Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    38 - ஏதோமை சுற்றி பயணம்

    கிரேசில் இஸ்ரவேலர்கள் பாளயமிறங்கியிருந்த இடம் ஏதோமின் எல்லைகளுக்கு அருகிலேயே இருந்தது. மோசேயும் ஜனங்களும் அந்தத் தேசத்தின் வழியாக வாக்குத்தத்த தேசத்திற்குப் பிரயாணப்பட மிகவும் வாஞ்சையோடிருந்தார்கள். அதற்கேற்ப தேவன் கட்டளையிட்டபடி ஏதோமின் இராஜாவிற்கு ஒரு செய்தி அனுப்பினார்கள்.PPTam 539.1

    எங்கள் பிதாக்கள் எகிப்துக்குப் போனதும், நாங்கள் எகிப்திலே நெடுநாள் வாசம் பண்ணினதும், எகிப்தியர் எங்களையும் எங்கள் பிதாக்களையும் உபத்திரவப்படுத்தினதும், இவைகளினால் எங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தமும் உமக்குத் தெரிந்திருக்கிறது. கர்த்தரை நோக்கி நாங்கள் மன்றாடினோம், அவர் எங்களுக்குச் செவிகொடுத்து, ஒரு தூதனை அனுப்பி, எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; இப்பொழுது நாங்கள் உமது எல்லைக்கு உட்பட்ட காதேஸ் ஊரில் வந்திருக்கிறோம் நாங்கள் உமது தேசத்தின் வழியாய்க் கடந்துபோகும்படி உத்தரவு கொடுக்க வேண்டும், வயல்வெளிகள் வழியாகவும், திரட்சத்தோட்டங்கள் வழியாகவும் நாங்கள் போகாமலும், துரவுகளின் தண்ணீரைக் குடியாமலும் ராஜபாதையாகவே நடந்து, உமது எல்லையைக் கடந்து போகுமட்டும், வலது புறம் இடது புறம் சாயாதிருப்போம் என்று, உமது சகோதரனாகிய இஸ்ரவேல் சொல்லி அனுப்புகிறான் என்று சொல்லச் சொன்னான்.PPTam 539.2

    இந்த மரியாதையான விண்ணப்பத்திற்கு, நீ என் தேசத்தின் வழியாய்க் கடந்து போகக்கூடாது; போனால் பட்டயத்தோடே உன்னை எதிர்க்கப் புறப்படுவேன் என்ற பயமுறுத்தும் மறுப்பு பதிலாக வந்தது.PPTam 540.1

    இந்த எதிர்ப்பினால் ஆச்சரியமடைந்தவர்களாக இஸ்ரவேலின் தலைவர்கள் நடப்பான பாதையின் வழியாய்ப் போவோம், நாங்களும் எங்கள் மிருகங்களும் உடன் தண்ணீரைக் குடித்தால், அதற்குக் கிரயங் கொடுப்போம்; வேறொன்றும் செய்யாமல், கால் நடையாய் மாத்திரம் கடந்து போவோம் என்ற வாக்குறுதியோடு இராஜாவிற்கு இரண்டாம் மன்றாட்டை அனுப்பினர், நீ கடந்து போகக் கூடாது என்ற பதில் வந்தது. எந்தவித சமாதான முன்னேற்றத்தையும் அந்த வழியில் தடுக்க, ஆயுதமணிந்த ஏதோமியரின் படைகள் கடினமான பாதைகளில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்தனர். எபிரெயர்கள் பலவந்தம் பண்ணத் தடை செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் ஏதோமைச் சுற்றின் நீண்ட பிரயாணத்தைத் தொடர வேண்டியவர்களாக இருந்தனர்.PPTam 540.2

    ஐனங்கள் சோதனைக்குள் கொண்டு வரப்பட்ட போது தேவனை நம்பியிருந்தால், ஆண்டவருடைய சேனையின் அதிபதி ஏதோமின் வழியாக அவர்களை நடத்தியிருந்திருப்பார். அவர்களைக்குறித்த பயம் தேசத்தின் குடிகள் மேல் தங்கியிருக்க, பகையை வெளிக்காட்டுவற்கு பதிலாக அவர்கள் தயவு காண்பித்திருப்பார்கள். ஆனால் இஸ்ரவேல் தேவனுடைய வார்த்தையில் முறையாகச் செயல்படவில்லை. குற்றப்படுத்தி முறுமுறுத்தபோது, அவர்களுடைய பொன்னான வாய்ப்பு கடந்து சென்றது. கடைசியாக தங்களுடைய விண்ணப்பத்தை அரசன் முன் வைக்க ஆயத்தப்பட்ட போது, அது மறுக்கப்பட்டது. எகிப்தைவிட்டு வெளியேறினதிலிருந்து, அவர்கள் கானானை சு தந்தரிக்காதிருக்கும் படி அவர்களுடைய பாதையில் தடங்கல்களையும் சோதனைகளையும் வீச சாத்தான் நிலையாக வேலை செய்து கொண்டிருந்தான். தங்களுடைய சொந்த அவிசு வாசத்தினால் தேவனுடைய நோக்கங்களை எதிர்க்க அவர்கள் மீண்டும் மீண்டும் அவனுக்கு கதவைத் திறந்திருந்தனர்.PPTam 540.3

    அவருடைய தூதர்கள் நமக்காக வேலை செய்யக் காத்திருக்கும் போது, அவருடைய வார்த்தையை நம்பி அதன்படி முறையாக செயல்படுவது முக்கியம். முன்னேறும் ஒவ்வொரு படியையும் எதிர்க்க தீய தூதர்கள் ஆயத்தமாயிருக்கின்றனர். தேவனுடைய ஏற்பாடுகள் முன்செல்லும்படியாக அவருடைய பிள்ளைகளை அழைக்கும் போது, அவர்களுக்காக பெரிய காரியங்களைச் செய்ய அவர் ஆயத்தமாயிருக்கும் போது, தயக்கத்தினாலும் தாமதத்தினாலும் ஆண்டவருக்கு அதிருப்தியூட்ட அவர்களை சாத்தான் சோதிக்கிறான். சண்டையின் ஆவியை தூண்டவோ அல்லது முறுமுறுப்பை எழுப்பவோ அல்லது அவிசு வாசிக்கவோ இவ்விதம் தேவன் அவர்கள் மேல் வைத்துள்ள ஆசீர்வாதங்களை அவர்களிடமிருந்து விலக்க அவன் தேடுகிறான். அவர் பாதையைத் திறக்கும் போது எவ்வளவு சீக்கிரம் நகரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் நகர தேவனுடைய ஊழியக்காரர்கள் எப்போதும் தயக்கமின்றி ஆயத்தமாக இருக்க வேண்டும். அவர்களுடைய தாமதம் அவர்களைத் தோற்கடிக்க சாத்தான் கிரியை செய்ய அவனுக்கு நேரம் கொடுக்கிறது.PPTam 540.4

    ஏதோமின் வழியான பாதையைக் குறித்து மோசேக்கு முதலில் கொடுக்கப்பட்ட கட்டளைகளில், ஏதோமியர்கள் இஸ்ரவேலர்களைக் குறித்து பயத்தோடு இருக்கவேண்டும் என்று அறிவித்த பின்னர், இந்த சாதகத்தை அவர்களுக்கு எதிராக உபயோகப்படுத்த ஆண்டவர் தமது ஜனங்களைத் தடை செய்திருந்தார். தேவனுடைய வல்லமை இஸ்ரவேலுக்காக ஈடுபட்டிருந்ததால், ஏதோமியர்களின் பயம் அவர்களை இலகுவான இரையாக்கியிருக்கும். எனவே எபிரெயர்கள் அவர்களை இரைகவ்வக் கூடாது. நீங்களோ மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களோடே போர் செய்ய வேண்டாம், அவர்கள் தேசத்திலே ஒரு அடி நிலமும் உங்களுக்குக் கொடேன்; சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன் (உபா.24, 5) என்ற கட்டளை அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஏதோமியர்கள் ஆபிரகாம் மற்றும் ஈசாக்கினுடைய பின் சந்ததியாக இருந்ததினால் தேவன் தமது ஊழியக்காரர் நிமித்தம் ஏசாவின் பிள்ளைகள் மேல் தயவு காண்பித்திருந்தார். அவர்களுக்கு சேயீர் மலையை சுதந்தரமாகக் கொடுத்திருந்தார். அவர்கள் தங்களுடைய பாவத்தினால் தேவகிருபை எட்டக்கூடாத இடத்தில் தங்களை வைக்காதபட்சத்தில் தொந்தரவு செய்யப்படக்கூடாது. எபிரெயர்கள் தங்களுடைய அக்கிரமத்தின் பாத்திரத்தை நிரப்பியிருந்த கானானின் குடிகளை துரத்தி முழுவதுமாக அழிக்கவேண்டும். ஆனால் ஏதோமியர்கள் இன்னமும் கிருபையின் காலத்திலிருந்தனர். அப்படிப்பட்டவர்கள் இரக்கத்தோடே நடத்தப்பட வேண்டும். தேவன் இரக்கத்தில் பிரியப்படுகிறார். அவர் தமது நியாயத்தீர்ப்புகளை அனுப்பும் முன்பாக தமது உருக்கத்தை வெளிக்காட்டுகிறார். கானானின் குடிகளை அழிக்க வேண்டும் என்று கேட்பதற்கு முன்பாகவே ஏதோமின் மக்களை விட்டுவைக்கவேண்டும் என்று இஸ்ரவேலுக்கு அவர் போதிக்கிறார்.PPTam 541.1

    ஏதோமின் முற்பிதாக்களும் இஸ்ரவேலும் சகோதரர்களாக இருந்தனர். அவர்களுக்கிடையே சகோதர தயவும் மரியாதையும் இருக்கவேண்டும். அப்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி தேசத்தின் வழியாக கடந்து செல்ல கொடுக்கப்பட்ட மறுப்பிற்கு பழிவாங்க இஸ்ரவேலர்கள் தடை செய்யப்பட்டிருந்தனர். ஏதோம் தேசத்தின் எந்தப் பகுதியையும் சுதந்தரிக்க அவர்கள் எதிர்பார்க்கக்கூடாது. இஸ்ரவேலர்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட அவருக்குப் பிரியமான ஜனங்களாக இருந்தும், அவர் அவர்கள் மேல் வைத்திருந்த தடைகளுக்கு கண்டிப்பாக கவனம் கொடுக்கவேண்டும். தேவன் நல்ல சுதந்தரத்தை அவர்களுக்கு வாக்குக் கொடுத்திருந்தார். ஆனாலும் அவர்கள் தாங்களாகவே இந்த பூமியின் மேல் எந்த உரிமையும் இருப்பதாக நினைத்துக்கொண்டு மற்ற அனைவரையும் துரத்தத் தேடக்கூடாது. ஏதோமியர்களுடனான அனைத்து பிணைப்புகளிலும் அவர்களுக்கு அநீதி இழைப்பதைக் குறித்து ஜாக்கிரதையாக இருக்கும்படி அவர்கள் கட்டளையிடப்பட்டனர். தேவையான பொருட்களை வாங்குவதிலும், வாங்கினதற்கு சரியாக பணம் கொடுப்பதிலும் அவர்களோடு வியாபாரம் செய்ய வேண்டும். தேவனை நம்பியிருந்து, அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய அவர்களை உற்சாகப்படுத்தும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் கைக்கிரியைகளிலெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார்....... உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை (உபா. 27) என்று அவர்கள் நினைவூட்டப்பட்டனர். அவர்கள் ஏதோமியரை சார்ந்து இருக்கவில்லை . ஏனெனில் ஆதாரங்களில் ஐசுவரியமுள்ள தேவனை அவர்கள் பெற்றிருந்தார்கள். அவர்களுக்கு சொந்த மான எதையும் பலவந்தத்தினாலாவது அல்லது மோசடியினாலாவது எடுத்துக்கொள்ள அவர்கள் நாடக்கூடாது. மாறாக, தங்களுடைய அனைத்து உறவிலும் உன்னைப்போல் பிறனையும் நேசிப்பாயாக என்கிற தெய்வீகக் கட்டளையின் கொள்கையை உதாரணமாக எடுத்துக்காட்ட வேண்டும்.PPTam 542.1

    இவ்விதமாக அவர்கள் ஏதோமின் வழியாக தேவன் எண்ணியிருந்தபடி கடந்து வந்திருப்பார்களானால் அவர்களுடைய பயணம் அவர்களுக்கு மாத்திரமல்ல, தேசத்தின் குடிகளுக்கும் ஆசீர்வாதமாக இருந்திருக்கும். அதினால், தேவனுடைய ஜனங்களோடும் அவருடைய ஆராதனையோடும் அறிமுகமா வதற்கும், தம்மை நேசித்து பயந்திருந்தவர்களை யாக்கோபின் தேவன் எவ்விதம் செழிப்பாக்கினார் என்பதை காண்பதற்கும் அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். ஆனால் இவை அனைத்தையும் இஸ்ரவேலின் அவநம்பிக்கை தடுத்துப்போட்டது. அவர்களுடைய கிளர்ச்சிக்குப்பதிலாக ஆண்டவர் ஜனங்களுக்கு தண்ணீர் கொடுத்திருந்தார். ஆனால் அவர்களுடைய அவிசுவாசம் அதன் தண்டனையை நடப்பிக்கும் படி அவர் அனுமதித்தார். மீண்டும் வனாந்தரத்தின் வழியாக நடந்து, அற்புதமான ஊற்றிலிருந்து தங்கள் தாகத்தை தணிக்க வேண்டும். அவரை நம்பியிருந்திருப்பார்களெனில், அவர்களுக்கு அதற்குப்பின் ஒருபோதும் அந்த ஊற்று தேவைப்பட்டிருந்திருக்காது.PPTam 543.1

    ஏதோமின் மலைகள் பள்ளத்தாக்குகளின் நடுவே காணப்பட்ட பச்சை நிலங்களை பார்த்த பிறகு, இஸ்ரவேலின் சேனைகள் மீண்டும் தெற்கை நோக்கி திரும்பி இந்தக் காய்ந்து போன பாழ்நிலத்தின் வழியாக நடந்து செல்வது இன்னும் அதிக சார மற்றதாயிருக்கும். மலை தொடர்ச்சிகளிலிருந்து இந்த மூடலான வனாந்தரத்தைப் பார்த்திருந்த மலைத்தொடர்களில் ஆரோன் மரித்து அடக்கம் பண்ணப்பட வேண்டியிருந்த இடமான ஓர் மலையின் சிகரம் இருந்தது. இஸ்ரவேலர்கள் இந்த மலைக்கு வந்தபோது மோசேக்கு தெய்வீக கட்டளை கொடுக்கப்பட்டது.PPTam 543.2

    நீ ஆரோனையும் அவன் குமாரனாகிய எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு, அவர்களை ஓர் என்னும் மலையில் ஏற்ப்பண்ணி, ஆரோன் உடுத்தியிருக்கிற வஸ்திரங்களைக் கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்துவாயாக, ஆரோன் அங்கே மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான் என்றார்.PPTam 543.3

    இந்த இரண்டு வயதான மனிதர்களும் ஒரு வாலிபனும் மலையின் உயரத்திற்கு ஏறினர். மோசே மற்றும் ஆரோனின் தலைகள் நூற்று இருபது குளிர்காலங்களின் பனியினால் வெளுத்திருந்தது. அவர்களுடைய நீண்ட குறிப்பிடத்தகுந்த வாழ்க்கைகள் ஆழமான போராட்டங்களாலும் மனிதர்களுக்கு கிடைத்திருந்த மிகப்பெரிய கனங்களாலும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்கள் மாபெரும் பன்முகத் திறமைகளைக் கொண்ட மனிதர்களாக இருந்து, அவர்களுடைய வல்லமைகளெல்லாம் விருத்தி செய்யப்பட்டு, உயர்த்தப்பட்டு, நித்தியமான ஒருவரோடு கொண்ட உறவினால் கௌரவிக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய வாழ்க்கை தேவனுக்காகவும் சகமனிதர்களுக்காகவும் உழைத்த சுயநலமற்ற வேலையினால் கழிந்திருந்தது. அவர்களுடைய முகங்கள் மாபெரும் அறிவின் வல்லமைக்கும் உறுதியும் நேர்மையுமான நோக்கத்திற்கும் பலமான வாஞ்சைகளுக்கும் சான்று பகர்ந்தது.PPTam 543.4

    அநேக வருடங்களாக மோசேயும் ஆரோனும் அருகருகே தங்களுடைய கவலைகளிலும் பொறுப்புகளிலும் வேலைகளிலும் நின்றிருந்தனர். இருவரும் சேர்ந்து எண்ணக்கூடாத ஆபத்துகளைச் சந்தித்து, தேவனுடைய குறிப்பான ஆசீர்வாதங்களை ஒன்றாகப் பகிர்ந்திருந்தனர். ஆனால் அவர்கள் பிரிக்கப்பட வேண்டிய நேரம் வந்தது. அவர்கள் இருவரும் ஒருவரோடொருவர் செலவு செய்த ஒவ்வொரு மணித்துளியும் மிக விலையுயர்ந்ததாயிருந்ததால், மிகவும் மெதுவாக நகர்ந்தனர். மேலே ஏறுவது செங்குத்தும் கடினமானதுமாயிருக்க, இளைப்பாறும்படி பல வேளைகளில் தாமதித்தபோது, கடந்தகாலத்தைக் குறித்தும் எதிர்காலத்தைக் குறித்தும் அவர்கள் பேசிக்கொண்டனர். அவர்களுக்கு முன் அவர்களுடைய பார்வை எட்டும் வரையிலும் வனாந்தர அலைச் சல்களின் காட்சி பரவியிருந்தது. தெரிந்து கொள்ளப்பட்ட இந்த மனிதர்கள் யாருக்காக தங்கள் வாழ்க்கையின் மிகச்சிறந்த பகுதியை செலவழித்திருந்தார்களோ, யாருடைய நன்மைக்காக அவர்கள் மிக ஆழமான ஆர்வத்தை உணர்ந்திருந்து மாபெரும் தியாகங்களைச் செய்திருந்தார்களோ அந்த இஸ்ரவேலின் பரந்த சேனைகள் கீழே இருந்த சம்பூமியில் பாளயமிறங்கியிருந்தனர். ஏதோமின் மலைகளுக்கு அப்பால் வாக்குத்தத்த தேசத்திற்கு நடத்திச் சென்ற பாதை மோசேயும் ஆரோனும் எந்த தேசத்தின் ஆசீர்வாதங்களை அனுபவிக்கக்கூடாதிருந்ததோ, அதற்குக் கொண்டு செல்லுகிற பாதை இருந்தது. அவர்கள் இருதயத்தில் எந்த கலகத்தின் உணர்வும் இடம்பெறவில்லை . அவர்கள் உதடுகளிலிருந்து முறுமுறுப்பின் எந்த வெளிப்பாடும் இல்லை. எனினும் அவர்களுடைய பிதாக்களின் சுதந்தரத்திலிருந்து அவர்களைத் தடுத்திருந்த சம்பவத்தை நினைத்த போது பவித்திரமான துக்கம் அவர்கள் முகங்கள் மேல் தங்கியது.PPTam 544.1

    இஸ்ரவேலுக்கான ஆரோனுடைய வேலை முடிவடைந்திருந்தது. நாற்பது வருடங்களுக்கு முன்பு, எண்பத்து மூன்றாவது வயதில் மோசேயின் மாபெரும் ஊழியத்தில் அவனோடு சேர்ந்து கொள்ளும்படி தேவன் அவனை அழைத்திருந்தார். அவன் இஸ்ரவேலை எகிப்திலிருந்து நடத்திச் செல்லுவதில் தன் சகோதரனோடு ஒத்துழைத்திருந்தான். எபிரெய சேனைகள் அமலேக்கோடு யுத்தம் பண்ணினபோது மாபெரும் தலைவனுடைய கரங்களை அவன் பிடித்திருந்தான். சீனாய் மலையின் மேல் ஏறவும் தேவனுடைய சமூகத்தை நெருங்கி தெய்வீக மகிமையைக் காணவும் அவன் அனுமதிக்கப்பட்டிருந்தான். ஆரோனின் குடும்பத்தின் மேல் ஆண்டவர் ஆசாரியத்துவ வேலையை வைத்திருந்து, பிரதான ஆசாரியன் என்கிற பரிசுத்தமான அர்ப்பணிப்பினால் அவனைக் கனம் பண்ணியிருந்தார். கோராகையும் அவனுடைய கூட்டத்தையும் அழித்த தெய்வீக நியாயத்தீர்ப்புகளின் பயங்கரமான வெளிக்காட்டுதல்களினால் அவனை பரிசுத்த வேலையில் அவர் தாங்கியிருந்தார். ஆரோனுடைய மன்றாட்டின் வழியாக வாதை நிறுத்தப்பட்டது. தேவன் வெளிப்படையாக கட்டளையிட்டிருந்ததை கருத்தில் கொள்ளாது போனதால் அவனுடைய இரண்டு மகன்கள் கொல்லப்பட்டபோது அவன் கலகம் செய்யவோ அல்லது முறு முறுக்கவோகூட இல்லை. ஆனால் அவனுடைய வாழ்க்கையின் நேர்மையான பதிவு கெடுக்கப்பட்டிருந்தது. ஜனங்களுடைய கிளர்ச்சிக்கு ஒப்புக்கொடுத்து, சீனாயில் பொற்கன்றுக்குட்டியை உண்டாக்கின போதும் மீண்டும் மிரியாமோடு மோசேக்கு எதிராக பொறாமையிலும் முறுமுறுப்பிலும் இணைந்தபோதும் ஆரோன் வருந்தத்தக்க பாவம் செய்திருந்தான். அவன் மோசேயோடு சேர்ந்து கன்மலை தண்ணீரைக் கொடுக்கும்படியாக அதோடு பேசவேண்டும் என்ற கட்டளைக்குக் கீழ்ப்படியாது காதேசில் ஆண்டவரை எதிர்த்திருந்தான்.PPTam 544.2

    தம்முடைய ஜனத்தின் மாபெரும் தலைவர்கள் கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என்று தேவன் நோக்கங் கொண்டிருந்தார். ஆரோன் இஸ்ரவேலரின் நாமங்களை தன்னுடைய மார்பின் மேல் சுமந்து கொண்டிருந்தான். அவன் தேவனுடைய சித்தத்தை ஜனங்களுக்கு அறிவித்திருந்தான். பாவநிவாரண நாளில் இரத்தத்தோடு அனைத்து இஸ்ரவேலர்களின் மத்தியஸ்தனாக மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் அவன் நுழைந்திருந் தான். கிறிஸ்து தமக்காக காத்துக்கொண்டிருக்கும் மக்களை ஆசீர்வதிக்க அவர்களுக்காகச் செய்து கொண்டிருக்கிற பாவ நிவாரண வேலை முடியும் போது வரப்போவதைப்போல, அவன் அந்த வேலையிலிருந்து சபையாரை ஆசீர்வதிக்கும்படி வந்தான். மகா பிரதான ஆசாரியரின் பிரதிநிதியாக இருந்த அந்தப் பரிசுத்த வேலையின் உயர்த்தப்பட்ட குணமே காதேசில் ஆரோனின் பாவத்தை மிகப்பெரிய தவறாக்கியது.PPTam 545.1

    ஆழ்ந்த துக்கத்தோடு மோசே ஆரோனுடைய பரிசுத்த வஸ்திரங்களை கழற்றி, அவைகளை தெய்வீக நியமனத்தின்படி அவனைப் பின்தொடர்ந்த எலெயாசார்மீது வைத்தான். காதேசில் அவன் செய்த பாவத்தினால் கானானில் தேவனுடைய பிரதான ஆசாரியனாக பணி செய்யும் வாய்ப்பு அந்த நல்ல தேசத்தின் முதல் பலியை செலுத்தி, இவ்விதம் இஸ்ரவேலின் சுதந்தர வீதத்தை பிரதிஷ்டை செய்யும் சந்தர்ப்பம் ஆரோனுக்கு மறுக்கப்பட்டிருந்தது. கானானைத் தொடும் எல்லை வரைக்கும் ஜனங்களை நடத்திச்செல்லும் பாரத்தை மோசே தொடர்ந்து சுமக்க வேண்டும். அவன் வாக்குத்தத்த தேசத்தைப் பார்க்கும் தூரத்திற்கு வரவேண்டும். ஆனால் அதில் நுழையக் கூடாது. இந்த தேவனுடைய ஊழியக்காரர்கள் காதேசில் கன்மலையின் முன் நின்ற போது, அவர்கள் மேல் கொண்டுவரப்பட்ட சோதனையை முறுமுறுப்பில் லாமல் சுமந்திருப்பார்களெனில் அவர்களுடைய எதிர்காலம் எவ்வளவு வித்தியாசமாக இருந்திருக்கும். ஒரு தவறான செயல் ஒருபோதும் அழிக்கப்படக்கூடாது. சோதனையின் ஒரு நொடியில் அல்லது யோசனையில்லாத நேரத்தில் கூட இழந்துவிட்டதை வாழ்நாள் முழுவதும் செய்கிற வேலை கூட திரும்பக் கொண்டு வராது.PPTam 546.1

    இந்த இரண்டு தலைவர்களும் பாளயத்தில் இல்லாதிருந்ததும் பரிசுத்த வேலையில் ஆரோனைப் பின்தொடரக்கூடியவன் என்று நன்கு அறியப்பட்டிருந்த எலெயாசாரின் துணையோடு அவர்கள் சென்றிருந்தது ஒரு எச்சரிப்பு உணர்வை எழுப்பியிருந்தது. அவர்கள் திரும்பி வருவதற்காக மிகவும் எதிர்பார்ப்போடு காத் திருந்தனர். ஜனங்கள் தங்களைச் சுற்றி பரந்த சபையாரைப் பார்த்த போது, எகிப்திலிருந்து வெளியேறின் அனைத்து முதியோர்களும் ஏறக்குறைய வனாந்தரத்தில் அழிந்து போனதைக் கண்டனர்.PPTam 546.2

    மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக அறிவிக்கப்பட்ட தீர்ப்பை அவர்கள் நினைவு கூர்ந்தபோது, தீமையைக் குறித்த முன்னடையாளத்தை அனைவரும் உணர்ந்தனர். அந்த இரகசிய மான ஓர் மலையின் சிகரத்திற்கு அவர்களுடைய இரகசியமான பிரயாணத்தின் நோக்கத்தைக் குறித்து சிலர் அறிந்திருந்தனர். அந்தத் தலைவர்களுக்கான அவர்களுடைய அக்கறை கசப்பான நினைவுகளாலும் சுய குற்றச்சாட்டுகளாலும் அதிகப்படுத்தப் பட்டிருந்தது.PPTam 546.3

    கடைசியாக மோசே மற்றும் எலெயாசாரின் உருவங்கள் மலையின் பக்கத்திலிருந்து மெதுவாக இறங்கி வருவது அடையாளங் காணப்பட்டது. ஆனால் ஆரோன் அவர்களோடு இல்லை. பரிசுத்தமான வேலையில் தன் தகப்பனை பின்தொடர்ந்துவிட்டான் என்பதை காண்பிக்க எலெயாசரின் மேல் பரிசுத்தமானவஸ்திரங்கள் இருந்தன. ஜனங்கள் கனத்த இருதயத்தோடு தங்கள் தலைவரைச் சுற்றிச் சூழ்ந்தபோது, ஆரோன் தன்னுடைய கரங்களில் ஓர் மலையில் மரித்து விட்டதாகவும் அவனை அவர்கள் அங்கே அடக்கம் பண்ணினதாகவும் மோசே அவர்களுக்குச் சொன்னான். பல வேளைகளில் அவர்கள் அவனுக்குத் துக்கத்தை வருவித்திருந்தபோதும், அவர்கள் அனைவரும் அவனை நேசித்திருந்ததினால் சபை துக்கத்திலும் புலம்பலிலும் மூழ்கியது. இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் ஆரோனுக்காக முப்பது நாள் துக்கங்கொண்டாடினார்கள்.PPTam 547.1

    இஸ்ரவேலின் பிரதான ஆசாரியனுடைய அடக்கத்தைக்குறித்து வேதவாக்கியம். ஆரோன் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான் (உ 106) என்கிற எளிமையான பதிவையே கொடுத்திருக்கிறது. தேவனுடைய வெளிப்படையான கட்டளையின்படி நடத்தப்பட்ட இந்த அடக்க ஆராதனை இன்றைய பழக்கங்களுக்கு எவ்வளவு முரண்பட்டு இருக்கிறது. தற்காலத்தில் உயர்ந்த பதவியிலிருக்கும் ஒரு மனிதனின் அடக்க ஆராதனைகள் ஆடம்பரமான மற்றும் ஊதாரித்தனமான வெளிக்காட்டல்களின் சம்பவமாக பலவேளை களில் ஆக்கப்படுகிறது. ஆரோன் மரித்த போது இதுவரையிலும் பிழைத்திருந்த மனிதர்களில் மிகவும் உழைத்திருந்த ஆரோன் மரித்தபோது, அவனுடைய மரணத்தைக் காணவும் அவனுடைய அடக்கத்தில் பங்குபெறவும் அவனுக்கு மிக நெருக்கமான இரண்டு நண்பர்கள் மாத்திரம் இருந்தனர். ஓர் மலையில் இருந்த அந்தத் தனிமையான கல்லறை இஸ்ரவேலின் பார்வையிலிருந்து என்றைக்குமாக மறைக்கப்பட்டது. மரித்தவர்களுக்காக பல வேளைகளில் காட்டப்படுகிற மாபெரும் வெளிக்காட்டல் களினாலும், அவர்களுடைய சரீரங்களை மண்ணுக்கு திரும்ப அனுப்புவதற்கு ஆகும் ஆடம்பரமான செலவுகளினாலும் தேவன் கனப்படுத்தப்படுவதில்லை. PPTam 547.2

    சபை முழுவதும் ஆரோனுக்காகதுக்கித்தது. எனினும் மோசேயைப்போல் அந்த இழப்பை மிகக் குறிப்பாக அவர்களால் உணரமுடியவில்லை . ஆரோனின் மரணம் தன்னுடைய முடிவு சமீபத்தில் இருக்கிறது என்கிறதை மோசேக்கு நினைவூட்டியது. பூமியில் அவன் தங்கியிருக்க வேண்டிய காலம் குறைவாக இருந்தபோதும் தன்னுடைய தொடர்ச்சியான துணை அவனுடைய மகிழ்ச்சிகளையும் துக்கங்களையும் அவன் நம்பிக்கைகளையும் பயங்களையும் அநேக நீண்ட வருடங்களாக பகிர்ந்து கொண்டிருந்தவனின் தொடர்ச்சியான தோழமையின் இழப்பை அவன் மிக ஆழமாக உணர்ந்தான். மோசே இப்போது வேலையை தனியாகத் தொடரவேண்டும். எனினும் தேவன் தன்னுடைய நண்பராக இருப்பதை அவன் அறிந்து, அவர்மேல் மிகவும் சாய்ந்து கொண்டான்.PPTam 547.3

    ஓரேப் மலையை விட்டு வந்த கொஞ்ச நாட்களில் கானானிய இராஜாக்களின் ஒருவனான ஆராதுடன் சண்டையிட்டதில் இஸ்ரவேலர்கள் தோல்வியைச் சந்தித்தனர். ஆனால் ஊக்கத்தோடு தேவனிடமிருந்து உதவியைத் தேடினபோது. தெய்வீக உதவி அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அவர்களுடைய சத்துருக்கள் அழிக்கப்பட்டனர். இந்த வெற்றி நன்றியைத் தூண்டி தாங்கள் தேவன் மேல் சார்ந்திருக்கிறதை உணர்த்த நடத்துவதற்கு பதிலாக அவர்களை பெருமையும் சுயநம்பிக்கையும் உள்ளவர்களாக்கிற்று. விரைவாக தங்களுடைய முறுமுறுக்கும் பழைய பழக்கத்திற்குள் அவர்கள் விழுந்தனர். நாற்பது வருடங்களுக்கு முன் வேவுகாரர்களின் செய்தியினால் செய்த கலகத்திற்குப்பின் உடனடியாக கானானிற்குள் முன்செல்ல இஸ்ரவேலின் சேனைகள் அனுமதிக்கப்படாததினால் இப்போது அவர்கள் அதிருப்தியில் இருந்தனர். இப்போது நடந்ததைப் போலவே முன்பும் தங்களுடைய சத்துருக்களை இலகுவாக வெற்றிகொண்டிருப்பார்கள் என்று காரணப்படுத்தி, வனாந்தரத்தில் நீண்ட பிரயாணம் செய்தது தேவையற்ற தாமதம் என்று அறிவித்தனர்.PPTam 548.1

    தெற்கை நோக்கி தங்களுடைய பிரயாணத்தைத் தொடர்ந்தபோது அவர்களுடைய பாதை சூடான, தாவரங்களின் நிழல் இல்லாத வெப்பமான மணல் பள்ளத்தாக்கின் வழியாக இருந்தது. அந்தப் பாதை நீண்டதும் கடினமானதுமாயிருக்க அவர்கள் தளர்வினாலும் தாகத்தினாலும் துன்பப்பட்டனர். மீண்டும் விசுவாசித்து பொறுமையாக இருக்கும் சோதனையை தாங்குவதில் அவர்கள் தோல்வியடைந்தனர். அவர்களுடைய அனுபவத்தின் இருண்ட பக்கத்தில் தங்கியிருப்பதிலேயே தொடர்ந்து, தேவனிடமிருந்து அவர்கள் தங்களை வெகுதூரத் திற்குப் பிரித்துக்கொண்டனர். காதேசில் தண்ணீர் நின்றபோது முறு முறுக்காது இருந்திருந்தால் ஏதோமைச் சுற்றிச்செல்லும் பிரயாணத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பார்கள் என்கிற உண்மையை அவர்கள் மறந்திருந்தனர். தேவன் அவர்களுக்காக மேன்மையான காரியங்களை எண்ணியிருந்தார். அவர்களுடைய பாவங்களை அவர் சாதாரணமான தண்டித்தார் என்பதினால் அவர்களுடைய இருதயங்கள் அவருக்கான நன்றியினால் நிறைந்திருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக தேவனும் மோசேயும் தலையிட்டிருக்காவிடில் தேசத்தை இந்நேரம் சு தந்தரித்திருப்போம் என்று தங்களை புகழ்ந்து பேசிக்கொண்டனர். தங்கள் மேல் பிரச்சனைகளைக் கொண்டு வந்தபிறகு தேவன் திட்டமிட்டிருந்ததற்கு மாறாக தங்களுடைய வாழ்க்கையை ஒட்டுமொத்த கடினமாக்கின பிறகு, அனைத்து நல்வாய்ப் பின்மைகளுக்கும் அவரைக் காரணம் காட்டினர். இவ்வாறாக அவர்களோடு அவர் நடந்துகொண்டதைக்குறித்த கசப்பான உணர்வுகளை நேசித்திருந்து முடிவாக அனைத்திலும் அதிருப்தி அடைந்தனர். சுதந்தரத்தையும் தேவன் அவர்களை நடத்திக் கொண்டிருக்கும் தேசத்தையும் விட எகிப்தை பிரகாசமானதும் மிகவும் விரும்பப்படத்தக்கதுமாக அவர்கள் கண்ட னர்.PPTam 548.2

    இஸ்ரவேல் அதிருப்தியின் ஆவியில் திளைத்தபோது தங்களுடைய ஆசீர்வாதங்களிலும் குற்றங்கண்டுபிடிக்கும் குணத்தைக் கண்டனர். ஜனங்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி : நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை, இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள்.PPTam 549.1

    அவர்களுடைய மாபெரும் பாவத்தை மோசே உண்மையாக மக்கள் முன் வைத்தான். தேவனுடைய வல்லமை மாத்திரமே கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும் தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்தரவழியாய் (உபா. 815) அவர்களைக் காப்பாற்றியிருந்தது. ஒவ்வொரு நாள் பிரயாணத்திலும் தெய்வீக இரக்கத்தின் ஒரு அற்புதத்தினால் அவர்கள் காக்கப்பட்டிருந்தனர். தேவன் நடத்தி வந்த அனைத்து பாதையிலும் தாகத்தை தணிக்க தண்ணீரைக் கண்டனர். அவர்களுடைய பசியை திருப்தியாக்க வானத்திலிருந்து மன்னாவைக் கண்டனர். பகலில் நிழலிட்டிருந்த மேகஸ்தம்பத்தின் கீழும் இரவில் அக்கினிஸ்தம்பத்தின் கீழும் அவர்கள் சமாதானத் தையும் பாதுகாப்பையும் கண்டிருந்தனர். மலையின் உயரங்களுக்கு ஏறினபோதும், வனாந்திரத்தின் கரடு முரடான பாதைகளில் முன்னேறின் போதும் தூதர்கள் அவர்களுக்கு உதவி செய்தனர். அவர்கள் சகித்திருந்த கடினங்களுக்கு அப்பால் அவர்களில் ஒருவராகிலும் பெலவீனமாயிருக்கவில்லை . அவர்களுடைய நீண்ட பிரயாணத்தினால்PPTam 549.2

    அவர்களின் கால்கள் வீங்கவில்லை. வஸ்திரங்களும் பழமையாகவில்லை. இரைகவ்வும் பயங்கரமான மிருகங்களையும் வனாந்தரத்திலும் காட்டிலும் இருந்த விஷம் நிறைந்த ஊர்வனவற்றையும் தேவன் அடக்கியிருந்தார், ஐனத்தின் மேலிருந்த அன்பின் அனைத்து அடையாளங்களோடும் ஜனங்கள் இன்னமும் குற்றப்படுத்துவதில் தொடர்ந்தால், அவர்கள் அவருடைய கிருபையான கவனிப்பை போற்றவும் மனவருத்தத்திலும் தாழ்மையிலும் அவரிடம் திரும்பிவரவும் நடத்தப்படும் வரை ஆண்டவர் தமது பாதுகாப்பை திரும்ப எடுத்துக்கொள்வார்.PPTam 550.1

    அவர்கள் தெய்வீக வல்லமையினால் மறைக்கப்பட்டிருந்ததினால் தொடர்ச்சியாக சூழப்பட்டிருந்த எண்ணக் கூடாத ஆபத்துகளை உணர்ந்திருக்கவில்லை. நன்றியின்மையிலும் அவிசுவாசத்திலும் மரணத்தை எதிர்பார்த்திருந்தனர். ஆண்டவர் இப்போது மரணம் அவர்கள் மேல் வர அனுமதித்தார். வனாந்தரத்தில் இருந்த விஷம் நிறைந்த சர்ப்பங்கள் கொடுமையான எரிச்சலையும் தீவிரமரணத்தையும் கொண்டுவந்த அவைகளுடைய தீண்டுதல்களினால் உண்டான பயங்கர விளைவுகளினிமித்தம் கொள்ளிவாய் சர்ப்பங்கள் என்று அழைக்கப்பட்டன. தேவனுடைய பாதுகாக்கும் கரம் இஸ்ரவேலிலிருந்து விலகினபோது, ஜனங்களில் அதிக எண்ணிக்கையிலானோர் இந்த ஜந்துக்களால் தாக்கப் பட்ட னர்,PPTam 550.2

    இப்போது பாளய முழுவதிலும் திகிலும் குழப்பமும் இருந்தது. ஒவ்வொரு கூடாரத்திலும் மரித்தவர்கள் அல்லது மரித்துக்கொண்டிருந்தவர்கள் இருந்தார்கள். எவரும் பாதுகாப்பாயில்லை. இரவின் அமைதி புதிதாக பாதிக்கப்பட்டவனைக் குறித்த துளைக்கும் கூக்குரல்களால் பல வேளைகளில் கலைக்கப்பட்டது. துன்பப்பட்டவர்களுக்கு பணிவிடை செய்வதில் அனைவரும் ஈடுபட்டிருந்தனர். அல்லது இன்னமும் தாக்கப்படாதவர்களை காப்பாற்றும் வேதனை நிறைந்த கவனமான முயற்சியில் அனைவரும் சுறுசுறுப்பாயிருந்தனர். அவர்களுடைய உதடுகளிலிருந்து ஒரு முறுமுறுப்பும் இப்போது வெளியேறவில்லை. தற்காலிக துன்பத்தோடு ஒப்பிட்டபோது அவர்களுடைய முந்தைய கஷ்டங்களும் சோதனைகளும் நினைத்துப் பார்க்க தகுதியற்றவைகளைப்போலத் தோன்றியது.PPTam 550.3

    இப்போது ஜனங்கள் தங்களை தேவனுக்கு முன்பாக தாழ்த்தினர். பாவ அறிக்கைகளோடும் மன்றாட்டுகளோடும் மோசேயிடம் வந்து : நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதினால் பாவஞ் செய்தோம், என்று கூறினர். சற்று நேரத்திற்கு முன்புதான் அவனை தங்களுடைய மிகக் கொடிய எதிரியாகவும் தங்களுடைய அனைத்து துயரங்களுக்கும் துன்பங்களுக்கும் காரணனாகவும் குற்றப்படுத்தியிருந்தனர். ஆனால் அந்த வார்த்தைகள் அவர்களுடைய உதடுகளிலிருந்தபோது அந்தக் குற்றச்சாட்டு பொய்யென்பதை அறிந்திருந்தனர். மெய்யான பிரச்சனை வந்ததும் அவர்களுக்காக தேவனிடம் மன்றாடக்கூடிய ஒரே நபர் அவன்தான் என்று அவனிடம் வந்தனர். சர்ப்பங்கள் எங்களை விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்.PPTam 551.1

    சர்ப்பங்களுக்கு ஒத்த வெண்கல சர்ப்பத்தை உண்டாக்கி ஜனங்களின் நடுவே தூக்கி நிறுத்தும்படி மோசேக்கு தெய்வீகக் கட்டளை வந்தது. இதை கடிக்கப்பட்ட அனைவரும் நோக்கிப் பார்க்கவேண்டும். பார்க்க, விடுதலையைக் கண்டடைவார்கள். அவன் அவ்வாறே செய்தான். கடிக்கப்பட்ட அனைவரும் வெண்கல சர்ப்பத்தைப் பார்த்து பிழைக்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தி பாளயம் முழுவதும் தொனிக்கப்பட்டது. அநேகர் ஏற்கனவே மரித்திருந்தனர். மோசே சர்ப்பத்தை கோலின் மேல் உயர்த்திய போது வெறும் உருவத்தை நோக்கிப் பார்ப்பது அவர்களை குணப்படுத்தும் என்று சிலர் நம்பாதிருந்தனர் அவர்கள் தங்களுடைய அவநம்பிக்கையில் அழிந்தனர். எனினும் தேவன் செய்திருந்த இந்த ஏற்பாட்டை விசுவாசித்திருந்த அநேகர் அங்கே இருந்தனர். மரித்துக்கொண்டிருந்தவர்களின் கண்களை சர்ப்பத்தின் மேல் பதிக்கும்படி உதவி செய்வதில் தகப்பன்களும் தாய்களும் சகோதரர்களும் சகோதரிகளும் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் மயங்கி மரித்துக்கொண்டிருந்தபோதும் ஒருமுறை பார்த்தால் போதும் பூரணமாக குணப்படுத்தப்பட்டனர்.PPTam 551.2

    பார்த்தவர்கள் மேல் அப்படிப்பட்ட ஒரு மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய எந்த வல்லமையும் அந்த வெண்கல சர்ப்பத்தில் இல்லை என்பதை ஜனங்கள் நன்கு அறிந்திருந்தனர். சுகமளிக்கும் வல்லமை தேவனிடமிருந்து மாத்திரமே வந்தது. தம்முடைய வல்லமையை வெளிக்காட்ட தம்முடைய ஞானத்தில் அவர் இந்த வழியைத் தெரிந்து கொண்டார். இந்த எளிமையான வழியில், தங்களுடைய பாவத்தினால் இந்த துன்பங்களை தங்கள் மேல் கொண்டுவந்தனர் என்று ஜனங்கள் உணர்த்தப்பட்டனர். தேவனுக்குக் கீழ்ப்படிந்திருக்கும்போது பயப்படுவதற்கான எந்தக் காரணமும் இல்லை, அவர் தங்களைப் பாதுகாப்பார் என்ற நிச்சயமும் கொடுக்கப்பட்டது.PPTam 551.3

    வெண்கல சர்ப்பத்தை உயர்த்துவது இஸ்ரவேலருக்கு முக்கியமான பாடத்தைக் கற்பிக்கும் படியாக இருந்தது. அவர்களுடைய காயங்களிலிருந்த அழிக்கும் விஷத்திலிருந்து அவர்களால் தங்களைக் காத்துக்கொள்ளக் கூடாது. தேவன் மாத்திரமே அவர்களைக் குணமாக்க வல்லமையுள்ளவர். ஆனாலும் அவர் செய்த ஏற்பாட்டில் ஜனங்கள் தங்கள் விசுவாசத்தைக் காண்பிக்க கோரப்பட்டனர். பிழைக்கும் படியாக அவர்கள் நோக்கிப்பார்க்கவேண்டும்.PPTam 552.1

    அவர்களுடைய விசுவாசம் மாத்திரமே தேவன் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று. சர்ப்பத்தை நோக்கிப்பார்த்ததினால் அவர்களுடைய விசுவாசம் காட்டப்பட்டது. சர்ப்பத்திடம் எந்த வல்லமையும் இல்லை என்பதை அறிந்திருந்தனர். அது கிறி ஸ்து விற்கு அடையாளமாயிருந்தது. அவருடைய நன்மையின் மேல் விசுவாசம் வைக்கும் அவசியத்தை அது அவர்களுடைய மனங்களுக்குக் கொடுத்தது. இதற்கு முன் அநேகர் தங்கள் காணிக்கைகளை தேவனுக்கு கொண்டுவந்து, இதனால் தங்கள் பாவங்களுக்கான பாவநிவிர்த்தி செய்திருந்ததாக உணர்ந்திருந்தனர். இந்த காணிக்கைகள் அடையாளமாக மாத்திரமே இருந்த வரவிருக்கும் மீட்பரை அவர்கள் சார்ந்திருக்கவில்லை. அவர்களுடைய காணிக்கைகள் அந்த வெண்கல சர்ப்பத்தைவிடவும் எவ்விதவல்லமையோ நன்மையோ அவைகளில் பெற்றிருக்கவில்லை என்பதையும், மாபெரும் பாவபலியான கிறிஸ்துவை நோக்கி அவர்களுடைய மனங்கள் திருப்பப்படும் படியாகவே கொடுக்கப்பட்டன என்பதையும் ஆண்டவர் இப்போது அவர்களுக்குப் போதிப்பார்.PPTam 552.2

    சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும் யோவான் 3:14, 15. பூமியின் மீது இதுவரையிலும் பிழைத்திருந்த அனைவரும் பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய (வெளி. 129) சாத்தானுடைய மரண அடியை உணர்ந்திருக்கின்றனர். பாவத்தின் அழிக்கும் விளைவு தேவன் செய்திருக்கிற ஏற்பாட்டின் வழியாக மாத்திரமே அகற்றப்பட முடியும். இஸ்ரவேலர் உயர்த்தப்பட்ட சர்ப்பத்தை நோக்கிப்பார்த்ததினால் தங்கள் வாழ்க்கையை காத்துக்கொண்டனர். அந்தப் பார்வை விசுவாசத்தை எடுத்துக்காட்டியது. அவர்கள் தேவனுடைய வார்த்தையை நம்பி மீண்டுவருவதற்கான ஏற்பாட்டை விசுவாசித்ததால் பிழைத்தார்கள். அவ்வாறே பாவியும் கிறிஸ்துவை நோக்கிப்பார்ப்பதினால் பிழைக்கலாம். பாவநிவாரண பலியின் மேலிருக்கும் விசுவாசத்தினால் அவன் மன்னிப்பை பெறுகிறான். உயிரில்லாத அடையாளத்தைப் போலல்லாது, கிறிஸ்து தம்மில் மனந்திரும்பின பாவியை குணமாக்கக்கூடிய வல்லமையையும் நன்மையையும் உடையவராயிருக்கிறார்.PPTam 552.3

    பாவி தன்னை காப்பாற்றக்கூடாது போனாலும் இரட்சிப்பைக் காத்துக்கொள்ளும் படி செய்யக் கூடிய காரியங்கள் சில இருக்கின்றன. என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை - யோவான் 6:37. நாம் அவரிடம் வரவேண்டும். நம்முடைய பாவங்களைக் குறித்து மனம் வருந்தும் போது அவர் நம்மை ஏற்றுக்கொண்டு மன்னிக்கிறார் என்று நம்ப வேண்டும். விசுவாசம் தேவனுடைய ஈவாக இருக்கிறது. ஆனால் அதைச் செயல்படுத்தும் வல்லமை நம்மிடம் இருக்கிறது. தெய்வீகம் வழங்குகிற கிருபையையும் இரக்கத்தையும் பிடித்துக்கொள்ளுகிற கரம் தான் விசுவாசம்.PPTam 553.1

    கிருபையின் உடம்படிக்கையின் ஆசீர்வாதங்களில் ஒன்றுக்கு நம்மை தகுதிப்படுத்துவதும் கிறிஸ்துவின் நீதியே அன்றி வேறு எதுவுமில்லை தங்களைத் தகுதிப்படுத்துகிற சிலவற்றைச் செய்யலாம் என்ற கருத்தை நேசித்திருந்த சிலர், இந்த ஆசீர்வாதங்களை மிகவும் வாஞ்சித்திருந்து பெற முயற்சித்திருக்கின்றனர்; ஆனால் பெறவில்லை. அவர்கள் இயேசுவே போதுமான இரட்சகர் என்று நம்பாது, தங்களைவிட்டு வெளியே பார்க்கவில்லை. நம்முடைய நன்மைகள் நம்மை இரட்சிக்கும் என்று நாம் நினைக்கவே கூடாது. கிறிஸ்துமாத்திரமே நமது இரட்சிப்பின் நம்பிக்கை . நாம் இரட்சிக்கப்படும் படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை - அப்.4:12.PPTam 553.2

    தேவனை முழுமையாக நம்பி, பாவத்தை மன்னிக்கும் இரட்ச கரென்று இயேசுவின் நன்மைகளின் மேல் சாரும் போது, நாம் விரும்பும் அனைத்து உதவியையும் பெறலாம். தங்களை இரட்சிக்கும் வல்லமை தங்களில் இருப்பதாக எண்ணி எவரும் தங்களைப் பார்க்க வேண்டாம். நம்மால் இதைச் செய்யக்கூடாது என்பதால் தான் இயேசு நமக்காக மரித்தார். அவரிலேயே நம்முடைய நம்பிக்கையும் நம்முடைய தீர்ப்பும் நம்முடைய நீதியும் இருக்கின்றன. நம்முடைய பாவ நிலையை நாம் பார்க்கும் போது, நமக்கு இரட்சகர் இல்லையென்றோ அல்லது நம்மீது இரக்கங்கொள்ளும் எண்ணம் அவருக்கு இல்லையென்றோ நாம் விரக்தியடைந்து பயப்படக் கூடாது. இந்த நேரத்தில் தானே நம்முடைய உதவியற்ற நிலையில் தம்மிடம் வந்து இரட்சிக்கப்படும்படி அவர் நம்மை அழைக்கிறார்.PPTam 554.1

    பரலோகம் நியமித்திருந்த பரிகாரத்தில் அநேக இஸ்ரவேலர்கள் எந்த உதவியையும் காணவில்லை. மரித்தவர்களும் மரித்துக்கொண்டிருக்கிறவர்களும் அவர்களைச் சுற்றிலும் இருந்தனர். தெய்வீக உதவியில்லாத போது தங்களுடைய முடிவும் நிச்சயம் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். எனினும் தங்கள் காயங்களையும் தங்கள் வலிகளையும் தங்கள் நிச்சயமான மரணத்தையுங்குறித்து தங்களுடைய பெலமெல்லாம் போகும் வரையிலும் புலம்புவதில் தொடர்ந்தனர். உடனடியாக சுகம் பெற்றிருக்கக் கூடிய வேளையில் அவர்களுடைய கண்கள் ஜீவனிழந்தது நாம் நம்முடைய தேவையைக்குறித்த உணர்வில் இருப்போமானால் நம்முடைய வல்லமைகளையெல்லாம் அவைகளைக்குறித்து புலம்புவதில் செலவிடக்கூடாது. கிறிஸ்து இல்லாத உதவியற்ற நிலையை நாம் உணரும்போது, சோர்விற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. மாறாக, சிலுவையிலறையப்பட்டு உயிர்த்தெழுந்த இரட்சகரின் நன்மைகளைச் சார்ந்திருக்க வேண்டும். நோக்கிப் பார்த்து பிழைத்திரு . இயேசு தமது வார்த்தையில் உறுதியளித்திருக்கிறார். தம்மிடம் வரும் அனைவரையும் அவர் இரட்சிப்பார். அவர் கொடுக்கும் இரக்கத்தை குணப்பட வேண்டிய இலட்சக்கணக்கானோர் நிராகரித்தாலும், அவருடைய நன்மைகளை நம்பும் ஒருவர்கூட அழியும்படி விடப்படமாட்டார்.PPTam 554.2

    இரட்சிப்பின் திட்டத்தின் முழு இரகசியமும் தங்களுக்குத் தெளிவாக்கப்படும் வரை கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள அநேகர் விருப்பமின்றி இருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் பார்த்திருக்கின்றனர் என்பதை கண்டும், கிறிஸ்துவின் சிலுவையை பார்ப்பதன் வல்லமையை உணர்ந்தும் அநேகர் விசுவாசப் பார்வையை மறுக்கின்றனர். கொடுக்கும் படி தேவன் விரும்பியிருந்த சான்றுகளை நிராகரித்து, ஒருபோதும் காணக்கூடாத காரணங்களையும் சான்றுகளையும் தேடி, அநேகர் தத்துவத்தின் புதிருக்குள் அலைந்து கொண்டிருக்கின்றனர். நீதியின் சூரியன் பிரகாசிப்பதன் காரணம் விளக்கப்படும் வரையிலும் அதன் வெளிச்சத்தில் நடக்க அவர்கள் மறுக்கிறார்கள். இம்முறையில் நிலைத்திருக்கிறவர்கள் அனைவரும் சத்தியத்தைக் குறித்த அறிவில் வரமாட்டார்கள். சந்தேகத்திற்கான ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தேவன் ஒருபோதும் அகற்றமாட்டார். விசுவாசத்தை நிலைநாட்ட போதுமான சான்றுகளை அவர் கொடுக்கிறார். இது ஏற்றுக்கொள்ளப்படாத போது மனம் இருளில் விடப்படுகிறது. சர்ப்பத்தினால் தீண்டப்பட்டவர்கள் பார்க்க ஒப்புக்கொள்ளும் முன்பு சந்தேகிக்கவும் கேள்வி கேட்கவும் நின்றிருந்திருப்பார் களானால் அழிந்திருப்பார்கள். முதலாவது பார்ப்பது நமது கடமை. விசுவாசப் பார்வை நமக்கு ஜீவனைக் கொடுக்கும்.PPTam 554.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents