Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    40 - பிலேயாம்

    ஜெயித்து யோர்தானுக்குத் திரும்பி வந்தபோது, கானானின் மேல் உடனடியாக படையெடுக்கும் ஆயத்தத்தில் இஸ்ரவேலர்கள் அந்த ஆற்றின் அருகே, அது சவக்கடலை சென்றடையுமிடத்தில் எரிகோவின் சமபூமிக்குச் சற்று எதிரே பாளயமிறங்கினார்கள். அவர்கள் மோவாபின் எல்லைகளில் இருந்தார்கள். எல்லைமீறி நுழைந்தவர்கள் நெருங்கிமிக அருகில் வந்திருந்ததால் மோவாபியர் திகிலால் பிடிக்கப்பட்டார்கள்.PPTam 564.1

    மோவாப் மக்கள் இஸ்ரவேலரால் துன்புறுத்தப்படவில்லை. எனினும் சுற்றிலுமிருந்த நாடுகளில் நடந்த அனைத்தினாலும் நடக்கவிருக்கும் சம்பவத்தைக் குறித்து கலங்கியிருந்தனர். திரும்பிச் செல்லும் படித் தங்களை பலவந்தம் பண்ணின எமோரியர்கள் எபிரெயர்களால் வெற்றிகொள்ளப்பட்டிருந்தனர். எமோரியர்கள் மோவாபிடமிருந்து பறித்துக் கொண்ட எல்லைகள் இப்போது இஸ்ரவேலின் சுதந்தரமாக இருந்தன. மேகஸ்தம்பத் தினால் மறைக்கப்பட்டிருந்த அற்புதமான வல்லமைக்கு முன்பாக பாசானின் சேனைகள் ஒப்புக் கொடுத்திருந்து, இராட்சத அரண்கள் எபிரெயர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. அவர்களை தாக்க மோவாபியர்களுக்குத் துணிவில்லை. அவர்கள் சார்பாக கிரியை செய்த தெய்வீக முகவர்களை எதிர்க்க, பலத்தை நம்புவது நம்பிக்கையற்றது. எனினும் தேவனுடைய கிரியையைத் தடுக்க பார்வோன் மந்திரவாதத்தை அழைத்ததைப்போல் அவர்களும் செய்வார்கள். இஸ்ரவேலின் மேல் சாபத்தை வருவிப்பார்கள்.PPTam 564.2

    மோவாபின் மக்கள் மீதியானியரோடுள்ள தேசியக்கட்டுகளாலும் மதத்தின் கட்டுகளாலும் நெருக்கமாக இணைக்கப்பட்டி ருந்தனர். மோவாபின் அரசன் பாலாக், தன் இனத்தாரின் பயத்தைத் தூண்டி விட்டு மாடு வெளியின் புல்லை மேய்கிறது போல, இப்பொழுது இந்தக் கூட்டம் நம்மைச் சுற்றியிருக்கிற யாவையும் மேய்ந்து போடும் என்ற செய்தியினால் இஸ்ரவேலுக்கு எதிரான தன்னுடைய திட்டத்திற்கு அவர்களுடைய ஒத்துழைப்பைப் பெற்றான். மெசபத்தோமியா நாட்டில் குடியிருந்த பிலேயாம் தெய்வீக வல்லமைகளைக் கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு, அவனுடைய புகழ் மோவாப் தேசம் வரையிலும் பரவியிருந்தது. தங்களுடைய உதவிக்கு அவனை அழைக்க அவர்கள் தீர்மானித்தார்கள். அதற்கேற்ப மோவாபின் மூப்பரும் மீதியானின் மூப்பரும் ஆன தூதுவர்கள் இஸ்ரவேலுக்கு எதிரான அவனுடைய மந்திரங்களையும் குறிசொல்லுதலையும் பெறும்படியாக அவனை அழைத்தனுப்பினர்.PPTam 565.1

    தூதுவர்கள் உடனடியாக மலைகளையும் பாலைவனங்களையும் கடந்து மெசபத்தோமியாவிற்கான தங்களுடைய நீண்ட பிரயாணத்தைத் துவங்கினர். பிலேயாமை கண்டு பிடித்ததும் எகிப்திலிருந்து ஒரு ஜனக்கூட்டம் வந்திருக்கிறது; அவர்கள் பூமியின் விசாலத்தை மூடி, எனக்கு எதிரே இறங்கியிருக்கிறார்கள். அவர்கள் என்னிலும் பலவான்கள்; ஆகிலும், நீர் ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், நீர் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று அறிவேன், ஆதலால், நீர் வந்து, எனக்காக அந்த ஜனத்தைச் சபிக்கவேண்டும், அப்பொழுது ஒருவேளை நான் அவர்களை முறிய அடித்து, அவர்களை இந்த தேசத்திலிருந்து துரத்தி விடலாம் என்ற தங்களுடைய அரசனின் செய்தியை அவனிடம் கொடுத்தனர்.PPTam 565.2

    பிலேயாம் ஒரு காலத்தில் நல்ல மனிதனாகவும் தேவனுடைய தீர்க்கதரிசியாகவும் இருந்தான். ஆனால் அவன் மருள்விழுந்து தன்னை இச்சைக்கு ஒப்புக்கொடுத்திருந்தான். எனினும் உன்னத மானவரின் ஊழியக்காரன் என்று தன்னை அழைத்துக்கொண்டிருந் தான். இஸ்ரவேலுக்காக தேவன் செய்த கிரியைகளைக் குறித்து அவன் அறியாமலில்லை. தூதுவர்கள் தங்கள் செய்தியை அறிவித்தபோது, பாலாக் கொடுத்த பரிசுகளை நிராகரித்து தூதுவர்களை அனுப்பிவிடுவது தன்னுடைய கடமை என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால் சோதனையோடு விளையாடும்படி துணிந்து, ஆண்டவரிடமிருந்து ஆலோசனை பெறும் வரையிலும் தன்னால் தீர்மானமான பதிலைக் கொடுக்க முடியாது என்று அறிவித்து, தூதுவர்களை அந்த இரவில் தன்னோடு தங்கும்படி நிர்பந்தித்தான். தன்னுடைய சாபம் இஸ்ரவேலர்களை பாதிக்காது என்பதை பிலேயாம் அறிந்திருந்தான். தேவன் அவர்கள் பக்கத்தில் இருந்தார்; அவருக்கு உண்மையாக இருக்கும் காலம் வரையிலும் பூமியிலாவது பாதாளத்திலாவது இருக்கிற எந்த வல்லமையும் அவர்களுக்கெதிராக வெற்றி கொள்ளக் கூடாது. ஆனால், நீர் ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், நீர் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்ற தூதுவர்களின் வார்த்தைகளால் அவனுடைய பெருமை புகழப்பட்டது. பரிதானமாக வந்த விலையுயர்ந்த பரிசுகளும் எதிர்காலத்தின் உயர்வும்,PPTam 565.3

    அவனுடைய இச்சையைத் தூண்டிவிட்டது. பேராசையோடு அந்த பொக்கிஷங்களை ஏற்றுக்கொண்டான். பின்னர் தேவனுடைய சித்தத்திற்கு கண்டிப்பாக கீழ்ப்படிகிறவன் என்று அறிவித்து, கூடவே பாலாக்கினுடைய ஆசைகளுக்கு இணைந்து போகவும் முயற்சித்தான்.PPTam 566.1

    இரவிலே தேவனுடைய தூதன் : நீ அவர்களோடே போக வேண்டாம்; அந்த ஜனங்களைச் சபிக்கவும் வேண்டாம், அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்ற செய்தியோடு பிலேயாமிடம் வந்தான்.PPTam 566.2

    காலையில் பிலேயாம் தயக்கத்தோடு தூதுவர்களை அனுப்பி வைத்தான். ஆனால் ஆண்டவர் என்ன சொன்னார் என்பதை அவர்களிடம் சொல்லவில்லை. ஆதாயத்தையும் கனத்தையுங் குறித்த தன்னுடைய கனவுகள் திடீரென்று ஒன்றுமில்லாமல் போனதினால் கோபமடைந்தவனாக வெடுப்வெடுப்போடு . நீங்கள் உங்கள் தேசத்துக்குப் போய்விடுங்கள்; நான் உங்களோடேகூட வருகிறதற்கு கர்த்தர் எனக்கு உத்தரவு கொடுக்க மாட்டோம் என்கிறார் என்று கூறினான்.PPTam 566.3

    பிலேயாம் அநீதத்தின் கூலியை விரும்பினான் (1 பேதுரு 2:15). விக்கிரகாராதனை என்று தேவன் அறிவிக்கிற இச்சை என்கிற பாவம் அவனை சமயத்திற்கு ஊழியம் செய்கிறவனாக்கிற்று. இந்த ஒரு குற்றத்தின் வழியாக சாத்தான் அவனை முழுவதுமாக கட்டுப்படுத்தினான். இதுவே அவனுடைய அழிவிற்குக் காரண மாயிற்று. தேவனுக்கு ஊழியஞ் செய்வதிலிருந்து மனிதர்களை நயங்காட்ட சோதனைக்காரன் எப்போதும் உலக ஆதாயத்தையும் கனத்தையுமே காண்பிக்கிறான். அவர்களை செழிப்படைய விடாதிருப்பது அவர்களுடைய மிஞ்சின் கடமையுணர்ச்சியே என்று சொல்லுகிறான். இதனால் கடுமையான நேர்மையின் பாதையிலிருந்து வெளியே செல்லும்படி அநேகர் தூண்டப்படுகிறார்கள். ஒரு தவறான அடி, அடுத்த அடியை இலகுவாக்குகிறது. பின்னர் அவர்கள் அதிகமதிகமாக துணிகரமாகிறார்கள். தங்களை இச்சைக்கோ அதிகாரத்தின் வாஞ்சைக்கோ கொடுக்கும் போது மிக பயங்கரமான காரியங்களைச் செய்கிறார்கள், செய்ய தைரியமும் அடைவார்கள். சில உலக ஆதாயங்களுக்காக கண்டிப்பான உண்மையிலிருந்து சில காலம் விலகலாம் என்றும், அந்தக் காரியத்தை அடைந்த பின் தாங்கள் விரும்பும் போது தங்களுடைய வழியை மாற்றிக்கொள்ளமுடியும் என்றும் சிலர் தங்களை வஞ்சித்துக்கொள்ளுகிறார்கள். அப்படிச் செய்கிறவர்கள் சாத்தானின் கண்ணிகளில் தங்களை சிக்கவைக்கிறார்கள், அதிலிருந்து மிக அபூர்வமாகவே அவர்கள் தப்புகிறார்கள்.PPTam 566.4

    தீர்க்கதரிசி தங்களோடு வர மறுத்ததை தூதுவர்கள் பாலாக்கிற்கு அறிவித்தபோது, தேவன் அவனைத் தடுத்ததாக அறிவிக்கவில்லை .PPTam 567.1

    இன்னும் அதிக பரிசைப் பெறும் படியாகவே பிலேயாம் தாமதிக்கிறான் என்று யூகித்தவனாக, அரசன் முன்பைக்காட்டிலும் அதிக கனமான அதிக எண்ணிக்கையிலான பிரபுக்களை இன்னும் உயர்ந்த மரியாதையைக் குறித்த வாக்குறுதிகளோடும் பிலேயாம் வைக்கும் எந்தக் கோரிக்கைக்கும் இணைந்து போகும் அதிகாரத்தோடும் அனுப்பினான். தீர்க்கதரிசிக்கான பாலாக்கின் அவசர செய்தி. நீர் என்னிடத்தில் வருகிறதற்குத் தடைப்படவேண் டாம், உம்மை மிகவும் கனம்பண்ணுவேன்; நீர் சொல்வதையெல் லாம் செய்வேன் ; நீர் வந்து எனக்காக அந்த ஜனங்களைச் சபிக்கவேண்டும் என்று இருந்தது.PPTam 567.2

    இரண்டாம் முறை பிலேயாம் சோதிக்கப்பட்டான். தூதுவர் களின் அந்த அழைப்பிற்கு மாபெரும் மனசாட்சியும் உண்மையு முள்ளவனாக தன்னைக் காண்பித்து, எந்த அளவிற்கு பொன்னும் வெள்ளியும் கொடுத்தாலும் தேவனுடைய சித்தத்திற்கு எதிராகச் செல்ல தன்னைத் தூண்ட முடியாது என்று உறுதியாகக் கூறினான். ஆனால் இராஜாவினுடைய விண்ணப்பத்தோடு இணைந்து போக அவன் ஏங்கினான். தேவனுடைய சித்தம் ஏற்கனவே நிச்சயமாக அவனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபோதும், நித்தியமானவர் ஏதோ ஒரு மனிதனைப் போலவும், அவரை இணங்க வைக்கக்கூடும் என்பதைப்போலவும், அவரிடம் மேலும் விசாரிக்கிறதற்காக தூதுவர்களை தங்கும்படி அவன் நிர்பந்தித்தான்.PPTam 567.3

    இராக்காலத்தில் ஆண்டவர் பிலேயாமிற்குத் தோன்றி : அந்த மனிதர் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ எழுந்து அவர்களோடே கூடப்போ ஆனாலும், நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படி மாத்திரம் நீ செய்யவேண்டும் என்று கூறினார். அவன் அதில் தீர்மானமாயிருந்ததினால் இவ்வளவு தூரத்திற்கு அவனுடைய செ பாந்த சித்தத்தைப் பின்பற்ற ஆண்டவர் பிலேயாமை அனுமதிப்பார். அவன் தேவனுடைய சித்தத்தைச் செய்யதேடவில்லை. தன்னுடைய சொந்த வழியையே தெரிந்திருந்து அதற்கு தேவனுடைய அனுமதியைப் பெற முயற்சித்தான்.PPTam 568.1

    இதே வழியைப் பின்பற்றும் ஆயிரக்கணக்கானோர் இன்றும் இருக்கிறார்கள். தங்களுடைய கடமை தங்கள் விருப்பங்களுக்கு இசைவாக இருக்குமானால் அதைப் புரிந்து கொள்ளுவதில் அவர்களுக்கு எந்தக் கடினமும் இருக்காது. அது வேதாகமத்தில் தெளிவாக வைக்கப்பட்டிருக்கிறது அல்லது சூழ்நிலைகளாலும் காரணத்தாலும் தெளிவாக காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் தங்களுடைய விருப்பங்களுக்கும் எண்ணங்களுக்கும் முரணாக இந்த சான்றுகள் இருப்பதினால், அவைகளை அடிக்கடி அப்புறப் படுத்தி, தங்களுடைய கடமையைக் குறித்து கற்றுக்கொள்ள தேவனிடம் செல்லுவதைப்போல் யூகித்துக்கொள்ளுகிறார்கள். வெளிப்படையான பெரிய கடமையுணர்ச்சியோடு வெளிச்சத் திற்காக நீண்ட ஊக்கமான ஜெபம் செய்கிறார்கள்; ஆனால் தேவனை அற்பமாக எண்ண முடியாது. அப்படிப்பட்ட நபர்களை தங்களுடைய சொந்த விருப்பங்களைப் பின்பற்றவும் அதன் விளைவுகளை அனுபவிக்கவும் பல வேளைகளில் அவர் அனு மதிக்கிறார். என்ஜனமோ என் சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை, ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன், தங்கள் யோசனைகளின்படியே நடந்தார்கள் சங். 31:11, 12. கடமையைத் தெளிவாகக் காணும்போது, அதைச் செய்வதிலிருந்து தப்பிக்கிறதற்கேதுவாக ஜெபத்தில் தேவனிடம் செல்ல ஒருவரும் துணிய வேண்டாம். மாறாக, தாழ்மையான ஒப்புக்கொடுக்கும் ஆவியோடு அதன் உரிமைகளை சந்திக்கிற தற்குத் தேவையான தெய்வீக பலத்திற்காகவும் ஞானத்திற்காகவும் கேட்கட்டும்.PPTam 568.2

    மோவாபியர்கள் கீழ்த்தரமான விக்கிரகாராதனைக்காரர்கள். ஆனாலும் அவர்களுடைய குற்றம் அவர்கள் பெற்றிருந்த வெளிச்சத்தின்படி பரலோகத்தின் பார்வையில் பிலேயாமின் குற்றத்தைப் போல பெரியதாக இல்லை. தேவனுடைய தீர்க்கதரிசி என்று அறிவித்ததினால், அவன் சொல்லப்போகும் அனைத்தும் தெய்வீக அதிகாரத்தினால் சொல்லப்பட்டதாகவே எடுத்துக்கொள் ளப்படும். எனவே அவன் தெரிந்து கொள்ளுவதைப்போல பேச அவனை அனுமதிக்கக் கூடாது. மாறாக, தேவன் தரும் செய்தியையே அறிவிக்க வேண்டும். நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படி மாத்திரம் நீ செய்யவேண்டும் என்பது தெய்வீகக் கட்டளையாக இருந்தது.PPTam 568.3

    காலையில் அவனை அழைக்கும்படி மோவாபின் தூதுவர்கள் வந்தால் அவர்களோடு போகும் படியான அனுமதியை பிலேயாம் பெற்றான். ஆனாலும் அவனுடைய தாமதத்தினால் எரிச்சலடைந்தவர்களாக, மற்றொரு மறுப்பை எதிர்பார்த்து அவனோடு மேலும் பேசாது தூதுவர்கள் வீடு நோக்கிய தங்கள் பிரயாணத்தைத் துவங்கினார்கள். பாலாக்கின் விண்ணப்பத்தோடு இணங்கிப் போகவிருந்த ஒவ்வொரு சாக்குப்போக்கும் இப்போது அப்புறப் படுத்தப்பட்டிருந்தது. ஆனால் பிலேயாம் பரிசைப் பெறுவதில் தீர்மானமாயிருந்தான். வழக்கமாக பிரயாணிக்கிற மிருகத்தின் மேல் அவன் தன்னுடைய பிரயாணத்தைத் துவங்கினான். இப்போதுங்கூட தெய்வீக அனுமதிதிரும்ப எடுத்துக் கொள்ளப்படும் என்று அவன் பயந்தான். இச்சிக்கத்தக்க பரிசை ஏதாவது வழியில் இழந்துவிடுவோமோ என்று பொறுமையற்றவனாக முன்னோக்கி ஆர்வத்தோடு சென்றான். ஆனால் கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு என்ன எதிராளியாக நின்றார். அந்த மிருகம் மனிதனால் அறிந்துகொள்ளக்கூடாதிருந்த தெய்வீகத் தூதுவரை கண்டு பாதையிலிருந்து வயலுக்குத் திரும்பியது . கொடுமையான அடிகளினால் பிலேயாம் மிருகத்தை பாதைக்குத் திரும்பக் கொண்டுவந்தான். ஆனால் மீண்டும் சுவர்களால் மறைக்கப்பட்டிருந்த நெருக்கமான இடத்தில் தூதன் தோன்றினார். மிருகம் அந்த உருவத்தைத் தவிர்க்கும்படி சுவரோடு தன் எஜமானின் கால்களை நெருக்கிற்று. பிலேயாம் தெய்வீகதலையீட்டிற்குக்குருடாகியிருந்து, தேவன் தன்னுடைய பாதையை தடுக்கிறதை அறியாதிருந்தான். அந்த மனிதன் ஆத்திரமடைந்தவனாக அந்த கழுமையை இரக்கமின்றி அடித்து முன் செல்லும்படியாக பலவந்தப்படுத் தினான்.PPTam 569.1

    மீண்டும் வலது புறம் இடது புறம் விலக வழியில்லாத இடுக்கமான இடத்திலே பயப்படுத்தும் தோரணையில் தூதன் முன் போல காணப்பட்டார். அந்த பரிதாபமான மிருகம் பயத்தால் நடுங்கி முற்றிலும் நின்று போய், தன்னை ஓட்டினவனோடு சேர்ந்து தரையில் விழுந்தது. பிலேயாமின் மூர்க்கம் எல்லையற்றிருந்தது. இதற்கு முன் செய்ததைக் காட்டிலும் மிகக் கொடுமையாக அந்தக் கோலினால் அவன் அந்த மிருகத்தை அடித்தான். தேவன் இப்போது அதன் வாயைத் திறந்தார். பேசாத மிருகம் மனுஷர் பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது (2 பேதுரு 21). நீர் என்னை இப்பொழுது மூன்றுதரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்று அது கூறியது.PPTam 569.2

    தன்னுடைய பிரயாணத்தில் இவ்விதம் தடை செய்யப்பட்ட தினால் வெகுண்டு, ஒரு புத்தியுள்ள மனிதனோடு பேசு வதைப்போல் பிலேயாம் மிருகத்திற்குப் பதில் கொடுத்தான். நீ என்னைப் பரியாசம் பண்ணிக்கொண்டு வருகிறாய், என் கையில் ஒரு பட்டயம் மாத்திரம் இருந்தால், இப்பொழுதே உன்னைக் கொன்று போடுவேன் என்றான். இங்கே, தான் பிரயாணம் பண்ணின் மிருகத்தைக்கூட கொல்ல வல்லமையற்ற, தன்னை மந்திரவாதி என்று அழைத்துக்கொண்ட ஒரு மனிதன், ஒரு முழு ஜனக்கூட்டத்தின்மேலும் அவர்களுடைய பெலத்தை முடக்கும் நோக்கத்தில் சாபத்தை அறிவிக்க தன் வழியிலே போய்க் கொண்டிருக்கிறான்.PPTam 570.1

    பிலேயாமின் கண்கள் இப்போது திறக்கப்பட, உருவின பட்டயத்தோடு அவனைக் கொல்ல ஆயத்தமாக நின்றிருந்த தூதனை அவன் கண்டான். திகிலோடு தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான். தூதன் அவனிடம், நீ உன் கழுதையை இதனோடே மூன்று தரம் அடித்ததென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன். கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்றுதரம் எனக்கு விலகிற்று ; எனக்கு விலகாமல் இருந்ததானால், இப்பொழுது நான் உன்னைக் கொன்று போட்டு, கழுதையை உயிரோடே வைப்பேன் என்று கூறினான்.PPTam 570.2

    கொடுமையாக நடத்தின் அந்த பரிதாபமான மிருகத்திற்கு தன்னுடைய உயிரை காப்பாற்றினதற்கு பிலேயாம் கடமைப் பட்டிருந்தான். சர்வவல்லவருடைய தரிசனத்தைக் கண்டு, தன் கண்கள் திறக்கப்பட்டதாக அறிவித்து, தேவனுடைய தீர்க்க தரிசியாக உரிமை பாராட்டியிருந்த இந்த தீர்க்கதரிசி மிருகத்திற்குக் காணக்கூடியவராக இருந்த தூதனை காணக்கூடாதபடி இச்சையாலும் பேராசையினாலும் குருடாக்கப்பட்டிருந்தான். இப்பிரபஞ் சத்தின் தேவனானவன் அவர்களுடைய (அவிசுவாசிகளுடைய) மனதைக் குருடாக்கினான். 2 கொரி. 4:4. எத்தனை பேர் இவ்வித மாக குருடாக்கப்பட்டிருக்கிறார்கள். தேவனும் அவருடைய தூதரும் தங்களுக்கு எதிராக இருக்கிறதை பகுத்தறியக்கூடாத வர்களாக தடை செய்யப்பட்ட பாதைகளில் விரைந்து தெய்வீகப் பிரமாணத்தை மீறுகிறார்கள். பிலேயாமைப்போல் அவர்களுடைய அழிவை தடுக்கிறவர்கள் மேல் அவர்கள் கோபங்கொள்ளு கிறார்கள்.PPTam 570.3

    மிருகத்தை நடத்தின் விதத்தில் தன்னைக் கட்டுப்படுத்தியிருந்த ஆவியைக் குறித்த சான்றை பிலேயாம் கொடுத்தான். நீதிமான் தன் மிருகஜீவனைக் காப்பாற்றுகிறான்; துன்மார்க்கருடைய இரக்கமும் கொடுமையே நீதி. 12:10. மிருகங்களை தவறாக நடத்துவதன் பாவத்தை அல்லது கஷ்டப்படும்படி அதை நெகிழ்ந்துவிடுவதன் பாவத்தை சிலரே உணரவேண்டியபடி உணருகிறார்கள். மனிதனை உண்டாக்கினவர் கீழான மிருகங்களையும் உண்டாக்கினார். அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின் மேலுமுள்ளது - சங். 1459. மனிதனுக்கு சேவை செய்யவே மிருகங்கள் உண் டாக்கப்பட்டன. ஆனால் கடினமான நடத்துதலினாலோ அல்லது கொடுமையான வற்புறுத்துதலினாலோ அவைகளுக்கு வலி உண்டாக்க அவனுக்கு எந்த உரிமையும் இல்லை.PPTam 571.1

    மனிதனுடைய பாவத்தினால்தான் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது - ரோமர் 8:22. மனிதன் மேல் மாத்திரமல்ல மிருகங்களின் மேலும் துன்பமும் மரணமும் இவ்வாறு இணைக்கப்பட்டது. ஆகவே தேவனுடைய சிருஷ்டிகளின் மேல் தன்னுடைய மீறுதல் கொண்டுவந்த பாரத்தை அதிகப்படுத்து வதற்குப் பதிலாக இலகுவாக்குவதுதான் மனிதனுடைய கடமையாக இருக்கிறது. தன்னுடைய அதிகாரத்தில் இருப்பதினால் மிருகங்களைத் தவறாக நடத்துகிறவன் கோழையும் கொடுங்கோலனுமாக இருக்கிறான். நம்முடைய சகமனிதர்களுக்காகிலும் அல்லது மிருகங்களுக்காகிலும் வேதனையை உண்டுபண்ணும் குணம் சாத் தானிய குணம். பரிதாபமான வாய்பேசாத மிருகங்களால் சொல்ல முடியாது என்பதால், தங்களுடைய கொடுமை வெளியே வராது என்று அநேகர் நினைத்துக்கொள்ளுகிறார்கள். ஆனால் இந்த மனிதர்களின் கண்கள் பிலேயாமின் கண்களைப் போலத் திறக்கப்படுமானால், பரலோகப் பிராகாரங்களில் அவைகளுக்கு எதிராக சாட்சி கொடுக்க தேவனுடைய தூதன் அங்கே நிற்கிறதை அவர்கள் காண்பார்கள். ஒரு பதிவு பரலோகத்திற்குப் போகிறது. தேவனுடைய சிருஷ்டிகளை தவறாக நடத்தினதற்கெதிராக நியாயத்தீர்ப்பை அறிவிக்கிற ஒருநாள் வருகிறது.PPTam 571.2

    தேவனுடைய தூதுவனைக் கண்டபோது பிலேயாம் பயத்தில் நான் பாவஞ் செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாதிருந்தேன் ; இப்பொழுதும் உமது பார்வைக்கு இது தகாததாயிருக்குமானால், நான் திரும்பிப் போய்விடுகிறேன் என்று கூறினான். தன்னுடைய பிரயாணத்தைத் தொடர் ஆண்டவர் அவனை அனுமதித்தார். ஆனால் அவனுடைய வார்த்தைகள் தெய்வீக வல்லமையினால் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதை அவனுக்குப் புரியவைத்தார். எபிரெயர்கள் பரலோகத்தின் பாதுகாப்பின் கீழ் இருக்கிறார்கள் என்பதற்கான சான்றை தேவன் மோவாபிற்குக் கொடுப்பார். தெய்வீக அனுமதி இல்லாது அவர்களுக்கு எதிராக ஒரு சாபத்தைச் சொல்லுவதற்குக்கூட பிலேயாம் வல்லமையற்றவன் என்று மோவாபிற்குக் காண் பித்தபோது, இதை அவர் திறமையாகச் செய்தார்.PPTam 572.1

    மோவாப் அரசன் பிலேயாம் நெருங்குகிறதைக் குறித்து அறிவிக்கப்பட, தன் இராஜ்யத்தின் எல்லைகளுக்கு மிகப் பெரிய பரிவாரத்தோடு அவனை வரவேற்கும்படியாக சென்றான். ஐசுவரியமான பரிசுகளின் கண்ணோட்டத்தில் பிலேயாமின் தாமதத்தைக்குறித்த தன்னுடைய ஆச்சரியத்தை அரசன் கூறின போது, தீர்க்கதரிசி : இதோ, உம்மிடத்திற்கு வந்தேன், ஆனாலும், ஏதாகிலும் சொல்லுகிறதற்கு என்னாலே ஆகுமோ? தேவன் என் வாயிலே அளிக்கும் வார்த்தையையே சொல்லுவேன் என்று பதில் சொன்னான். பிலேயாம் இந்தக் கண்டிப்பிற்காக மிகவும் வருந் தினான். ஆண்டவருடைய கட்டுப்படுத்தும் வல்லமை தன்மேல் இருப்பதினால் தன்னுடைய நோக்கத்தை செயல்படுத்த முடியாதோ என்று அவன் பயந்தான்.PPTam 572.2

    எபிரெய சேனையைப் பார்க்கக்கூடிய பாகாலின் உயர்ந்த மேடுகளுக்கு இராஜா அவனுடைய இராஜ்யத்தின் தலைமை அதிகாரிகளுடன் மிகுந்த ஆடம்பரத்தோடு பிலேயாமை அழைத்துச் சென்றான். அந்தத் தீர்க்கதரிசி உயரமான இடத்தில் நின்று தேவனுடைய தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களின் பாளயத்தைக் கண்ணோக்குகிறதை பாருங்கள். தங்களுக்கு மிக அருகிலே நடந்து கொண்டிருக்கிறதைக்குறித்து இஸ்ரவேலர்கள் எவ்வளவு குறைவாக அறிந்திருந்தார்கள் ! பகலிலும் இரவிலுமாக அவர்கள் மேல் நீட்டப்பட்டிருந்த தேவனுடைய கவனிப்பைக் குறித்து எவ்வளவு குறைவாக அறிந்திருந்தார்கள். தேவனுடைய ஜனங்களின் அறிவு எவ்வளவு மந்தமாக இருக்கிறது. ஒவ்வொரு யுகத்திலும் அவருடைய மாபெரும் அன்பையும் கிருபையையும் புரிந்து கொள்ளுவதில் அவர்கள் எவ்வளவு மந்தமாக இருக் கிறார்கள். அவர்கள் நிமித்தம் தொடர்ச்சியாகக் காட்டப்படுகிற தேவனுடைய அதிசயமானவல்லமையை பகுத்தறியக்கூடுமானால், அவர்களுடைய இருதயங்கள் அவருடைய அன்பிற்கான நன்றியி னாலும், அவருடைய மாட்சிமையையும் வல்லமையையுங்குறித்த நினைவின் பயத்தினாலும் நிறையாதோ?PPTam 572.3

    எபிரெயர்களின் பலிகாணிக்கைகளைக் குறித்த சிறிது அறிவை பிலேயாம் பெற்றிருந்தான். அவைகளை விஞ்சக்கூடிய விலையுயர்ந்த பரிசுகளால் தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற்று தன்னுடைய பாவமான வேலையை செய்வதை உறுதிப்படுத்த அவன் நம்பியிருந்தான். இவ்வாறாக, விக்கிரகாராதனைக்காரரான மோவாபியரின் உணர்வுகள் அவன் மனதைக் கட்டுப்படுத்தத் துவங்கியிருந்தன. அவனுடைய ஞானம் பயித்தியமாயிற்று. அவனுடைய ஆவிக்குரிய தரிசனப்பார்வை குழம்பிப் போயிற்று. சாத்தானுடைய வல்லமைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததினால் அவன் தன்மீது குருட்டாட்டத்தை வருவித்துக்கொண்டான்.PPTam 573.1

    பிலேயாமின் நடத்துதலின்படி ஏழு பலிபீடங்கள் எழுப்பப் பட்டன. அவன் ஒவ்வொன்றிலும் ஒரு காணிக்கையை செலுத் தினான். ஆண்டவர் வெளிப்படுத்துகிறதையெல்லாம் பாலாக்கிற்கு தெரியப்படுத்தும் வாக்குறுதியோடு தேவனைச் சந்திக்கும்படி பின்னர் அவன் உயர்ந்த இடத்திற்கு சென்றான்.PPTam 573.2

    மோவாபின் தலைவர்கள் மற்றும் பிரபுக்களோடு இராஜா காணிக்கையின் அருகே நின்றுகொண்டிருக்க, அவனைச்சுற்றிலும் ஆர்வத்தோடிருந்த திரளானவர்கள் தீர்க்கதரிசி திரும்பி வருவதற்குக் காத்து கூடியிருந்தனர். அவன் கடைசியாக வந்தான். வெறுக்கப்பட்ட இஸ்ரவேலர்களின் சார்பாக வெளிப்படுத்தப்பட்ட அந்த அந்நிய வல்லமையை என்றைக்கும் செயலிழக்கச் செய்கிற வார்த்தைகளுக்காக ஜனங்கள் காத்திருந்தனர். பிலேயாம் : மோவாபின் ராஜாவாகிய பாலாக் என்னைக்கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்க வேண்டும்; நீ வந்து இஸ்ரவேலை வெறுத்துவிட வேண்டும் என்று சொன்னான். தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி?PPTam 573.3

    கன்மலையுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு, குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன், அந்த ஜனங்கள் ஜாதி களோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள். யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? நீதிமான் மரிப்பது போல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவு போல் இருப்பதாக என்று கூறினான்.PPTam 573.4

    இஸ்ரவேலை சபிக்கும் நோக்கத்தோடு வந்திருந்ததாக பிலேயாம். அறிக்கை செய்திருந்தான். ஆனால் அவன் சொன்ன வார்த்தைகள் அவன் இருதயத்தின் உணர்வுகளுக்கு நேரெதிராக இருந்தன. அவனுடைய ஆத்துமா சாபங்களால் நிறைந்திருக்க, ஆசீர்வாதங்களை அறிவிக்கும்படி அவன் நெருக்கப்பட்டான்.PPTam 574.1

    பிலேயாம் இஸ்ரவேலின் பாளயத்தைப் பார்த்தபோது, அவர்களுடைய செழுமையைக் குறித்த சான்றை பிரமிப்போடு பார்த்தான். அவர்கள் முரடர்களும் ஒழுங்கற்றவர்களும், கூட்டமாக திரிந்து நாடுகளை தொந்தரவு செய்கிற விஷக்கிருமிகளாகவும் சுற்றிலுமிருக்கிற தேசங்களுக்கு பயங்கரமானவர்களா கவும் எடுத்துக்காட்டப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களுடைய தோற்றம் இவற்றிற்கு நேரெதிராக இருந்தது. அவர்களுடைய பாளயம் பரந்திருந்ததையும் பூரணமான அமைப்பிலிருந்ததையும் அவன் கண்டான். அனைத்தும் முழுமையான ஒழுங்கையும் முறையையும் குறித்த அடையாளத்தைக் கொண்டிருந்தன. இஸ்ரவேலை தேவன் எவ்வளவு விருப்பத்தோடு கருதினார் என்பதும், அவர்கள் அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்கள் என்பதும் குறிப்பாக அவனுக்குக் காட்டப்பட்டது. அவர்கள் மற்ற தேசங்களுக்கு சமமாக அல்ல, மாறாக, அவர்களனைவருக்கும் மேலாக உயர்த்தப்படவேண்டும். அந்த ஜனங்கள் ஜாதிகளோடேகலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள். இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டபோது இஸ்ரவேலர்கள் நிரந்தரமாக குடியேறியிருக்கவில்லை . அவர்களுடைய விசே ஷித்த குணமும் அவர்களுடைய மரியாதைகளும் வழக்கங்களும் பிலேயாமிற்கு அறிமுகமாயில்லை. ஆனால் எவ்வளவு குறிப்பாக இந்த தீர்க்கதரிசனம் இஸ்ரவேலின் பிற்கால சரித்திரத்தில் நிறைவேறியது! அடிமைத்தனத்தின் வருடங்களிலெல்லாம், தேசங்களுக்கிடையே சிதறடிக்கப் பட்டதிலிருந்து அனைத்து யுகங்களிலும் அவர்கள் தனித்துவமான மக்களாக இருந்தனர். அவ்வாறே தேவனுடைய ஜனங்கள் மெய்யான இஸ்ரவேல் அனைத்து தேசங்களிலும் சிதறடிக்கப்பட்டிருந்தபோதும், இந்த பூமியிலே பரதேசிகளாகவே இருக்கிறார்கள். அவர்களுடைய குடியிருப்பு பரலோகத்திலிருக்கிறது.PPTam 574.2

    எபிரெய மக்களின் சரித்திரம் ஒரு ஜாதியாக மாத்திரம் பிலே யாமுக்கு காட்டப்படவில்லை. அவன் காலத்தின் முடிவுவரையிலும் தேவனுடைய மெய்யான இஸ்ரவேலர்களின் செழிப்பையும் கண்டான். உன்னதமானவரை நேசித்து அவருக்குப் பயப்படு கிறவர்களை சந்திக்கிற அவருடைய விசேஷ தயவை அவன் கண்டான். அவர்கள் மரண இருளின் இருண்ட பள்ளத்தாக்கில் நுழையும் போது அவருடைய கரத்தினால் தாங்கப்பட்டதை அவன் கண்டான். அவர்கள் தங்களுடைய கல்லறைகளிலிருந்து மகிமையோடும் கனத்தோடும் அழியாமையோடும் மகிமையான கிரீடம் தரிக்கப்பட்டவர்களாக மேலே வருவதை அவன் கண்டான். மீட்கப்பட்டவர்கள் புதிய பூமியின் மங்காத மகிமைகளில் களி கூருகிறதை அவன் கண்டான். இந்தக் காட்சியைக் கண்டவனாக : யொக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? என்று வியந்து கூறினான். ஒவ்வொரு தலையின் மேலும் இருந்த மகிமையின் கிரீடத்தை, ஒவ்வொரு முகத்திலிருந்தும் பிரகாசித்த மகிழ்ச்சியை அவன் கண்டபோது, கலப்படமில்லாத மகிழ்ச்சியான நித்திய வாழ்க்கையை எதிர்பார்த்தவனாக : நீதிமான் மரிப்பது போல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவு போல் இருப்பதாக என்ற பவித்திரமான ஜெபத்தை ஏறெடுத்தான்.PPTam 575.1

    தேவன் கொடுத்திருந்த வெளிச்சத்தை ஏற்றுக்கொள்ளும் குணம் பிலேயாமிற்கு இருந்திருந்தால் இப்போது அவனுடைய வார்த்தைகளை மெய்யாக்கியிருந்து, மோவாபுடனான அனைத்துத் தொடர்புகளையும் விலக்கியிருந்திருப்பான். தேவனுடைய இரக்கத்தின் மேல் துணிகரம் கொண்டிராமல், ஆழ்ந்த மனந்திரும் புதலோடு அவரிடம் திரும்பியிருப்பான். ஆனால் பிலேயாம் அநீ தியின் கூலியை நேசித்திருந்து அதை அடையும்படி தீர்மானமாயிருந்தான்.PPTam 575.2

    பாலாம் இஸ்ரவேலின் மேல் அவர்களை வாடச்செய்யும் நாசநோய் போல விழப்போகிற சாபத்தை நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தான். தீர்க்கதரிசியின் வார்த்தைகளால் அவன் கோபமாக : நீர் எனக்கு என்ன செய்தீர்; என் சத்துருக்களைச் சபிக் கும்படி உம்மை அழைப்பித்தேன்; நீர் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர் என்று கூறினான். பிலேயாம் தன்னுடைய நேர்மையை காண்பிக்க முயற்சித்து, தேவனுடைய சித்தத்தைக் குறித்த நினைவோடு, தெய்வீகவல்லமையினால் அவன் உதடுகளிலிருந்து கட்டாயமாக வந்த வார்த்தைகளைப் பேசினதாக அறிவித்தான். அவனுடைய பதில் : கர்த்தர் என் வாயில் அருளினதையே சொல் வது என் கடமையல்லவா என்று இருந்தது.PPTam 575.3

    பாலாக்கால் இப்போதும் தன்னுடைய நோக்கத்தைக் கைவிட இயலவில்லை . எபிரெயர்களின் பரந்த பாளயம் கொடுத்த கவர்ச்சி கரமான தோற்றத்தினால் பிலேயாம் பயமுறுத்தப்பட்டதாகவும் அதனால் தன்னுடைய மந்திரங்களை அவர்களுக்கெதிராக செயல்படுத்த துணிவில்லாது போனதாகவும் நினைத்துக்கொண்டான். அந்த சேனையின் சிறிய பகுதியை மாத்திரமே காணக்கூடிய இடத்திற்கு தீர்க்கதரிசியைக் கொண்டு செல்ல அவன் தீர்மானித் தான். பிலேயாம் அவர்களை பிரிக்கப்பட்ட கூட்டங்களாக சபிக்க தூண்டப்படுவானானால் முழு பாளயமும் அழிவிற்கு அர்ப் பணிக்கப்படும். பிஸ்கா என்னப்பட்ட மலையின் மேல் மற்றொரு முயற்சி செய்யப்பட்டது மீண்டும் ஏழு பலிபீடங்கள் நிறுவப்பட்டு, முதலில் செய்யப்பட்டதைப் போலவே அதே காணிக்கைகள் கொடுக்கப்பட்டன. இராஜாவும் அவன் பிரபுக்களும் காணிக்கைகளின் அருகே நின்றிருக்க, பிலேயாம் தேவனை சந்திக்கும் படி சென்றான். மாற்றவோ அல்லது சொல்லாது தன்னிடமே வைத்துக்கொள்ளவோ கூடாதிருந்த தெய்வீகச் செய்தி மீண்டும் தீர்க்கதரிசிக்குக் கொடுக்கப்பட்டது.PPTam 576.1

    எதிர்பார்ப்போடு காத்திருந்த கூட்டத்திற்கு அவன் வந்தபோது கர்த்தர் என்ன சொன்னார் என்ற கேள்வி கேட்கப்பட்டது, கொடுக்கப்பட்ட பதில் முன்போலவே இராஜா மற்றும் பிரபுக்களின் இருதயங்களில் பயத்தை அனுப்பியது. பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல, மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல, அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளை பெற்றேன். அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது. அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை, அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்; ராஜாவின் ஜெயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது.PPTam 576.2

    இந்த வெளிப்பாடுகளினால் பயமடைந்தவனாக. யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறி சொல்லுதலும் இல்லை என்று பிலேயாம் வியந்து கூறினான். இந்த மாபெரும் மந்திரவாதி மோவாபியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தன்னுடைய மந்திர வல்லமைகளை முயற்சித்தான். ஆனால் இதே தறுவாயைக்குறித்து தேவன் என்னென்ன செய்தார் என்று இஸ்ரவேலைக்குறித்து சொல்லப்பட வேண்டும். அவர்கள் தெய்வீக பாதுகாப்பின் கீழ் இருந்தபோது சாத்தானுடைய அனைத்து வல்லமையினாலும் உதவி பெற்றிருந்தாலும் எந்த ஐனமும் ஜாதியும் அவர்களுக்கு எதிராக வெற்றிகொள்ள முடியாது. உலகம் முழுவதும் தேவன் தமது ஜனங்களுக்காகச் செய்தPPTam 576.3

    அதிசயமானகிரியைகளை பாவவழியைத் தொடர் தீர்மானித்த ஒரு மனிதன் தெய்வீக வல்லமையினால் கட்டுப்படுத்தப்பட்டு சபிப்பதற்குப் பதிலாக மிகவும் ஐசுவரியமான விலையுயர்ந்த வாக்குத்தத்தங்களை கம்பீரமான உணர்வுகளோடு கவிதையில் சொன்னான் என்பதைக் குறித்து ஆச்சரியப்பட வேண்டும். இந்த நேரத்திலே இஸ்ரவேலுக்காக வெளிப்படுத்தப்பட்டிருந்த தேவனுடைய தயவு, அனைத்து யுகங்களிலும் கீழ்ப்படிகிற தம்முடைய விசுவாசமுள்ள பிள்ளைகள் மேலிருக்கும் அவருடைய பாதுகாப்பைக்குறித்த நிச்சயமாயிருக்கவேண்டும். தவறாக எடுத்துக்காட்டவும் அலைகழிக்கவும் தேவனுடைய ஜனங்களை அழித்துப்போடவும் சாத்தான் தீய மனிதர்களை ஏவும்போது, இதே சம்பவம் அவர்களுடைய நினைவிற்குக் கொண்டுவரப்பட்டு, தேவன் மேலிருக்கும் அவர்களுடைய விசுவாசத்தையும் தைரியத்தையும் பலப்படுத்தும்.PPTam 577.1

    மோவாப் அரசன் மனம் சோர்ந்து துயரமடைந்தவனாக, நீர் அவர்களைச் சபிக்கவும் வேண்டாம், அவர்களை ஆசீர்வதிக்கவும் வேண்டாம் என்று கூறினான். எனினும் ஒரு மங்கின் நம்பிக்கை அவன் இருதயத்தில் தங்கியிருந்தது. மற்றொரு முயற்சி செய்ய அவன் தீர்மானித்தான். இப்போது பிலேயாமை அவன் பேயோர் மலைக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவர்களுடைய தெய்வமான பாகாலுக்கு காம வெறியோடு ஆராதனை செய்ய அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் இருந்தது. அங்கே அதே எண்ணிக்கையிலான பலிபீடங்கள் எடுக்கப்பட்டு, அதே போன்ற காணிக்கைகள் கொடுக்கப்பட்டன. ஆனால் பிலேயாம் மற்ற நேரங்களைப்போல் தேவனுடைய சித்தத்தை அறிய தனியாகச் செல்லவில்லை. அவன் மாயவித்தையைக் குறித்து நடிக்கவும் இல்லை . மாறாக, பலிபீடங்களின் அருகில் நின்று இஸ்ரவேலின் கூடாரங்களைப் பார்த்தான். மீண்டும் தேவனுடைய ஆவி அவன் மேல் அமர . அவன் உதடுகளிலிருந்து : யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள் ! அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், கர்த்தர் நாட்டின் சந்தன மரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப்போலவும் இருக்கிறது. அவர்களுடைய நீர்ச்சால்களிலிருந்து தண்ணீர் பாயும்; அவர்கள் வித்து திரளான தண்ணீர்களில் பரவும், அவர்களுடைய ராஜா ஆகாகைப் பார்க்கிலும் உயருவான்; அவர்கள் ராஜ்யம் மேன்மையடையும். தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார் ; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு, அவர்கள் தங்கள் சத்துருக்களாகிய ஜாதிகளைப் பட்சித்து, அவர்கள் எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்கள் அம்புகளாலே எய்வார்கள். சிங்கம் போலவும் துஷ்ட சிங்கம் போலவும்PPTam 577.2

    மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை எழுப்புகிறவன் யார்? உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக் கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்ற தெய்வீக செய்தி வந்தது.)PPTam 578.1

    தேவனுடைய ஜனங்களின் செழிப்பு இயற்கையில் காணப் படும் மிக அழகான சில உருவகங்களால் எடுத்துக்காட்டப்பட்டுள் ளது. தீர்க்கதரிசி இஸ்ரவேலை ஏராளமான அறுவடையினால் மூடப்பட்டிருக்கிற செழிப்பான பள்ளத்தாக்கிற்கு ஒப்பிடுகிறான், வற்றாத ஊற்றுகளினால் நீர்பாய்ச்சப்பட்ட செழிப்பான தோட்டங்களுக்கு ஒப்பிடுகிறான், மணம் வீசும் சந்தன மரத்திற்கும் கம்பீரமான கேதுரு மரத்திற்கும் ஒப்பிடுகிறான்; கடைசியாக ஒப்பிடப்பட்ட உருவகம் மிகவும் குறிப்பிடப்பட்ட அழகுகளில் ஒன்றாகவும், ஏவப்பட்ட வார்த்தையில் பதிக்கப்படும் படி பொருத்தமானதுமாக இருக்கிறது. லீபனோனின் கேதுருக்கள் கிழக்கத்திய மக்கள் அனைவராலும் கனம் பண்ணப்பட்டது. அதன் இனத்தைச் சேர்ந்த மரங்கள் பூமி முழுவதும் மனிதன் எங்கெல்லாம் சென்றானோ அங்கெல்லாம் காணப்படுகிறது. வடதுருவத்திலிருந்து வெப்பமண்டலம் வரையிலும் அவைகள் மலர்ந்து வெப்பத்தில் களிகூர்ந்து எனினும் குளிரைத் தாங்கி நின்று, ஆற்று ஓரங்களில் ஆறுகளின் அருகில் ஆடம்பரமாக துளிர்த்து, வெடித்து வறண்ட பூமியிலும் பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கின்றன. அவைகள் தங்களுடைய வேர்களை மலைகளின் பாறைகளுக்கிடையே பதித்து, புயலை அவமதிக்கும் படி தைரியமாக நிற்கின்றன. அவைகளின் இலைகள் புது மலர்ச்சியோடு பசுமையும் செழிப்புமாக இருந்து, குளிர்காற்றினால் மற்ற அனைத்தும் அழியும் போது அவைகளின் இலைகள் பசுமையாக நிற்கின்றன. மற்ற அனைத்து மரங்களுக்கும் மேல் லீபனோனின் கேதுருக்கள் அவைகளின் பலத்திற்கும் உறுதிக்கும் அழியாத தன்மைக்கும் குறிப்பானதாயிருந்து, கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிற வாழ்க்கைக்கு (கொலோ. 33) அடையாளமாக உபயோகப்படுத்தப்படுகின்றது. வேதவாக்கியம் : நீதிமான் ...... கேதுருவைப்போல் வளருவான் (சங். 9212) என்று கூறுகிறது. தெய்வீகக்கரம் கேதுருவைகாட்டின் அரசனாக உயர்த்தியிருக்கிறது. தேவதாரு விருட்சங்கள் அதின் கொப்புகளுக்குச் சமானமல்ல, அர்மோன் மரங்கள் அதின் கிளைகளுக்கு நிகரல்ல (எசே 31:3) தேவனுடைய தோட்டத்தின் மற்ற எந்த மரமும் அதற்குச் சமானமல்ல. இராஜபதவியின் சின்னமாக கேதுரு மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. நீதிமான்களை எடுத்துக்காட்டும் படி யாக வேதாகமம் அதை உபயோகித்திருப்பதில் தேவனுடைய சித் தத்தை செய்கிறவர்களை பரலோகம் எப்படி கருதுகிறது என்பது காட்டப்படுகிறது.PPTam 578.2

    இஸ்ரவேலின் இராஜா ஆகாகைவிடவும் மகா பெரியவனா கவும் மிகவும் வல்லமையுள்ளவனாகவும் இருப்பான் என்று அவன் தீர்க்கதரிசனம் உரைத்தான். அந்தக் காலத்தில் மிக வல் லமையான தேசமாக இருந்த அமலேக்கியர்களின் இராஜாக்களுக்கு இந்தப் பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இஸ்ரவேல் தேவனுக்கு உண்மையாக இருக்குமானால் தன்னுடைய அனைத்து சத்துருக்களையும் அது கீழ்ப்படுத்தும். இஸ்ரவேலின் இராஜா தேவகுமாரன். அவருடைய சிங்காசனம் ஒருநாள் இந்த பூமியில் ஸ்தாபிக்கப்பட்டு, அவருடைய வல்லமை பூமியிலுள்ள அனைத்து இராஜ்யங்களுக்கும் மேலாக உயர்த்தப்பட வேண்டும்.PPTam 579.1

    தீர்க்கதரிசியின் வார்த்தைகளை கேட்டபாலாக், நம்பிக்கையில் ஏமாற்றமடைந்தவனாக பயத்தாலும் கோபத்தாலும் மூழ்கடிக்கப்பட்டான். பிலேயாம் அவனுக்குப் பிரியமான பதிலை மிகக் குறைவாகவாகிலும் கொடுத்திருக்கலாம். ஆனால் அனைத்தும் அவனுக்கு எதிராக தீர்மானிக்கப்பட்டிருந்தது. அவன் தீர்க்கதரிசியின் விட்டுக்கொடுக்கிற ஏமாற்றும் முறையை இகழ்ச்சியாகப் பார்த்தான். இராஜா மூர்க்கமாக உன் இடத்துக்கு ஓடிப்போ; உன்னை மிகவும் கனம் பண்ணுவேன் என்றேன், நீ கனமடையாத படிக்குக் கர்த்தர் தடுத்தார் என்று கூறினான். பிலேயாம் தேவனிடமிருந்து அவனுக்குக் கொடுக்கப்படப்போகிற தூதையே பேசுவான் என்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டதாக பதில் வந்தது.PPTam 579.2

    தனது ஜனத்தண்டை திரும்புவதற்கு முன்பாக உலக இரட்ச கரைக்குறித்தும் தேவனுடைய சத்துருக்களின் முடிவான அழிவைக் குறித்தும் மிக அழகான தெளிவான தீர்க்கதரிசனத்தை அவன் கூறினான். அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல, ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும், அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத் புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்.PPTam 580.1

    மோவாப்மற்றும் ஏதோம், அமலேக்கு மற்றும் கேனியர்களைக் குறித்த முழுமையான அழிவின் அறிவிப்புகளோடு அவன் தன் வாக்கியத்தை முடித்தான். இவ்விதம் மோவாபிய இராஜாவிற்கு நம்பிக்கையின் எந்தக் கதிரையும் அவன் விட்டுவைக்கவில்லை.PPTam 580.2

    சொத்துக்களையும் உயர்வையுங்குறித்த நம்பிக்கைகளில் ஏமாற்றமடைந்தவனாக, அரசனிடமிருந்து தயவையும் பெறாதவனாக, தேவனுடைய அதிருப்தியையும் சம்பாதித்த நினைவோடு பிலேயாம் தான் சுயமாகத் தெரிந்து கொண்ட வேலையிலிருந்து திரும்பினான். வீட்டை அடைந்த பின்னர் அவனைக் கட்டுப்படுத்தியிருந்த தேவனுடைய ஆவியானவர் அவனை விட்டுச் செல்ல, கட்டுப்படுத்தப்பட்டிருந்த அவனுடைய இச்சை மேற்கொண்டது. பாலாக் வாக்குக் கொடுத்த பரிசுகளைப் பெறுவதற்கு எந்த வழியிலும் செல்ல அவன் ஆயத்தமாயிருந்தான். இஸ்ரவேலின் செழிப்பு தேவனுக்குக் கீழ்ப்படிவதைச் சார்ந்திருந்ததையும், பாவம் செய்ய ஏமாற்றுவதைத் தவிர அவர்களைக் கவிழ்ப்பதற்கு வேறு வழியே இல்லை என்பதையும் அவன் அறிந்திருந்தான். இஸ்ரவேலின் மேல் சாபத்தைக் கொண்டுவரPPTam 580.3

    மேற்கொள்ள வேண்டிய முறையை மோவாபியர்களுக்குக் கூறுவதன் வழியாக பாலாக்கின் தயவை அடைய இப்போது அவன் தீர்மானித்தான்.PPTam 580.4

    உடனடியாக மோவாப் தேசத்திற்குத் திரும்பி இராஜாவின் முன் தன் திட்டங்களை வைத்தான். இஸ்ரவேல் தேவனுக்கு உண்மையாக இருக்கும் வரையிலும் அவர் அவர்களுக்குக் கேடயமாக இருப்பார் என்பதை மேவாபியர்களும் உணர்ந்தனர். பிலேயாமினால் சொல்லப்பட்ட திட்டம் விக்கிரகாராதனைக்குள் அவர்களை நயங்காட்டி தேவனிடமிருந்து அவர்களைப் பிரிப்பதாக இருந்தது. பாகால் மற்றும் அஸ்தரோத்தின் காமவெறி ஆராதனைக்குள் அவர்களை நடத்தக்கூடுமானால் அவர்களுடைய சர்வ வல்லமையுள்ள பாதுகாவலர் அவர்களின் சத்துரு ஆவார். அவர்கள் விரைவாக அவர்களைச் சுற்றிலுமிருக்கிற கொடூரமான யுத்த நாடுகளுக்கு இரையாவார்கள். இந்தத் திட்டம் இராஜாவினால் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட இதைச் செயல்படுத்துவதில் உதவ பிலேயாம்தானும் அங்கே தங்கினான்.PPTam 580.5

    தன்னுடைய கொடூரமான திட்டத்தின் வெற்றியை பிலேயாம் கண்டான். தேவனுடைய சாபம் ஜனங்கள் மேல் வந்ததையும் ஆயிரக்கணக்கானோர் அவருடைய நியாயத்தீர்ப்புகளின் கீழ் விழுந்ததையும் அவன் கண்டான். ஆனால் இஸ்ரவேலின் பாவத்தை தண்டித்த அதே நீதி, சோதித்தவர்கள் தப்பிச் செல்ல அனுமதிக்கவில்லை . மீதியானியருக்கு எதிராக நடந்த இஸ்ரவேலின் யுத்தத்தில் பிலேயாம் கொல்லப்பட்டான். தன்னுடைய சொந்த முடிவு மிக அருகில் இருக்கிறதை, நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவு போல் இருப்பதாக என்று சொன்ன போது முன்னதாகவே அவன் உணர்ந்திருந்தான். எனினும் நீதிமான்களின் வாழ்க்கையை வாழ அவன் தெரிந்து கொள்ளவில்லை. அவனுடைய முடிவு தேவனுடைய சத்துருக்களோடு இருந்தது.PPTam 581.1

    பிலேயாமின் முடிவு யூதாசுடைய முடிவிற்கு இணையாக இருந்தது. அவர்களுடைய குணங்கள் ஒரேமாதிரி இருக்கின்றது. இந்த இருவரும் தேவனுடைய ஊழியத்தை மனுஷகத்தோடு இணைக்க முயற்சித்து குறிப்பான தோல்வியை அடைந்தனர். பிலேயாம் மெய்யான தேவனை அறிக்கை செய்து அவரை சே விப்பதாக அறிவித்தான். யூதாஸ் இயேசுவை மேசியா என்று நம்பி அவருடைய பின்னடியார்களோடு இணைந்து கொண்டான். ஆனால் பிலேயாம் யெகோவாவின் சேவையை ஐசுவரியத்தையும் உலககனத்தையும் அடையும் படிக்கல்லாக மாற்ற நம்பியிருந்தான். இதில் தோல்வியடைந்தவனாக தடுமாறி விழுந்து உடைந்து போனான். யூதாஸ் கிறிஸ்துவோடு கொள்ளும் இணைப்பினால் செல்வத்தையும் மேசியா அமைக்கப்போவதாக நம்பியிருந்த உலக இராஜ்யத்தில் பதவி உயர்வையும் அடைய எதிர்பார்த்திருந்தான். அவனுடைய நம்பிக்கையின் தோல்வி மருள்விழுகைக்கும் அழிவிற்கும் அவனை நடத்தியது. பிலேயாமும் யூதாசும் அதிக வெளிச்சத்தைப் பெற்றிருந்து விசேஷ வாய்ப்புகளை அனுபவித்திருந்தார்கள். ஆனால் நேசிக்கப்பட்டிருந்த ஒரு பாவம் முழு குணத்தையும் விஷமாக்கி அவர்களுடைய அழிவைக் கொண்டுவந்தது.PPTam 581.2

    கிறிஸ்தவமல்லாத ஒரு குணத்தை இருதயத்தில் நிலைத்திருக்க அனுமதிப்பது ஆபத்தானது. நேசிக்கிற ஒரு பாவம் கொஞ்சம் கொஞ்சமாக குணத்தை மட்டுப்படுத்தி, நேர்மையான அனைத்து வல்லமைகளையும் தீமையான விருப்பங்களுக்கு அடிமைப்படுத்தும். மனசாட்சியிலிருந்து ஒரு பாதுகாப்பை அகற்றுவதும் ஒரு தீய பழக்கத்தில் திளைப்பதும் கடமையின் உயர்ந்த கோரிக்கைகளில் ஒன்றை நெகிழ்வதும் ஆத்துமாவின் பாதுகாப்பை தகர்த்து, தவறான வழியில் நடத்த சாத்தானுக்கு பாதையைத் திறக்கிறது என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும் (சங்.17.5) என்று தாவீது சொன்னதைப்போல உண்மையான இருதயத்திலிருந்து அனுதினமும் நமது ஜெபங்களை அனுப்புவதே ஒரே பாதுகாப்பான வழி.PPTam 582.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents