிமையின் ஒரு சிறு ஒளிக்கீற்றை, அளவற்ற அறிவு மற்றும் ஞானத்தின் ஒரு சிறு புள்ளியைத்தான் நாம் கண்டிருக்கிறோம். சுரங்கத்தின் மேற்பரப்பில் வேலை செய்கிறவர்கள் போல இருக்கிறோம்; விலையுயர்ந்த தங்கத் தாது உள்ளே புதைந்திருக்கும்; அதைத் தோண்டுகிறவர் அதற்கான பலனை அடைவார். கூரான ஆயுதத்தால், சுரங்கத்தை மேலும் மேலும் ஆழமாகத் தோண்டி னால், மகிமையான பொக்கிஷம் கிடைக்கும். சரியான விசுவாசத்தின் மூலமாக, தெய்வீக அறிவானது மானுட அறிவாக மாறுகிறது.”COLTam 110.3

    கிறிஸ்துவின் ஆவியோடு வேதவாக்கியங்களை ஆராய்கிற எவரும் அதற்கான பெலனைப் பெறாமல் போவதில். சிறு குழந்தையைப் போலக் கற்றுக்கொள்ள மனிதன் ஆயத்தமாக இருந்தால், தேவனுக்கு முற்றலும் தன்னை அர்ப்பணித் தால், அவருடைய வார்த்தையில் சத்தியத்தைக் கண்டடை வான். மனிதர்கள் கீழ்ப் படிந்தால், தேவனுடைய அரசாங்கத்தின் திட்டத்தைப் புரிந்துகொள் வார்கள். அவர்கள் அதிகமாகக் கண்டு கொள்ளும்படி பரலோக உலகமான தனது கிருபையின், மகிமையின் அறைகளைத் திறந்துவிடும். சத்தியத்தின் சுரங்கங்களில் தேடிப்பார்ப்பதால் மனிதர்களுடைய தரம் மேம்படுகிறது; எனவே, இப்போது இருப்பதைவிட முற்றிலும் வித்தியாசமானவர்களாக மனிதர்கள் மாறுவார்கள். மீட்பின் இரகசியம், கிறிஸ்து மனிதனாக வந்தது, அவர் பாவ நிவாரண பலியாக மரித்தது பற்றி எதுவும் தெரியாதவர்களாக இப்போது இருப்பது போல இருக்கமாட்டோம். அவற்றை ஆழமாக அறிந்துகொள்வோம்; எல்லாவற்றையும் விட அவற்றை அதிகமாகப் போற்றுவோம்.COLTam 111.1

    கிறிஸ்துவானவர் பிதாவை நோக்கி ஜெபித்தபோது, உலகிற்கு ஒரு பாடத்தைச் சொன்னார். மனதிலும், ஆத்துமாவிலும் பொறிக்கவேண்டிய பாடம் அது ;’‘ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன் . யோவான் 17:3. இதுதான் மெய்யான கல்வி ; அது வல்லமையைக் கொடுக்கிறது. தேவனையும் அவர் அனுப்பின இயேசு கிறிஸ்துவையும் அனுபவரீதியாக அறிவது, மனிதனை தேவசாயலாக மாற்றுகிறது. மனிதன் தன்னைக் கட்டுப்படுத்துவதற்கான திறனைக் கொடுக்கிறது. இழிவான சுபாவத்தின் உந்துவேகங்களையும் உணர்வுகளையும் மனதின் மேலான ஆற்றல்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது. அதைப் பெற்றிருப்ப வரை, தேவனுடைய பிள்ளையாகவும் பரலோகத்தின் சுதந்தரவாளியாகவும் மாற்றுகிறது. முடிவில்லாதவரின் மனதோடு அவனை ஐக்கியப்படச்செய்து, சர்வலோகத்தின் ஈடு இணையற்ற பொக்கிஷங்களை அவனுக்குத் திறந்து விடுகிறது.COLTam 111.2

    தேவ வார்த்தையை ஆராய்வதன் மூலம் கிடைக்கிற அறிவு இது. இந்தப் பொக்கிஷத்தைப் பெறும் படி தன்னிடமுள்ள அனைத்தையும் விட்டு விடுகிற ஒவ்வோர் ஆத்துமாவும் இதைக் கண்டடையலாம்.COLTam 112.1

    “ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறது போல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்ன தென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.” நீதிமொழிகள் 2:3-5.COLTam 112.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents