Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    33 - சீனாய் முதல் காதேஸ் மட்டும்

    இஸ்ரவேல் சீனாய்க்கு வந்து சேர்ந்த கொஞ்ச நாட்களாக கூடாரக் கட்டுமானம் துவங்காதிருந்தது. அந்த யாத்திரையின் இரண்டாம் வருட துவக்கத்தில் தான் அந்த பரிசுத்தமான அமைப்பு முதலாவது அமைக்கப்பட்டது. அதன்பின்னர் ஆசாரியர்களின் பிரதிஷ்டையும், பஸ்கா கொண்டாட்டமும், ஜனங்களைத் தொகையிடுவதும், சீனாவில் ஏறக்குறைய ஒரு வருடம் தங்கியிருப்பதற்கேதுவாக அவர்களுடைய உள்நாட்டு மற்றும் மத அமைப்பிற்குத் தேவையான வெவ்வேறு ஏற்பாடுகளை முழுமையாக்குவதும் தொடர்ந்தது. இங்கே அவர்களுடைய ஆராதனை இன்னும் அதிக தீர்க்கமான அமைப்பைப் பெற்றது. நாட்டின் அரசாட்சிக்கான சட்டங்கள் கொடுக்கப்பட்டன. கானான் தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு ஆயத்தப்பட மிகவும் அதிகமான ஒழுங்கமைப்பு செயலாக்கப்பட்டது.PPTam 470.1

    வியக்கத்தக்க முழுமையிலும் எளிமையிலும் மிக முழுமையான ஒழுங்கு முறை இஸ்ரவேலின் அரசாங்கத்தை அடையாளப்படுத்தியது. எபிரெயர்களின் பொருளாதாரத்தில், தேவனுடைய கிரியைகளின் பூரணத்திலும் முழுமையிலும் ஒழுங்கிலும் அதனுடைய கிரமம் குறிப்பிடத்தகுந்தவிதத்தில் வெளிக்காட்டப்பட்டிருந்தது . இஸ்ரவேலின் ஆட்சியாளரான தேவனே அதனுடைய அதிகாரத்திற்கும் அரசாங்கத்திற்கும் மையமாக இருந்தார். தேவனால் நியமிக்கப்பட்டு அவருடைய நாமத்தில் அதன் சட்டங்களை நிர்வகித்த மோசே, காணக்கூடிய தலைவனாக இருந்தான். கோத்திரங்களின் மூப்பர்களிலிருந்து எழுபது பேர் கொண்ட ஆலோசனைக்குழு மோசேக்கு தேசத்தினுடைய பொதுவான காரியங்களில் உதவி செய்யும்படியாக பின்னர் தெரிந்து கொள்ளப்பட்டது. அதற்கு அடுத்ததாக ஆசரிப்புக் கூடாரத்தில் தேவனோடு ஆலோசிக்கும் ஆசாரியர்கள் வந்தனர். தலைவர்கள் அல்லது பிரபுக்கள் கோத்திரங்களை ஆண்டு வந்தனர். அவர்களுக்குக் கீழ் ஆயிரம் பேருக்கு அதிபதிகளும்), நூறு பேருக்கு அதிபதிகளும்), ஐம்பது பேருக்கு அதிபதிகளும், பத்துப் பேருக்கு அதிபதிகளும் ) (உபா. 1:15) கடைசியாக விசேஷமான வேலைகளுக்கு நியமிக்கப்பட்ட தலைவர்களும் இருந்தனர்.PPTam 470.2

    எபிரெய முகாம் மிக ஒழுங்கான முறையில் ஏற்படுத்தப் பட்டிருந்தது. அது மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பாளயத்தில் அதற்கு நியமிக்கப்பட்ட இடத்தில் இருந்தது. காணக்கூடாத அரசர் தங்கியிருந்த ஆசரிப்புக் கூடாரம் நடுவிலிருந்தது; அதைச் சுற்றிலும் ஆசாரியரும் லேவியர்களும் வைக்கப் பட்டிருந்தனர். இதைத் தாண்டி மற்ற அனைத்துக் கோத்திரங்களும் முகாமிட்டிருந்தன.PPTam 471.1

    பாளயத்தில் தங்கியிருந்தபோதும் பிரயாணப்பட்ட போதும் ஆசரிப்புக் கூடாரத்தையும் அது தொடர்பான மற்ற அனைத்தையுங் குறித்த பொறுப்பு லேவியர்களிடம் கொடுக்கப்பட்டிருந்தது. பாளயம் முன் சென்ற போது அவர்கள் அதைப் பிரித்து, தங்குமிடத்தை சென்றடையும் போது அதை நிறுவ வேண்டும். மற்ற கோத்திரத்தின் எந்தவொரு நபரும் மரணத்தின் பேரில் தான் அதை நெருங்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். லேவியின் மூன்று குமாரர்களின் வம்சங்களான லேவியர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொருவருக்கும் விசேஷமான இடமும் வேலையும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆசரிப்புக் கூடாரத்தின் அருகில் மோசே மற்றும் ஆரோனின் கூடாரங்கள் இருந்தன. அதன் தென்புறத்தில் கோகாத்தியர்கள் இருந்தனர். அவர்களுடைய வேலை உடன்படிக்கைப் பெட்டியையும் மற்ற பணி மூட்டுகளையும் குறித்ததாயிருந்தது. வடபுறத்தில் மெராரியர்கள் இருந்தனர். தூண்களும் பாதங்களும் பலகைகளும் அவர்களுடைய பொறுப்பில் இருந்தன. பின்புறமாக கெர்சேபானியர்கள் இருந்தனர். அவர்களுடைய கவனிப்பில் சிலைகளும் திரைச்சீலைகளும் ஒப்படைக்கப்பட்டிருந்தன.PPTam 471.2

    ஒவ்வொரு கோத்திரத்தின் இடமும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் புறப்படும் போதும் தங்கும் போதும் தங்கள் செ ரந்த கொடியின் கீழ் ஆண்டவர் கட்டளையிட்டபடியே செல்ல வேண்டும். இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின் விருதாகியதங்கள் கொடியண்டையிலே தங்கள் கூடாரங்களைப் போட்டு, ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிராகச் சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள். எப்படிப் பாளயமிறங்குகிறார்களோ, அப்படியே அவரவர் தங்கள் வரிசையிலே தங்கள் கொடிகளோடே பிரயாணமாய்ப் போகக்கடவர்கள் - எண். 22, 17. எகிப்திலிருந்து இஸ்ரவேலோடு சேர்ந்து வந்த பல ஜாதி மக்கள் கோத்திரங்களோடு கூட அவர்களுடைய பகுதியில் தங்க அனுமதிக்கப்படவில்லை. மாறாக, பாளயத்தின் எல்லைகளில் தங்க வேண்டும். அவர்களுடைய குழந்தைகள் மூன்றாம் தலைமுறை வரைக்கும் இந்தக் கூட்டத்திலிருந்து விலக்கப்பட்டிருக்க வேண்டும். உபா. 237,3.PPTam 472.1

    பழுதில்லாத சுத்தமும், அத்துடன் கண்டிப்பான ஒழுங்கும் பாளயம் முழுவதிலும் அதன் சுற்றிலும் கட்டளையிடப்பட்டிருந்தது. முழுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகள் கட்டாயப்படுத்தப் பட்டிருந்தன. என்ன ஒரு காரணத்திலும் தீட்டுப்பட்ட ஒவ்வொரு மனிதனும் பாளயத்திற்குள் நுழைய தடை செய்யப்பட்டிருந்தான். இப்படிப்பட்ட மிகத்திரளான கூட்டத்தின் நலத்தை பாதுகாப்பதற்கு இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தவிர்க்கக்கூடாததாயிருந்தன. பூரணமான ஒழுங்கையும் தூய்மையையும் பராமரிக்கவும், பரிசுத்த தெய்வத்தினுடைய சமூகத்தை இஸ்ரவேல் மகிழ்ச்சியோடு அநுபவிக்கவும் இது அவசியமாயிருந்தது. உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலா விக்கொண்டிருக்கிறார், ஆகையால் ...... உன் பாளயம் சுத்த மாயிருக்கக்கடவது என்று அவர் அறிவித்தார்.PPTam 472.2

    இஸ்ரவேலின் பிரயாணங்கள் அனைத்திலும் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும் படிக்கு அவர்கள் முன் சென்றது - எண். 1033. கோகாத்தின் புத்திரர்களால் சுமக்கப்பட்ட பரிசுத்த தேவனுடைய பிரமாணத்தைக் கொண்டிருந்த பரிசுத்தப் பெட்டி கூட்டத்தை வழிநடத்த வேண்டும். அதற்கு முன்பாக மோசேயும் ஆரோனும் செல்ல, வெள்ளிப் பூரிகைகளை பிடித்திருந்த ஆசாரியர்கள் அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த ஆசாரியர்கள் மோசேயிட மிருந்து கட்டளைகளைப் பெற்று, எக்காளங்கள் வழியாக ஜனங்களுக்குத் தெரிவித்தனர். எக்காளங்களால் குறிப்பிடப்பட்ட அனைத்து நடக்கைகளைக் குறித்த குறிப்பான கட்டளைகளை ஒவ்வொரு கூட்டத்திற்கும் கொடுப்பது தலைவர்களின் கடமையாக இருந்தது. கொடுக்கப்பட்ட நடத்துதல்களோடு இணைந்து செல்வதை நிராகரிக்கும் எவரும் மரணத்தினால் தண்டிக்கப்பட்டனர்.PPTam 472.3

    தேவன் ஒழுங்கின் தேவனாயிருக்கிறார். பரலோகத்தோடு தொடர்புடைய ஒவ்வொன்றும் பரிபூரண ஒழுங்கில் இருக்கின்றது. ஒப்புக் கொடுத்தலும் முழுமையான ஒழுங்கும் தூதர் சேனையின் அசைவுகளைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஒழுங்கையும் அதற்கு இசைவான செயலையுமே வெற்றி சென்றடையும். இஸ்ரவேலர்களின் நாட்களில் இருந்ததைப் போன்ற அதே ஒழுங்கையும் அமைப்பையும் ஆண்டவர் தம்முடைய வேலையில் கோருகிறார்.PPTam 473.1

    அவருக்காக உழைக்கும் அனைவரும் கவனமின்றி ஒழுங்கற்ற முறையில் அல்ல ஞானத்தோடு வேலை செய்யவேண்டும். தம்முடைய அங்கீகரிப்பின் முத்திரையை அவர் அதன்மேல் வைப்பதற்கேதுவாக தம்முடைய வேலை விசுவாசத்தோடும் மிகச்சரியாகவும் செய்யப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.PPTam 473.2

    இஸ்ரவேலர்களை அவர்களுடைய அனைத்து பிரயாணங்களிலும் தேவன் தாமே வழிநடத்தினார். அவர்கள் தங்க வேண்டிய இடம் மேகஸ்தம்பம் இறங்கினதின் வழியாக குறித்துக்காட்டப்பட்டது. அந்தப் பாளயத்தில் தங்க வேண்டியிருந்த காலம் வரையிலும் மேகம் கூடாரத்தின் மேல் தங்கியிருந்தது. அவர்கள் தங்கள் பிரயாணத்தைத் தொடரவேண்டி இருந்தபோது, அது பரிசுத்த கூடாரத்திற்கு மேல் உயரத்தில் எழுப்பப்பட்டது. பரிசுத்தமான ஆசீர்வாதம் அவர்கள் தங்கியிருந்ததையும் புறப்பட்டதையும் குறிப்பிட்டது. பெட்டியானது புறப்படும் போது, மோசே . கர்த்தாவே, எழுந்தருளும், உம்முடைய சத்துருக்கள் சி தறடிக்கப்படுவார்களாக, உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக என்பான். அது தங்கும் போது கர்த்தாவே, அநேக ஆயிரவர்களாகிய இஸ்ரவேலரிடத்தில் திரும்புவீராக என்று சொல்லுவான். - எண். 10. 35,36. கானானின் எல்லைகளில் சீனாய்க்கும் காதேசிற்கும் நடுவே பதினொரு நாள் பிரயாணமே இருந்தது. மேகம் கடைசியாக முன்செல்லும் குறிப்படையாளத்தைக் கொடுத்தபோது, வெகு சீக்கிரமாக அந்த நல்ல தேசத்திற்குள் நுழையும் எதிர்பார்ப்பில் சேனைகள் தங்களுடைய அணிவகுப்பை மீண்டும் தொடர்ந்தன. அவர்களை எகிப்திலிருந்து கொண்டு வருவதற்காக யெகோவா அதிசயங்களை நடப்பித்திருந்தார். அவரை தங்களுடைய ஒரே அரசனாக ஏற்றுக்கொள்ள ஏற்கனவே உடன்படிக்கை செய்திருப்பதினாலும், உன்னதமானவருடைய தெரிந்துகொள் ளப்பட்ட ஜனம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதினாலும், இப்போது என்ன ஆசீர்வாதங்களை அவர்கள் எதிர்பார்க் கக்கூடாது?PPTam 473.3

    எனினும் தாங்கள் அதிக காலம் பாளயமிட்டிருந்த அந்த இடத்தைவிட்டு அநேகர் தயக்கத்துடனேயே புறப்பட்டனர். ஏறக்குறைய அநேகர் அதையே தங்களுடைய இல்லமாகக் கருதியிருந்தனர். அந்தக் கருங்கல் சுவர்களின் மறைவில், தம்முடைய பரிசுத்த பிரமாணங்களை அவர்களுக்குக் கூறுவதற்காக, மற்ற தேசங்களிலிருந்து பிரித்து தேவன் தமது ஜனங்களைக் கூட்டியிருந்தார். தேவனுடைய மகிமை பலவேளைகளில் காணப்பட்டிருந்த அந்தப் பரிசுத்த மலையின் பழமையான சிகரங்களையும் தரிசு முகடுகளையும் காண அவர்கள் விரும்பியிருந்தனர். அந்தக் காட்சி தேவனுடைய சமூகத்தோடும் பரிசுத்த தூதர்களோடும் மிக நெருக்கமாக இணைந்திருந்ததால், அது எண்ணமின்றி யோ அல்லது மகிழ்ச்சினால் கூட விட்டுவிடக்கூடாத அளவு பரிசுத்தமாகத் தோன்றியது.PPTam 474.1

    எக்காளக்காரரின் குறிப்பினால் கூடாரம் நடுவிலும் ஒவ்வொரு கோத்திரமும் தன்னுடைய கொடியின் கீழ் நியமிக்கப்பட்ட இடத்திலிருக்க முழு பாளயமும் புறப்பட்டது. மேகம் எந்த திசையில் நடத்தும் என்ற எதிர்பார்ப்போடு அனைத்து கண்களும் திரும்பின. அது மலைகள் ஒன்று சேர்ந்து கூட்டமாயிருந்த, இருண்டு பாழடைந்திருந்த கிழக்கை நோக்கி நகர்ந்தபோது அநேக மனங்களில் வருத்தமும் சந்தேகமும் எழும்பியது.PPTam 474.2

    முன் சென்ற போது பாதை மிகவும் கடினமானது. அவர்களுடைய வழி மலை பாறையிடுக்கின் வழியாகவும் தரிசு நிலத்தின் வழியாகவும் இருந்தது. அவர்களைச் சுற்றிலும் மாபெரும் வனாந்தரம் அவாந்தரவெளியும், பள்ளங்களுமுள்ள தேசமும், வறட்சியும், மரண இருளுமுள்ள தேசமும், ஒருவனும் கடவாமலும் ஒரு மனுஷனும் குடியிராமலும் இருக்கிற தேசமுமான வனாந்தரம் (எரே. 26) இருந்தது. அந்த மலைப்பள்ளத்தாக்குகள் வெகு தூரத்திற்கு மிருகங்களாலும், வண்டில்கள் மிக நீண்ட வரிசையான மந்தைகள் மாடுகளோடு கூடிய ஆண்கள் பெண்கள் குழந்தைகளாலும் நிரம்பியிருந்தது. அவர்களுடைய முன்னேற்றம் வேலை நிறைந்ததும் மெதுவானதுமாக இருக்கவேண்டியதிருந்தது. மிக நீண்டகாலம் தங்கியிருந்த பின் அந்த திரளானவர்கள் வழியின் ஆபத்துகளையும் அசௌகரியங்களையும் சகிக்க ஆயத்தமற்ற வர்களாயிருந்தனர்.PPTam 474.3

    மூன்று நாள் பிரயாணத்திற்குப்பிறகு வெளிப்படையான குற்றச்சாட்டுகள் கேட்கப்பட்டன. இவைகள், இஸ்ரவேலர்களோடு முழுமையாக இணையாது, கடிந்து கொள்ளுவதற்கான காரணங்களுக்காகத் தொடர்ச்சியாகக் காத்திருந்த அநேக பலஜாதி மக்களிடமிருந்து ஆரம்பித்தன. குற்றஞ்சாட்டினவர்கள் அணிவகுத்ததிசையைக் குறித்து விருப்பத்தோடில்லை. மோசேயும் தாங்களும், தங்களை நடத்திச் செல்லும் மேகத்தையே தொடர்ச்சியாகப் பின்பற்றிக்கொண்டிருக்கின்றனர் என்பதை நன்கு அறிந்திருந்தும், மோசே அழைத்துச் சென்ற பாதையைக் குறித்து தொடர்ச்சியாக குற்றம் கண்டுபிடித்துக்கொண்டிருந்தனர். அதிருப்தி ஒரு தொற்றுவியாதி. அது விரைவாக பாளயமெங்கும் பரவியது.PPTam 475.1

    புசிக்க மாமிசத்திற்காக மீண்டும் அவர்கள் கூக்குரலிட்டனர். தாராளமாக மன்னா கொடுக்கப்பட்டிருந்தபோதிலும், அவர்கள் திருப்தியடையவில்லை. எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது, இஸ்ரவேலர்கள் எளிமையான சாதாரண உணவினால் உயிர்பிழைக்க கட்டாயப்படுத்தப்பட்டிருந்தனர். ஆனால், தனிமைப்படுத்தப்பட்டதினாலும் கடினமான உழைப்பினாலும் தூண்டப்பட்ட பசி, அந்த உணவை சுவையானதாக்கியிருந்தது. இப்போது அவர்கள் நடுவில் இருந்த அநேக எகிப்தியர்கள் ஆடம் பரமான உணவில் பழகியிருந்தனர். இவர்கள்தான் குற்றப்படுத்த முதலாவது இருந்தனர். இஸ்ரவேல் சீனாயை அடைவதற்கு சற்று முன் மன்னர் கொடுத்தபோது ஆண்டவர் அவர்களுடைய கூக்குரலுக்கு பதிலாக இறைச்சியையும் கொடுத்திருந்தார். ஆனால் அது அவர்களுக்கு ஒருநாள் மாத்திரமே கொடுக்கப்பட்டிருந்தது.PPTam 475.2

    மன்னாவுடனேகூட தேவன் அவர்களுக்கு இறைச்சியையும் இலகுவாக ஏற்பாடு பண்ணியிருக்கலாம். ஆனால் அவர்களுடைய நன்மைக்காக அதன்மேல் ஒரு கண்டிப்பு வைக்கப்பட்டது. எகிப்தில் அவர்கள் பழகியிருந்த சத்துக்குறைந்த ஆகாரத்தை விடவும் அவர்களுடைய தேவைகளை இன்னும் மேன்மையாக சந்திக்கக்கூடிய உணவைக் கொடுப்பது ஆண்டவருடைய நோக்கமாக இருந்தது. ஆதாமிற்கும் ஏவாளுக்கும் ஏதேன் தோட்டத்தில் கொடுத்திருந்த ஆதியிலே மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்டிருந்த பூமியின் கனிகளில் அவர்கள் களிகூரும் படியாக, சீர்கேடடைந்திருந்த பசி அதிக சுகாதார நிலைக்குக் கொண்டு வரப்பட வேண்டியதிருந்தது. இதற்காகவே இஸ்ரவேலர்கள் அதிக அளவு புலால் உணவு தரப்படாதிருந்தனர்.PPTam 475.3

    இந்தக் கண்டிப்பை அநீதியும் கொடுமையுமானதாக கருதும்படி சாத்தான் அவர்களை சோதித்தான். விலக்கப்பட்டிருந்த பொருட்களின் மேலிருக்கும் பசியின் கட்டுப்படுத்தப்படாத திளைப்பு அவர்களில் சிற்றின்ப உணர்வை உண்டு பண்ணக்கூடும் என்றும், இதன் வழியாக வெகு இலகுவாக மக்களை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்றும் அவன் கண்டதினால், விலக்கப்பட்ட காரியங்களின் மேல் இச்சை கொள்ளும்படியாக நடத்தினான். எங்கே அதிக வெற்றி பெறக்கூடுமோ, அங்கேதான் வியாதியையும் துன்பத்தையும் கொண்டு வந்தவன் மனிதர்களைத் தாக்குவான். விலக்கப்பட்ட கனியை புசிக்கும் படியாக ஏவளை தூண்டின நேரத்திலிருந்து பசியின் மேல் கொடுக்கப்பட்ட சோதனைகளின் வழியாக மிகப்பெரும் அளவில் அவன் மனிதர்களை பாவத்திற்குள் நடத்தியிருக்கிறான். இந்த வழியாகத்தான் இஸ்ரவேலர்களை தேவனுக்கு எதிராக முறுமுறுக்க அவன் நடத்தினான். புசிப்பதிலும் குடிப்பதிலும் இச்சையடக்கமின்றி நடப்பது எப்போதும் செய்வதைப்போலவே கீழான உணர்வுகளுக்கு நடத்தி, அனைத்து சன்மார்க்க கடமைகளையும் கருத்தில் கொள்ளாதிருக்க மனிதருக்கு வழியை ஆயத்தம் பண்ணுகிறது. சோதனைகளினால் தாக்கப்படும் போது எதிர்த்து நிற்க அவர்களுக்கு கொஞ்ச பலமே இருக்கிறது.PPTam 476.1

    கானான் தேசத்தில் தூய்மையான மகிழ்ச்சியான பரிசுத்தமான மக்களாக அவர்களை வாழவைப்பதற்காகவே தேவன் இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து அழைத்துவந்தார். இந்த நோக்கத்தை நடப்பிப்பதற்காக அவர்களுடைய சொந்த நன்மைக்கும் அவர்களுடைய சந்ததியாரின் நன்மைக்குமாக அவர்களை ஒழுங்கின் படிப்பினையின்கீழ் அவர் வைத்தார். பசி யை மறுக்க அவர்கள் சித்தங்கொண்டிருந்தார்களானால், அவருடைய ஞானமுள்ள கண்டிப்புகளுக்குக் கீழ்ப்படிவதினால் பெலவீனமும் வியாதியும் அவர்கள் நடுவே அறியப்படா திருந்திருக்கும், அவர்களுடைய பின் சந்ததியினர் சரீர மன பலங்களைப் பெற்றிருப்பார்கள். சத்தியத்தையும் கடமையையும் கூரிய பாகுபாட்டையும் ஞானமான தீர்ப்பையுங்குறித்த தெளிவான அறிவை பெற்றிருந்திருப்பார்கள். ஆனால் தேவனுடைய கட்டுப்பாடுகளுக்கும் கோரிக்கைகளுக்கும் அடங்கிப்போக விருப்பமில்லாதிருந்தது, அவர்கள் அடைய வேண்டும் என்று தேவன் வாஞ்சித்திருந்த உயர்ந்த தரத்தை எட்டுவதையும், அவர்கள் மேல் வைக்க அவர் ஆயத்தமாயிருந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளுவதையும் மிக அதிக அளவில் தடுத்திருந்தது.PPTam 476.2

    சங்கீதக்காரன். தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தைக் கேட்டு, தங்கள் இருதயத்தில் தேவனைப் பரீட்சை பார்த்தார்கள். அவர்கள் தேவனுக்கு விரோதமாய்ப் பேசி : தேவன்வனாந்தரத்திலே போஜன பந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ? இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாய்ப் புரண்டு வந்தது, அவர் அப்பத்தையும் கொடுக்கக்கூடுமோ? தம்முடைய ஜனத்திற்கு மாம்சத்தையும் ஆயத்தப்படுத்துவாரோ? என்றார்கள். ஆகையால் கர்த்தர் அதைக் கேட்டுக் கோபங்கொண்டார் (சங். 78:18-21) என்று கூறுகிறான். சிவந்த சமுத்திரத்திலிருந்து சீனாய் வரையிலுமிருந்த பிரயாணத்தில் முறுமுறுத்தலும் கலகமும் அடிக்கடி நடந்தன. ஆனாலும் அவர்களுடைய அறியாமையின் மேலும் குருட்டாட்டத்தின் மேலுமிருந்த பரிதாபத்தினால் பாவத்திற்கான நியாயத்தீர்ப்புகளை தேவன் அனுப்பவில்லை. ஆனால் அப்போதிருந்து அவர் தம்மை ஓரேபிலே வெளிப்படுத்தியிருந்தார். தேவனுடைய மாட்சி மைக்கும் வல்லமைக்கும் கிருபைக்கும் சாட்சிகளாயிருந்ததினால் அவர்கள் அதிக ஒளியை பெற்றிருந்தார்கள். அவர்களுடைய அவிசுவாசமும் அதிருப்தியும் மிகப் பெரிய குற்றத்தை அவர்கள் மேல் சுமத்தியது. மேலும் யெகோவாவை தங்கள் இராஜாவாக ஏற்றுக்கொண்டு அவருடைய அதிகாரத்திற்கு கீழ்ப்படிவதாக அவர்கள் உடன்படிக்கை செய்திருந்தார்கள்.PPTam 477.1

    அவர்களுடைய முறுமுறுப்பு இப்போது கலகமாயிருந்தது. இஸ்ரவேல் சட்டமில்லாத நிலையிலிருந்தும் அழிவிலிருந்தும் காக்கப்பட வேண்டுமெனில், மீறுதல் உடனடியாக குறிப்பிடத்தக்க தண்டனையைப் பெற வேண்டும். கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்து, பாளயத்தின் கடைசியிலிருந்த சிலரைப் பட்சித்தது. குற்றஞ்சாட்டினவர்களின் மிக அதிக குற்றவாளிகளாயிருந்தவர்கள் மேகத்திலிருந்து வந்தமின்னலினால் கொல்லப்பட்டனர், ஜனங்கள் திகிலினால் ஆண்டவரிடம் தங்களுக்காக மன்றாடும் படி மோசேயை நாடினார். அவனும் அவ்வாறே செய்ய, அக்கினி அவிந்து போயிற்று. இந்த நியாயத்தீர்ப்பின் நினைவாக அந்த இடத்தை தபேரா என்று அவன் அழைத்தான்.PPTam 477.2

    ஆனாலும் அந்த தீமை முன்பிருந்ததைக் காட்டிலும் விரைவாக மிகக் கேடடைந்தது. உயிர்பிழைத்தவர்களை தாழ்மைக்கும் மனதிரும்புதலுக்கும் நடத்துவதற்குப் பதிலாக இந்த பயங்கரமான நியாயத்தீர்ப்பு அவர்களுடைய முறுமுறுப்புகளை அதிகப்படுத்துவதாகக் காணப்பட்டது. அழுது புலம்பி அனைத்து திசைகளிலும் ஜனங்கள் தங்கள் கூடாரவாசலின் முன் கூடினர். அவர்களுக்குள் இருந்த பல ஜாதியான அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக் கொடுப்பவர் யார்? நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப் பூண்டுகளையும் நினைக்கிறோம். இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது, இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள். இவ்வாறாக தேவனால் தங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவின் மேலிருந்த அதிருப்தியை வெளிக்காட்டினார்கள். எனினும் அது அவர்களுடைய தேவைகளைச் சந்தித்தது என்பதற்கு நிலையான சான்று அவர்களிடம் இருந்தது. ஏனெனில் அவர்கள் கடந்து வந்த இந்த கடின நிலையிலும் அவர்களுடைய அனைத்து கோத்திரங்களிலும் ஒரு பெலவீனனும் இருக்கவில்லை .PPTam 478.1

    மோசேயின் இருதயம் துவண்டது. அவனுடைய சொந்த சந்ததி பெரிய ஜாதியாகக் கூடியதாயிருந்தபோதும் இஸ்ரவேல் அழிக்கப்படக்கூடாது என்று அவன் மன்றாடினான். அவர்கள் மேல் இருந்த தன்னுடைய அன்பினால் அழியும் படியாக அவர்களை விட்டுவிடப்படுவதற்குப்பதிலாக, தன்னுடைய பெயர் ஜீவப்புத்தகத்திலிருந்து அழிக்கப்படவேண்டும் என்று ஜெபித்தான்.PPTam 478.2

    அவர்களுக்காக அவன் அனைத்தையும் ஆபத்திற்குள்ளாக்கியிருந்தான். ஆனால் இதுவே அவர்களுடைய பதிலாக இருந்தது. அவர்களுடைய அனைத்து கஷ்டமும், கற்பனை செய்திருந்த துன்பங்களும் கூட அவன் மேல் வைக்கப்பட்டன. அவர்களுடைய துன்மார்க்கமான முறுமுறுப்புகள் அவன் ஏற்கனவே சுமந்து தள்ளாடிக்கொண்டிருந்த கவனிப்பையும் பொறுப்பையும் இரண்டு மடங்கு பாரமாக்கிற்று. அவனுடைய துயரத்தில் தேவனை நம்பாதிருக்கும்படிகூட அவன் சோதிக்கப்பட்டான். அவனுடைய ஜெபம் ஏறக்குறயை ஒரு குற்றச்சாட்டாகவே இருந்தது. நீர் இந்த ஜனங்கள் எல்லாருடைய பாரத்தையும் என்மேல் சுமத்தினதினால், உமது அடியானுக்கு உபத்திரவம் வரப்பண்ணின் தென்ன, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடையாதேபோன தென்ன?...... இந்த ஜனங்கள் எல்லாருக்கும் கொடுக்கிறதற்கு எனக்கு இறைச்சி எங்கேயிருந்து வரும்? எனக்கு இறைச்சி கொடு என்று என்னைப் பார்த்து அழுகிறார்களே. இந்த ஜனங்களெல்லா ரையும் நான் ஒருவனாய்த் தாங்கக்கூடாது, எனக்கு இது மிஞ்சின பாரமாயிருக்கிறது என்றான்.PPTam 478.3

    ஆண்டவர் அவனுடைய ஜெபத்தைக் கேட்டார். இஸ்ரவேலின் மூப்பர்களாக எழுபது மனிதர்களை வயதில் முதியவர்கள் மாத்திரமல்ல, மரியாதையும் விவேகமும் அனுபவமும் கொண்டிருந்தவர்களை அழைக்கும் படியாக அவனுக்குக் கட்டளை கொடுத்தார், அவர்களை ஆசரிப்புக் கூடாரத்தினிடத்தில் அங்கே உன்னோடேகூட வந்து நிற்கும்படி செய். அப்பொழுது நான் இறங்கி வந்து, அங்கே உன்னோடே பேசி, நீ ஒருவன் மாத்திரம் ஜனங்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடேகூட அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள் மேலும் வைப்பேன் என்றார்.PPTam 479.1

    தன்னுடைய பொறுப்பைப் பகிர்ந்து கொள்ளும் மிக உண்மை யுள்ள தகுதியுள்ள மனிதர்களை தனக்காக தெரிந்துகொள்ளும்படி ஆண்டவர் அவனையே அனுமதித்தார். அவர்களுடைய செல் வாக்கு ஜனங்களின் வன்முறையை கட்டுப்படுத்தவும் கலகத்தை அடக்கவும் அவனுக்கு உதவி செய்யும். எனினும் பயங்கரமான தீமைகள் அவர்களுடைய பதவி உயர்வின் முடிவாக விளையும். தேவனுடைய வல்லமையையும் நன்மையையுங்குறித்து தான் கண்டிருந்த சான்றுகளுக்கு இணையான விசுவாசத்தை மோசே வெளிக்காட்டியிருந்திருப்பானானால் அவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கமாட்டார்கள். ஆனால் அவன் தனது சொந்த பாரங்களையும் ஊழியங்களையும் பெரிதுபடுத்தி, தேவன் நடப் பித்த காரியங்களுக்கு தான் வெறும் கருவியே என்கிற உண்மையை ஏறக்குறைய மறந்திருந்தான். இஸ்ரவேலின் சாபமாயிருந்த முறு முறுக்கும் ஆவியில் அவ்வாறு அவன் மிகக்குறைவாக திளைத்திருந்தாலும் அது மன்னிக்கப்பட முடியாது. முழுமையாக தேவனைச் சார்ந்திருந்தானானால், ஆண்டவர் அவனை வழிநடத்தி, தொடர்ச்சியாக அவனுக்கு ஒவ்வொரு அவசரத்திற்கும் பலம் கொடுத்திருப்பார்.PPTam 479.2

    தேவன் அவர்களுக்காக செய்ய விருந்ததற்கு மக்களை ஆயத்தப்படுத்தும்படி மோசே நடத்தப்பட்டான். நாளைக்காக உங்களைப் பரிசுத்தம் பண்ணுங்கள், நீங்கள் இறைச்சி சாப்பிடு வீர்கள்; எங்களுக்கு இறைச்சி சாப்பிடக் கொடுப்பவர் யார் என்றும், எகிப்திலே எங்களுக்குச் சௌக்கியமாயிருந்தது என்றும், கர்த்தருடைய செவிகள் கேட்க அழுதீர்களே; ஆகையால் நீங்கள் சாப்பிடும்படி கர்த்தர் உங்களுக்கு இறைச்சி கொடுப்பார். நீங்கள் ஒருநாள், இரண்டு நாள், ஐந்து நாள், பத்து நாள், இருபது நாள் மாத்திரமல்ல, ஒரு மாதம் வரைக்கும் புசிப்பீர்கள், அது உங்கள் மூக்காலே புறப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப்போகுமட்டும் புசிப்பீர்கள், உங்களுக்குள் இருக்கிற கர்த்தரை அசட்டைபண்ணி, நாங்கள் ஏன் எகிப்திலிருந்து புறப்பட்டோம் என்று அவருக்கு முன்பாக அழுதீர்களே என்று சொல் என்றார்.PPTam 480.1

    என்னோடிருக்கிற காலாட்கள் ஆறுலட்சம் பேர்; ஒரு மாதம் முழுவதும் புசிக்கும் படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே. ஆடுமாடுகளை அவர்களுக்காக அடித்தாலும் அவர்களுக்குப் போதுமா? சமுத்திரத்து மச்சங்களையெல்லாம் அவர்களுக்காகச் சேர்த்தாலும் அவர்களுக்குப் போதுமா என்று மோசே வியந்தான்.PPTam 480.2

    அவனுடைய அவநம்பிக்கைக்காக அவன் கடிந்து கொள்ளப் பட்டான். கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று, நீ இப்பொழுது காண்பாய் என்றார்.PPTam 480.3

    ஆண்டவருடைய வார்த்தைகளை மோசே சபையாருக்குத் திரும்பக்கூறி எழுபது மூப்பர்களின் நியமனத்தையும் அவர்களுக்கு அறிவித்தான். தெரிந்து கொள்ளப்பட்ட இந்த மனிதர்களுக்கு மா பெரும் தலைவன் கொடுத்த பொறுப்பு இன்றைய நீதிபதிகளுக்கும் சட்ட வல்லுனர்களுக்கும் நியாயத்தின் நேர்மையைக் குறித்த நல்ல மாதிரியாக இருக்கக்கூடும். நீங்கள் உங்கள் சகோதரரின் வியாச் சியங்களைக் கேட்டு, இருபட்சத்தாராகிய உங்கள் சகோதரருக்கும், அவர்களிடத்தில் தங்கும் அந்நியனுக்கும், நீதியின்படி தீர்ப்புச் செய்யுங்கள். நியாயத்திலே முக்தாட்சியம் பாராமல் பெரியவனுக்குச் செவிகொடுப்பது போலச் சிறியவனுக்கும் செவிகொடுக்கக்கடவீர்கள், மனிதன் முகத்திற்குப் பயப்படீர்களாக, நியாயத்தீர்ப்பு தேவனுடையது (உபா. 1:16,17) என்றான்.PPTam 480.4

    மோசே இப்போது எழுபது பேரையும் ஆசரிப்புக் கூடாரத்திற்கு அழைத்தான். கர்த்தர் மேகத்தில் இறங்கி, அவனோடே பேசி, அவன் மேலிருந்த ஆவியை மூப்பராகிய அந்த எழுபது பேர் மேலும் வைத்தார், அந்த ஆவி அவர்கள் மேல் வந்து தங்கின மாத்திரத்தில் தீர்க்கதரிசனஞ்சொன்னார்கள்; சொல்லி, பின்பு ஓய்ந்தார்கள். பெந்தேகொஸ்தே நாளில் சீடர்களைப்போல அவர்கள் உன்னதத்திலிருந்து வந்த பெலனால் நிரப்பப்பட்டார்கள். இவ்வாறாக அவர்களை அவர்களுடைய வேலைக்கு ஆயத்தப் படுத்தவும் இஸ்ரவேலின் ஆட்சியில் மோசேயோடு இணையும் படியாக தேவன் தெரிந்து கொண்டவர்கள் என்று அவர்கள் மேல் மக்கள் நம்பிக்கை வைக்கவும், சபையார் முன்பு அவர்களை கனப்படுத்துவது ஆண்டவருக்கு விருப்பமாக இருந்தது.PPTam 481.1

    மீண்டுமாக உயர்ந்த சுயநலமற்ற ஆவியைக் குறித்த ஒரு சான்று கொடுக்கப்பட்டது . எழுபது பேரில் இரண்டுபேர் இவ்வளவு பொறுப்பான இடத்திற்கு தங்களுடைய தகுதியின்மையை உணர்ந்தவர்களாக, கூடார வாசலில் தங்கள் சகோதரரோடு சே ர்ந்து கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் எங்கே இருந்தார்களோ அங்கேதானே தேவனுடைய ஆவியானவர் அவர்கள் மேல் வந்தார். அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். இதைக்குறித்து அறிவிக்கப்பட்ட யோசுவா அந்த முறை கேட்டை தடுக்கும் விருப்பம் கொண்டவனாக, அவர்களுக்கிடையே பிரிவினை உண்டாகும் என்று பயந்து, தன்னுடைய எஜமான் மேலிருக்கும் மரியாதையினால் . என் ஆண்டவனாகிய மோசேயே, அவர்களைத் தடை பண்ணும் என்று கூறினான். நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிச னஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள் மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே என்று அவனுக்குப் பதில் வந்தது.PPTam 481.2

    சமுத்திரத்திலிருந்து வீசினபலமான காற்று ஒன்றுகாடைகளைக் கொண்டு வந்து, பாளயத்திலும் பாளயத்தைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும் அந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும் தரையின் மேல் இரண்டு முழ உயரம் விழுந்து கிடக் கச் செய்தது. அந்த பகல் முழுவதும் இராமுழுவதும் மறுநாள் முழுவதும் அதிசயமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவைச் சேகரிப்பதில் மக்கள் உழைத்தார்கள். கொஞ்சமாய்ச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்தான். தேவைப்படாத அனைத்தும் காய வைப்பதன் மூலமாக பாதுகாப்பப்பட, வாக்குப்பண்ணப்பட்டபடி ஒரு முழு மாதத்திற்கும் அது போதுமானதாயிருந்தது.PPTam 481.3

    மக்கள் பிடிவாதமாக வாஞ்சித்தபடியால் அவர்களுடைய உயர்ந்த நன்மைக்கு ஆகாததை தேவன் அவர்களுக்குக் கொடுத் தார். அவர்களுக்கு நன்மையென்று நிரூபிக்கப்பட்ட காரியங்களால் அவர்கள் திருப்தியடையமாட்டார்கள். அவர்களுடைய கலக விருப்பங்கள் திருப்தி செய்யப்பட்டன. ஆனால் அதன் விளைவுகளால் வேதனையடையும்படி விட்டுவிடப்பட்டார்கள். கட்டுப்பாடின்றி அவர்கள் விருந்துண்டார்கள். அவர்கள் எல்லையை மீறிச் சென்றது விரைவாக தண்டிக்கப்பட்டது. கர்த்தர் ஜனங்களை மகா பெரிய வாதையால் வாதித்தார். மிக அதிக எண்ணிக்கையானோர் சுட்டெரிக்கும் காய்ச்சலினால் அறுப்புண்டு போக, அவர்களில் மிக அதிக குற்றவாளிகளாயிருந்தவர்கள் அவர்கள் இச்சித்த உணவை சுவைத்ததுமே அடிக்கப்பட்டனர்.PPTam 482.1

    தபேராவைவிட்டு புறப்பட்ட பிறகு அடுத்ததாக பாளயமிறங் கிய ஆஸ்ரோத்தில் இன்னும் கசப்பான சோதனை மோசேக்குக் காத்திருந்தது. ஆரோனும் மிரியாமும் மிகவும் கனமான தலைமைப் பொறுப்பை வகித்திருந்தனர். தீர்க்கதரிசன வரம் கொடுக்கப்பட்டு, எபிரெயர்கள் விடுவித்ததில் இருவரும் மோசேயோடு தெய்வீகமாக இணைந்திருந்தனர். மோசே ஆரோன் மிரியாம் என்பவர்களை உனக்கு முன்பாக அனுப்பினேன் (மீகா 6:4) என்று மீகா தீர்க்கதரி சியின் வழியாக ஆண்டவர் உரைத்தார். நைல் நதியின் அருகே குழந்தையான மோசே மறைக்கப்பட்டிருந்த சிறிய பேழையை கண்காணித்திருந்ததில், மிரியாமினுடைய தீர்மானமான குணம் ஆரம்பத்திலேயே காட்டப்பட்டிருந்தது. அவளுடைய சுயகட் டுப்பாட்டையும் அறிவையும், தமது ஜனத்தை விடுவிக்கிறவனை பாதுகாக்கும் கருவியாக தேவன் உபயோகித்தார். கவிதை மற்றும் பாடலின் செழிப்பான வரம் கொடுக்கப்பட்டிருந்த மிரியாம், சிவந்த சமுத்திரத்தின் கரையில் இஸ்ரவேலின் பெண்களை பாடலிலும் நடனத்திலும் நடத்தியிருந்தாள். மக்கள் மேல் இருந்த பிரியத்தினாலும், மக்கள் அவள் மேல் கொண்டிருந்த பிரியத்தினாலும், பரலோகம் கொடுத்திருந்த கனத்தினாலும் மோசேக்கும் ஆரோனுக்கும் இரண்டாவதாகவே அவள் நின்றிருந் தாள். ஆனால் பரலோகத்திலே பிரிவினையை முதலில் உண்டாக்கின அதே தீமை இஸ்ரவேலின் இந்தப் பெண்ணின் இருதயத்திலும் எழுந்தது. தன்னுடைய அதிருப்தியில் தன்மேல் பரிதாபப்படும் ஒருவனை சம்பாதிப்பதில் அவள் தோல்வியடையவில்லை .PPTam 482.2

    எழுபது மூப்பர்களை நியமித்ததில் மிரியாமும் ஆரோனும் ஆலோசிக்கப்படவில்லை. அவர்களுடைய பொறாமை மோசேக்கு விரோதமாக எழும்பியது. இஸ்ரவேலர்கள் சீனாய்க்குப் போய்க்கொண்டிருந்த வழியில் எத்திரோ வந்து சந்தித்தபோது, தன்னுடைய மாமனாரின் ஆலோசனைகளை மோசே உடனடியாக ஏற்றுக்கொண்டதால், மாபெரும் தலைவன் மேல் தங்களுக்கிருந்த செல்வாக்கை எத்திரோவின் செல்வாக்கு மிஞ்சிவிட்டது என்று அவர்கள் பயந்தனர். எழுபது பேரின் ஆலோசனைக் கூட்டத்தை அமைத்ததில் தங்களுடைய தகுதியும் அதிகாரமும் புறக்கணிக்கப்பட்டது என்று அவர்கள் உணர்ந்தனர். மோசேயின் மேல் தங்கியிருந்த கவனம் மற்றும் பொறுப்பின் பாரத்தை மிரியாமும் ஆரோனும் ஒருபோதும் அறிந்ததில்லை. எனினும் அவனுக்கு உதவி செய்யும்படியாக அவர்கள் தெரிந்துகொள்ளப்பட்டிருந்த தினால் தலைமை பாரத்தை அவனோடு சமமாக பகிர்ந்து கொண்டிருப்பதாக தங்களைக்குறித்து எண்ணினார்கள். இன்னும் அதிக உதவியாளர்களை நியமித்ததை தேவைப்படாத ஒன்றாகக் கருதினார்கள்.PPTam 483.1

    தனக்கு ஒப்பு விக்கப்பட்டிருந்த மாபெரும் வேலையின் முக்கியத்துவத்தை வேறு ஒரு மனிதனும் உணர்ந்திராதவிதத்தில் மோசே உணர்ந்தான். அவன் தன் சொந்த பலவீனங்களை உணர்ந்தவனாக தேவனைத் தனது ஆலோசகராக்கியிருந்தான். ஆரோன் தன்னை மிக உயர்ந்தவனாக கணித்திருந்து தேவனைக் குறைவாக நம்பினான். சீனாயில் விக்கிரகாராதனைக்கடுத்த விஷயத்தில் கீழாக இணைந்து போனதினால் தன்னுடைய குணத்தின் பெலவீனத்திற்கு சான்று கொடுத்து, பொறுப்பு கொடுத்திருந்தபோது அவன் தோல்வியடைந்திருந்தான். ஆனால் மிரியமும் ஆரோனும் பொறாமையினாலும் பேராசையினாலும் இதை மறந்திருந்தனர். ஆரோனுடைய குடும்பம் ஆசாரியத் துவத்தின் பரிசுத்த பணிக்கு நியமிக்கப்பட்டிருந்ததினால் அவன் தேவனால் மிக உயர்வாக கனப்படுத்தப்பட்டிருந்தான். அதுவும் சுயத்தை உயர்த்தும் ஆசையில் கூட சேர்ந்து கொண்டது. கர்த்தர் மோசேயைக் கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். தாங்கள் தேவனால் சமமாக தயவு பெற்றதாகக் கருதி, அதே தகுதிக்கும் அதிகாரத்திற்கும் தாங்கள் தகுதியானவர்கள் என்று உணர்ந்தனர்.PPTam 483.2

    அதிருப்தியின் ஆவிக்கு ஒப்புக்கொடுத்தவளாக தேவன் விசேஷமாக மேற்போட்டுக்கொண்டு நடத்தியிருந்த சம்பவங்களில் குற்றம் பிடிப்பதற்கான காரணத்தை மிரியாம் கண்டாள். மோசேயின் திருமணம் அவளுக்கு விருப்பமில்லாததாயிருந்தது. அவன் எபிரெயர்களிலிருந்து தனக்கு ஒரு மனைவியை எடுப்பதற்குப் பதிலாக வேறொரு தேசத்தின் பெண்ணை தெரிந்து கொண்டது அவளுடைய குடும்பம் மற்றும் தேசத்தின் பெருமைக்கு பாதிப்பாக இருந்தது; சிப்போராள் மறைமுக அவமதிப்போடு நடத்தப்பட்டாள்.PPTam 484.1

    எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீ (எண். 121) என்று அழைக் கப்பட்ட போதிலும் மோசேயின் மனைவி மீதியானியப் பெண்ணாக ஆபிரகாமின் வம்சத்தைச் சார்ந்திருந்தாள். தனிப்பட்ட தோற்றத்தில் எபிரெயர்களைக் காட்டிலும் சற்று நிறம் குறைந்தவளாக வேறுபட்டிருந்தாள். இஸ்ரவேலாக இல்லாதிருந்த போதும் சிப்போராள் மெய்யான தேவனை வணங்குகிறவளாக இருந்தாள். அவள், பயந்து ஒதுங்கும் சுபாவமுள்ள, மென்மையும் பிரியமுமான, துன்பத்தைக் கண்டு மிகவும் துயரப்படுகிறவளாக இருந்தாள். இந்தக் காரணத்தினால் தான் மோசே எகிப்திற்குச் சென்ற போது, அவளை மீதியானுக்குத் திருப்பி அனுப்ப சம்மதித்திருந்தான். எகிப்தியர்களின் மேல் விழும் நியாயத்தீர்ப்புகளைக் காணும் வேதனையிலிருந்து அவளை விடுவிக்க அவன் விரும்பினான். சிப்போராள் வனாந்தரத்தில் தனது கணவனோடு மீண்டும் சேர்ந்தபோது, அவனுடைய பாரம் அவனுடைய பெலத்திலிருந்து அவனை இளைக்கச் செய்கிறதைக் கண்டு, தனது பயத்தை எத்திரோவிற்கு அறிவிக்க, அவன் அதிலிருந்து விடுவிக்கும் வழிகளை ஆலோசனையாக கூறினான். இங்கேதான் மிரியாம் சிப்போராள் மேல் கொண்ட பகையின் தலைமைக் காரணம் இருந்தது. தனக்கும் ஆரோனுக்கும் காட்டப்பட்ட நெகிழ்ச்சி போன்ற ஒன்றினால் அவமானப்பட்டு, மோசேயினுடைய மனைவியை இதற்கான காரணமாக நினைத்து, முதலில் செய்ததைப்போல அவர்களை ஆலோசனைக் கூட்டத்திற்குள் எடுக்காததற்கு அவளுடைய செல்வாக்கே தடுத்தது என்ற முடிவிற்கு வந்தாள். ஆரோன் சரியானதற்காக உறுதியாக நின்றிருந்தானாகில் அந்த தீமையை தடுத்திருக்கலாம். ஆனால் மிரியாமுடைய குணத்தின் பாவத்தன்மையை அவளுக்குக் காண்பிக்கிறதற்கு பதிலாக அவள் மேல் பரிதாபப்பட்டவனாக, அவளுடைய குற்றச்சாட்டுகளை கவனித்துக் கேட்டு, இவ்விதமாக அவளுடைய பொறாமையைத் தானும் பகிர்ந்து கொண்டான்.PPTam 484.2

    அவர்களுடைய குற்றச்சாட்டுகள் எந்தவித எதிர்ப்புமில்லாமல் மோசேயினால் மௌனமாக சுமக்கப்பட்டது. மீதியானில் உழைத்து காத்திருந்த வருடங்களில் அடைந்த அனுபவம்தான் அங்கே விருத்தியடைந்த தாழ்மை மற்றும் நீடிய பொறுமையின் ஆவிதான் மக்களுடைய அவிசுவாசத்தையும் முறுமுறுப்பையும், அவனுக்கு அசையாத உதவியாளர்களாக இருக்க வேண்டியவர்களின் பெருமையையும் பொறாமையையும் பொறுமையோடு சந்திக்க மோசேயை ஆயத்தப்படுத்தினது. மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான். இதினிமித்தமே அவன் மற்றவர்களுக்கு மேலாக தெய்வீக ஞானமும் நடத்துதலும் கொடுக்கப்பட்டிருந்தான். சாந்தகுண முள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர் களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார் (சங். 259) என்று வேத வாக்கியம் சொல்லுகிறது. சாந்தகுணமுள்ளவர்கள் போதிக் கப்படக்கூடியவர்களும், போதனையை கேட்கும் மனதுள்ளவர் களுமாயிருப்பதினால்PPTam 485.1

    ஆண்டவரால் நடத்தப்படுகிறார்கள். தேவனுடைய சித்தத்தை அறியவும் அதன்படி செய்யவும் அவர்களுக்கு உண்மையான வாஞ்சை இருக்கிறது. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசத்தை)ம் .... அறிந்து கொள்ளுவான் (யோவான் 7:17) என்பது இரட்சகருடைய வாக்குத்தத்தம். அவர் அப்போஸ்தலனாகிய யாக்கோபின் வழியாக உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந் தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும் (யாக். 1:5) என்று அறிவிக்கிறார். ஆனாலும் அவருடைய வாக்குத்தத்தங்கள் முழுமையாக ஆண்டவரைப் பின்பற்ற மனதுள்ளவர்களுக்கு மாத்திரமே . எனவே போதிக்கக்கூடாதளவு பெருமையானவர் களுக்கு, தங்களுடைய சொந்த வழியிலேயே நிற்கிறவர்களுக்கு அவரால் போதிக்க முடியாது. தேவனுடைய சித்தத்தைச் செய்வதாக சொல்லிக்கொண்டிருக்கும் போது தன்னுடைய சொந்த சித்தத்தைப் பின்பற்றுகிற இருமனமுள்ளவனைக்குறித்து அப்படிப்பட்ட மனு ஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினை யாதிருப்பானாக (யாக். 1:7) என்று எழுதப்பட்டிருக்கிறது.PPTam 485.2

    தேவன் மோசேயைத் தெரிந்து கொண்டு அவன் மேல் தம்முடைய ஆவியானவரை வைத்திருந்தார். மிரியாமும் ஆரோனும் தங்களுடைய முறுமுறுப்புகளினால் நியமிக்கப்பட்ட தங்கள் தலைவருக்கெதிராக அல்ல, தேவனுக்கெதிராகத்தாமே இரண்டகத்தைக்குறித்த குற்றவாளிகளாயிருந்தனர். தலைவனுக் கெதிராக கலகம் செய்ய முணுமுணுத்த இவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கு வரும்படி அழைக்கப்பட்டு, அங்கே மோசேயின் முகத்திற்கு முன் நேராகக் கொண்டு வரப்பட்டனர். கர்த்தர் மேகத்தூணில் இறங்கி, கூடாரவாசலிலே நின்று ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார், அவர்கள் இருவரும் போனார்கள். தீர்க்கதரிசன வரத்தைக் குறித்த அவர்களுடைய உரிமை மறுக் கப்படவில்லை. தேவன் அவர்களோடு தரிசனத்திலும் சொப்பனத் திலும் பேசியிருந்தார். ஆனால் என் வீட்டில் எங்கும் அவன் உண் மையுள்ளவன் என்று ஆண்டவர் தாமே அறிவித்த மோசேயோடு இன்னும் நெருக்கமான உறவு இருந்தது. அவனோடு தேவன் முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசினார். தேவனுடைய அதிருப்தியின் அடையாளமாக மேகம் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மறைந்து போனது.PPTam 486.1

    மிரியாம் அடிக்கப்பட்டாள், மிரியாம் உறைந்த மழையின் வெண்மை போன்ற குஷ்டரோகியானாள். ஆரோன் தப்பபுவிக் கப்பட்டான். ஆனாலும் மிரியாமின் தண்டனையினால் அவன் கடினமாகக் கடிந்துகொள்ளப்பட்டான். இப்போது அவர்களுடைய பெருமை தரையில் தாழ்த்தப்பட்டது. இப்போது ஆரோன் தனது பாவத்தை அறிக்கை செய்து, தன் சகோதரியை அருவருப்பான மரணத்திற்கேதுவான அடியினால் அழியும்படி விட்டுவிடக்கூடாது என்று மன்றாடினான். மோசேயின் ஜெபத்திற்கு பதிலாக அவளுடைய குஷ்டரோகம் சுத்தமாக்கப்பட்டது. எனினும் மிரி யாம் ஏழு நாட்கள் பாளயத்திற்கு வெளியே அடைக்கப்பட்டாள். பாளயத்திலிருந்து அவள் வெளியேற்றப்படும் வரையிலும் தேவனுடைய தயவைக்குறித்த அடையாளம் மீண்டும் கூடாரத்தின் மேல் தங்கவில்லை. அவளுடைய தகுதியைக் குறித்த மரியாதையினாலும் அவள் மேல் விழுந்த வருத்தத்தினாலும் முழு கூட்டமும் ஆஸ்ரோத்தில் அவள் திரும்பி வருவதற்காக காத்து தங்கியிருந்தது.PPTam 486.2

    அதிருப்தி மற்றும் ஒப்புக்கொடுக்காமையின் ஆவிவளருவதை தடுக்கவும் அனைத்து இஸ்ரவேலருக்கும் எச்சரிப்பாயிருக்கவும் ஆண்டவருடைய அதிருப்தியின் வெளிக்காட்டுதல் திட்டமிடப்பட்டது. மிரியாமுடைய பொறாமையும் அதிருப்தியும் குறிப்பாக கடிந்து கொள்ளப்படாவிட்டால் அது மாபெரும் தீமையை விளைவித்திருக்கும். மனித இருதயத்தில் இருக்கக்கூடிய மிகக் கொடிய சாத்தானிய குணங்களில் ஒன்று பொறாமை . அதன் விளைவுகளில் அதுவே மிகவும் தீங்கான ஒன்றுமாகும். ஞானி . உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்? (நீதி. 27:4) என்று கூறுகிறான். பொறாமையே பரலோகத்தில் முதலாவது பிரிவினையை உண்டாக்கிற்று. அதன் திளைப்பே மனிதர் நடுவே சொல்லக்கூடாத தீமையை நடப்பித்திருக்கிறது. வைராக்கியம் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச் செய்கைகளுமுண்டு - யாக். 3:16.PPTam 486.3

    மற்றவர்களைக் குறித்து தீமை பேசுவதையோ அல்லது அவர்களுடைய நோக்கத்தையும் செயல்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாக நம்மை ஏற்படுத்திக்கொள்ளுவதோ சாதாரண காரியமாக எண்ணப்படக் கூடாது. சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப் பேசி நியாயப்பிர மாணத்தைக் குற்றப் படுத்துகிறான், நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய் யாக். 211. ஒரே ஒரு நியாயாதிபதியே இருக்கிறார். இருளில் மறைந் திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார் -1 கொரி. 4:5. யார் நியாயந்தீர்ப்பதை தன் கையில் எடுத்துக்கொண்டு தன் சக மனிதரை ஆக்கினைக்குள்ளாக்குகிறானோ, அவன் சிருஷ்டிகருடைய தனி உரிமையை அபகரிக்கிறான்.PPTam 487.1

    தமது முகவர்களாக செயல்படும்படி தேவன் அழைத்திருக்கிற வர்களுக்கு எதிராக சாதாரணமாக குற்றங்கள் கொண்டு வருவதைக் குறித்து எச்சரிக்கையாயிருக்கும்படி வேதாகமம் விசேஷமாகப் போதிக்கிறது. அப்போஸ்தலனாகிய பேதுரு கைவிடப்பட்ட பாவிகளான ஒரு கூட்டத்தைக் குறித்து விவரிக்கும் போது: இவர்கள் துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களை தூஷிக்க அஞ்சாதவர்கள். அதிக பெலனையும் வல்லமையையுமுடைய தேவதூதர்கள் முதலாய்க் கர்த்தருக்கு முன்பாக அவர்களைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தமாட்டார்களே (2 பேதுரு 2:10, 11) என்று கூறுகிறான். பவுல் சபையின் மேல் வைக்கப்பட்டிருக்கிறவர்களுக்கான தனது போதனையில், மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது (1 தீமோ 5:19) என்று கூறுகிறான். தமது ஜனத்தின் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்னும் பாரமான பொறுப்பை மனிதர்மேல் வைக்கிறவர் தமது ஊழியக்காரர்களை நடத்தும் விதத்திற்கு ஜனங்களை கணக்கு ஒப்புவிக்கிறவர்கள் ஆக்குவார். தேவன் கனம் பண்ணியிருக்கிறவர்களை நாமும் கனம் பண்ணவேண்டும். மிரியாமின்மேல் வந்த தண்டனை பொறாமைக்கும், தேவன் யார்மேல் தம்முடைய ஊழியத்தின் பாரத்தை வைத்திருக்கிறாரோ அவர்களுக்கு எதிராக முறுமுறுக்கிற அனைவருக்கும் ஒரு கண்டனமாக இருக்க வேண்டும்.PPTam 487.2