Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    45 - எரிகோ விழுந்தது

    எபிரெயர்கள் கானானிற்குள் நுழைந்திருந்தனர்; ஆனால் அதை இன்னும் கீழ்ப்படுத்தியிருக்கவில்லை. மனித பார்வையில் தேசத்தை சுதந்தரிக்கிற போராட்டம் மிக நீண்டதும் கடினமானது மாகவே இருக்க வேண்டும். தங்களுடைய எல்லைக்குள் அத்துமீறி நுழைபவர்களை எதிர்க்க ஆயத்தமாக நின்றிருந்த வல்லமையான இனத்தினால் அது ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. பொதுவான பயத்தினால் வெவ்வேறு கோத்திரங்கள் ஒன்றாகக் கட்டப்பட்டிருந்தன. அவர்களுடைய குதிரைகளும் இரும்பாலான யுத்த இரதங்களும் அந்த தேசத்தைக் குறித்த அவர்களுடைய அறிவும் அவர்களுடைய யுத்தப் பயிற்சியும் மிகப் பெரிய அனுகூலத்தை அவர்களுக்குக் கொடுக்கும். மேலும் அத்தேசம் வானத்தையளா விய மதில் சூழ்ந்த பெரிய பட்டணங்களாக (உபா. 9:1) கோட்டை களால் காவல் பண்ணப்பட்டிருந்தது. தங்கள் முன் இருந்த போராட்டத்தில் வெற்றிபெற தங்களுக்கு சொந்தமல்லாத ஒரு பலத்தின் நிச்சயத்திலேயே இஸ்ரவேலர்கள் நம்பிக்கையோடு இருக்கக்கூடும்.PPTam 628.1

    தேசத்திலிருந்த பலமான கோட்டைகளில் ஒன்றாக பெரியதும் ஐசுவரியமானதுமான எரிகோ பட்டணம் கில்காலில் அவர்களுடைய பாளயத்திலிருந்து சற்று தொலைவில் அவர்கள் முன் இருந்தது. செழிப்பான சம்பூமியின் எல்லைகளில், வெப்பமண்டல பகுதியின் ஐசுவரியமான பல்வேறு விளைவுகளின் பலனால் நிறைந்து, ஆடம்பரமும் தீமையும் தங்கியிருந்த அரண்மனைகள் கோவில்களோடு, பிரம்மாண்டமான கொத்தளங்களுக்குப் பின்னாலிருந்த இந்த பெருமையான பட்டணம் இஸ்ரவேலின் தேவனுக்கு எதிர்ப்பைக் காண்பித்தது. விக்கிரகாராதனையின் மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக எரிகோ இருந்து, நிலவு தேவதையான அஸ்தரோத்திற்கு விசேஷமாக அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. கானானியர்களின் மதத்திலிருந்த தீங்கும் மிகக் கீழ்த்தரமுமான அனைத்தும் இங்கே மையங்கொண்டிருந்தன. பெத்பேயோரில் அவர்களுடைய பாவத்தினிமித்தம் வந்த பயங்கரமான விளைவுகளைக்குறித்த நினைவுகளோடு இருந்த இஸ்ரவேல் மக்கள் இந்த புறஜாதிப்பட்டணத்தை பயத்தோடும் வெறுப்போடுமே பார்க்கக்கூடும்.PPTam 628.2

    கானானை வெற்றி கொள்ளுவதில் எரிகோவை தகர்ப்பதுவே முதல் படியாக யோசுவாவிற்குக் காணப்பட்டது. ஆனாலும் முதலாவது தெய்வீக நடத்துதலின் நிச்சயத்தை அவன் தேடினான். அது அவனுக்குக் கொடுக்கப்பட்டது. இஸ்ரவேலின் தேவன் தமது ஜனங்களின் முன் போக வேண்டும் என்று ஜெபிக்கவும் தியானிக்கவும் பாளயத்திலிருந்து வெளியேறினபோது, மிக உயரமான, கட்டளையும் தோரணையுங் கொண்ட யுத்த ஆயுதமணிந்த ஒருவரை அவன் கண்டான். உருவின் பட்டயம் அவர் கையில் இருந்தது. நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்ற யோசுவாவின் சவாலுக்கு நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்ற பதில் கொடுக்கப்பட்டது. உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது. என்று ஓரேபில் மோசேக்குக் கொடுக்கப்பட்டிருந்த இதே கட்டளை இரகசியமான அந்நியரின் மெய்யான குணத்தை வெளிக்காட்டியது. இஸ்ரவேலின் தலைவன் முன் நின்றிருந்த அவர் உயர்த்தப்பட்டிருந்த ஒருவராகிய கிறிஸ்து தாமே . பயத்தில் பீடிக்கப்பட்டவனாக யோசுவா முகங்குப்புற விழுந்து வணங்கினான். எரிகோவையும் அதின் ராஜாவையும் யுத்த வீரரையும் உன் கையில் ஒப்புக் கொடுத்தேன் என்ற உறுதிமொழியை அவன் கேட்டான். பட்டணத்தைப் பிடிப்பதற்கான போதனைகளையும் பெற்றான்.PPTam 629.1

    தெய்வீகக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து யோசுவா இஸ்ர வேலின் படைகளைத் திரட்டினான். எந்த தாக்குதலும் நடத்தப்படக்கூடாது. தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை சுமந்து எக்காளம் ஊதினவர்களாக அவர்கள் வெறுமனே பட்டணத்தைச் சுற்றிவர வேண்டும். தங்களுடைய சொந்தத் திறமையினாலும் வீரத்தினாலுமல்ல, தேவனிடமிருந்து தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த நடத்துதல்களுக்குக் கீழ்ப்படிவதினால் வெற்றிகொள்ளும்படியாக, முதலாவது தெரிந்துகொள்ளப்பட்ட மனிதர்களான யுத்த வீரர்கள் வந்தனர். பின்னர் தெய்வீக மகிமையின் ஒளியினால் சூழப்பட்டிருந்த தேவனுடைய உடன்படிக்கைப்பெட்டி பரிசுத்த தொழிலை குறிப்பிட்ட ஆடைகளை அணிந்திருந்த ஆசாரியர்களால் சுமக்கப்பட்டு வந்தது. இஸ்ரவேலின் சேனையின் ஒவ்வொரு கோத்திரமும் அதனதன் இடத்திலிருந்து பின் சென்றது. இப்படிப்பட்ட ஊர்வலமே அழிவிற்கு நியமிக்கப்பட்டிருந்த அந்தப்பட்டணத்தைச் சுற்றி வந்தது. வல்லமையான அந்த சேனையின் நடக்கும் ஒலியும், குன்றுகளில் எதிரொலித்து எரிகோவின் வீதிகளில் மீண்டும் தொனித்த பவித்திரமான சத்தத்தையுந்தவிர வேறு, எந்த சத்தமும் கேட்கப்படவில்லை. சுற்றி வந்தது முழுமையடைய, படை மௌனமாக தங்கள் கூடாரங்களுக்குத் திரும்பியது; உடன்படிக் கைப் பெட்டி ஆசரிப்புக் கூடாரத்தில் அதனுடைய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.PPTam 629.2

    ஆச்சரியத்தோடும் எச்சரிக்கையோடும் பட்டணத்தின் காவலாளர்கள் அதன் ஒவ்வொரு அசைவையும் குறித்திருந்து அதிகாரத்திலிருந்தவர் களுக்கு அறிவித்தனர். இந்த வெளிக்காட்டலின் பொருளை அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் வல்லமையான அந்த சேனை ஒவ்வாரு நாளும் பரிசுத்தமான உடன்படிக்கைப் பெட்டியோடும் அதன் ஆசாரியர் களோடும் ஒருமுறை பட்டணத்தைச் சுற்றி வந்ததை அவர்கள் கண்டபோது, அந்த சம்பவம் ஆசாரியர்கள் மற்றும் மக்களின் மனங்களில் திகிலை அனுப்பியது. மீண்டும் அவர்களுடைய மிகவும் வல்லமையான தாக்குதலை வெற்றிகரமாக தடுக்க முடியும் என்ற நிச்சயமான உணர்வில், தங்களுடைய வல்லமையான பாதுகாப்புகளை அவர்கள் சோதித்தனர். இந்த ஒரேவிதமான காட்சிகளினால் தங்களுக்கு ஏதாவது பாதிப்பு வரும் என்கிற நினைவை அநேகர் பரிகசித்தனர். மற்றவர்கள் ஊர்வலம் ஒவ்வாரு நாளும் பட்டணத்தைச் சுற்றி வந்ததைக் கண்டபோது பயமடைந்தனர். ஒரு முறை சிவந்த சமுத்திரம் இந்த ஜனங்கள் முன்பாக பிளந்தது என்பதையும், யோர்தானின் வழியாக ஒரு பாதை அவர்கள் முன் சற்று முன்பு திறக்கப்பட்டது என்பதையும் அவர்கள் நினைவுகூர்ந்தனர். அவர்களுக்காக தேவன் மேலும் என்ன அதிசயங்களைச் செய்வார் என்பதை அவர்கள் அறியா திருந்தனர்.PPTam 630.1

    ஆறு நாட்களுக்கு இஸ்ரவேலின் சேனைபட்டணத்தைச் சுற்றி வந்தது. ஏழாம் நாள் வந்தபோது காலை விடிந்ததும் யோசுவா ஆண்டவருடைய சேனைகளை திரட்டினான். இப்போது எரிகோவை ஏழு முறை சுற்றி வரும்படியும் தேவன் அவர்களுக்குப் பட்டணத்தைக் கொடுத்திருந்ததால் எக்காளங்களால் மிக உயர்ந்த சத்தம் எழுப்பப்படும் போது சத்தமாக கெம்பீரிக்கும்படி அவர்கள் கட்டளையிடப்பட்டிருந்தனர்.PPTam 631.1

    அர்ப்பணிக்கப்பட்டிருந்த சுவரைச் சுற்றிலும் பரந்த சேனை பவித்திரமாக அணிவகுத்தது. அநேகரின் காலடி ஓசையையும், அதிகாலையின் மௌனத்தைக் கலைத்து அவ்வப்போது முழங்கின் எக்காளங்களின் முழக்கத்தையுந்தவிர மற்ற அனைத்தும் மௌனமாயிருந்தன. மாபெரும் கற்களால் எழுப்பப்பட்டிருந்த மகா பெரிய சுவர்கள் முற்றிக்கையிட்டிருந்த மனிதர்களை எதிர்ப்பதாக இருந்தது. முதலாவது சுற்று முடிந்ததும் இரண்டாவது தொடர்ந்ததையும், பின்னர் மூன்றாவதும் நான்காவதும்PPTam 631.2

    ஐந்தாவதும் ஆறாவதும் தொடர்ந்ததையும், சுவர்களின் மேலிருந்த காவலாளர்கள் அதிகரிக்கும் பயத்தோடு கண்டனர். இந்த மர்மமான அசைவின் நோக்கம் என்னவாயிருக்கக்கூடும்? என்ன வல்லமையான சம்பவம் காத்திருக்கிறது? அதிக காலம் அவர்கள் காத்திருக்கவேண்டியதில்லை. ஏழாவது சுற்று முடிந்தபோது அந்த நீண்ட ஊர்வலம் நின்றது. கொஞ்சநேரம் அமைதலாயிருந்த எக்காளங்கள் பூமியைத்தானும் அசைக்கும்படியாக முழங்கின. மாபெரும் கற்களால் கட்டப்பட்டிருந்த சுவர்கள் அவைகளுடைய பிரம்மாண்டமான கோபுரங்கள் கொத்தளங்களோடு கூட தள்ளாடி அஸ்திபாரங்களிலிருந்து இடம்பெயர்ந்து, ஒரு பலத்த ஓசையோடு பூமியில் விழுந்து அழிந்தது . எரிகோவின் குடிகள் திகிலினால் செயலிழந்தனர். இஸ்ரவேலின் சேனைகள் உள்ளே நுழைந்து பட்டணத்தைச் சுதந்தரித்தது .PPTam 631.3

    இஸ்ரவேலர்கள் தங்களுடைய சொந்த வல்லமையினால் இந்த வெற்றியை அடைய வில்லை. வெற்றி முழுமையும் ஆண்டவருடையதாயிருந்தது, தேசத்தின் முதல் கனிகளாக, பட்டணம் அதிலிருந்த அனைத்தோடுங்கூட தேவனுக்கு பலியாக அர்ப்பணிக்கப்பட வேண்டும். கானானை வெற்றிகொள்ளுவதில் தங்களுக்காக அவர்கள் யுத்தம் செய்யக்கூடாது. மாறாக, தேவனுடைய சித்தத்தை நடப்பிக்கும் அவருடைய கருவிகளாகவே செயல்பட வேண்டும் என்பது இஸ்ரவேலின் மனங்களில் பதிக்கப்பட வேண்டும். செல்வங்களையோ அல்லது சுயத்தை உயர்த்துவதையோ தேடாது, தங்கள் இராஜாவான யெகோவாவின் மகிமையைத் தேட வேண்டும். அதைப் பிடிப்பதற்கு முன்பாக இந்தப் பட்டணமும் இதிலுள்ள யாவும் கர்த்தருக்குச் சாபத் திடாயிருக்கும் சாபத்திடானதில் ஏதாகிலும் எடுத்துக்கொள்ளு கிறதினாலே, நீங்கள் சாபத்திடாகாதபடிக்கும், இஸ்ரவேல் பாளயத்தைச் சாபத்திடாக்கி அதைக் கலங்கப்பண்ணாதபடிக்கும், நீங்கள் சாபத்திடானதற்கு மாத்திரம் எச்சரிக்கையாயிருங்கள் என்ற கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது.PPTam 631.4

    பட்டணத்தின் அனைத்துக் குடிகளையும் அதிலிருந்த ஒவ்வொருஜீவனையும் புருஷரையும் ஸ்திரீகளையும் வாலிபரையும் கிழவரையும் ஆடுமாடுகளையும் கழுதைகளையும் பட்டயத்தால் கொல்ல வேண்டும். விசுவாசமாயிருந்த இராகாப் மாத்திரமே வேவுகாரர்களின் வாக்குத்தத்தத்தை காப்பாற்றும்படி அவளுடைய வீட்டாரோடு விட்டுவைக்கப்பட்டாள். பட்டணம் முழுவதும் எரிக்கப்பட்டது. அதன் அரண்மனைகளோடும் கோவில்களோடும் சிறப்பான கூடாரங்களோடும் ஆடம்பரமான இடங்களோடு கூடிய அனைத்து குடியிருப்புகளோடும் ஐசுவரியமான திரைகளோடும் விலையுயர்ந்த ஆடைகளோடும் அனைத்தும் அக்கினிக்குக் கொடுக்கப்பட்டது. அக்கினியால் அழிக்கப்படக்கூடாதவைகள் ஆசரிப்புக் கூடாரத்தின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டன. பட்டணத்தின் தோற்றம் தானும் சபிக்கப்பட்டதாக இருந்தது. எரிகோ ஒருபோதும் அரணான பட்டணமாக கட்டப்படக்கூடாது. தெய்வீகவல்லமை கவிழ்த்திருந்த அதன் சுவர்களை எடுப்பிக்கத் துணியும் எவன்மேலும் பயங்கரமான நியாயத்தீர்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தது. அனைத்து இஸ்ரவேலர் முன்பும் . இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும் படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன், அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிற போது தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்ற பவித்திரமான அறிவிப்பு செய்யப்பட்டது.PPTam 632.1

    கானானின் குடிகளைக் குறித்து மோசேயின் வழியாக முன்னதாகவே கொடுக்கப்பட்டிருந்த கட்டளையின் நிறை வேறுதலே எரிகோவின் மக்களை முழுமையாக அழித்திருந்தது. அவர்களை முறிய அடித்து, அவர்களைச் சங்காரம் பண்ணக்கடவாய். உபா. 7:2, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற .... பட்டணங்களிலே சுவாச முள்ள தொன்றையும் உயிரோடே வைக்காமல், உபா. 20:16. இந்தக் கட்டளைகள் வேதாகமத்தின் மற்ற இடங்களில் கொடுக்கப்பட்டிருக் கிற அவருடைய அன்பு மற்றும் இரக்கத்தின் ஆவிக்கு முரணாக அநேகருக்குத் தோன்றுகிறது. ஆனால் இவைகள் மெய்யாகவே நித்திய ஞானமுள்ளவரும் நல்லவரும் அறிவித்தவைகள். தேவன் கானானில் இஸ்ரவேலை ஸ்தாபித்து, இந்த பூமியின் மேல் தம்முடைய இராஜ்யத்தை வெளிக்காட்டுகிற ஒரு ஜாதியையும் அரசாங்கத்தையும் அவர்கள் நடுவே விருத்தி செய்ய எண்ணியிருந்தார். மெய்யான மார்க்கத்தை சுதந்தரித்தவர்களாக மாத்திரமல்ல, அதன் கொள்கைகளை உலக முழுவதிலும் பரப்புகிறவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும். கானானியர்கள் மிக அசுத்தமான மிகக் கீழ்த்தரமான புறஜாதி பழக்கங்களுக்கு தங்களைக் கொடுத்திருந்தனர். தேவனுடைய கிருபையுள்ள நோக்கங்கள் நிறைவேறாதபடி நிச்சயமாக தடுக்கக்கூடியவைகளிலிருந்து அந்த தேசம் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.PPTam 632.2

