Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    21 - mயோசேப்பும் அவனுடைய சகோதரர்களும்

    நங்கிக் கொண்டிருந்த பஞ்சத்திற்கான ஆயத்தங்கள் செழிப் பான வருடங்களின் துவக்கத்திலேயே துவங்கின. யோசேப்பின் நடத்துதலின்கீழ் எகிப்து தேசத்தில் இருந்த முக்கியமான இடங்கள் எல்லாவற்றிலும் மகத்தான களஞ்சியங்கள் எழுப்பப்பட்டு, எதிர்பார்த்திருந்த அறுவடையின் ஏராளங்களை பாதுகாக்கும்படி போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சேர்த்துவைக் கப்பட்டிருந்த தானியத்தின் அளவுகணக்கிற்கு மிஞ்சும் வரையிலும் செழிப்பான ஏழு வருடங்களிலும் இதே கொள்கை தொடர்ந்தது.PPTam 264.1

    இப்போது யோசேப்பின் முன் அறிவிப்பின்படியே பஞ்சமான ஏழு வருடங்கள் வரத்தொடங்கின. சகல தேசங்களிலும் பஞ்சம் உண் டாயிற்று; ஆனாலும் எகிப்து தேசமெங்கும் ஆகாரம் இருந்தது. எகிப்துதேசமெங்கும் பஞ்சம் உண்டான போது, ஜனங்கள் உணவுக்காகப் பார்வோனை நோக்கி ஓலமிட்டார்கள்; அதற்குப் பார்வோன்: நீங்கள் யோசேப்பினிடத்துக்குப் போய், அவன் உங்களுக்குச் சொல்லுகிறபடி செய்யுங்கள் என்று எகிப்தியர் எல்லாருக்கும் சொன்னான். தேசமெங்கும் பஞ்சம் உண்டானபடியால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தி யருக்கு விற்றான்PPTam 264.2

    பஞ்சம் கானானிலும் பரவ, யாக்கோபு குடியிருந்த தேசத்தின் பகுதியில் அது கடுமையாக உணரப்பட்டது. எகிப்தின் இராஜாவால் செய்யப்பட்டிருந்த ஏராளமான ஏற்பாடுகளைக் குறித்து கேள்விப் பட்டு, யாக்கோபின் பத்து குமாரர்கள் தானியம் கொள்ளும்படி அங்கே பிரயாணித்தனர். வந்து சேர்ந்தபோது, இராஜாவின் பிரதிநிதியிடம் அவர்கள் நடத்தப்பட்டு, மற்ற விண்ணப்பதாரர் களோடு தேசத்தின் அதிபதியின் முன்தங்களை சமர்ப்பிக்கும்படியாக வந்தனர். அவர்கள் : முகங்குப்புறத் தரையிலே விழுந்து அவனை வணங்கினார்கள். அவனுடைய எபிரெய பெயர் இராஜா அவன் மேல் வைத்த பெயருக்கு மாற்றப்பட்டிருந்ததினாலும், எகிப்தின் பிரதம மந்திரிக்கும் இஸ்மவேலர்களிடம் தாங்கள் விற்றுப்போட்ட பையனுக்குமிடையே மிகக்குறைவான ஒற்றுமையே இருந்ததினாலும், யோசேப்பு அவர்களைத் தன் சகோதரர் என்று அறிந்தும், அவர்கள் அவனை அறியவில்லை. தன் சகோதரர்கள் குணிந்து வணங்கினதை யோசேப்பு கண்டபோது, அவனுடைய சொப் பனங்கள் மனதில் வர், கடந்த காலத்தின் காட்சிகள் தெளிவாக அவன் முன் எழும்பின. அந்தக் கூட்டத்தை தீர நோட்டமிட்ட அவ னுடைய கூரிய கண்கள், பென்யமீன் அவர்களிடையே இல்லை என்பதை கண்டுபிடித்தது. இந்தக் காட்டுமிராண்டித்தனமான மனிதர்களின் துரோகமிக்க கொடூரத்திற்கு அவனும் பலியாகி விட்டானா? உண்மையை அறிய தீர்மானித்தான். நீங்கள் வேவு காரர், தேசம் எங்கே திறந்து கிடக்கிறது என்று பார்க்க வந்தீர்கள் என்று கடுமையாகக் கூறினான்.PPTam 265.1

    அவர்களோ : அப்படியல்ல, ஆண்டவனே, உமது அடியாரா கிய நாங்கள் தானியம் கொள்ள வந்தோம். நாங்கள் எல்லாரும் ஒரு தகப்பனுடைய பிள்ளைகள், நாங்கள் நிஜஸ்தர்; உமது அடி யார் வேவுகாரர் அல்ல என்று பதிலளித்தார்கள். தான் அவர்களோடிருந்தபோது அவர்கள் கொண்டிருந்த அதே அகந் தையான ஆவியை இன்னும் கொண்டிருக்கிறார்களா என்பதை அறியவும், அதோடு அவர்கள் குடும்பத்தைக் குறித்த மற்ற சில விவரங்களைப் பெற்றுக்கொள்ளவும் அவன் விரும்பினான். அவர்களுடைய வார்த்தைகள் எவ்வளவு ஏமாற்றக்கூடியவைகள் என்பதையும் அவன் நன்கு அறிந்திருந்தான். அவன் மீண்டும் அவர்களைக் குற்றப்படுத்தினான். அவர்கள் : உமது அடியாராகிய நாங்கள் பன்னிரண்டு சகோதரர், கானான் தேசத்தில் இருக்கிற ஒரு தகப்பன் புத்திரர், இளையவன் இப்பொழுது எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்; ஒருவன் காணாமற்போனான் என்றனர்.PPTam 265.2

    அவர்களுடைய கூற்றின் உண்மையை சந்தேகிப்பவன் போலவும், இன்னும் அவர்களை வேவுகாரர்களாகவே பார்ப்பது போலவும் காண்பித்து, அவர்கள் அங்கே தங்கியிருக்கவும், அவர்களில் ஒருவன் போய் இளைய சகோதரனை கொண்டு வரவும் அறிவித்தான். இதனால் அவர்கள் சொல்லுவதில் உண்மை உண்டோ என்று சோதிக்கப்போவதாக அதிபதி அறிவித்தான். இதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால், அவர்கள் வேவுகாரர்களாக நடத்தப்படவேண்டும். ஆனால் அப்படிப்பட்ட ஏற்பாட்டிற்கு யாக்கோபின் குமாரர்கள் இணங்கமுடியாது.PPTam 266.1

    ஏனெனில் இதைச் செயல்படுத்த ஆகும் நேரம், அவர்களுடைய குடும்பங்களை ஆகாரமின்றி துன்பப்படுத்தும். மேலும் தங்களுடைய சகோதரர்களை சிறையில் விட்டவனாக அவர்களில் யார் தனிமையான பிரயாணத்தை மேற்கொள்ளுவான்? அவர்கள் பெரும்பாலும் மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள் அல்லது அடிமைகளாக்கப்படுவார்கள் என்பது போலவும், பென்யமீன் கொண்டுவரப்பட்டால், அவர்களுடைய விதியையே அவனும் பகிர்ந்துகொள்ள வேண்டியதிருக்கும் என்பது போலவும் காணப்பட்டது. மீதியிருக்கிற ஒரே குமாரனையும் இழப்பதினால் தங்கள் தகப்பன்மேல் கூடுதலான துக்கத்தைக் கொண்டு வருவதற்குப்பதிலாக, ஒன்றாகவே இருந்து துன்பப்படுவதற்கு அவர்கள் தீர்மானித்தனர். அவ்வாறாகவே அவர்கள் சிறையில் போடப்பட்ட னர். அங்கே மூன்று நாட்கள் இருந்தனர்.PPTam 266.2

    யோசேப்பு தன் சகோதரர்களைவிட்டு பிரிக்கப்பட்டதிலிருந்து இந்த யாக்கோபின் குமாரர்கள் தங்கள் குணங்களில் மாறியிருந்தனர். அப்போது பொறாமையும் கொந்தளிப்பும் வஞ்சகமும் கொடு மையும் பழிவாங்குகிறதுமான குணங்களைக் கொண்டிருந்தார்கள். துன்பத்தின் வழியாக சோதிக்கப்பட்ட இப்போது சுயநலமற்றவர்களாகவும் ஒருவருக் கொருவர் உண்மையுள்ளவர்களாகவும் தங்கள் தகப்பனோடு ஈடுபாடுள்ளவர்களாகவும், அவர்கள் தாமே நடுவயதுள்ள மனிதர்களாக அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டிருந்தவர்களாகவும் காணப்பட்டனர்.PPTam 266.3

