Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    39 - பாசானின்மேல் வெற்றி

    தோமின் தென்புறத்தைக் கடந்த பிறகு இஸ்ரவேலர்கள் வாக்குத்தத்த தேசத்திற்கு நேராக வடக்கு நோக்கித்திரும்பினார்கள். அவர்களுடைய பாதை இப்போது குன்றுகளிலிருந்து வந்த குளிர்ந்த புத்துணர்வளிக்கும் காற்று வீசிய உயர்ந்த பரந்த சமபூமியில் இருந்தது. இதுவரை பிரயாணித்திருந்த வறண்ட பள்ளத்தாக்கிலிருந்து மாறுபட்டிருந்த இது, வரவேற்கத்தக்க மாற்றமாயிருந்தது. உணர்ச்சி பெருக்கோடும் நம்பிக்கையோடும் அவர்கள் முன் சென்றனர். நீ மோவாபை வருத்தப்படுத்தாமலும், அவர்களோடே போர் செய்யாமலும் இரு, அவர்கள் தேசத்தில் உனக்கு ஒன்றும் சுதந்தரமாகக் கொடேன், ஆர் என்னும் பட்டணத்தின் சீமையை லோத் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன் என்ற கட்டளை கொடுக்கப்பட்டிருந்ததால், சாரேத் ஓடையைக் கடந்த பின் மோவாப் தேசத்தின் கிழக்குப்புறமாக அவர்கள் சென்றார்கள். லோத்தின் சந்ததியாயிருந்த அம்மோனியரைக் குறித்தும் இதே கட்டளை திரும்பவும் கூறப்பட்டது . !PPTam 556.1

    இன்னும் வடக்கு நோக்கிச் சென்ற இஸ்ரவேலின் சேனை விரைவில் எமோரியரின் நாட்டை எட்டியது. பலசாலிகளும் யுத்த மனுஷருமாயிருந்த இந்த மக்கள் கானான் தேசத்தின் தென்பகுதியை ஆக்கிரமித்திருந்தனர். ஆனால் எண்ணிக்கையில் உயரவே, யோர்தானைக் கடந்து மோவாபியரோடு யுத்தஞ் செய்து, அவர்களுடைய எல்லையின் ஒரு பகுதியை சுதந்தரித்திருந்தனர். இங்கே அர்னோன் துவக்கி வடக்கே யாப்போக்கு வரையிலுமான அனைத்து நிலத்தையும் எவ்வித வாதமுமின்றி அவர்கள் வைத்திருந்தனர். யோர்தானை நோக்கி இஸ்ரவேலர்கள் தொடர் விரும்பியிருந்த நேர்பாதை இந்த எல்லை வழியாக இருந்தது. தலைநகரிலிருந்த எமோரியரின் இராஜாவாகிய சீகோனுக்கு : நான் உம்முடைய தேசத்தைக் கடந்து போகும்படி உத்தரவு கொடும், வலது புறம் இடது புறம் சாயாமல் பொரும்பாதை வழியாய் நடப்பேன். எனக்குப் புசிக்க ஆகாரத்தையும் குடிக்கத் தண்ணீரையும் கிரயத்துக்குத்தாரும், நான் கால் நடையாய்க் கடந்துபோகமாத்திரம் உத்தரவு கொடும் என்ற ஒரு நட்பின் செய்தியை மோசே அனுப்பினான். பதில் தீர்மானமான மறுப்பாக இருந்தது. எல்லை மீறி நுழைந்திருக்கிறவர்களின் முன்னேற்றத்தை எதிர்க்கும்படி எமோரியரின் சேனைகள் அனைத்தும் அழைக்கப்பட்டன. நன்கு ஆயுதந்தரித்து மிக ஒழுங்கில் இருந்த படைகளை எதிர்க்க ஆயத்தமில்லாதிருந்த இஸ்ரவேலருக்கு வல்லமை மிக்க இந்த சேனை திகிலை உண்டாக்கியது. யுத்த திறமைகளைக் கருத்தில் கொள்ளும் போது அவர்களுடைய சத்துருக்கள் அதிக அனுகூலத்தில் இருந்தனர். இஸ்ரவேல் வெகுவிரைவாக இல்லாது போய்விடுமென்று அனைத்து மனிதப் பார்வைக்கும் தோன்றியது.PPTam 556.2

    ஆனால் மோசே தன் பார்வையை மேகஸ்தம்பத்தின் மேல் பதித்திருந்து, தேவனுடைய சமூகத்தின் அடையாளம் இன்னமும் தங்களோடு இருக்கிறது என்கிற நினைவினால் மக்களை உற்ச ராகப்படுத்தினான். அதே சமயத்தில் யுத்தத்திற்கு ஆயத்தப்பட்ட மனிதவல்லமை என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்யும்படி கட்டளையிட்டான். ஆயத்தப்படாத இஸ்ரவேலரை தேசத்திலிருந்து துடைத்துவிடும் நம்பிக்கையோடு அவர்களுடைய சத்துருக்கள் யுத்தஞ்செய்ய ஊக்கத்தோடு இருந்தனர். ஆனால் அனைத்து நாடுகளையும் சுதந்தரமாகக் கொண்டிருக்கிறவரிட மிருந்து இஸ்ரவேலின் தலைவனுக்கு. நீங்கள் எழுந்து பிரயாணம் பண்ணி, அர்னோன் ஆற்றைக் கடந்து போங்கள் : எஸ் போனின் ராஜாவாகிய சீகோன் என்னும் எமோரியனையும் அவன் தேசத்தையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன், இது முதல் அதைச் சுதந்தரித்துக்கொள்ளும் படி அவனோடே யுத்தஞ்செய். வானத்தின்கீழ் எங்குமுள்ள ஜனங்கள் உன்னாலே திகிலும் பயமும் அடையும்படிச் செய்ய இன்று நான் தொடங்குவேன். அவர்கள் உன்கீர்த்தியைக் கேட்டு, உன்னிமித்தம் நடுங்கி, வேதனைப்படுவார்கள் என்ற ஆணை சென்றிருந்தது.PPTam 557.1

    வார்த்தையை அவமதித்தும் இஸ்ரவேலின் முன்னேற்றத்தை எதிர்த்தும் நிற்காது இருந்திருந்தால், கானானின் எல்லைகளிலிருந்த இந்த நாடுகள் விட்டுவைக்கப்பட்டிருந்திருக்கும். ஆண்டவர் இந்த புறஜாதி மக்களுக்குங்கூட தம்மை நீடிய பொறுமையுள்ளவராக, மிகுந்த தயவும் இளகிய உருக்கமும் கொண்டவராக காண்பித்திருந் தார். ஆபிரகாமின் சந்ததியான இஸ்ரவேல் மக்கள் நானூறு வருடங்கள் அந்நிய தேசத்தில் அந்நியராக இருக்கவேண்டும் என்று அவனுக்கு தரிசனத்தில் காண்பித்தபோது நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத்திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும்PPTam 558.1

    நிறைவாகவில்லை (ஆதி. 15:16) என்ற வாக்குத்தத்தத்தை தேவன் கொடுத்திருந்தார். எமோரியர்கள் விக்கிரகாராதனைக்கா ரராக இருந்தபோதும், அவர்களுடைய மாபெரும் அக்கிரமத் தினிமித்தம் அவர்களுடைய வாழ்க்கை ஆக்கினைக்குட்பட்டிருந்தும், அவர் மாத்திரமே வானத்தையும் பூமியையும் உண்டாக்கின் ஒரே மெய்யான தெய்வம் என்பதற்கு தவறில்லாத சான்றைக் கொடுக்கும்படி அவர்களை நானூறு வருடங்கள் விட்டுவைத்திருந்தார், இஸ்ரவேலை எகிப்திலிருந்து கொண்டு வந்ததில் அவர் நடப்பித்த அனைத்து அதிசயங்களையும் அவர்கள் அறிந்திருந்தனர். போதுமான சான்று கொடுக்கப்பட்டிருந்தது. தங்களுடைய விக்கிரகாராதனையிலும் காம வெறியிலுமிருந்து திரும்ப அவர்கள் விரும்பியிருந்தால், சத்தியத்தை அறிந்திருக் கலாம். ஆனால் அவர்கள் வெளிச்சத்தை நிராகரித்து தங்கள் விக்கிரகங்களோடு இணைந்திருந்தார்கள்.PPTam 558.2

    கானானின் எல்லைகளுக்கு ஆண்டவர் அவருடைய ஜனங்களை இரண்டாவது முறையாக கொண்டு வந்தபோது இந்த நாடுகளுக்கு அவருடைய வல்லமையைக் குறித்த கூடுதலான சான்றுகள் கொடுக்கப்பட்டன. ஆராத்தின் இராஜாமேலும் கானானியர்கள் மேலும் பெற்ற வெற்றியினாலும், சர்ப்பங்களால் கடிக்கப்பட்டு அழிந்து கொண்டிருந்தவர்களை காப்பாற்ற செய்யப்பட்ட அற்புதத்தினாலும் தேவன் இஸ்ரவேலரோடு இருக்கிறார் என்கிறதை அவர்கள் கண்டார்கள். ஏதோமின் வழி யாகச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்து, சிவந்த சமுத்திரத்தின் அருகாக நீண்ட கடினமான பாதையில் பயணிக்கக் கட்டாயப்படுத் தப்பட்டிருந்தபோதும். அவர்களுடைய அனைத்து பிரயாணங்களிலும் தங்கியிருந்ததிலும், ஏதோம், மோவாப், அம்மோன் நாடுகளின் மேல் எந்தப் பகையையும் காண்பிக்கவில்லை. மேலும் மக்களுக்கோ அல்லது அவர்களுடைய சொத்துக்களுக்கோ எந்த தீங்கையும் இழைக்கவில்லை. எமோரியர்களின் எல்லையை அடைந்தபோது, மற்ற தேசங்களோடு நடந்து கொண்டதில் அவர்கள் காண்பித்த அதே சட்டங்களை கைக்கொள்ளுவதாக வாக்குக் கொடுத்து, நாட்டின் வழியாக நேரடியாகச் செல்லமாத்திரமே இஸ்ரவேல் அனுமதி கோரியிருந்தது. எமோரிய இராஜா இந்த மரியாதையான வேண்டுகோளை மறுத்து, அவமரியாதையாக தன்னுடைய சேனையை யுத்தத்திற்கு கூட்டின போது அவர்களுடைய அக்கிரமத்தின் பாத்திரம் நிறைந்தது. அவர்களைக் கவிழ்க்க தேவன் இப்போது தமது வல்லமையை பிரயோகிப்பார்.PPTam 558.3

    இஸ்ரவேலர்கள் அர்னோன் நதியைக் கடந்து சத்துருக் களின் மேல் முன்னேறினார். இருவரும் சந்தித்ததில் இஸ்ரவேலின் சேனைகள் வெற்றியடைந்தது. கிடைத்த அனுகூலத்தைத் தொடர்ந்து எமோரியர்களின் தேசத்தை அவர்கள் விரைவாக சு தந்தரித்தார்கள். ஆண்டவருடைய சேனையின் அதிபதியே தமது மக்களின் சத்துருக்களைத் தூரத்தியிருந்தார். இஸ்ரவேல் அவரை நம்பியிருந்திருந்தால் அதே காரியத்தை முப்பத்தெட்டு வருடங்களுக்கு முன்பாகவே அவர் செய்திருப்பார்.PPTam 559.1

    நம்பிக்கையும் தைரியமும் கொண்டதாக இஸ்ரவேலின் சேனை ஊக்கமாக முன்னேறியது. வடக்கை நோக்கியே பயணித்துக் கொண்டிருந்த அவர்கள், அவர்களுடைய தைரியத்தையும் தேவன் மேலிருக்கும் விசுவாசத்தையும் நன்கு சோதிக்கக்கூடிய ஒரு தேசத்தை விரைவாக சென்றடைந்தனர். மகாபெரிய கற்களால் கட்டப்பட்ட பட்டணங்களைக் கொண்ட இன்றைக்குங் கூட அதிசயிக்கச் செய்கிற வல்லமையான பிரபலமான பாசான் ராஜ்யம் அவர்கள் முன் இருந்தது. அறுபது பட்டணங்களுள்ள ...... அந்தப் பட்டணங்களெல்லாம் உயர்ந்த மதில்களாலும் வாசல்களாலும் தாழ்ப்பாள்களாலும் அரணாக்கப்பட்டிருந்தது; அவைகள் மட்டுமின்றி, மதிலில்லாத பட்டணங்களும் அநேகம் உபா. 3:1-11. வீடுகள் அந்தக் காலத்திலே அவைகளுக்கெதிராக வந்திருக்கக் கூடிய எந்த வல்லமையாலும் துளைக்க முடியாத அப்படிப்பட்ட பிரமாண்டமான மிகப் பெரிய கற்களால் கட்டப்பட்டிருந்தன. அந்த நாடு முரடான குகைகளையும் உயரமான சிகரங்களையும், அகன்ற பிளவுகளையும், மலை அரணிப்புகளையும் கொண்டதாக இருந்தது. அதின் குடிகளும் ஒரு இராட்சத சந்ததியாக இருந்து ஆச் சரியப்படக்கூடிய அளவிலும் பலத்திலும் தங்களைச் சுற்றிலுமிருந்த தேசங்களுக்கு திகிலூட்டுபவர்களாக, கொடுமைக்கும் குரூரத்திற்கும் பெயர் போனவர்களாக இருந்தார்கள். இராட்சதர் களின் தேசத்திலும் அந்த தேசத்தின் இராஜாவான ஓக் உருவளவிலும் வீரத்திலும் குறிப்பிடத்தக்கவனாயிருந்தான்.PPTam 559.2

    ஆனால் மேகஸ்தம்பம் முன்னோக்கி நகர்ந்தது. அதன் நடத்துதலைப் பின்பற்றி எபிரெய சேனையும் அந்த இராட்சத அரசன் அவர்கள் நெருங்குவதற்காக அவனது படைகளோடு காத்திருந்த எத்ரேயியை நோக்கிச் சென்றது. யுத்தகளத்தை ஓக் திறமையாக தெரிந்தெடுத்திருந்தான். சம் பூமியிலிருந்து சடிதியாக எழும்பி, கூரிய கரடுமுரடாண எரிமலைகளால் மூடப்பட்டிருந்த மேட்டின் எல்லையில் எத்ரேயி பட்டணம் அமைந்திருந்தது. செங் குத்தான, ஏறுவதற்குக் கடினமான குறுகிய பாதைகளின் வழி யாகத்தான் அதை நெருங்க முடியும். ஒருவேளை தோல்வி ஏற்படுமாயின், அந்நியர்கள் பின் தொடரக்கூடாதிருந்த மலைகளின் தனிமைகளில் அவனுடைய படைகள் அடைக்கலம் பெறமுடியும்.PPTam 560.1

    வெற்றியைக்குறித்த நம்பிக்கையுடன் இராஜா மிகத் திரளான படையோடு திறந்த சமவெளியில் வந்திருந்தான். மேட்டிலிருந்து அவமரியாதையான எதிர்ப்பின் குரல்கள் கேட்கப்பட்டன. அங்கேயுத்தஞ்செய்ய ஆவலுடனிருந்த ஆயிரக்கணக்கானோரின் ஈட்டிகளைக் காணமுடிந்தது. அந்த இராட்சதர்களுக்கு இராட்ச தனுடைய உயர்ந்த உருவம் அவனுடைய படைவீரர்களின் தோள்களுக்கு மேலாக உயர்ந்திருப்பதை எபிரெயர்கள் கண்டபோது, அவனைச் சுற்றியிருந்த சேனைகளைக் கண்டபோது, பதுங்கியிருந்த ஆயிரக்கணக்கானோரை மறைந்திருந்த துளைக்கக் கூடாத அரண்களாகத் தோன்றியவைகளைக் கண்டபோது, இஸ்ரவேலிலிருந்த அநேகரின் மனங்கள் பயத்தால் நடுங்கியது. ஆனால் மோசே அமைதியும் உறுதியுமாக இருந்தான். பாசானின் இராஜாவைக் குறித்து ஆண்டவர் : அவனுக்குப் பயப்பட வேண்டாம், அவனையும் அவனுடைய ஜனங்கள் எல்லாரையும் அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்தது போல், அவனுக்கும் செய்வாய் என்று சொல்லியிருந்தார்.PPTam 560.2

    தங்கள் தலைவனுடைய அமைதியான விசுவாசம் மக்களில் தேவன் மேல் வைக்கும் விசுவாசத்தை ஏவியது. அனைத்தையும் அவருடைய சர்வவல்லமையுள்ள கரங்களில் ஒப்படைத்தார்கள். அவர் அவர்களை கைவிடவில்லை. ஆண்டவருடைய சேனையின் அதிபதி முன்பு வல்லமையான இராட்சதர்களானாலும் அரணான பட்டணங்களானாலும் ஆயுதந்தரித்த சேனையானாலும் மலையரண்களானாலும் எதிர்நிற்க முடியாது. ஆண்டவர் படையை நடத்தினார், ஆண்டவர் சத்துருவை கலங்கப்பண்ணினார். ஆண்டவர் இஸ்ரவேலுக்காக ஜெயித்தார். இராட்சத அரசனும் அவனுடைய படையும் அழிக்கப்பட, இஸ்ரவேலர்கள் விரைவாக அந்த முழு தேசத்தையும் சுதந்தரித்தார்கள். இவ்வாறாக, தங்களை அக்கிரமத்திற்கும் அருவருப்பான விக்கிரகாராதனைக்கும் ஒப்புக்கொடுத்திருந்த அந்த அந்நியர்கள் பூமியிலிருந்து முற்றிலுமாக அகற்றப்பட்டனர்.PPTam 561.1

    கிலேயாத்தையும் பாசானையும் வெற்றிகொண்டதில், நாற்பது வருடங்களுக்கு முன்பு இஸ்ரவேலை காதேசில் நீண்ட வனாந்தர அலைச்சலுக்கு சபித்த சம்பவங்களை அநேகர் நினைவிற்குக் கொண்டு வந்தனர். வாக்குத்தத்த தேசத்தைக் குறித்து வேவுகாரர்கள் கொண்டுவந்த செய்தி அநேக விதங்களில் சரியாக இருந்ததை அவர்கள் கண்டனர். பட்டணங்கள் மதில் சூழ்ந்ததும், மகா பெரியவைகளும், இராட்சதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டவைகளு மாகவும், அவர்களோடு ஒப்பிட்ட போது எபிரெயர்கள் வெட்டுக்கிளிகளாகவும் இருந்தனர். ஆனால் தங்களுடைய பிதாக்களின் அழிவிற்கேதுவானதவறுதேவனுடைய வல்லமையை நம்பாதிருந்ததே என்பதை அவர்களால் இப்போது பார்க்க முடிந்தது. அது மாத்திரமே உடனே அந்த நல்ல தேசத்திற்குள் நுழையாதபடி அவர்களைத் தடுத்திருந்தது.PPTam 561.2

    கானானிற்குள் நுழையும் படி முதலாவது தங்களை ஆயத்தப்படுத்தின் போது, இப்போதிருந்ததைக் காட்டிலும் அது மிகக் குறைவான கஷ்டங்களோடேயே இருந்தது. தம்முடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிவார்களானால், அவர்களுக்கு முன்பாகச் சென்று அவர்களுக்காக யுத்தஞ் செய்வதாக தேவன் தமது ஜனங்களுக்கு வாக்குக் கொடுத்திருந்தார். தேசத்தின் குடிகளைத் துரத்தும்படி குளவிகளையும் அனுப்புவார். தேசங்களின் பயங்கள் பெரும்பாலும் எழுப்பப்பட்டிருக்கவில்லை. எனவே அவர் களுடைய முன்னேற்றத்தை எதிர்க்க குறைவான ஆயத்தமே செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் இப்போது ஆண்டவர் இஸ்ரவேலை முன்செல்ல அழைக்கும் போது, எச்சரிக்கையும் வல்லமையுங் கொண்ட சத்துருக்களுக்கு எதிராக அவர்கள் முன் னேறிச் சென்று, அவர்களுடைய வருகையை தடுக்க ஆயத்தப்பட்டுக்கொண்டிருந்த மிகப் பெரியதும் நன்கு பயிற்று விக்கப்பட்டதுமான படைகளை எதிர்க்கவேண்டும்.PPTam 561.3

    ஓக்குடனும் சீகோனுடனும் சண்டையிட்டதில் தங்கள் பிதாக்கள் குறிப்பாகத் தோற்றுப்போயிருந்த அதே சோதனையின்கீழ் மக்கள் கொண்டுவரப்பட்டிருந்தனர். ஆனால் தேவன் இஸ்ரவேலை போகும் படியாக கட்டளையிட்டபோதிருந்ததை விடவும் இப் போது சோதனைமிக அதிக கடுமையாக இருந்தது. ஆண்டவருடைய நாமத்தினாலே போகும்படி அழைக்கப்பட்டதை நிராகரித்ததிலிருந்து வழியின் கடினங்கள் மிகவும் அதிகரித்திருந்தது. இவ்வாறாகவே தேவன் இன்னமும் தமது ஜனங்களை சோதிக் கிறார். சோதனையை சகிக்க அவர்கள் தவறினால், அதே இடத் திற்கு மீண்டும் அவர்களைக் கொண்டுவருகிறார். இரண்டாம் முறை சோதனை இன்னும் நெருங்கி வந்து, முந்தையதைக்காட்டிலும் அதிகக் கடுமையாக இருக்கும். சோதனையைத் தாங்கும் வரையிலும் இது தொடருகிறது. அல்லது தொடர்ந்து கலகம் செய்வார்களானால் தேவன் தமது ஒளியை அவர்களிலிருந்து விலக்கி, அவர்களை இருளில் விட்டுவிடுகிறார்.PPTam 562.1

    ஒரு காலத்தில் தங்களுடைய படைகள் யுத்தத்திற்குப் போயிருந்தபோது விரட்டப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் மடிந்தனர் என்கிறதை எபிரெயர்கள் இப்போது நினைவுகூர்ந்தனர். ஆனால் அப்போது தேவனுடைய கட்டளைக்கு நேரெதிராகச் சென்றிருந்தனர். அவர்கள் தேவன் நியமித்திருந்த தலைவனாகிய மோசே இல்லாமலும், தெய்வீக சமூகத்தின் அடையாளமாகிய மேகஸ்தம்பம் இல்லாமலும், உடன்படிக்கைப் பெட்டி இல்லாமலும் சென்றிருந்தனர். ஆனால் இப்போது மோசே அவர்களுடைய இருதயத்தை நம்பிக்கை மற்றும் விசுவாச வார்த்தைகளினால் பெலப்படுத்திக்கொண்டு அவர்களோடு இருந்தான். மேகஸ் தம்பத்தினால் மறைக்கப்பட்டிருந்த தேவகுமாரன் அவர்களுடைய வழியை நடத்தினார். பரிசுத்தமான உடன்படிக்கைப் பெட்டி சேனை யுடன் சென்றது. இந்த அனுபவம் நமக்கு ஒரு பாடத்தை வைத் திருக்கிறது. இஸ்ரவேலின் வல்லமையான தேவனே நம்முடைய தேவன். அவரை நம்பலாம். அவருடைய கோரிக்கைகளுக்கு நாம் கீழ்ப்படிந்தோமானால், முற்கால மக்களுக்காக அவர் செய்ததைப்போலவே நமக்காகவும் குறிப்பிடும் விதத்தில் அவர் கிரியை செய்வார். கடமையின் பாதையில் பின்தொடர் விழைகிற ஒவ்வொருவரும் சில நேரங்களில் சந்தேகத்தாலும் அவநம்பிக் கையாலும் அசைக்கப்படுகிறார்கள். பாதை சில வேளைகளில் அதைரியத்திற்கு தங்களை ஆட்படுத்துபவர்களை மனச்சோர் வடையச்செய்து, தாண்டவேகூடாது என்பதைப் போன்றவைகளால் தடை செய்யப்பட்டிருக்கும். ஆனால் அப்படிப்பட்டவர்களிடம் தேவன் முன்னேறிச் செல் என்று கூறுகிறார். எந்த நிலையிலும் உன் கடமையைச் செய். உங்கள் ஆத்துமாவை பயங்கரத்தால் நிரப்புகிற தவிர்க்கக் கூடாததாகத் தோன்றுகிற கஷ்டங்கள், தேவனை தாழ்மையோடு நம்பி கீழ்ப்படிதலின் பாதையில் முன்னே செல்லும்போது மறைந்து போகும்.PPTam 562.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents