Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    66 - சவுல் மரிக்கிறான்

    ண்டும் இஸ்ரவேலருக்கும் பெலிஸ்தருக்கும் நடுவே யுத்தம் அறிவிக்கப்பட்டது. யெஸ்ரயேல் பள்ளத்தாக்கின் வடக்கு விளிம்பில் பெலிஸ்தர் கூடி வந்து, சூநேமிலே பாளயமிறங் கினார்கள். சவுலும் அவனுடைய படைகளும் சில மைல்கள் தொலைவில் கில்போவா மலையின் அடிவாரத்தில் சம்பூமியின் தென் எல்லையில் பாளயமிட்டிருந்தனர். இந்த சம்பூமியில் தான் கிதியோன் முன்னூறு மனிதரோடு மீதியானியரின் சேனையை ஓடச் செய்தான். ஆனால் இஸ்ரவேலின் இரட்சகனைத் தூண்டியிருந்த ஆவி, இராஜாவின் இருதயத்தை இப்போது தூண்டியிருந்த ஆவியைக் காட்டிலும் வெகுவாக வேறுபட்டிருந்தது. யாக்கோபின் வல்லமையான தேவன் மேலிருந்த பலமான விசுவாசத்தோடு கிதியோன் சென்றிருந்தான். ஆனால் தேவன் சவுலைக் கைவிட்டிருந்ததினிமித்தம் அவன் தான் தனிமையாகவும் பாதுகாப்பின்றியும் இருப்பதாக உணர்ந்திருந்தான். பெலிஸ்தரின் சேனையைப் பார்த்தபோது பயந்தான், அவன் இருதயம் மிகவும் தத்தளித்துக்கொண்டிருந்தது.PPTam 887.1

    தாவீதும் அவனுடைய படையும் பெலிஸ்தரோடு இருப்பதை சவுல் அறிந்திருந்து, ஈசாயின் மகன் தான் அனுபவித்திருந்த தவறுகளுக்கு பழிவாங்க இதைத்தருணமாக எடுத்துக் கொள்வான் என்று எதிர்பார்த்தான். இராஜா கடும் துயரத்தில் இருந்தான். காரணமில்லாத அவனுடைய உணர்ச்சியே தேவனுடைய தெரிந்து கொள்ளப்பட்டவர்களை அழிக்கும்படியாக அவனைத் தூண்டி, தேசத்தை இவ்வளவு பெரிய ஆபத்திற்குள் கொண்டுவந்திருந்தது. தாவீதை பின்தொடருவதில் மூழ்கியிருந்தபோது தன்னுடைய இராஜ்யத்தின் பாதுகாப்பை அவன் நெகிழ்ந்திருந்தான், காவலில்லாத நிலையை சாதகமாக எடுத்துக் கொண்ட பெலிஸ்தர், நாட்டின் மையத்திற்குள்ளாகவே நுழைந்திருந்தார்கள். இவ்விதம் தாவீதை அழிக்கும்படிக்கு அவனை வேட்டையாட ஒவ்வொரு சக்தியையும் பிரயோகிக்க சாத்தான் சவுலை நெருக்கிக் கொண்டிருந்தபோது, அதே தீய ஆவி சவுலை அழிக்கவும் தேவனுடைய பிள்ளைகளை கவிழ்க்கவும் சந்தர்ப்பத்தைப் பற்றிக்கொள்ளும் படி பெலிஸ்தரை ஏவிக்கொண்டிருந்தது. இதே கொள்கை எவ்விதம் பலவேளைகளில் மாபெரும் சத்துருவினால் கையாளப்படுகிறது! சபையில் பொறாமையையும் சண்டையையும் கிளறிவிட, அர்ப்பணிக்கப்படாத சில இருதயங்களை அசைத்து, பின்னர் தேவனுடைய மக்களின் பிரிந்து போன நிலையை சாதகமாக்கிக்கொண்டு, அவர்களுடைய அழிவை செயல்படுத்த தன்னுடைய முகவர்களை அவன் தூண்டுகிறான்.PPTam 887.2

    மறுநாள் காலையில் சவுல் பெலிஸ்தரை யுத்தத்தில் சந்திக்க வேண்டும். காத்திருந்த அழிவின் நிழல்கள் அவன் மேல் இருண்டு திரண்டன. உதவிக்காகவும் நடத்துதலுக்காகவும் அவன் ஏங்கினான். ஆனால் தேவனிடமிருந்து ஆலோசனை கிடைக்கவில்லை. கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு அருளவில்லை. உண்மையோடும் தாழ்மையோடும் தம்மிடம் வந்த ஆத்துமாவை ஆண்டவர் ஒருபோதும் புறம்பே தள்ளவில்லை. பின் ஏன் சவுலுக்கு அவர் பதில் கொடுக்கவில்லை ? தேவனிடத்தில் விசாரிக்கும் அனைத்து வழிகளின் நன்மையையும் சவுல் தன்னுடைய சொந்த செயலினால் இழந்திருந்தான். சாமுவேல் தீர்க்கதரிசியின் ஆலோசனையை அவன் நெகிழ்ந்திருந்தான். தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டிருந்த தாவீதை நாடு கடத்தியிருந்தான். ஆண்டவருடைய ஆசாரியர்களை கொன்று போட்டிருந்தான். பரலோகம் நியமித்திருந்த தொடர்பின் வாய்க்கால்களை துண்டித்துப்போட்ட பிறகு தேவன் பதில் தருவார் என்று எதிர்பார்க்க முடியுமா? கிருபையின் ஆவியை பாவத்தினால் அவன் அப்புறப்படுத்தியிருந்தான். அப்படியிருக்க ஆண்டவரிட மிருந்து கனவுகளினாலும் வெளிப்படுத்தல்களினாலும் பதில் பெற முடியுமா? சவுல் தேவனிடம் தாழ்மையோடும் மனவருத்தத்தோடும் திரும்ப வில்லை. பாவத்திற்கான மன்னிப்பையோ அல்லது தேவனுடனான ஒப்புரவையோ அல்ல, சத்துருக்களிடமிருந்து விடுதலையையே அவன் தேடினான். அவனுடைய சொந்த பிடிவாதத்தினாலும் கலகத்தினாலும் அவன் தன்னை தேவனிடமிருந்து துண்டித்திருந்தான். பாவத்திற்கான மனவருத்தமும் நொறுங்குதலுமான வழியிலேயே அன்றி வேறு எவ்வழியிலும் திரும்பிச் செல்ல முடியாது. ஆனால் அகந்தையான அரசன் அவனுடைய வேதனையிலும் விரக்தியிலும் மற்றொரு ஆதாரத்திலிருந்து உதவியைப் பெற தீர்மானித்தான்.PPTam 888.1

    அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி. அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான். பில்லிசூனியத்தைக் குறித்த முழுமையான அறிவை சவுல் பெற்றிருந்தான். அது வெளிப்படையாக ஆண்டவரால் தடை செய்யப்பட்டிருந்து பரிசுத்தமில்லாத அந்தத் திறமையை பழகினவர்களுக்கு எதிராக மரண, தண்டனையை அறிவித்திருந்தது. சாமுவேல் உயிரோடிருந்தபோது அஞ்சனம் பார்க்கிறவர்களும் குறி சொல்லுகிறவர்களும் கொலை செய்யப்பட வேண்டும் என்று சவுல் கட்டளையிட்டிருந்தான். ஆனால் இப்போது விரக்தியின் கண்மூடித்தனத்தில் அருவறுப்பு என்று கண்டித்திருந்த அதே முகவனிடத்திற்கு அவன் திரும்பினான்.PPTam 889.1

    அஞ்சனம் பார்க்கும் ஆவியை உடைய ஒரு ஸ்திரீ எந்தோரில் மறைவாக வாழ்ந்து கொண்டிருப்பதாக இராஜாவிற்கு அறிவிக்கப்பட்டது. இந்தப்பெண்சாத்தானுடைய கட்டுப்பாட்டிற்கு தன்னைக் கொடுத்து அவனுடைய நோக்கங்களை நிறைவேற்று வதாக அவனோடு உடன்படிக்கை செய்திருந்தாள். இதற்குப்பதிலாக தீமையின் அதிபதி அவளுக்காக அற்புதங்களை நடப்பித்து, அவளுக்கு இரகசியமான காரியங்களை அறிவித்திருந்தான்.PPTam 889.2

    சவுல் வேஷம் மாறி இரண்டு பணியாட்களோடு இரவிலே அந்த சூனியக்காரியைத் தேடிச் சென்றான். என்ன பரிதாபமான காட்சி! இஸ்ரவேலின் இராஜா, சாத்தானுடைய விருப்பத்தின்படி, சாத்தானின் அடிமையாக நடத்தப்பட்டான். தேவ ஆவியானவரின் பரிசுத்த ஏவுதலை எதிர்த்து தன்னுடைய சொந்த வழியையே கொண்டிருப்பதில் பிடிவாதமாக இருந்த ஒருவனால் தெரிந்து கொள்ளப்பட்ட அந்தப் பாதை, மனித பாதங்களுக்கு எவ்வளவு இருண்ட பாதை ! மிகவும் மோசமான கொடுங்கோலனான - சுயத் தின் கட்டுப்பாட்டிற்கு தன்னை ஒப்புக்கொடுக்கிற அடிமைத்தனம் எவ்வளவு பயங்கரமானது ! இஸ்ரவேலின் இராஜாவாக இருப்பதற்கு சவுலுக்கு இருந்த நிபந்தனைகள் : தேவனை விசு வாசிப்பதும் அவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிவதுமே . இந்த நிபந்தனைகளோடு தன்னுடைய ஆட்சி முழுவதும் இணைந்து போயிருந்தால், அவனுடைய இராஜ்யம் பாதுகாப்பாயிருந்திருக் கும். தேவன் அவனுடைய நடத்துனராகவும் சர்வ வல்லமை யுள்ளவர் அவனுக்குப் பாதுகாப்பாகவும் இருந்திருப்பார். தேவன் நீண்ட காலம் சவுலைப் பொறுத்திருந்தார். மீறுதலும் பிடிவாதமும் ஆத்துமாவிலிருந்த தெய்வீகக் குரலை ஏறக்குறைய முழுவதும் மௌனமாக்கியிருந்தபோதும், மனந்திரும்புவதற்கான சந்தர்ப்பம் இன்னமும் இருந்தது. ஆனாலும் அவனுடைய ஆபத்தில் வெளிச்சத்தைப் பெறும்படியாக தேவனிடமிருந்து விலகி சாத்தானின் கூட்டத்திற்குத் திரும்பினபோது, அவனை உண்டாக்கினவரோடு அவனைக் கட்டியிருந்த கடைசி கட்டும் வெட்டப்பட்டது. வருடங்களாக அவன் மீது செயல்பட்டுக்கொண்டிருந்து, அழிவின் விளிம்பிற்கு அவனைக் கொண்டுவந்திருந்த அந்த பிசாசின் வல்லமையில் அவன் தன்னை முழுமையாக வைத்தான்.PPTam 889.3

    இருளின் போர்வையின் கீழ் சவுலும் அவனுடைய பணியாட்களும் சம்பூமியின் குறுக்கே பெலிஸ்தரின் சேனையை பாதுகாப்பாகக் கடந்து மலை முகடுகளைத் தாண்டி எந்தோரிலிருந்த அஞ்சனக்காரியின் தனிமையான இடத்தை அடைந்தனர். தன் சீர்கெட்ட மந்திரத்தை இரகசியமாகத் தொடருவதற்கு ஏதுவாக இந்தப் பெண் அந்த சூனிய ஆவியோடு இங்கே மறைந்திருந்தாள். வேடமிட்டிருந்தபோதிலும் சவுலின் உயர்ந்த உருவமும் இராஜ கம்பீரமும் அவன் ஒரு சாதாரண படைவீரனல்ல என்பதை அறிவித்தது. தன்னுடைய விருந்தாளி சவுல் தான் என்று அவள் சந்தேகித்தாள். அவனுடைய ஐசுவரியமான பரிசுகள் அவளுடைய சந்தேகத்தை பலப்படுத்தியது. நீ அஞ்சனம் பார்த்து எனக்குக் குறி சொல்லி, நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பிவரச்செய் என்ற அவனுடைய விண்ணப்பத்திற்கு அந்தப் பெண் : சவுல் அஞ்ச னம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், தேசத்தில் இராதபடிக்கு நிர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்று போடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணி வைக்கிறது என்ன என்று பதிலளித்தாள். பின்னர், சவுல். இந்தக் காரியத்திற்காக உனக்குப் பொல்லாப்பு வராது என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று அவ ளுக்குக் கர்த்தர் மேல் ஆணையிட்டான். அந்த பெண் : உமக்கு நான் யாரை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்று கேட்க, அவன் சாமுவேல் என்று பதிலளித்தான்.PPTam 890.1

    அவளுடைய மந்திரத்தை செய்த பிறகு, தேவர்கள் பூமிக்குள் ளிருந்து ஏறி வருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன் னாள். அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள் : சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பி வருகிறான் என்றாள்; அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்துகொண்டு, தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான்.PPTam 891.1

    அஞ்சனம் பார்க்கிறவளின் வார்த்தைகளுக்கு வந்தது தேவனுடைய பரிசுத்த தீர்க்கதரிசி அல்ல. அந்த தீய ஆவிகளின் முற்றுகையில் சாமுவேல் இல்லை. இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட தோற்றம் சாத்தானுடைய வல்லமையினாலேயே உண்டாக்கப்பட்டது. கிறிஸ்துவை வனாந்தரத்தில் சோதித்தபோது ஒளியின் தூதனாக தன்னைக் காண்பித்ததுபோல், வெகு எளிதாக சாமுவேலின் தோற்றத்தையும் அவனால் காண்பிக்க முடியும்.PPTam 891.2

    அவளுடைய மந்திர வார்த்தையின்கீழ் ஏன் என்னை மோசம் போக்கினீர்? நீர் தான் சவுலாச்சுதே என்பதே இராஜாவிற்கு அறிவிக்கப்பட்ட முதல் வார்த்தைகளாக இருந்தன. இவ்விதம்PPTam 891.3

    தீர்க்கதரிசியைப் போல வந்த தீய ஆவியின் முதல் செயல், இந்தப் பொல்லாத ஸ்திரியோடு இரகசியமாக உறவாடி, அவளிடம் செயல்படுத்தப்பட்ட வஞ்சகத்தைக் குறித்து அவளை எச்சரிப்பதாக இருந்தது. தீர்க்கதரிசியாக நடித்துக்கொண்டிருந்தவனிடமிருந்து ச வுலுக்கு வந்த செய்தி. நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன? என்று இருந்தது. அதற்குச் சவுல் : நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம் பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை. ஆகையால் நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும் படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான்.PPTam 891.4

    சாமுவேல் உயிரோடு இருந்தபோது சவுல் அவனுடைய ஆலோசனைகளைத்தள்ளி அவனுடைய கடிந்து கொள்ளுதல்களால் வருத்தமடைந்திருந்தான். ஆனால் இப்போது துயரமும் பேரிடருமான மணிவேளையில் தீர்க்கதரிசியின் வழிகாட்டுதலே அவனுடைய ஒரே நம்பிக்கை என்று உணர்ந்து, பரலோக தூதுவ னோடு தொடர்பு கொள்ளும்படி பாதாளத்தின் தூதுவனை வீணாக தஞ்சமடைந்திருந்தான். சவுல் தன்னை முழுமையாக சாத்தானின் வல்லமையில் வைத்திருந்தான். அழிவையும் துக்கத்தையும் உண்டாக்குவதிலேயே விருப்பம் கொண்டிருந்த அவன், மகிழ்ச்சியில்லாத அரசனின் அழிவை செயல்படுத்த தன்னுடைய சந்தர்ப் பத்தை வெகு சாதகமாக உபயோகித்தான். சவுலின் வேதனை நிறைந்த மன்றாட்டுக்கு சாமுவேல் என்று அழைத்துக்கொண்டிருந்த வனின் உதடுகளிலிருந்து : கர்த்தர் உன்னைவிட்டு விலகி, உனக்குச் சத்துருவாய் இருக்கும் போது, நீ என்னிடத்தில் கேட்பானேன்? கர்த்தர் என்னைக் கொண்டு சொன்னபடியே செய்து முடித்து, ராஜ்யத்தை உன் கையிலிருந்து பறித்து, அதை உன் தோழனாகிய தாவீதுக்குக் கொடுத்துவிட்டார். நீ கர்த்தருடைய சொற்கேளாமலும், அமலேக்கின் மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினால், கர்த்தர் இன்றையதினம் உனக்கு இந்தப் பிரகாரமாகச் செய்தார். கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்; இஸ்ரவே லின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப் பார் என்ற பயங்கரமான செய்தி வந்தது.PPTam 891.5

    கலகத்தின் வழி முழுவதிலும் சவுல் சாத்தானால் புகழப்பட்டு வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருந்தான். பாவத்தை பாவமல்ல என்று காண்பித்து, மீறுதலின் பாதையை இலகுவானதும் விரும்பக் கூடியதுமாக்கி, ஆண்டவருடைய எச்சரிப்புகளுக்கும் பயமுறுத் துதல்களுக்கும் மனதை குருடாக்குவதே சோதனைக்காரனின் வேலை. சாத்தான் அவனுடைய உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வல்லமையினால் சாமுவேலின் கடிந்துகொள்ளு தலுக்கும் எச்சரிப்புக்கும் எதிராக தன்னை நியாயப்படுத்த சவுலை நடத்தியிருந்தான். ஆனால் இப்போது அவனுடைய நெருக்கடியில் அவனை விரக்திக்குத் தூண்டுவதற்கேதுவாக அவன்மீதே திரும்பி, அவனுடைய பாவத்தின் ஏராளத்தையும் மன்னிப்பு பெற நம் பிக்கையற்ற நிலையையும் காண்பித்தான். அவனுடைய தைரியத்தை அழித்து, அவனுடைய நிதானத்தைக் குழப்பி, அல்லது அவனை விரக்திக்கும் சுய அழிவிற்கும் நடத்துவதற்கு, இதைவிடவும் மேன்மையான வேறு எதுவும் தெரிந்துகொள் ளப்பட்டிருக்க முடியாது.PPTam 892.1

    சவுல் உபவாசத்தினால் சோர்ந்து மயக்கத்திலிருந்தான். அவன் திகிலடைந்து மனசாட்சியால் அடிக்கப்பட்டிருந்தான். பயங்கரமான இந்த அறிவிப்பு அவன் காதுகளில் விழுந்தபோது, புயலுக்கு முன் அசைகிற காவாலியைப் போன்று அவன் உருவம் தள்ளாடி தரையில் முகங்குப்புற விழுந்தது.PPTam 893.1

    அஞ்சனக்காரி எச்சரிப்படைந்தாள். இஸ்ரவேலின் இராஜா அவள் முன் மரித்த ஒருவனைப் போலக் கிடந்தான். அவளுடைய கூடாரத்தில் அவன் மரிப்பானானால் அவளுக்கு என்ன நடக்கும்? அவனுடைய விருப்பத்தைச் செயல்படுத்த அவள் தன் வாழ்க் கையை ஆபத்திற்குள்ளாக்கினதால், அவனைப் பாதுகாக்கும் அவளுடைய விண்ணப்பத்திற்கு அவன் இரங்கிவரவேண்டும் என்று, எழும்பும் படியும் உணவருந்தும் படியும் அவனை மன்றாடினாள். அவளுடைய மன்றாட்டுகளோடு அவனது பணியாட்களும் இணைய, முடிவாக சவுல் ஒப்புக்கொடுத்தான். அவசரமாக ஆயத்தப்படுத்தியிருந்த கொழுத்த கன்றையும் புளிப்பில்லாத அப்பத்தையும் அவள் அவன் முன் வைத்தாள். என்ன ஒரு காட்சி ! - சற்று முன்புதான் அழிவின் வார்த்தைகளை எதிரொலித்திருந்த அஞ்சனக்காரியின் காட்டுக்குகையில் சாத்தானுடைய முகவனின் சமூகத்தில் இஸ்ரவேலின் இராஜாவாக தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தவன் புசிக்கவும் அந்த நாளின் ஆபத்தான சண்டைக்கு ஆயத்தப்படவும் சாப்பிட அமர்ந்திருக்கிறான்.PPTam 893.2

    பகல் விடிவதற்கு முன்பாக போராட்டத்திற்கு ஆயத்தம் பண்ணும்படி தன் பணியாட்களோடு இஸ்ரவேலின் பாளயத்திற்கு அவன் திரும்பினான். இருளின் ஆவியோடு ஆலோசித்ததில் சவுல் தன்னை அழித்திருந்தான். விரக்தியின் பயத்தினால் நெருக்கப்பட்டதினால் அவனுடைய படையை தைரியமூட்டுவது அவனுக்குக் கூடாததாயிருக்கும். பலத்தின் ஆதாரமானவரிட மிருந்து பிரிந்திருந்த அவனால், தேவனை தங்கள் உதவியாளராகப் பார்க்க இஸ்ரவேலின் மனங்களை நடத்த முடியாது. இவ்விதம் அறிவிக்கப்பட்ட தீமை தன்னுடைய சொந்த நிறைவேறுதலை நடப்பிக்கும்.PPTam 893.3

    சூனேமின் சம்பூமியிலும் கில்போவா மலையின் சரிவுகளிலும் இஸ்ரவேலின் படைகளும் பெலிஸ்தியரின் சேனைகளும் அழிவிற்கேதுவான யுத்தத்தில் நெருங்கின. எந்தோரின் குகையிலிருந்த பயங்கரமான காட்சி அவனுடைய அனைத்து நம்பிக்கையையும் குழப்பியிருந்தபோதிலும் தன்னுடைய சிங்காச னத்திற்காகவும் தன்னுடைய இராஜ்யத்திற்காகவும் சோர்வான பலத்தோடு சவுல் சண்டையிட்டான். ஆனால் அது வீணாக இருந்தது. இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடி, கில் போவா மலையிலே வெட்டுண்டு விழுந்தார்கள். இராஜாவின் மூன்று தைரியமான மகன்களும் அவன் பக்கத்தில் மடிந்தனர். வில்வீரர் சவுலை நெருக்கினார்கள். தன்னுடைய போர்வீரர்கள் தன்னைச் சுற்றிலும் விழுந்ததையும் தன்னுடைய அரச குமாரர்கள் பட்டயத்தினால் கொல்லப்பட்டதையும் அவன் கண்டிருந்தான். அவன்தானும் காயப்பட்டதால் சண்டையிடவும் முடியவில்லை, ஓடிப்போகவும் இயலவில்லை. தப்பிப்போவது கூடாததாயிருக்க பெலிஸ்தரால் உயிரோடு பிடிக்கப்படக் கூடாது என்பதில் தீர்மானமாயிருந்து, தன் ஆயுததாரியை நோக்கி. நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப் போடு என்றான். ஆண்டவரால் அபிஷேகம்பண்ணப்பட்டவருக்கு எதிராக தன்னுடைய கையை உயர்த்த அந்த மனிதன் மறுத்தபோது, தன்னுடைய பட்டயத்தின் மேலேயே விழுந்து சவுல் தன்னை மாய்த்துக்கொண்டான்.PPTam 893.4

    இவ்விதம் இஸ்ரவேலின் முதல் இராஜா தன்னுடைய ஆத்துமாவின் மேல் தற்கொலை என்னும் குற்றத்தைச் சுமந்தவனாக அழிந்தான். அவனுடைய வாழ்க்கை ஒரு தோல்வியாயிருந்து, கனமின்றியும் விரக்தியிலும் தேவனுடைய சித்தத்திற்கு எதிராக முறை கேடான சொந்த விருப்பத்தை வைத்ததினால் மடிந்து போனான்.PPTam 894.1

    தோல்வியின் செய்திகள் தூரத்தில் எங்கும் பரவி, அனைத்து இஸ்ரவேலுக்கும் திகிலை உண்டாக்கியது. மக்கள் பட்டணங்களிலிருந்து ஓடினார்கள். பெலிஸ்தர் எந்த தொந்தரவுமின்றி அவைகளைச் சுதந்தரித்தனர். தேவனில்லாத சவுலின் ஆட்சி அவனுடைய மக்களின் அழிவை ஏறக்குறைய நிரூபித்தது.PPTam 894.2

    கொலையுண்டவர்களிடமிருந்து கொள்ளையடிக்க அதைத் தொடர்ந்த மறுநாளில் பெலிஸ்தர் யுத்தக் களத்தில் தேடினபோது, சவுல் மற்றும் அவனுடைய மூன்று குமாரரின் சரீரத்தையும் கண்டுபிடித்தனர்.PPTam 894.3

    தங்களது வெற்றியை முழுமையாக்கும்படி சவுலின் தலையை வெட்டி ஆயுதங்களை உரிந்தனர். பின்னர் துர்நாற்றம் வீசின அவனுடைய தலையும் ஆயுதங்களும் வெற்றியின் கோப்பைகளாக தங்கள் விக்கிரகங்களின் கோவில்களிலும் ஜனங்களுக்குள்ளும் செய்தியைப் பிரசித்தப்படுத்தும் படி பெலிஸ்திய தேசத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அவனுடைய ஆயுதங்கள் முடிவாக அஸ்தரோத்தின் வீட்டில் வைக்கப்பட்டன. அவனுடைய தலை தாகோனின் கோவிலில் தொங்கவிடப்பட்டது. இவ்விதம் வெற்றியின் மகிமை இந்த பொய் தெய்வங்களுக்குக் கொடுக் கப்பட்டு, யெகோவாவின் நாமம் கனவீனப்படுத்தப்பட்டது.PPTam 894.4

    சவுல் மற்றும் அவனுடைய குமாரரின் மரித்த சரீரங்கள் யோர்தானுக்கு அருகேயிருந்த கில்போவாவின் பட்டணத்திற்கு எடுத்துக் கொண்டுவரப்பட்டு பறவைகளால் பட்சிக்கப்படும்படி சங்கிலியால் தொங்கவைக்கப்பட்டன. ஆனால் சவுலின் துவக்கமும் மகிழ்ச்சியுமான வருடங்களில் தங்களுடைய பட்டணத்தை சவுல் விடுவித்ததை நினைவு கூர்ந்த யாபேஸ் கிலேயாத்தின் பலசாலிகள், இராஜா மற்றும் அவனுடைய குமாரரின் சரீரங்களைக் கைப்பற்றி அவைகளை மரியாதையோடு அடக்கம் செய்ததில் தங்கள் நன்றியை தெரிவித்தனர். யோர்தானை இரவோடு கடந்து பெத்சானின் அலங்கத்திலிருந்த சவுலின் உடலையும் அவன் குமாரரின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவைகளை அங்கே தகனம் பண்ணி, அவர்களுடைய எலும்புகளை எடுத்து, யாபேசிலிருக்கிற தோப்பிலே அடக்கம்பண்ணி, ஏழுநாள் உபவாசம்பண்ணினார்கள். இவ்விதம் நாற்பது வருடங்களுக்கு முன் செய்யப்பட்டிருந்த நல்ல செயல் தோல்வியும் அவமரியாதையுமான இருண்டமணி நேரத்தில் இரக்கமும் பரிதாபமும் கொண்ட கைகளினால் சவுலுக்கும் அவன் குமாரருக்கும் அடக்கத்தை நடப்பித்தது.PPTam 895.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents