Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    11 - ஆபிரகாமின் அழைப்பு

    பாபேலின் சிதறலுக்குப்பின்பு விக்கிரக ஆராதனை மீண்டும் உலக முழுவதிலும் பரவியது. அப்போது ஆண்டவர், கடின இருதயங்கொண்ட கலகக்காரரை தங்கள் தீய வழிகளையே பின்பற்ற முடிவாக விட்டு விட்டு, சேமின் வம்சத்தில் வந்த ஆபிரகாமை தெரிந்தெடுத்து, எதிர்காலத் தலைமுறையினருக்காக தமது கற்பனைகளைக் காத்துக் கொள்ளுபவனாக அவனை ஏற்படுத்தினார். ஆபிரகாம் மூடநம்பிக்கைகளுக்கும் அஞ்ஞான வழக்கங்களுக்கும் நடுவே வளர்ந்திருந்தான். யாரால் தேவனைக் குறித்த அறிவு பாதுகாக்கப்பட்டிருந்ததோ, அவனது தகப்பனுடைய வீட்டாருங்கூடதங்களைச் சுற்றியிருந்த மயக்கும் செல்வாக்கிற்குத் தங்களை ஒப்புக் கொடுத்திருந்து, யெகோவாவை விடுத்து, மற்ற தேவர்களை சேவித்திருந்தார்கள். எனினும், மெய்யான விசுவாசம் அழிந்து போகக்கூடாது . தேவன் தம்மை சேவிக்கும்படியாக மீதியான ஒரு ஜனத்தை எப்போதும் பாதுகாத்திருக்கிறார். ஆதாம், சேத், ஏனோக்கு, மெத்தூசலா, நோவா, சேம் ஆகியோர் தொடர்ச்சியான வரிசையில் அவருடைய சித்தத்தின் வெளிப்பாடுகளை காலங்காலமாக பாதுகாத்து வந்தனர். தேராகின் மகன் இந்த பரிசுத்த நம்பிக்கையை சுதந்தரிக்கிறவனானான். விக்கிரக வணக்கம் அவனை வீணாகவே எப்பக்கத்திலும் வரவேற்றது. விசுவாசமற்றவர்களின் நடுவே நிலவியிருந்த விசுவாசத் துரோகத்தினால் களங்கப்படாதவனாக, ஒன்றான மெய்தேவனை ஆராதிப்பதில் அவன் உறுதியாக நின்றிருந்தான். தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். சங் 145:18. அவர் தமது சித்தத்தை ஆபிரகாமுக்கு தெரியப்படுத்தினார். மேலும் தமது பிரமாணங்களின் கோரிக்கைகளையும் கிறிஸ்துவின் மூலமாக நிறைவேற்றப்படவிருக்கிற இரட்சிப்பையுங்குறித்த குறிப்பான அறிவை அவனுக்குக் கொடுத்தார்.PPTam 131.1

    ஆபிகாமுக்கு வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது. விசே ஷமாக அந்தக் காலத்து மக்களுக்கு மிகவும் பிரியமாயிருந்த நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன், நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் என்ற எண்ணுக்கடங்காத சந்ததியினரையும், தேசிய மேன்மை யையுங்குறித்ததான வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது. அதோடு கூட, விசுவாசத்தைச் சுதந்தரித்துக்கொண்ட அவனுக்கு, மற்ற எல்லாவற்றையும் விட விலைமதிப்புள்ளதாயிருந்த உலக மீட்பர் அவனுடைய சந்ததியில் வரவேண்டும் என்கிற உறுதி. பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்று கூட்டப்பட்டிருந்தது. என்றாலும் இதனுடைய நிறைவேறுதலின் முதல் நிபந்தனையாக ஒரு விசுவாச சோதனை இருக்க வேண்டும். ஒரு தியாகம் அவசியப்பட்டது.PPTam 132.1

    நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத் துக்குப் போ என்கிற தேவனுடைய செய்தி ஆபிரகாமுக்கு வந்தது. தேவன் அவனைத் தமது பரிசுத்த வாக்கியங்களின் பாது காவலனாக தம்முடைய மாபெரும் வேலைக்குத் தகுதிப்படுத்த, ஆபிரகாம் தன் இளமைக்கால தோழமைகளிலிருந்து கட்டாயம் பிரிக்கப்பட வேண்டும். இனத்தார் மற்றும் தோழர்களின் செல் வாக்கு, தேவன் தமது ஊழியக்காரனுக்குக் கொடுக்க எண்ணியிருந்த பயிற்சியில் குறுக்கிடலாம். இப்போது ஆபிரகாம் ஒரு விசேஷமான விதத்தில் பரலோகத்தோடு இணைக்கப்பட்டிருக் கிறான். அவன் அந்நியர்களின் நடுவே வசிக்கவேண்டும். அவ னுடைய குணம் உலகம் முழுவதிலுமிருந்து வேறுபட்ட, அசாதார ணமானதாக இருக்க வேண்டும். தனது நண்பர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் தன் செயல்களை விளக்கிச் சொல்ல கூட அவனால் முடி யாது. ஆவிக்குரிய காரியங்கள் ஆவிக்குரிய விதமாக ஆராய்ந்து நிதானிக்கப்படும். அவனுடைய நோக்கங்களும் செயல்களும் விக் கிரக ஆராதனைக்காரரான அவனுடைய இனத்தாரால் புரிந்துகொள் ளப்படவில்லை PPTam 132.2

    விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப் போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப் படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப் பட்டுப்போனான் - எபி. 11:8. ஆபிரகாமின் கேள்வி கேட்காத கீழ்ப்படிதல், வேதாகமம் முழுவதிலும் காணப்படுகிற விசுவாசத்திற்கடுத்த மிகவல்லமையான சான்றுகளில் ஒன்றாக இருக்கிறது. அவனுக்கு விசுவாசம் என்பது : நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாய் (எபி. 11:1) இருந்தது. தெய்வீக வாக்குத்தத்தம் நிறைவேறுவதற்கான மிகக்குறைவான நிச்சயங்கூட இல்லாதபோதும் அதையே சார்ந்து, வீட்டையும் இனத்தையும் தேசத்தையும் துறந்து, தேவன் எங்கே நடத்துகிறாரோ அங்கே போகும்படி, போகும் இடம் இன்னதென்று அறியாத போதும் சென்றான். விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான். எபி 11:9PPTam 133.1

    இவ்விதமாக ஆபிரகாமின் மேல் கொண்டுவரப்பட்டது எளி மையான சோதனை அல்ல. அவனிடம் குறைவான தியாகம் கோரப்படவில்லை. தனது இனத்தோடும் தேசத்தோடும் குடும்பத் தோடும் அவனைக் கட்டிவைக்கிற பலமான உறவுகள் அங்கே இருந்தன. என்றாலும் அழைப்பிற்குக் கீழ்ப்படிய அவன் தயங்க வில்லை. அதன் மண் செழிப்பானதா, தட்பவெப்பம் ஆரோக் கியமானதா, மனதுக்கு உகந்த சூழலையும் செல்வம் சேர்ப்பதற்கான சந்தர்ப்பங்களையும் அந்த நாடு கொடுக்குமா? என்று வாக்குத்தத்த நாட்டைக்குறித்து கேட்கும்படியான எந்த கேள்வியும் அவனிடம் இல்லை . தேவன் பேசியிருக்கிறார். அவருடைய ஊழியக்காரன் கீழ்ப்படியவே வேண்டும், பூமியிலே அவனுக்கு மிக மகிழ்ச்சியான இடம், அவன் எங்கே இருக்கவேண்டும் என்று தேவன் விரும்பு கிறாரோ அதுதான்.PPTam 133.2

    அநேகர் இன்றும் ஆபிரகாமைப் போல் சோதிக்கப்படு கிறார்கள். பரலோகங்களிலிருந்து நேரடியாக தேவன் பேசுகிற சத் தத்தை அவர்கள் கேட்பதில்லை. ஆனால் தமது வார்த்தைகளின் போதனைகளினாலும் தாம் ஏற்பாடு செய்கிற சம்பவங்களினாலும் அவர்களை அவர் அழைக்கிறார். செல்வத்தையும் புகழையும் வாக்குப்பண்ணுகிற தொழிலை விட்டுவிட, இன்பமான மற்றும் இலாபமான தோழமைகளை விட்டுவிட்டு இனத்தாரிடமிருந்து பிரியும் படி, சுயமறுப்பும் இன்னல்களும் தியாகமும் மாத்திரமே கொண்ட பாதையாகத் தோன்றுவதில் நுழைய அவர்கள் அழைக் கப்படலாம். செய்யும் படியான வேலை ஒன்றை தேவன் அவர் களுக்கு வைத்திருக்கிறார். தொல்லையில்லாத வாழ்க்கையும், நண் பர்கள் மற்றும் இனத்தாரின் செல்வாக்கும் அவ்வேலையை நிறை வேற்ற அவசியமான பண்புகளை வளர்த்துக்கொள்ள தடைசெய் யலாம். மனித செல்வாக்குகளிலிருந்தும் உதவிகளிலிருந்தும் அவர்களை அப்பால் அழைத்து, தம்மை அவர்களுக்கு வெளிப் படுத்துவதற்கேதுவாக, தமது உதவியின் அவசியத்தை உணந்து, தம்மை மாத்திரம் சார்ந்து இருக்கும்படி அவர் நடத்துகிறார். தேவ னுடைய அழைப்பிற்கு, நேசித்திருந்த திட்டங்களையும் பழக்கப் பட்ட தோழமைகளையும் விட்டுவிடயார் ஆயத்தமாக இருக்கிறீர்கள்? கிறிஸ்துவிற்காக தனது நஷ்டங்களை இலாபமாக எண்ணி, உறுதியோடும் முழுமனதோடும் தேவனுடைய வேலையைச் செய்து கொண்டு, யார் புதிய கடமைகளை ஏற்று நுழைந்திராத இடங்களில் நுழைவீர்கள்? இப்படிச் செய்கிறவன் ஆபிரகாமின் விசுவாசத்தைக் கொண்டிருக்கிறான். அவன், இவ்வுலகத்துப் பாடுகள் ஒப்பிடத்தகாதமிகவும் அதிகமான நித்தியகன மகிமையை அவனோடு பகிர்ந்துகொள்வான். (ரோமர் 8:18; 2 கொரி. 4:17).PPTam 133.3

    கல்தேயருடைய பட்டணமான ஊர் என்னும் தேசத்திலே ஆபிரகாம் சஞ்சரித்தபோது, பரலோக அழைப்பு முதன்முறையாக அவனுக்கு வந்தது. அதற்குக் கீழ்ப்படிந்து அவன் ஆரானுக்குச் சென்றான். அவனுடைய தகப்பன் குடும்பத்தார், விக்கிரக ஆரா தனையோடு மெய்யான தேவனைத் தொழுவதையும் இணைத் திருந்ததால், இந்த இடம் வரையிலும் அவனோடு சென்றார்கள். இங்கே ஆபிரகாம் தேராகு மரணமடயும் வரை தங்கியிருந்தான். ஆனால் அவனுடைய தகப்பனின் மரணத்திற்குப்பின், தெய் வீகக்குரல் முன்னோக்கிச் செல்லும்படியாக அவனைப் பணித்தது. அவனுடைய சகோதரனான நாகோர் தன் குடும்பத்தாரோடுகூட தங்கள் வீட்டையும் தங்கள் விக்கிரகங்களையும் பற்றிக்கொண்டிருந்தனர். ஆபிரகாமின் மனைவி சாராளைத்தவிர வெகுகாலத் துக்கு முன் மரித்துப்போன ஆரானின் மகன் லோத்து மாத்திரமே முற்பிதாவின் யாத்ரீக வாழ்க்கையில் பங்கு பெறுவதைத் தெரிந்து கொண்டான். எனினும், மெசபத்தோமியாவிலிருந்து மிகப்பெரிய கூட்டம் புறப்பட்டது. ஆபிரகாம் ஏற்கனவே அதிகமான மந்தைகளையும் கிழக்கத்திய ஐசுவரியங்களையும் கொண்டிருந்தான். அதிக எண்ணிக்கையிலான வேலைக்காரராலும் சேவகர்களாலும் அவன் சூழப்பட்டிருந்தான். அவன் தன் தகப்பன்மார்களுடைய தேசத்திலிருந்து ஒருபோதும் திரும்பிவராதபடி புறப்படுகிறான். தனக்கு உண்டாயிருந்த அனைத்தையும் தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சம்பத்தெல்லாவற்றையும், ஆரானிலே சவதரித்திருந்த ஜனங்களையும் அவன் தன்னோடு சேர்த்துக்கொண்டான். ஊழியம் மற்றும் சுயவிருப்பத்தினால் வந்தவர்களை விடவும், மேலான எண்ணங்களினால் நடத்தப்பட்டிருந்த அநேகர் அவர்களில் இருந்தனர். அவர்கள் ஆரானில் தங்கியிருந்தபோது ஆபிரகாமும் சாரா ளும் மெய்யான தேவனை தொழுது சேவிக்கும்படி மற்றவர்களை நடத்தியிருந்தனர். அவர்கள் முற்பிதாவின் வீட்டாரோடு தங்களை இணைத்திருந்து, வாக்குத்தத்தமான நாட்டுக்கு அவனோடு சென் றனர். அவர்கள் கானான் தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கானான் தேசத்தில் சேர்ந்தார்கள்.PPTam 134.1

    அவர்கள் முதலாவது சீகேம் என்ற இடத்தில் தங்கினார்கள். பரந்த புல்வெளியில், ஒலிவ தோப்புகளும் பாய்ந்துவரும் ஊற்று களுங் கொண்ட மோரேயின் கர்வாலி மரங்களின் நிழலில், ஏபால் மலை ஒருபுறமும் கெரிசம் மலை மறுபுறமுமிருக்க, அவைகளுக் கிடையே ஆபிரகாம் கூடாரம் போட்டான். முற்பிதா பிரவேசித் திருந்தது அழகானதும் நன்மையானதுமான தேசம், அது பள்ளத் தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும் ஊற்றுகளும் ஏரிகளுமுள்ள தேசம்; அது கோதுமையும் வாற்கோதுமையும் திராட்சச்செடிகளும் அத்திமரங்களும் மாதளஞ்செடி களுமுள்ள தேசம், அது ஒலிவமரங்களும், எண்ணெயும் தேனு முள்ள தேசம் உபா. 87, 8. ஆனால் மரங்கள் கொண்ட மலையிலும் செழிப்பான சம் பூமியிலும் யெகோவாவை தொழுது கொண்டிருந்தவன் மேல் ஒரு பாரமான நிழல் தங்கியது. அக்காலத்திலே கானா னியர் அத்தேசத்தில் இருந்தார்கள். அன்னிய இனத்தால் ஆக்கிர மிக்கப்பட்டு, உருவ வழிபாடு பரவியிருந்த ஒரு தேசத்தைக் கண்டுபிடிக்கவே ஆபிரகாம் தனது நம்பிக்கைகளின் குறிக்கோளை எட்டினான். தோப்புகளில் பொய் தேவர்களின் பலிபீடங்கள் நிறுவப்பட்ருந்தன. அடுத்தடுத்த மேடுகளில் மனித பலிகள் கொடுக்கப்பட்டிருந்தன. தெய்வீக வாக்குத்தத்தத்தைப் பற்றிக்கொண்டிருந்தபோதும், துன்பம் நிறைந்த எச்சரிக்கை இல் லாமல் அவன் தனது கூடாரத்தைப் போடவில்லை . பின்னர், கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி, உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். இந்த வாக்குறுதியினால், தெய்வீக சமுகம் தன்னோடு இருக்கிறது என்றும் துன்மார்க்கரின் விருப்பத்துக்கு தான் விட்டுவிடப்படவில்லை என்றும் அவனுடைய விசுவாசம் உறுதிப்படுத்தப்பட்டது. அப்பொழுது அவன் தனக்குத் தரிசன மான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். இன்னும் வழிப்பிரயாணியாக இருந்த அவன், பெத்தேலுக்கு சமீபமான ஒரு இடத்துக்குச் சென்று, மீண்டும் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தை தொழுது கொண்டான்.PPTam 135.1

    தேவனுடைய சிநேகிதனாயிருந்த ஆபிரகாம் நமக்குத் தகுதியான ஒரு உதாரணத்தை நிறுவினான். அவனுடையது ஒரு ஜெபவாழ்க்கை ! எங்கெல்லாம் அவன் கூடாரத்தைப் போட் டானோ, அதற்கு மிக அருகிலே தன் பாளையத்திற்குள் இருக்கும் அனைவரையும் காலை மாலை பலிக்கு அழைக்கிற அவனுடைய பலிபீடமும் நிறுவப்பட்டது. அவனுடைய கூடாரம் பெயர்க்கப் பட்டபோதும் பலிபீடம் அங்கே தங்கியிருந்தது. பின்வந்த வரு டங்களில், திரிந்து கொண்டிருந்த கானானியர்களில் ஆபிரகாமிட மிருந்து போதனைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் அங்கே இருந்தார்கள். அவர்களில் ஒருவர் எப்போதாகிலும் அந்த பலி பீடங்களுக்கருகில் வரும்போது, தனக்கு முன்பு அங்கே யார் இருந் தார்கள் என்பதை அறிந்து, தனது கூடாரத்தைப் போடும் போது பலிபீடத்தையும் செப்பனிட்டு, அங்கே ஜீவனுள்ள தேவனைத் தொழுதுகொள்வான்.PPTam 136.1

    ஆபிரகாம் தென்திசை நோக்கி தன் பிரயாணத்தைத் தொடர்ந் தான். மீண்டும் அவனுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டது. வானங்கள் மழை பொழியவில்லை, சம்பூமியிலிருந்த புற்கள் காய்ந்து போயின; மந்தைகளுக்கு புல்வெளி இல்லாது போய் முழு பாள யத்தையும் பஞ்சம் பயமுறுத்தியது. தேவனுடைய நடத்துதல்களை இப்போது அந்த முற்பிதா கேள்வி கேட்கவில்லையா? கல்தேய சம்பூமிகளின் ஏராளத்தை அவன் ஏக்கத்தோடு திரும்பிப்பார்க்கவில் லையா? துன்பத்தின் மேல் துன்பம் வந்தபோது, ஆபிரகாம் என்ன செய்வான் என்று அனைவரும் அவனை ஆவலோடு கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவனுடைய நம்பிக்கை அசையாதது போலத் தோன்றியவரையிலும் அங்கே நம்பிக்கை இருப்பதாக அவர்கள் உணர்ந்தார்கள். தேவன் அவனுடைய நண்பர் என்பதிலும், அவர் அவனை இன்னமும் நடத்துகிறார் என்பதிலும் அவர்கள் உறுதியாயிருந்தார்கள்.PPTam 136.2

    தேவனுடைய நடத்துதல்களை ஆபிரகாமால் விளக்கிக் கூற முடியவில்லை. தான் எதிர்பார்த்தவைகளை உணர்ந்திராதபோதும், உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன், நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் என்கிற வாக்குத்தத்தத்தை அவன் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தான். ஊக்கமான ஜெபத்தோடு, தனது ஜனத்தையும் மந்தைகளையும் எவ்வாறு பாதுகாப்பது என்று யோசித்தான். ஆனாலும் தேவனுடைய வார்த்தையின் மேலிருக்கும் தனது விசுவாசத்தை அசைக்க சூழ்நிலைகளை அவன் அனுமதிக்க மாட்டான். பஞ்சத்துக்குத் தப்பும்படியாக அவன் எகிப்துக்குப் போனான். அவன் கானானை கைவிடவில்லை, அல்லது, தனது நெருக்கடியான நேரத்தில் தான் விட்டுவந்த அப்பம் தாழ்ச்சியடை யாத கல்தேய நாட்டிற்குத் திரும்பவில்லை. மாறாக, தேவன் தன்னை வைத்த இடத்திற்கு தீவிரமாகத் திரும்பி வரும் எண்ணத் தோடு, வாக்குத்தத்த நாட்டிற்கு வெகு அருகாமையிலிருந்த இடத்தில் தற்காலிக அடைக்கலம் தேடினான்.PPTam 136.3

    ஒப்புக்கொடுத்தல், பொறுமை, விசுவாசம் குறித்த பாடங்களை பின்நாட்களில் துன்பத்தை சகிக்க அழைக்கப்படும் அனை வருக்கும் நன்மை பயப்பதற்கேதுவாக பதிவுகளில் வைக்கப்பட வேண்டிய பாடங்களை ஆபிரகாமுக்கு கொடுக்கவே ஆண்டவர் தமது ஏற்பாட்டில் இந்தச் சோதனையை அவனுக்குக் கொண்டு வந்தார். தேவன் தமது பிள்ளைகளை அவர்கள் அறியாத பாதையில் நடத்திவருகிறார். ஆனாலும் அவர்மேல் நம்பிக்கை வைத் திருக்கிறவர்களை அவர் மறப்பதோ அல்லது புறம்பே தள்ளு வதோ இல்லை. யோபின் மேல் உபத்திரவம் வரும்படி அவர் அனுமதித்தார். ஆனால் அவனை விட்டுவிடவில்லை. அன்பான யோவான் பத்மு தீவிற்கு நாடு கடத்தப்படும் படி அனுமதித்தார். ஆனால் தேவகுமாரன் அங்கு அவனை சந்தித்தார். அவனுடைய தரிசனங்கள் நித்திய மகிமைக் காட்சிகளால் நிறைந்திருந்தது. தங்கள் உறுதியாலும் கீழ்ப்படிதலாலும் அவர்கள் தாமே ஆவிக் குரிய விதத்தில் ஐசுவரியமடையவும், அவர்களுடைய உதாரணம் மற்றவர்களுக்கு பெலத்தின் ஆதாரமாயிருப்பதற்குமே தமது பிள்ளைகளை சோதனைகள் தாக்குவதற்கு தேவன் அனுமதிக்கிறார். நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத் துக்கேதுவான நினைவுகளே. எரே 2911. நம்முடைய விசுவாசத்தை மிக மோசமாக்கி தேவன் நம்மைக் கைவிட்டார் என்று தோன்றச் செய்கிற அதே சோதனைகள் தான், நம்முடைய அனைத்து பாரங்களையும் அவருடைய பாதத்தில் வைத்து, அதற்கு மாற்றாக அவர் தருகிற சமாதானத்தை அனுபவிக்கும்படி நம்மை கிறிஸ்து வுக்கு மிக நெருக்கமாகக் கொண்டுவரவேண்டியவைகள்.PPTam 137.1

    தேவன் எப்போதுமே தமது மக்களை உபத்திரவத்தின் சூளையிலே சோதித்திருக்கிறார். சூளையின் வெப்பத்தில் தான் கிறிஸ்தவ குணமாகியமெய்யான பொன்னிலிருந்துகளிம்பு பிரிக்கப்படுகிறது. இயேசு சோதனையை கவனித்துக்கொண்டிருக்கிறார். அவருடைய அன்பின் கதிர்களை பிரதிபலிக்கும் படியாக, விலையேறப்பெற்ற உலோகத்தைச் சுத்திகரிக்கிறதற்கு என்ன தேவை என்பதை அவர் அறிவார். நெருக்கமான, பரீட்சிக்கும் சோதனைகளில் தான் தேவன் தமது ஊழியக்காரரை ஒழுங்குபடுத்துகிறார். தமது வேலையை முன் கொண்டு செல்வதற்கு உபயோகப்படக்கூடிய வல்லமைகள் சிலரில் இருப்பதை அவர் காண்கிறார். இவர்களை அவர் சோதனைக்குட்படுத்துகிறார். அவர்களுடைய குணங்களைச் சோதித்து, தங்களுடைய சொந்த அறிவுக்கு மறைந்திருந்த குறைகளையும் பெலவீனங்களையும் வெளிப்படுத்தும் நிலைகளில் அவர்களை அவர் கொண்டுவருகிறார். இந்தக் குறைகளை சரி செய்து, அவருடைய வேலையில் தங்களைப்பொருத்திக்கொள்ளும் சந்தர்ப்பங்களை அவர் அவர்களுக்குக் கொடுக்கிறார். அவர்களுடைய சொந்த பெலவீனங்களை அவர்களுக்குக் காட்டி, தம்மீது சாய்ந்துகொள்ள கற்பிக்கிறார். ஏனெனில் அவரே அவர்களுடைய ஒரே உதவியும் பாதுகாவலருமாம். இவ்வாறு அவருடைய நோக் கம் எட்டப்படுகிறது. அவர்கள் கற்பிக்கப்பட்டு, பயிற்றுவிக்கப் பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டு, எதற்காக அவர்களுடைய வல்லமைகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதோ, அந்த பிரம்மாண்டமான நோக்கத்தை நிறைவேற்ற ஆயத்தப்படுத்தப்படுகிறார்கள். செயல்படும்படி தேவன் அவர்களை அழைக்கும் போது, அவர்கள் ஆயத்தமாயிருக்கிறார்கள். பூமியின் மேல் நிறைவேற்றப்பட வேண்டிய வேலையில் பரலோகத் தூதர்கள் அவர்களோடு இணைந்து கொள்ள முடியும்.PPTam 138.1

    எகிப்தில் தங்கியிருந்தபோது, மனித பெலவீனங்களுக்கும் குறைகளுக்கும் தான் அப்பாற்பட்டவனல்ல என்கிற சான்றை ஆபிரகாம் கொடுத்தான். சாராள் தனது மனைவி என்கிற உண் மையை மறைத்ததினால், தெய்வீககவனிப்பின் மேலிருந்த அவநம் பிக்கையையும், அவனுடைய வாழ்க்கையிலே பலவேளைகளின் நேர்மையாக நிரூபிக்கப்பட்டிருந்த உயர்ந்த விசுவாசமும் தைரியமும் குறைவுபட்டிருந்ததையும் அவன் காட்டினான். சாராள் பார்வைக்கு அழகுள்ளவளாயிருந்தாள். எனவே நிறங்குறைந்த எகிப்தியர்கள் அழகான அந்நிய ஸ்திரீயை இச்சித்து, அவளை அடைவதற்காக அவளுடைய கணவனை கொல்லவும் தயங்கமாட் டார்கள் என்பதைக் குறித்து அவன் சந்தேகத்தோடு இருக்கவில்லை. சாராளை தன் சகோதரி என்று காட்டுவதினால் பொய்யைக்குறித்த குற்றவாளியாய் இருக்கமாட்டான். ஏனெனில் அவள் தன் தாயின் குமாரத்தியாக இல்லாவிடினும், தன் தகப்பனுக்கு குமாரத்தியாயிருந்தாள் என்று காரணப்படுத்தினான். ஆனால் அவர்களுக் கிடையே இருந்த மெய்யான உறவை மறைத்தது ஒரு வஞ்சகமே. கடினமான நேர்மையிலிருந்து விலகும் எதுவும் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெறமுடியாது. ஆபிரகாமுடையவிசுவாசக்குறை வினால் சாராள் மாபெரும் ஆபத்தில் வைக்கப்பட்டாள். எகிப்தின் இராஜா அவளுடைய அழகைக் குறித்து கேள்விப்பட்டு, அவ ளைத் தனக்கு மனைவியாக்கிக்கொள்ள தன் அரண்மனைக்கு வர வழைத்தான். ஆனால் ஆண்டவர் தமது மிகுந்த கிருபையினால் அரச வீட்டார்மேல் நியாயத்தீர்ப்புகளை அனுப்பி, சாராளைப் பாதுகாத்தார். இவ்விதமாக அந்த அரசன் அதிலிருந்த உண்மையை அறிந்து, தன் முன் காட்டப்பட்ட ஏமாற்றினால் கோபமடைந்து, நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன் மனைவி என்று நீ எனக்கு அறிவியாமற்போனதென்ன? இவளை உன் சகோதரி என்று நீ சொல்லவேண்டுவது என்ன? இவளை நான் எனக்கு மனைவியாகக் கொண்டிருப்பேனே, இதோ உன் மனைவி, இவளை அழைத்துக்கொண்டு போ என்று ஆபிரகாமைக் கடிந்து கொண்டு, அவனுடைய மனைவியை அவனிடம் திரும்ப அனுப் பினான்.PPTam 138.2

    ஆபிரகாம் இராஜாவினால் மிகுந்த தயை பெற்றான். இப் போது பார்வோனே அவனுக்காகிலும் அவன் கூட்டத்திற்காகிலும் எந்த பாதிப்பையும் அனுமதிக்காமல், தனது எல்லைக்கு வெளியே அவனை பத்திரமாக விட்டுவர காவலாளர்களுக்குக் கட்டளையிட்டான். இந்த நேரத்திலே, எகிப்தியர்கள் வெளிநாட்டு மேய்ப் பர்களுடன் உண்டு குடிப்பது போன்ற எவ்வித பழக்கத்தையும் உறவையும் ஏற்படுத்துகிறதை தடை செய்யும் சட்டங்கள் ஏற்படுத் தப்பட்டன. ஆபிரகாமை பார்வோன் நீக்கியது, மிகுந்த தயவும் தாராளமுமானதாயிருந்தது. ஆனால் அவன் தங்கியிருப்பதை அனுமதிக்க தைரியமற்றவனாக, எகிப்தை விட்டுச்செல்லும்படி கேட்டுக்கொண்டான். அவன் அறியாமலேயே அவனுக்கு மிக மோசமான காயத்தை ஏற்படுத்த விருந்தான். ஆனால் தேவன் தலையிட்டு, அவ்வளவு பெரிய பாவம் செய்வதிலிருந்து அரசனை காத்தார். இந்த அந்நியனில் பரலோகத்தின் தேவன்கனப்படுத்துகிற ஒருவனை பார்வோன் கண்டு, சந்தேகத்திற்கிடமின்றி தெய்வீக தயவில் இருக்கிற ஒருவனை தனது இராஜ்யத்தில் வைத்திருக்கப் பயந்தான். ஆபிரகாம் எகிப்தில் இருப்பானானால் வளருகிற அவ னுடைய செல்வமும் புகழும் எகிப்தியர்களின் பொறாமையையும் இச்சையையும் தூண்டிவிட்டு, அவனுக்கு ஏதாகிலும் காயமேற்படுத்திவிடும். அதற்கு அரசனே பொறுப்பாளியாயிருப்பான். அது மீண்டும் அரச குடும்பத்திற்குள் நிரயாயத்தீர்ப்புகளைக் கொண்டு வரும்.PPTam 139.1

    பார்வோனுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிப்பு அஞ்ஞானி களோடு பின்நாட்களில் இடைப்படுவதில் ஆபிரகாமுக்கு ஒரு பாது காப்பாக இருந்தது. அது மறைக்கக்கூடாததாக, ஆபிரகாம் ஆரா தித்து வந்த தேவன் தமது ஊழியக்காரனை பாதுகாப்பார் என்பதும், அவனுக்கு இழைக்கப்படும் தீங்கு பழிவாங்கப்படும் என்பதும் காணப்பட்டது. பரலோக தேவனுடைய பிள்ளைகளில் ஒருவருக்கு தீமை செய்வது ஆபத்தானது ; தெரிந்துகொள்ளப்பட்டவர்களைக் குறித்தும் பேசும்போது, அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களைக் கடிந்து கொண்டு நான் அபிஷேகம் பண்ணினவர்களை நீங்கள் தொடா மலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார் (சங் 105:14, 15) என்று ஆபிரகாமுடைய அனு பவத்தையே சங்கீதக்காரன் குறிப்பிடுகிறான்.PPTam 140.1

    எகிப்தில் ஆபிரகாமின் அனுபவத்திற்கும் நூற்றாண்டுகள் கழித்து அவனுடைய வம்சத்தாரின் அனுபவத்திற்குமிடையே ஆர்வமூட்டும் ஒற்றுமை இருக்கிறது. இருவரும் பஞ்சத்தினிமித்தம் எகிப்துக்குப் போனார்கள். அங்கே தங்கினார்கள். அவர்கள் நிமித் தம் காட்டப்பட்ட தெய்வீக நியாயத்தீர்ப்புகளினால் எகிப்தியர்மேல் அவர்களைக் குறித்த பயம் விழுந்தது. அஞ்ஞானிகளின் பரிசு களினால் செல்வந்தர்களாகி, மிகுந்த பொருட்களோடு அங்கிருந்து வெளியேறினார்கள்.PPTam 140.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents