Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    42 - மீண்டும் கொடுக்கப்பட்ட பிரமாணம்

    கானானை சுதந்தரிக்க நியமிக்கப்பட்ட நேரம் வந்துவிட்டதாக ஆண்டவர் மோசேக்கு அறிவித்தார். வயதான அந்த தீர்க்கதரிசி உயரங்களில் நின்று யோர்தானையும் வாக்குத்தத்த தேசத்தையும் பார்த்தபோது, தன்னுடைய ஜனங்களின் சுதந்திரவீதத்தை மிகுந்த ஆழமான ஆவலோடு நோக்கினான். காதேசில் அவனுடைய பாவத்தினிமித்தம் அவனுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட தீர்ப்பு திரும்ப எடுத்துக் கொள்ளப்படக்கூடுமா? ஆழமான ஊக்கத்தோடு கர்த்தராகிய ஆண்டவரே, நீர் உமது அடியேனுக்கு உமது மகத்துவத்தையும் உமது வல்லமையுள்ள கரத்தையும் காண்பிக்கத் தொடங்கினீர்; வானத்திலும் பூமியிலும் உம்முடைய கிரியை களுக்கும் உம்முடைய வல்லமைகளுக்கும் ஒப்பாகச் செய்யத்தக்க தேவன் யார்? நான் கடந்து போய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும், அந்த நல்ல மலையையும், லீபனோனையும் பார்க்கும்படி உத்தரவு கொடுத்தருளும் (உபா. 324 - 27) என்று அவன் மன்றாடினான். போதும், இனி இந்தக் காரியத்தைக் குறித்து என்னோடே பேசவேண்டாம். நீபிஸ்காவின் கொடுமுடியில் ஏறி, உன் கண்களை மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் ஏறெடுத்து, உன் கண்களினாலே அதைப் பார், இந்த யோர்தானை நீ கடந்து போவதில்லை என்று அவனுக்குப் பதில் வந்தது.PPTam 596.1

    ஒரு முறுமுறுப்புமின்றி தேவனுடைய கட்டளைக்கு மோசே ஒப்படைத்தான். இப்போது அவனுடைய எதிர்பார்ப்பெல்லாம் இஸ்ரவேலுக்காக இருந்தது. இஸ்ரவேலுடைய நன்மையின் மேல் இருந்த ஆர்வத்தை அவன் உணர்ந்ததைப் போல் யார் உணரக்கூடும்? முழு இருதயத்தோடும் PPTam 597.1

    கர்த்தருடைய சபை மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போல் இராதபடிக்கு, அந்தச் சபைக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாய் இருக்கும் படிக்கும், அவர்களைப் போகவும் வரவும் பண்ணும் படிக்கும், மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனாகிய கர்த்தர் ஒரு புருஷனை அவர்கள் மேல் அதிகாரியாக ஏற்படுத்தவேண்டும் (எண். 27:16,17) என்ற ஜெபத்தை ஏறெடுத் தான்.PPTam 597.2

    ஆண்டவர் தமது ஊழியக்காரனுடைய ஜெபத்தைக் கேட்டார். ஆவியைப் பெற்றிருக்கிற புருஷனாகிய யோசுவா என்னும் நூலின் குமாரனை நீ தெரிந்துகொண்டு, அவன்மேல் உன் கையை வைத்து, அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி, அவர்கள் கண்களுக்கு முன்பாக அவனுக்குக் கட்டளை கொடுத்து, இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படியும் படிக்கு, உன் கனத்தில் கொஞ்சம் அவனுக்குக் கொடு (வச. 18-20) என்று அவனுக்கு பதில் வந்தது. யோசுவா நீண்டகாலமாகமோசேக்கு பணிவிடை செய்திருக்கிறான். ஞானமும் திறமையும் விசுவாசமுமுள்ள மனிதனான அவன் மோசேயை பின்தொடரும்படி தெரிந்துகொள்ளப்பட்டான்.PPTam 597.3