    கானானின் குடிகளுக்கு மனந்திரும்பும்படி போதுமான சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்டிருந்து, நாற்பது வருடங்களுக்கு முன்னர் திறந்த சிவந்த சமுத்திரமும் எகிப்தின் மேல் அனுப்பப்பட்டிருந்த நியாயத்தீர்ப்புகளும் இஸ்ரவேலின் தேவனுடைய மிக உயர்ந்த வல்லமைக்கு சான்று பகர்ந்திருந்தன. இப்போது மீதியானின் இராஜாக்களையும் கிலேயாத் மற்றும் பாசான் தேசத்தின் இராஜாக்களையும் கவிழ்த்ததில் யெகோவா தேவனே மற்ற அனைத்து தேவர்களுக்கும் மேலானவர் என்றும் காட்டப்பட்டிருந்தது. அவருடைய குணத்தின் பரிசுத்தமும், அசுத்தத்தின் மேல் அவருக்கு இருக்கும் அருவருப்பும், பாகால் பேயோரில் அருவருக்கக்கூடிய சடங்குகளால் இஸ்ரவேலின் மேல் அனுப்பப்பட்ட நியாயத்தீர்ப்புகளினால் புலப்படுத்தப்பட்டிருந்தது. இந்தச் சம்பவங்கள் அனைத்தும் எஎரிகோவின் குடிகளுக்குத் தெரிந்திருந்தது. இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே உயர வானத்திலும் தாழ பூமியிலும் தேவன் என்கிற இராகாபினுடைய மன உணர்த்துதலுக்குக் கீழ்ப்படிவதை மறுத்திருந்தபோதும் அதைப் பகிர்ந்து கொண்ட அநேகர் அங்கே இருந்தனர். ஜலப்பிரளயத்திற்கு முன்னான மக்களைப்போலவே பரலோகத்தை தூஷிக்கவும் பூமியை தீட்டுப்படுத்தவுமே கானானியர்கள் வாழ்ந்திருந்தனர். தேவனுக்கு எதிராக கலகம் செய்து மனிதர்களுக்கு சத்துருக்களாயிருந்த இவர்கள் மேல் சரியான தண்டனை தரப்பட வேண்டும் என்று அன்பும் நீதியும் கோரியது.PPTam 633.1

    நாற்பது வருடங்களுக்கு முன்பு அவிசுவாசமாயிருந்த வேவுகாரர் களுக்கு திகிலை உண்டாக்கின் அரண்கள் கொண்ட பெருமையான பட்டணத்தின் மதில்களை எவ்வளவு எளிதாக பரலோகத்தின் சேனைகள் கீழே தள்ளின! இஸ்ரவேலின் மிக வல்லமையானவர்: எரிகோவை .. உன்கையில் ஒப்புக்கொடுத்தேன் என்று சொல்லியிருந்தார். அந்த வார்த்தைக்கு எதிராக மனித பெலம் வல்லமையற்றதாயிருந்தது.PPTam 634.1

    விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள்.... விழுந்தது - எபி. 11:30. ஆண்டவருடைய சேனையின் அதிபதி யோசுவாவிடம் மாத்திரமே பேசியிருந்தார். சபையார் அனைவருக்கும் அவர் தம்மை வெளிப்படுத்தவில்லை. ஆண்ட வருடைய நாமத்தினாலே கொடுக்கப்பட்ட கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதா அல்லது அவைகளை மறுப்பதா? யோசுவாவின் வார்த்தைகளை நம்புவதா அல்லது சந்தேகிப்பதா? அது அவர்கள் கையிலேயே இருந்தது. தேவகுமாரனுடைய தலைமையில் அவர்களுக்குப் பணிவிடை செய்த தூதர்களின் சேனையை அவர்கள் காணக்கூடாதிருந்தனர். என்ன அர்த்தமில்லாத நகர்வுகள் இவைகள் : கொம்பு எக்காளங்களை ஊதிக்கொண்டு தினமும் பட்டணத்தின் சுவர்களைச் சுற்றி வரும் அணிவகுப்பு எப்படி பரிகாசமானது; வானத்தையளாவிய அந்த கோட்டைகளின் மேல் இதற்கு எந்த பலனும் இருக்காது என்று அவர்கள் காரணப் படுத்தியிருக்கலாம். ஆனால் அந்த சுவரை முடிவாக கவிழ்ப்பதற்கு முன்பாக நீண்டகாலம் தொடரவேண்டியிருந்தது, இஸ்ரவேலின் விசுவாசத்தை விருத்தி செய்வதற்கு நல்ல சமயத்தைக் கொடுத்தது. அவர்களுடைய பலம் மனித ஞானத்திலல்ல, தேவனிடத்திலேயே இருக்கிறது என்பது அவர்கள் மனங்களில் பதிக்கப்பட வேண்டும். இவ்விதம் தெய்வீகதலையீட்டின் மேல் முழுமையாகச் சார்ந்திருக்க அவர்கள் நடத்தப்பட வேண்டும்.PPTam 634.2

    தம்மை நம்புகிறவர்களுக்கு தேவன் மாபெரும் காரியங்களைச் செய்வார். அவருடைய பிள்ளைகளென்று அழைத்துக்கொள்ளுகிற வர்கள் பெரிய பலம் இல்லாதிருப்பதற்குக் காரணம் அவர்கள் தங்களுடைய சொந்த ஞானத்தை மிகவும் நம்புகிறதேயாகும். அவர்கள் தங்களுடைய முழு நம்பிக்கையையும் அவர்மேல் வைத்து உண்மையாக அவருக்குக் கீழ்ப்படிவார்களானால் தம்முடைய அவிசுவாசமுள்ள பிள்ளைகளுக்கும் அவர் ஒவ் வொரு அவசரத்திலும் உதவி செய்வார்.PPTam 634.3

    எரிகோவின் விழுகைக்குப் பின்னர் யோர்தான் பள்ளத்தாக் கிற்கு மேற்கே ஒரு சிறிய பட்டணமான ஆயி பட்டணத்தைத் தாக்க யோசுவா தீர்மானித்திருந்தான். அதற்கு அனுப்பப்பட்ட உள வாளிகள் அப்பட்டணத்தின் குடிகள் கொஞ்சமானவர்கள் எனவும், அதைக் கவிழ்க்க கொஞ்ச பலமே போதும் எனவும் பதில் கொண்டுவந்தனர்.PPTam 635.1

    ஆண்டவர் கொடுத்திருந்த மாபெரும் வெற்றி இஸ்ரவேலர்களை சுயநம்பிக்கையுள்ளவர்களாக்கிற்று. கானான் தேசத்தை அவர்தங்களுக்கு வாக்குப்பண்ணியிருக்கிறபடியால் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்து தெய்வீக உதவி மாத்திரமே தங்களுக்கு வெற்றியைக் கொடுக்கக்கூடும் என்பதை உணரத் தவறினர். யோசுவாகூட ஆயியை வெற்றிகொள்ள தேவனுடைய ஆலோசனையைத் தேடாது தன்னுடைய திட்டங்களைப் போட்டான்.PPTam 635.2

    இஸ்ரவேலர்கள் தங்களுடைய சொந்த பலத்தை உயர்த்தவும் தங்கள் சத்துருக்களை இகழ்ச்சியோடு பார்க்கவும் துவங்கியிருந்தனர். மிக இலகுவான வெற்றி எதிர்பார்க்கப்பட்டு, மூவாயிரம் மனிதர்கள் அந்த இடத்தை பிடிக்கப் போதுமானவர்கள் என்று நினைக்கப்பட்டது. தேவன் தங்களோடு இருப்பார் என்கிற நிச்சய மில்லாது, தாக்கும் படியாக விரைந்தனர். மிகவும் தீர்மானமான எதிர்ப்பை எதிர்கொள்ளவே பட்டணத்தின் வாசலை ஏறக்குறைய நெருங்கியிருந்தார்கள். அவர்களுடைய சத்துருக்களின் எண்ணிக் கையினாலும் முழுமையான ஆயத்தத்தினாலும் திகிலடைந்து, குழப்பத்தோடு செங்குத்தான இறக்கத்தில் ஓடினார்கள். கானா னியர்கள் பின்தொடருவதில் தீவிரமாயிருந்தனர். பட்டணவாசலின் வெளி துவக்கி அவர்களைத் துரத்தி, மலையிறக்கத்திலே அவர்களை வெட்டினார்கள், முப்பத்து ஆறு மனிதர்களின் இழப்பு சிறிய இழப்பாக இருப்பினும் இந்த தோல்வி முழு சபையையும் மனமடி வாக்கியது. ஜனங்களின் இருதயம் கரைந்து தண்ணீராய்ப் போயிற்று. முதல் முறையாக இப்போதுதான் கானானியர்களை யுத்தத்தில் சந்திக்கிறார்கள். இந்தச் சிறிய பட்டணத்தை காத்த வர்களுக்கு எதிராக ஓடும்படி விடப்பட்டிருப்பார்களானால் அவர்கள் முன் இருக்கிற மாபெரும் யுத்தங்களின் விளைவு என்னவாக இருக்கும்? அவர்களுடைய தோல்வியை தேவனுடைய அதிருப்தியின் வெளிப்பாடாக யோசுவா கண்டு துயரத்திலும் பயத்திலும் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பரும் சாயங்காலமட்டும் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்கள் தலைகளின் மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள்.PPTam 635.3

    ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படிக்கு எமோரியர் கைகளில் ஒப்புக்கொடுப்பதற்காகவா தேவரீர் இந்த ஜனத்தை யோர்தானைக் கடக்கப்பண்ணினீர்? ..... ஆ, ஆண்டவரே, இஸ்ரவேலர் தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள். இப்பொழுது நான் என்ன சொல்லுவேன். கானானியரும் தேசத்துக் குடிகள் யாவரும் இதைக் கேட்டு, எங்களை வளைந்து கொண்டு, எங்கள் பேரைப் பூமியிலிராதபடிக்கு, வேரற்றுப்போகப்பண் ணுவார்களே; அப்பொழுது உமது மகத்தான நாமத்துக்கு என்ன செய்வீர் என்றான்.PPTam 636.1

    எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்து கிடக்கிறது என்ன? இஸ்ரவேலர் பாவஞ்செய்தார்கள், நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள் என்று யெகோவாவிடமிருந்து பதில் வந்தது.PPTam 636.2

    இது விரக்திக்கும் புலம்பலுக்குமான நேரம். பாளயத்திலே இரகசிய பாவம் இருந்தது. அது தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, ஆண்டவருடைய சமூகமும் ஆசீர்வாதமும் ஜனங்களோடு இருப்பதற்கு முன்பாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். நீங்கள் ச ராபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம்பண்ணாவிட்டால், இனி உங்களோடு இரேன் என்றார்.PPTam 636.3

    அவருடைய நியாயத்தீர்ப்புகளை செயல்படுத்த நியமிக்கப்பட்டிருந்த ஒருவனால் தேவனுடைய கட்டளைகள் கருத்தில் கொள்ளப்படவில்லை. அந்த மீறினவனின் குற்றத்திற்கு தேசம் முழுவதும் கணக்குக் கொடுக்க வேண்டியதாயிற்று. சாபத் தீடானதில் எடுத்துக்கொண்டதும், களவு செய்ததும், வஞ்சித்ததும், தங்கள் பண்டம்பாடிகளுக்குள்ளே வைத்ததும் உண்டே. குற்ற வாளியைக் கண்டுபிடித்து தண்டிக்க யோசுவாவிற்கு அறிவுரை கொடுக்கப்பட்டது. குற்றவாளியைத் துப்பறிய சீட்டு போடப்பட வேண்டும். ஜனங்கள் தங்கள் நடுவே இருந்த பாவத்திற்கான தங்களுடைய பொறுப்பை உணரும்படியும் தேவனுக்கு முன்பாக தங்கள் இருதயங்களை ஆராய்ந்து தாழ்மைப்படுத்தும்படியும் குற்றவாளி நேரடியாக குறித்துக் காட்டப்படாமல் சிலகாலம் சந்தேகத்தில் விடப்பட்டிருந்தது.PPTam 636.4

    அதிகாலையில் யோசுவா கோத்திரங்களாக ஜனங்களைக் கூட்டினான். பவித்திரமான, மனதில் பதியும் ஆராதனை துவங் கியது. படிப்படியாக துப்பறிவது தொடர்ந்தது. பயப்படக்கூடிய சோதனை இன்னும் நெருங்கி வந்துகொண்டிருந்தது. முதலில் கோத்திரம், அதன்பின்னர் குடும்பம், பின்னர் தனித்தனிக்குடும்பம் என்று கடைசியாக அந்த மனிதன் கண்டுபிடிக்கப்பட்டான். யூதா கோத்திரத்தைச் சேர்ந்த கர்மியின் குமாரனான ஆகான் இஸ்ர வேலைக் கலக்கினவனென்று தேவனுடைய விரலால் குறித்துக் காட்டப்பட்டான்.PPTam 637.1

    அவனுடைய குற்றத்தை எவ்விதக் கேள்வியும் இல்லாமல் நிலைநிறுத்துவதற்காக, அநீதியாக ஆக்கினைக்குட்படுத்தப்பட்டான் என்கிற குற்றச்சாட்டிற்கு எந்த சந்தர்ப்பத்தையும் கொடுக்காதிருக்க, உண்மையை ஒப்புக்கொள்ளும்படி யோசுவா ஆகானை பவித்திரமாக ஆணையிட்டான். அந்த பரிதபிக்கத்தக்க மனிதன் தன் குற்றத்தை முழு அறிக்கை செய்தான். மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன் ; ...... கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டு, அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன்; இதோ, அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்திருக்கிறது. வெள்ளி அதின் அடியிலிருக்கிறது என்றான். தூதுவர்கள் உடனடியாக கூடாரத்திற்கு அனுப்பப்பட்டனர். குறிக்கப்பட்ட இடத்தைத் தோண்ட, அவனுடைய கூடாரத்தில் அது புதைத்திருந்தது, வெள்ளியும் அதின்கீழ் இருந்தது . அவைகளைக் கூடாரத்தின் மத்தியிலிருந்து எடுத்து, யோசுவாவினிடத்திலும் ... கொண்டு வந்து, கர்த்தருடைய சமுகத்தில் வைத்தார்கள்.PPTam 637.2

    தீர்ப்பு அறிவிக்கப்பட்டு, உடனடியாக செயல்படுத்தப்பட்டது. நீ எங்களைக் கலங்கப்பண்ணினதென்ன ? இன்று கர்த்தர் உன்னைக் கலங்கப்பண்ணுவார் என்று யோசுவா கூறினான். ஆகானுடைய பாவத்திற்கு மக்கள் பொறுப்பாளிகளாக்கப்பட்டிருந்து, அதன் விளைவுகளில் துன்பப்பட்டிருந்தபடியால், தங்களுடைய பிரதிநிதிகள் வழியாக அதை தண்டிப்பதில் அவர்கள் பங்குகொள்ள வேண்டும். இஸ்ரவேலரெல்லாரும் அவன்மேல் கல்லெறிந்தார்கள்.PPTam 637.3

    பின்னர் பாவத்திற்கும் அதன் தண்டனைக்குமான சாட்சியாக அவன் மேல் மிகப்பெரிய கற்குவியல் ஒன்று எழுப்பப்பட்டது. ஆகையால் அவ்விடம் இந்நாள் வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு அதாவது கலக்கம் என்னப்பட்டது. நாளாகம் புத்தகத்தில் அவனைக் குறித்த நினைவு இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணின் ஆகார் (1 நாளா. 27) என்று எழுதப்பட்டிருக்கிறது.PPTam 637.4

    தேவனுடைய வல்லமையின் மாபெரும் வெளிக்காட்டுதல்களையும் பவித்திரமான எச்சரிப்புகளையும் மீறி, மிகவும் நேரடியாக ஆகானின் பாவம் செய்யப்பட்டிருந்தது. சாபத்தீடானதில் ஏதாகிலும் எடுத்துக்கொள்ளுகிறதினாலே, நீங்கள் சாபத் திடாகாதபடிக்கு என்று அனைத்து இஸ்ரவேலர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது . யோர்தானை அற்புதமாகக் கடந்தவுடனே இந்தக் கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது. பஸ்கா ஆசரிக்கப்பட்டு, உடன்படிக்கையின் தூதனான ஆண்டவருடைய சேனையின் அதிபதி தோன்றிய பிறகுஜனங்களை விருத்தசேதனம் செய்தபோது தேவனுடைய உடன்படிக்கை கொடுக்கப்பட்டது. தேவனுடைய பிரமாணத்தை மீறுகிற அனைவரையும் கவிழ்க்கப்போகிற அழிவைக் குறித்த சான்று கொடுத்த எரிகோவின் அழிவு அதைத் தொடர்ந்திருந்தது. தெய்வீகவல்லமை மாத்திரமே இஸ்ரவேலுக்கு வெற்றியைக் கொடுத்திருந்தது என்ற உண்மையும் அவர்களுடைய சொந்த பலத்தினால் அவர்கள் எரிகோவை சுதந்தரிக்கவில்லை என்ற உண்மையும் கொள்ளையில் பங்கெடுப்பதிலிருந்து அவர்களைத் தடுத்த கட்டளைக்கு பவித்திரமான கணத்தைக் கொடுத்திருந்தது. தேவன் தமது சொந்த வார்த்தையின் வல்லமையினால் இந்த அரணானபட்டணத்தைக்கவிழ்த்திருந்தார். வெற்றி அவருடையது; அவருக்கு மாத்திரமே அந்தப் பட்டணம் அதிலிருந்த அனைத்தோடுங்கூட அர்ப்பணிக்கப்பட வேண்டும். அந்த வெற்றி மற்றும் நியாயத்தீர்ப்பின் பவித்திரமான மணி நேரங்களில் தேவனுடைய கட்டளையை மீற ஆகான் துணிந்திருந்தான். சிநேயார் தேசத்தின் விலையுயர்ந்த அங்கியைப் பார்த்திருந்ததினால் ஆகானுடைய இச்சை தூண்டப்பட்டிருந்தது. மரணத்திற்கு நேராக முகமுகமாகக் கொண்டுவந்திருந்தபோதும் அவன் அதை நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வை என்று அழைத்தான். ஒரு பாவம் மற்றொன்றுக்கு நடத்த, ஆண்டவருடைய பொக்கிஷத்திற்கு அர்ப்பணிக்கப்படவேண்டிய வெள்ளியையும் பொன்னையும் எடுத்துக்கொண்டிருந்து கானான் தேசத்தின் முதல் கனிகளில் தேவனை கொள்ளையடித்தான். ஆகானுடைய அழிவிற்கு நடத்தின் மரணத்திற்கேதுவான பாவம் மிகப்பொதுவானதும் மிக இலகுவாகக் கருதப்படுவதுமான இச்சையில் இருந்தது. மற்ற குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப் படும் போது, பத்தாவது கற்பனையை மீறுவது எவ்வளவு அபூர்வமாக கண்டிக்கப்படுகிறது! இந்தப் பாவத்தின் ஏராளமும் அதன் பயங்கரமான விளைவுகளும் ஆகானின் சரித்திரத்திலிருந்து வரும் பாடங்களாக இருக்கின்றன.PPTam 638.1

    இச்சை படிப்படியாக விருத்தியாகும் ஒரு தீமை . அது அவனுள் ஒரு பழக்கமாகி, ஏறக்குறைய உடைக்கக்கூடாத சங்கிலி களால் கட்டப்படுமளவு பழக்கமாகும் வரை ஆகான் ஆதாயத்தின் பேராசையை நேசித்திருந்தான். இந்தத் தீமையை போற்றி வளர்க்கும்போது அது அழிவைக் கொண்டுவரும். பாவத்தினால் அவனுடைய அறிவு மரித்துப் போயிருக்க, சோதனை வந்தபோது எளிதான இரையானான்.PPTam 639.1

    எரிகோவில் கொள்ளையை எடுக்காமல் ஆகான் தடுக்கப் பட்டிருந்தது போல் நாமும் இச்சையில் திளைக்க நேரடியாக தடுக்கப்பட்டிருக்கிறோம். அதை விக்கிரகாராதனை என்று தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது. பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளின் போர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்பட வுங்கூடாது (மத். 6:24; லூக்கா 12:15; எபே 5:3) என்று நாம் எச்சரிக்கப்பட்டிருக்கிறோம். ஆகான், யூதாஸ், அனனியா சப்பீராள் இவர்களின் பயப்படத்தக்க அழிவு நம் முன் இருக்கிறது. இவையெல்லாவற்றிற்கும் பின்னாக மேலான நிலையை இச்சித்து, பரலோகத்தின் பிரகாசத்தையும் இன்பத்தையும் என்றென்றுமாக இழந்து போயிருந்த அதிகாலையின் மகனாகிய லூசிபரின் அழிவு நமக்கு இருக்கிறது. இந்த அனைத்து எச்சரிப்புகளும் இருந்தும் இச்சை ஏராளமாக இருக்கிறது.PPTam 639.2

    ஒவ்வொரு இடத்திலும் அதனுடைய அற்பத்தனமான பாதை காணப்படுகிறது. அது குடும்பங்களில் அதிருப்தியையும் கருத்து வேறுபாடுகளையும் உண்டாக்குகிறது. ஐசுவரியவான்களுக்கு எதிராக அது ஏழைகளில் பொறாமையையும் வெறுப்பையும் தூண்டுகிறது. ஏழைகளை நெருக்கி ஒடுக்க ஐசுவரியவான்களைத் தூண்டுகிறது. இந்தத் தீமை உலகத்தில் மாத்திரமல்ல சபையிலும் இருக்கிறது. சுயநலமும் பேராசையும் அளவை மிஞ்சுவதும் தேவனைதசமபாகத்திலும் காணிக்கைகளிலும் கொள்ளையிடுவதும் இங்கேதானே எவ்வளவு சாதாரணமாக இருக்கிறது. ஒழுங்கும் கிரமமுமான சபை உறுப்பினர்களுக்கு நடுவே ஐயோ அநேக ஆகான்கள் இருக்கிறார்கள். சட்டத்திற்கு விரோதமாக சம்பாதித்த வைகள் தேவன் சபித்த காரியங்கள் மறைத்துவைக்கப்பட்டிருக்க அநேக மனிதர்கள் சபைக்கு வந்து ஆண்டவருடைய பந்தியிலும் அமருகிறார்கள். நல்ல பாபிலோனிய அங்கிக்காக அநேகர் மனசாட்சியின் அங்கீகாரத்தையும் தங்கள் பரலோக நம்பிக்கையையும் தியாகஞ் செய்கிறார்கள். திரளானோர் வெள்ளிச் சேக்கல்களின் பைக்காக தங்கள் நேர்மையையும் உபயோகமாயிருக்கக்கூடியPPTam 639.3

    தங்களுடைய திறமைகளையும் பண்டமாற்று செய்கிறார்கள். துன்பப்படுகிற ஏழைகளின் கவலைகவனிக்கப்படாமற்போகிறது. சுவிசேஷஒளி அதன் பாதையில் தடுக்கப்படுகிறது. கிறிஸ்தவத்தை மறுதலிக்கக் கூடிய பழக்கங்கள் உலகத்தாரின் கேலியைத் தூண்டிவிடுகிறது. எனினும் இச்சையான கிறிஸ்தவர்கள் பொக்கி ஷத்தை சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். மல்.3:8.PPTam 640.1

    ஆகானின் பாவம் தேசமனைத்தின் மேலும் பேரழிவைக் கொண்டுவந்தது. ஒருவனுடைய பாவத்தினிமித்தம் அந்த மீறுதல் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்படும் வரையிலும் தேவனுடைய அதிருப்தி சபையின் மேல் தங்கியிருக்கும். வெளிப்படையாக எதிர்த்து நிற்கிறவர்கள் அவிசுவாசிகள் மற்றும் தூஷிக்கிறவர்களின் செல்வாக்கு அல்ல, கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொண்டு நிலையில்லாதிருப்பவனுடைய செல்வாக்கைக் குறித்தே சபை மிகவும் பயப்படவேண்டும். இஸ்ரவேலின் தேவனுடைய ஆசீர்வாதங்களை பின்னுக்கு வைத்து, அவருடைய ஜனத்தின் மேல் பலவீனத்தைக் கொண்டுவருகிறவர்கள் இவர்களே.PPTam 640.2

    சபை கஷ்டத்தில் இருக்கும் போது, ஒரு பயபக்தியின்மையும் ஆவிக்குரிய வீழ்ச்சியும் உண்டாகியிருக்கும் போது, தேவனுடைய சத்துருக்கள் வெற்றிகொள்ள சந்தர்ப்பம் கொடுக்கும் போது, தங்களுடைய மகிழ்ச்சியற்ற நிலையைக் குறித்து கைகளை மடித்துப் புலம்புவதற்கு பதிலாக பாளயத்தில் ஏதாகிலும் ஆகான் இருக்கிறானோ என்று அதன் உறுப்பினர்கள் விசாரணை செய்யவேண்டும். தேவனுடைய சமூகத்தை தடுத்திருக்கிற மறைவான பாவங்களை கண்டு பிடிக்க தாழ்மையோடு ஒவ்வொருவனும் இருதயத்தை ஆராய்ந்து தேடக்கடவன்.PPTam 640.3

    பாவ அறிக்கை தனக்கு நன்மை செய்யக்கூடாது போனபின்பு ஆகான் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். இஸ்ரவேலின் சேனைகள் ஆயியிலிருந்து தோற்கடிக்கப்பட்டு மனதுடைந்து பின்வாங்கியதை அவன் கண்டிருந்தான். எனினும் முன்வந்து தன் பாவத்தை அறிக்கை செய்யவில்லை. வார்த்தைகளால் சொல்லக்கூடாத துக்கத்தில் யோசுவாவும் இஸ்ரவேலின் மூப்பர்களும் தரையில் விழுந்திருந்ததை கண்டிருந்தான். அப்போது அறிக்கை செய்திருந்தானானால் உண்மையான மனவருத்தத்தைக் குறித்த சில சான்றுகளைக் கொடுத்திருப்பான். ஆனால் அப்போதும் அவன் மென்ளமாயிருந்தான். மாபெரும் குற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்ற அறிவிப்பையும், குற்றத்தின் குணம் குறிப்பாக அறிவிக்கப் பட்டிருந்ததையும் கேட்டிருந்தான். ஆனால் அவன் உதடுகள் முத்திரையிடப்பட்டிருந்தன. அதன்பின் பவித்திரமான விசாரணை வந்தது. அவனுடைய கோத்திரம் குறிக்கப்பட்டு, பின்னர் அவனுடைய வம்சம் குறிக்கப்பட்டு, பின்னர் வீட்டார் குறிக்கப்பட்டபோது அவனுடைய ஆத்துமா எவ்வாறு பயத்தினால் சிலிர்த்திருக்கும். அப்போதுங் கூட தேவனுடைய விரல் அவன் மேல் வைக்கப்பட்டவரையிலும் அறிக்கை செய்யவில்லை. தன்னுடைய பாவம் இனி மறைக்கப்படக்கூடாது என்று வந்தபோது அவன் உண்மையை ஒப்புக்கொண்டான். பல வேளைகளில் எவ்வாறு அதேபோன்ற அறிக்கைகள் செய்யப்படுகின்றன! நிரூபிக்கப்பட்ட பின்னர் உண்மையை ஒப்புக்கொள்ளுவதற்கும், நமக்கும் தேவனுக்கும் மாத்திரமே அறியப்பட்டிருக்கும் போது பாவத்தை அறிக்கை செய்வதற்குமிடையே எவ்வளவு பெரிய வித்தியாசம் இருக்கிறது! தன்னுடைய பாவத்தை அறிக்கையிடுவதினால் குற்றத்தின் விளைவுகளைத் தடுக்கலாம் என்று அவன் நம்பியிரா திருந்தால், அறிக்கை செய்திருக்கமாட்டான். அவனுடைய அறிக்கை அவனுடைய தண்டனை நீதியானதே என்று காண்பிக்க மாத்திரமே செய்தது. பாவத்திற்கான உண்மையான மனந் திரும்புதலோ, ஒரு நொறுங்குண்ட ஆவியோ, நோக்கத்தில் மாற்றமோ, தீமையில் வெறுப்போ அங்கு இல்லை.PPTam 640.4

    இவ்விதமே ஒவ்வொருவனும் ஜீவனுக்கோ அல்லது மரணத்திற்கோ தீர்மானிக்கப்பட்ட பின்னர், குற்றவாளிகள் தேவனுடைய நீதிமன்றத்தின் முன் நிற்கும் போது அறிக்கைகள் செய்யப்படும். அவனுக்கு வந்த அதன் விளைவுகள் ஒவ்வொருவனிடமிருந்தும் அவனுடைய பாவத்தைக் குறித்த ஒப்புதலைக் கொண்டுவரும். ஆக்கினையைக் குறித்த பயங்கரமான உணர்வினாலும், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடு பார்த்திருக்கிறதினாலும் ஆத்துமாவிலிருந்து இது பலவந்தமாகக் கொண்டுவரப்படும். ஆனால் அப்படிப்பட்ட பாவ அறிக்கைகள் பாவியைக் காப்பாற்ற முடியாது.PPTam 641.1

    ஆகானைப்போல் தங்கள் சக மனிதர்களிடமிருந்து எவ்வளவு காலம் தங்கள் மீறுதல்களை மறைக்கக்கூடுமோ அவ்வளவு காலம் பாதுகாப்பாயிருப்பதாக உணர்ந்து, அக்கிரமத்தைக் குறிப்பதில் தேவன் கண்டிப்பாக இருக்கமாட்டார் என்று தங்களை வஞ்சித்துக்கொள்ளுகின்றனர். அவர்களுடைய பாவங்கள் பலியி னாலோ அல்லது காணிக்கையினாலோ என்றென்றுமாகக் கழு வப்படக்கூடாத அந்த நாளிலே, வெகு தாமதமாக அவர்களைக் கண்டுபிடிக்கும். பரலோகத்தின் ஆவணங்கள் திறக்கப்படும் போது நியாயாதிபதி மனிதனுக்கு அவனுடைய பாவத்தை வார்த்தைகளால் அறிவிக்கமாட்டார். பதிலாக, துளைக்கக்கூடிய மனதை உறுத்தக்கூடிய ஒரு பார்வையை பதிப்பார். ஒவ்வொரு செயலும் வாழ்க்கையின் ஒவ்வொரு பரிவர்த்தனையும் தவறு செய்கிறவனின் நினைவில் தெளிவாக பதிக்கப்படும். யோசுவாவின் நாளில் நடந்ததைப் போல அந்த மனிதன் வேட்டையாடப்பட வேண்டிய அவசியமிருக்காது. அவனுடைய சொந்த உதடுகளே அவனுடைய அவமானத்தை அறிக்கை செய்யும். மனிதனுடைய அறிவிலிருந்து மறைக்கப்பட்ட பாவங்கள் முழு உலகத்திற்கும் அப்போது அறிவிக்கப்படும்.PPTam 642.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents