Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    71 - தாவீதின் பாவமும் மனமாற்றமும்

    மனிதனுக்கு புகழ்ச்சியாக வேதாகமத்தில் அதிகம் இல்லை. இதுவரையும் வாழ்ந்திருந்தவர்களில் சிறந்தவர்களின் நற்குணங்களைத் திரும்பிப்பார்ப்பதற்கு மிக குறைவான கவனமே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மௌனம் நோக்கமற்றதல்ல; ஒரு பாடம் இல்லாமலும் இல்லை. மனிதன் பெற்றிருக்கும் அனைத்து நல்ல தன்மைகளும் தேவனுடைய ஈவு . அவர்களுடைய நல்ல கிரியைகள் கிறிஸ்துவின் வழியாக தேவனுடைய கிருபையினால் நடப்பிக்கப்படுகிறது. அனைத்தையும் தேவனிடமிருந்து பெற்றிருப்பதால் அவர்கள் எப்படியிருந்தாலும் அல்லது என்ன செய்தாலும் அதன் மகிமையனைத்தும் அவருக்கு மாத்திரமே சொந்தமானது. அவர்கள் அவருடைய கரங்களில் கருவிகளே . இதற்கு மேலாக வேதாகம சரித்திரம் போதிக்கிற அனைத்துப் பாடங்களையும் போல மனிதனைப் புகழுவதோ அல்லது உயர்த்துவதோ ஒரு ஆபத்தான காரியம். ஏனெனில் தேவனை முற்றிலும் சார்ந்திருப்பதை ஒருவன் மறந்து தன்னுடைய சொந்த பெலத்தை நம்புவானெனில், அவன் விழுவது நிச்சயம். அவன் தன்னைக் காட்டிலும் பலமான சத்துருக்களோடு போராடிக் கொண்டிருக்கிறான். மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. எபே. 612. நம்முடைய பெலத்தால் போராட்டத்தைத் தொடர முடியாது. தேவனிடமிருந்து மனதை திசைதிருப்புகிற எதுவானாலும், சுயத்தை உயர்த்தவோ அல்லது சுயத்தைச் சார்ந் திருக்கவோ நடத்துகிற எதுவானாலும், நம்மை கவிழ்ப்பதற்கேது வான பாதையையே நிச்சயமாக ஆயத்தம் செய்கிறது. வேதாகமத்தின் தொனி, மனித வல்லமையை நம்பாதிருக்க கற்பிப்பதும் தெய்வீகவல்லமையை நம்ப உற்சாகப்படுத்துவதுமே .PPTam 941.1

    சுயநம்பிக்கையும் சுயத்தை உயர்த்துவதுமான ஆவியே தாவீதின் விழுகைக்கு அவனை ஆயத்தப்படுத்தினது. தற்புகழ்ச்சியும், வல்லமையையும் ஆடம்பரத்தையுங் குறித்த தந்திரமான கவர்ச்சிகளும் அவன் மேல் பலன் செலுத்தாமல் இல்லை. சுற்றிலுமிருந்த தேசங்களோடு கொண்ட உறவு தீமைக் கேதுவான ஒரு செல்வாக்கை செயல்படுத்தியது. கிழக்கத்திய அதிபதிகள் நடுவேயிருந்த வழக்கத்தின்படி குடிமக்களிடம் சகித் துக்கொள்ளக் கூடாத குற்றங்கள் அரசனிடம் கண்டிக்கப்பட வில்லை. குடிமக்களைப்போலவே சுய கட்டுப்பாட்டோடிருக்க வேண்டும் என்ற நிபந்தனையில் அரசன் இல்லை இவை அனைத்தும் பாவத்தின் அளவுகடந்த பாவத்தன்மையைக் குறித்த தாவீதின் உணர்வை குறைக்கும் இயல்புடையதாயிருந்தன. யெகோவாவின் வல்லமையின் மேல் தாழ்மையோடு சார்ந்திருப்பதற்குப் பதிலாக தன்னுடைய சொந்த ஞானத்தையும் வல்லமையையும் அவன் நம்பத் துவங்கினான். சாத்தான், பலத்தின் ஒரே ஆதாரமான தேவ னிடமிருந்து ஆத்துமாவை பிரித்தவுடனேயே மனிதனுடைய மாமிச இயல்பின் பரிசுத்தமில்லாத ஆசைகளை தூண்டிவிட எத்தனிப்பான். சத்துருவின் வேலை சடிதியானதல்ல. அது துவக்கத்தில் சடிதியானதும் திகைக்கவைக்கிறது மல்ல, கொள்கையின் அரண்களை அது இரகசியமாக வலிமையற்றதாக்குகிறது. அது சிறிய காரியங்களில் தான் தேவனுக்கு உண்மையாயிருப்பதையும் அவரை முழு மையாக சார்ந்திருப்பதையும் நெகிழ்ந்து, உலகத்தின் வழக்கங்களையும் பழக்கங்களையும் பின்பற்றும் எண்ணங்களில் தான் துவங்குகிறது.PPTam 942.1

    அம்மோனியரோடு நடந்த யுத்தம் முடிவதற்கு முன்பாக யுத்த நடவடிக்கைகளை யோவாபிடம் விட்டுவிட்டு தாவீது எருசலேமிற்குத் திரும்பினான். சீரியர் ஏற்கனவே இஸ்ரவேலுக்கு அடங்கியிருந்தனர். கூடவே அம்மோனியரை முழுமையாக அழிப்பது நிச்சயமாகத் தோன்றியது. தாவீது வெற்றியின் கனிகளாலும், ஞானமும் திறமையுமான ஆட்சியின் கனங்களாலும் சூழப்பட்டிருந்தான். அவன் தொல்லையின்றியும் காவலின்றியும் இருந்த இப்போது தான் அவன் மனதை ஆக்கிரமிக்கும் சந்தர்ப்பத்தை சோதனைக்காரன் எடுத்தான். தேவன் தாவீதை தம்மோடு மிக நெருங்கிய இணைப்பிற்குள் கொண்டு வந்து அவனுக்கு மிகப் பெரிய தயவை வெளிக்காட்டியிருக்கிறார் என்கிற உண்மை தன்னுடைய குணத்தைக் கறைபடாது பாதுகாக்கும் பலமான தூண்டுவிசையாக அவனுக்கு இருந்திருக்கவேண்டும். ஆனால் இலகுவாகவும் சுயபாதுகாப்பிலும் இருந்தபோது தேவன் மேலிருந்ததன் பிடியை விட்டு சாத்தானுக்கு ஒப்புக்கொடுத்து தன் ஆத்துமாவின் மேல் குற்ற உணர்வின் கறையை தாவீது கொண்டு வந்தான். பரலோகம் நியமித்த தேசத்தின் அதிபதியான அவன், தேவனுடைய பிரமாணத்தைச் செயல்படுத்தும் படி அவரால் தெரிந்து கொள்ளப்பட்ட அவன்தானே, அதன் நியமங்களை மிதித்தான். தீமை செய்கிறவர்களுக்கு பயங்கரமாக இருக்கவேண்டிய அவன், தன்னுடைய சொந்த செய்கையினால் அவர்களுடைய கரங்களைப் பலப்படுத்தினான்.PPTam 942.2

    முற்கால வாழ்க்கையில், ஆபத்துகளுக்கு மத்தியில் மனதார உண்மையோடு தன் பிரச்சனையை தேவனிடம் தாவீதால் ஒப்படைக்க முடிந்திருந்தது. கடந்த காலத்தில் ஆண்டவருடைய கரம் அவன் பாதங்களுக்கு வைக்கப்பட்டிருந்த எண்ணிக்கைக் கடங்காத கண்ணிகளிலிருந்து பாதுகாப்பாக அவனை நடத்தியிருந்தது. ஆனால் இப்போது மனந்திரும்பாத குற்ற உணர்வோடு இருந்த அவன், பரலோகத்திலிருந்து உதவியையும் நடத்துதலையும் கேட்காது, பாவம் உட்படுத்தியிருந்த ஆபத்துகளிலிருந்து தன்னை விடுவிக்கத் தேடினான். இராஜாவைகண்ணிக்குட்படுத்தும்படியான ஆபத்தான அழகோடிருந்த பத்சேபாள், தாவீதின் மிக தைரியமும் மிகவும் உண்மையுமான அதிபதிகளில் ஒருவனாகியகித்தியனாகிய உரியாவின் மனைவியாயிருந்தாள். குற்றம் தெரியவரும்போது அதன் விளைவு என்னவாயிருக்கும் என்பதை எவராலும் முன்ன தாக காணமுடியாது. விபச்சாரம் செய்தவன் மரணத்திற்கேதுவான குற்றவாளியாயிருக்கிறான் என்று தேவனுடைய பிரமாணம் அறிவித்தது. அகந்தையான ஆவி கொண்ட வீரன் மிகவும் அவமானமாக தவறிழைக்கப்பட்டதால் இராஜாவின் உயிரை எடுத்தோ அல்லது தேசத்தில் கலகத்தைத் தூண்டியோ பழிவாங்கக்கூடும்.PPTam 943.1

    தன் குற்றத்தை மறைக்க தாவீது செய்த ஒவ்வொரு முயற்சியும் வீணாயிருந்தது. அவன் தன்னை சாத்தானின் வல்லமைக்குள் கொடுத்திருந்தான். ஆபத்து அவனைச் சூழ்ந்திருந்தது. மரணத்தைக் காட்டிலும் கசப்பான அவமரியாதை அவன் முன் இருந்தது. தப்பிப்பதற்கு ஒரு வழி மாத்திரமே தோன்றியது. தன்னுடைய விரக்தியில் தன் விபச்சாரத்தோடு கொலையையும் சேர்க்க விரைந்தான். சவுலின் அழிவை நடத்தியவன் தாவீதையும் அழிவிற்கு நடத்த தேடிக்கொண்டிருந்தான். சோதனைகள் வேறுபட்டிருப்பினும் இருவரும் ஒரேவிதமாக தேவனுடைய பிரமாணத்தை மீற நடத்தப்பட்டிருந்தனர். உரியா யுத்தத்தில் சத்துருக்களின் கையினால் கொலை செய்யப்படுவானானால் அவனுடைய மரணத்திற்கு அரசன்தான் காரணம் என்பதை ஆராய்ந்து அறிய முடியாது. பத்சேபாளும் தாவீதின் மனைவியாவதற்கு சுதந்தரம் பெறுவாள்; சந்தேகம் தவிர்க்கப்படும், அரச மரியாதையும் பராமரிக்கப்படும்.PPTam 944.1

    உரியாதானே அவனுடைய சொந்த மரண ஆணையை சுமக்கிறவனாக்கப்பட்டான். மும்முரமாய் நடக்கிற போர் முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு ச ராகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று கட்டளையாக இராஜாவின் கைகளால் எழுதப்பட்ட கடிதம் யோவாபிற்கு அனுப்பப்பட்டது. ஏற்கனவே ஒரு கொடிய கொலையினால் கறை பட்டிருந்த யோவாப் இராஜாவின் போதனைகளுக்கு கீழ்ப்படியத் தயங்கவில்லை. உரியா அம்மோனியரின் பட்டயத்தால் மடிந்தான்.PPTam 944.2

    அதிபதியாக, தாவீது இதுவரையிலும் சில அரசரே பெற்றிருந்ததற்கு இணையான பதிவைக் கொண்டிருந்தான். அவன் தன்னுடைய எல்லாஜனத்திற்கும் நியாயமும் நீதியும் செய்துவந்தான் (2 சாமு. 815) என்று அவனைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. அவனுடைய உண்மை தேசத்தின் நம்பிக்கையையும் கீர்த்தியையும் பெற்றிருந்தது. ஆனால் தேவனிடமிருந்து விலகி தீயவனுக்குத் தன்னை கொடுத்தபோது அவன் தற்காலிகமாக சாத்தானின் முகவனான். எனினும் தேவன் அவனுக்குக் கொடுத்திருந்த பதவியையும் அதிகாரத்தையும் இன்னமும் வைத்துக்கொண்PPTam 944.3

    அவனுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் தங்கள் ஆத்துமாவை ஆபத்திற்குள்ளாக்கும் நிலைமையிலிருந்தார்கள். தேவனைக்காட்டிலும் அரசனுக்கு தன்னுடைய பற்றைக் கொடுத்திருந்த யோவாப் அரசன் கட்டளையிட்டதால் தேவனுடைய சட்டத்தை மீறினான்.PPTam 944.4

    தாவீதின் வல்லமை, தெய்வீக பிரமாணத்திற்கு இசைவாக மாத்திரமே செயல்படுத்தும்படி தேவனால் அவனுக்குக் கொடுக்கப் பட்டிருந்தது. தேவனுடைய பிரமாணத்திற்கு எதிரானதைக் கட்டளையிட்டபோது அதற்குக் கீழ்ப்படிவது பாவமாகியது. தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை ; (ரோமர் 131). எனினும் தேவனுடைய பிரமாணத்திற்கு எதிராயிருக்கும் போது அவைகளுக்கு கீழ்ப்படியக்கூடாது. பவுல் அப்போஸ்தலன் கொரிந்தியருக்கு எழுதும்போது, நாம் ஆட்சி செய்யப்படவேண்டிய கொள்கையை வைக்கிறான். நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல், நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள் (1 கொரி. 11:1) என்கிறான்.PPTam 945.1

    இந்த அவனுடைய கட்டளையை செயல்படுத்தினதின் விவரம் தாவீதிற்கு அனுப்பப்பட்டது. எனினும் யோவாபையோ அல்லது அரசனையோ வழக்குகளில் சிக்கவைக்காத வார்த்தைகளால் கவனமாக எழுதப்பட்டிருந்தது, யோவாப். தான் அனுப்புகிற ஆளை நோக்கி: நீ யுத்தத்தின் செய்திகளையெல்லாம் ராஜாவுக்குச் சொல்லித் தீர்ந்தபோது, ராஜாவுக்குக் கோபம் எழும்பி, அப்பொழுது நீ, உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்று சொல் என்றான். அந்த ஆள் போய், உட்பிரவேசித்து, யோவாப் தன்னிடத்தில் சொல்லியனுப்பின் செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவித்தான்.PPTam 945.2

    அரசனின் பதில் : நீ யோவாபினிடத்தில் போய் இந்தக் காரியத்தைப்பற்றி விசாரப்பட வேண்டாம், பட்டயம் ஒருவேளை ஒருவனையும், ஒருவேளை மற்றொருவனையும் பட்சிக்கும், நீ யுத்தத்தைப் பலக்கப்பண்ணி, பட்டணத்தை இடித்துப்போடு என்று அவனுக்குத் திடஞ்சொல் என்று இருந்தது.PPTam 945.3

    பத்சேபாள் தன் கணவனுக்காகப் புலம்பும் வழக்கமான நாட்களை ஆசரித்தாள். அவைகளின் முடிவில் தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக்கொண்டான், அவள் அவனுக்கு மனைவியானாள். தன்னுடைய உயிரே ஆபத்தில் இருந்தபோதுங்கூட ஆண்டவரால் அபிஷேகம் பண்ணப்பட்ட வனுக்கு எதிராக தன் கைகளை நீட்டத் துணியாதிருந்த இளகிய மனசாட்சியையும் கனத்தின் உயர்ந்த உணர்வையும் கொண்டிருந்த தாவீது, மிக உண்மையும் மிக வீரமுமுள்ள படைவீரனை தவறாக நடத்தி, கொலை செய்து, தன்னுடைய பாவத்தின் விளைவை தொந்தரவில்லாது அனுபவிக்க நம்பிக்கை கொண்டிருக்குமளவு தாழவிழுந்திருந்தான். ஐயோ! எவ்விதம் சுத்திகரிக்கப்பட்ட பொன் மங்கிப்போனது ! எவ்விதம் மிக நேர்த்தியான பொன் மாறிப் போனது!PPTam 945.4

    ஆதியிலிருந்தே, மீறுவதால் பெறப்படும் ஆதாயத்தை சாத் தான் மனிதருக்கு சித்தரித்திருந்தான். இவ்விதம் தூதர்களை அவன் மயக்கினான். இவ்விதம் ஆதாமையும் ஏவாளையும் பாவம் செய்யச் சோதித்தான். இவ்விதம் இன்னமும் திரளானவர்களை தேவனுக்குக் கீழ்ப்படிவதிலிருந்து தூரநடத்திக்கொண்டிருக்கிறான். மீறுதலின் பாதை விரும்பக்கூடியதாகத் தோன்றும் படி செய்யப்பட்டிருக்கிறது. அதின் முடிவோ மரண வழிகள் - நீதி. 14:12. இந்த வழியில் துணிந்திருந்தும் பாவத்தின் கனிகள் எவ்வளவு கசப்பானவை என்பதைக் கற்று தாமதமின்றி அதிலிருந்து திரும்புகிறவர்கள் மகிழ்ச்சியானவர்கள். பாவத்தின் வஞ்சகமான விளைவுகளினால் முழுவதும் அழிந்து போகும் படி கவர்ச்சிக்கப்பட தேவன் தமது கிருபையில் தாவீதை விட்டுவிடவில்லை.PPTam 946.1

    இஸ்ரவேலினிமித்தமும் தலையிடும் படியான அவசியம் தேவனுக்கு இருந்தது. காலஞ்சென்ற போது பத்சேபாளுடனான தாவீதின் பாவம் அறிய வந்தது. உரியாவின் மரணத்தை அவன் திட்டம் பண்ணியிருந்தான் என்கிற சந்தேகம் எழுப்பப்பட்டது. ஆண்டவர் கனவீனம் அடைந்தார். அவர் தாவீதிற்கு தயவு காண்பித்து அவனை உயர்த்தியிருந்தார். தாவீதின் பாவம் அவருடைய குணத்தைத் தவறாக எடுத்துக்காட்டி, அவருடைய பெயருக்கு நிந்தனையைக் கொண்டுவந்தது. அது தேவபக்தியின் தரத்தையும் பாவத்தைக் குறித்த அருவருப்பையும் குறைக்கும் இயல்போடு இஸ்ரவேலின் மனங்களில் இருந்தது. தேவனை நேசித்து அவருக்கு பயப்படாதிருந்தவர்கள் இதினால் மீறுதலில் துணிகரமடைந்தனர்.PPTam 946.2

    தாவீதிற்கு கண்டனத்தின் செய்தியை எடுத்துச் செல்ல நாத் தான் தீர்க்கதரிசி அனுப்பப்பட்டான். அச்செய்தி அதன் கடுமையில் பயங்கரமான ஒன்றாக இருந்தது. சில அரசர்களுக்கு, அதுவும் கடிந்து கொள்ளுகிறவனின் நிச்சயமான மரண நிலையில் தான் அப்படிப்பட்ட கடிந்து கொள்ளுதல் கொடுக்கப்படக்கூடும். நாத்தான் தெய்வீகத் தீர்ப்பைத் தயக்கமின்றி கொடுத்தபோதும், இராஜாவின் பரிதாபத்தை சம்பாதித்து அவனுடைய மனச்சாட் சியை எழுப்பி அவன்மீதான மரண ஆக்கினையை அவனுடைய உதடுகளிலிருந்தே வரவழைப்பதற்கான பரலோக ஞானத்தோடு கொடுத்தான். தன்னுடைய மக்களின் உரிமைகளை பாதுகாக்க தெய்வீகத்தால் நியமிக்கப்பட்டவனென்று தாவீதிடம் முறையிட்டு, தவறு மற்றும் கொடுமையின் கதையைக் கூறி, அதற்கான நிவிர்த்தியைக் தீர்க்கதரிசி கோரினான்.PPTam 946.3

    அவனை நோக்கி ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந் தார்கள்; ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன். ஐசுவரிய வானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது. தரித்திரனுக்கோ தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது, அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங் கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக் கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது. அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான், அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்குச் ச மையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்தத்தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில் வந்த மனுஷனுக்குச் சமையல் பண்ணுவித்தான் என்றான்.PPTam 947.1

    இராஜாவின் கோபம் தூண்டப்பட அவன் : இந்தக்காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்துக்குப் பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன். அவன் இரக்கமற்றவனாயிருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், அந்த ஆட் டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் (2 சாமு. 12:5,6) என்று கூறினான்.PPTam 947.2

    நாத்தான் தன் கண்களை இராஜாவின் மேல் பதித்து, பின்னர் தனது வலதுகரத்தை பரலோகத்திற்கு நேராக உயர்த்தி. நீயே அந்த மனுஷன் என்று அறிவித்தான். பின்னர் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டைபண்ணினது என்ன? என்று தொடர்ந்தான். குற்றவாளிகள் தாவீது செய்ததைப்போலவே தங்களுடைய குற்றத்தை மனிதரிடமிருந்து மறைக்க முயற்சிக்கலாம். தீய செயலை மனிதப் பார்வையிலிருந்தும் அறிவிலிருந்தும் என்றைக் குமாக புதைத்துப்போட தேடலாம். ஆனால், சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயு மிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். எபி. 4:13, வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை, அறியப்படாத இரகசியமும் இல்லை மத். 10:26. PPTam 947.3

    இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து, கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டைபண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் புத்திரரின் பட்டயத்தாலே கொன்று போட்டாய் ...... பட்டயம் என்றென்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும் .... இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன் மேல் எழும்பப் பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன் .... நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய், நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று நாத்தான் அறிவித்தான்.PPTam 947.4

    தீர்க்கதரிசியின் கண்டனைதாவீதின் இருதயத்தைத் தொட்டது. மனச்சாட்சி உயிரடைந்தது. அவனுடைய குற்றம் அதன் ஏராளத்தின் முழுமையில் காணப்பட்டது. அவனுடைய ஆத்துமா மனவருத்தத்தில் தேவன் முன் பணிந்தது. நடுங்கும் உதடுகளோடு அவன் நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்தேன் என்றான். மற்றவர்களுக்கு செய்யப்படும் அனைத்து தவறுகளும் காயப்பட்டவரிடமிருந்து தேவனிடம் திரும்பிச் செல்லுகிறது. தாவீது வருந்தக் கூடிய ஒரு பாவத்தை உரியாவிற்கும் பத்சேபாளுக்கும் எதிராகச் செய்திருந்தான். அவன் அதை ஆழமாக உணர்ந்தான். ஆனால் தேவனுக்கெதிரான அவனுடைய பாவம் இதைவிடவும் எல்லையற்று பெரியதாக இருந்தது.PPTam 948.1

    ஆண்டவரால் அபிஷேகம் பண்ணப்பட்டவன் மேல் மரண தண்டனையை செலுத்த ஒருவரும் காணப்படாதிருப்பினும், தேவனுடைய விரைவான நியாயத்தீர்ப்பினால் குற்றவாளியாயும் மன்னிக்கப்படாதவனுமாகவே அறுப்புண்டு போவேனோ என்று தாவீது நடுங்கினான். ஆனால் நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார் என்று கூறி, தீர்க்கதரிசியினால் அவனுக்கு செய்தி அனுப்பப்பட்டது. இருந்த போதும் நியாயம் பராமரிக்கப்படவேண்டும். மரண தண்டனை தாவீதிடமிருந்து அவனுடைய பாவத்தினால் பிறந்த குழந்தைக்கு மாற்றப்பட்டது. இவ்விதம் மனந்திரும்பும்படியான சந்தர்ப்பம் அரசனுக்குக் கொடுக்கப்பட்டது. அவனுடைய தண்டனையின் ஒரு பகுதியான குழந்தையின் வேதனையும் மரணமும், அவனுடைய மரணம் கொடுத்திருக்கக் கூடியதைக்காட்டிலும் மாபெரும் கசப்பை அவனுக்குக் கொடுத்தது. ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய்ச் சாகும் என்று தீர்க்கதரிசி சொன்னான்.PPTam 948.2

    தன்னுடைய குழந்தை அடிக்கப்பட்டபோது தாவீது உபவாசத்திலும் ஆழ்ந்த சிறுமையிலும் அதனுடைய வாழ்க்கைக்காக மன்றாடினான். தன் அரச அங்கியை அப்புறப்படுத்தி, தன் கிரீடத்தை தள்ளிவைத்து, ஒவ்வொரு இரவாக தன்னுடைய குற்றத்தினிமித்தம் வேதனைப்பட்ட குற்றமில்லாத குழந்தைக்காக இருதயம் உடைந்த வருத்தத்தோடு தரையின் மீது விழுந்து அவன் மன்றாடினான். அவனைத் தரையிலிருந்து எழுந்திருக்கப்பண்ண, அவன் வீட்டிலுள்ள மூப்பரானவர்கள் எழுந்து, அவனண்டையில் வந்தாலும், அவன் மாட்டேன் என்று சொன்னான். பலவேளைகளில் மனிதர்மீதோ அல்லது பட்டணங்கள் மீதோ நியாயத்தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டிருந்தபோது தாழ்மையும் மனந்திரும்புதலும் அந்த அடியை திருப்பியிருக்கிறது. மன்னிக்கிறதற்கு தீவிரமான நித்தம் இரங்குகிறவர், சமாதானத்தின் தூதுவர்களை அனுப்பியிருக்கிறார். இந்த நினைவினால் உற்சாகப்படுத்தப்பட்டவனாக, குழந்தை உயிரோடு இருந்தவரையிலும் தாவீது தன் மன்றாட்டைத் தொடர்ந்தான். அது மரித்ததென்று அறிந்தபோது தேவனுடைய ஆணைக்கு அமைதியாக ஒப்படைத்தான். அவன்தானே நீதி யென்று அறிவித்திருந்த தண்டனையின் முதல் அடி விழுந்திருந்தது. ஆனாலும் தேவனுடைய இரக்கத்தை நம்பியிருந்த தாவீது ஆறுதலின்றி விடப்படவில்லை . PPTam 949.1

    தாவீதுடைய விழுகையின் சரித்திரத்தைப் படிக்கிற அநேகர்: ஏன் இந்தப் பதிவு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது? பரலோகத்தால் மிக உயர்வாக கனம் பண்ணப்பட்டிருந்த ஒருவனுடைய வாழ்க்கையின் இந்த இருண்ட பகுதியை உலகத்திற்கு திறந்து வைப்பதை ஏன் தேவன் தகுதியானதென்று கண்டார்? என்று கேட்கின்றனர். தாவீதைக் கடிந்துகொண்டதில் தீர்க்கதரிசி அவன் பாவத்தைக் குறித்து : இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத் துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால், என்று அறிவித்திருந்தான். தொடர்ந்த தலைமுறைகளாக நாத்திகர்கள் இருண்ட கறையைக் கொண்டிருந்த தாவீதின் பாவத்தைச் சுட்டிக் காட்டி, இவன்தான் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதன் என்று கேலியாக வெற்றிக்களிப்போடு அறிவித்திருக்கிறார்கள். இவ்விதம் மதத்தின் மேல் ஒரு நிந்தனை கொண்டுவரப்பட்டிருக் கிறது. தேவனும் அவருடைய வார்த்தையும் தூஷிக்கப்பட்டு, ஆத்துமாக்கள் அவிசுவாசத்தில் கடினப்பட்டிருக்கின்றனர். அநேகர் பக்தி என்னும் போர்வையின் கீழ் பாவத்தில் துணிவடைந்திருக்கிறார்கள்.PPTam 949.2

    ஆனால் தாவீதின் சரித்திரம் பாவத்திற்கு எந்த அங்கீகாரத்தையும் கொடுக்கவில்லை. அவன் தேவனுடைய ஆலோசனையில் நடந்து கொண்டிருந்தபோதுதான் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதன் என்று அழைக்கப்பட்டான். அவன் பாவம் செய்தபோது, மீண்டும் மனவருத்தத்தோடு ஆண்டவரிடம் திரும்பும் வரையிலும் அது உண்மையாக இல்லை. தேவனுடைய வார்த்தை . தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது (2 சாமு. 11:27) என்று தெளிவாக அறிவிக்கிறது. தேவன் தாவீதிடம் தீர்க்கதரிசியின் வழியாக கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டைபண்ணினது என்ன?..... இப்போதும் நீ என்னை அசட்டைப்பண்ணின ...... படியினால் பட்டயம் என்றென்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும் என்று சொன்னார். தாவீது தன் பாவத்தைக்குறித்து மனம் வருந்தி ஆண்டவரால் மன்னிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்த போதும், அவன் விதைத்திருந்த விதையின் அழிவிற்கேதுவான அறுவடையை அறுத்தான். அவன் மீதும் அவன் வீட்டார் மேலும் வந்த நியாயத்தீர்ப்புகள் தேவனுக்கு பாவத்தின் மேலிருக்கும் அருவருப்பிற்கு சாட்சி பகருகின்றன.PPTam 950.1

    தேவனுடைய ஏற்பாடு இதுவரையிலும் சத்துருக்களுடைய அனைத்து தீய திட்டங்களுக்கும் எதிராக அவனைப் பாதுகாத் திருந்து, சவுலைக் கட்டுப்படுத்த நேரடியாக செயல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் தாவீதின் மீறுதல் தேவனுடனான அவனுடைய உறவை மாற்றியிருந்தது. அக்கிரமத்தை ஆண்டவரால் எவ்விதத்திலும் அங்கீகரிக்க முடியாது. சவுலின் பகையிலிருந்து தாவீதை பாதுகாத்ததைப்போல் பாவத்தின் விளைவுகளிலிருந்து அவனைப் பாதுகாக்க அவரால் தமது வல்லமையை உபயோகிக்க முடியாது.PPTam 950.2

    தாவீதில் தானும் மாபெரும் மாற்றம் வந்திருந்தது. அவன் தன்னுடைய பாவம் மற்றும் வெகுதூரம் பரவியிருந்த அதன் விளைவுகளினால் ஆவியில் உடைந்திருந்தான். அவனுடைய குடிமக்களின் பார்வையில் சிறுமைப்பட்டவனாக உணர்ந்தான். அவனுடைய செல்வாக்கு பலவீனமடைந்தது. இதுவரையிலும் அவனுடைய செழிப்பிற்கு ஆண்டவருடைய பிரமாணங்களுக்கான அவனுடைய கருத்தான கீழ்ப்படிதல் காரணங்காட்டப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அவனுடைய பாவத்தைக்குறித்த அறிவைப் பெற்றிருந்த அவனுடைய பிரஜைகள் பாவத்திற்குள் அதிக தடையின்றி நடத்தப்படுவார்கள். அவனுடைய சொந்த வீட்டின் மேலிருந்த அதிகாரமும் அவனுடைய குமாரரிடமிருந்து அவன் கோரிய மரியாதையும் கீழ்ப்படிதலும் பெலவீனமடைந்தது. அவனுடைய குற்றத்தைக் குறித்த உணர்வு பாவத்தை கண்டிக்க வேண்டிய இடத்தில் அவனை மெளனமாக்கியது. தன்னுடைய வீட்டில் நியாயத்தை செயல்படுத்த அவன் கைகளை அது பெலவீனமாக்கியது. அவனுடைய தீய உதாரணம் அவன் செல்வாக்கை குமாரர்மேல் செலுத்தியது. அந்த விளைவைத் தடுக்க தேவன் தலையிடமாட்டார். காரியங்கள் அவன் எடுத்த வழியைத் தொடரும்படி அவர் அனுமதித்தார். இவ்விதம் தாவீது கடுமையாகச் சிட்சிக்கப்பட்டான்.PPTam 950.3

    தன்னுடைய விழுகைக்குப்பின் தாவீது ஒரு முழு வருடமும் பாதுகாப்பாக வாழ்ந்திருந்ததைப் போன்று தோன்றியது. தேவனுடைய அதிருப்தியைக் குறித்த எந்த வெளிப்படையான சான்றும் அப்போது இருக்கவில்லை. ஆனால் அவன் மீது தெய்வீக நியாயத்தீர்ப்பு இருந்து வந்தது. எந்த மனந்திரும்புதலும் தவிர்க்கக்கூடாத, அவனுடைய முழுபூமிக்குரிய வாழ்க்கையையும் இருட்டடிக்கக்கூடிய வேதனையும் அவமானமும் நிறைந்த நியாயத்தீர்ப்பு மற்றும் தண்டனையின் நாள் வேகமாகவும் நிச்சயமாகவும் நெருங்கிக்கொண்டிருந்தது. தாவீதின் உதாரணத்தைச் சுட்டிக்காட்டி தங்களுடைய பாவங்களின் சொந்த குற்றங்களை குறைக்க முயற்சிக்கிறவர்கள், மீறுதலின் பாதை கடினமானது என்பதை வேதாகமப் பதிவிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். தாவீதைப்போலவே தீயவழியிலிருந்து திரும்பினாலும் பாவத்தின் விளைவுகள் இந்த வாழ்க்கையிலே தானே கசப்பானதும் சுமக்கக் கடினமானதுமாகக் காணப்படும். PPTam 951.1

    மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டு, தேவனிடம் தயவு பெற்றவர்கூட பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்து, கவனித்திருப்பதையும் ஜெபிப்பதையும் நெகிழ்ந்துவிடக்கூடாது என்பதற்கான எச்சரிப்பாக தாவீதின் விழுகையைக் குறித்த சரித்திரம் இருக்கவேண்டும் என்று தேவன் திட்டம் பண்ணினார். இவ்விதம் போதிக்கும் படியாக தேவன் வடிவமைத்திருந்த பாடத்தைத் தாழ்மையோடு கற்றுக்கொள்ளத் தேடுகிறவர்களுக்கு அது அவ்விதம் உதவியிருக் கிறது. சோதனைக்காரனின் வல்லமையினால் வரும் தங்கள் சொந்த ஆபத்தை உணரும்படி ஆயிரக்கணக்கானோர் தலைமுறைதோறும் இவ்விதம் நடத்தப்பட்டிருக்கிறார்கள். ஆண்டவரால் மிக அதிகம் கனம் பண்ணப்பட்டிருந்த தாவீதின் விழுகை சுயத்தின் மேல் ஒரு அவநம்பிக்கையை அவர்களில் எழுப்பியிருக்கிறது. விசுவாசத் தின் மூலம் தேவன் மாத்திரமே தமது வல்லமையினால் அவர்களைக் காக்க முடியும் என்று உணர்ந்திருக்கிறார்கள். அவரில் தான் தங்களுடைய பலமும் பாதுகாப்பும் இருக்கிறதென்று அறிந்து சாத்தானுடைய களத்தில் முதல் அடி எடுத்துவைக்க அவர்கள் பயந்திருக்கிறார்கள்.PPTam 951.2

    தாவீதிற்கு எதிரான தெய்வீக நியாயத்தீர்ப்பு அறிவிக்கப்படு வதற்கு முன்பாகவே மீறுதலின் கனியை அவன் அறுக்கத் துவங் கினான். அவனுடைய மனச்சாட்சி அமைதலாக இல்லை. அவன் அப்போது சகித்திருந்த அவனுடைய ஆவியின் வேதனை முப்பத்து இரண்டாம் சங்கீதத்தில் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.PPTam 952.1

    எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான். நான் அடக்கிவைத்த மட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்து போயிற்று. இரவும் பகலும் என் மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால் வறட்சி போல் வறண்டு போயிற்று (சங்.321- 4) என்று கூறுகிறான்.PPTam 952.2

    தேவனிடமிருந்து கண்டனையின் செய்தி வந்த போது தாவீதுக்கு உண்டான மனந்திரும்புலை ஐம்பத்து ஓராம் சங்கீதம் விவரிக்கிறது.PPTam 952.3

    தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவம் என்னைச் சுத்திகரியும். என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன், என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ் செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன், நீர் பேசும் போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும் போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன். இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன், என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள். இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர். நீர் என்னை ஈசோப்பினால் சுத்தி கரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன், என்னைக் கழுவியரு ளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொ ழுது நீர் நொறுக்கின் எலும்புகள் களிகூரும். என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களை யெல்லாம் நீக்கியருளும். தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும். உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும் படி செய்யும். அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன், பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள். தேவனே, என்னை இரட்சிக்குந் தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும், அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும். சங். 51:1-14.PPTam 952.4

    கடைசி தலைமுறை வரைக்கும் தன்னுடைய விழுகையைக் குறித்த அறிவைப் பாதுகாக்க, ஆசாரியரும் நியாயாதிபதிகளும், பிரபுக்களும் யுத்த வீரரும் கூடியிருக்கும் சபையில் மக்களின் பொதுக் கூட்டங்களில், அவர்கள் முன்னிலையில் பாடக்கூடிய ஒரு பவித்திரமான பாடலாக இஸ்ரவேலின் இராஜாதன் பாவத்தையும், மனந்திரும்புதலையும், தேவனுடைய இரக்கத்தினால் தனக்குக் கிடைத்த மன்னிப்பின் நம்பிக்கையையும் திரும்பிப் பார்த்தான். தன்னுடைய குற்றத்தை மறைக்க முயற்சிப்பதற்குப் பதிலாக அவனுடைய விழுகையின் சோக சரித்திரத்தின் வழியாக மற்றவர்கள் போதிக்கப்படவேண்டும் என்று அவன் விரும்பினான்.PPTam 953.1

    தாவீதின் மனவருத்தம் உண்மையானதும் ஆழமானதுமாக இருந்தது, அவனுடைய குற்றத்தை மட்டுப்படுத்த அவன் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. பயமுறுத்தின் நியாயத்தீர்ப்புகளிலிருந்து தப்பிக்கும் எந்த ஆசையும் அவனுடைய ஜெபத்தை ஏவியிருக்கவில்லை . தேவனுக்கு எதிரான மீறுதலின் ஏராளத்தை அவன் கண்டான். அவனுடைய ஆத்துமாவின் தீட்டை அவன் கண்டான். அவனுடைய பாவத்தை அவன் அருவருத்தான். மன்னிப்பிற்காக மாத்திரமல்ல, இருதயத்தின் தூய்மைக்காக அவன் ஜெபித்தான். தாவீது விரக்தியில் போராட்டத்தை விட்டுவிட வில்லை. மனந்திரும்பும் பாவிகளுக்கான தேவனுடைய வாக்குத் தத்தத்தில் அவனுடைய மன்னிப்பையும் மற்றும் மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான சான்றையும் அவன் கண்டான்.PPTam 953.2

    பலியை நீர்விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர் - சங். 51:16, 17.PPTam 954.1

    தாவீது விழுந்த போதும் ஆண்டவர் அவனைத் தூக்கினார். அவன் இப்போது தேவனோடு முழு இசைவோடு இருந்து, விழுகைக்கு முன் இருந்ததைக்காட்டிலும் தன் சக மனிதர்மேல் அதிகப் பரிவோடு இருந்தான். விடுதலைக்குப்பின் அவன் : நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன், என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். இதற்காகச் சகாயங்கிடைக்குங் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்வான், அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது. நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர், என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக் காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர் (சங்.32:5-7) என்று பாடினான்.PPTam 954.2

    மிகவும் குறைவான பாவம் செய்ததாகத் தங்கள் பார்வையில் தோன்றின் சவுலை நிராகரித்த பின்னர் மாபெரும் குற்றம் செய்த தாவீதை விட்டுவைத்தது தேவனுடைய அநீதி என்று அநேகர் முறு முறுக்கிறார்கள். ஆனால் தாவீது தன்னைத் தாழ்த்தி தன் பாவத்தை அறிக்கையிட்டான். சவுலோ கடிந்துகொள்ளுதலை இகழ்ந்து மனந்திரும்புவதற்கு எதிராக தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான்.PPTam 954.3

    மனந்திரும்புகிற பாவிக்கு தாவீதின் சரித்திரத்தைக் குறித்த இந்தப் பகுதி முழுவதும் அர்த்தம் நிறைந்ததாயிருக்கிறது. மனுஷகத்தின் போராட்டங்கள் மற்றும் சோதனைகள் குறித்தும், தேவனிடம் மெய்யான மனவருத்தம் மற்றும் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் வைக்கும் விசுவாசம் குறித்தும் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற விளக்கங்களில் மிக வல்லமையான ஒன்றாக இது இருக்கிறது. அனைத்து யுகங்களிலும் பாவத்தில் விழுந்து தங்கள் பாவபாரத்தின் கீழ் போராடிக்கொண்டிருக்கிற ஆத்துமாக்களுக்கு உற்சாகமளிக்கும் ஆதாரமாக இது இருந்துவருகிறது. தாவீது பாவத்தின் தண்டனையை அனுபவித்த போதிலும் அவனுடைய மெய்யான மனந்திரும்புதலும் பாவ அறிக்கையும் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை, பாவத்தில் காட்டிக் கொடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தேவனுடைய பிள் ளைகள் விரக்திக்கு தங்களைக் கொடுக்க ஆயத்தமான போது நினைவு கூர்ந்திருக்கிறார்கள். மனந்திரும்பி தேவனுடைய கற்பனைகளின் பாதையில் மீண்டும் நடக்க அவர்களும் தைரியம் பெற்றிருக்கிறார்கள்.PPTam 954.4

    தாவீதைப்போல் தேவனுடைய கடிந்துகொள்ளுதலின் கீழ் ஆத்துமாவை தாழ்மைப்படுத்தி பாவ அறிக்கை செய்து மனந்திரும் புகிறவர்கள், அவரில் தங்களுக்கு நம்பிக்கையுண்டென்று நிச்சயமாயிருக்கலாம். யாரெல்லாம் விசுவாசத்தோடு தேவனுடைய வாக்குத்தத்தங்களை ஏற்றுக்கொள்ளுகிறார்களோ அவர்களெல்லா ரும் மன்னிப்பைக் கண்டடைவார்கள். மெய்யாக மனந்திரும்பின் ஆத்துமாவை ஆண்டவர் ஒருபோதும் புறம்பே தள்ளுவதில்லை. அவன் என் பெலனைப் பற்றிக்கொண்டு என்னோடே ஒப்புர வாகட்டும், அவன் என்னோடே ஒப்புரவாவான் ஏசாயா 27:5 துன் மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன் மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார் (ஏசாயா 557) என்று அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார்.PPTam 955.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents