Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    4 - மீட்பின் திட்டம்

    மனிதனின் விழுகை, பரலோகம் முழுவதையும் வருத்தத்தால் நிரப்பியது. தேவன் உண்டாக்கின உலகம், பாவத்தின் சாபத்தால் வியாதிப்பட்டு, துயரத்துக்கும் சாவிற்குமென்று விடப்பட்டவர் களால் ஆக்கிரமிக்கப்பட்டது. பிரமாணங்களை மீறியவர்களுக்கு தப்பிக்க வழியே இல்லாதது போலத் தோன்றியது. தூதர்கள் தங்கள் துதியின் கீதங்களை நிறுத்தினார்கள். பரலோக பிராகாரம் முழுவ திலும் பாவம் கொண்டுவந்த அறிவைக்குறித்த புலம்பல் இருந்தது.PPTam 51.1

    தேவனுடைய குமாரன் பரலோகத்தில் மகிமையான சேனா திபதி, விழுந்து போன இனத்தின் மேல் கொண்ட பரிதாபத்தினால் தொடப்பட்டார். தொலைந்துபோன உலகத்தின் துக்கம் அவர் முன்பாக எழுந்தபோது, நித்தியமான இரக்கத்தினால் அவருடைய இருதயம் அசைக்கப்பட்டது. எனவே தெய்வீக அன்பு, மனிதன் மீட்கப்படும் படியான ஒரு திட்டத்தை உருவாக்கியது. மீறப்பட்ட பிரமாணம் பாவியின் உயிரை கோரியது. பிரபஞ்சத்திலும் மனி தனுக்காக நின்று அதனுடைய கோரிக்கையை திருப்திப்படுத்தக் கூடிய ஒரே ஒருவர் இருந்தார். தெய்வீகப் பிரமாணம் தேவனைப் போலவே பரிசுத்தமானதாகையால், தேவனுக்கு இணையான ஒருவர்தான், அதை மீறினதற்கான பரிகாரத்தைச் செய்ய முடியும். கிறிஸ்து மாத்திரமே விழுந்து போன மனிதனை பிரமாணத்தின் சாபத்திலிருந்து மீட்டெடுத்து மீண்டும் அவனை பரலோக இசை விற்குள்ளாகக் கொண்டுவர முடியும். பிதாவையும் குமாரனையும் கட்டாயமாக பிரிக்குமளவு பரிசுத்த தேவனுக்கு அருவருப்பாயிருந்த பாவத்தின் குற்றத்தையும் அவமானத்தையும் கிறிஸ்து தம்மீது எடுத்துக்கொள்ளுவார். கேடடைந்த இனத்தை மீட்டெடுக்க கிறிஸ்து துயரத்தின் ஆழங்களுக்குச் செல்லுவார்.PPTam 51.2

    வார்த்தைகளால் வருணிக்கக்கூடாத ஊக்கமான ஆர்வத்தோடு இதன் முடிவிற்காக பரலோக சேனை காத்திருந்தபோது, பிதாவின் முன்பாக பாவியின் சார்பாக அவர் மன்றாடினார். விழுந்து போன மனிதர்களுக்காக நடந்த மறைவான சம்பாஷணையான சமாதானத் தின் ஆலோசனை (சகரியா 6:13), வெகு நேரம் தொடர்ந்தது. பூமி உருவாக்கப்படுமுன்பாகவே இரட்சிப்பின் திட்டம் வகுக்கப்பட்டது. கிறிஸ்து உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி (வெளி 13:8) யாக இருக்கிறார்; என்றபோதும், குற்றமுள்ள இனத் திற்காக மரிக்கும்படி தமது குமாரனை ஒப்புக்கொடுப்பது பிரபஞ்சத்தின் அதிபதிக்கே ஒரு போராட்டமாக இருந்தது. ஆனாலும் தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும் படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந் தார் (யோவான் 3:16). இந்த மீட்பின் இரகசியம் ! தன்னை நேசிக்காத ஒரு உலகத்தின் மேலிருந்த தேவனுடைய அன்பு! புத்திக்கு எட்டாத இந்த அன்பின் ஆழத்தை எவரால் அறிந்துகொள்ளக்கூடும்? முடி வில்லாத யுகங்களாக, புரிந்து கொள்ளக்கூடாத அந்த அன்பைப் புரிந்து கொள்ள ஆசிக்கிற அழிவில்லாத மனங்கள் வியந்து வணங் குவார்கள்.PPTam 52.1

    உலகத்தைத் தம்மோடு ஒப்புரவாக்குவதில் (2கொரி. 5:19) தேவன் கிறிஸ்துவில் வெளிப்பட வேண்டும். பாவத்தினால் மனி தனின் தரம் தாழ்ந்து போனதால், அவனால் தானாகவே தூய்மையும் நன்மையும் கொண்டவரோடு இணங்குவது கூடாத காரியம். ஆனால் பிரமாணத்தின் ஆக்கினையிலிருந்து மனிதனை மீட்டெ டுத்த பின்பு, மனித முயற்சிகளோடு இணைந்து செயல்படகிறிஸ்து வால் அவனுக்குத் தெய்வீக வல்லமையை வழங்கமுடியும். இவ் வாறாக, தேவனிடம் மனந்திரும்புவதன் மூலமாகவும், கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலமாகவும், விழுந்து போன ஆதாமின் பிள் ளைகள் மீண்டும் ஒருமுறை தேவனுடைய பிள்ளைகள் (1யோவான் 3:2) ஆகலாம்.PPTam 52.2

    மனிதனுடைய இரட்சிப்பை உறுதிப்படுத்தும் திட்டம் அதன் நித்தியமான தியாகத்தினால் பரலோகம் முழுவதையும் ஈடுபடுத்தியது. கிறிஸ்து மீட்பின் திட்டத்தை தூதர்கள் முன் திறந்து காட்டிய போது, அவர்களால் களிகூர முடியவில்லை . மனிதனின் இரட்சிப்புதங்களுடைய அன்பான அதிபதிக்கு சொல்லவொண்ணா ஆபத்தைக் கொண்டு வரும் என்கிறதை அவர்கள் கண்டனர். தாம் எவ்வாறு பரலோகத்தின் தூய்மை மற்றும் சாமாதானத்திலிருந்தும், அதன் மகிழ்ச்சி மகிமை மற்றும் நித்திய வாழ்விலிருந்தும் கீழிறங்கி, தாழ்ந்து போன பூமியின் துக்கத்தையும் அவமானத்தையும் மரணத்தையும் சகிக்கும்படி அதோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்று அவர் அவர்களுக்குக் கூறின் போது, துயரத்தோடும் வியப்போடும் அவர்கள் கவனித்தனர். அவர் பாவிக்கும், பாவத்தின் தண்டனைக்கும் இடையே நிற்கவேண்டியதிருந்தது. என்றாலும் சிலரே அவரை தேவகுமாரனாக ஏற்றுக்கொள்ளுவார்கள். பரலோகத்தின் மகத்துவமானவர் என்கிற தமது தகுதியை விட்டுவிட்டு, பூமியின் மேல் காணப்பட்டு, மனிதனாகத் தம்மைத் தாழ்த்தி, மனிதன் தாங்கவேண்டியதிருக்கிற துக்கங்கள் சே ாதனைகளோடு தமது சொந்த அனுபவத்தினாலே அவர் அறிமுகமாவார். சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராகும்படி (எபி2:18) இவையெல்லாம் தேவையாயிருக்கும். ஒரு போதகராக அவருடைய ஊழியம் முடிவடையும் போது, துன்மார்க்கரின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, செய்யும்படி சாத்தானால் ஏவப்படக்கூடிய ஒவ்வொரு அவமானத்திற்கும் உபத்திரவத்திற்கும் உட்படுத்தப்படுவார். மிகக் குற்றமுள்ள பாவி யைப்போல் பரலோகத்திற்கும் பூமிக்குமிடையே உயர்த்தப்பட்டு, மிகக் கொடூரமான மரணத்தை அவர் அடைய வேண்டும். தூதர்கள், கண்களால் சகிக்கக்கூடாதபடியால் தங்கள் முகங்களை அந்தக் கட்சியிலிருந்து மூடிக்கொள்ளுகிறதற்கேதுவான ஒரு வேதனையை அவர் அநேக மணிநேரங்கள் கடந்து வரவேண்டும். மீறுதலின் குற்றம் - முழு உலகத்தின் பாவப்பாரம் - தம்மேல் தங்கும் போது, பிதாவின் முகம் மறைக்கப்பட அவர் ஆத்தும் வியாகுலத்தை அடைய வேண்டும்.PPTam 53.1

    தூதர்கள் தங்களுடைய அதிபதியின் முன் விழுந்து மனிதனுக் காக தங்களை தியாகம் செய்ய அர்ப்பணித்தார்கள். ஆனால் தூதர்களின் ஜீவன் பாவக்கடனை செலுத்தக்கூடாது. மனிதனை சிருஷ்டித்தவர்தான் அவனை மீட்கும் வல்லமையைப் பெற்றிருந் தார். என்றாலும் மீட்பின் திட்டத்தில் செயல்பட தூதர்களுக்கும் ஒரு பங்கு உண்டு. கிறிஸ்து மரணத்தை ருசிபார்க்கும்படி தேவதூதரிலும் சற்று சிறியவராக்கப்படுவார் (எபி 2:9). அவர் தம்மீது மனித இயல்பை எடுத்துக்கொள்ளும் போது, அவருடைய பலம் அவர் களுடைய பலத்துக்கு இணையாக இருக்காது. அப்போது அவரைப் பலப்படுத்தவும், அவருடைய பாடுகளில் அவரை ஆற்றவும் அவர்கள் அவருக்கு ஊழியம் செய்யவேண்டும். இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களுக்கு ஊழியஞ்செய்ய அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாகவும் (எபி 1:14), அவர்கள் இருக்க வேண்டும். கிருபைக்கு உட்பட்டவர்களை தீய தூதர்களின் வல்லமையி லிருந்தும், அவர்களைச் சுற்றிலும் சாத்தானால் நிலையாக வீசப் படும் இருட்டிலிருந்தும் பாதுகாக்க வேண்டும்.PPTam 53.2

    தூதர்கள் தங்களுடைய ஆண்டவரின் வேதனையையும் சிறு மையையும் காணும்போது, துக்கத்தாலும் கோபத்தாலும் நிறைந்து கொலை செய்கிறவர்களிடமிருந்து அவரை மீட்க விரும்புவார்கள். ஆனால் தாங்கள் காணவேண்டியிருக்கிற எதையும் தடுப்பதற்காக அவர்கள் குறுக்கே வரக்கூடாது. கிறிஸ்து துன்மார்க்கருடைய வெறுப்பையும் கொடுமையையும் அனுபவிக்க வேண்டுமென்பது மீட்பின் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மனிதனின் மீட்பராக ஆனபோது, இவையெல்லாவற்றிற்கும் அவர் சம்மதித்தார்.PPTam 54.1

    தமது மரணத்தினாலே அநேகரைக்காப்பாற்றி மரணத்தின் மேல் அதிகாரம் கொண்டிருந்தவனை அழிப்பேன் என்று கிறிஸ்து தூதர் களுக்கு உறுதி கொடுத்தார். மீறுதலினால் மனிதன் இழந்து போன இராஜ்யத்தை மீட்பார். மீட்கப்பட்டவர்கள் அவரோடுகூட அதை சுதந்தரித்து, என்றென்றும் அங்கே வசிப்பார்கள். பாவமும் பாவி களும் பரலோகத்திலும் பூமியிலும் இருக்கும் சமாதானத்தை ஒரு போதும் தொந்தரவு செய்யக்கூடாதபடி அழிக்கப்படுவார்கள். அவருடைய பிதா ஏற்றுக்கொண்ட திட்டத்திற்கு இசைவாயிருக் கும்படியும், அவரது மரணத்தினாலே விழுந்து போன மனிதன் தேவனோடு ஒப்புரவாக்கப்பட முடியும் என்பதால் மகிழ்ந்திருக் கும்படியும் அவர் தூதர் சேனையை அழைத்தார்.PPTam 54.2

    அப்போது மகிழ்ச்சி, விவரிக்க முடியாத மகிழ்ச்சி பரலோ கத்தை நிரப்பியது. மீட்கப்படப்போகிற ஒரு உலகத்தின் மகிமையும் பாக்கியமும் இரட்சிப்பின் அதிபதியின் தியாகத்தையும் வியாகுலத் தையும் விட பெரிதாகியது. உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகி மையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டா வதாக (லூக்கா 2:14) என்று பெத்லகேமின்மேல் தொனிக்கவிருந்த அந்தப் பாடலின் முதல் அடி வானுலக பிராகாரங்களில் எதிரொலித்தது. புது சிருஷ்டிப்பைக் குறித்து மகிழ்ந்ததைக்காட்டிலும் ஒரு ஆழமான ஆனந்தத்தில் விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்கள் (யோபு 38:7).PPTam 54.3

    உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் (ஆதி3:15) என்று ஆண்டவர் அறிவித்தார். தோட்டத்தில் சாத்தான் மேல் சொல்லப்பட்ட தீர்ப்பின் மூலமாக மனி தனுக்கு மீட்பின் முதல் அறிவிப்பு கொடுக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு நம்முடைய முதல் பெற்றோருடைய செவிகளில் பட அறிவிக்கப் பட்ட இந்தத் தீர்ப்பு அவர்களுக்கு ஒரு வாக்குத்தத்தமாக இருந்தது. மனிதனுக்கும் சாத்தானுக்கும் இடையே யுத்தத்தை முன்னறிவித்த அந்த நேரத்திலேதானே, மாபெரும் எதிராளியின் வல்லமை முடிவிலே முறிக்கப்படும் என்றும் அது அறிவித்தது. ஆதாமும் ஏவாளும் நீதியுள்ள நியாயாதிபதியின் முன்பு குற்றவாளிகளாக, மீறுதல் சம்பாதித்திருந்த தீர்ப்புக்காகக் காத்திருந்தார்கள். ஆனால் அவர்களுடைய பங்காக இருக்கவேண்டியதிருந்த உழைப்பும் வருத்தமும் நிறைந்த வாழ்க்கையைக் குறித்தாவது அல்லது அவர்கள் மண்ணுக்குத் திரும்ப வேண்டும் என்கிற கட்டளையைக் குறித் தாவது கேட்பதற்கு முன்பாக, தங்களுக்கு தவறாமல் நம்பிக்கை அளிக்கிற வார்த்தைகளை அவர்கள் கவனித்தார்கள். பலமுள்ள சத்துருவின்வல்லமையினால் அவர்கள் துன்பப்பட வேண்டியதிருந் தாலும் இறுதி வெற்றியை அவர்கள் எதிர்பார்த்திருக்க முடியும்.PPTam 55.1

    தனக்கும் ஸ்திரீக்கும் தன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை இருக்கும் என்று சாத்தான் கேட்டபோது, மனித இயல்பை தரந்தாழ்த்தும் தன் வேலையில் இடையூறு இருக்கும் என்றும், ஏதாவது வகையில் அவனுடைய வல்லமையை எதிர்க்க மனிதன் தகுதிப்படுத்தப்படுவான் என்றும் அறிந்தான். என்ற போதும் இரட்சிப்பின் திட்டம் இன்னும் முழுமையாக விளக்கப்பட்டபோது, மனிதனை விழச் செய்ததால் தேவகுமாரனையும் அவருடைய உன்னத இடத்திலிருந்து கீழே இழுக்க முடியும் என்று அவன் தனது தூதர்களோடு களிகூர்ந்தான். இதுவரையிலும் தனது திட்டங்கள் பூமியின் மேல் வெற்றிகரமாக இருந்திருக்கிறது என்றும், கிறிஸ்து தம்மீது மனித இயல்பை எடுக்கும் போது, அவரையும் மேற்கொள்ளலாம் என்றும், இவ்வாறு விழுந்து போன மனிதனின் மீட்பு தடுக்கப்படலாம் என்றும் அவன் அறிவித்தான்.PPTam 55.2

    அவர்களுடைய இரட்சிப்பிற்காக வகுக்கப்பட்ட திட்டத்தை பரலோகத் தூதர்கள் நம்முடைய முதல் பெற்றோருக்கு அதிக முழுமையாகக் காண்பித்தார்கள். அவர்களுடைய பெரிய பாவம் ஒருபுறம் இருந்தபோதும், சாத்தானுடைய கட்டுப்பாட்டிற்குள் அவர்கள் விட்டுவிடப்படமாட்டார்கள் என்று ஆதாமுக்கும் அவ னுடைய துணைவிக்கும் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அவர் களுடைய மீறுதலுக்கான பாவ நிவாரணத்தை தம்முடைய சொந்த வாழ்க்கையினால் பரிகரிக்க தேவகுமாரன் முன் வந்திருக்கிறார்; அவர்களுக்கு ஒரு கிருபையின் காலம் கொடுக்கப்பட்டிருக்கிறது; மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலமாக அவர்கள் மீண்டும் தேவனுக்கு பிள்ளைகளாகலாம்.PPTam 55.3

    மீறுதல் கோரிய பலி, ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தேவனுடைய பிரமாணங்களின் புனிதத்தை வெளிக்காட்டியது. பாவத்தின் குற்றத்தையும் அதன் பயங்கரமான விளைவுகளையும் இதற்கு முன் கண்டிராதவிதமாக அவர்கள் கண்டார்கள். தங்களுடைய வருத்தத் திலும் வேதனையிலும், தங்களுடைய அனைத்து மகிழ்ச்சிக்கும் ஊற்றாயிருந்த அன்பானவர்மேல் தண்டனை விழாமல், தங்கள் மேலும் தங்கள் சந்ததியின் மேலும் அது விழட்டும் என்று கெஞ்சி னார்கள்.PPTam 56.1

    பரலோக ஆட்சியிலும் பூமியிலுங்கூட யெகோவாவின் பிரமா ணங்களே அஸ்திபாரமாக இருக்கிறதால், ஒரு தூதனின் ஜீவன்கூட அதை மீறினதற்கான பலியாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. விழுந்து போன நிலையில் மனிதனைச் சந்திக்க அதன் கட்டளைகளில் ஒன்று கூட நீக் கப்படவோ, அல்லது மாற்றப்படவோ முடியாது. ஆனால் அவர்களை சிருஷ்டித்த தேவகுமாரன் அவனுக்காக பரிகாரம் செய்ய முடியும். ஆதாமின் மீறுதல் அவலத்தையும் மரணத்தையும் கொண்டு வந்தது போல, கிறிஸ்துவின் தியாகம் ஜீவனையும் அழியாமையையும் கொண்டுவரும்.PPTam 56.2

    மனிதன் மாத்திரமல்ல, பூமியும் பாவத்தினால் பொல்லாங்கனுடைய வல்லமையின் கீழ் வந்தது. எனவே அதுவும் மீட்பின் திட்டத்தினால் மீண்டும் நிறுத்தப்பட வேண்டும். சிருஷ்டிப்பில் ஆதாம் பூமியின்மேல் அதிகாரியாக அமர்த்தப்பட்டான். ஆனால் சோதனையில் விழுந்ததினிமித்தம், அவன் சாத்தானின் வல்லமையின்கீழ் கொண்டுவரப்பட்டான். எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே (2பேதுரு 2:19). மனிதன் சாத்தானுடைய கைதியானபோது, அவன் கொண்டிருந்த ஆளுகை அவனை வெற்றி கொண்டவனிடம் கடந்து போனது. இவ்வாறாக சாத்தான் உலகத்தின் தேவனானான் (2 கொரி 4:4). ஆதாமுக்கு முதலில் கொடுக்கப்பட்டிருந்த பூமியின் மேலிருந்த அதிகாரத்தை அவன் பறித்துக்கொண்டான். ஆனால் கிறிஸ்து, தமது தியாகத்தின் மூலமாக பாவத்தின் அபராதத்தைச் செலுத்தி, மனிதனை மாத்திரமல்ல, அவன் இழந்து போன அதி காரத்தையும் மீட்டெடுக்கிறார். முதல் ஆதாமினால் தொலைக்கப் பட்ட அனைத்தும் இரண்டாம் ஆதாமினால் மீண்டும் திருப்பப்படும். மந்தையின் துருக்கமே, சீயோன் குமாரத்தியின் அரணே, முந்தின் ஆளுகை உன்னிடத்தில் வரும் (மீகா 4:8) என்று தீர்க்கதரிசி கூறுகிறான். அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகி மைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் (எபே 1:14) என்கிறதை அப்போஸ்தலனாகிய பவுல் சுட்டிக்காட்டுகிறார். பரிசுத்தமான மகிழ்ச்சியான குடிகளின் இல்லமாக இருக்கும்படி தேவன் பூமியை சிருஷ்டித்தார். பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின் தேவனாகிய கர்த்தர் (ஏசாயா 4518). தேவனுடைய வல் லமையினால் புதுப்பிக்கப்பட்டு பாவத்திலிருந்தும் துன்பத்திலிருந் தும் விடுவிக்கப்படும் போது, அந்த நோக்கம் நிறைவேறும். இப் பூமி மீட்கப்பட்டவர்களின் நித்திய இல்லமாக மாறும். நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள். இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும். சங்கீதம் 37:29, வெளி. 22.3PPTam 56.3

    ஆதாம் தன் குற்றமின்மையில் தன்னை உண்டாக்கினவரோ டிருந்த திறந்த உறவில் மகிழ்ந்திருந்தான். ஆனால் பாவம் தேவ னுக்கும் மனிதனுக்குமிடையே பிரிவினையைக் கொண்டுவந்தது. கிறிஸ்துவின் பரிகாரம் மாத்திரமே இந்தப் பிளவில் நின்று பரலோ கத்துக்கும் பூமிக்கும் இடையே பாக்கியமான அல்லது இரட்சிப்பின் தொடர்பை உண்டு பண்ணக்கூடும். மனிதன் இன்னமும் தன் சிருஷ் டிகரின் நேரடியான தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறான். ஆனால் தேவன் கிறிஸ்துவின் மூலமாகவும் தூதர்களின் மூலமா கவும் அவனோடு தொடர்பு கொள்ளுவார்.PPTam 57.1

    ஏதேனில் தெய்வீக நியாயத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து ஜலப்பிரளயம் வரைக்கும், அதன்பின் தேவகுமாரனுடைய முதல் வருகை வரைக்குமான மனித இனத்தின் சரித்திரத்திலிருந்த முக்கியமான சம்பவங்கள் ஆதாமுக்கு வெளிப்படுத்தப்பட்டது. உலகம் முழுவதையும் இரட்சிக்க கிறிஸ்துவின் தியாகம் போதுமான தாயிருந்தபோதும், மனம் வருந்தி கீழ்ப்படிவதைக் காட்டிலும் பாவ வாழ்க்கையையே அநேகர் தெரிந்துகொள்ளுவார்களென்பது அவனுக்குக் காண்பிக்கப்பட்டது. அடுத்தடுத்த தலைமுறைகளில் குற்றங்கள் அதிகரிக்கும். பாவத்தின் சாபம் மனித இனத்தின் மேலும் மிருகங்கள் மேலும் பூமியின் மேலும் அதிக பாரமாகத் தங் கும். மனிதனுடைய சொந்த பாவ வாழ்க்கையினால் அவனுடைய நாட்கள் குறைக்கப்படும். இந்த உலகம் அனைத்து விதமான துன்பங்களாலும் நிரம்பும் வரையிலும் அவன் தனது சரீர வளர்ச்சியிலும் தாங்கும் தன்மையிலும் சன்மார்க்க அறிவுசார்ந்த வல்லமை களிலும் சீரழிந்து கொண்டே வருவான். உணவிலும் உணர்ச்சியிலும் திளைப்பதினால் மனிதன் இரட்சிப்பின் திட்டத்தினுடைய மா பெரும் உண்மைகளை போற்றும் தகுதியற்றவனாகிவிடுவான். என்றாலும், எதற்காக கிறிஸ்து பரலோகத்தைத் துறந்தாரோ, அந்த நோக்கத்தில் உண்மையாயிருந்து, மனிதனின் மேல் தொடர்ந்து விருப்பம் காண்பித்து, அவர்கள் தங்களுடைய பெலவீனங்களையும் குறைகளையும் அவரில் மறைத்துக்கொள்ளும்படி இன்னும் அழைப்பார். விசுவாசத்தோடு அவரிடம் வருகிற அனைவருடைய தேவைகளையும் அவர் வழங்குவார். நிலவுகிற அக்கிரமத்திற்கு மத்தியிலும் கறைபடாதவர்களாக, தேவனைக்குறித்த அறிவைப் பாதுகாக்கும் சிலர் இருப்பார்கள்.PPTam 57.2

    மனிதனுடைய பாவத்தைக் குறித்த நிலையான நினைப் பூட்டுதலாகவும், அதைக்குறித்த மனவருத்தத்தின் அடையாளமாகவும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிற மீட்பரின் மேலிருக்கும் விசுவாச அறிக்கையாகவும் பலியின் காணிக்கைகள் தேவனால் அவனுக்கு நியமிக்கப்பட்டது. பாவமே மரணத்தைக் கொண்டுவந்தது என்கிற பவித்திரமான உண்மையை விழுந்து போன மனிதனில் பதிக்கும் நோக்கத்தை அவைகள் கொண்டிருந்தன. முதலில் செலுத் தப்பட்ட பலி ஆதாமிற்கு மிக அதிக வேதனையைக் கொடுத்த சடங்காக இருந்தது. தேவன் மாத்திரமே கொடுக்கக்கூடிய உயிரை எடுக்கும்படியாக அவன் கைகள் உயர்த்தப்படவேண்டும்PPTam 58.1

    அதுதான் அவன் முதல் முறையாக கண்ட மரணம். அவன் தேவனுக்கு கீழ்ப்படிந்து இருந்திருந்தால் மனிதனோ அல்லது மிருகமோ மரித்திருக்காது என்று அவன் அறிந்திருந்தான். குற்ற மில்லாத உயிரைக் கொன்ற போது, அவனுடைய பாவம் கறையில் லாத தேவ ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை சிந்த வேண்டியதிருக்கும் என்கிறதை நினைத்து நடுங்கினான். இந்தக் காட்சி, தேவனுடைய நேசக்குமாரனுடைய மரணம் மாத்திரமே ஈடுகட்டக்கூடிய அவ னுடைய மாபெரும் மீறதலைக்குறித்த ஆழமான மிகத் தெளிவான உணர்வை அவனுக்குக் கொடுத்தது. குற்றவாளியை இரட்சிக்கும் படியாக இத்தனை பெரிய விலைக்கிரயத்தை கொடுக்கக்கூடிய முடிவில்லாத நற்குணத்தைக் கண்டு வியந்தான். இருண்ட பயங்கரமான எதிர்காலத்தை ஒரு நம்பிக்கையின் நட்சத்திரம் ஒளிப் படுத்தி, அதனுடைய அழிவிலிருந்து அதை விடுவித்தது.PPTam 58.2

    மனிதனுடைய மீட்பைக்காட்டிலும் இன்னும் அகலமான ஆழமான நோக்கத்தை மீட்பின் திட்டம் கொண்டிருந்தது. இதற்காக மாத்திரம் கிறிஸ்து பூமிக்கு வரவில்லை . இந்தச் சிறிய உலகவாசிகள் தேவனுடைய பிரமாணத்தை கனப்படுத்தவேண்டிய பிரகாரம் கனப்படுத்தவேண்டும் என்பதற்காக மாத்திரமல்ல, தேவனுடைய குணத்தை பிரபஞ்சத்தின் முன் நிலைநிறுத்தவும் அவர் வந்தார். இப்பொழுதே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப் பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத்தள்ளப்படுவான். நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும் போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்ளுவேன் (யோவான் 12.31 32) என்று தமது சிலுவை மரணத்திற்கு சற்றுமுன் இரட்சகர் கூறியபோது, தமது மாபெரும் தியாகத்தின் இந்த விளைவையும், மற்ற உலகங்களின் அறிவுஜீவிகள் மேலும் மனிதன் மேலும் இது ஏற்படுத்தவிருக் கும் பாதிப்பையும் அவர் எதிர்நோக்கியிருந்தார். மனிதனுடைய இரட்சிப்பிற்காக மரிக்கும் கிறிஸ்துவின் செயல், மனிதனுக்குப் பர லோகத்தை கொடுப்பது மாத்திரமல்லாது, பிரபஞ்சத்தின் முன்பும், சாத்தானுடைய மீறுதலை சந்தித்ததில் தேவனும் அவருடைய குமாரனும் நீதியுள்ளவர்கள் என்றும் நிரூபிக்கும். இது தேவனுடைய பிரமாணத்தின் அழியாத்தன்மையை நிலைநிறுத்தி, பாவத்தின் இயல்பையும் அதன் விளைவுகளையும் வெளிப்படுத்தும்.PPTam 59.1

    ஆரம்பத்திலிருந்தே மாபெரும் போராட்டம் தேவனுடைய பிரமாணங்களின் மேலேயே இருந்தது. தேவன் அநீதியுள்ள வரென்றும், அவருடைய பிரமாணம் குறையானது என்றும், பிர பஞ்சத்தின் நன்மைக்காக அது மாற்றப்பட வேண்டும் என்றும் நிரூ பிக்க சாத்தான் வகை தேடினான். பிரமாணத்தைத் தாக்குவதினால், அதை உண்டாக்கினவரின் அதிகாரத்தைக் கவிழ்ப்பதை அவன் குறிவைத்தான். இந்தப் போராட்டத்தில் தெய்வீகப் பிரமாணங்கள் குறைவுள்ளவையா, மாற்றப்படவேண்டியவையா அல்லது பூரண மானதா, மாறாததா என்பது காண்பிக்கப்படவேண்டும்.PPTam 59.2

    பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டபோது, இந்த பூமியைத் தனது இராஜ்யமாக்க சாத்தான் தீர்மானங்கொண்டான். ஆதாமையும் ஏவாளையும் சோதித்து வெற்றிகொண்ட போது அவர்கள் தங்களுடைய அதிபதியாக என்னைத் தெரிந்து கொண்டார்கள் என்று சொல்லி, இந்த உலகத்தை சொந்தமாக்கிக்கொண்டதாக அவன் நினைத்தான். பாவிக்கு மன்னிப்பை அருளுவது கூடாதகாரியம் என்றும், விழுந்து போன இனம் தனக்குச் சொந்தமானது என்றும், இந்த உலகம் தனது தென்றும் உரிமை கோரினான். ஆனால் தேவன் தம்முடைய சொந்த நேசக்குமாரனை தமக்கு இணையானவரை மீறுதலின் தண்டனையை சுமக்கும் படியாகக் கொடுத்தார். இவ் வாறாக, அவர்கள் அவருடைய தயவில் நிலைநிறுத்தப்படவும், ஏதேன் தோட்டத்திற்குள் மீண்டும் கொண்டுவரப்படவும் ஒரு வழியை உண்டாக்கினார். மனிதனை மீட்டு, சாத்தானின் பிடியிலிருந்து உலகத்தைக் காப்பாற்ற கிறிஸ்து தலையிட்டார். பர லோகத்தில் துவங்கின் மாபெரும் போராட்டம், சாத்தான் தனது தென்று உரிமை பாராட்டிய அதே உலகத்தில் அதே களத்தில் தீர் மானிக்கப்பட வேண்டும்.PPTam 59.3

    விழுந்து போன மனிதனை இரட்சிக்க கிறிஸ்து தம்மைத் தாழ்த்துவார் என்பது முழு பிரபஞ்சத்திற்கும் வியப்பாக இருந்தது. நட்சத்திரத்திலிருந்து நட்சத்திரத்திற்கும், உலகத்திலிருந்து உலகத்திற்கும் சென்று, அனைத்தையும் மேற்பார்வையிட்டு, தமது ஏற்பாட்டினால், தமது பரந்த சிருஷ்டிப்பின் ஒவ்வொரு வாசியின் தேவைகளையும் வழங்கிவரும் அவர் - தமது மகிமையைத் துறந்து மனித இயல்பை தம்மீது எடுத்துக்கொள்ள இறங்குவது, பாவ மில்லாத மற்ற உலகவாசிகள் புரிந்துகொள்ள வாஞ்சித்த இரகசிய மாக இருந்தது. கிறிஸ்து மனித உருவில் நம்முடைய உலகத்திற்கு வந்தபோது, முன்னணையிலிருந்து கல்வாரி வரையிலான இரத்தக் கறை படிந்த பாதையில் அவர் எடுத்துவைத்த ஒவ்வொரு அடியிலும் அவரைப் பின்தொடர் அனைவரும் ஊக்கமான ஆர்வத்தோடு இருந்தனர். அவர் அடைந்த அவமானத்தையும் நிந்தையையும் பர லோகம் குறித்து வைத்தது. அது சாத்தானுடைய தூண்டுதல் என் பதையும் அறிந்திருந்தது. எதிர்முகவர்கள் முன்வந்து செய்த செயல்களை அவர்கள் குறித்து வைத்தார்கள். சாத்தான் மனித இனத்தின் மீது தொடர்ச்சியாக இருளையும் துயரத்தையும் வேதனை யையும் திணித்துக்கொண்டிருப்பதையும் கிறிஸ்து அதற்கு எதிராகச் செயல்படுவதையும் குறித்தார்கள். ஒளிக்கும் இருளுக்கும் இடை யேயான யுத்தம் பலமடைந்ததை கவனித்திருந்தார்கள். முடிந்து கொண்டிருந்த வேதனையில் எல்லாம் முடிந்தது (யோவான் 19:30) என்று சிலுவையின் மீது கிறிஸ்து குரல் கொடுத்தபோது, ஒரு வெற்றி முழக்கம் ஒவ்வொரு உலகத்திலும் பரலோகத்திலுந்தானும் முழங்கியது. இந்த உலகில் அதிக காலம் நடந்து கொண்டிருந்த மாபெரும் போராட்டம் இப்போது தீர்மானிக்கப்பட்டது. கிறிஸ்து வெற்றி சிறந்தார். சுயத்தை மறுக்கவும் தியாகத்தின் ஆவியைச் செயல்படுத்தவும் போதுமான அன்பை பிதாவும் குமாரனும் மனிதன் மேல் வைத்திருந்தார்களா என்ற கேள்விக்கு, அவருடைய மரணம் பதில் கொடுத்தது. சாத்தான் பொய்காரனும் கொலைகார னுமாக தனது உண்மையான குணத்தை வெளிக்காட்டினான். அவனுடைய வல்லமையின் கீழிருந்த மனிதர்களை எந்த ஆவியில் ஆண்டானோ, அதே ஆவியை, பரலோகவாசிகளைக் கட்டுப் படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தால் அவன் வெளிக்காட்டியிருப் பான் என்பது காணப்பட்டது. தெய்வீக அரசாங்கத்தை துதிக்கும் படியாக பிரபஞ்சம் முழுவதும் ஒருமனப்பட்டு இணைந்தது.PPTam 60.1

    பிரமாணம் மாற்றப்படக்கூடுமானால், கிறிஸ்துவின் தியாக பலி இல்லாமலேயே மனிதன் இரட்சிக்கப்பட்டிருப்பான். ஆனால் விழுந்த போன இனத்திற்காக கிறிஸ்து தமது ஜீவனைக் கொடுப்பது அவசியம் என்ற உண்மை, தேவனுடைய பிரமாணம் பாவியின் மேல் கொண்டிருக்கும் தனது பிடியை தளர்த்தாது என்கிறதை நிரூபிக் கிறது. பாவத்தின் சம்பளம் மரணம் என்கிறதை அது விளக்கிக் காட்டியது. கிறிஸ்து மரித்தபோது சாத்தானின் அழிவு உறுதியாயிற்று. ஆனால் அநேகர் கூறுவதைப்போல பிரமாணம் சிலுவையிலே ஒழிந்துபோயிருக்குமென்றால், தேவனுடைய நேசகுமாரன் சகித்த வேதனையும் மரணமும் சாத்தானுக்கு அவனுக்கு வேண்டியதை கொடுக்க மாத்திரமே இருந்திருக்கும். அப்போது தீமையின் அதிபதி வெற்றிகொண்டிருப்பான். தெய்வீக அரசாங்கத்திற்கு எதிரான அவனுடைய குற்றச்சாட்டு நிலையானதாகியிருக்கும். மனிதனுடைய மீறுதலின் தண்டனையை கிறிஸ்து சுமந்தார் என்கிற உண்மை, பிரமாணம் மாற்றப்பட முடியாது என்பதற்கும், தேவன் நீதிபரர் இரக்கமுள்ளவர் சுயத்தை மறுக்கிறவர் என்பதற்கும், அவ ருடைய நிர்வாகத்தில் நித்திய நீதியும் கிருபையும் இணைந்திருக்கிறது என்பதற்குமான வல்லமையான வாதமாக அனைத்து சிருஷ்டி களுக்கும் இருக்கிறது.PPTam 61.1