    எகிப்தின் சிறைச்சாலையில் இருந்த மூன்று நாட்களும் சகோ தரர்கள் தங்கள் கடந்தகாலப் பாவங்களை நினைத்துப்பார்த்தபோது கசப்பான வருத்தம் நிறைந்த நாட்களாக இருந்தன. பென்யமீன் கொண்டுவரப்படாத பட்சத்தில் அவர்கள் வேவுகாரர்கள்தான் என்ற உணர்வு உறுதியாகிவிடும் என்பது போல் தோன்றியது. மேலும் பென்யமீனை கொண்டுவர தகப்பனிடமிருந்து ஒப்புதல் வாங்குவதற்கு அவர்கள் நம்பிக்கையற்றவர்களாகவும் இருந்தனர். மூன்றாம் நாளிலே யோசேப்பு சகோதரர்களை தன் முன் கொண்டு வரச் செய்தான். அவர்களை அதற்குமேல் தங்கவைக்க அவன் துணிவற்றிருந்தான். ஏற்கனவே அவனுடைய தகப்பனும் அவ ரோடு இருக்கும் குடும்பங்களும் ஆகாரமின்றி துன்பப்பட்டுக் கொண்டிருப்பார்கள். நான் தேவனுக்குப் பயப்படுகிறவன், நீங்கள் உயிரோடே இருக்கும்படிக்கு ஒன்று செய்யுங்கள். நீங்கள் நிஜஸ்தரானால், சகோதரராகிய உங்களில் ஒருவன்காவற்கூடத்தில் கட்டுண்டிருக்கட்டும், மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் கொண்டு போய்க் கொடுத்து, உங்கள் இளைய சகோதரனை என்னிடத்துக்கு அழைத் துக் கொண்டு வாருங்கள், அப்பொழுது உங்கள் வார்த்தைகள் மெய்யென்று விளங்கும்; நீங்கள் சாவதில்லை என்றான். தங்களுடைய தகப்பன்பென்யமீனை தங்களோடு அனுப்புவார் என்பதைக் குறித்த மிகக் குறைவான நம்பிக்கையையே வெளிக்காட்டினாலும் இந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்ள அவர்கள் இணங்கினர். யோசேப்பு ஒரு மொழிபெயர்ப்பாளர் வழியாக அவர்களோடு பேசினான். ஆளுநர் தங்களைப் புரிந்துகொள்ளுவார் என்பதைக் குறித்த எந்த யோசனையுமின்றி, அவருடைய பிரசன்னத்திலே அவர்கள் ஒருவரோடொருவர் சுதந்தரமாகப் பேசிக்கொண்டனர். நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மன வியாகுலத்தை நாம் கண்டும், அவனுக்குச் செவிகொடா மற்போனோமே, ஆகையால், இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது. என்று யோசேப்பை தாங்கள் நடத்தின் விதத்தைக் குறித்து அவர்கள் தங்களைக் குற்றப்படுத்திக்கொண்டனர். தோத்தானில் அவனை விடுவிக்கும்படி திட்டமிட்டிருந்த ரூபன். இளைஞனுக்கு விரோத மாகப் பாவஞ்செய்யாதிருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்ல வில்லையா? நீங்கள் கேளாமற்போனீர்கள்; இப்பொழுது, இதோ, அவன் இரத்தப்பழி நம்மிடத்தில் வாங்கப்படுகிறது என்று சேர்த் துக்கொண்டான். கவனித்துக்கொண்டிருந்த யோசேப்பு தன் உணர் வுகளைக் கட்டுப்படுத்த முடியாதவனாக வெளியே சென்று அழு தான். திரும்பி வந்து, சிமியோன் அவர்கள் முன்பாக கட்டப்பட்டு மீண்டும் சிறையில் வைக்கப்பட்ட கட்டளையிட்டான். தங்க ளுடைய சகோதரனை கொடுமையாக நடத்தத் தூண்டியவனும், அதில் முக்கியமாக செயல்பட்டவனும் சிமியோன்தான். இந்தக் காரணத்தினால் அவன் மேல் அந்தத் தெரிந்து கொள்ளுதல் விழுந்தது.PPTam 266.4

    தன் சகோதரர்களை பிரிந்து செல்ல அனுமதிக்கு முன், அவர் களுக்கு தானியம் கொடுக்கப்படவும் ஒவ்வொருவருடைய பண மும் அவர்கள் சாக்கின் வாயிலே இரகசியமாக வைக்கப்படவும் வேண்டும் என்று யோசேப்பு சொல்லியிருந்தான். வீடு நோக்கிச் செல்லும் பிரயாணத்தில் மிருகங்களுக்கான தீவனமும் கொடுக்கப் பட்டிருந்தது. வழியில் அந்தக் கூட்டத்தில் ஒருவர் தன்னுடைய சாக் கைத் திறந்தபோது, தன்னுடைய வெள்ளிப்பணப்பை அதிலேயே இருக்கிறதைக் கண்டு ஆச்சரியமடைந்தார். இதை மற்றவர்களுக்கு அறிவித்தபோது, அவர்கள் எச்சரிப்படைந்து குழம்பி ஒருவரை யொருவர் நோக்கி தேவன் நமக்கு இப்படிச் செய்தது என்ன என்றார்கள். இதை ஆண்டவரிடமிருந்து அவர்களுக்கு வந்த நன் மையின் அடையாளமாகக் கருத வேண்டுமா? அல்லது அவர்களை அவர்களுடைய பாவங்களுக்காக தண்டிக்கும்படியும், இன்னும் ஆழமான துன்பத்திற்குள் மூழ்கடிக்கும்படியும் இப்படி நடக்க அவர் அனுமதித்தாரா? தங்களுடைய பாவங்களை தேவன் பார்த்திருந்தார் என்பதையும், அவர்களை இப்போது தண்டிக்கிறார் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.PPTam 268.1

    யாக்கோபு தன் குமாரர்கள் திரும்பி வருவதற்காக எதிர்பார்ப் போடு காத்திருந்தான். அவர்கள் வந்து, நடந்த எல்லாவற்றையும் தங்கள் தகப்பனுக்கு அறிவித்தபோது, அந்த முழு பாளயமும் ஆவலோடு அவர்களை சுற்றிக் கூடியது. எச்சரிப்பும் பயமும் ஒவ் வொரு இருதயத்தையும் நிரப்பியது. எகிப்திய ஆளுநரின் நட வடிக்கை தீமையின் வடிவத்தை சுட்டிக்காட்டுவது போலத் தோன்ற, அவர்கள் தங்கள் சாக்குகளைத் திறந்தபோது, தங்களுடைய பணம் ஒவ்வொருவருடைய பையிலும் காணப்பட்டதினால் அந்த பயம் உறுதிப்படுத்தப்பட்டது . வயதான தகப்பன் தன்னுடைய துயரத்தில், என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள், யோசேப்பும் இல்லை; சிமியோனும் இல்லை, பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது என்று பயத்தில் கூறினான். அதற்கு ரூபன் அவனை என் கையில் ஒப்புவியும், நான் அவனைத் திரும்ப உம்மிடத்தில் கொண்டு வரு வேன்; அவனைக் கொண்டு வராவிட்டால், என் இரண்டு குமாரரையும் கொன்று போடும் என்று பதில் கொடுத்தான். அவனுடைய அவசரமான பேச்சுயாக்கோபின் மனதை அமைதிப்படுத்தவில்லை. என் மகன் உங்களோடே கூடப் போவதில்லை; அவன் தமையன் இறந்து போனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான், நீங்கள் போகும் வழியில் இவனுக்கு மோசம் நேரிட்டால், நீங்கள் என் நரைமயிரைச்சஞ்சலத்தோடேபாதாளத்தில் இறங்கப்பண்ணுவீர்கள். என்பதாக அவனுடைய பதில் இருந்தது.PPTam 268.2

    ஆனால் பஞ்சம் தொடர்ந்தது. இந்தக்காலத்தில் எகிப்திலிருந்து வாங்கி வந்த தானியம் ஏறக்குறைய செலவழிந்து போனது. பென்யமீன் இல்லாமல் எகிப்திற்குத் திரும்பிச் செல்லுவது வீண் என்பதை யாக்கோபின் குமாரர்கள் நன்கு அறிந்திருந்தனர். அவர்கள் தங்கள் தகப்பனுடைய தீர்மானத்தை மாற்றுவதில் நம்பிக் கையற்றவர்களாக, மௌனமாக காத்திருந்தனர். நெருங்கிக்கொண்டிருந்த பஞ்சத்தின் நிழல் ஆழமும் அதிக ஆழமுமாகிக்கொண்டிருந்தது. பாளயத்திலிருந்த ஒவ்வொருவரின் ஏக்கம் தோய்ந்த முகத்திலும் அவர்களுடைய தேவையை அந்த வயதான மனிதன் படித்தான். கடைசியாக, நீங்கள் திரும்பப் போய், நமக்குக் கொஞ் சம் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றான்.PPTam 269.1

    யூதா : உங்கள் சகோதரன் உங்களோடே கூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களுக்குச் சத்தியமாய்ச் சொன்னான். எங்கள் சகோதரனை நீர் எங்களோடேகூட அனுப்பினால், நாங்கள் போய், உமக்குத் தானியம் வாங்கிக்கொண்டு வருவோம். அனுப்பாவிட்டால், நாங்கள் போகமாட்டோம்; உங்கள் சகோதரன் உங்களோடேகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களோடே சொல்லியிருக்கிறான். என்றான். தகப்பனுடைய தீர்மானம் அசையத் துவங்கியதைக் கண்டு, கூடவே நீரும் நாங்களும் எங்கள் குழந்தைகளும் சாகாமல் உயிரோடிருக்கும்படி, நாங்கள் புறப்பட்டுப்போகிறோம், பிள்ளையாண்டானை என் னோடே அனுப்பும். அவனுக்காக நான் உத்தரவாதம் பண்ணுவேன்; அவனை என்னிடத்திலே கேளும், நான் அவனை உம்மிடத்தில் கொண்டு வந்து, உமக்கு முன்பாக நிறுத்தாமற்போனால், எந்நாளும் அந்தக் குற்றம் என்மேல் இருப்பதாக என்றான். அவன் தன் சகோதரனுக்காக உத்தரவாதம் பண்ணுவதாகவும், பென்யமீனை தன் தகப்பனிடத்தில் திரும்பக் கொண்டுவராதபட்சத்தில் அந்த குற்றத்தை எந்நாளும் சுமப்பதாகவும் கூறினான்.PPTam 269.2

    யாக்கோபினால் அதற்கு மேல் தன்னுடைய ஒப்புதலை தராமல் இருக்கமுடியவில்லை. தன் குமாரர்களை பயணத்திற்கு ஆயத்தப்படும்படி கூறினான். அந்த அதிபதிக்கு பரிசாக, பஞ்சம் வீணாக்கியிருந்த அந்த தேசம் கொடுத்திருந்த கொஞ்சம் பிசின் தைலமும், கொஞ்சம் தேனும், கந்தவர்க்கங்களும், வெள்ளைப் போளமும், தெரிந்து கொட்டைகளும், வாதுமைக்கொட்டைகளும் போன்ற பொருட்களையும், இரண்டு மடங்கு பணத்தையும் எடுத் துக்கொள்ளும்படி கூறினான். உங்கள் சகோதரனையும் கூட்டிக் கொண்டு, அந்த மனிதனிடத்துக்கு மறுபடியும் போங்கள் என்றான். சகோதரர்கள் சந்தேகமான தங்களுடைய பிரயாணத்திற்காக பிரிந்து செல்லும் தருவாயில் வயதான தகப்பன் எழுந்து தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து : அந்த மனிதன் அங்கிருக்கிற உங்கள் மற்றச் சகோதரனையும் பென்யமீனையும் உங்களுடனே அனுப்பி விடும்படிக்கு, சர்வவல்லமையுள்ள தேவன் அவன் சமுகத்தில் உங்களுக்கு இரக்கங்கிடைக்கப்பண்ணுவாராக, நானோ பிள்ளை யற்றுப்போனவனைப்போல் இருப்பேன் என்று ஜெபித்தான்,PPTam 269.3

    மீண்டும் அவர்கள் எகிப்திற்குப் பிரயாணப்பட்டு யோசசேப் பின் முன் தங்களை நிறுத்தினர். அவன் கண்கள் அவனுடைய சொந்தத் தாயின் குமாரனான பென்யமீன் மேல் விழுந்தபோது, அவன் ஆழமாக அசைக்கப்பட்டான். என்றாலும் தன்னுடைய உணர்வுகளை மறைத்து, அவர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் அவர்கள் தன்னோடு சாப்பிடும்படியான ஆயத்தத்தைச் செய்யவும் கட்டளையிட்டான். அதிபதியின் மாளிகைக்கு நடத்திச் செல்லப்பட்டதினால் சகோதரர்கள் அதிக எச்சரிப்பு அடைந்து, தங்கள் சாக்குகளில் காணப்பட்ட பணத்திற்கான கணக்குச் சொல்லும்படியாக அழைக்கப்பட்டிருக்கின்றனர் என்று பயந்தனர். அவர்களை அடிமையாக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தும்படியாக அது வேண்டுமென்றே அங்கே வைக்கப்பட்டது என்று அவர்கள் நினைத்தனர். தங்களுடைய துயரத்தில், தாங்கள் எகிப்திற்கு வந்த சூழ்நிலைகளை அந்த வீட்டு விசாரணைக்காரனிடம் விவரித்து, தங்கள் குற்றமின்மையை நிரூபிப்பதற்காக, தங்கள் சாக்குகளில் காணப்பட்ட பணத்தை திரும்ப கொண்டுவந்திருப்பதாகவும், அதோடு உணவு வாங்குவதற்கான மற்ற பணத்தையும் கொண்டுவந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கூடவே நாங்கள் முன் கொடுத்த பணத்தை எங்கள் சாக்குகளில் போட்டது இன்னார் என்று அறியோம் என்றனர். அந்த மனிதன் : உங்களுக்குச் சமாதானம், பயப்பட வேண்டாம், உங்கள் தேவனும் உங்கள் தகப் பனுடைய தேவனுமாயிருக்கிறவர் உங்கள் சாக்குகளில் அதை உங்களுக்குப் புதையலாகக் கட்டளையிட்டார்; நீங்கள் கொடுத்த பணம் என்னிடத்தில் வந்து சேர்ந்தது என்று பதில் கொடுத்தான். அவர்களுடைய வேதனையான எதிர்பார்ப்பு அவர்களிடமிருந்துPPTam 270.1

    போக, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டசிமியோன் அவர்களோடு சேர்ந்தபோது, தேவன் மெய்யாகவே தங்களிடம் கிருபையாக இருக்கிறார் என்று அவர்கள் உணர்ந்தனர்.PPTam 271.1

    அதிபதி மீண்டும் அவர்களைச் சந்தித்தபோது, தங்களுடைய பரிசுகளை அவன் முன் வைத்து, தாழ்மையோடு தரைமட்டும் குனிந்து, அவனை வணங்கினார்கள். மீண்டும் அவனுடைய செ பாப்பனங்கள் அவன் மனதிற்கு வந்தது. தன்னுடைய விருந்தாளிகளை வாழ்த்திய பின் நீங்கள் சொன்ன முதிர்வயதான உங்கள் தகப் பன் சுகமாயிருக்கிறாரா? அவர் இன்னும் உயிரோடிருக்கிறாரா? என்று தீவிரமாக விசாரித்தான். எங்கள் தகப்பனாராகிய உமது அடியான் சுகமாயிருக்கிறார், இன்னும் உயிரோடிருக்கிறார் என்று மீண்டும் வணங்கி பதில் கூறினர். பின்னர் அவன் கண்கள் பென்ய மீன் மீது தங்க அவன் : நீங்கள் எனக்குச் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா என்று கேட்டு, மகனே, தேவன் உனக்குக் கிருபை செய்யக்கடவர் என்றான். வேதனையான உணர்வுகளால் மேற்கொள்ளப்பட்டவனாக வேறு எதுவும் சொல்ல முடியாது அறைக்குள்ளே போய், அங்கே அழுதான்.PPTam 271.2

    தன்னை அடக்கிக் கொண்டவனாக அவன் திரும்பிவர அனைவரும் விருந்திற்குச் சென்றனர். இனச் சட்டங்களின்படி, வேறு எந்த தேசத்தாரோடும் சேர்ந்து உணவு உண்ண எகிப்தியர் தடை செய்யப்பட்டிருந்தனர். எனவே யாக்கோபின் குமாரர்கள் ஒரு மேசையில் அமர, ஆளுநர் தன்னுடைய உயர்ந்த பதவியினி மித்தம் தனியாகச் சாப்பிட, எகிப்தியர்களுக்கும் தனித்தனி மேசை இருந்தது. அனைவரும் அமரவைக்கப்பட்டபோது, சகோதரர்கள் தங்களுடைய வயதிற்கேற்ப மிகச்சரியான வரிசையில் அமர்த்தப் பட்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். யோசேப்பு தனக்கு முன் வைக்கப்பட்டிருந்த போஜனத்தில் அவர்களுக்குப் பங்கிட்டு அனுப்பினான், ஆனால் பென்யமீனுடையது அவர்களுடையதைப் பார்க்கிலும் ஐந்து மடங்கு அதிகமாக இருந்தது. பென்யமீனுக்குக் காட்டப்பட்ட இந்த தயவின்வழியாக, இளைய சகோதரனும் தன்னிடம் வெளிக்காட்டப்பட்டிருந்த அதே பகையோடும் வெறுப் போடும் நடத்தப்பட்டானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அவன் நம்பியிருந்தான். யோசேப்பு தங்கள் மொழியை புரிந்து கொள்ள மாட்டான் என்று இன்னமும் நினைத்தவர்களாக சகோதரர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டனர். இவ்வா றாக அவர்களுடைய உண்மையான உணர்வுகளை அறிந்துகொள்ளும் நல்ல சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைத்தது. அவர்களை மேலும் சோதிக்க விரும்பினவனாக, அவர்கள் பிரிந்து செல்லும் முன் தன்னுடைய சொந்த பான பாத்திரமாகிய வெள்ளிப்பாத்திரம் இளையவனின் சாக்கிற்குள் மறைக்கப்பட வேண்டும் என்று அவன் கட்டளையிட்டான்.PPTam 271.3

    மகிழ்ச்சியோடு அவர்கள் திரும்ப பயணித்தனர். சிமியோனும் பென்யமீனும் அவர்களோடு இருக்க, அவர்களுடைய மிருகங்கள் தானியத்தால் சுமையேற்றப்பட்டிருக்க, தங்களைச் சூழவிருந்த தைப்போன்று தோன்றிய ஆபத்துகளிலிருந்து தாங்கள் பாதுகாப் பாகத் தப்பித்துவிட்டதாக அனைவரும் உணர்ந்தனர். அவர்கள் பட்டணத்தின் எல்லையைத்தான் எட்டியிருப்பார்கள். நீங்கள் நன்மைக்குத் தீமை செய்தது என்ன? அது என் எஜமான் பானம் பண்ணுகிற பாத்திரம் அல்லவா? அது போனவகை ஞானதிருஷ் டியால் அவருக்குத் தெரியாதா? நீங்கள் செய்தது தகாத காரியம். என்கிற இழிவானவிசாரணையோடு ஆளுநரின் உக்கிராணக்காரன் அவர்களை மேற்கொண்டான். இந்த பாத்திரம் அதனுள் வைக்கப்படும் விஷத்தைக் கண்டுபிடிக்கும் வல்லமை கொண்டதாக கருதப்பட்டிருந்தது. அந்தக்காலத்தில் இப்படிப்பட்ட பாத்திரங்கள் விஷத்தினால் செய்யப்படும் கொலைகளுக்கு எதிரான பாதுகாப் பாக மிக மதிப்போடு கருதப்பட்டிருந்தன.PPTam 272.1

    வீட்டு விசாரணைக்காரனின் குற்றச்சாட்டிற்கு : ஆண்டவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறது என்ன? இப்படிப் பட்ட காரியத்துக்கும் உம்முடைய அடியாராகிய எங்களுக்கும் வெகுதூரம் . எங்கள் சாக்குகளின் வாயிலே நாங்கள் கண்ட பணத் தைக் கானான் தேசத்திலிருந்து திரும்ப உம்மிடத்துக்குக் கொண்டு வந்தோமே, நாங்கள் உம்முடைய எஜமானின் வீட்டிலிருந்து வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் திருடிக்கொண்டு போவோமா? உம்முடைய அடியாருக்குள்ளே அது எவனிடத்தில் காணப்படுமோ அவன் கொலையுண்ணக்கடவன்; நாங்களும் எங்கள் ஆண்டவனுக்கு அடிமைகளாவோம் என்று பிரயாணிகள் பதில் கொடுத்தார்கள்.PPTam 272.2

    நீங்கள் சொன்னபடியே ஆகட்டும், எவனிடத்தில் அது காணப் படுமோ, அவன் எனக்கு அடிமையாவான், நீங்கள் குற்றமற்றிருப் பீர்கள் என்று விசாரணைக்காரன் கூறினான்.PPTam 272.3

    உடனடியாகத் தேடுதல் துவங்கியது. அப்பொழுது அவர்கள் துரிதமாய் அவனவன் தன்தன் சாக்கைத்தரையிலே இறக்கினார்கள். விசாரணைக்காரன் ரூபனில் துவங்கி இளையவன் வரைக்கும் வரிசைப்படியாக ஒவ்வொருவரையும் பரிசோதித்தான். பென்யமீனின் சாக்கில் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.PPTam 272.4

    சகோதரர்கள் தங்கள் இழிந்த நிலையின் அடையாளமாக தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு மெதுவாக பட்டணத்திற்குத்திரும்பினார்கள். அவர்களுடைய சொந்த வாக்குறுதியின்படியே பென்யமீன் அடிமை வாழ்க்கைக்கு நியமிக்கப்பட்டிருந்தான். வீட்டு விசாரணைக்காரனைப் பின்தொடர்ந்து அரண்மனைக்கு வந்து, ஆளுநர் அங்கே இன்னமும் இருக்கிறதைக் கண்டு அவன் முன் தரையிலே விழுந்தார்கள். யோசேப்பு அவர்களை நோக்கி: நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள்? என்னைப்போலொத்த மனிதனுக்கு ஞானதிருஷ்டியினால் காரியம் தெரியவரும் என்று அறியாமற்போனீர்களா என்றான். அவர்களுடைய பாவத்தைக் குறித்த அறிக்கையை அவர்களிடமிருந்து கொண்டு வரயோசேப்பு நினைத்திருந்தான். பின்வருவதை முன்சொல்லும் வல்லமையை ஒருபோதும் உரிமை பாராட்டியிருந்ததில்லை. ஆனால் அவர்களுடைய வாழ்க்கை இரகசியங்களை அவனால் படிக்க முடியும் என்று அவர்களை நம்பச் செய்ய நினைத்திருந்தான்.PPTam 273.1

    யூதா : என் ஆண்டவனாகிய உம்மிடத்தில் நாங்கள் என்ன சொல்லுவோம்? என்னத்தைப் பேசுவோம்? எதினாலே எங்கள் நீதியை விளங்கப்பண்ணுவோம்? உம்முடைய அடியாரின் அக்கிரமத்தை தேவன் விளங்கப்பண்ணினார், பாத்திரத்தை வைத் திருக்கிறவனும் நாங்களும் என் ஆண்டவனுக்கு அடிமைகள் என் றான்.PPTam 273.2

    அப்படிப்பட்ட செய்கை எனக்குத் தூரமாயிருப்பதாக ; எவன் வசத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டதோ, அவனே எனக்கு அடிமையாயிருப்பான்; நீங்களோ சமாதானத்தோடே உங்கள் தகப்பனிடத்துக்குப் போங்கள் என்று பதில் வந்தது.PPTam 273.3

    தன்னுடைய ஆழ்ந்த துயரத்தில் யூதா அதிபதியின் அருகில் வந்து : ஆ, என் ஆண்டவனே, உமது அடியேன் உம்முடைய செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக, அடியேன் மேல் உமது கோபம் மூளாதிருப்பதாக, நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர் என்று மன்றாடினான். யோசேப்பின் இழப்பினிமித்தம் தன் தகப்பனுக்கேற்பட்ட துயரத்தையும், பென்யமீன் யாக்கோபு மிக அதிகமாக நேசித்த ராகேலின் ஒரே மகனாக இருப்பதினால் அவனை அவர்களோடு எகிப்திற்கு அனுப்ப அவனுக்கிருந்த தயக்கத்தையும் மனதைத் தொடும் வார்த்தைகளில் தன் சொல் வன்மையினால் அவன் விவரித்தான். ஆகையால் இளையவனை விட்டு, நான் என் தகப்பனாகிய உமது அடியானிடத்துக்குப் போனால், அவருடைய ஜீவன் இவனுடைய ஜீவனோடே ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறபடியினால், அவர் இளையவன் வர வில்லை என்று அறிந்த மாத்திரத்தில் இறந்து போவார். இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமயிரை வியாகுலத்துடனே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவோம். இந்த இளையவனுக்காக உமது அடியானாகிய நான் என் தகப்பனுக்கு உத்தரவாதி, அன்றியும், நான் இவனை உம்மிடத்துக்குக் கொண்டு வராவிட்டால், நான் எந்நாளும் உமக்கு முன்பாகக் குற்றவாளியாயிருப்பேன் என்று அவருக்குச் சொல்லியிருக்கிறேன். இப்படியிருக்க, இளையவன் தன் சகோதரரோடேகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்; உம்முடைய அடியானாகிய நான் இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு அடிமையாயிருக்கிறேன். இளைய வனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன் என்றான்.PPTam 273.4

    யோசேப்பு மனநிறைவடைந்தான். அவன் தன் சகோதரர்களில் மெய்யான மனந்திரும்புதலின் கனிகளைக் கண்டான். யூதாவின் நேர்மையான வார்த்தைகளை கேட்டபோது, இந்த மனிதர்கள் தவிர மற்ற அனைவரும் வெளியேறும்படி கட்டளை கொடுத்து, பின்னர் சத்தமிட்டு அழுதவனாக : நான் யோசேப்பு, என் தகப்பனார் இன்னும் உயிரோடே இருக்கிறாரா? என்றான்.PPTam 274.1

    அவனுடைய சகோதரர்கள் அசையாது ஆச்சரியத்திலும் பயத்திலும் வாயடைத்து நின்றனர். தாங்கள் பொறாமைப்பட்டு கொலை செய்யவிருந்த, கடைசியில் அடிமையாக விற்றுப்போட்ட தங்களுடைய சகோதரன் யோசேப்பு எகிப்தின் அதிபதியா? அவனை தவறாக நடத்தின் விதமெல்லாம் அவர்கள் முன் வந்தது. அவனுடைய சொப்பனங்களை அசட்டை செய்து, அவைகளின் நிறை வேறுதலைத் தடுக்க எவ்விதம் உழைத்தனர் என்றும் நினைவுகூர்ந்தனர். என்றபோதும் அவைகளின் நிறைவேறுதலுக் காக அவர்கள் செயல்பட்டிருந்தனர். இப்போது அவர்கள் அவ னுடைய வல்லமையின் கீழ் முழுமையாக இருந்தனர். தான் அனு பவித்த தவறுகளுக்கு சந்தேகமின்றி அவன் பழிவாங்குவான்.PPTam 274.2

    அவர்களுடைய குழப்பத்தைக் கண்டவனாக கனிவான வார்த்தைகளில் என் கிட்ட வாருங்கள் என்றான். அவர்கள் அருகே வந்தபோது, நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான். என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்பட வேண்டாம், அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம், ஜீவரட்சணை செய்யும் படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார் என்று அவன் தொடர்ந்து கூறினான். அவனுக்கு அவர்கள் செய்த கொடுமையினிமித்தம் அவர்கள் ஏற்கனவே போதுமான அளவு வேதனைப்பட்டுவிட்டதை உணர்ந்தவனாக அவர்களுடைய பயத்தை அகற்றவும், தங்களை நிந்தித்துக்கொண்டிருந்த அவர்களுடைய கசப்பைக் குறைக்கவும் அவன் மேன்மையான வழியில் தேடினான்.PPTam 274.3

    தேசத்தில் இப்பொழுது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும். பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார். ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவர் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், எகிப்து தேசம் முழுதுக்கும் அதிபதியாகவும் வைத்தார். நீங்கள் சீக்கிரமாய் என் தகப்பனிடத்தில் போய் தேவன் என்னை எகிப்து தேசம் முழுவதுக்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்க வேண்டாம். நீரும், உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற யாவற்றோடும் கோசேன் நாட்டில் வாசம்பண்ணி என் சமீபத்தில் இருக்கலாம். உமக்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கு இருக்கிற யாவற்றிற்கும் வறுமை வராதபடிக்கு, அங்கே உம்மைப் பராமரிப்பேன், இன்னும் ஐந்து வருஷம் பஞ்சம் இருக்கும் என்று, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு சொல்லச் சொன்னான் என்று சொல்லுங்கள். இதோ, உங்களோடே பேசுகிற வாய் என் வாய்தான் என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பென்யமீனின் கண்களும் காண்கிறதே என்று கூறி, தன் தம்பியாகியPPTam 275.1

    பென்யமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான், பென்யமீனும் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான். பின்பு தன் சகோதரர் யாவரையும் முத்தஞ் செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான். அதற்குப்பின் அவன் சகோதரர் அவனோடே சம்பாஷித்தார்கள். அவர்கள் தாழ்மையாக தங்கள் பாவத்தை அறிக்கை செய்து மன்னிப்பு கோரினார்கள். அவர்கள் நீண்ட காலமாக வருத்தமும் துக்கமும் கொண்டிருந்தார்கள். இப்போது அவன் இன்னமும் உயிரோடிருக்கிறதினால் களிகூர்ந்தார்கள்.PPTam 275.2

    நடந்த சம்பவம் உடனடியாக இராஜாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அவன் யோசேப்பிற்கு நன்றியை வெளிப்படுத்தும் வாஞ்சையில் எகிப்துதேச மெங்குமுள்ள நன்மை உங்களுடைய தாயிருக்கும் என்று கூறி ஆளுநர் அவருடைய குடும்பத்திற்குக் கொடுத்த வரவேற்பை உறுதிபடுத்தினான். உணவுகளும், வண்டிகளும், அவர்களுடைய குடும்பங்கள் அனைத்தும் ஊழியக் காரர்களோடு சேர்ந்து எகிப்திற்கு வருவதற்குத் தேவையான அனைத்தும் தாராளமாக கொடுக்கப்பட்டு சகோரர்கள் அனுப்பப் பட்டனர். மற்றவர்களுக்குக் கொடுத்ததைக்காட்டிலும் அதிகமான மிக விலையுயர்ந்த பரிசுகளை யோசேப்பு பென்யமீனுக்குக் கொடுத்தான். பின்னர், வீடு நோக்கி செல்லும் பயணத்தில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் எழும்பும் என்கிற பயத்தில் அவர்கள் புறப்பட ஆயத்தமான போது : நீங்கள் போகும் வழியிலே சண்டை பண்ணிக்கொள்ளாதிருங்கள் என்று கட்டளை கொடுத்தான்.PPTam 276.1

    யாக்கோபின் குமாரர்கள் தங்கள் தகப்பனிடத்திற்கு யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்து தேசத்துக்கெல் லாம் அதிபதியாயிருக்கிறான் என்ற மகிழ்ச்சியான செய்தியோடு திரும்பினார்கள். முதலில் வயதான அந்த மனிதன் திகைத்தான். தான் கேட்டவைகளை அவனால் நம்பமுடியவில்லை. ஆனால் மிக நீண்ட வரிசையில் இருந்த வண்டிகளையும் சுமை சுமந்து வந்த மிருகங்களையும் பென்யமீன் மீண்டும் தன்னோடு இருப்பதையும் கண்டபோது நம்பி தன்னுடைய முழுமையான மகிழ்ச்சியோடு என் குமாரனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும், நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்று சொல்லி மகிழ்ந்தான்.PPTam 276.2

    பத்து சகோதரர்களுக்கும் மற்ற ஒரு தாழ்மையான செய்கை மீதமிருந்தது. அவருடைய வாழ்க்கையையும் அவர்களுடைய வாழ்க்கைகளையும் அநேக வருடங்களாக கசப்பாக்கியிருந்த தங்களுடைய வஞ்சகத்தையும் கொடுமையையும் இப்போது தங்கள் தகப்பனிடம் அறிக்கையிட்டார்கள். அவ்வளவு கீழான ஒரு பாவத்தை செய்திருப்பார்களென்று யாக்கோபு அவர்களை சந்தேகப்பட்டிருக்கவில்லை.PPTam 276.3

    ஆனால் அனைத்தும் நன்மைக்கேதுவாக மேற்கொள்ளப் பட்டதை அவன் கண்டான். அவர்களை மன்னித்து தவறு செய்யக் கூடிய தன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதித்தான்.PPTam 276.4

    தகப்பனும் அவருடைய குமாரர்களும் தங்கள் குடும்பங்களோடும் தங்கள் மந்தைகள் மாடுகளோடும் அநேக ஊழியக்காரர் களோடும் விரைவாக எகிப்தை நோக்கிச் சென்றனர். மன மகிழ்ச்சி யோடு தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். பெயர்செபாவிற்கு வந்தபோது, முற்பிதா நன்றியான காணிக்கையைச் செலுத்தி, அவர் தங்களோடு வருவார் என்கிற நிச்சயத்தை தரும்படி ஆண்டவரிடம் மன்றாடினான். ஒரு இராத்தரிசனத்தில் நீ எகிப்து தேசத்துக்குப் போகப் பயப்படவேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக் குவேன். நான் உன்னுடனே எகிப்துக்கு வருவேன். நான் உன்னைத் திரும்பவும் வரப்பண்ணுவேன் என்கிற தெய்வீக வார்த்தை அவனுக்கு வந்தது.PPTam 277.1

    நீ எகிப்து தேசத்துக்குப் போகப் பயப்பட வேண்டாம், அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன் என்கிற உறுதி குறிப்பானதாக இருந்தது. நட்சத்திரங்களைப்போல எண்ண முடியாத வம்சத்தைக் குறித்த வாக்குத்தத்தம் ஆபிரகாமிற்கு கொடுக்கப்பட்டிருந்தது. என்றாலும், தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்கள் மெதுவாகவே எண்ணிக்கையில் உயர்ந்து கொண்டிருந்தார்கள். முன் சொல்லப் பட்டதைப் போன்ற அப்படிப்பட்ட ஒரு ஜனத்தின் விருத்திக்கு கானான் தேசம் இப்போது எந்த ஒரு களத்தையும் கொடுத்திருக்க வில்லை. அது, நாலாம் தலைமுறை வரைக்கும் துரத்திவிடப்பட கூடாத வல்லமையான புறஜாதி கோத்திரங்களால் ஆக்ரமிக்கப்பட்டிருந்தது. இங்கே இஸ்ரவேலின் பின் சந்ததியினர் எண்ணமுடியாத மக்களாக பெருகியிருந்திருப்பார்களானால், ஒன்று அவர்கள் அந்த தேசத்தின் குடிகளை துரத்தியிருக்கவேண்டும் அல்லது அவர்களுக்கிடையே அவர்கள் சிதறியிருக்க வேண்டும். தெய்வீக ஏற்பாட்டின்படி முந்தி சொல்லப்பட்டது அவர்களால் செய்யக் கூடாது. கானானியர்களோடு கலக்க வேண்டியதிருந்தால், விக்கிர ஆராதனையால் மயக்கப்படும் ஆபத்தில் அவர்கள் இருப்பார்கள். எனினும் தெய்வீக நோக்கத்தின் நிறைவேறுதலுக்கு தேவையாயிருந்த சூழ்நிலையை எகிப்து கொடுத்தது. நீர்வளம் பொருந்தியிருந்து செழிப்பாயிருந்த அந்த தேசத்தின் ஒரு பகுதி அவர்களுக் குத் திறந்திருந்து, அவர்கள் வேகமாக விருத்தியடைவதற்கான ஒவ்வொரு சாதகத்தையும் அளித்தது. அவர்களுடைய தொழி லினிமித்தம் எகிப்து தேசத்தில் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் வெறுப்பு - ஒவ்வொரு மேய்ப்பனும் எகிப்தியருக்கு அருவருப்பானவன் - தனித்துவமான, பிரிக்கப்பட்ட ஜனங்களாக இருக்க அவர்களுக்கு உதவி, எகிப்தின் விக்கிரக ஆராதனையில் பங்கு கொள்ளுவதிலிருந்து அவர்களை வெளியே அடைக்கும்.PPTam 277.2

    எகிப்தை அடைந்ததும் அந்தக் கூட்டம் நேரடியாக கோசேன் தேசத்துக்கு முன்னேறியது. இங்கே யோசேப்பு அரச பரிவாரங்களோடு தன் இரதத்தில் வந்தான். அவனை சூழ்ந்திருந்த சிறப்பு களும் அவனுடைய தகுதியின் கௌரவமும் ஒரேவிதமாக மறக் கப்பட்டு, ஒரு நினைவு மாத்திரம் அவன் மனதை நிறைத்திருந்து, ஒரு ஏக்கம் அவன் இருதயத்தை சிலிர்ப்பித்தது. பிரயாணிகள் நெருங்கிவருகிறதை அவன் கண்டபோது, நீண்ட வருடங்களாக அடைக்கப்பட்டிருந்த ஏக்கம் அதற்கு மேல் கட்டுப்படுத்தப்பட முடியாது போயிற்று. அவன் தன் இரதத்திலிருந்து குதித்து, தன் தகப்பனை வரவேற்கும்படி தீவிரித்துச் சென்றான். அவனைக் கண்டு, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, வெகு நேரம் அவன் கழுத்தை விடாமல் அழுதான்.PPTam 278.1

    எதிர்காலத்தில் அவர்கள் தங்குவதற்கான நிலத்தைப் பெற்றுக்கொள்ளும்படி, யோசேப்பு தன் சகோதரர்களில் ஐந்து பேரை பார்வோன் முன் நிறுத்தினான். தனது பிரதம மந்திரியின் மேலிருந்த நன்றியுணர்வு, தேசத்தில் அவர்களை அதிகாரிகளாக நியமித்து கனம் பண்ணியிருக்க அரசனை நடத்தியிருந்திருக்கும். ஆனால் யோசேப்பு யெகோவாவை மெய்யாக தொழுது கொண்ட தினால், அஞ்ஞான அரசவையில் இருக்கக்கூடிய சோதனைகளிலிருந்து தன் சகோதரர்களை காப்பாற்ற வகை தேடினான். எனவே இராஜா கேட்கும்போது தங்களுடைய தொழிலைக் குறித்து வெளிப்படையாகச் சொல்லும்படி ஆலோசனை கூறினான். யாக்கோபின் குமாரர்கள் இந்த ஆலோசனையைப் பின்பற்றி, தாங்கள் இந்த தேசத்தில் நிரந்தரமாக குடியிருப்பதற்கு அல்ல, சிறிது காலம் தங்கவே வந்ததாக கூறுவதில் கவனமாயிருந்தனர். இவ்விதமாக, அவர்கள் விரும்பும் போது வெளியேற அவர்களுக்கிருந்த உரி மையை தக்கவைத்துக்கொண்டனர். தேசத்திலுள்ள நல்ல இடத்திலே - கோசேன் நாட்டிலே அவர்களுக்கு தங்கியிருப்பதற்கான இடத்தை இராஜா கொடுத்தான். அவர்கள் வந்த சிறிது காலத்தில் யோசேப்பு தன் தகப்பனையும் இராஜாவின் முன் அழைத்து வந்தான். அந்த முற்பிதா அரசவையில் ஒரு அந்நியனாக இருந்தான்; ஆனால் அவனிலும் வல்லமையான ஏகாதிபதியோடு இயற்கையின் கம்பீரமான காட்சிகளின் நடுவில் அவன் பேசியிருக்கிறான். இந்த தகுதியைக் குறித்த அறிவோடு அவன் தன் கைகளை உயர்த்தி பார்வோனை ஆசீர்வதித்தான். PPTam 278.2

    யோசேப்பை முதலாவது வாழ்த்திய போது, தன்னுடைய நீண்ட வேதனைக்கும் வருத்தத்திற்கும் கிடைத்த இந்த ஆனந்தமான முடி வோடு தான் மரிக்க ஆயத்தமாயிருப்பதாக யாக்கோபு பேசியிருந் தான். ஆனால் கோசேனின் சமாதானமான இளைப்பாறுதலில் அவனுக்கு இன்னும் பதினேழு வருடங்கள் கொடுக்கப்படவிருந்தன . இந்த வருடங்கள் இதற்கு முன் இருந்தவைகளுக்கு நேரெதி ரான மகிழ்ச்சியானவைகளாக இருந்தன. அவன் தன் குமாரரில் மெய்யான மனந்திரும்புதலுக்கான சான்றுகளைக் கண்டான். தன் குடும்பம் மாபெரும் ஜாதியாக விருத்தியடைவதற்குத் தேவையான சூழ்நிலைகள் அனைத்தாலும் சூழப்பட்டிருக்கிறதை அவன் கண்டான். அவர்கள் கானானில் ஸ்தாபிக்கப்படப் போகிறதைக் குறித்த நிச்சயமான வாக்குறுதிகளை அவனுடைய விசுவாசம் பற்றிக்கொண்டது. எகிப்தின் பிரதம மந்திரி கொடுக்கக்கூடிய ஒவ்வொரு அன்பு மற்றும் தயவின் அடையாளங்களால் அவன் தானும் சூழப்பட்டிருந்தான். அதிக காலம் தொலைந்துபோயிருந்த மகனுடைய உறவில் சமாதானத்தோடு அவன் தன் கல்லறைக்குப் போனான்.PPTam 279.1

    மரணம் நெருங்குகிறதை உணர்ந்து அவன் யோசேப்பை அழைத்தனுப்பினான். கானானை சுதந்தரிப்பதைக் குறித்த தேவ னுடைய வாக்குத்தத்தங்களை இன்னும் பற்றிக்கொண்டவனாக என்னை எகிப்திலே அடக்கம் பண்ணாதிருப்பாயாக. நான் என் பிதாக்களோடே படுத்துக்கொள்ள வேண்டும், ஆகையால், நீ என்னை எகிப்திலிருந்து எடுத்துக்கொண்டு போய், அவர்களை அடக்கம் பண்ணியிருக்கிற நிலத்திலே என்னையும் அடக்கம்பண்ணு என்று கூறினான். யோசேப்பு அப்படிச் செய்வதாக வாக்குக் கொடுத்தான். என்றாலும் யாக்கோபு மனநிறைவடைய வில்லை. மக்பேலாவின் குகையிலே தன் பிதாக்களுக்கு அருகிலே தன்னை வைக்க வேண்டும் என்ற பவித்தரமான உறுதிமொழியை அவன் வேண்டினான்.PPTam 279.2

    இன்னொரு முக்கியமான காரியம் கவனத்தைக் கோரியது. யோசேப்பின் குமாரர்கள் இஸ்ரவேலின் பிள்ளைகளுக்கு நடுவே முறையாக வைக்கப்பட்டனர். யோசேப்பு தன் தகப்பனை கடைசியாக சந்திக்க வருகையில் எப்பீராயீமையும் மனாசேயையும் தன்னுடன் அழைத்துவந்தான். இந்த வாலிபர்கள் அவர்களுடைய தாயின் வழியாக மிக உயர்ந்த எகிப்திய ஆசாரிய ஒழுங்கோடு இணைக்கப்பட்டிருந்தனர். அதோடு, தகப்பனுடைய பதவியி னிமித்தம் செல்வத்திற்கும் தனித்துவத்திற்குமான வழி அவர்களுக்கு இருந்தது. எனினும் அவர்கள் தன்னுடைய சொந்த ஜனங்களோடு இணைந்திருக்கவேண்டும் என்பது யோசேப்பின் வாஞ்சையாக இருந்தது. தேவனுடைய வாக்கியங்கள் கொடுக் கப்பட்டிருந்த இழிவானPPTam 279.3

    மேய்ப்பர் கோத்திரங்களுக்கிடையே ஒரு இடத்திற்காக, எகிப்திய அவை கொடுக்கவிருந்த எல்லா கனத்தையும் கைவிட்ட வனாக, உடன்படிக்கையின் வாக்குத்தத்தத்தின்மேல் தன் பிள் ளைகள் சார்பில் அவன் விசுவாசத்தை வெளிக்காட்டினான்.PPTam 280.1

    யாக்கோபு: நான் உன்னிடத்தில் எகிப்துக்கு வருமுன்னே உனக்கு எகிப்து தேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர் என்றான். அவர்கள் அவனுடைய சொந்த குமாரர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தனித்தனி கோத்திரங்களின் தலைவர்களாக வேண்டும். இவ்வாறாக, ரூபன் இழந்து போன சே ஷ்ட புத்திரபாகத்தின் ஒரு சிறப்புரிமை, அதாவது இஸ்ரவேலின் இரண்டு பங்கு யோசேப்பின் மேல் வரவேண்டும்.PPTam 280.2

    யாக்கோபின் கண்கள் வயதினால் இருண்டு போயிருந்தன. அவன் அந்த வாலிபர்கள் வந்திருந்ததை உணராதிருந்தான். ஆனால் இப்போது அவர்களுடைய உருவத்தை உணர்ந்து, இவர்கள் யார் என்றான். சொல்லப்பட்டபோது, நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என்கிட்டக் கொண்டுவா என்றான். அவர்கள் அருகே வந்தபோது, முற்பிதா அவர்களை தழுவி முத்தஞ் செய்து, ஆசீர்வதிக்கும்படி அவர்கள் தலைகளின் மேல் பவித்திரமாக தன் கைகளை வைத்தான். என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவனும், நான் பிறந்த நாள் முதல் இந்நாள் வரைக்கும் என்னை ஆதரித்து வந்த தேவனும், எல்லாத் தீமைக்கும் நீக்கலாக்கி என்னை மீட்ட தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக என்றான். அதிலே மனித வல்லமையின் மீதோ அல்லது ஞானத்தின் மீதோ எந்த நம்பிக்கையும் இல்லை. தேவன்தான் அவனை பாதுகாத்து, அவனுக்கு ஆதரவு அளித்தவர். கடந்த காலத்தின் தீமையான நாட்களைக்குறித்த எந்த முறுமுறுப்பும் இல்லை. அதனுடைய சே ராதனைகளும் வருத்தங்களும் அவனுக்கு விரோதமாக இருந்ததாக கருதப்படவில்லை. தன்னுடைய வாழ்க்கை பயணம் முழுவதிலும் தன்னோடு இருந்த அவருடைய இரக்கத்தையும் அன்பான தயவையும் மாத்திரமே அவனுடைய நினைவு திரும்பிப்பார்த்தது.PPTam 280.3

    ஆசீர்வாதங்கள் முடிந்தபின், யாக்கோபு தன் மகனுக்கும், அடிமைத்தனத்திலும் வருத்தத்திலும் நீண்ட வருடங்களாக இருக்கப்போகிற தலைமுறைகளுக்கும் இதோ, நான் மரணமடையப் போகிறேன்; தேவன் உங்களோடே இருப்பார்; அவர் உங்கள் பிதாக்களின் தேசத்துக்கு உங்களைத் திரும்பவும் போகப்பண்ணு வார் என்கிற இந்த விசுவாசத்தின் சாட்சியை விட்டுச் சென்றான்.PPTam 280.4

    கடைசியாக யாக்கோபின் குமாரர்கள் அனைவரும் அவனுடைய மரண படுக்கையைச் சுற்றி கூட்டப்பட்டனர். யாக்கோபு தன் குமாரர்களை அழைத்து, நீங்கள் கூடி வாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன். யாக்கோபின் குமாரரே, கூடி வந்து கேளுங்கள், உங்கள் தகப்பனாகிய இஸ்ர வேலுக்குச் செவிகொடுங்கள் என்றான். பலவேளைகளில் அவர் களுடைய எதிர்காலத்தைக் குறித்து ஆவலோடு நினைத்து, வெவ் வேறு கோத்திரங்களின் சரித்திரத்தைக் குறித்த ஒரு காட்சியை உண்டு பண்ண முயற்சித்திருந்தான். இப்போது அவனுடைய பிள்ளைகள் கடைசி ஆசீர்வாதங்களை பெறக் காத்திருந்தபோது, தேவ ஆவியின் ஏவுதல் அவன் மீது அமர, அவன் முன் அவனுடைய வம்சத்தின் எதிர்காலம் தீர்க்கதரிசனத்தில் திறக்கப்பட்டது. ஒன்றன்பின் ஒன்றாக அவனுடைய குமாரரின் பெயர்கள் குறிப் பிடப்பட்டன. ஒவ்வொருவருடைய குணமும் விவரிக்கப்பட்டு, கோத்திரங்களின் எதிர்கால சரித்திரம் சுறுக்கமாக முன்சொல் லப்பட்டது.PPTam 281.1

    ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்.PPTam 281.2

    இவ்வாறாக, முதல் குமாரனாகருபனுடைய நிலை என்னவாக இருக்கவேண்டும் என்று தகப்பன் ஒரு படத்தை வரைந்தான். ஆனால் ஏதேரில் அவன் செய்து வருந்தத்தக்க பாகம் சேஷ்டபுத்திர பாகத்திற்கு அவனை தகுதியற்றவனாக்கிற்று. தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்.PPTam 281.3

    ஆசாரிய ஊழியம் லேவிக்கு கொடுக்கப்பட்டது. இராஜாங்க மும் மேசியாவைக் குறித்த வாக்குத்தத்தமும் யூதாவுக்கும், சுதந்தரத்தின் இரட்டிப்பான பங்கு யோசேப்புக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது . இஸ்ரவேலில் ரூபனின் கோத்திரம் உயர்ந்த புகழுக்கு ஒருபோதும் எழும்பவில்லை. அது யுதாவைப்போலாகிலும் யோசேப்பைப்போலாகிலும் அல்லது தாணைப்போலாகிலும் எண்ணிக்கையில் பெருகவுமில்லை. மேலும் முதலாவது சிறை பிடிக்கப்பட்டவர்களில் அவர்கள் இருந்தார்கள்.PPTam 281.4

    வயதின்படி ரூபனுக்கு அடுத்து சிமியோனும் லேவியும் இருந் தார்கள். சீகேமில் செய்த கொடுமையில் அவர்கள் இணைந்திருந் தார்கள். அதோடு யோசேப்பை விற்றதில் அவர்கள் மிக அதிக குற்றவாளிகளாயிருந்தார்கள். அவர்களைக்குறித்து யாக்கோபிலே அவர்கள் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும் பண்ணுவேன் என்று அறிவிக்கப்பட்டது.PPTam 282.1

    கானானுக்குள் அவர்கள் பிரவேசிப்பதற்கு சற்று முன் இஸ்ரவேலை எண்ணின் போது சிமியோன் கோத்திரம் அனைத்து கோத்திரங்களிலும் மிகவும் சிறியதாக இருந்தது . மோசே தன் னுடைய கடைசி ஆசீர்வாதங்களில் சிமியோனை குறிப்பிடவில்லை. கானானில் குடியேறியபொழுது இந்த கோத்திரம் யூதாவிற்குக் கிடைத்த பங்கில் ஒரு சிறிய பகுதியை மாத்திரமே பெற்றிருந்தது. பிற்காலத்தில் வல்லமையாக எழும்பிய அவர்களுடைய குடும்பங்கள் வெவ்வேறு கூட்டங்களாகி, பரிசுத்த தேசத்தின் எல்லைக்கு வெளியே குடியேறினார்கள். லேவியும் தேசத்தின் வெவ்வேறு பகுதிகளில் சிதறியிருந்த 48 பட்டணங்களைத்தவிர வேறு எதையும் சுதந்தரிக்கவில்லை. எனினும் மற்ற கோத்திரங்கள் மருள்விழுந்த போது, யெகோவாவிற்கு உண்மையாக இருந்ததினிமித்தம் இந்த கோத்திரம் ஆசரிப்புக் கூடாரத்தின் பரிசுத்த வேலை செய்யும் தொழிலை பெற்றதினால், அவர்களுடைய சாபம் ஒரு ஆசீர்வாத மாக மாற்றப்பட்டது.PPTam 282.2

    சேஷ்ட புத்திரபாகத்தின் தலைசிறந்த ஆசீர்வாதம் யூதாவிற்கு மாற்றப்பட்டது. அவனுடைய பெயரின் பொருளான துதி - இந்த கோத்திரத்தின் சரித்திரத்தில் இவ்வாறாக திறக்கப்பட்டது. யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத் துருக்களுடைய பிடரியின் மேல் இருக்கும், உன் தகப்பனுடைய புத்திரர் உன் முன் பணிவார்கள். யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்து கொண்டு ஏறிப்போனாய், என் மகனே, சிங்கம் போலும் கிழச்சிங்கம் போலும் மடங்கிப் படுத்தான், அவனை எழுப்புகிறவன் யார்? சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங் குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை, ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.PPTam 282.3

    வனத்தின் இராஜாவான சிங்கம் இந்தக் கோத்திரத்திற்குப் பொருந்தக்கூடிய சின்னமாயிருந்தது. இதிலிருந்து தாவீதும், யாருக்கு முடிவாக அனைத்து வல்லமைகளும் பணிந்து அனைத்து தேசங்களும் கனம் கொடுக்குமோ, அந்த மெய்யான சீலாவாகிய யூதா கோத்திரச் சிங்கமான தாவீதின் குமாரனும் வந்தார்.PPTam 282.4

    யாக்கோபு தன் குமாரர்களில் அநேகருக்கு செழிப்பான எதிர்காலத்தை முன்னறிவித்தான். கடைசியாகயோசேப்பின் பெயர் வந்தது. தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின் மேல் ஆசீர்வாதங்களைக் கூறியபோது தகப்பனுடைய இருதயம் வழிந்தோடியது . யோசேப்பு கனிதரும் செடி, அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி, அதின் கொடிகள் சுவரின் மேல் படரும். வில்வீரர் அவனை மனமடிவாக்கி, அவன் மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள். ஆனாலும், அவனுடைய வில் உறுதியாய் நின்றது ; அவன் புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கரங்களால் பலத்தன. இதினாலே அவன் மேய்ப்பனும் இஸ்ர வேலின் கன்மலையும் ஆனான். உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று, அவர் உனக்குத் துணையாயிருப்பார், சர்வ வல்லவராலே அப்படியாயிற்று : அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார். உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள் என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்தது; நித்திய பர்வதங்களின் முடிவு மட்டும் எட்டுகின்றன, அவைகள் யோசேப்புடைய சிரசின்மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக.PPTam 283.1

    யாக்கோபு எப்போதுமே ஆழமான தீவிரமான பாசம் காண்பிக்கும் மனிதனாக இருந்தான். அவன் தன் பிள்ளைகள் மேல் கொண்டிருந்த அன்பு பலமானதும் இளகினதுமாக இருந்தது. அவன் மரண நேரத்தில் கூறிய சாட்சிகள் பாகுபாட்டுடனோ அல்லது மனக்கசப்புடனோ கொடுக்கப்படவில்லை. அவன் அவர்களனைவரையும் மன்னித்திருந்தான். அவர்களை கடைசி வரையிலும் நேசித்திருந்தான். அவர்களுடைய தகப்பன் என்னும் இளகிய மனம், நம்பிக்கையான உற்சாகப்படுத்துகிற வார்த்தைகளையே வெளிப்படுத்தியிருக்கும். ஆனால் தேவனுடைய வல் லமை அவன்மேல் தங்கியது. ஆவியின் ஏவுதலின் செல்வாக்கின் கீழ் எவ்வளவு வேதனையுள்ளதாயிருந்தாலும் சத்தியத்தை மாத்திரம் அறிவிக்கும்படி அவன் நெருக்கப்பட்டான்.PPTam 283.2

    ஆசீர்வாதங்கள் சொல்லப்பட்டபின் யாக்கோபு தன்னுடைய மரண இடத்தைக்குறித்த கட்டளையை திரும்பவும் கூறினான். நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப்போகிறேன், ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களண்டையிலே அடக்கம் பண்ணுங்கள் அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா என்னப்பட்ட நிலத்தில் இருக்கிறது; ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்பண் ணினார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக் காளையும் அடக்கம் பண்ணினார்கள், அங்கே லேயாளையும் அடக்கம் பண்ணினேன். இவ்வாறாக, அவனுடைய வாழ்க்கையின் கடைசிச் செயலும் தேவனுடைய வாக்குத்தத்தங்களின் மேலிருந்த விசுவாசத்தை வெளிப்படுத்தியது.PPTam 283.3

    யாக்கோபின் கடைசி வருடங்கள் கலங்கிய சோர்வடைந்த பகலுக்குப்பிறகு அமைதியும் இளைப்பாறுதலுமான ஒரு மாலை நேரத்தைக் கொண்டு வந்தது. அவனுடைய பாதையின் மேல் மேகங்கள் இருண்டு திரண்டன. எனினும் பிரிந்து செல்லும் அவனுடைய மணிநேரங்களில் அவனுடைய சூரியன் தெளிவாக மறைய, பரலோகத்தின் கதிர்கள் பிரகாசித்தது. வேதவாக்கியம் : ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும் (சக 14:7) நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு, அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம் (சங் 37:37) என்கிறது.PPTam 284.1

    யாக்கோபு பாவம் செய்திருந்தான். அதற்காக ஆழமான வேதனை அடைந்திருந்தான். அவனுடைய மாபெரிய பாவம் தகப்பனின் கூடாரங்களிலிருந்து அவனை தப்பியோடச் செய்த திலிருந்து, அநேக வருடங்களான உழைப்பும் கவனமும் வருத்த மும் அவனுடையதாக இருந்தன, வீடு இல்லாத நாடோடியாக, தான் மறுபடியும் பார்க்க முடியாமற்போன தன் தாயிடமிருந்து பிரிக் கப்பட்டு, தான் நேசித்தவளுக்காக ஏழு வருடங்கள் கீழ்த்தரமாக ஏமாற்றப்படும் படியாகவே உழைத்து, பொருளாசையுள்ள பிடுங்கிக்கொள்ளுகிற மாமனின் சேவையில் இருபது வருடங்கள் உழைத்து, தன்னுடைய சொத்து பெருகி தன்னுடைய குமாரர்கள் தன்னைச் சுற்றிலும் எழும்பியும் சண்டையிட்டுப் பிரிந்திருந்த வீட்டாரினிமித்தம் குறைந்த மகிழ்ச்சியையே கண்டிருந்து, தன் குமாரத்தியினுடைய அவமானத்தாலும் அவளுடைய சகோதரரின் பழிவாங்கின் செய்கையாலும், ராகேலின் மரணத்தாலும், ரூபனுடைய இயற்கைக்கு எதிராக குற்றத்தாலும், யூதாவின் பாவத்தாலும், யோசேப்புக்கு எதிராக செய்யப்பட்ட கொடிய வஞ்சகத்தாலும் கொடுமையாலும் துயரப்பட்டு பார்வைக்கு விரிக்கப்பட்டிருந்த தீமைகளின் பட்டியல் எவ்வளவு நீண்டதும் இருண்டதுமாய் இருக் கிறது! மீண்டும் மீண்டும் தன்னுடைய முதல் தவறான செய்கையின் கனியை அவன் அறுத்தான். தான் எதில் குற்றவாளியாக இருந்தானோ, அதே பாவங்கள் தன் குமாரர் நடுவே திரும்ப செய்யப்படு கிறதை மறுபடியும் மறுபடியும் அவன் கண்டான். ஒழுக்கம் கசப் பானதாக இருந்திருந்தபோதும், அது தன் வேலையைச் செய்திருந்தது. சிட்சை மிக வருத்தத்தை உண்டாக்கியிருந்தபோதும் நீதி யாகிய சமாதான பலனை (எபி 12:11) தந்தது.PPTam 284.2

    தேவனுடைய தயவினால் சிறந்திருந்த நல்ல மனிதர்களின் தவறுகளை தேவ ஆவியானவரின் ஏவுதல் உண்மையாகப் பதிவு செய்திருக்கிறது. அவர்களுடைய நல்ல குணங்களைக் காட்டிலும் அவர்களுடைய தவறுகளே முழுமையாக கொடுக்கப்பட்டிருக் கிறது. இது அநேகருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்து, வேதவாக் கியத்தை பரியாசம் பண்ணும் சந்தர்ப்பத்தை தேவ பக்தியற்ற வருக்கும் கொடுத்திருக்கிறது. ஆனால் வேதவாக்கியங்களின் சத் தியத்திற்கு மிகவல்லமையான சான்றுகளில் இதுவும் ஒன்று.PPTam 285.1

    உண்மைகள் பூசி மெழுகப்படவில்லை. அதனுடைய முக்கிய மான தலைமை பாத்திரங்களின் பாவங்கள் குறைக்கப்படவில்லை. மனிதரின் மனங்கள் தப்பான அபிப்பிராயங்களுக்கு உட்பட்டிருக்கிறதால், மனிதரின் சரித்திரங்கள் முற்றிலும் பாரபட்சமற்ற வைகளாக இருப்பது கூடாதகாரியம் . வேதாகமம் ஆவியானவரால் ஏவப்படாத மனிதர்களால் எழுதப்பட்டிருக்குமானால், சந்தேகத் திற்கிடமின்றி அது கனம் பண்ணின் மனிதரின் குணங்களை அதிக புகழ்ச்சியான வெளிச்சத்தில் காண்பித்திருந்திருக்கும். ஆனால் அவர்களுடைய அனுபவங்களின் சரியான பதிவுகள் இப்போது நம்மிடம் இருக்கின்றன.PPTam 285.2

    தேவன் கனம்பண்ணின் மனிதர்கள் அவர் யாரிடம் பெரிய பொறுப்புகளைக் கொடுத்திருந்தாரோ அவர்கள் சில வேளைகளில் சோதனைகளால் வெல்லப்பட்டு, நாம் இன்றைய நாட்களிலே போராடி அசைந்து தவறில் விழுவதைப்போலவே பாவம் செய் திருக்கின்றனர். அவர்களுடைய வாழ்க்கைகளின் தவறுகளும் மடத்தனங்களும் நமது உற்சாகத்திற்கும் எச்சரிப்பிற்கும் நம் முன் திறந்து இருக்கின்றன. அவர்கள் குற்றமற்றவர்களாக காட்டப் பட்டிருப்பார்களானால், பாவ இயல்பு கொண்ட நாம், நம்முடைய தவறுகளிலும் தோல்விகளிலும் விரக்தியடைந்திருப்போம். நம்மைப்போலவே உற்சாகமிழந்து தவறி, நாம் செய்ததைப் போலவே சோதனைகளின் கீழ் விழுந்திருந்தபோதும், மீண்டும் உறுதியடைந்து தேவனுடைய கிருபையினால் அவர்கள் வெற்றி கொண்டதை நாம் பார்க்கும் போது நீதிக்காக நாம் படுகிற போராட்டங்களில் உற்சாகப்படுத்தப்படுகிறோம். அவர்கள் சில வேளைகளில் பின்தள்ளப்பட்டபோதும் மீண்டும் தங்களுடைய நிலையை அடைந்து தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். நாமும் இயேசுவின் பெலத்தினால் வெற்றியாளர்களாக இருக்க முடியும். மறுபக்கம் அவர்களுடைய வாழ்க்கையின் பதிவு நமக்கு ஒரு எச்சரிப்பாகவும் இருக்கக்கூடும். தேவன் எந்தக் காரணத்திலும் குற்றவாளியை குற்றமற்றவனாகவிடார் என்று அதுகாண்பிக்கிறது. அவர் தாம் அதிகம் நேசித்தவர்களிலும் பாவத்தைக் கண்டு, குறைவான வெளிச்சமும் பொறுப்பும் பெற்றவர்களை நடத்து வதைக் காட்டிலும் மிகுந்த கண்டிப்போடு அவர்களிடம் நடந்து கொள்ளுகிறார்.PPTam 285.3

    யாக்கோபின் அடக்கத்திற்குப் பிறகு யோசேப்பின் சகோத ரர்களுடைய இருதயங்களில் மீண்டும் பயம் நிரம்பியது. அவன் தங்களுக்குக் காண்பித்த தயவு ஒருபுறமிருக்க, குற்றத்தைக்குறித்த உணர்வு அவர்களை நம்பிக்கையற்றவர்களாகவும் சந்தேகப் படுகிறவர்களாகவும் ஆக்கியது. ஒருவேளை அவன் பழிவாங் குவதை தாமதப்படுத்தியிருக்கலாம். தன் தகப்பனுக்காக பழி வாங்குதலை அவன் தாமதப்படுத்தியிருந்திருக்கலாம்.PPTam 286.1

    இப்போது அவர்களுடைய குற்றத்திற்காக மிகவும் தள்ளிப் போடப்பட்டிருந்த தண்டனையை கொடுக்கலாம். அவன் முன் அவர்கள் நேரடியாக வர தைரியமற்றவர்களாக, உம்முடைய சகோதரர் உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும், அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர் தயவு செய்து மன்னிக்க வேண்டும் என்று உம்முடைய தகப்பனார் மரணமடையுமுன்னே, உமக்குச் சொல்லும்படி கட்டளையிட்டார். ஆகையால், உம்முடைய தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள் செய்த துரோகத்தை மன்னிக்க வேண்டும். என்ற ஒரு செய்தியை அவர்கள் அனுப்பினார்கள். இந்த செய்தி கண்ணீர்விடுமளவு யோசேப்பைப் பாதித்தது. இதினால் தைரியமடைந்தவர்களாக அவனுடைய சகோதரர்கள் வந்து, நாங்கள் உமக்கு அடிமைகள் என்று வார்த் தைகளோடு அவன் முன் விழுந்தனர். யோசேப்பு தன் சகோரர்கள்மேல் கொண்டிருந்த அன்பு ஆழமும் சுயநலமற்றதுமாயிருந்தது. அவர்கள் மேல் பழிவாங்கும் ஒரு ஆவியை மகிழ்ந்து போற்றியிருந் தான் என்று அவனைக் குறித்து அவர்கள் எண்ணினார்கள் என்கிற நினைவினால் அவன் வேதனையடைந்தான். பயப்படாதிருங்கள்; நான் தேவனா; நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகுஜனங்களை உயிரோடே காக்கும் படிக்கு, அதை நன்மையாக முடியப் பண்ணினார். ஆதலால், பயப்படாதிருங்கள், நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடே பட்சமாய்ப் பேசினான்.PPTam 286.2

    யோசேப்பின் வாழ்க்கை கிறிஸ்துவின் வாழ்க்கையை விளக்கு கிறது. யோசேப்பை அடிமையாக விற்றுப்போடும்படி பொறாமை அவனுடைய சகோதரர்களை நடத்தினது. அவன் தங்களைக் காட்டிலும் பெரியவனாகிறதை தடுக்கும் நம்பிக்கையில் அவர்கள் இருந்தனர். அவன் எகிப்துக்குக் கொண்டுபோகப்பட்டபோது அவனுடைய சொப்பனங்கள் நிறைவேறுவதற்கான எல்லா சாதகங்களையும் அகற்றிவிட்டதாகவும், அவைகளினால் தாங்கள் இனி ஒருபோதும் தொந்தரவு பண்ணப்படமாட்டார்கள் என்றும் தங்களைத் தாங்களே மெச்சிக்கொண்டனர். ஆனால் அவர்களுடைய சொந்த வழிமுறையே அவர்கள் தடை செய்யும்படி திட்டமிட்டிருந்த அதே சம்பவத்தை நடப்பிக்கும்படி தேவனால் மேற்கொள் ளப்பட்டது. அவ்வாறாகவே மக்களின் கவனத்தை தங்களிடமிருந்து கவர்ந்து கொள்ளுவார் என்ற பயத்தில் யூத ஆசாரியர்களும் மூப்பர்களும் கிறிஸ்துவின் மேல் பொறாமை கொண்டனர். இராஜாவாவதிலிருந்து தடுப்பதற்காக அவரைக் கொன்றனர். ஆனால் அதன் வழியாக அதே முடிவை நடப்பித்தனர்.PPTam 287.1

    எகிப்தில் அடிமையாக இருந்ததினிமித்தம் யோசேப்பு தன் தகப்பனுடைய குடும்பத்தை இரட்சிக்கிறவனானான். எனினும் இந்த உண்மை அவனுடைய சகோதரர்களின் குற்றத்தை எவ் விதத்திலும் குறைக்கவில்லை. அவ்வாறாகவே கிறிஸ்துவின் சத் துருக்களால் அவர் கொலை செய்யப்பட்டது, அவரை மனிதகுலத் தின் மீட்பராகவும், விழுந்து போன இனத்தின் இரட்சகராகவும் முழு உலகத்தின் அதிபதியாகவும் ஆக்கிற்று. தேவனுடைய கரம் சம்ப வங்களை தம்முடைய சொந்த மகிமைக்கும் மனித நன்மைக்கும் ஏதுவாக கட்டுப்படுத்தாதிருந்ததைப்போன்று, அவரை கொலை செய்தவர்களின் குற்றம் வெறுக்கத்தக்க ஒன்றாகவே இருந்தது.PPTam 287.2

    யோசேப்பு தன் சொந்த சகோதரர்களால் புறஜாதியாரிடம் விற்கப்பட்டான். அதேபோல் கிறிஸ்துவும் அவருடைய ஒரு சொந்த சீடனால் கொடிய சத்துருக்களிடம் விற்கப்பட்டார். யோசேப்பின் மேன்மையான குணத்தினிமித்தம் அவன் பொய்யாக குற்றப்படுத் தப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டான். அவ்வாறே கிறிஸ்து, நீதி யுள்ள சுயத்தை மறுக்கும் அவருடைய வாழ்க்கை பாவத்தைக் கண்டித்ததினால் தள்ளப்பட்டு நிராகரிக்கப்பட்டு, எந்தத் தவறையுங் குறித்து குற்றமற்றிருந்தும் பொய் சாட்சிகளின் வார்த்தைகளினால் ஆக்கினைக்குட்படுத்தப்பட்டார். அநியாயம் மற்றும் ஒடுக்குதலின் கீழ் யோசேப்பு காண்பித்த பொறுமையும் சாந்தமும், இயற்கைக்கு மாறாக நடந்து கொண்ட சகோதரர்களுக்கு அவன் காண்பித்த மன் னிப்பும் தாராளமும், துன்மார்க்க மனிதருடைய தீமையான தவறான நடத்துதலை முறுமுறுப்பின்றி சந்தித்த இரட்சகரின் சகிப்புத்தன் மையையும், தன்னை கொலை செய்தவர்களை மாத்திரமல்ல, தங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பைத் தேடி வருகிற அனைவருக்கும் மன்னிக்கிற அவருடைய குணத்தையும் எடுத் துக்காட்டுகின்றது.PPTam 287.3

    யோசேப்பு தன் தகப்பனுக்குப்பிறகு ஐம்பத்து நான்கு வரு டங்கள் உயிரோடிருந்தான். அவன் எப்பிராயீமுக்குப் பிறந்த மூன் றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் குமா ரனாகிய மாமீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப் பட்டார்கள். அவன் தன்னுடைய ஜனத்தின் விருத்தியையும் செழிப் பையும் கண்டான். இந்த வருடங்கள் நெடுகிலும், தேவன் இஸ்ர வேலை வாக்குத்தத்த நாட்டில் திரும்ப நிலைநிறுத்துவார் என்கிற விசுவாசம் அவனில் அசைக்கப்படவில்லை .PPTam 288.1

    தன்னுடைய முடிவு நெருங்குகிறதை அவன் பார்த்தபோது, தன் உறவினர்களை அழைத்தான். பார்வோன்களின் தேசத்தில் அவன் கனப்படுத்தப்பட்டிருந்தபோதும், எகிப்து அவனுக்கு அந் நிய தேசமாகவே இருந்தது. அவனுடைய வாழ்க்கை இஸ்ரவேலு டனே இணைந்திருந்தது என்கிறதை அவனுடைய கடைசி செய்கை குறிப்பிடுகிறது. அவனுடைய கடைசி வார்த்தைகள் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் இந்தத் தேசத்தைவிட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப்பண்ணுவார் என்பதாக இருந்தது. தன்னுடைய எலும்புகளை கானான் தேசத்திற்கு எடுத்துச் செல்வார்கள் என்ற உறுதிமொழியை இஸ்ரவேல் புத்திரரிடமிருந்து அவன் பெற்றுக்கொண்டான். யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ள வனாய் மரித்தான். தொடர்ந்த உழைப்பு மிகுந்த நூற்றாண்டுகள் நெடுகிலும் அவனுடைய சவப்பெட்டி, யோசேப்பின் இறுதி வார்த் தைகளை நினைவுபடுத்துவதாகவும், எகிப்தில் இஸ்ரவேலர்கள் பரதேசிகளே என்பதை அவர்களுக்கு சாட்சி பகருவதாகவும், விடுதலையின் நேரம் நிச்சயமாக வரும் என்பதால் அவர்கள் தங்கள் நம்பிக்கைகளை வாக்குத்தத்த தேசத்தின் மேல் வைக்க அழைப்பதாகவும் இருந்தது.PPTam 288.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents