Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    43 - மோசே மரித்துப்போகிறான்

    தேவன் தம்முடைய ஜனங்களோடு இடைப்பட்டதிலெல்லாம் அவருடைய அன்போடும் இரக்கத்தோடுங்கூட அவருடைய கண்டிப்பான பட்சபாதமில்லாத நீதி கலந்திருப்பதற்கான மிகவும் குறிப்பான சான்றுகள் இருக்கின்றன. இது எபிரெய மக்களின் சரித்திரத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தேவன் இஸ்ரவேலின் மேல் மாபெரும் ஆசீர்வாதங்களை வைத்திருந்தார். அவர்கள் மேல் இருந்த அவருடைய அன்பான தயவு கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின் மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின் மேல் சுமந்துகொண்டு போகிறது போல், கர்த்தர் ஒருவரே அவனை வழி நடத்தினார் என்னும் தொடக்கூடிய வருணிப்பில் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனினும் அவர்களுடைய மீறுதல்களினிமித்தம் எவ்வளவு வேகமான கடுமையான நியாயத்தீர்ப்பு அவர்கள் மேல் அனுப்பப்பட்டிருந்தது!PPTam 606.1

    தொலைந்து போன இனத்தை மீட்கும் படியாக தமது ஒரேபேறான குமாரனை நித்தியமாகக் கொடுத்ததில் தேவனுடைய அன்பு வெளிக்காட்டப் பட்டிருக்கிறது. தமது பிதாவினுடைய குணத்தை மனிதர்களுக்கு வெளிக்காட்டும் படி கிறிஸ்து பூமிக்கு வந்தார். அவருடைய வாழ்க்கை தெய்வீக தயவு மற்றும் உருக் கத்தின் செயல்களால் நிறைந்திருந்தது. எனினும் கிறிஸ்துதாமே : வானமும் பூமியும் ஒழிந்து போனாலும், ........ அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது (மத். 5:18) என்று அறிவிக்கிறார். தம்மிடம் வரவும் மன்னிப்பையும் சமாதானத்தையும் கண்டடையவும் பாவியை பொறுமையாக அன்பான மன்றாட்டோடு அழைக்கிற அதே குரல், தமது இரக்கத்தை நிராகரித்தவர்களிடம் : சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு போங்கள் (மத் 2541) என்று நியாயத்தீர்ப்பில் கூறும். ஒரு இளகிய தகப்பனாக மாத்திரமல்ல, நீதியுள்ள நியாயாதி பதியாகவும் தேவன் வேதாகமம் முழுவதிலும் எடுத்துக்காட்டப் பட்டிருக்கிறார்.PPTam 606.2

    இரக்கம் காண்பிப்பதிலும் அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறதிலும் மகிழ்ந்திருந்தாலும், குற்றவாளியைக் குற்றமற்றவனாக. (யாத். 34:7) விடமாட்டார்.PPTam 607.1

    இஸ்ரவேல் சபையாரை அந்த நல்ல தேசத்திற்குள் மோசே நடத்திச் செல்லக்கூடாது என்பதை தேசத்தின் மாபெரும் அதிபதி அறிவித்திருந்தார். தேவனுடைய ஊழியக்காரனின் ஊக்கமான மன்றாட்டுகள் அவருடைய தீர்ப்பை திருப்பக்கூடாது போயிற்று. தான் மரிக்க வேண்டும் என்பதை அவன் அறிந்திருந்தான். எனினும் இஸ்ரவேலின் மேலிருந்த தன்னுடைய கவனத்தில் அவன் ஒரு நொடியும் தவறவில்லை. வாக்குத்தத்த சுதந்தரத்திற்குள் நுழைவதற்கு சபையாரை ஆயத்தப்படுத்த அவன் உண்மையாகத் தேடினான். மேகஸ்தம்பம் வந்து வாசலில் தங்கினபோது தெய்வீகக் கட்டளையின்படி மோசேயும் யோசுவாவும் அதற்குள் சென்றனர். இங்கே யோசுவாவின் அதிகாரத்திற்குள் ஜனங்கள் பவித்திரமாக ஒப்படைக்கப்பட்டனர். இஸ்ரவேலின் தலைவனாக மோசேயினுடைய வேலை முடிவுக்கு வந்தது. இன்னமும் தனது ஜனங்களின் மேலிருந்த ஆர்வத்தில் அவன் தன்னை மறந்தான். கூடியிருந்ததிரளானோரின் முன்பு: நீ பலங்கொண்டு திடமானதாயிரு, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் நீ அவர்களை நடத்திக்கொண்டு போவாய், நான் உன்னோடிருப்பேன் என்று கட்டளையிட்டார் என்ற பரிசுத்த வார்த்தைகளை யோசுவாவிடம் கூறினான். பின்னர் ஜனங்களின் மூப்பர்களிடமும் பிரபுக்களிடமும் திரும்பி, தேவனிடமிருந்து அவன் அவர்களுக்கு அளித்திருந்த போதனைகளுக்கு விசுவாசத்தோடு கீழ்ப்படியும் பவித்திரமான பொறுப்பைக் கொடுத்தான்.PPTam 607.2

    தங்களிடமிருந்து விரைவாக எடுத்துக்கொள்ளப்படப்போகிற வயதான அந்த மனிதனை ஜனங்கள் பார்த்தபோது, அவனுடைய தகப்பனின் மென்மையையும், அவனுடைய ஞானமுள்ள ஆலோசனைகளையும், அவனுடைய சலிப்படையாத உழைப்பையும் அவர்கள் புதிய ஆழமான போற்றுதலோடு திரும்பவும் நினைவுகூர்ந்தனர். எவ்விதம் பலவேளைகளில் தங்களுடைய பாவங்கள் தேவனுடைய நீதியுள்ள நியாயத்தீர்ப்புகளைத் தங்கள் மேல் கொண்டுவந்திருந்தபோது அவர்களைக்காப்பாற்றும்படியாக மோசேயின் ஜெபம் அவரை தடுத்திருக்கிறது ! மனவருத்தத்தினால் அவர்களுடைய துக்கம் மிக அதிகமானது. தங்களுடைய சொந்த முறைகேடே அவன் சாகவேண்டியதிருந்த பாவத்திற்கு அவனைத் தூண்டியது என்பதை அவர்கள் கசப்போடு நினைவுகூர்ந்தனர். 4PPTam 608.1

    மோசேயின் வாழ்க்கையும் ஊழியமும் தொடர்வதால் அவர்கள் பெற்றிருக்கக்கூடிய எதையும் விட, அவர்களுடைய அன்பான தலைவன் அவர்களிடமிருந்து விலக்கப்பட்டது இஸ்ரவேலுக்கு மிகவும் பலமான கடிந்து கொள்ளுதலாக இருக்கும். மோசேயினுடைய வாழ்க்கையைப் போல் தங்கள் எதிர்காலத் தலைவனின் வாழ்க்கையையும் போராட்டமானதாகச் செய்து விடக்கூடாது என்பதை உணர தேவன் அவர்களை நடத்துவார். கொடுக்கப்பட்ட ஆசீர்வாதங்களினால் தேவன் தமது ஜனங்களிடம் பேசுகிறார். அவைகள் போற்றப்படாத போது, தங்களுடைய பாவங்களைக் கண்டு முழு இருதயத்தோடும் அவரிடம் திரும்ப அவர்களை நடத்தும் படி விலக்கப்படுகிற ஆசீர்வாதங்களினால் அவர்களோடு அவர் பேசுகிறார்.PPTam 608.2

    அதே நாளிலே தானே : நீ... நேபோ பர்வதத்தில் ஏறி, நான் இஸ்ரவேல் சந்ததியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கும் கானான் தேசத்தைப் பார்; ..... நீயும் ஏறப்போகிற மலையிலே மரித்து, உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய் என்ற கட்டளை மோசேக்கு வந்தது. மோசே அநேக வேளைகளில் தேவனுடன் பேசும் படியாக தெய்வீக அழைப்பிற்குக் கீழ்ப்படிந்து பாளயத்தைவிட்டுச் சென்றிருக்கிறான். ஆனால் இப்போது ஒரு புதிய மர்மமான அழைப்பின்படி அவன் பிரிந்து செல்ல வேண்டும். தனது வாழ்க்கையை தன்னை சிருஷ்டித்தவரின் கரங்களில் கொடுக்கும் படியாக இப்போது அவன் செல்ல வேண்டும். தான் தனியாக மரிக்க வேண்டும் என்பதையும் தன்னுடைய கடைசி மணி நேரங்களில் தனக்கு ஊழியஞ்செய்ய எந்த பூலோக நண்பனும் அனுமதிக்கப்படமாட்டான் என்பதையும் மோசே அறிந்திருந்தான். அவனுக்கு முன்னிருந்த காட்சிகளில் ஒரு மர்மமும் பயங்கரமும் இருந்தது. அதினால் அவனுடைய இருதயம் துவண்டது. அவனது கவனத்திலிருந்த ஜனங்களிடமிருந்து அவனுடைய ஆர்வங்களும் வாழ்க்கையும் அநேக காலம் இணைக்கப்பட்டிருந்த ஜனங்களிடமிருந்து பிரிவதும்தான் அவனுக்கு கடுமையான போராட்டமாக இருந்தது. ஆனால் தேவனை நம்ப அவன் கற்றிருந்தான். கேள்வி கேட்காத விசுவாசத்தோடு தன்னையும் தன் ஜனங்களையும் அவருடைய அன்புக்கு ஒப்புக்கொடுத்தான்.PPTam 608.3

    கடைசி முறையாக மோசேஜனங்களின் கூட்டத்தில் நின்றான். மீண்டும் தேவனுடைய ஆவியானவர் அவன் மேல் தங்க, மிகவும் தெளிவான மனதைத் தொடும் வார்த்தைகளில் ஒவ்வொரு கோத்திரத்தின் மேலும் ஆசீர்வாதத்தை அறிவித்து அனைவரையும் அசீர்வதித்து முடித்தான்.PPTam 609.1

    யெஷுரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை. அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின் மேலும் தமது மாட்சி மையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார். அநாதி தேவனே உனக்கு அடைக்கலம், அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம், அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார். இஸ்ரவேல் சுகமாய்த் தனித்து வாசம் பண்ணுவான்; யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சரசமுமுள்ள தேசத்திலே இருக்கும், அவருடைய வானமும் பனியைப் பெய்யும். இஸ்ரவேலே, நீ பாக்கியவான், கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான் - உபா. 33:26-29.PPTam 609.2

    சபையாரிடமிருந்து திரும்பி, மெளனத்தோடும் தனிமையாகவும் மோசே மலையின்புறமாக நடந்தான். அவன் நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறினான். தனிமையான உயரங்களில் அவன் நின்று மங்காத பார்வையோடு தனக்கு முன் விரிக்கப்பட்டிருந்த காட்சியைக் கண்டான். மேற்புறம் வெகுதூரத்தில் மகா சமுத்திரத்தின் நீலத்தண்ணீர்கள் இருந்தன. வடக்கே வானத்தை அளாவும் எர்மோன் மலை நின்றிருந்தது. கிழக்கே மோவாபின் மேடும் பாசானைத் தாண்டி இஸ்ரவேலின் வெற்றிக் காட்சிகளும் இருந்தன. தென்புறத்தில் நீண்டகாலம் அலைந்திருந்த வனாந்தரம் பரவியிருந்தது.PPTam 609.3

    தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனத்தோடு தன் வாழ்க்கையை நடத்தும் படி, எகிப்தின் செழிப்பான இராஜ்யத்திலிருந்தும், அதன் பிராகாரங்களில் கிடைக்கும் கனத்திலிருந்தும் திரும்பினதிலிருந்து, ஏற்றதாழ்வுகள் கொண்ட தன் வாழ்க்கையையும் கடினத்தையும் தனிமையில் மோசே திருப்பிப்பார்த்தான். எத்திரோவின் மந்தைகளோடு வனாந்தரத்தில் இருந்த நீண்ட வருடங்களையும் எரிகிற முட்செடியில் தூதன் தோன்றினதையும் இஸ்ரவேலை விடுவிக்கும் அந்த சொந்த அழைப்பையும் மனதிற்குக் கொண்டுவந்தான். தெரிந்துகொள்ளப் பட்ட ஜனங்களுக்காக வெளிக்காட்டப்பட்ட தேவனுடைய வல்லமையின் மாபெரும் அற்புதங்களையும், அலைச்சலும் மீறுதலுமான வருடங்களில் அவருடைய நீடிய பொறுமையான கிருபையையும் மீண்டும் அவன் கண்டான். தேவன் அவர்களுக்காக நடப்பித்த அனைத்தோடும் தன்னுடைய சொந்த ஜெபங்களும் இருந்தபோதும் அந்த எகிப்தைவிட்டு வெளியே வந்த அந்த மாபெரும் படையில் பெரியவர்களில் இரண்டு பேர் மாத்திரமே வாக்குத்தத்த தேசத்திற்குள் நுழைய உண்மையானவர்களாகக் காணப்பட்டனர். தன்னுடைய உழைப்பின் விளைவுகளை மோசே திருப்பிப்பார்த்த போது, போராட்டமான அவனுடைய வாழ்க்கையும் தியாகங்களும் ஏறக்குறைய வீணானது போல் அவனுக்குத் தோன்றினது.PPTam 610.1

    எனினும் தான் சுமந்த பாரங்களினிமித்தம் அவன் மனம் வருந்தவில்லை. தேவனே நியமித்திருந்ததின்படிதான் தன்னுடைய வேலையும் ஊழியமும் இருந்தது என்பதை அவன் அறிந்திருந்தான். அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலர்களின் தலைவனாகும்படி அழைக்கப்பட்டபோது முதலில் அவன் பின்வாங்கினான். ஆனால் அந்த வேலையை எடுத்துக்கொண்டதிலிருந்து அந்த பாரத்தை அவன் தள்ளிவைக்கவில்லை. கலகக்காரரான இஸ்ரவேலர்களை அழித்து, அவனை அதிலிருந்து விடுவிக்கும்படி தேவன்தாமே முன்மொழிந்தபோது மோசேயால் அதற்கு இணங்கிப்போக முடியவில்லை. அவனுடைய போராட்டங்கள் மிகப் பெரியவைகளாக இருந்தபோதும் தேவனுடைய தயவின் விசேஷ அடையாளங்களை அவன் அனுபவித்திருந்தான். தேவனுடைய வல்லமையும் மகிமையும் வெளிக்காட்டப்பட்டதைக் கண்டதாலும், அவருடைய அன்பில் தோழமை கொண்டிருந்ததாலும் . வனாந்தரப் யாத்திரையின் போது மிக ஆசீர்வாதமான அனுபவத்தை அவன் பெற்றிருந்தான். பாவ சந்தோஷங்களை சிலகாலம் அனுபவிப்பதற்கு பதிலாக தேவனுடைய ஜனங்களோடு துன்பப்பட தெரிந்துகொண்டதில் மிக ஞானமாகத் தெரிந்தெடுத்திருந்ததை அவன் உணர்ந்தான்.PPTam 610.2

    தேவனுடைய ஜனங்களின் தலைவனாக தன்னுடைய அனுபவத்தை பின் நோக்கிப் பார்த்தபோது, ஒரு தவறான செய்கை அவனுடைய பதிவைச் சீர்குலைத்திருந்தது. அந்த மீறுதல் அழிக்கப்படக்கூடுமானால், மரணத்திலிருந்து பின்வாங்கமாட் டேன் என்று அவன் உணர்ந்தான். மனந்திரும்புவதையும் வாக்குத்தத்தமான பலியின் மேல் விசுவாசம் வைப்பதையும் தான் தேவன் எதிர்பார்க்கிறார் என்ற நிச்சயம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. மீண்டும் மோசே தன் பாவத்தை அறிக்கை செய்து இயேசு வின் நாமத்தில் மன்னிப்பை மன்றாடினான்.PPTam 611.1

    இப்போது வாக்குத்தத்த தேசத்தின் பரந்த காட்சி அவனுக்குக் கொடுக்கப்பட்டது. தேசத்தின் ஒவ்வாரு பகுதியும் அவன் முன் விரிக்கப்பட, வெகு தூரத்தில் மங்கிய நிச்சயமில்லாததாக அல்ல, மாறாக, தெளிவாக குறிப்பாக அழகாக அவனுடைய பார்வை விரும்பக்கூடியதாக அது இருந்தது. அப்போது காணப்பட்டதைப் போலவும் அல்ல, பின்னர் இஸ்ரவேல் அதை சுதந்தரித்த பின் தேவனுடைய ஆசீர்வாதங்கள் அதன் மேல் இருக்கும் போது எவ்விதம் காணப்படும் என்று அவனுக்குக் காட்டப்பட்டது. இரண்டாவது ஏதேனைப் பார்ப்பதைப்போல அவனுக்குத் தோன்றியது. லீபனோனின் கேதுருக்களால் மூடப்பட்ட மலைகள் இருந்தன. குன்றுகள் ஒலிவ மரங்களால் மங்கின் சாம்பல் நிறத்தோடு திராட்சையின் மணத்தால் நிரம்பியிருக்க பரந்த பசு மையான சமபூமி பூக்களால் பிரகாசமாகவும் கனிகளால் செழிப்பாகவும், வெப்ப மண்டலத்தின் பேரீச்சைகள் இங்கேயும், அசைந்தாடும் கோதுமையும் வாற்கோதுமையும் அங்கேயுமாக, சூரிய பள்ளத்தாக்குகள் அவைகளில் ஓடும் ஓடைகளின் ஓசையாலும் பறவைகளின் பாடல்களாலும் இனிமையாகவும், நல்லபட்டணங்களும் அழகான தோட்டங்களும், கடல்களிலுள்ள சம்பூரணத்தைக் கொண்டிருந்த செழிப்பான ஏரிகளும், குன்றுகளின் மேல் மேய்ந்து கொண்டிருக்கும் மந்தைகளும், மலைகளுக்கு நடுவிலும் காட்டு தேனீக்கள் சேர்த்துவைத்திருந்த பொக்கிஷங்களும் அவனுக்குக் காட்டப்பட்டிருந்தன. மோசே தேவனுடைய ஆவியினால் ஏவப்பட்டு, கர்த்தரால் ... ஆசீர்வதிக்கப்படுவதாக,... வானத்தின் செல்வத்தினாலும், பனியினாலும், ஆழத்திலுள்ள நீரூற்றுகளினாலும், சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான கனிகளினாலும், சந்திரன் பக்குவப் படுத்தும் அருமையான பலன்களினாலும், ஆதிபர்வதங்களில் உண்டாகும் திரவியங்களினாலும், நித்திய மலைகளில் பிறக்கும் அரும்பொருள்களினாலும், என்று இஸ்ரவேலுக்கு விவரித்த அப்படிப்பட்ட தேசமாகவே அது இருந்தது.PPTam 611.2

    தெரிந்துகொள்ளப்பட்டஐனம்கானானில் நிலைநிறுத்தப்பட்டு, கோத்திரங்கள் ஒவ்வொன்றும் அதனதன் இடத்தில் சுதந்தரம் பெறுவதையும் மோசே கண்டான். வாக்குத்தத்த தேசத்தில் நிலை வரப்பட்ட பின்னர் அவர்களுடைய சரித்திரத்தை மோசே கண்டான். அவர்களுடைய மீறுதலின் நீண்ட வருத்தமான கதையும் அதன் தண்டனையும் அவன் முன்விரிக்கப்பட்டது. அவர்களுடைய பாவங்களினால் அவர்கள் புறஜாதிகளுக்கு நடுவே சிதறடிக் கப்பட்டதையும், மகிமை இஸ்ரவேலிலிருந்து பிரிந்து செல்லுவதையும், அவளுடைய அழகான பட்டணம் இடிபாடுகளில் இருப்ப தையும், அவளுடைய ஜனங்கள் அந்நிய தேசத்தில் சிறைகளாக இருப்பதையும் அவன் கண்டான். அவர்கள் தங்களுடைய பிதாக்களின் தேசத்தில் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டதையும், கடைசியாக ரோம அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதையும் அவன் கண்டான்.PPTam 612.1

    காலங்களின் ஓட்டத்தில் இன்னும் கீழே சென்று நமது இரட்ச கரின் முதல் வருகையைக் காண அவன் அனுமதிக்கப்பட்டான். இயேசுவை பெத்லகேமில் குழந்தையாக அவன் கண்டான். தேவனுக்குத் துதியும் பூமியில் சமாதானத்தையும் கூறி மகிழ்ச்சியான பாடல் வெளிவருவதை தூதர் சேனையின் குரல்களில் அவன் கேட்டான். கிழக்கத்திய ஞானிகளை இயேசுவிடம் வழிநடத்திய நட்சத்திரத்தை வானங்களிலே கண்டான். ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும் (எண்.24:17) என்ற தீர்க்கதரிசன வார்த்தைகளை திரும்ப நினைவுகூர்ந்தபோது அவனுடைய மனதில் மாபெரும் வெளிச்சம் பாய்ந்தது. நாசரேத்தில் கிறிஸ்துவினுடைய தாழ்மையான வாழ்க்கையையும், அன்பும் இரக்கமும் குணமாக்குதலுமான அவருடைய ஊழியத்தையும், பெருமையான விசுவாசமில்லாத தேசத்தால் அவர் நிராகரிக்கப்படுவதையும் அவன் கண்டான். ஆச்சரியப்பட்டவனாக, தேவனுடைய பிரமாணத்தை பெருமையோடு அவர்கள் உயர்த்திப்பிடித்த அதே நேரம் எவரால் அது கொடுக்கப்பட்டதோ அவரை நிராகரிக்கிற தைக் கவனித்தபோது அவன் வியந்தான். இயேசு ஒலிவமலையின் மேல் கண்ணீரோடு தான் நேசித்திருந்த பட்டணத்திற்கு பிரியாவிடை தந்ததை அவன் கண்டான். பரலோகத்தால் மிக அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டிருந்த அந்தஜனம் முடிவாக நிராகரிக்கப்பட்டதை மோசே கண்டபோது, அந்த ஐனம் யாருக்காக அவன் உழைத்து ஜெபித்து தியாகம் பண்ணியிருந்தானோ, யாருக்காக தன்னுடைய சொந்தப் பெயர் ஜீவப் புத்தகத்திலிருந்து அழிக்கப்படவும் மனங்கொண்டிருந்தானோ, அந்த ஜனம் முடிவாக நிராகரிக்கப்படுவதைக் கண்டபோது, இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கி விடப்படும் (மத். 2338) என்ற பயங்கரமான வார்த்தைகளை கவனித்தபோது அவன் இருதயம் வேதனையால் பிழியப்பட, தேவகுமாரனுடைய துக்கத்தைக் குறித்த அனுதாபத் தினால் கசப்பான கண்ணீர்கள் அவன் கண்களிலிருந்து விழுந்தன !PPTam 612.2

    இரட்சகரை கெத்செமனேக்குப் பின்தொடர்ந்து, தோட்டத் திலிருந்த தாங்கவொண்ணா துயரையும், காட்டிக்கொடுக்கப்படுவ தையும் பரியாசத்தையும் சாட்டையடிகளையும் சிலுவையின் மரணத்தையும் கண்டான். வனாந்தரத்திலே தான் சர்ப்பத்தை உயர்த்தினதுபோல அவரில் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொருவனும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு (யோவான் 3:15) தேவனுடைய குமாரன் உயர்த்தப்படவேண்டும் என்பதை மோசே கண்டான். தங்கள் மீட்பருக்கு எதிராக, தங்கள் பிதாக் களுக்கு முன் சென்ற வல்லமையான தூதனுக்கு எதிராக யூத தேசம் வெளிக்காட்டின் சாத்தானிய வெறுப்பையும் மாய்மாலத்தையும் மோசே கண்டபோது, அவனுடைய இருதயம் துக்கத்தாலும் மூர்க்கத்தாலும் திகிலாலும் நிறைந்தது. என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் (மாற்கு 15:34) என்ற கிறிஸ்துவின் வேதனை நிறைந்த அழுகையை அவன் கேட்டான். யோசேப்பின் புதிய கல்லறையில் அவர் வைக்கப்பட்டிருப்பதை அவன் கண்டான். நம்பிக்கையில்லாத விரக்தியின் இருள் உலகத்தை மூடுவதைப் போலக் காணப்பட்டது. ஆனால் அவன் மீண்டும் பார்த்து, வெற்றியாளராக அவர் வெளியே வருவதையும், அவரைத்துதிக்கும் தூதர்கள் சூழ பரலோகத்திற்கு எழும்புவதையும் சிறைப்பட்டவர்களின் கூட்டத்தை நடத்திச் செல்வதையும் அவன் கண்டான்.PPTam 613.1

    பிரகாசமான வாசல்கள் அவரை ஏற்றுக்கொள்ளும்படி திறப்பதையும், தங்கள் அதிபதியை வெற்றியின் கீதங்களால் பரலோக சேனை வரவேற்பதையும் அவன் கண்டான். இரட்ச கருடன் சென்று நித்திய வாசல்களை அவருக்குத் திறக்கப்போகிற ஒருவனாக அவனே இருப்பான் என்பது அங்கே அவனுக்கு வெளியாக்கப்பட்டது. அந்தக் காட்சியைக் கண்டபோது அவன் முகம் பரிசுத்த பிரகாசத்தின் கதிர்களால் பிரகாசித்தது. தேவகுமாரனோடு ஒப்பிட்ட போது தன்னுடைய போராட்டங்களும் வாழ்க்கையின் தியாகங்களும் எவ்வளவு சிறியதாகத் தோன்றியது! மிகவும் அதிகமான நித்திய கனமகிமை (2 கொரி. 4:17)யோடு ஒப்பிடும் போது எவ்வளவு சிறியதாக இருக்கிறது. கிறிஸ்துவின் பாடுகளில் மிகக் குறைந்த அளவில் பங்கெடுக்க தான் அனுமதிக்கப்பட்டிருந்ததில் அவன் களிகூர்ந்தான்.PPTam 613.2

    அவருடைய நற்செய்தியை உலகத்திற்கு கொண்டு செல்ல இயேசுவின் சீடர்கள் சென்றதை மோசே கண்டான். மாமிசபிரகார மாக தேவன் அழைத்திருந்த உன்னதமான வாழ்க்கையில் உல கத்திற்கு வெளிச்சமாவதில் இஸ்ரவேல் மக்கள் தோற்றுப்போயிருந் தாலும், தெரிந்து கொண்ட ஐனமாக அவர்கள் தேவனுடைய கிரு பையை ஒதுக்கி தங்களுடைய ஆசீர்வாதங்களை இழந்திருந்த போதும் ஆபிரகாமின் வித்தை தேவன் தள்ளியிருக்கவில்லை. இஸ்ரவேலின் வழியாக நிறைவேற்றும்படி அவர் எடுத்திருந்த மகிமையான நோக்கங்கள் நிறைவேறும். விசுவாசத்தினாலே கிறிஸ்துவின் பிள்ளைகளாகிறவர்கள் ஆபிரகாமின் சந்ததியாக எண்ணப்படுவார்கள். உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்களை அவர்கள் சுதந்தரிப்பார்கள். தேவனுடைய பிரமாணங்களையும் அவருடைய குமாரனின் நற்செய்தியையும் பாதுகாக்கவும் உலகத்திற்குத் தெரியப்படுத்தவும் அவர்கள் அழைக்கப்பட்டிருந் தார்கள். இருளில் இருக்கும் (மத். 4:16) ஜனங்களுக்கு இயேசுவின் சீடர்களால் சுவிசேஷத்தின் ஒளி பிரகாசிப்பதையும், புறஜாதிகளின் தேசங்களில் ஆயிரக்கணக்கானோர் பிரகாசிக்கிற அதன் ஒளியினிடத்திற்கு கூடிவருவதையும் மோசே கண்டான். கண்டபோது, இஸ்ரவேலின் எண்ணிக்கையையும் செழிப்பையுங்குறித்து அவன் களிகூர்ந்தான்.PPTam 614.1

    இப்போது மற்றொரு காட்சி அவன் முன் கடந்து சென்றது. கிறிஸ்துவுடைய பிதாவின் பிரமாணத்தை கைக்கொள்ளுவதாக அறிவிக்கும் போது, கிறிஸ்துவை நிராகரிக்க யூதர்களை நடத்துவதில் சாத்தானின் வேலை அவனுக்குக்காண்பிக்கப்பட்டது. அதேபோல கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கும் போது அவருடைய பிரமாணங்களை நிராகரிக்கும் வஞ்சகத்தில் கிறிஸ்தவ உலகம் இருப்பதைPPTam 614.2

    அவன் இப்போது கண்டான். இவனை அகற்றும் அகற்றும் அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று வெறிகொண்ட சாத்தானிய கூக்குரலை ஆசாரியர்களிடமிருந்தும் மூப்பர்களிடமிருந்தும் அவன் கேட்டிருந்தான். இப்போது கிறிஸ்தவ போதகர்கள் என்று அழைத்துக்கொள்ளுகிறவர் களிடமிருந்து பிரமாணத்தை அகற்றும் என்ற கூக்குரலை அவன் கேட்டான். ஓய்வு நாள் காலின் கீழ் மிதிக்கப்படுவதையும் அதனிடத்தில் போலியான நியமனம் ஸ்தாபிக்கப்படுவதையும் அவன் கண்டான். மீண்டும் மோசே ஆச்சரியத்திலும் திகிலிலும் நிரம்பினான் கிறிஸ்துவை விசுவாசித்தவர்கள் எவ்விதம் அவருடைய சொந்தக் குரலால் சொல்லப்பட்ட பிரமாணத்தை நிராகரிக்க முடியும் ? தேவனுக்குப் பயப்படுகிறவன் எவ்விதம் பரலோகத்திலும் பூமியிலும் அவருடைய அரசாங்கத்தின் அஸ்திபாரமாயிருக்கிற பிரமாணத்தை அப்புறப்படுத்த முடியும்? தேவனுடைய பிரமாணம் இன்னும் கனம் பண்ணப்படுவதையும் சிலரால் உயர்த்திப் பிடிக்கப்படுவதையும் மோசே மகிழ்ச்சியோடு கண்டான். தேவனுடைய பிரமாணத்தை கைக்கொள்ளுகிறவர்களை அழிக்கும் படியான உலகளாவிய போராட்டத்தை அவன் கண்டான். பூமியின் குடிகளை அவர்களுடைய அக்கிரமத் தினிமித்தம் தண்டிக்கும்படியும், அவருடைய நாமத்திற்குப் பயந்தவர்கள் மறைக்கப்பட்டு, அவருடைய கோபத்தின் நாளிலே ஒளிக்கப்பட, தேவன் எழும்பும் காலத்தை அவன் பார்த்திருந்தான். அவருடைய பிரமாணத்தைக் கைக்கொண்டவர்களோடு தேவனுடைய சமாதான உடன்படிக்கையை அவன் கேட்டான். பரிசுத்த உறைவிடத்திலிருந்து அவர் தம்முடைய சத்தத்தை அவர் தொனிக்கச் செய்தபோது வானங்களும் பூமியும் அசைந்தன. கிறிஸ்து இரண்டாவது முறை தமது மகிமையில் வருகிறதையும் மரித்த நீதிமான்கள் நித்திய ஜீவனுக்காக எழுப்பப்படுவதையும் உயிரோடிருந்த பரிசுத்தவான்கள் மறுரூபமாவதையும் ஒன்றாக மகிழ்ச்சியின் கீதத்தோடு பரலோகத்திற்கு எழும்புவதையும் அவன் கண்டான்.PPTam 614.3

    இன்னும் மற்றொரு காட்சி அவன் பார்வைக்குத் திறக்கிறது. சமீபத்தில் அவன் முன் விரிக்கப்பட்டிருந்த அழகான வாக்குத்தத்த தேசத்தைக் காட்டிலும் விரும்பப்படத்தக்க பூமி சாபத்திலிருந்து விடுவிக்கப்பட்ட காட்சி அவன் முன் திறக்கப்பட்டது. அங்கே பாவமில்லை . மரணம் அங்கே நுழைய முடியாது. அங்கே இரட்சிக்கப்பட்ட ஜாதி தங்கள் நித்திய இல்லத்தை கண்டடைகிறது. வசனிக்கக்கூடாத மகிழ்ச்சியோடு மோசே அந்தக் காட்சியை மிகப்பிரகாசமான அவனுடைய நம்பிக்கைகள் இதுவரை கண்டிராத மகிமையான இன்னும் மகிமையான காட்சியை விடுதலையின் நிறைவேறுதலை காண்கிறான். இந்தப் பூலோக அலைச்சல்கள் என்றைக்குமாக கடந்து போய் தேவனுடைய இஸ்ரவேல் முடிவாக நல்ல தேசத்திற்குள் நுழைந்தது.PPTam 615.1

    மீண்டும் தரிசனம் மறைய அவனுடைய கண்கள் வெகு தூரத்தில் பரவியிருந்த கானான் தேசத்தின் மேல் பதிந்தது. பின்னர் சே ரார்வடைந்த போர்வீரனாக இளைப்பாறும் படியாக அவன் படுத்தான். அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான். அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத் பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம் பண்ணினார். இந்நாள் வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான். தங்களுடன் இருந்தபோது மோசேயின் ஆலோசனைகளுக்கு செவிகொடுக்க மனதில்லாதிருந்த அநேகர், அவனுடைய அடக்க இடத்தை அறிந்திருந்தால் அவனுடைய மரித்த சரீரத்தை விக்கிரகமாக்கியிருக்கும் ஆபத்தில் இருந்திருப்பார்கள். இந்தக் காரணத்திற்காக அது மனிதனிடமிருந்து மறைக்கப்பட்டது. ஆனால் தேவதூதர்கள் அவருடைய உண்மையான ஊழியக் காரனின் சரீரத்தை அடக்கம் செய்து தனிமையான அந்தக் கல்லறையை காவல் காத்தனர்.PPTam 616.1

    அவன் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால், கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப் போல், ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்.PPTam 616.2

    காதேசில் கன்மலையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்ததில் தேவனுக்கு மகிமையைத் தர மறுத்திருந்த அந்த ஒரு பாவத்தினால் மோசேயினுடைய வாழ்க்கை கொடுக்கப்படாது இருந்திருக்கு மானால், அவன் வாக்குத்தத்த தேசத்திற்குள் நுழைந்திருந்து மரணத்தைக் காணாமல் மறுரூபமாகியிருந்திருப்பான். ஆனாலும் அவன் அதிக காலம் கல்லறையில் இருக்கக்கூடாது. தூங்கிக் கொண்டிருந்த தம்முடைய பரிசுத்தவானை எழுப்பும் படியாக கிறிஸ்து தாமும் மோசேயை அடக்கம் செய்த தூதர்களோடு பரலோகத்திலிருந்து இறங்கி வந்தார். தேவனுக்கு விரோதமாக பாவம் செய்து, மரணத்தின் அதிகாரத்தின் கீழ் வருவதற்கு மோசே யை நடத்தினால் தன்னுடைய வெற்றியைக் குறித்து சாத்தான் பேருவகையடைந்தான். நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்ற தெய்வீக தீர்ப்பு மரித்தவர்களை அவனுடைய உடமையாக்கிற்று என்று மாபெரும் சத்துரு அறிவித்தான். கல்லறையின் வல்லமை ஒருபோதும் உடைக்கப்படவில்லை எனவும் கல்லறைக்குள் இருக்கிற அனைவரும் இருண்ட சிறை வீட்டிலிருந்து ஒருபோதும் விடுவிக்கக்கூடாதபடி தன்னுடைய அடிமைகள் எனவும் உரிமை பாராட்டினான், முதல் முறையாக மரித்தவனுக்கு கிறிஸ்து உயிர் கொடுக்கவிருந்தார். ஜீவனின் அதிபதியும் பிரகாசமானவர்களும் கல்லறையை நெருங்கின் போது, சாத்தான் தன் மேலாதிக்கத்தைக் குறித்து எச்சரிக்கை அடைந்தான். தனக்கு சொந்தமானது என்று உரிமை பாராட்டியிருந்த எல்லைக்குள் அத்துமீறி நுழைவதைக் குறித்து தன்னுடைய தீய தூதர்களோடு வாக்குவாதம் செய்ய அவன் நின்றிருந்தான். தேவனுடைய ஊழியக்காரன் தன்னுடைய சிறைக்கைதியானான் என்று பெருமை பாராட்டினான். மோசேயால் கூட தேவனுடைய பிரமாணத்தைக் கடைபிடிக்க முடியவில்லை என்றும், பரலோகத்திலிருந்து சாத்தானை வெளியேற்றின் அதே பாவத்தை அவன் செய்ததாகவும் யெகோவாவிற்குத் தரவேண்டிய மகிமையை அவன் எடுத்துக்கொண்டதாகவும் மீறுதலினால் சாத்தானின் ஆட்சியின் கீழ் அவன் வந்ததாகவும் அறிவித்தான். தெய்வீக அரசாங்கத்திற்கு எதிராக அவன் செய்த அதே குற்றச்சாட்டுகளை இந்தப் பிரதான துரோகி மீண்டும் கூறி, தனக்கு இழைக்கப்பட்ட தேவனுடைய அநீ தியைக்குறித்து மீண்டும் குற்றப்படுத்தினான்.PPTam 616.3

    சாத்தானோடு போராட்டத்திற்குள் நுழைய கிறிஸ்து இறங்கவில்லை. அதிக எண்ணிக்கையிலான பரலோகவாசிகளை அழிவிற்கு நடத்தின் - பரலோகத்தில் அவனுடைய வஞ்சனைகள் நடப்பித்த கொடுமையான வேலையை அவர் அவனுக்கு எதிராக கொண்டுவந்திருக்கலாம். ஆதாமை பாவத்திற்கு நடத்தி, மனித இனத்தின் மேல் மரணத்தைக் கொண்டு வந்த ஏதேனில் சொல்லப்பட்ட பொய்யை அவர் சுட்டிக்காட்டியிருந்திருக்கலாம். இஸ்ரவேலை முறுமுறுக்கவும் கலகம் பண்ணவும் நடத்தினது அவனுடைய சொந்த வேலை என்றும், அதுவே அவர்களுடைய தலைவனின் நீடிய பொறுமையை தோல்வியடையச் செய்தது என்றும், மரணத்தின் வல்லமைக்குள் விழுந்த பாவத்தில் கவனமல்லாத ஒரு நொடி அவனை நடத்தியது என்றும் சாத்தானுக்கு நினைவுபடுத்தியிருக்கலாம். ஆனால் கிறிஸ்து தமது பிதாவைக் குறிப்பிட்டு கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று கூறினார். தம்முடைய சத்துருவிடம் இரட்சகர் எந்த வாக்குவாதத்திற்குள்ளும் நுழையவில்லை. மாறாக, விழுந்து போன சத்துருவின் வல்லமையை உடைத்து, மரித்தவர்களை உயிரடையச்செய்யும் தம்முடைய வேலையை அவர் துவக்கினார். தேவகுமாரனுடைய மேலாதிக்கம் குறித்த சாத்தான் மறுக்கக்கூடாத சான்று இங்கே இருக்கிறது. உயிர்த்தெழுதல் என்றைக்குமாக நிச்சயப்படுத்தப்பட்டது. சாத்தானுடைய இரை கொள்ளை யாடப்பட்டது. மரித்த நீதிமான்கள் மீண்டும் பிழைப்பார்கள்.PPTam 617.1

    பாவத்தின் விளைவாக மோசே சாத்தானின் வல்லமையின்கீழ் வந்தான். அவனுடைய சொந்த நன்மைகளின் படி மரணத்திற்கு அவன் சட்டப்பூர்வமான கைதியாக இருந்தான். ஆனாலும் மீட்பரின் நாமத்தில் தன்னுடைய பதவியை பெற்றவனாக, நித்திய ஜீவனுக்கென்று எழுப்பப்பட்டான். மோசே கல்லறையிலிருந்து மகிமையடைந்தவனாக வெளியே வந்து, தன்னை விடுவித்தவரோடு தேவனுடைய நகரத்திற்கு ஏறிப்போனான்.PPTam 618.1

    கிறிஸ்துவின் தியாக வாழ்க்கையில் வாழ்ந்து காட்டப்பட்டது வரையிலும் மோசேயோடு அவர் நடந்திருந்ததைத்தவிர வேறு எங்குமே தேவனுடைய நீதியும் அன்பும் மிகவும் குறிப்பாகக் காட்டப்படவில்லை . மிகச் சரியான கீழ்ப்படிதலையே அவர் கோருகிறார் என்பதையும், தன்னை உண்டாக்கினவருக்குத் தரவேண்டிய மகிமையை தங்களுக்கு எடுத்துக்கொள்ளுவதில் மனிதர்கள் கவனமாயிருக்கவேண்டும் என்பதையும் குறித்த ஒரு போதும் மறக்கக்கூடாத ஒரு பாடத்தைக் கற்பிக்கவே தேவன் மோசேயைக் கானானிலிருந்து வெளியே அடைத்தார். இஸ்ர வேலின் சுதந்தரத்தில் பங்கடையும் படியாக மோசே ஜெபித்த ஜெபத்திற்கு அவரால் பதிலளிக்க கூடாதிருந்தது. எனினும் தமது ஊழியக்காரனை அவர் மறந்து போகவோ அல்லது கைவிடவோ இல்லை . மோசே தாங்கியிருந்த துன்பத்தை பரலோக தேவன் புரிந்திருந்தார். போராட்டமும் சோதனையுமான நீண்ட வரு டங்களாக மெய்யான சேவையின் ஒவ்வொரு செயலையும் அவர் குறித்திருந்தார். பிஸ்காவின் கொடுமுடியில் பூமிக்குரிய கானானைவிடவும் நித்தியமான மகிமையைக் கொண்ட ஒரு சுதந்தரத்திற்கு தேவன் மோசேயை அழைத்தார்.PPTam 618.2

    மறுரூப் மலையில் மறுரூபமடைந்திருந்த எலியாவோடு மோசே வந்திருந்தான். பிதாவிடமிருந்து அவருடைய குமாரனுக்கு வெளிச்சத்தையும் மகிமையையும் கொண்டுவருகிறவர்களாக அவர்கள் அனுப்பப்பட்டிருந்தனர். இப்படியாக அநேக நூற்றாண்டுகளுக்கு முன் மோசேயினால் ஏறெடுக்கப்பட்ட ஜெபம் நிறைவேறியது. அவன் நல்ல மலையின் மேல் தன்னுடைய ஜனத்தின் சுதந்தரத்திற்குள்ளாக நின்று இஸ்ரவேலின் வாக்குத்தத் தங்களெல்லாம் மையங்கொண்டிருந்த அவருக்கு சாட்சி பகர்ந்தான். பரலோகத்தால் உன்னதமாக கனம் பண்ணப்பட்டிருந்த ஒரு மனிதனின் சரித்திரத்தைக் குறித்து அழிந்து போகிறவனுக்குக் கொடுக்கப்பட்ட தரிசனத்தில் வெளிப்படுத்தப்பட்ட கடைசிக் காட்சி இப்படிப்பட்டதாக இருந்தது.PPTam 618.3

    மோசே கிறிஸ்துவுக்கு அடையாளமாக இருந்தான். அவன் தானும் இஸ்ரவேலுக்கு உன் தேவனாகியகர்த்தர் என்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்துPPTam 619.1

    எழும்பப்பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக (உபா. 18:15) என்று அறிவித்தான். இஸ்ரவேலின் சேனையை பூமிக்குரிய கானானிற்குள் நடத்த ஆயத்தப்படும் முன்பாக, துன்பம் மற்றும் வறுமையின் பள்ளியில் மோசேயை ஒழுங்கு படுத்துவதை தகுதியானதாக தேவன் கண்டார். பரலோகக் கானானுக்குப் பிரயாணம் பண்ணுகிற தேவனுடைய இஸ்ரவேல், தன்னுடைய ஊழியத்தைச் செய்ய தெய்வீகத் தலைவனாக ஆயத்தப்பட எந்த மனிதப் போதனையும் அவசியப்படாத ஒரு தலைவனைக் கொண்டிருக்கிறது. எனினும் உபத்திரவங்களின் வழியாக அவர் பூரணப்பட்டார். அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார் - எபி. 210, 12 நம்முடைய மீட்பர் எந்த மனித பலவீனத்தையும் குறையையும் வெளிக்காட்டவில்லை. எனினும் நமக்கு வாக்குத்தத்த தேசத்திற்குள் ஒரு நுழைவை பெற்றுத்தருவதற்க்காக அவர் மரித்தார்.PPTam 619.2

    சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணி விடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான். கிறிஸ்துவோ அவருடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மை பாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருப்போமாகில், நாமே அவருடைய வீடாயிருப்போம். எபி. 3:5,6PPTam 619.3