Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    27 - இஸ்ரவேலருக்கு நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது

    சீனாயில் பாளயமிறங்கினவுடனே தேவனைச் சந்திக்கும் படியாக மோசே மலையின் மீது அழைக்கப்பட்டான். செங்குத்தும் கரடுமுரடுமான பாதையில் அவன் தனியாக ஏறி, யெகோவாவின் சமுகத்தைக் குறிப்பிட்டிருந்த மேகத்தை நெருங்கினான். இஸ்ரவேலர் இப்போது உன்னதமானவருடன் நெருங்கிய விசே ஷமான உறவிற்குள் தேவனுடைய அரசாங்கத்தின் கீழ் ஒரு ஐனமாகவும் ஒரு சபையாகவும் இணைக்கப்பட கொண்டுவரப்பட வேண்டும். ஜனங்களுக்காக மோசேயிடம் கொடுக்கப்ட்ட செய்தி:PPTam 369.1

    நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின் மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக் கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ள படி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்.PPTam 369.2

    மோசே பாளயத்திற்குத் திரும்பினான். இஸ்ரவேலின் மூப்பர்களை அழைத்து தெய்வீக செய்தியை அவர்களுக்குத் திரும்பக் கூறினான். அவர்களுடைய பதில் : கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்பதாக இருந்தது. விசே ஷமான விதத்தில் அவருடைய அதிகாரத்திற்கு உட்படுவதற்கு ஏதுவாக அவரைதங்களுடைய அதிபதியாக ஏற்றுக்கொள்ளுவதாக வாக்குறுதி கொடுத்து, இவ்விதமாக அவர்கள் தேவனோடு பவித்திரமான ஒரு உடன்படிக்கைக்குள் நுழைந்தார்கள்.PPTam 370.1

    மீண்டும் அவர்களுடைய தலைவன் மலையின் மேல் ஏறினான். ஆண்டவர் அவனிடம், நான் உன்னோடே பேசும்போது ஜனங்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்று கூறினார். வழியில் சங்கடங்களைச் சந்தித்தபோது, மோசேக்கும் ஆரோனுக் கும் எதிராக முறு முறுக்கவும், இஸ்ரவேலின் சேனையை அழிக்கும் படியாக எகிப்திலிருந்து நடத்தி வந்ததாக குற்றப்படுத் தவும் மனதாயிருந்தார்கள். மோசேயினுடைய போதனையை நம்ப நடத்தப்படும்படி ஆண்டவர் மோசேயை அவர்களுக்கு முன்பாக கனப்படுத்துவார்.PPTam 370.2

    தம்முடைய கற்பனையின் உன்னதமான குணத்திற்கு இசை வாக அவைகளை அறிவிக்கின்ற நிகழ்ச்சியை பயங்கரமான மாட்சி மை பொருந்திய காட்சியாக்குவதற்கு ஆண்டவர் எண்ணியிருந்தார். தேவனுடைய ஊழியத்தோடு இணைக்கப்பட்டிருக்கிற ஒவ்வொன்றும் மிக அதிக பயபக்தியோடு கருதப்பட வேண்டுமென்று மக்கள் உணர்த்தப்படவேண்டும். ஆண்டவர் மோசேயிடம். நீ ஜனங்களிடத்தில் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து, அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து, மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள், மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய் மலையின் மேல் இறங்குவார் என்று கூறினார். இடைப்பட்ட இந்த நாட்களில் தேவனுக்கு முன் காணப்படுவதற்கான பவித்திரமான ஆயத்தத்தில் அனைவரும் நேரத்தை உபயோகப்படுத்த வேண்டும். அவர்களுடைய சரீரங்களும் அவர்களுடைய ஆடையும் தூய்மையாயிருக்க வேண்டும். மோசே அவர்களுடைய பாவங்களைச் சுட்டிக்காட்டும் போது, அவர்களுடைய இருதயங்கள் அக்கிரமத்திலிருந்து கழுவப்படும்படியாக அவர்கள் தங்களை தாழ்மைக்கும் உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் ஒப்படைக்க வேண்டும்.PPTam 370.3

    கொடுக்கப்பட்ட கட்டளைக்கேற்றவாறு ஆயத்தங்கள் செய்யப்பட்டன. மேற்கொண்டு கொடுக்கப்பட்ட உத்தரவிற்குக் கீழ்ப்படிந்து, மலையைச் சுற்றிலும் ஒரு தடையை எழுப்பும் படியும், மனிதனாவது மிருகமாவது பரிசுத்தமான இடத்தில் நுழையாதிருக்கும்படியும் மோசேகற்பித்தான். அதைத் தொடும்படி யாராகிலும் துணிவார்களானால், அதன் தண்டனை உடனடி மரணமாயிருந்தது.PPTam 371.1

    மூன்றாம் நாளின் காலையில் அனைவருடைய கண்களும் மலைக்கு நேராகத்திரும்பியிருக்க, அதன் சிகரம் கார்மேகத்தினால் மூடப்பட்டது. அது இன்னும் கருமையும் அடர்த்தியுமாகி, மலை முழுவதும் இருளினாலும் பயபக்தியான இரகசியத்தினாலும் மூடப்படும் வரைக்கும் கீழ்நோக்கி இறங்கியது. பின்னர் தேவனைச் சந்திக்கும்படி மக்களை அழைக்கிற எக்காளம் போன்ற ஒரு சத்தம் கேட்கப்பட்டது. மோசே அவர்களை மலையின் அடிவாரத்திற்கு நடத்தி வந்தான். இடியின் முழக்கம் சுற்றியிருந்த உயரங்களில் எதிரொலித்து மீண்டும் எதிரொலிக்க, அடர்ந்த இருளிலிருந்து தெளிவான மின்னல்கள் ஒளிர்ந்தன. கர்த்தர் சீனாய் மலையின் மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப்புகை சூளையின் புகையைப்போல் எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. கூடியிருந்த திரளானவர்களின் பார்வையில் மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி அக்கினியைப்போல் இருந்தது. எக்காள சத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; யெகோவாவின் சமூகத்தினுடைய அடையாளங்கள் இவ்வளவு பயங்கரமாயிருந்ததினால், இஸ்ரவேலரின் சேனைகள் பயத்தினால் நடுங்கி ஆண்டவருக்கு முன்பாக முகங்குப்புற விழுந்தார்கள். மோசேயுங்கூட : நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன் (எபி. 1221) என்று கூறினான்.PPTam 371.2

    இப்போது இடிகள் நின்று போயின; எக்காள சத்தம் அதற்குப்பின் கேட்கப்படவில்லை ; பூமி அமைதியாயிருந்தது. குறிப்பிட்ட நேரம் அங்கே பவித்திரமான மெளனம் நிலவியது. பின்னர் தேவனுடைய சத்தம் கேட்கப்பட்டது. தூதர்களின் பரிவாரங்கள் சூழ அவர் மலையின் மேல் நின்றபோது, அவரைச் சூழ்ந்திருந்த அடர்ந்த காரிருளிலிருந்து பேசி ஆண்டவர் தமது கற்பனையை தெரியப்படுத்தினார். மோசே இந்தக் காட்சியை விவரித்து : கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினி மயமான பிரமாணம் அவருடைய வலது கரத்திலிருந்து புறப்பட்டது. மெய்யாகவே அவர் ஜனங்களைச் சிநேகிக்கிறார்; அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து, உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள் (உபா. 33:2,3) என்று கூறுகிறான்.PPTam 371.3

    நியாயாதிபதியும் கற்பனையைக் கொடுத்தவருமாக பயங்கரமான கம்பீரத்திலிருந்து மாத்திரமல்ல, தமது ஜனங்களின் உருக்கமுள்ள காவலாளியாகவும் யெகோவா தம்மை வெளிப்படுத்தினார். உன்னை அடிமைத்தன் வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின் உன் தேவனாகிய கர்த்தர் நானே. தங்களுயை வழிபாட்டியாகவும் விடுவிக்கிறவராகவும் ஏற்கனவே அவர்கள் அறிந்திருந்த அவர், எகிப்திலிருந்து அவர்களை அழைத்து வந்து, சமுத்திரத்தின் வழியாக அவர்களுக்கு பாதையை உண்டு பண்ணி, பார்வோனையும் அவன் சேனையையும் கவிழ்த்துப்போட்ட அவர், இவ்விதமாக எகிப்தின் தேவர்கள் அனைவருக்கும் மேலானவராகத் தம்மைக் காண்பித்த அவர் அவரே இப்போது அவர்களுக்குத் தமது பிரமாணங்களைக் கூறினார்.PPTam 372.1

    இந்த சமயத்தில் எபிரெயர்களுடைய நன்மைக்காக மாத்திரமே கற்பனை பேசப்படவில்லை. தமது கற்பனைகளைப் பாதுகாப்பவர்களாகவும் கைக்கொள்ளுகிறவர்களாகவும் அவர்களை மாற்றினதினால், தேவன் அவர்களைகனப்படுத்தியிருந்தார். ஆனால் அது முழு உலகத்திற்கும் பரிசுத்தமான நம்பிக்கையாக வைக்கப்படவேண்டும். பத்து கற்பனையின் நியமங்கள் மனுக்குலம் அனைத்திற்கும் பொருந்தக்கூடியது. அனைவருடைய போதனைக்காகவும் அனைவரையும் ஆண்டு கொள்ளும்படியாகவும் அவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. சுருக்கமாகவும் தெளிவாகவும் அதிகாரத்தோடும் இருக்கிற பத்து பிரமாணங்களும் தேவனுக்குச் செய்யவேண்டிய கடமையையும் சகமனிதருக்குச் செய்யவேண்டிய கடமையையும் உள்ளடக்கியிருக் கிறது. இவையனைத்தும் மாபெரும் அடிப்படைக் கொள்கையான அன்பில் அடித்தளமிடப்பட்டிருக்கின்றன . உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமா வோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்பு கூர்ந்து, உன்னிடத்தில் அன்பு கூருவது போலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக லூக்கா 10:27. உபா. 6:45; லேவி 19:18 ஐயும் பார்க்கவும். பத்துக் கற்பனைகளில் இந்தக் கொள்கைகள் விரிவாக கொடுக்கப்பட்டு, மனிதனுடைய நிலை மைக்கும் சூழ்நிலைக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கின்றன.PPTam 372.2

    என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். நித்தியமான, தம்மில் தாமே நிலைத்திருக்கக்கூடிய ஒருவரான, எவராலும் சிருஷ்டிக்கப்படாத ஒருவரான யெகோவா தாமே, அனைத்திற்கும் ஆதாரமும் ஊற்றுமாயிருக்கிற அவர் மாத்திரமே மிக உயரிய பயபக்திக்கும் தொழுகைக்கும் உரியவ ராயிருக்கிறார். சேவையிலும் பிரியத்திலும் வேறு எந்த பொருளுக் கும் முதலிடம் கொடுக்க மனிதன் தடை செய்யப்பட்டிருக்கிறான். தேவன் மேலிருக்கும் நம்முடைய அன்பை குறைக்கக்கூடிய, அல்லது அவருக்கு செய்யவேண்டிய சேவையில் குறுக்கிடுகிற எவற்றையெல்லாம் நாம் நேசிக்கிறோமோ, அவற்றால் நாம் தெய்வத்தை உண்டு பண்ணுகிறோம்.PPTam 373.1

    மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத் தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண் டாக்க வேண்டாம், நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்;PPTam 373.2

    உருவங்களின் வழியாக அல்லது அவைகளுக்கு ஒப்பானவை களால் மெய்யான தேவனை தொழுது கொள்ளுகிறதை இரண்டாம் கற்பனை தடை பண்ணுகிறது. தாங்கள் தொழுகிற தெய்வத்தை அடையாளப்படுத்தும் வெறும் உருவங்கள் அல்லது அடையாளங்களே தங்களுடைய விக்கிரகங்கள் என்று அநேக புறஜாதி தேசங்கள் கூறுகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட தொழுகை பாவம் என்று தேவன் அறிவித்திருக்கிறார். நித்தியமானவரை பொருட் களால் எடுத்துக்காட்டும் முயற்சி தேவனைக் குறித்த மனிதனுடைய புரிந்து கொள்ளுதலை மட்டுப்படுத்தும். யெகோவாவினுடைய நித்தியமான பரிபூரணத்திலிருந்து திருப்பப்படும் மனது, சிருஷ்டிகரைக்காட்டிலும் சிருஷ்டியினால் கவரப்படும். தேவனைக் குறித்த புரிந்து கொள்ளுதல் மட்டுப்படும் போது, அவ்வாறே மனிதனும் கீழ்த்தரமாகிவிடுவான்.PPTam 373.3

    உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து. தமது மக்களுடன் தேவன் கொண்டிருக்கிற நெருக் கமான புனிதமான உறவு திருமணம் என்கிற உறவினால் எடுத்துக்காட்டப்படுகிறது. விக்கிரகாராதனை ஆவிக்குரிய வேசித்தன மாக இருப்பதால், அதற்கு விரோதமாக தேவன் கொண்டிருக்கிற விருப்பமின்மை எரிச்சல் என்று சரியாக அழைக்கப்படுகிறது.PPTam 373.4

    என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். பெற்றோர் களுடைய தவறுகளின் விளைவுகளால் பிள்ளைகள் துன்பப்பட வேண்டுமென்பது தவிர்க்கக் கூடாததாயிருந்தாலும், பெற்றோர்களின் பாவங்களில் பங்குபெறாதபட்சத்தில் அவர்களுடைய குற்றங்களுக்காக பிள்ளைகள் தண்டிக்கப்படுவதில்லை. இப்படியிருந்தபோதும் பிள்ளைகள் பெற்றோரின் அடிகளிலேயே நடக்கிறார்கள். பிறப்புரிமையினாலும் உதாரணத்தினாலும் மகன்கள் தகப்பனுடைய பாவத்தில் பங்குகொள்ளுகிறார்கள். தவறான இயல்புகளும், முறை கெட்ட பசியும், கீழ்த்தரமான சன் மார்க்க நெறிகளும், அதேபோல சரீர வியாதியும் சீர்குலைவும் தகப்பனிடமிருந்து மகனுக்கு மூன்றாம் நான்காம் தலைமுறை வரைக்கும் மரபாக கடத்தப்படுகிறது. இந்த பயப்படக்கூடிய உண்மை, பாவத்தின் வழியை பின்தொடருவதிலிருந்து மனிதனை தடுக்கும் பவித்திரமான வல்லமையைக் கொண்டிருக்க வேண்டும்.PPTam 374.1

    என்னிடத்தில் அன்பு கூர்ந்து, என் கற்பனைகளைக் கைக் கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறை மட்டும் இரக் கஞ்செய்கிறவராயிருக்கிறேன். பொய் தேவர்களை வணங் குவதைத் தடுப்பதில், மெய்யான தேவனை தொழுதுகொள்ளுவதை இரண்டாம் கற்பனை ஒப்பிட்டுச் சேர்க்கிறது. அவருடைய சே வையில் உண்மையாக இருக்கிறவர்களுக்கு, அவரை வெறுக்கிறவர்களுக்கு எதிராக சொல்லப்பட்டிருக்கிற மூன்றாம் நான்காம் தலைமுறை வரைக்குமான கோபத்தைப் போலல்லாது, ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கம் வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறது.PPTam 374.2

    உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங் காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.PPTam 374.3

    இந்தக் கற்பனை பொய்யானவாக்குறுதியையும் சாதாரணமாக சத்தியம் பண்ணுகிறதையும் மாத்திரமல்ல, தேவனுடைய நாமத்தை அதனுடைய பயங்கரமான குறிப்படையாளத்தை கருத்தில் கொள்ளாமல் வெகு சாதாரணமாகவும் கவனமில்லாமலும் உபயோகப்படுத்துவதையும் தடை செய்கிறது. சாதாரண உரையாடல்களில் எண்ணமின்றி தேவனைக் குறிப்பிடுவதாலும், அற்ப காரியங்களுக்கு அவரை இழுப்பதாலும் அவருடைய நாமத்தை அடிக்கடி யோசனையின்றி குறிப்பிடுவதாலும் அவரைக்கனவீனம் பண்ணுகிறோம். அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது சங். 1119. அவருடைய உன்னதமான குணத்தைக் குறித்த உணர்வினால் நம்முடைய இருதயங்கள் உந்தப்படும்படி, அனை வரும் அவருடைய மாட்சிமையையும் அவருடைய தூய்மையையும் பரிசுத்தத்தையும் தியானிக்க வேண்டும். அவருடைய நாமம் பயபக்தியோடும் பவித்திரத்தோடும் உச்சரிக்கப்பட வேண்டும்.PPTam 374.4

    ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக, ஆறு நாளும் நீ வேலை செய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப் பிப்பாயாக. ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வு நாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமா ரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக் காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண் டாம். கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஒய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.PPTam 375.1

    ஓய்வுநாள் புதிய நியமமாக அல்ல, சிருஷ்டிப்பிலேயே நியமிக் கப்பட்டதாக அறிமுகப்படுத்தப்பட்டது. அது சிருஷ்டிகருடைய படைப்பின் நினைவுச் சின்னமாக நினைவு கூரப்பட்டு கைக்கொள்ளப்பட வேண்டும். அது வானங்களையும் பூமியையும் உண்டாக்கினவராக தேவனை சுட்டிக்காட்டி பொய் தேவர்களிட மிருந்து மெய்யான தேவனை வேறுபடுத்திக்காட்டு கிறது. ஏழாம் நாளை கைக்கொள்ளும் அனைவரும் அந்தச் செயலினால் யெகோவாவை தொழுதுகொள்ளுகிறவர்களாக காட்டுகிறார்கள். இவ்வாறாக, இந்தப் பூமியில் அவருக்கு ஊழியம் செய்ய மனிதர் இருக்கும் வரையிலும், மனிதன் தேவன் மேல் வைக்கவேண்டிய பற்றின் அடையாளமாக ஓய்வு நாள் இருக்கிறது. பத்துக் கற்பனைகளிலும் நாலாம் கற்பனையில் மாத்திரமே கற்பனையைக் கொடுத்தவரின் பெயரும் தகுதியும் காணப்படுகிறது. யாருடைய அதிகாரத்தினால் கற்பனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இது மாத்திரமே காண்பிக்கிறது. இவ்விதமாக, அதனுடைய அதிகாரத்திற்கும் நம்மைக் கட்டுகிற வல்லமைக்கும் சான்றாக அவருடைய கற்பனையில் இணைக்கப்பட்ட தேவனுடைய முத்திரையை அது கொண்டிருக்கிறது.PPTam 375.2

    உழைப்பதற்காக மனிதனுக்கு ஆறு நாட்களை தேவன் கொடுத்திருக்கிறார். அவனுடைய சொந்த வேலை ஆறு வேலை நாட்களில் செய்யப்படவேண்டும் என்று அவர் கோருகிறார். அத்தியாவசியமான இரக்கத்தின் செயல்கள் ஓய்வுநாளில் அனு மதிக்கப்பட்டிருக்கின்றன. வியாதிப்பட்டவர்களும் துன்பத்தில் இருக்கிறவர்களும் எல்லா நேரமும் கவனிக்கப்படவேண்டும். ஆனால் தேவயைற்ற வேலை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன்வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப் பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால் ஏசாயா 58:13. உன் சொந்தப் பேச்சைப் பேச ரமலிருந்து. என்று தீர்க்கதரிசி சொல்லுகிறான். தொழில் ரீதியான காரியங்களை விவாதிப்பதும், ஓய்வுநாளில் திட்டங்கள் தீட்டுவதும் தொழிலில் ஈடுபட்டது போலவே தேவனால் கருதப்படுகிறது. ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிப்பதற்கு உலகியல் சார்ந்த காரியங்களின் மேல் செல்ல நம்முடைய மனங்களை அனுமதிக் கக்கூட கூடாது. அந்தக் கற்பனை நம் வாசல்களில் இருக்கிற அனைவரையும் உள்ளடக்குகிறது. வீட்டினுள் இருக்கிறவர்கள் அந்த பரிசுத்தமணிகளில் உலகவேலைகளை அப்புறப்படுத்தவேண்டும். அவருடைய பரிசுத்த நாளில் மனமுவந்து ஊழியம் செய்வதின் வழியாக அவரை கனம் பண்ணுகிறதில் அனைவரும் இணைய வேண்டும்.PPTam 376.1

    உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக. மற்ற எவருக்கும் இல்லாத அளவு அன்பிற்கும் மரியாதைக்கும் பெற்றோர்கள் தகுதிப்படுத்தப்பட்டிருக் கிறார்கள். அவர்களுடைய அதிகாரத்திற்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆத்துமாக்களின் பொறுப்பை அவர்கள் மேல் வைத்திருக்கிற தேவன்தாமே, பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அவர்களுடைய இளமைக் காலங்களில் தேவனுடைய இடத்தில் நிற்க வேண்டும் என்று நியமித்திருக்கிறார். பெற்றோர்களின் உரிமையான அதிகா ரத்தை நிராகரிக்கிறவன், தேவனுடைய அதிகாரத்தை நிராகரிக் கிறான். பிள்ளைகள் பெற்றோரை மதித்து, ஒப்புக்கொடுத்து, கீழ்ப்படிந்திருக்க மாத்திரம் ஐந்தாம் கற்பனை கோரவில்லை. மாறாக, அவர்களுக்கு அன்பையும் உருக்கத்தையும் காண்பித்து, அவர்களுடைய பாரங்களை இலகுவாக்கி, அவர்களுடைய நல்ல பெயர்களை காப்பாற்றி, அவர்களுடைய வயதான காலங்களில் அவர்களைப் பராமரித்து ஆறுதல் படுத்தவும் கோருகிறார். போதகர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இன்னும் யாருக்கெல்லாம் தேவன் அதிகாரம் கொடுத்திருக்கிறாரோ அவர்களையெல்லாம் மதிக்க வேண்டும் என்றும் அது சேர்த்துக் கூறுகிறது.PPTam 376.2

    இது வாக்குத்தத்தமுள்ள முதலாங்கற்பனையாயிருக்கிறது (எபே. 6:2) என்று அப்போஸ்தலன் கூறுகிறான். கானானுக்குள் விரைவாக நுழைய எதிர்பார்த்திருந்த இஸ்ரவேலுக்கு, அந்த நல்ல தேசத்தில் நீண்ட நாட்கள் வாழ்ந்திருக்க, கீழ்ப்படிந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உறுதிமொழியாக அது இருந்தது. ஆனாலும் அது இன்னும் பரந்த பொருளோடு தேவனுடைய அனைத்து இஸ்ரலேரையும் உள்ளடக்கி, பாவத்தின் சாபத்திலிருந்து விடுவிக்கப்பட்ட புதிய பூமியில் நித்திய ஜீவனை வாக்கு பண்ணுகிறது.PPTam 377.1

    கொலை செய்யாதிருப்பாயாக.PPTam 377.2

    அநீதியான அனைத்து செய்கைகளும் வாழ்நாளை குறைக் கிறது. வெறுக்கிற பழிவாங்குகிற ஆவி, அல்லது மற்றவர்களைக் காயப்படுத்த நடத்துகிற உணர்வில் திளைப்பது, அல்லது அவர்களுக்கு தீங்கு ஏற்பட வேண்டும் என்று விரும்புவது, (தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக் கிறான்.) தேவையிலிருப்போரை அல்லது துன்பப்படுவோரை சுயநலத்தோடு நெகிழ்ந்துவிடுவது, எல்லாவித சுயத்திளைப்பு, அல்லது தேவையற்ற இடர், அல்லது ஆரோக்கியத்தைக் காயப்படுத்துவதற்கேதுவான அதிகப்படியான உழைப்பு இவை அனைத்தும் ஏறக்குறைய ஆறாம் கற்பனையை மீறுவதாகும்.PPTam 377.3

    விபசாரம் செய்யாதிருப்பாயாக. இந்தக் கற்பனை அசுத்த மான செய்கைகளை மாத்திரமல்ல,PPTam 377.4

    உணர்ச்சியான எண்ணங்களையும் விருப்பங்களையும் அல்லது அவைகளை தூண்டக்கூடிய இயல்புள்ள பழக்கங்களையும் தடை செய்கிறது வெளிவாழ்க்கையில் மாத்திரம் தூய்மை கோரப் படவில்லை. மாறாக, இருதயத்தின் நோக்கங்களிலும் உணர்வுகளிலும் அது கோரப்படுகிறது. தேவனுடைய பிர மாணங்களின் பரந்த கடமைகளைப் போதித்த கிறிஸ்து, சட்டத் திற்கு விரோதமான செய்கையைப் போலவே தீய சிந்தனைகளும் பார்வையும் கூட உண்மையாகவே பாவம் என்று அறிவித்தார். களவு செய்யாதிருப்பாயாக.PPTam 377.5

    பொதுவான மற்றும் தனிப்பட்ட பாவங்கள் இதில் இணைக்கப் பட்டிருக்கின்றன. மனிதனைத் திருடுவதையும் அடிமைகளை விற்பதையும் எட்டாவது கற்பனை கடிந்து கொண்டு, யுத்தங்களையும் தடை செய்கிறது. திருட்டையும் கொள்ளையையும் அது கடிந்து கொள்ளுகிறது. வாழ்க்கையின் மிக நுண்ணிய காரியங்களிலும் கண்டிப்பான உண்மையை அது கோருகிறது. தொழிலில் அத்து மீறுவதைத் தடை செய்து, சரியான கூலியைக் கொடுப்பதைக் கோருகிறது. மற்றவனுடைய அறியாமையையும் பெலவீனத்தையும் அவனுடைய நல்வாய்ப்பின்மையையும் தனக்கு சாதகமாக்கிக்கொள்ள எடுக்கிற ஒவ்வொரு முயற்சியும் பரலோகப் புத்தகங்களில் மோசடியாக குறிக்கப்படுகிறது என்று அது அறிவிக்கிறது.PPTam 378.1

    பிறனுக்கு விரோதமாகப் பொய்ச் சாட்சி சொல்லாதிருப் பாயாக.PPTam 378.2

    எந்தக் காரியத்திலும் பொய் சொல்லுவதும், நமக்குப் பிறனை வஞ்சிக்கும் ஒவ்வொரு முயற்சியும் அல்லது நோக்கமும் இங்கே உள்ளடக்கப்பட்டிருக்கிறது. ஏமாற்றும் நோக்கமே பொய் ஆகும். ஒரு பார்வையினால், கையின் ஒரு அசைவினால், முகத்தின் தோற்றத்தினால், வார்த்தைகளைப் போலவே வல்லமையாக ஒரு பொய் சொல்லப்படலாம். உள் நோக்கத்தோடு கூடிய அனைத்து மிகைப்படுத்தின வார்த்தைகளும், தவறான அல்லது மிகைப்படுத் தப்பட்ட உணர்த்து தலைக் காண்பிக்க கணக்கிடப்படுகிற ஒவ் வொரு மறைமுகமான காரியமும், தவறாக நடத்தும் விதத்தில் சொல்லப்படுகிற உண்மையான செய்திகளும் கூட பொய்யே . தவறாக எடுத்துக்காட்டுவதினாலோ அல்லது தவறாகப் பேசுவதினாலோ, அவதூறு செய்வதாலோ அல்லது கோள் சொல்லுவதாலோ தனக்கடுத்தவனுடைய நல்ல பெயரைக்காயப்படுத்தும் ஒவ்வொரு முயற்சியையும் இந்தக் கற்பனை தடை செய்கிறது. மற்றவர்களைக் காயப்படுத்துவதற்கேதுவாக சத்தியத்தை வேண்டுமென்றே அடக்கி வைப்பதுங்கூட ஒன்பதாவது கற்னையை மீறுவதாகும்.PPTam 378.3

    பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக, பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாகPPTam 378.4

    பத்தாவது கற்பனை பாவச் செயல்கள் பிறக்கிற சுயநலமான விருப்பங்களைத் தடை செய்து, அனைத்துப் பாவங்களின் வேரையும் தகர்க்கிறது. தேவனுடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து, மற்ற ஒருவனுக்குச் சொந்தமானதை விரும்புகிற பாவ வாஞ்சை யைக்கூட திளைக்காதவன் தன் சக ஜீவிக்கு தவறு இழைத்த குற்றத்தில் இருக்கமாட்டான்.PPTam 379.1

    இடிக்கும் அக்கினிக்கும் மத்தியில் பேசப்பட்டு, மாபெரும் கற்பனையைக் கொடுத்தவருடைய வல்லமையையும் கம்பீரத்தையும் அதிசயமாக வெளிக்காட்டின பத்துக் கற்பனைகளின் பரிசுத்தமான நியமங்கள் இப்படிப்பட்டதே. தம்முடைய மக்கள் இந்தக் காட்சியை ஒருபோதும் மறந்து போகாதிருந்து, வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்து கற்பனைகளை வடிவமைத்தவருக்குத் தரவேண்டிய வணக்கத்தினால் உந்தப்படும்படி தேவன் தம்முடைய கற்பனைகளை அறிவிப்பதோடு கூட தமது வல்லமையையும் மகிமையையும் வெளிக்காட்டினார். தம்முடைய பிரமாணங்களின் பரிசுத்தத்தையும் முக்கியத்துவத்தையும் நிலைத்தன்மையையும் அனைத்து மனிதருக்குங்கூட அவர் காண்பிப்பார்.PPTam 379.2

    இஸ்ரவேல் ஜனங்கள் பயத்தினால் மேற்கொள்ளப்பட்டார்கள். தேவனுடைய சத்தத்தின் பயங்கரமான வல்லமை நடுங்கும் தங்களுடைய இருதயங்கள் தாங்கக்கூடியதைக் காட்டிலும் அதிகமானதாக அவர்களுக்குத் தோன்றியது. சரியானவைகளைக் குறித்த தேவனுடைய மாபெரும் சட்டங்கள் அவர்கள் முன் வைக்கப்பட்ட போது, காயப்படுத்துகிற பாவத்தின் குணத்தையும், பரிசுத்த தெய்வத்தின் பார்வையில் தங்களுடைய சொந்த குற்றத் தையும் இதற்கு முன் ஒருபோதும் உணராதவிதத்தில் அவர்கள் உணர்ந்தார்கள். பயத்திலும் பயபக்தியிலும் மலையை விட்டு பின் சென்றனர். அந்தத் திரளானவர்கள் மோசேயிடம் நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம், தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப் போவோம் என்று கதறினார்கள். தலைவன் : பயப்படாதிருங்கள்; உங்களைச் சே பாதிப்பதற்காகவும், நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார் என்றான். எனினும் ஜனங்கள் குறிப்பிட்ட தூரத்தில் நின்று, மோசே தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய் சேர்ந்தபோது, அந்தக் காட்சியை பயத்தோடு பார்த்துக்கொண்டிருந்தனர்.PPTam 379.3

    அடிமைத்தனத்தினாலும் புறஜாதியாரின் பழக்கங்களினாலும் குருடாகி கீழ்த்தரமாக்கப்பட்டிருந்த மக்களின் மனங்கள் தேவ னுடைய பத்துப் பிரமாணங்களின் எல்லையற்ற கொள்கைகளை பாராட்ட ஆயத்தமின்றி இருந்தன. பத்துப் பிரமாணங்களின் கடமைகள் முழுமையாக புரிந்துகொள்ளப்பட்டு செயல்படுத் தப்படுவதற்காக, அவைகளின் கொள்கைகளை விளக்கி பொருத்துகிற கூடுதலான பிரமாணங்களும் கொடுக்கப்பட்டன. இந்தப் பிரமாணங்கள் நித்திய ஞானத்தோடும் சமநிலையோடும் வடிவமைக்கப்பட்டிருந்ததாலும், நியாயாதிபதிகள் இவைகளுக் கடுத்து தீர்ப்பு வழங்கவேண்டியதிருந்ததாலும், இந்தச் சட்டங்கள் நியாயத்தீர்ப்புகள் என்று அழைக்கப்பட்டிருந்தன. பத்துப் பிரமா ணங்களைப் போலல்லாது இவைகள் ஜனங்களுக்குத் தெரிவிக் கும்படி மோசேயிடம் தனியாகக் கொடுக்கப்பட்டன.PPTam 379.4

    இவைகளில் முதல் சட்டம் வேலைக்காரர்களைப்பற்றி இருந்தது. முற்காலங்களில் குற்றவாளிகள் நியாயாதிபதிகளால் சில சமயங்களில் அடிமைத்தனத்திற்குள் விற்கப்பட்டனர். சில சூழ்நிலைகளில் கடன் வாங்கினவர்கள் கடன் கொடுத்தவர்களால் விற்கப்பட்டனர். மேலும் வறுமை தங்களையோ அல்லது தங்கள் பிள்ளைகளையோ விற்கும் படி கூட நபர்களை நடத்தியிருந்தது. எனினும் வாழ்நாள் முழுவதும் அடிமையாயிருக்கும் படி ஒரு எபிரெயன் விற்கப்படமுடியாது. அவனுடைய ஊழியத்தின் காலம் ஆறு வருடங்களுக்குக் குறிக்கப்பட்டிருந்தது. ஏழாம் வருடத்தில் அவன் விடுதலையாக்கப்பட வேண்டும். மனிதர்களைத் திருடுவதும், மனதார கொலை செய்வதும், பெற்றோருக்கு எதிரான கலகமும் மரணத்தினால் தண்டிக்கப்படவேண்டும். பிறப்பினால் இஸ்ரவேலாக இராத அடிமைகளை வைத்துக் கொண்டிருப்பது அனுமதிக்கப்பட்டது. எனினும் அவர்களும் அவர்களுடைய உயிரும் கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும். அடிமையைக் கொலை செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும். எஜமானால் அடிமைக்கு இழைக்கப்பட்ட ஒரு பல்லை இழப்பதைவிடவும் குறைவான காயம் விடுதலை பெற்றுச் செல்ல அவனைத் தகுதியாக்கிற்று.PPTam 380.1

    இஸ்ரவேலர்கள் சமீபத்தில் தாங்களே வேலைக்காரராயிருந் தார்கள். இப்பொழுது தங்களுக்குக் கீழ் வேலைக்காரர்களை வைத்திருக்க வேண்டும். எகிப்தின் ஆளோட்டிகளின் கீழ் தாங்கள் அனுபவித்த கொடுமை மற்றும் கண்டிப்பின் ஆவியில் திளைக்கா திருக்க அவர்கள் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். தங்களுடைய கசப்பான அடிமைத்தனத்தைக் குறித்த நினைவு, தங்களை வேலைக்காரரின் இடத்தில் வைத்துப் பார்த்து, இரக்கமும் தயவும் உள்ளவர்களாகவும், தாங்கள் எப்படி நடத்தப்படவிரும்புகிறார் களோ, அவ்வாறு மற்றவர்களிடம் நடக்கிறவர்களாகவும் இருக்க அவர்களை நடத்தவேண்டும்.PPTam 380.2

    விதவைகள் மற்றும் திக்கற்றோரின் உரிமைகள் விசேஷமாக காக்கப்படவேண்டியிருந்தது. அவர்களுடைய உதவியற்ற நிலைக்காக உருக்கமான கவனம் சேர்க்கப்பட்டிருந்தது. அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும் போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு, கோபம் மூண்டவராகி, உங்களைப் பட்டயத்தினால் கொலை செய்வேன்; உங்கள் மனைவிகள் விதவைகளும், உங்கள் பிள்ளைகள் திக்கற்ற பிள்ளைகளு மாவார்கள் என்று ஆண்டவர் அறிவித்தார். இஸ்ரவேலரோடு தங்களை இணைத்துக்கொள்ளும் அந்நியர்கள் தவறுகளிலிருந்தும் ஒடுக்கத்திலிருந்தும் காக்கப்படவேண்டும். அந்நியனை ஒடுக்காயாக, எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே ஏழையிடமிருந்து வட்டி வாங்குவது தடை செய்யப்பட்டிருந்தது. அடமானமாக எடுத்துக்கொள்ளப்படும் ஏழை மனிதனுடைய ஆடையோ போர்வையோ இரவு வருவதற்கு முன்பாக திரும்பக் கொடுக்கப்பட வேண்டும். திருட்டைக் குறித்த குற்றவாளி இரட்டத்தனையாக செலுத்த கோரப்பட்டான். அதிபதிகள் நியா யாதிபதிகளுக்குக் கொடுக்கப்படும் மரியாதை இணைக்கப்பட்டு, முறைகேடான தீர்ப்புக்கும் பொய் காரியங்களுக்கு உதவுவதற்கும் அல்லது பரிதானம் வாங்குவதற்கும் எதிராக நியாயாதிபதிகள் எச்சரிக்கப்பட்டிருந்தனர். கோள் சொல்லுதலும் அவதூறு செய்தாலும் தடை செய்யப்பட்டிருந்து, இரக்கத்தின் செயல்கள், தனிப்பட்ட சத்துருக்களுக்கு எதிரான இரக்கத்தின் செயல்களும் இணைக்கப்பட்டிருந்தன.PPTam 381.1

    ஓய்வு நாளைக் குறித்த பவித்திரமான கடமைகளைக் குறித்து மீண்டும் ஜனங்கள் நினைவு படுத்தப்பட்டனர். தங்களுடைய நன்றியின் காணிக்கைகளையும் தங்களுடைய ஏராளமானவை களின் முதற்கனிகளையும் கொண்டுவந்து, தேசத்தின் அனைத்து மக்களும் ஆண்டவருக்கு முன்பாக கூடி வரும்படியானவருடாந்திர பண்டிகைகள் நியமிக்கப்பட்டது. இவைகள் தன்னிச்சையாக செயல்படுகிறவரின் விருப்பத்தின்படி வராமல், இஸ்ரவேலின் நன்மைக்காக கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் இந்த அனைத்து ஒழுங்குகளின் நோக்கமாக குறிப்பிடப்பட்டது. ஆண்டவர்: நீங்கள் எனக்குப் பரிசுத்த மனுஷராயிருக்கக்கடவீர்கள் பரிசுத்த தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும் தகுதியைக் கொண்டவர்களாக இருக்கக்கடவீர்கள் என்று ஆண்டவர் அறிவித்தார்.PPTam 381.2

    இஸ்ரவேலுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்களின் நிறைவேறுதலுக்கான நிபந்தனைகளான பத்துக் கற்பனைகளை விளக்கும்படியாகக் கொடுக்கப்பட்ட இந்த சட்டங்கள் மோசேயினால் எழுதப்பட்டு, தேசத்தினுடைய சட்டத்தின் அடித்தளமாக கவனமாக பாதுகாக்கப்பட வேண்டும்.PPTam 382.1

    வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம் பண்ணின் ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டு போய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு, அவரைக் கோபப்படுத்தாதே, உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை, என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது. நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன் என்ற செய்தி யெகோ வாவிடமிருந்து இப்போது அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இஸ்ரவேலர் அலைந்திருந்த காலம் முழுவதிலும் மேக ஸ்தம்பத் திலும் அக்கினி ஸ்தம்பத்திலுமிருந்த கிறிஸ்துவே அவர்களுடைய தலைவராக இருந்தார். வரவிருக்கும் இரட்சகரை குறிப்பிட்டுக் காட்டிய அடையாளங்கள் அங்கே இருந்தபோதும், ஜனங்களுக்காக மோசேயிடம் கட்டளைகள் கொடுத்தவரும், அவர்களை ஆசீர் வதிக்கும் ஒரே வழியாக அவர்கள் முன்வைக்கப்பட்டவருமாகிய நிகழ்கால இரட்சகரும் அங்கே இருந்தார்.PPTam 382.2

    மலையிலிருந்து இறங்கின மோசே வந்து, கர்த்தருடைய வார்த்தைகள் யாவையும் நியாயங்கள் யாவையும் ஜனங்களுக்கு அறிவித்தான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஏக சத்தமாய்: கர்த்தர் அருளின் எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். இந்த உறுதிமொழி, அது கீழ்ப்படியும் படியாக அவர்களைக் கட்டிவைத்த ஆண்டவருடைய வார்த்தைகளோடு கூட ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டது.PPTam 382.3

    பின்னர் உடன்படிக்கையை உறுதிப்படுத்துவது தொடர்ந்தது. மலையின் அடிவாரத்தில் ஒரு பலிபீடம் கட்டப்பட்டு, உடன்ப டிக்கையை அவர்கள் ஏற்றுக்கொண்டதற்குச் சாட்சியாக, இஸ்ர வேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே அதன் அருகே பன்னிரண்டு தூண்கள் நிறுத்தப்பட்டன. பின்னர் ஊழியத்திற்குத் தெரிந்து கொள்ளப்பட்ட வாலிபர்களால் பலிகள் செலுத்தப்பட்டன.PPTam 382.4

    காணிக்கைகளின் இரத்தத்தை பலிபீடத்தின் மேல் தெளித்த பின்னர், மோசே உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து, ஜனங்களின் காது கேட்க வாசித்தான். இவ்விதமாக உடன்படிக்கையின் நிபந்தனைகள் பக்திவிநயமாக திரும்பச் சொல்லப்பட்டு, அதை தெரிந்து கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ அனைவரும் சுதந் திரமாக விடப்பட்டார்கள். முதலில் தேவனுடைய சத்தத்திற்கு கீழ்ப் படிவதாக அவர்கள் வாக்குக் கொடுத்தார்கள். ஆனாலும் அவருடைய உடன்படிக்கை எவ்வளவு காரியங்களை உள்ளடக்கியிருக் கிறது என்பதை அவர்கள் அறியும்படியாக கற்பனைகள் அறிவிக் கப்பட்டதையும் அதனுடைய கொள்கைகள் முக்கியப்படுத்தப் பட்டதையும் கேட்டார்கள். மீண்டும் ஜனங்கள் ஒரே குரலில் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள். மோசே, நியாயப்பிரமாணத்தின்படி, சகல ஜனங்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை வெள் ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப் பான ஆட்டுமயிரோடும், ஈசோப் போடுங்கூட எடுத்து, புஸ்தகத்தின் மேலும் ஜனங்களெல்லார் மேலும் தெளித்து : தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான். எபி. 919,20 (48)PPTam 383.1

    யெகோவாவின்கீழ் அவரை இராஜாவாக வைத்து, தெரிந்து கொள்ளப்பட்ட அந்த ஜனம் முழுமையாக ஸ்தாபிக்கப்படும் படியான ஏற்பாடுகள் இப்போது செய்யப்பட வேண்டும். நீயும் ஆரோனும் நாதாபும் அபியூவும் இஸ்ரவேலின் மூப்பரில் எழுபது பேரும் கர்த்தரிடத்தில் ஏறி வந்து, தூரத்திலிருந்து பணிந்து கொள்ளுங்கள். மோசே மாத்திரம் கர்த்தரிடத்தில் சமீபித்து வரலாம் என்ற கட்டளையை மோசே பெற்றிருந்தான். ஜனங்கள் அதன் அடிவாரத்தில் தொழுது கொண்டபோது தெரிந்துகொள்ளப்பட்ட இந்த மனிதர்கள் மலையின் மேல் வரும்படியாக அழைக்கப்பட்ட னர். எழுபது மூப்பர்களும் இஸ்ரவேலின் அரசாங்கத்தில் மோசேக்கு உதவி செய்ய வேண்டும். தேவன் அவர்கள் மேல் தமது ஆவியை வைத்து, தமது வல்லமையையும் மேன்மையையும் காண்பித்து அவர்களைக் கனம் பண்ணினார். அவர்கள் இஸ்ர வேலின் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின் கீழே நீலக்கல்லிழைத்த வேலைக்கு ஒப்பாகவும் தெளிந்த வானத்தின் பிரபைக்கு ஒப்பாகவும் இருந்தது. அவர்கள் தெய்வத்தை காண வில்லை. ஆனால் அவருடைய சமூகத்தின் மகிமையைக் கண்டார்கள். இதற்கு முன் அப்படிப்பட்ட காட்சியை அவர்கள் தாங்கியிருக்கமாட்டார்கள். தேவனுடைய வல்லமைகளின் வெளிக்காட்டுதல் மனந்திரும்புவற்கு அவர்களை நெருக்கியிருந்தது. அவர்களுடைய தியானத்தின் நோக்கமாயிருந்த அவரை நெருங்கக்கூடியவரையிலும் அவர்கள் அவருடைய மகிமையையும் தூய்மையையும் இரக்கத்தையும் தியானித்துக்கொண்டிருந்தார்கள்.PPTam 383.2

    மோசேயும் அவனுடைய ஊழியக்காரனாகிய யோசுவாவும் தேவனைச் சந்திக்கும்படியாக இப்போது அழைக்கப்பட்டனர். அவர்கள் கொஞ்ச காலம் அங்கே இல்லாத போது, நியமிக்கப்பட்ட தலைவர்களான ஆரோனும் ஊரும் மூப்பர்களுடைய உதவியோடு அவனுடைய இடத்தில் செயல்பட வேண்டும். மோசே மலையின் மேல் ஏறின் போது, ஒரு மேகம் மலையை மூடிற்று. கர்த்தருடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது, தேவனுடைய விசேஷ சமூகத்தின் அடையாளமாக ஆறு நாட்களுக்கு மேகம் மலையை மூடியிருந்தது. ஆனாலும் அவரைக் குறித்த வெளிப்படுத்துதலாவது அல்லது அவருடைய சித்தத்தைக்குறித்த அறிவிப்பாவது அங்கே இல்லை. இந்த நேரத்தில் உன்னதமான வருடைய அறைக்குள் அழைக்கப்படும்படியாக மோசே காத்து தங்கியிருந்தான். நீ மலையின் மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு என்று அவன் சொல்லப்பட்டிருந்தான். அவனுடைய பொறுமையும் கீழ்ப்படிதலும் சோதிக்கப்பட்டபோதும், காத்திருப்ப தினால் அவன் இளைத்துப்போகவோ அல்லது தன்னுடைய நிலையை விட்டுவிடவோ இல்லை. காத்திருந்த இந்தக் காலம் அவ னுக்கு ஆயத்தப்படுகிற, சுயத்தை தீர்க்கமாக ஆராய்ச்சி செய்கிற நேரமாக இருந்தது. தேவனுக்குப் பிரியமான இந்த ஊழியக்காரன் கூட அவருடைய சமூகத்தில் உடனடியாக பிரவேசிக்கவோ அல்லது பிரவேசித்து அவருடைய மகிமையின் வெளிக்காட்டுதலை சகிக்கவோ கூடாதிருந்தான். தன்னை உண்டாக்கினவரோடு நேரடியான தொடர்பு கொள்ள ஆயத்தப்படுமுன்பாக தன்னுடைய இருதயத்தைச் சோதித்து, தியானித்து, ஜெபித்து, தேவனுக்கு தன்னை அர்ப்பணிக்க ஆறு நாட்கள் செலவிடப்பட வேண்டும்.PPTam 384.1

    ஓய்வுநாளான ஏழாம் நாளில் மோசே மேகத்திற்குள் அழைக் கப்பட்டான். அனைத்து இஸ்ரவேலர்களின் பார்வையிலும் கார் மேகம் திறந்தது. ஆண்டவருடைய மகிமை பட்சிக்கும் அக்கினியைப்போல் வெளிவந்தது. மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின் மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பது நாள் மலையில் இருந்தான் மலையில் தங்கியிருந்த இந்த நாற்பது நாட்களில் ஆயத்தமாகிக்கொண்டிருந்த ஆறு நாட்கள் இணைக்கப் படவில்லை. அந்த ஆறு நாட்களிலும் யோசுவா மோசேயோடு இருந்தான். அவர்கள் சேர்ந்து மன்னாவைப் புசித்து, மலையிலிருந்து ஓடுகிற ஆற்றிலேயிருந்து வந்த தண்ணீரைக் குடித்தார்கள். ஆனால் மேகத்திற்குள்ளாக மோசேயோடு யோசுவா பிரவேசிக்க வில்லை. அவன் வெளியே தங்கியிருந்து மோசே வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தவனாக அனுதினமும் புசித்து குடித்திருந் தான். ஆனால் மோசே நாற்பது நாட்கள் முழுவதும் உபவாசம் இருந்தான்.PPTam 384.2

    அவன் மலையில் தங்கியிருந்த காலத்தில், தெய்வீக பிரசன்னம் விசேஷமாக வெளிப்படப்போகிற ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதற்கான குறிப்புகளைப் பெற்றான். அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்கு வார்களாக (யாத். 258) என்பது தேவனுடைய கட்டளையாக இருந்தது. மூன்றாவது முறையாக ஒய்வுநாளை கைக்கொள்ளுவது கட்டளையிடப்பட்டது. அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும் உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாள மாயிருக்கும். ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக, அது உங்களுக்குப் பரிசுத்தமானது ; அதிலே வேலை செய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஐனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டு போவான் (யாத். 31:17, 13, 14) என்று ஆண்ட வர் கூறினார். தேவனுடைய சேவைக்காக ஆசரிப்புக் கூடாரத்தை உடனடியாக எழுப்பும்படியான கட்டளைகள் கொடுக்கப்பட்டன. தேவனுடைய மகிமை அவர்கள் கண்களுக்கு முன்பாக இருந்ததினாலும், ஆராதனை செய்யும் படியான இடம் அவர்களுக்கு மிகவும் அவசியப்பட்டிருந்ததினாலும் ஓய்வுநாளில் கட்டுவதினால் தாங்கள் செய்யும் வேலை நீதியானது என்று இப்போது ஜனங்கள் முடிவிற்கு வரலாம். இந்தத் தவறிலிருந்து அவர்களைக் காப்பதற்காக எச்சரிப்பு கொடுக்கப்பட்டது. தேவனுக்காக செய்யப்பட்ட இந்த விசேஷித்த வேலையின் புனிதமும் அவசரமும் கூட அவருடைய பரிசுத்த ஓய்வுநாளை மீறுவதற்கு அவர்களை நடத்தக்கூடாது. தங்கியிருந்த தங்களுடைய இராஜாவின் சமூகத்தினால் இதுவரையிலும் ஜனங்கள் கனப்படுத்தப்பட்டிருந்தார்கள். இஸ்ரவேல் புத்திரரின் நடுவே நான் வாசம்பண்ணி, அவர்களுக்குத் தேவனாயிருப்பேன். அந்த ஸ்தலம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும் (யாத். 29.45,43) என்ற உறுதிமொழி மோசேக்குக் கொடுக்கப்பட்டது. தேவனுடைய அதிகாரத்தின் அடையாள மாகவும் அவருடைய சித்தத்தின் அடக்கமாகவும் இரண்டு கற்பலகைகளில் தேவனுடைய விரலினால் பொறிக்கப்பட்ட பத்து கற்பனைகளின் நகல் ஒன்று தேசத்தின் ஆராதனைக்கு மையஸ்தல மாக இருக்கக்கூடிய ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பரிசுத்தமாக காக்கப்படும் படியாக மோசேயிடம் கொடுக்கப்பட்டது. (உபா. 9:10, யாத் 32:15, 16)PPTam 385.1

    அடிமை இனம் என்பதிலிருந்து இராஜாதி இராஜாவின் செ ராந்த சம்பத்தாக இருக்கும்படி மற்ற அனைத்து ஜனத்திற்கும் மேலாக இஸ்ரவேலர்கள் உயர்த்தப்பட்டிருந்தனர். அவர்களிடம் தம்முடைய பரிசுத்த நியமங்களைக் கொடுக்கும்படியாக தேவன் அவர்களை உலகத்திலிருந்து பிரித்தெடுத்தார். தம்முடைய கற்பனைகளின் கருவூலங்களாக அவர்களை ஆக்கி, அவர்கள் வழியாக தம்மைக்குறித்த அறிவை மனிதர்கள் நடுவே பாதுகாக் கும்படி அவர் நோக்கங்கொண்டிருந்தார். இவ்வாறாக இருளினால் மூடப்பட்டிருந்த உலகத்திற்கு பரலோகத்தின் ஒளி பிரகாசித்து, தங்கள் விக்கிரகங்களிலிருந்து திரும்பி, ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்யும்படி அழைக்கிற சத்தம் கேட்கப்பட வேண்டும். இஸ்ரவேலர்கள் தங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பார் களானால், உலகத்தில் அவர்கள் வல்லமையுள்ளவர்களாவார்கள். தேவன் அவர்களுடைய பாதுகாப்பாயிருந்து, மற்ற அனைத்து ஜாதிகளைக் காட்டிலும் அவர்களை உயர்த்துவார். அவருடைய வெளிச்சமும் சத்தியமும் அவர்கள் வழியாக வெளிப்படுத்தப்பட்டு, அவருடைய ஞானமான பரிசுத்த சட்டங்களின்கீழ், விக்கிரக ஆராதனையின் அனைத்து வடிவத்திற்கும் மேலாக, அவருக்குச் செய்யும் ஆரானையின் மிக மேன்மையான உதாரணங்களாக அவர்கள் இருப்பார்கள்.PPTam 386.1