    மிகவும் உணர்த்தக் கூடிய பொறுப்போடு மோசே தன் கைகளை அவன் மேல் வைக்க யோசுவா பவித்திரமாக இஸ்ரவேலின் தலைவனாக்கப்பட்டான். அரசாங்கத்திலும் ஒரு பகுதிக்கு அவன் அனுமதிக்கப்பட்டான். அவன் ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கக்கடவன்; அவனிமித்தம் அந்த ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கக்கடவன்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது (வச. 21- 23) என்று யோசுவாவைக் குறித்து மோசேயின் வழியாக சபையாருக்கு ஆண்டவருடைய வார்த்தை வந்தது.PPTam 597.4

    இஸ்ரவேலின் காணக்கூடிய தலைவனாக தன்னுடைய தகுதியை விடும் முன்பாக, எகிப்திலிருந்து அவர்களை விடுவித்த சரித்திரத்தையும் அவர்களுடைய வனாந்தரப் பிரயாணத்தையும் மீண்டும் அறிவிக்கவும் சீனாயிலிருந்து பேசப்பட்ட பிரமாணங்களைத் தொகுத்துக்கூறவும் மோசே நடத்தப்பட்டான். பிரமாணம் கொடுக்கப்பட்டபோது இப்போதிருந்த சபையாரில் வெகுசிலரே அந்த நிகழ்ச்சியின் பயங்கரமான பவித்திரத்தை புரிந்து கொள்ளும் வயதை அடைந்திருந்தனர். வெகுவிரைவாக யோர்தானைக் கடந்து வாக்குத்தத்த தேசத்தை சுதந்தரிக்க இருப்பதினால் தேவன் அவர்கள் முன்பு தமது பிரமாணங்களின் கோரிக்கைகளை வைத்து செழிப்பின் நிபந்தனையாக அவைகளுக்கு கீழ்ப்படிவதை இணைப்பார்.PPTam 597.5

    அவர்களுக்கான கடைசி எச்சரிப்புகளையும் அறிவுரைகளையும் திரும்பவும் கூற மோசே ஜனங்கள் முன் நின்றிருந்தான். அவனுடைய முகம் பரிசுத்த வெளிச்சத்தினால் பிரகாசிப்பிக்கப்பட்டிருந்தது. அவனுடைய முடி வயதினிமித்தம் வெண்மையடைந் திருந்தது. ஆனால் அவனுடைய உருவம் நிமிர்ந்திருந்தது. அவனுடைய முகம் தணிக்கப்படாத பெலத்தை வெளிக்காட்டியது. அவனுடைய கண்கள் தெளிவாகவும் மங்காமலும் இருந்தன. அது மிகவும் முக்கியமான ஒரு தருணம். ஆழமான உணர்வுகளோடு ச ர்வவல்லமையுள்ள பாதுகாவலரின் அன்பையும் கிருபையையும் அவன் வருணித்தான். தேவன் மனுஷனைப் பூமியிலே சிருஷ்டித்த நாள் முதல், உனக்கு முன் இருந்த பூர்வநாட்களில், வானத்தின் ஒரு முனை தொடங்கி அதின் மறுமுனை மட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இப்படிப்பட்ட பெரிய காரியம் நடந்ததுண்டோ, இப்படிப்பட்ட காரியம் கேள்விப்பட்டதுண்டோ, அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற தேவனுடைய சத்தத்தை நீ கேட்டதுபோல, யாதொரு ஐனமாவது கேட்டதும் உயிரோடிருந்ததும் உண்டோ, அல்லது உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து ஒரு ஜனத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், யுத்தத்தினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்து கொள்ள வகை பண்ணினதுண்டோ என்று நீ விசாரித்துப்பார். காத்தரே தேவன், அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இது உனக்குக் காட்டப்பட்டது.PPTam 598.1

    சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள் பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை, நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள். கர்த்தர் உங்களில் அன்பு கூர்ந்ததினாலும், உங்கள் பிதாக்களுக்கு இட்ட ஆணையைக் காக்க வேண்டும் என்பதினாலும், கர்த்தர் பலத்த கையினால் உங்களைப் புறப்படப்பண்ணி, அடிமைத்தன் வீடாகிய எகிப்தினின்றும் அதின் ராஜாவான பார்வோனின் கையினின்றும் உங்களை மீட்டுக்கொண்டார். ஆகையால் உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்பு கூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறை மட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும் (உபா.7:7-9).PPTam 598.2

    இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய தொந்தரவுகளை மோசேயின்மேல் சாட்ட ஆயத்தமாயிருந்திருந்தனர். ஆனால் இப்போது அவன் பெருமையினாலாவது பேராசையினாலாவது சுயநலத்தினாலாவது கட்டுப்படுத்தப்பட்டிருந்தான் என்கிற அவர்களுடைய சந்தேகங்கள் அகற்றப்பட அவனுடைய வார்த்தைகளை நம்பிக்கையோடு கவனித்தார்கள். அவர்களுடைய தவறுகளையும் அவர்கள் பிதாக்களுடைய மீறுதல்களையும் மோசே உண்மையாக அவர்கள் முன் வைத்தான். வனாந்தரத்தின் நீண்ட அலைச்சலினிமித்தம் அவர்கள் பல வேளைகளில் தங்களைப் பொறுமையற்றவர்களாகவும் கலகக்காரர்களாகவும் உணர்ந்திருந்தனர், ஆனால் கானானை சுதந்தரிப்பதற்கான தாமதத்திற்கு ஆண்டவர் பொறுப்பானவர் அல்ல. அவர்களை உடனடியாக வாக்குத்தத்த தேசத்தை சுதந்தரிக்கக் கொண்டு வரக்கூடாது போனதினாலும், தமது ஜனங்களை விடுவிப்பதில் தமது மிக அதிகவல்லமையை ஜாதிகளுக்கு முன்பு காட்டக்கூடாது போனதினாலும் அவரே மிகவும் வருத்தமடைந்திருந்தார். தேவன் மேலிருந்த அவநம்பிக்கையினாலும் அவர்களுடைய பெருமை மற்றும் அவிசுவாசத்தினாலும் கானானிற்குள் நுழைய அவர்கள் ஆயத்தமற்றவர்களாக இருந்தனர். இந்த குணங்கள், ஆண்டவரை தெய்வமாகக் கொண்ட ஜனமாக அவர்களை எவ்விதத்திலும் காட்ட முடியாது. அவர்கள் அவருடைய தூய்மையும் நன்மையும் தாராளமுமான குணங்களைக் கொண்டிருக்கவில்லை. அவருடைய நியாயத்தீர்ப்புகளால் ஆட்சி பண்ணப்பட்டிருந்து அவருடைய நியமங்களில் நடந்து அவர்களுடைய பிதாக்கள் ஆண்டவருடைய நடத்துதலுக்கு ஒப்புக்கொடுத்திருப்பார்களானால் வெகுகாலத்திற்கு முன்பாகவே செழிப்பான பரிசுத்தமான மகிழ்ச்சியான ஜனங்களாக கானானில் அமர்த்தப்பட்டிருப்பார்கள். நல்ல தேசத்திற்குள் நுழையக்கூடா தபடி ஏற்பட்டதாமதம் தேவனை கனவீனப்படுத்தி சுற்றிலுமிருந்த தேசங்களின் பார்வையில் அவருடைய மகிமையை குறைவு படுத்தியிருந்தது.PPTam 599.1

    தேவனுடைய பிரமாணங்களின் குணத்தையும் மதிப்பையும் உணர்ந்த மோசே, வேறு எந்த ஜாதியும் எபிரெயர்களுக்குக் கொடுக்கப்பட்ட இப்படிப்பட்ட ஞானமும் நீதியும் இரக்கமுமுள்ள சட்டங்களைப் பெற்றிருக்கவில்லை என்று நிச்சயப்படுத்தினான். நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி பிரவேசிக்கும் தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளும் பொருட்டு, என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கற்பித்தபடியே, நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நியாயங்களையும் போதித்தேன். ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; ஜனங்களின் கண்களுக்கு முன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும், அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள் என்றான்.PPTam 600.1

    மோசே அவர்களுடைய கவனத்தை ஓரேபிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நின்றிருந்ததற்கு அழைத்தான். நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுது கொள்ளுகிற போதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறது போல், தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது? இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதியும் எது? என்று அவன் எபிரெய சேனைக்கு சவால் கொடுத்தான் இஸ்ரவேலுக்குக் கொடுக்கப்பட்ட சவால் இன்று திரும்பக் கொடுக்கப்படலாம். இன்றைக்கு மிக நாகரீகமான தேசங்களின் சட்டங்களைக் காட்டிலும் தேவன் தமது முற்கால ஜனங்களுக்குக் கொடுத்த சட்டங்கள் ஞானமுள்ளதும் நேர்மையானதும் அதிக கருணையுள்ளவைகளுமாயிருக்கின்றன. நாடுகளின் சட்டங்கள் புதுப்பிக்கப்படாத இருதயத்தினுடைய பலவீனங்களையும் உணர்ச்சிகளையும் குறித்த அடையாளங்களைக் கொண்டிருக்கிறது. ஆனால் தேவனுடைய பிரமாணம் தெய்வீக முத்திரையைக் கொண்டிருக்கிறது,PPTam 600.2

    தமக்குச் சுதந்தரமான ஜனமாயிருக்கும்படி, கர்த்தர் உங்களை எகிப்து என்னும் இருப்புக்காளவாயிலிருந்து புறப்படப்பண்ணினார் என்று மோசே அறிவித்தான். விரைவில் அவர்கள் நுழையப்போகிற தேசம், தேவனுடைய பிரமாணங்களுக்கு கீழ்ப்படியும் நிபந்தனையினால் அவர்கள் பெறப்போகிற தேசம் இவ்விதமாக அவர்களுக்கு விவரிக்கப்பட்டது. அந்த நல்ல தேசத்தின் ஆசீர்வாதங்கள் என்னவாயிருந்தது என்பதை பிரகாசமாக படம்பிடித்துக்காட்டினவன் அவர்களுடைய பாவத்தினிமித்தம் தனது ஜனத்தோடு அந்த சுதந்தரத்தை பகிர்ந்து கொள்ள அனு மதிக்கப்படாததை நினைத்தபோது, அவனுடைய வார்த்தைகள் எவ்விதம் இஸ்ரவேலின் இருதயத்தை அசைத்திருக்கவேண்டும்!PPTam 600.3

    உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்ல தேசத்திலே பிரவேசிக்கப்பண்ணுகிறார்; நீ சுதந்தரிக்கப் போகிற தேசம் நீ விட்டுவந்த எகிப்து தேசத்தைப்போல் இராது; அங்கே நீ விதையை விதைத்து, கீரைத்தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சுகிறது போல உன் காலால் நீ ர்ப்பாய்ச்சி வந்தாய். நீங்கள் சுதந்தரிக்கப் போகிற தேசமோ, மலைகளும் பள்ளத்தாக்குகளுமுள்ள தேசம்; அது வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம், அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும் ஊற்றுகளும் ஏரிகளுமுள்ள தேசம், அது கோதுமையும் வாற்கோதுமையும் திராட்சச்செடிகளும் அத்திமரங்களும் மாதளஞ்செடிகளுமுள்ள தேசம், அது ஒலிவமரங்களும், எண்ணெயும் தேனுமுள்ள தேசம், அது தாழ்ச்சியில்லாமல் அப்பம் புசிக்கத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம், அது கல்லுகள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டி எடுக்கத்தக்க மலைகளுள்ளதுமான தேசம், அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், வருஷத்தின் துவக்க முதல் வருஷத்தின் முடிவு மட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும். உபாகமம் 3:7-9,PPTam 601.1

    உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம் ஈசாக்குயாக்கோபு என்பவர்களாகிய உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பிரவேசிக் கப்பண்ணும் போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும், நீ நிரப்பாத சகல நல்லவஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும், நீ நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதினால், நீ சாப்பிட்டுத் திருப்தியாகும் போதும், நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின் கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக் கையாயிரு . நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே பண்ணின் உடன்படிக்கையை மறந்து ..... உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன். அவர்கள் ஆண்டவருடைய பார்வையில் தீமை செய்வார்களானால் நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் இராமல், சீக்கிரமாய் முற்றிலும் அழிந்து போவீர்கள் என்று மோசே கூறினான்.PPTam 601.2

    பிரமாணத்தை பொதுமக்கள் அனைவர் காதிலும் திரும்பக் கூறினபிறகு, அனைத்துச் சட்டங்களையும் நியமங்களையும் தேவன் கொடுத்திருந்த நியாயத்தீர்ப்புகளையும் பலமுறைகளுக் கடுத்த அனைத்து ஒழுங்குகளையும் மோசே எழுதி முடித்தான். இவைகள் எழுதப்பட்டிருந்த புத்தகம் முறையான அதிகாரிகளின் பொறுப்பில் கொடுக்கப்பட்டு, பத்திரமாக வைக்கப்படுவதற்காக உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்தில் வைக்கப்பட்டது. ஜனங்கள் தேவனைவிட்டு விலகிவிடுவார்களோ என்ற பயத்தில் அந்த மாபெரும் தலைவன் இன்னமும் இருந்தான். மிகவும் கம்பீரமான பரபரப்பான வார்த்தைகளில் கீழ்ப்படிதலின் நிபந்தனையில் அவர்களுடையதாகக்கூடிய ஆசீர்வாதங்களையும், மீறுதலைப் பின்தொடரும் சாபங்களையும் அவன் அவர்கள் முன் வைத்தான்.PPTam 602.1

    இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளும் ... ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக்கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ...... கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார் :PPTam 602.2

    இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின் படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதே போவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும். கர்த்தர் உன்னைக் கொண்டு போய்விடும் எல்லாஜனங்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் பரியாசச் சொல்லுமாவாய். கர்த்தர் உன்னைப் பூமியின் ஒரு முனை துவக்கி பூமியின் மறுமுனை மட்டும் இருக்கிற எல்லா ஜனங்களுக் குள்ளும் சிதற அடிப்பார், அங்கே நீயும் உன் பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய் . அந்த ஜாதி களுக்குள்ளே உனக்கு இளைப்பாறுதல் இராது, உன் உள்ளங்கால்கள் தங்கித்தரிக்க இடமும் இராது, அங்கே கர்த்தர் உனக்குத் தத்தளிக்கிற இருதயத்தையும், சோர்ந்து போகிற கண்களையும், மனச்சஞ்சலத்தையும் கொடுப்பார். உன் ஜீவன் உனக்குச் சந்தேகத்தில் ஊசலாடும், உன்ஜீவனைப்பற்றி நம்பிக்கையில்லாமல் இரவும் பகலும் திகில் கொண்டிருப்பாய். நீ பயப்படும் உன் இருதயத்தின் திகிலினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய்.PPTam 602.3

    ஏவுதலின் ஆவியினால் வெகுதூர் காலத்தைப் பார்த்தவனாக, இஸ்ரவேல் ஒரு தேசமாக இராமல் கவிழ்க்கப்படப்போகிற பயங்கரமான காட்சிகளையும், ரோம படைகளினால் எருசலேம் அழியப்போவதையும் மோசேபடம்பிடித்துக்காட்டினான். கிழவன் என்று முகம் பாராமலும், வாலிபன் என்று இரங்காமலும் இருக்கும் கொடிய முகமுள்ளதும், உனக்குத் தெரியாத பாஷையைப் பேசு கிறதுமான ஜாதியை வெகுதூரத்திலுள்ள பூமியின் கடையாந் திரத்திலிருந்து கர்த்தர் உன்மேல் கழுகு பறக்கும் வேகமாய் வரப்பண்ணுவார்.PPTam 603.1

    நூற்றாண்டுகளுக்குப்பின்னர் தீத்து வின்கீழ் எருசலேம் முற்றுகையிடப்படும் போது தேசம் முற்றிலும் பாழாகப்போவதும் மக்களுடைய பயங்ரமான துன்பமும் நீ அழியுமட்டும் அந்த ஜாதியான் உன் மிருகஜீவன்களின் பலனையும், உன் நிலத்தின் கனியையும் புசிப்பான் ...... உன் தேசமெங்கும் நீ நம்பியிருக்கும் உயரமும் அரணிப்புமான உன் மதில்கள் விழுமளவும், அவன் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றிக்கை போடுவான்; ..... உன் சத்துருக்கள் உன்னை முற்றிக்கைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக்கனியான உன் புத்திரபுத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய் என்ற வார்த்தைகளால் தெளிவாக வருணிக்கப்பட்டது. உன்னிடத்தில் சுகசெல்வத்தினாலும் செருக்கினாலும் தன் உள்ளங்காலைத் தரையின் மேல் வைக்க அஞ்சின் செருக்கும் சுகசெல்வமுமுள்ள ஸ்திரீ ..... தன் மார்பில் இருக்கிற புருஷன் மேலும் தன் குமாரன் மேலும் தன் குமாரத்தியின் மேலும் வன்கண்ணாயிருப்பாள், உன் சத்துருக்கள் உன் வாசல்களில் உன்னை முற்றிக்கை போட்டு நெருக்குங்காலத்தில், சகலமும் குறைவுபடுவதினால், அவைகளை இரகசியமாய்த்தின்னுவாள் என்று தெளிவாக வருணிக்கப்பட்டது.PPTam 603.2

    நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள் மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன், ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்து கொண்டு, கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்பு கூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக, அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் (உபா. 30:19, 20) எனும் உணர்த்தக்கூடிய வார்த்தைகளோடு மோசே முடித்தான்.PPTam 604.1

    இந்த சத்தியங்களை அனைத்து மனங்களிலும் அதிக ஆழமாக பதிப்பதற்காக மாபெரும் தலைவன் பரிசுத்தமான வசனங்களோடு அவைகளை இணைத்தான். இந்தப் பாடல் சரித்திரப்பூர்வமானது மாத்திரமல்ல, தீர்க்கதரிசனமானதுங்கூட. கடந்தகாலத்தில் தேவன் தமது ஜனங்களோடு அற்புதமாக நடந்துகொண்டதை திரும்பக் கூறும் வேளையில், எதிர்காலத்தின் மாபெரும் சம்பவங்களான கிறிஸ்து தமது வல்லமையிலும் மகிமையிலும் இரண்டாம் முறை வரும்போது அவருடைய உண்மையானவர்களின் இறுதி வெற்றியையும் இது நிழலிட்டு காட்டுகிறது. இந்தச் சரித்திர கவிதையை மனனம் செய்யவும் தங்கள் பிள்ளைகளுக்கும் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் போதிக்கவும் ஜனங்கள் நடத்தப் பட்டனர். ஆராதனைக்காக கூடும் போதும் இது சபையாரால் சொல்லப்பட வேண்டும், தங்களுடைய அனுதின் வேலைக்குச் செல்லும்போது இது மக்களால் திரும்பக் கூறப்படவேண்டும். ஒருபோதும் மறக்கப்படாமலிருப்பதற்கேதுவாக எளிதில் பதிக் கப்படக்கூடிய தங்கள் பிள்ளைகளின் மனங்களில் இவைகளைப் பதிப்பது பெற்றோர்களின் கடமை.PPTam 604.2

    விசேஷமான விதத்தில் இஸ்ரவேலர்கள் தேவனுடைய பிரமாணத்தின் பாதுகாவலர்களும் அவைகளை காப்பாற்றுகிறவர் களுமாக இருக்கிறபடியால் அந்த நியமங்களின் குறிப்பும் அதற்குக் கீழ்ப்படிவதன் முக்கியமும் அவர்கள் மேல் விசேஷமாக பதிக்கப் படவேண்டும். அவர்கள் வழியாக அவர்கள் பிள்ளைகள் மேலும் பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும் பதிக்கப்பட வேண்டும். தேவன் தமது பிரமாணங்களைக் குறித்து : நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, உன் வீட்டில் உட்கார்ந் திருக்கிற போதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிற போதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசி, அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக என்று கட்டளையிட்டார்.PPTam 604.3

    வருங்காலத்தில் அவர்களுடைய பிள்ளைகள் : நம்முடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட இந்த சாட்சி களும் கட்டளைகளும் நியாயங்களும் என்ன என்று கேட்கும் போது, ஆண்டவர் அவர்களோடு கிருபையாக நடந்து கொண்டதன் சரித்திரத்தை அவருடைய பிரமாணங்களுக்கு கீழ்ப்படியும் படி ஆண்டவர் எவ்விதம் அவர்களுடைய விடுதலைக்காக கிரியை செய்தார் என்பதை பெற்றோர்கள் திரும்பக் கூறி, இந்நாளில் இருக்கிறது போல, நம்மை அவர் உயிரோடே காப்பதற்கும், எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து இந்த எல்லாக் கட்டளைகளின் படியேயும் செய்யக் கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டார் என்று அவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.PPTam 605.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents