Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    56 - ஏலியும் அவனது குமாரர்களும்

    இஸ்ரவேலில் ஆசாரியனாகவும் நியாயாதிபதியாகவும் இருந்தான். தேவனுடைய ஜனங்களுக்கு மத்தியிலே அவன் மிகவும் உயர்ந்த மிகவும் பொறுப்பான பதவிகளை வகித்து வந்தான். ஆசாரியத்துவத்தின் பரிசுத்த கடமைகளுக்காக தெய்வீகம் தெரிந்து கொண்ட மனிதனாகவும் தேசத்தின் மேல் மிகவும் உயர்ந்த நியாயாதிபதியின் அதிகாரத்திலும் வைக்கப்பட்டு, ஒரு உதாரணமாக அவன் பார்க்கப்பட்டு இஸ்ரவேலின் கோத்திரங்களின் மேல் பெரிய செல்வாக்கை செலுத்தியிருந்தான். ஆனால் ஐனத்தை ஆட்சி செய்யும்படியாக நியமிக்கப்பட்டிருந்தபோதும் தன்னுடைய சொந்த வீட்டாரை அவன் ஆட்சி செய்யவில்லை. ஏலி அதிகம் திளைக்கிற தகப்பனாயிருந்தான். சமாதானத்தையும் இலகுவான வாழ்க்கையையும் நேசித்து தன் பிள்ளைகளின் தவறான பழக்கங்களையும் உணர்ச்சிகளையும் சரி செய்ய அவன் தன்னுடைய வல்லமையைச் செயல்படுத்தவில்லை. அவர்களுடன் போராடுவதற்கோ அல்லது அவர்களைத் தண்டிப்பதற்கோ பதிலாக அவர்களுடைய விருப்பத்திற்கு ஒப்புக்கொடுத்து அவர்களுடைய வழியில் விட்டான். தன் குமாரர்களின் கல்வியை தன்னுடைய பொறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதாமல் அதற்கு எந்த விளைவும் இல்லை என்பதைப் போல நடத்தினான். இஸ்ரவேலின் ஆசாரியனும் நியாயாதிபதியுமான அவன், தேவன் தன் கவனிப்பில் கொடுத்திருக்கிற பிள்ளைகளைக் கண்டிப்பதையும் ஆட்சி செய்வதையும் குறித்த கடமையைப்பற்றின் இருளில் விடப்பட்டிருக்கவில்லை. ஆனால் அது அவனுடைய குமாரரின் விருப்பங்களுக்கு எதிராக இருந்து, அவர்களை தண்டிப்பதும் அவர்களுக்கு மறுப்பதும் அவசியப்பட்டிருந்ததினால் இந்தக் கடமையிலிருந்து ஏலி பின்வாங்கினான். இந்த முறையைப் பின்தொடரும் பயங்கரமான விளைவுகளை நிறுத்துப்பார்க்காது, தன் பிள்ளைகள் விரும்பிய அனைத்திலும் திளைத்து, தேவனுடைய சேவைக்கும் வாழ்க்கையின் கடமைகளுக்கும் அவர்களைத் தகுதிப்படுத்தும் வேலையை நெகிழ்ந்தான்.PPTam 750.1

    ஆபிரகாமைக்குறித்து தேவன்: அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும். நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் (ஆதி. 18:19) என்று கூறினார். ஆனால் ஏலியோ தன் பிள்ளைகள் தன்னைக் கட்டுப்படுத்த அனுமதித்தான். தகப்பன் பிள்ளைகளின் கீழ் இருந்தான். அவனுடைய பிள்ளைகளின் முறையைக் குறிப்பிட்ட சீர்கேட்டிலும் தீமையிலும், மீறுதலின் சாபம் வெளிப்படையாக இருந்தது. தேவனுடைய குணத்தைக் குறித்தோ அல்லது அவருடைய பிரமாணத்தின் பரிசுத்தத்தைக் குறித்தோ முறையான போற்றுதல் அவர்களிடம் இல்லாதிருந்தது. அவருடைய சேவை அவர்களுக்கு சாதாரண காரியமாக இருந்தது. குழந்தைப் பருவத்திலிருந்து ஆசரிப்புக் கூடாரத்தோடும் அதன் சேவையோடும் அவர்கள் அறிமுகமாகியிருந்தனர். ஆனால் மிகவும் பயபக்தியுள்ளவர்களாவதற்குப் பதிலாக அதன் பரிசுத்தத்தையும் குறிப்படையாளத்தையுங் குறித்த உணர்வை முற்றிலும் இழந்திருந்தனர். அவருடைய அதிகாரத்திற்குக் கொடுக்கப் பட்டிருந்த குறைந்தபட்ச பயபக்தியையும் தகப்பன் சரிசெய்ய வில்லை . ஆசரிப்புக் கூடாரத்தின் பவித்திரமான சேவைக்கு காட்டப்பட்ட அவபக்தியை நிறுத்தியிருக்கவில்லை. அவர்கள் ஏற்ற வயதையடைந்தபோது மரணத்திற்கு ஏதுவான கனிகளாலும் நம்பிக்கையின்மையினாலும் மீறுதலினாலும் நிறைந்திருந்தனர்.PPTam 751.1

    ஆசாரிய வேலைக்கு முற்றிலும் தகுதியற்றவர்களாக இருந்தபோதும் ஆசரிப்புக் கூடாரத்தில் தேவன் முன்பாக ஊழியம் செய்யும்படி அவர்கள் ஆசாரியர்களாக வைக்கப்பட்டனர். பலிகள் செலுத்துவதைக் குறித்து ஆண்டவர்மிகக் குறிப்பான நடத்துதலைக் கொடுத்திருந்தார். ஆனால் இந்த துன்மார்க்க மனிதர்கள் அதி காரத்தின் மேலிருந்த தங்களுடைய அலட்சியத்தை தேவனுடைய ஊழியத்தில் செயல்படுத்தி, மிகவும் பவித்திரமாக செய்யப்பட வேண்டிய காணிக்கைகளைக்குறித்த சட்டங்களுக்குக் கவனம் கொடுக்கவில்லை. கிறிஸ்துவின் மரணத்தை முன்கூட்டிக்காட்டின் பலிகள், வரவிருக்கும் இரட்சகர்மேல் விசுவாசம் வைப்பதற்கு ஜனங்களின் இருதயங்களில் பாதுகாக்கப்படும்படி வகுக்கப் பட்டிருந்தன. எனவே அவைகளைக்குறித்த ஆண்டவருடைய கட்டளைகள் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமான தாயிருந்தது. சமாதான பலிகள் விசேஷமாக தேவனுக்குச் செலுத்தும் நன்றியின் வெளிப்பாடாக இருந்தது. இந்த காணிக்கைகளில் கொழுப்பு மாத்திரமே பீடத்தின் மேல் தகனிக்கப்பட வேண்டும். இதன் ஒரு குறிப்பிட்ட பகுதி ஆசாரியனுக்காக வைக்கப்பட்டது. ஆனால் அதன் பெரும் பகுதி பலி செலுத்தினவனும் அவன் நண்பர்களும் புசிக்கும் படியாக அவனுக்குத் திரும்பக் கொடுக்கப்பட்டது.PPTam 751.2

    இவ்விதமாக உலகத்தின் பாவத்தைச் சுமக்கப்போகிற மாபெரும் பலியின் மேலிருந்த நன்றியிலும் விசுவாசத்திலும் அனைத்து இருதயங்களும் நடத்தப்பட்டன.PPTam 752.1

    ஏலியின் மகன்கள் இந்த அடையாளமான சேவையின் பவித்திரத்தை உணராதவர்களாக சுயத்தில் திளைத்து, இதை எவ்விதம் உபயோகிக்கலாம் என்று மாத்திரமே சிந்தித்தனர். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சமாதான பாலியில் மனநிறைவடையாதவர்களாக கூடுதலான பகுதியைக் கோரினர். வருடாந்தரப் பண்டிகைகளில் அதிகமான எண்ணிக்கையில் கொடுக்கப்பட்ட இந்த பலிகள், மக்களின் செலவில் தங்களை ஐசுவரியவான்களாக்கிக்கொள்ள ஆசாரியர்களுக்கு நல்ல சந்தர்ப்பத்தைக் கொடுத்தது. தங்களுடைய உரிமைக்கு அதிகமானதை கோரினது மாத்திரமல்லாது, கொழுப்பு தேவனுக்கு காணிக்கையாக தகனிக்கப்படும் வரையிலும் காத்திருக்கவும் அவர்கள் மறுத்தனர். தங்களுக்கு விருப்பமான பகுதியை உரிமை கோருவதில் பிடிவாதமாயிருந்து, அது கொடுக்கப்படாத பட்சத்தில் பலவந்தமாக எடுத்துக்கொள்ளுவதைக் குறித்தும் பயமுறுத்தினர்.PPTam 752.2

    ஆசாரியர்களின் பங்கிலிருந்த இந்த அவபக்தி இந்த ஆராதனையின் பரிசுத்தமும் பவித்திரமுமான குறிப்பைக் கொள்ளையடிக்க, மனுஷர் கர்த்தரின் காணிக்கையை வெறுப்பாய் எண்ணினார்கள். அவர்கள் எதிர்பார்த்திருக்க வேண்டிய அந்த மாபெரும் நிஜபலியின் பொருள் அதற்கு மேல் உணரப்படாது போயிற்று. ஆதலால் அந்த வாலிபரின் பாவம் கர்த்தருடைய சந்நிதியில் மிகவும் பெரிதாயிருந்தது.PPTam 752.3

    இந்த உண்மையற்ற ஆசாரியர்கள் தேவனுடைய பிரமாணத்தை மீறி, இழிவான கீழான பழக்கங்களால் தங்கள் பரிசுத்த தொழிலையும் அவமதித்தனர். அப்படியிருந்தும் தங்களுடைய சமுகத்தினால் தேவனுடைய ஆசரிப்புக் கூடாரத்தைத் தீட்டுப்படுத்துவதிலும் தொடர்ந்து கொண்டிருந்தனர். ஜனங்களில் அநேகர் ஓப்னி மற்றும் பினெகாசின் கெட்ட முறைகளால் மூர்க்கமடைந்து நியமிக்கப்பட்ட ஆராதனை ஸ்தலத்திற்கு வருவதை நிறுத்தினர். தீமைக்கு சாய்ந்திருந்தவர்களின் இருதயங்கள் பாவத்தில் துணிகரமடைந்தபோது, இவ்விதம் துன்மார்க்க மனிதரின் பாவங்களோடு இணைக்கப்பட்டிருந்ததால் தேவன் நியமித்திருந்த ஆராதனை ஒதுக்கப்பட்டு நெகிழப்பட்டது. தேவ பக்தியின்மையும் ஊதாரித்தனமும் விக்கிரக ஆராதனையுங்கூட பயப்படக்கூடிய அளவு மேற்கொண்டது.PPTam 753.1

    பரிசுத்த வேலையைச் செய்ய தன்னுடைய குமாரர்களை அனுமதித்ததில் ஏலி மாபெரும் தவறு செய்திருந்தான். அவர்களுடைய வழி முறைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுமதித்ததில் அவர்களுடையPPTam 753.2

    பாவங்களுக்கு அவன் குருடானான். ஆனால் தன் குமாரர்களின் குற்றங்களுக்கு இனி ஒருபோதும் தன் கண்களை மறைத்துக்கொள்ளக்கூடாத ஒரு இடத்தை கடைசியாக அவர்கள் அடைந்தனர். மக்கள் அவர்களுடைய கொடிய செயல்களைக் குறித்து குற்றஞ் சொல்ல, பிரதான ஆசாரியன் வருந்தி துயரமடைந்தான். இனி மெளனமாயிருக்க அவனுக்கு துணிவில்லை. ஆனால் அவன் குமாரர் தங்களைத்தவிர வேறு எவரையும் எண்ணிப்பார்க்காது வளர்க்கப்பட்டதினால் இப்போது வேறு ஒருவரையும் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. தங்கள் தகப்பனுடைய வருத்தத்தை அவர்கள் கண்டனர். ஆனால் அவர்களுடைய கடின இருதயங்கள் தொடப்படவில்லை. அவனுடைய லேசான அறிவுரைகளைக் கேட்டார்கள்; ஆனால் உந்தப்படவில்லை. பாவங்களின் விளைவுகளைக் குறித்து எச்சரிப்பு பெற்ற போதிலும் தங்கள் தீய வழியை அவர்கள் மாற்ற மாட்டார்கள். துன்மார்க்க குமாரரிடம் ஏலி நியாயமாக நடத்திருப்பானானால், அவர்கள் ஆசாரியத் தொழிலிலிருந்து நிராகரிக்கப்பட்டு மரணத்தினால் தண்டிக்கப்பட்டிருக்கவேண்டும். இவ்விதம் அவர்கள் மேல் வெளிப்படையான அவமானத்தைக் கொண்டுவரும் தண்டனையை கொடுப்பதற்கு பயந்து, மிகவும் பவித்திரமான நம்பிக்கையான தகுதியில் அவர்களை நிலைநிறுத்தியிருந்தான். தங்களுடைய சீர்கேடுகளை பரிசுத்த ஆராதனையில் கலக்கவும், வருடங்களால் அழிக்கக்கூடாத ஒரு காயத்தை சத்தியத்தின் மேல் ஏற்படுத்தவும் அவர்களை அவன் இன்னமும் அனுமதித்திருந்தான். ஆனால் இஸ்ரவேலின் நியாயாதிபதி தன் வேலையை நெகிழ்ந்திருந்தபோது தேவன் காரியத்தை கைகளில் எடுத்தார்.PPTam 753.3

    தேவனுடைய மனுஷன் ஒருவன் ஏலியினிடத்தில் வந்து : கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், உன் பிதாவின் வீட்டார் எகிப்திலே பார்வோனின் வீட்டில் இருக்கையில், நான் என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தி, என் பலிபீடத்தின் மேல் பலியிடவும், தூபங்காட்டவும், என் சமுகத்தில் ஏபோத்தைத் தரிக்கவும், இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் அவனை எனக்கு ஆசாரியனாகத் தெரிந்து கொண்டு, உன் பிதாவின் வீட்டாருக்கு இஸ்ரவேல் புத்திரருடைய தகனபலிகளையெல்லாம் கொடுக்கவில்லையா? என் வாசஸ்தலத்திலே செலுத்தும்படி நான் கட்டளையிட்ட என் பலியையும், என் காணிக்கையையும், நீங்கள் உதைப்பானேன்? என் ஜனமாகிய இஸ்ரவேலின் காணிக்கை களிலெல்லாம் பிரதானமானவைகளைக் கொண்டு உங்களைக் கொழுக்கப் பண்ணும் படிக்கு, நீ என்னைப்பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன் என்கிறார். ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக, என்னைக் கனம் பண்ணுகிற வர்களை நான் கனம் பண்ணுவேன், என்னை அசட்டைபண்ணு கிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்...... நான் என் உள்ளத்துக்கும் என் சித்தத்துக்கும் ஏற்றபடி செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பப்பண்ணி, அவனுக்கு நிலையான வீட்டைக் கட்டுவேன்; அவன் என்னால் அபிஷேகம் பண்ணப்பட்டவனுக்கு முன்பாகச் சகல நாளும் நடந்து கொள்ளுவான்.PPTam 754.1

    ஆண்டவருக்கு மேலாக தன் குமாரரை கனப்படுத்தினதாக தேவன் ஏலியைக் குற்றப்படுத்தினார். தன்னுடைய குமாரர்களை அவர்களுடைய பயபக்தியற்ற மற்றும் அருவறுப்பான பழக்கங்களினிமித்தம் அவமானப்படுத்துவதற்குப் பதிலாக தேவன் இஸ்ரவேலுக்கு ஆசீர்வாதமாக நியமித்திருந்த காணிக்கையை அருவறுப்பான ஒரு காரியமாக மாற்ற ஏலி அனுமதித்திருந்தான். தங்கள் குழந்தைகளின் மேலிருக்கும் கண்மூடித்தனமான பிரியத்தினால் அவர்களுடைய சுயநலமான விருப்பங்களை திருப்தி செய்வதில் திளைத்து, பாவத்தைக் கண்டிக்கவும் தீமையைச் சரி செய்யவும் தேவன் கொடுத்திருக்கும் அதிகாரத்தை செயல்படுத்தாது தங்களுடைய சொந்த விருப் பங்களைப் பின்பற்றுகிறவர்கள் தேவனைக் கனப்படுத்துவதைக் காட்டிலும் தங்களுடைய துன்மார்க்க குழந்தைகளை கனப்படுத்துகிறதை வெளிக்காட்டுகிறார்கள். தேவனை மகிமைப்படுத்துவதைக்காட்டிலும் தங்களுடைய பெயரைக் காப்பாற்ற மிகவும் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்; ஆண்டவரை பிரியப்படுத்தி அவருடைய ஆராதனையை தீமையான ஒவ்வொரு தோற்றத்திலிருந்தும் பாதுகாப்பதற்குப் பதிலாக தங்கள் பிள்ளைகளைத் திருப்திப்படுத்த மிகவும் வாஞ்சையோடிருக் கிறார்கள்.PPTam 754.2

    தேவன் ஏலியை ஆசாரியனாகவும் இஸ்ரவேலின் நியாயாதிபதியாகவும் அவருடைய ஜனங்களின் சன்மார்க்க மத நிலைமைக்கு விசேஷமாக அவனுடைய குமாரர்களின் குணத்திற்கு கணக்குக் கொடுக்கிறவனாகவும் வைத்தார். மென்மையான முறைகளினால் தீமையை அடக்க முதலாவது முயற்சித்திருக்க வேண்டும். அது பலன் தராதபோது கடுமையான முறைகளினால் தவறை அடக்கியிருக்கவேண்டும். பாவத்தைக் கண்டிக்காத்திலும் பாவியின் மேல் நியாயத்தீர்ப்பை செயல்படுத்தாத்திலும் அவன் ஆண்டவருடைய அதிருப்தியை சம்பாதித்தான். இஸ்ரவேலை தூய்மையாக வைத்துக்கொள்ளுவான் என்று அவனை நம்பக்கூடாது. தவறைக் கண்டிக்கத் தைரியமற்று இருக்கிறவர்கள் அல்லது சோம்பேறித்தனத்தினாலும் ஆர்வம் இல்லாதிருப்பதினாலும் குடும்பத்தையோ அல்லது தேவனுடைய சபையையோ தூய்மைப்படுத்த எந்த ஊக்கமான முயற்சியையும் எடுக்காதவர்கள் தங்கள் கடமையை நிராகரித்ததினால் வந்த தீமையான விளைவுகளுக்கு கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். பெற்றோர்களின் அல்லது போதகரின் அதிகாரத்தினால் தடுத்திருக்கக்கூடிய தீமைகளுக்கு, அந்தச் செயல்களை நாமே செய்ததைப்போல நாம் பொறுப்பாளிகளாக இருக்கிறோம்.PPTam 755.1

    குடும்பத்தின் நிர்வாகத்தைக் குறித்த தேவனுடைய சட்டங்களுக்கு இசைவாக ஏலி தன் குடும்பத்தாரை நிர்வகிக்கவில்லை. அவன் தன் சொந்த நியாயத்தீர்ப்புகளை செயல்படுத்தினான். தன் குமாரரின் இளமைப்பருவத்தில் அந்த பற்று மிகுந்த தகப்பன் அவர்களுடைய குற்றங்களையும் பாவங்களையும் காணாதது போல இருந்து, சில காலத்திற்குப்பின்பு அவர்கள் இந்த தீய இயல்புகளை விட்டுவிடுவார்கள் என்று தன்னை ஏமாற்றினான். அநேகர் இப்போதும் அதே தவறை செய்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளை பயிற்றுவிக்க, தேவன் அவரது வார்த்தையில் கொடுத்திருப்பதைக் காட்டிலும் மேன்மையான வழியை தாங்கள் அறிந்திருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களில் தவறான இயல்புகளை வளர்த்து, அவர்கள் தண்டிக்கப்படுவதற்கு மிகவும் சிறியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வளரும் வரையும் காத்திருங்கள்; அவர்களுக்குப் புரியவைக்கலாம் என்ற சாக்குப்போக்கை கூறுகிறார்கள். இவ்விதம் தவறான பழக்கங்கள் பலமடைய, அது இரண்டாவது இயல்பாக மாறும் வரை விட்டுவிடப்படுகிறது. தங்களுக்கு வாழ் நாள் முழுவதும் சாபமாக இருந்து, மற்றவர்களுடைய வாழ்க்கையிலும் முளைத்து வளரக்கூடிய, குணங்களோடு குழந்தைகள் கட்டுப்பாடின்றி வளருகிறார்கள்.PPTam 756.1

    வாலிபர்களை அவர்களுடைய சொந்த வழியில் விடுவதால் வருவதைக்காட்டிலும் வீட்டாரின் மேல் வரக்கூடிய பெரிய சாபம் வேறு எதுவுமில்லை. குழந்தைகளின் ஒவ்வொரு விருப்பத்தையும் கருத்தில் கொண்டு, அவர்களுடைய நன்மைக்கு ஏற்றதில்லை என்று தாங்கள் அறிந்திருப்பதில் திளைக்கும் போது, பெற்றோருக்கான அனைத்து மரியாதையையும் தேவனுடைய அல்லது மனிதனுடைய அதிகாரத்திற்கான அனைத்து கவனிப்பையும் இழந்து, சாத்தானின் சித்தத்தின்படி அவனுக்கு அடிமைகளாகிறார்கள். ஒழுங்கில்லாத குடும்பத்தின் செல்வாக்கு பரந்ததும் அனைத்து சமுதாயத்திற்கும் பேரழிவைக் கொண்டு வருவதாகவும் இருக்கிறது. குடும்பங்களையும் சமுதாயங்களையும் அரசாங்கங்களையும் பாதிக்கக் கூடிய தீமையின் அலையை அது குவிக்கிறது.PPTam 756.2

    ஏலியின் தகுதியினால் சாதாரண மனிதனுடையதைக்காட்டிலும் அவனுடைய செல்வாக்கு அதிகம் விரிந்ததாயிருந்தது. அவனுடைய குடும்ப வாழ்க்கை இஸ்ரவேல் முழுவதிலும் பின்பற்றப்பட்டது. அவனுடைய நெகிழ்வின் தீங்கான விளைவுகளும், சவுகரியத்தை நேசிக்கும் வழிகளும் அவனுடைய உதாரணத்தினால் வடிவமைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வீடுகளில் காணப்பட்டது. பெற்றோர்கள் மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்று தங்களை அழைக்கும் போது பிள்ளைகள் தீய பழக்கங்களில் திளைத்தால், தேவனுடைய சத்தியம் நிந்திக்கப்படுகிறது. ஒரு வீட்டின் கிறிஸ்தவத்தைக் குறித்த சிறந்த சோதனை அதன் செல்வாக்கினால் பெற்றுக்கொள்ளப்படுகிற குணத்திலிருக்கிறது. பக்தியுள்ளவர்களென்று மிகவும் ஆணித்தரமாக சொல்லிக்கொள்ளுவதைக்காட்டிலும் செயல்கள் அதிக சத்தமாகப் பேசுகின்றன. தேவன்மேல் விசுவாசம் வைப்பதினால் வரும் நன்மைகளுக்கு சாட்சியாக வீட்டாரை ஒழுங்கில் கொண்டுவர ஊக்கமான நிலையான வேதனை தரும் முயற்சிகளை எடுப்பதற்கு பதிலாக கிறிஸ்தவர்கள் என்று அழைக்கிறவர்கள் தங்கள் ஆட்சியில் தளர்வாக இருந்து தங்கள் குழந்தைகளின் தீய விருப்பங்களில் திளைக்கும் போது ஏலியைப் போலவே கிறிஸ்துவுக்கு அவமானத்தையும் தங்கள் மேலும் தங்கள் வீட்டார் மேலும் அழிவையும் கொண்டுவருகிறார்கள். எந்த சூழ்நிலையிலும் பெற்றோரின் உண்மையற்ற தன்மையின் தீமைகள் பெரியதாக இருக்கும் போது, ஜனங்களுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்படும் குடும்பத்தில் அப்படிப்பட்ட நிலை இருந்தால் அதன் தீமைகள் பத்து மடங்கு பெரியதாக இருக்கும். இவர்கள் தங்கள் சொந்த வீட்டாரை கட்டுப்படுத்தத் தவறும் போது தங்களுடைய தவறான வாழ்க்கையினால் அநேகரையும் தவறாக நடத்துகிறார்கள். அவர்களுடைய குற்றம் அவர்களுடைய தகுதி அதிக பொறுப்பானதாயிருப்பதினால் மற்றவர்களுடையதைக் காட்டிலும் மிகப் பெரியதாக இருக்கும்.PPTam 756.3

    ஆரோனின் வீட்டார் தேவனுக்கு முன்பாக எந்நாளும் நடக்கவேண்டும் என்று வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த வாக்குத்தத்தம் ஒருமுகமான இருதயத்தோடு ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைகளுக்கு தங்களை அர்ப்பணிப்பதன் நிபந்தனையிலும் தங்கள் அனைத்து வழியிலும் தேவனை கனப்படுத்தி சுயத்திற்கு சேவை செய்யாது தங்களுடைய முறை கேடான விருப்பங்களை பின்பற்றாது இருப்பதன் நிபந்தனையிலும் செய்யப்பட்டது. ஏலியும் அவன் பிள்ளைகளும் சோதிக்கப்பட்டார்கள். அவர்களுடைய சேவையில் ஆசாரியர் என்னும் உயர்ந்த தகுதிக்கு முற்றிலும் தகுதியற்றவர்களாக தேவன் அவர்களைக் கண்டார். எனவே அவர்: அது எனக்குத் தூரமாயிருப்பதாக என்று அறிவித்தார். அவர்கள் தங்கள் பங்கை செய்யத் தவறினதால் அவர்களுக்குச் செய்வதாக குறித்திருந்த நன்மையை அவரால் நிறைவேற்ற முடியாது.PPTam 757.1

    பரிசுத்த காரியங்களில் ஊழியம் செய்கிறவர்கள் தேவனுக்கு பயப்படும் பயத்தை மக்களில் பதிக்கிறவர்களாகவும் அவரைக் காயப்படுத்த பயப்படுகிறவர்களாகவும் இருக்கவேண்டும். தேவனுடைய இரக்கம் மற்றும் சமாதான செய்தியை கொடுக்கும்படியாக கிறிஸ்துவுக்காக (2 கொரி. 5:20) நிற்கும் போது, இந்த பரிசுத்த அழைப்பை தங்கள் சுயத்திற்கோ அல்லது உணர்ச்சிகளை திருப்திப்படுத்துவதற்கோ மூடலாக உபயோகித்தால் அவர்கள் சாத்தானுடைய மிகவும் திறமையான முகவர்களா கிறார்கள். ஓபனியையும் பினெகாசையும் போல் அவர்கள் கர்த்தரின் காணிக்கையை வெறுப்பாய் எண்ண நடத்துகிறார்கள். அவர்கள் தங்கள் தீய வழியை சிலகாலம் இரகசியமாகத் தொடரலாம். ஆனால் அவர்களுடைய உண்மையான குணம் கடைசியாக வெளியாகும்போது மக்களின் விசுவாசம் அசைக்கப்பட்டு மதத்தின் மேலிருக்கும் அவர்களுடைய நம்பிக்கையை அழிப்பதிலேயே பலவேளைகளில் முடிவடைகிறது. தேவனுடைய வார்த்தையைப் போதிப்பதாக அழைத்துக்கொள்ளும் அனைவர் மேலும் அவர்கள் மனங்களில் ஒரு அவநம்பிக்கை வைக்கப் படுகிறது. கிறிஸ்துவினுடைய உண்மையான ஊழியக்காரனின் செய்தி சந்தேகத்தோடு பெறப்படுகிறது. மிகவும் பரிசுத்தமானவன் என்று நாம் நினைத்திருந்து மிகவும் சீர்கெட்டவனாகக் கண்ட மனிதனைப் போல இவன் தன்னை நிருபிப்பானோ? என்ற கேள்வி தொடர்ச்சியாக எழுகிறது. இவ்விதம் தேவனுடைய வார்த்தை மனிதரின் ஆத்துமாக்களில் அதன் வல்லமையை இழக்கிறது.PPTam 758.1

    மனுஷருக்கு விரோதமாக மனுஷன் பாவஞ் செய்தால் நியாயாதிபதிகள் அதைத் தீர்ப்பார்கள்; ஒருவன் கர்த்தருக்கு விரோதமாகப்பாவஞ்செய்வானாகில், அவனுக்காக விண்ணப்பஞ் செய்யத்தக்கவன் யார்? என்று ஏலி தன் குமாரர்களை கடிந்து கொண்டது பயங்கரமான பயப்படக்கூடிய வார்த்தைகளாக பரிசுத்த காரியங்களில் ஊழியம் செய்கிறவர்கள் சிந்தித்துப் பார்க்கக்கூடிய வார்த்தைகளாக இருக்கிறது. அவர்களுடைய குற்றங்கள் அவர்களுடைய சகமனிதர்களை மாத்திரம் காயப்படுத்தியிருந்தால் ஒரு தண்டனையை நியமிப்பதினாலோ அல்லது ஒரு மீட்பை கோருவதினாலோ நியாயாதிபதி சரிசெய்திருக்கலாம். இவ்விதம் தவறு செய்தவன் மன்னிக்கப் பட்டிருக்கலாம், அல்லது துணிகரமான பாவத்தில் குற்றவாளியாக இல்லாத பட்சத்தில் பாவ காணிக்கை அவர்களுக்காக செலுத்தப் பட்டிருக்கலாம். ஆனால் அவர்களுடைய பாவங்கள் உன்னதமான வரின் ஆசாரியர் என்ற ஊழியத்தோடு பாவபலி செலுத்துவதோடு ஒன்றாக பின்னப்பட்டிருக்க, எந்த பரிகாரமும் அவர்களுக்காக ஏற்றுக்கொள்ளப்படக்கூடாதபடி தேவனுடைய வேலை பரிசுத்த குலைச்சலாக்கப்பட்டு ஜனங்கள் முன்பு கனவீனப்படுத்தப்பட்டது.PPTam 758.2

    அவர்களுடைய சொந்த தகப்பன்தானே பிரதான ஆசாரியனாக இருந்தும் அவர்களுக்காகப் பரிந்து பேச துணிவற்றிருந்தான். பரிசுத்த தேவனின் உக்கிரத்திலிருந்து அவனால் அவர்களை மறைக்கக்கூடாதிருந்தது. மனிதனின் மீட்பிற்காக பரலோகம் ஏற்பாடு செய்திருக்கிறவைகளின் மேல் அவமரியா தையைக் கொண்டுவருகிறவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்து கிறபடியால், (எபி. 6) அனைத்து பாவிகளிலும் மிக அதிக குற்றவாளிகளாயிருக்கிறார்கள்.PPTam 759.1