Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    44 - யோர்தானைக் கடத்தல்

    மரித்துப்போன தலைவனுக்காக இஸ்ரவேலர்கள் மிக ஆழமாக வருந்தினர். அவனுடைய நினைவை கனப்படுத்தும் படியாக முப்பது நாட்கள் அர்ப்பணிக்கப்பட்டன. அவன் தங்களைவிட்டு எடுக்கப்படும் வரைக்கும் அவனுடையஞான முள்ள ஆலோசனைகளின் மதிப்பையும் தகப்பனைப்போன்ற மென்மையையும் அசையாத விசுவாசத்தையும் முழுமையாக அவர்கள் உணர்ந்திருக்கவில்லை . புதியதும் ஆழமுமான போற்றுதலோடு தங்களோடு அவன் இருந்த போது கொடுத்திருந்த விலைமதிப்புள்ள பாடங்களை அவர்கள் திரும்பிப்பார்த்தனர்.PPTam 620.1

    மோசே மரித்திருந்தான். ஆனால் அவனுடைய செல்வாக்கு அவனோடு மரிக்க வில்லை. அவனுடைய ஜனங்களின் மனங்களில் மீண்டும் தன்னைப் புதுப்பிப்பதற்காக அது பிழைக்க வேண்டியதிருந்தது. பரிசுத்தமான சுயநலமற்ற அந்த வாழ்க்கையின் நினைவு நீண்ட காலமாக நேசிக்கப்பட்டு, மெளனமான பின்தொடரும் வல்லமையினால், அவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளை நெகிழ்ந்திருந்தவர்களுடைய வாழ்க்கையையும் வார்ப்பிக்கும். சூரியன்தானும் கீழே மலைகளுக்குப்பின் மறைந்து போன பின்பும், இறங்கிக்கொண்டிருக்கும் அதன் பிரகாசம் அம்மலைகளின் சிகரங்களை பிரகாசிப்பிக்கிறது போல், தூய்மையும் பரிசுத்தமும் நல்லவர்களுமான மனிதர்களுடைய கிரியைகள் அவர்கள் மறைந்துபோன பின்பும் உலகத்தின் மேல் வெளிச்சம் வீசும். அவர்களுடைய கிரியைகளும் அவர்களுடைய வார்த்தைகளும் அவர்களுடைய உதாரணங்களும் என்றைன்றும் பிழைத்திருக்கும். நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன் - சங். 112:6.4PPTam 620.2

    தங்களுடைய மாபெரும் இழப்பைக் குறித்த வருத்தத்தினால் நிரப்பப்பட்டிருந்தபோது தாங்கள் தனியாக விட்டு விடப்பட வில்லை என்பதை ஜனங்கள் அறிந்தனர். மேகஸ்தம்பம் பகலிலும் அக்கினி ஸ்தம்பம் இரவிலுமாக கூடாரத்தின்மேல் தங்கியிருந்து, ஜனங்கள் தேவனுடைய கற்பனையின் பாதைகளில் நடப்பார்களானால் அவர்தாமே அவர்களுடைய வழிகாட்டுபவராகவும் உதவியாளராகவும் இருப்பார் என்கிற நிச்சயத்தைக் கொடுத் திருந்தது.PPTam 621.1

    யோசுவா இப்போது இஸ்ரவேலின் ஒப்புக்கொள்ளப்பட்ட தலைவனாக இருந்தான். முதலாவது ஒரு யுத்த மனிதனாக அவன் அறியப்பட்டிருந்தான். அவனுடைய திறமைகளும் நேர்மையும் அவனுடைய மக்களுடைய சரித்திரத்தின் இந்தக்காலத்தில் விசேஷ மதிப்புள்ளதாக இருந்தன. தைரியமும், தீர்மானமும், விடாமுயற்சியும், சரியானதும் கெட்டுப்போகாததும், அவனுடைய கவனத்தில் கொடுக்கப்பட்டிருந்தவர்கள் மேல் வைத்த கவனத்தினால் சுயவிருப்பங்களை கவனிக்காதிருந்ததும், எல்லாவற்றிற்கும் மேலாக தேவனிடம் வைத்த உயிருள்ள விசுவாசத்தால் ஏவப் பட்டிருந்ததும்PPTam 621.2

    இப்படிப்பட்டவைகளே இஸ்ரவேலின் சேனைகளை வாக்குத்தத்த தேசத்திற்குள் நடத்திச் செல்ல தெய்வீகம் தெரிந்து கொண்ட நபரின் குணங்களாயிருந்தன. வனாந்தர பிரயாணத் தின்போது அவன் மோசேக்கு பிரதம மந்திரியாக செயல்பட்டிருந்து, அமைதியும், வேஷமில்லாத விசுவாசமும், மற்றவர்கள் அசைந்தபோது அசையாது உறுதியாக இருந்ததும், ஆபத்தின் நடுவிலும் சத்தியத்தைக் கைக்கொள்ள அவனுக்கு இருந்த உறுதியும் மோசேக்கு அடுத்ததாகப் பின்தொடர், தேவனுடைய குரலினால் அந்தத் தகுதிக்கு அழைக்கப்படு முன்பாகவே சான்று பகர்ந்த ன.PPTam 621.3

    தனக்கு முன்னிருந்த வேலையை யோசுவா மிகவும் பெரிய எதிர்பார்ப்போடும் சுயநம்பிக்கையின்றியும் பார்த்திருந்தான். நான் மோசேயோடே இருந்தது போல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக்கைவிடுவதுமில்லை ...... இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்; நான் மோசேக்கு சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன் என்ற தேவனுடைய நிச்சயத்தினால் அவனுடைய பயங்கள் அகற்றப்பட்டன. வெகு தூரத்திலிருந்த லீபனோனின் உயரங்கள், மகா சமுத்திரத்தின் கரைகள், அதைத் தாண்டி கிழக்கே ஐபிராத்து நதியின் கரைவரைக்கும் அவர்களுடை யதாகவிருந்தது.PPTam 621.4

    இந்த வாக்குத்தத்தத்தோடு என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்க மாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு என்ற உத்தரவும் சேர்க்கப்பட்டது. இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக, இதில் எழுதியிருக்கிறவை களின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக. அதை விட்டு வலது இடது புறம் விலகாதிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்து கொள்ளுவாய் என்று ஆண்டவர் கட்டளை கொடுத்தார்.PPTam 622.1

    கானானை சுதந்தரிப்பதற்கு முதல் தடையாக இருந்த யோர்தானின் கிழக்குப் பக்கத்தில் இஸ்ரவேலர்கள் இன்னமும் பாளயமிறங்கியிருந்தனர். இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள் என்பது யோசுவாவிற்குக் கொடுக்கப்பட்ட முதல் செய்தியாக இருந்தது. எந்த வழியாக தங்கள் பாதையை எடுக்கவேண்டும் என்ற போதனை கொடுக்கப்படவில்லை. தேவன் எதைக் கட்டளையிட்டாலும் அதை நடப்பிக்கும்படியான பாதையை தமது ஜனங்களுக்குக் கட்டளையிடுவார் என்பதை அறிந்திருந்து, இந்தப் பாதையில் அஞ்சாது முன்னேறும் படியான ஏற்பாடுகளை அவன் துவங்கினான். ஆற்றின் சில மைல்கள் தாண்டி இப்போது இஸ்ரவேலர்கள் பாளயமிறங்கியிருந்த இடத்திற்கு நேரெதிரில் மகாபெரியதும் பலமான கோட்டையுமான எரிகோ பட்டணம் இருந்தது. முழு தேசத்திற்கும் இந்தப் பட்டணம் கிட்டத்தட்ட திறவு கோலாக இருந்து, இஸ்ரவேலின் வெற்றிக்கு வல்லமை மிக்க தடையைக் கொடுக்கும். எனவே அதன் ஜனத்தொகையையும் அதன் ஆதாரங்களையும் அந்தக் கோட்டையினுடைய வலிமையையுங்குறித்து உளவு பார்த்து நிச்சயப்படுத்தும்படியாக யோசுவா இரண்டு வாலிபர்களை அனுப்பினான். அந்த பட்டணத்தின் குடிகள் திகிலும் சந்தேகமும் கொண்டவர்களாக தொடர்ச்சியான ஜாக்கிரதையில் இருந்தார்கள். தூதுவர்கள் மாபெரும் ஆபத்தில் இருந்தனர். எனினும் எரிகோவிலிருந்த ராகாப் என்னும் ஒரு பெண்ணால் அவளுடைய சொந்த வாழ்க்கையின் ஆபத்தில் பாதுகாக்கப்பட்டார்கள். அவளுடைய தய விற்குக் கைம்மாறாக பட்டணம் பிடிக்கப்படும் போது அவளுடைய பாதுகாப்பைக்குறித்த வாக்குறுதியை அவர்கள் கொடுத்தார்கள்.PPTam 622.2

    கர்த்தர் தேசத்தையெல்லாம் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; தேசத்தின் குடிகளெல்லாம் நமக்கு முன்பாகச் சோர்ந்து போனார்கள் என்ற செய்தியோடு உளவுகாரர்கள் பத்திரமாகத் திரும்பினார்கள். எரிகோவில் நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, கர்த்தர் உங்களுக்கு முன்பாகச் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம் பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம். கேள்விப்பட்டபோது எங்கள் இருதயம் கரைந்து போயிற்று ; உங்களாலே எல்லாருடைய தைரியமும் அற்றுப் போயிற்று. உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர் என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.PPTam 623.1

    முன்னேறிச் செல்ல ஆயத்தப்படும் படியான ஆணைகள் இப்போது கொடுக்கப்பட்டன. ஜனங்கள் மூன்று நாட்களுக்குப் போதுமான உணவை ஆயத்தப்படுத்தி, சேனையுத்தஞ் செய்வதற்கு ஆயத்தமாக வைக்கப்பட வேண்டும். தங்களுடைய தலைவனின் திட்டங்களை அனைவரும் மனதார ஏற்றுக்கொண்டு, நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம், நீர் எங்களை அனுப்பும் இடமெங்கும் போவோம். நாங்கள் மோசேக்குச் செவிகொடுத்தது போல உமக்கும் செவிகொடுப்போம், உம்முடைய தேவனாகிய கர்த்தர்மாத்திரம் மோசேயோடே இருந்தது போல, உம்மோடும் இருப்பாராக என்று தங்களுடைய நம்பிக்கையையும் ஆதரவையுங்குறித்து உறுதியளித்தனர்.PPTam 623.2

    சித்தீமின் வேலமரத் தோப்புகளிலிருந்த தங்களுடைய பாளயத்தைவிட்டு சேனை யோர்தான் மட்டும் வந்தது. தெய்வீக உதவியில்லாது தங்கள் பாதையை உண்டாக்க முடியாது என்பதை அனைவரும் அறிந்திருந்தனர். மலையிலிருந்து உருகும் பனி வருடத்தின் இந்த சமயத்தில் இந்த வசந்த காலத்தில் யோர்தான் நதியை உயர்த்தியிருக்க, அது அதன் கரைகளில் புரண்டோடி, வழக்கமாக கடக்கும் இடங்களில் அதைக் கடப்பதை சாத்தியமற்றதாக்கியிருந்தது. யோர்தானை இஸ்ரவேல் கடந்து செல்லும் பாதை அற்புதமானதாயிருக்க வேண்டும் என்று தேவன் சித் தங்கொண்டிருந்தார். தங்களைப் பரிசுத்தம் பண்ண தெய்வீக நடத்துதலின்படி யோசுவா ஜனங்களுக்கு கட்டளையிட்டான். அவர்கள் தங்கள் பாவங்களை அப்புறப்படுத்தி, வெளிப்புறமான அனைத்து அசுத்தங்களிலிருந்தும் தங்களை விடுவிக்க வேண்டும். நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்று அவன் கூறினான். உடன்படிக்கைப் பெட்டி சேனையின் முன்பு வழி நடத்திச் செல்ல வேண்டும். யெகோவாவின் சமூகத்தைக் குறித்த அடையாளம் ஆசாரியர்களால் சுமக்கப்பட்டு, பாளயத்தில் மையத்தில் இருந்த அதனுடைய இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு நதியை நோக்கி முன்னேறுவதை அவர்கள் காணும் போது, தங்களுடைய இடங்களிலிருந்து நகர்ந்து அதன்பின் செல்ல வேண்டும். அந்த பாதையின் சூழ்நிலைகள் மிக நுண்ணிப்பாக சொல்லப்பட்டிருந்தது. ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவே இருக்கிறார் என்பதையும், அவர் கானானியரையும் ..... உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார் என்பதையும், நீங்கள் அறிந்துகொள்வதற்கு அடையாளமாக : இதோ, சர்வ பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன்னே யோர்தானிலே போகிறது என்று யோசுவா கூறினான்.PPTam 623.3

    நியமிக்கப்பட்ட நேரத்தில் முன்னோக்கின் நகர்வு துவங்கியது. ஆசாரியரின் தோளில் சுமக்கப்பட்டிருந்த பெட்டி கூட்டத்தை நடத்திச்சென்றது. ஜனங்கள் பின்தங்கியிருந்து, தங்களுக்கும் உடன்படிக்கைப் பெட்டிக்கும் இடையே அரைமைலுக்கும் அதிகமான தூரம் உண்டாயிருக்க நடத்தப் பட்டனர். அனைவரும் ஆழ்ந்த ஆர்வத்தோடு ஆசாரியர்கள் யோர்தானின் கரையை நோக்கி முன்னேறுவதைக் கவனித்திருந்தனர். பரிசுத்தமான உடன்படிக்கை பெட்டியோடு ஆவேசமான அலைகளோடிருந்த நதியை நோக்கி தங்களுடைய பாதங்கள் தண்ணீரில் மூழ்கும் வரை அவர்கள் முன்னேறிச் சென்றதை கண்டனர். சடுதியில் அவர்களுக்கு மேலிருந்த அலை பின்னோக்கி நகர், அவர்களுக்குக் கீழிருந்த நீர் ஓடிச்செல்ல, ஆற்றங்கரை வெற்றிடமாகியது.PPTam 624.1

    தெய்வீகக் கட்டளையின்படி ஆசாரியர்கள் அந்த நதியின் நடுப்பகுதிக்கு முன்னேறி, முழு சேனையும் இறங்கிவந்து அடுத்த பக்கத்திற்கு கடந்து செல்லும் வரை அங்கே தரித்திருந்தனர். யோர் தானின் தண்ணீர்களை நிறுத்திய அதே வல்லமைதான் நாற்பது வருடங்களுக்கு முன் அவர்களுடைய பிதாக்களுக்கு செங்கடலை பிளந்தது என்பது அனைத்து இஸ்ரவேலின் மனங்களிலும் இவ் விதமான பதிக்கப்பட்டது. அனைத்து மக்களும் தாண்டிச் சென்ற பின் உடன்படிக்கைப்பெட்டி மேற்குக்கரைக்கு சுமந்து செல்லப்பட்டது. அது பாதுகாப்பான இடத்தைச் சென்று அடைந்ததும் அவர்கள் உள்ளங்கால்கள் கரையில் ஊன்றின் போது சிறைப் படுத்தப்பட்டிருந்த தண்ணீர்கள் விடுவிக்கப்பட, அது வேகமாகக் கீழிறங்கி தடுக்கக்கூடாத வெள்ளமாக அதன் இயற்கையான பாதையில் ஓடியது.PPTam 625.1

    இந்த மாபெரும் அற்புதத்தைக் குறித்த சாட்சி இல்லாமல் வரப்போகும் தலைமுறை இருக்கக்கூடாது. உடன்படிக்கைப் பெட்டியை சுமந்திருந்த ஆசாரியர்கள் யோர்தானின் மையத்தில் இருந்தபோதே, ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவராக முன்னதாகவே தெரிந்தெடுக்கப்பட்டிருந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் ஆசாரியர்கள் நின்றிருந்த இடத்திலிருந்து ஒரு கல்லை எடுத்து மேற்குப்பகுதிக்கு சுமந்து வந்தனர். ஆற்றைத்தாண்டி முதலாவது அவர்கள் தங்கும் இடத்தில் இந்தக் கற்கள் நினைவுச்சின்னமாக நிறுத்தப்படவேண்டும். பூமியின் சகல ஜனங்களும் கர்த்தருடைய கரம் பலத்ததென்று அறியும் படிக்கு, நீங்கள் சகல நாளும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படும் படிக்கு என்று யோசுவா சொன்னதைப்போல தங்கள் பிள்ளைகளுக்கும் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அவர்களுக்காக தேவன்PPTam 625.2

    நடப்பித்த விடுதலையை அவர்கள் திரும்பக் கூற வேண்டும்.PPTam 625.3

    எபிரெயர்கள் மேலும் அவர்களுடைய சத்துருக்கள் மேலும் இந்த அற்புதம் ஏற்படுத்திய செல்வாக்கு மாபெரும் முக்கியத்துவம் கொண்டிருந்தது, தேவனுடைய தொடர்ச்சியான சமூகம் மற்றும் பாதுகாப்பின் நிச்சயமாக - மோசேயின் வழியாக நடப்பித் ததைப்போலவே யோசுவாவின் வழியாகவும் அவர் கிரியை செய்வார் என்பதன் சான்றாக இது இஸ்ரவேலுக்கு இருந்தது. தேசத்தை வெற்றிகொள்ளும் வேலையில் நுழையும்போது நாற்பது வருடங்களுக்கு முன் அவர்களுடைய பிதாக்களின் விசுவாசத்தை தடுமாறச் செய்த வியக்கத்தக்க வேலையில் அவர்கள் நுழையும் போது, அவர்கள் இருதயத்தை பலப்படுத்த அப் படிப்பட்ட நிச்சயம் அவசியமாயிருந்தது. கடந்து செல்லும் முன்னதாக ஆண்டவர் யோசுவாவிடம், நான் மோசேயோடே இருந்தது போல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ர வேலரெல்லாரும் அறியும் படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன் என்று அறிவித்திருந்தார். அதன் விளைவு இந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றியது. அந்நாளிலே கர்த்தர் யோசுவாவைச் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்தது போல், அவனுக்கும், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் பயந்திருந்தார்கள்.PPTam 625.4

    சுற்றியிருந்த தேசங்களில் அவர்களைக் குறித்திருந்த பயத்தை அதிகப்படுத்தவும், எளிதும் முழுமையுமான வெற்றிக்கு வழியை ஆயத்தப்படுத்தவுங்கூட இஸ்ரவேலுக்காக இவ்விதம் தெய்வீக வல்லமை திட்டமிடப்பட்டிருந்தது. இஸ்ரவேல் ஜனங்களின் முன்பு யோர்தானின் தண்ணீர்களை தேவன் நிறுத்தினார் என்ற செய்தி எமோரியர்கள் மற்றும் கானானியர்களின் இராஜாக்களைச் சென்ற டைந்தபோது, அவர்களுடைய இருதயங்கள் பயத்தால் உருகியது. எபிரெயர்கள் ஏற்கனவே மீதியானின் ஐந்து இராஜாக்களையும் எமோரியர்களின் வல்லமையான இராஜாவாகிய வல்லமை நிறைந்த சீகோனையும் பாசானின் ஓகையும் கொன்றிருந்தனர். இப்போது புரண்டு கொண்டிருந்த மூர்க்கமான யோர்தானைக் கடந்தது சுற்றிலுமிருந்த தேசங்களை பயத்தால் நிரப்பியது. கானானியர்களுக்கும் அனைத்து இஸ்ரவேலருக்கும் யோசு வாவிற்குத்தானும் ஜீவனுள்ள தெய்வம், வானத்திற்கும் பூமிக்கும் இராஜாவானவர் அவரது ஜனங்களின் மத்தியில் இருக்கிறா ரென்பதற்கும், அவர்களை மறக்கவோ கைவிடவோ மாட்டார் என்பதற்கும் தவறில்லாத சான்றாகக் கொடுக்கப்பட்டது.PPTam 626.1

    யோர்தானிலிருந்து குறைந்த தூரத்தில் கானானில் எபிரெயர்கள் தங்களுடைய முதல் பாளயத்தைப் போட்டனர். இங்கே யோசுவா இஸ்ரவேல் புத்திரரை ... விருத்தசேதனம் பண்ணினான். இஸ்ர வேல் புத்திரர் கில்காலில் பாளயமிறங்கியிருந்து ...... பஸ்காவை ஆசரித்தார்கள். காதேசின் கலகத்திலிருந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த விருத்தசேதன சடங்கு, தேவனுடனான தங்களுடைய உடன்படிக்கைக்காக நியமிக்கப்பட்ட இந்த அடையாளம் முறிக்கப் பட்டிருந்தது என்பதற்கான நிலையான சாட்சியாக இஸ்ரவேலுக்கு இருந்தது. எகிப்திலிருந்து பெற்ற விடுதலையின் நினைவுச்சின்னமான பஸ்காவும் தொடரப்படவில்லை என்பது தங்க அடிமைத்தன தேசத்திற்குத் திரும்பிச் செல்ல அவர்களுக்கிருந்த ஆவலின் மேல் ஆண்டவருடைய அதிருப்திக்கான சான்றாக இருந்துவந்தது. ஆனாலும் இப்போது நெகிழப்பட்டிருந்த வருடங்கள் முடிவிற்கு வந்தன . தேவன் மீண்டும் ஒரு முறை இஸ்ரவேலை தம்முடைய ஜனமாக ஒப்புக்கொண்டார். மீண்டும் உடன்படிக்கையின் அடையாளம் நிலைநாட்டப்பட்டது. வனாந்தரத்தில் பிறந்த அனைவர் மேலும் விருத்தசேதன் சடங்கு செய்யப்பட்டது. இன்று எகிப்தின் நிந்தையை உங்கள் மேல் இராதபடிக்கு புரட்டிப்போட் டேன் என்று ஆண்டவர் யோசுவாவிடம் அறிவித்தார். இதற்கு நினைவாக அவர்கள் பாளயம் தங்கியிருந்த இடம் கில்கால் அல்லது புரட்டிப்போடுதல் என்று அழைக்கப்பட்டது.PPTam 626.2

    எகிப்தைவிட்டு வந்தவுடனே தாங்கள் எதிர்பார்த்திருந்ததைப் போல எபிரெயர்கள் கானானை சுதந்தரிக்க தவறினதால், புறஜாதி தேசங்கள் ஆண்டவரையும் அவருடைய ஜனங்களையும் நிந்தித்திருந்தனர். இஸ்ரவேல் நீண்ட காலமாக வனாந்தரத்தில் அலைந்திருந்ததால், அவர்களுடைய சத்துருக்கள் குதுகலித்திருந்து, எபிரெயர்களின் தேவன் வாக்குத்தத்த தேசத்திற்குள் அவர்களைக் கொண்டுவரக்கூடாது போனார் என்று பரிகாசமாக அறிவித்திருந்தனர். யோர்தானை தமது ஜனங்களுக்கு முன் திறந்ததில் ஆண்டவர் இப்போது குறிப்பாக தமது வல்லமையை வெளிக்காட்டினார். அவர்களுடைய சத்துருக்கள் இனி ஒருபோதும் அவர்களை மிதிக்க முடியாது.PPTam 627.1

    மாதத்தின் பதினாலாம் தேதி அந்திநேரத்திலே எரிகோவின் சமபூமிகளில் பஸ்கா கொண்டாடப்பட்டது. பஸ்காவின் மறுநாளா கிய அன்றையதினம் அவர்கள் தேசத்தினுடைய தானியத்தாலாகிய புளிப்பில்லாத அப்பங்களையும் சுட்ட கதிர்களையும் புசித்தார்கள். அவர்கள் தேசத்தின் தானியத்திலே புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்தது. அது முதல் இஸ்ரவேல் புத்திரருக்கு மன்னா இல்லாமற்போய், அவர்கள் கானான் தேசத்துப் பலனை அந்த வருஷத்தில் தானே புசித்தார்கள். நீண்டகால வனாந்தர அலைச்சல்கள் முடிவிற்கு வந்தன. இஸ்ரவேலின் பாதங்கள் முடிவாக வாக்குத்தத்த தேசத்தில் நடந்தன.PPTam 627.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents