Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    52- வருடாந்தர பண்டிகைகள்

    ஆசரிப்புக் கூடாரத்தில் ஆராதனை செய்வதற்காக இஸ்ர வேலார்கள் அனைவரும் கூடும் மூன்று வருடாந்தர கூட்டங்கள் இருந்தன. யாத். 23:14-16. இந்தக் கூட்டம் சீலோவில் சில காலம் கூடியது. ஆனால் பின்னர் எருசலேம் தேசத்தின் ஆராதனை மையமாக மாற, கோத்திரங்கள் பவித்திரமான பண்டிகைகளுக்காக இங்கே கூடின.PPTam 699.1

    அவார்களுடைய தேசத்தைப் பற்றிக்கொள்ள ஊக்கத்தோடு இருந்த மூர்க்கமும் யுத்த குணமுமுள்ள கோத்திரங்களால் மக்கள் சூழப்பட்டிருந்தனர். எனினும் ஒவ்வொரு வருடமும் பலமுள்ள ஆண்கள் அனைவரும் அவார்களோடு பிரயாணம் பண்ணக்கூடிய அனைத்து மக்களும் தங்கள் வீடுகளை விட்டு தேசத்தின் மையத்திலிருந்த கூடும். இடத்திற்கு வரும்படியாக கட்டளையிடப்பட்டிருந்தனர். பாதுகாப்பில்லாதிருந்த அவார்களுடைய வீட்டாரை துடைத்துப்போட்டு அக்கினியினாலும் பட்டயத்தினாலும் அதைப் பாழிடமாக்காதபடி அவர்களுடைய சத்துருக்களை தடுத்திருந்தது எது? இஸ்ரவேலை சில அந்நிய சத்துருக்களுக்கு அடிமைகளாக்க தேசத்தின் மேல் படையெடுக்காதபடி அவர்களைத் தடுத்திருந்தது எது? தம்முடைய ஜனத்தின் பாதுகாவலராயிருப்பதாக தேவன் வாக்குப்பண்ணியிருந்தார். கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார். சங்.34:7. இஸ்ரவேலர்கள் ஆராதனைக்காகச் சென் றிருந்தபோது தெய்வீகவல்லமை அவர்களுடைய சத்துருக்களைத் தடுக்கும். நான் புறஜாதிகளை உங்கள் முன்னின்று துரத்திவிட்டு, உங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன். வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு முன்பாகக் காணப்படப் போயிருக்கும் போது ஒருவரும் உங்கள் தேசத்தை இச்சிப்பதில்லை (யாத். 34:24) என்பது தேவனுடைய வாக்குத்தத்தமாக இருந்தது.PPTam 699.2

    இந்தப் பண்டிகைகளில் முதலாவது வந்த பஸ்காவும் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையும் இப்போதைய கணக்கின்படி மார்ச் மாதத்தின் முடிவிலும் ஏப்ரல் மாதத்தின் துவக்கத்திலுமாக யுத்த நாட்காட்டியின் முதல் மாதமான ஆபிப் மாதத்தில் வந்தது. குளிர் காலத்தின் குளுமை தாண்டிச் சென்று பின்மாரியும் முடிவடைந்திருக்க, வசந்த காலத்தின் புத்துணார்ச்சியிலும் அழகிலும் இயற்கை முழுவதும் களிகூர்ந்தது. மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் இருந்த புற்கள் பசேலென்றிருக்க, எங்கும் காட்டு மலார்கள் வயல்களை பிரகாசப்படுத்தியிருந்தது. முழுமையை நெருங்கிக்கொண்டிருந்த நிலவும் மாலை வேளைகளை விரும்பத்தக்கதாக்கியிருந்தது. இதோ, மாரிகாலம் சென்றது, மழை பெய்து ஒழிந்தது. பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது; குருவிகள் பாடுங்காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது. அத்திமரம் காய்காய்த்ததுர் திராட்சக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது (உன்னத . 2:11-13) என்று பரிசுத்தப் பாடகனால் மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டப்பட்ட காலமாக அது இருந்தது.PPTam 700.1

    தேசம் முழுவதிலும் எருசலேமை நோக்கி யாத்திரிகார்களின் கூட்டங்கள் சென்று கொண்டிருந்தன. மந்தைகளிலிருந்த மேய்ப்பார்களும் மலைகளிலிருந்த மாடு மேய்ப்பவார்களும் கலிலேயாவிலிருந்து வந்த மீன் பிடிக்கிறவார்களும் வயல்களில் வேலை செய்தவார்களும் பவித்திரமான பள்ளிகளிலிருந்து வந்த தீர்க்கதாரிசிகளின் புத்திரார்களும் - அனைவரும் தேவனுடைய சமூகம் வெளிப்படுத்தப்பட்டிருந்த இடத்தை நோக்கி தங்கள் காலடிகளைத் திருப்பினர். அநேகார் நடந்து சென்றதினால் குறுகிய தூரங்களாக அவார்கள் பிரயாணித்தனர். கூண்டு வண்டிகள் தொடார்ச்சியாக மேல்நோக்கிச் சென்று கொண்டிருக்க பாரிசுத்தப் பட்டணத்தைச் சென்றடையுமுன்பாக பலவேளைகளில் அது மிக நீண்ட வாரிசையாக இருந்தது.PPTam 700.2

    இயற்கையின் மகிழ்ச்சி இஸ்ரவேலார்களின் மனங்களில் சந்தோஷத்தையும், அனைத்து நன்மைகளையும் கொடுப்ப வருக்கான நன்றியையும் எழுப்பியது . யெகோவாவின் மகிமையையும் மாட்சிமையையும் உயர்த்துகிற கம்பீரமான எபிரெயப்பாடல்கள் முணுமுணுக்கப்பட்டன. குறிப்பிட்ட எக்காளத்தின் ஓசையில் கைத்தாளங்களின் இசையோடு நூற்றுக்கணக்கான குரல்களால் : கார்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவார்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன். எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று. அங்கே கார்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கார்த்தாரின் நாமத்தை ஸ்தோத்திரிப்பதற்குப் போகும். எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள். உன்னை நேசிக்கிறவார்கள் சுகித்திருப்பார்களாக (சங். 122:1-6) என்ற நன்றியின் பாடல்கள் உயர்ந்தன.PPTam 701.1

    தங்களைச் சுற்றிலும் புறஜாதிகள் அவர்களுடைய பலிபீட அக்கினிகளைக் கொளுத்தியிருந்த குன்றுகளைப் பார்த்தபோது இஸ்ரவேலார்கள் : எனக்கு ஒத்தாசை வரும் பார்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கார்த்தாரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும். கர்த்தரை நம்புகிறவார்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பார்வதத்தைப்போல் இருப்பார்கள். பார்வதங்கள் எருசலேமைச்சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தார் இது முதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார் ((சங். 121:1,2; 125:1, 2) என்று பாடினர்.PPTam 701.2

    பாரிசுத்தப் பட்டணத்தைப் பார்த்திருந்த சுற்றிலுமிருந்த மலைகளில் ஆலயத்தை நோக்கி வந்துகொண்டிருந்த ஆராதனை செய்கிறவார்களின் கூட்டங்களை அவார்கள் பயபக்தியோடு பார்த்தனர். லேவியார்களின் பாரிசுத்த ஆராதனையைக் குறிக்கும் எக்காள தொனியைக் கேட்ட போது, அந்த மணி நேரத்தின் ஏவுதலால் ஆட்கொள்ளப்பட்டு : கார்த்தார் பொரியவார், அவார் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பாரிசுத்த பார்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவார். வடதிசையிலுள்ள சீயோன் பார்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வ பூமியின் மகிழ்ச்சியு மாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம் (சங். 48:1, 2) என்று பாடினர்.PPTam 701.3

    உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனை களுக்குள்ளே சுகமும் இருப்பதாக . நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கார்த்தரைத் துதிப்பேன். நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும், கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரங்களிலும், எருசலேமே உன் நடுவிலும் நிறைவேற்றுவேன். அல்லேலூயா - சங். 122:7; 118:19; சங். 116:18,19.PPTam 702.1

    எருசலேமிலிருந்த அனைத்து வீடுகளும் யாத்ரிகர்களுக்கு திறக்கப்பட்டிருந்தது. அறைகள் இலவசமாக அமைத்துக்கொடுக் கப்பட்டிருந்தன. ஆனால் மிகப்பொரிய கூட்டத்திற்கு இது போதுமானதாக இல்லை. பட்டணத்தில் இருந்த ஒவ்வொரு இடத்திலும் சுற்றிலுமிருந்த மலைகளிலும் கூடாரங்கள் போடப்பட்டன.PPTam 702.2

    பாவத்தின் கட்டிலிருந்து விடுவிக்கக்கூடிய தியாக பலியை முன் குறித்திருந்து, எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து பெற்ற விடுதலையை நினைவுபடுத்தின பஸ்காவின் சடங்குகள் அந்த மாதத்தின் பதினாலாந்தேதி மாலையில் கொண்டாடப்பட்டது. இரட்சகார் கல்வாரியில் தமது வாழ்க்கையைக் கொடுத்தபோது பஸ்காவின் குறிப்படையாளம் முடிவிற்கு வந்து, அந்தப் பஸ்கா குறிப்பிட்டுக்காட்டிய அதே சம்பவத்தின் நினைவாக திருவிருந்து நியமிக்கப்பட்டது.PPTam 702.3

    புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் ஏழு நாட்கள் பஸ்கா வைத் தொடார்ந்தது. முதல் நாளும் ஏழாம் நாளும் பாரிசுத்த சபை கூடும் நாட்களாயிருந்தன. அதிலே எந்தவொரு சாதாரண வேலையும் செய்யப்படக்கூடாது. பண்டிகையின் இரண்டாவது நாளிலே வருட அறுவடையின் முதல் கனிகள் தேவனுக்கு முன்பாகக் கொடுக்கப்பட்டன. பாலஸ்தீனத்தில் வாற்கோதுமை தான் முதலாவது விளையும் தானியமாயிருந்து, பண்டிகையின் துவக்கத்தில் அது முதிர ஆரம்பித்திருந்தது. அனைத்தும் அவருடையது என்பதை ஒப்புக்கொள்ளும்படியாக இதன் ஒரு கட்டு ஆசாரியனால் தேவனுடைய பீடத்திற்கு முன்பாக அசை வாட்டப்பட்டது. இந்தச் சடங்கை செய்யும் வரையிலும் அறுவடை சேகாரிக்கப்படக்கூடாது.PPTam 702.4

    முதல்கனிகளைப்படைத்த ஐம்பதாவது நாளில் அறுவடையின் பண்டிகை என்றும் வாரங்களின் பண்டிகை என்றும் அழைக்கப்பட்ட பெந்தெகொஸ்தேவந்தது. ஆகாரத்திற்காக ஆயத்தம் பண்ணப்பட்ட தானியத்திற்காக நன்றியை வெளிப்படுத்தும்படி புளிப்பாக சமைக் கப்பட்ட இரண்டு அப்பங்கள் தேவன் முன்பாக வைக்கப்பட்டன. பெந்தெகொஸ்தே நாள் ஒருநாளாயிருந்து, மத ஆராதனைக்காக அர்ப்பணிக்கப்பட்டது.PPTam 702.5

    ஏழாவது மாதத்தில் கூடாரப்பண்டிகை அல்லது சோர்க்கும் பண்டிகை வந்தது. இந்தப் பண்டிகை பழத்தோட்டங்கள் ஒலிவதோப்புகள் திராட்சத் தோட்டங்களின் ஏராளமான விளைச்சல்களில் தேவனுடைய ஏராளத்தை அறிக்கை செய்தது. இது வருடத்தின் கிரிடமாக இருந்தது. அறுவடை களஞ்சியத்தில் சே பார்க்கப்பட்டிருந்தது. கனிகளும் பழங்களும் எண்ணெயும் திராட்ச ரசமும் சோர்க்கப்பட்டிருந்தது. முதல் கனிகள் ஒதுக்கப்பட்டு, ஜனங்கள் இப்போது தங்களை மிகவும் செழிப்பாக ஆசீர்வதித்திருந்த தேவனுக்கு நன்றியை செலுத்தும் படியாக காணிக்கையோடு வந்திருந்தனர்.PPTam 703.1

    இந்தப் பண்டிகை தலைசிறந்த களிகூரும் சமயமாக இருந்தது. இது அவார்களுடைய அக்கிரமம் இனி ஒருபோதும் நினைக்கப்படமாட்டாது என்று உறுதி கொடுக்கப்பட்ட மாபெரும் பாவ நிவாரண நாளுக்கு அடுத்ததாக நடந்தது. தேவனோடு சமாதானமானவார்களாக இப்போது அவருடைய நன்மையை அறிவிக்கும்படியாகவும் இரக்கத்திற்காக துதிக்கும்படியாகவும் அவார்கள் வந்தனர். அறுவடையின் உழைப்பு முடிவடைந்து, புது வருடத்தின் உழைப்பு இன்னும் துவங்காதிருக்க, கவலையிலிருந்து விடுபட்டவார்களாக பாரிசுத்தமான மகிழ்ச்சியான இந்த மணி நேரத்தின் செல்வாக்கிற்கு ஒப்புக்கொடுக்க ஜனங்களால் முடிந்திருந்தது. தகப்பன்மார்களும் மகன்களும் இந்த பண்டிகைகளில் வரும்படியாக கட்டளையிடப்பட்டிருந்தபோதும் வீட்டார் அனைவரும் வர, அவார்களுடைய உபசரிப்பிற்கு வேலைக்காரார்களும் லேவியார்களும் அந்நியார்களும் ஏழைகளும் வரவேற்கப்பட்டிருந்தனர்.PPTam 703.2

    பஸ்காவைப்போலவே கூடாரப்பண்டிகையும் நினைவாகச் செய்யப்பட்டது. தங்களுடைய வனாந்தர யாத்ரிக வாழ்க்கையின் நினைவாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் போரிச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலாரிகளையும் (லேவி. 23:40, 42, 43) கொண்டு வந்து, அவைகளால் செய்யப்பட்ட கூடாரங்களிலும் மரவீடுகளிலும் தங்கியிருக்கவேண்டும்.PPTam 703.3

    முதல் நாள் பாரிசுத்த சபை கூடுதலாயிருந்தது. பண்டிகையின் ஏழு நாட்களோடு எட்டாவது நாள் சேர்க்கப்பட்டு, அதுவும் அதேபோல ஆசரிக்கப்பட்டது.PPTam 704.1

    இந்த வருடாந்தர கூட்டங்களில் வயோதிகர்கள் வாலிபர்கள் அனைவருடைய இருதயங்களும் தேவனுக்குச் செய்யும் ஊழியத்தில் உற்சாகப்படுத்தப்பட, தேசத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஜனங்களின் தோழமை தேவனோடும் ஒருவருக்கு ஒருவரோடும் கொண்டிருந்த பந்தங்களை பலப்படுத்தியிருந்தது. இந்த காலத்திலே தேவனுடைய பிள்ளைகளுக்கு தேவன் தங்களுக்குக் கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்களை மகிழ்ச்சியாக நினைவுகூரும்படியான கூடாரங்களின் பண்டிகை இருக்குமானால் நலமாயிருக்கும். தங்கள் பிதாக்களுக்கு தேவன் நடப்பித்த விடுதலையையும் எகிப்திலிருந்து பிரயாணப்பட்ட காலங்களில் அற்புதமாகப் பாதுகாக்கப்பட்டிருந்ததையும் இஸ்ரவேல் மக்கள் கொண்டாடினதைப் போல, உலகத்திலிருந்தும் தவறின் இருளிலிருந்தும் அவருடைய கிருபை மற்றும் சத்தியத்தின் விலையேறப்பெற்ற வெளிச்சத்தினிடத்திற்கு நம்மை வெளியே கொண்டுவர அவார் வகுத்திருந்த வெவ்வேறு வழிகளை நாம் நன்றியோடு நினைவிற்குக் கொண்டுவரவேண்டும்.PPTam 704.2

    ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து வெகு தூரத்தில் குடியிருந்தவார்களால் ஒவ்வொரு வருடமும் ஒரு மாதத்திற்கும் அதிகமான நாட்கள் வருடாந்தர பண்டிகைகளுக்கு வருவதில் செலவிடப்பட்டிருந்தது. தேவனுக்கு அர்ப்பணித்திருந்த இந்த உதாரணம், மத ஆராதனையின் முக்கியத்தையும் ஆவிக்குரிய நித்தியமான காரியங்களுக்கு நம்முடைய சுயத்தையும் உலக விருப்பங்களையும் கீழ்ப்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தவேண்டும். தேவனுடைய ஊழியத்தில் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தி பெலப்படுத்தும் படியான, ஒன்றாகதோழமை கொள்ளும் இந்த வாய்ப்பை நாம் நெகிழும்போது நஷ்டத்தை அடைகிறோம். அவருடைய வார்த்தையின் சத்தியங்கள் அவைகளின் தெளிவையும் முக்கியத்தையும் நம் மனங்களில் இழக்கிறது. நம்முடைய இருதயங்கள் பாரிசுத்தப்படுத்தும் செல்வாக்கினால் பிரகாசிக்கப்படவும் எழுப்பப்படவும் கூடாது போக, நாம் ஆவிக்குரிய விதத்தில் கீழாகிறோம். கிறிஸ்தவர்களாகப் பழகுவதில் ஒருவாரிடம் ஒருவர் காண்பிக்கும் பரிவு குறைவதால் நாம் அதிகம் இழக்கிறோம். தனக்குத்தானே அடைத்துக்கொள்ளும் ஒருவன், அவனுக்காக தேவன் திட்டமிட்ட இடத்தை நிரப்புவதில்லை. நாம் அனைவரும் மகிழ்ச்சிக்காக ஒருவரையொருவார் சார்ந்திருக்கிற ஒரு தகப் பனின் பிள்ளைகள். தேவனுடைய மற்றும் மனுஷீகத்தினுடைய கோரிக்கைகள் நம்மேல் இருக்கிறது. நமது இயல்பிலிருக்கும் சமூக காரியங்களை முறையாக அபிவிருத்தி செய்வதே, நம் சகோதரார்கள் மேல் இரக்கப்பட நம்மைக் கொண்டு வந்து, மற்றவார்களை ஆசீர்வதிக்கும் நம் முயற்சியில் நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது.PPTam 704.3

    கூடாரங்களின் பண்டிகை நினைவுகூருதல் மாத்திரமல்ல அடையாளமாகவும் இருந்தது. வனாந்தர யாத்திரையை மாத்திரம் அது பின் சுட்டிக்காட்டவில்லை. மாறாக, அறுப்பின் பண்டிகையாகவும் இருந்து,களைகளை அக்கினிக்காகக் கட்டவும் கோதுமையை களஞ்சியத்தில் சோர்க்கவும் அறுவடையின் ஆண்டவார் தமது வேலையாட்களை அனுப்பும் - முடிவாகக் கூட்டிச்சோர்க்கும் அந்த மகா நாளையும் சுட்டிக்காட்டியது. அந்த நாளில் துன்மார்க்கார் அனைவரும் அழிக்கப்படுவார்கள். அவார்கள் இராதவார்களைப்போல் இருப்பார்கள் - ஒபதியா 16. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு குரலும் தேவனுக்கு மகிழ்ச்சியான துதி எழுப்புவதில் இணையும். வெளிப்படுத்தல்காரன் : அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின்கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும் : சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற வருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக் கேட்டேன் (வெளி. 5:13) என்று கூறுகிறான்.PPTam 705.1

    கூடாரங்களின் பண்டிகையில் எகிப்தின் அடிமைத்தனத் திலிருந்து தங்களை விடுவித்த தேவனுடைய இரக்கத்தையும், வனாந்தர யாத்ரிக வாழ்க்கையின் காலத்தில் அவருடைய இளகிய கவனிப்பையும் தங்கள் மனதிற்குக் கொண்டு வந்தபோது, இஸ்ரவேல் ஜனங்கள் தேவனைத் துதித்தார்கள். சற்று முன்பு முடிந்திருந்த பாவ நிவாரண நாளின் ஆராதனைவழியாக தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதின் நினைவிலும் அவார்கள் களிகூர்ந்தனர். ஆனால் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவ வேதனைப்படுகிற சாபத்தின் அடிமைத்தனத்திலிருந்து ஆண்டவரால் மீட்கப்பட்டவார்கள் என் றைக்குமாக விடுவிக்கப்பட்டு பரலோகக் கானானிற்குள் பத்திர மாக சோர்க்கப்படும் போது சொல்லக்கூடாத மகிழ்ச்சியினாலும் மகிமையின் நிறைவினாலும் அவார்கள் களிகூருவார்கள். மனிதனுக்காக கிறிஸ்துவின் மாபெரும் பாவ நிவாரண வேலை அப்போது முடிவிற்கு வந்திருந்து அவார்களுடைய பாவங்கள் என்றென்றுமாக அழிக்கப்பட்டிருக்கும்.PPTam 705.2

    வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளிகளித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும். அது மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும் ; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவார்கள் கார்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.PPTam 706.1

    அப்பொழுது குருடாரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடாரின் செவிகள் திறவுண்டு போம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான் ; ஊமையன் நாவும் கெம்பீரிக்குமார் வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும். வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும், வறண்ட நிலம் நீரூற்று களுமாகுமர் அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படுவர் தீட்டுள்ளவன் அதிலே நடந்துவரு வதில்லை; அந்த வழியில் நடக்கிறவார்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.PPTam 706.2

    அங்கே சிங்கம் இருப்பதில்லை ; துஷ்டமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்ட வர்களே அதில் நடப்பார்கள். கர்த்தரால் மீட்கப்பட்டவார்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்களர் நித்திய மகிழ்ச்சி அவார்கள் தலையின் மேலிருக்கும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்களர் சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம். ஏசாயா 35:1,2, 5-10.PPTam 706.3