Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    1 - எதற்காக பாவம் அனுமதிக்கப்பட்டது?

    தேவன் அன்பாகவே இருக்கிறார். 1 யோவான் 4:16. அன்பே அவர் இயல்பு; அவர் பிரமாணமும் அன்பே . முன்பு எப்போதும் அப்படித்தான் இருந்தது; இனிமேலும் அப்படியே இருக்கும். அவருடைய வழி நித்திய நடை; அவர் நித்தியவாசி. அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. ஏசா 57:15; ஆப் 3:6; யாக் 1:17.PPTam 7.1

    சிருஷ்டிப்பின் வல்லமை வெளிப்படும் இடமெல்லாம் நித்திய அன்பிற்கு விளக்கமே. தேவனுடைய ஆட்சியில் படைப்பு ஒவ்வொன்றிற்கும் முழுமையான ஆசீர்வாதம் உண்டு.PPTam 7.2

    ‘உம்முடைய கரம் பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகரம் உன்னதமானது. நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம், கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும். கெம்பீரசத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள், கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப் பார்கள். அவர்கள் உம்முடைய நாமத்தில் நாடோறும் களிகூர்ந்து, உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள். நீரே அவர்கள் பலத்தின் மகிமையாயிருக்கிறீர்; கர்த்தரால் எங்கள் கேடகமும், இஸ்ரவேலின் பரிசுத்தரால் எங்களுடைய ராஜாவும் உண்டு’ என்று சங் 9:13-18 சொல்கிறது.PPTam 7.3

    நன்மைக்கும் தீமைக்குமிடையே மாபெரும் போராட்டம் முதலில் பரலோகத்தில் துவங்கினதிலிருந்து, முடிவாக மீறுதல் அகற்றப்பட்டு, பாவம் முற்றிலும் நீக்கப்படும் வரை நடப்பவை எல்லாம் தேவனுடைய மாறாத அன்பின் செயல்விளக்கமாகவே இருக்கிறது.PPTam 8.1

    நன்மை செய்யும் வேலையை சர்வலோகத்தின் அதிபதி தனியாகச் செய்யவில்லை. அவரது நோக்கங்களைப் புரிந்து கொண்டு, சிருஷ்டிகளுக்கு சந்தோஷம் தருவதில் அவர் பெறும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் நபர் ஒருவர் அவருடன் இருந் தார். ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத் திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார் யோவான் 1:1,2. அவர் வார்த்தையாகிய கிறிஸ்து ; தேவனுக்கு ஒரே பேறானவர்; தேவனுடைய அனைத்து ஆலோசனைகளிலும் நோக்கங்களிலும் பங்குபெறக்கூடியவர். இயல்பிலும் குணத்திலும் நோக்கத்திலும் நித்திய பிதாவைப் போன்றவர். அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப் படும் ஏசாயா 9:6. அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது. மீகா 5:2. தேவனுடைய குமாரன் தம்மைக் குறித்து, கர்த்தர் தமது கிரியைகளுக்கு முன் பூர்வ முதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார். பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட் டேன். பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும், நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன், நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந் தேன்’ என்கிறார். நீதி 8:22- 30.PPTam 8.2

    அனைத்துப் பரலோக ஜீவிகளின் படைப்பிலும் பிதா தமது குமாரன் மூலம் செயல்பட்டார். அவருக்குள் சகலமும் சிருஷ்டிக் கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக் கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. கொலோ 1:16. தூதர்கள் தேவ ஊழியக்காரர்கள்; அவருடைய ஒளியால் பிரகாசிக்கிறார்கள்; அவருடைய சித்தத்தை நடப்பிக்க விரைந்து செல்கிறார்கள். ஆனால் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட குமாரனோ பிதாவுடைய தன்மையின் சொரூபம்; மகிமையின் பிரகாசம்; சகலத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவர்; இவர்களெல்லாரிலும் மேலானவர். எபிரெயர் 1:3. உயர்ந்த மகிமையுள்ள சிங்காசனம் ஆதி முதல் அவருடைய பரிசுத்த ஸ்தானம். எரேமியா 17:12. அவருடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோல் . எபி. 1:8. மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது சங் 96:6. கிருபையும் சத்தியமும் அவருக்கு முன்பாக நடக்கும். சங் 89:4.PPTam 8.3

    அன்பின் பிரமாணமே தேவனுடைய அரசாங்கத்தின் அஸ்தி பாரம். பிரமாணத்தின் நீதியான கொள்கைகளோடு முழுவதும் இசைந்திருப்பதைச் சார்ந்தே அறிவு ஜீவிகள் அனைவரின் மகிழ்ச்சியும் இருக்கிறது. தேவன் தமது சிருஷ்டிகளிடம் அன்பின் சேவையை எதிர்பார்க்கிறார்; அவருடைய குணத்தைப் புரிந்து கொண்டதால் உண்டாகும் அன்பின் சேவையை விரும்புகிறார். பலவந்தமான கீழ்ப்படிதலில் அவருக்கு மகிழ்ச்சி இல்லை. விருப்பத்தோடு தமக்கு சேவை செய்ய அனைவருக்கும் உரிமை தருகிறார்.PPTam 9.1

    சிருஷ்டிகள் அவருடைய அன்பை ஒப்புக்கொண்டவரை தேவனுடைய சர்வலோகத்திலும் பரிபூரண இசைவு இருந்தது. தங்கள் சிருஷ்டிகரின் நோக்கத்தை நிறைவேற்றுவது பரலோகச் சேனைக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய மகிமையைப் பிரதிபலிப்பதும், அவருடைய துதியைச் சொல்வதும் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தேவன்மேல் அன்பு அவர்களுக்கு முக்கியமாக இருந்தபோது, ஒருவர்மேல் ஒருவர் வைத்திருந்த அன்பில் சுயநலம் இல்லை. பரலோக இணக்கத்தைக் கெடுக்கும் எந்தவித அபஸ்வரமும் இல்லாதிருந்தது. ஆனால் இந்த மகிழ்ச்சியான நிலையின் மேல் ஒரு மாற்றம் வந்தது. தேவன் தமது சிருஷ்டிகளுக்கு வழங்கியிருந்த சுதந்திரத்தை தவறாக பயன் படுத்தின ஒருவன் இருந்தான். கிறிஸ்துவிற்கு அடுத்ததாக இருந்து, தேவனால் மிகவும் கனப்படுத்தப்பட்டு, பரலோகவாசிகளிலேயே மிக உயர்ந்தவல்லமையும் மகிமையும் கொண்டிருந்த அவனிடத்தில் பாவம் ஆரம்பமாயிற்று. லூசிபர் - அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி, காப்பாற்றுகிற கேருபீன்களின் முதன்மையா னவனாக பரிசுத்தமும் தீட்டுப்படாதவனுமாயிருந்தான். அவன் உன்னதமான சிருஷ்டிகரின் சமுகத்தில் நின்றிருந்தான். நித்திய தேவனை சுற்றியிருந்த முடிவில்லாத ஒளிக்கற்றைகள் அவன் மேல் தங்கின. மனுபுத்திரனே, நீ தீரு ராஜாவைக் குறித்துப் புலம்பி, அவனை நோக்கிகர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென் றால், நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம், நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன். நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்,... சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது;PPTam 9.2

    நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம் பண்ணுப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன், அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய். நீ சிருஷ்டிக்கப் பட்ட நாள் துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டது மட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய். எசே.28:12-15.PPTam 10.1

    சுயத்தை உயர்த்தும் ஆசையில் கொஞ்சம் கொஞ்சமாக லூசிபர் திளைக்க ஆரம்பித்தான். வேதவாக்கியம். உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய், (எசேக்கியேல் 28:17) என்கிறது தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன், உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே (ஏசாயா 14:13,14) என்று சொல்லுகிறது. அவனுடைய மகிமையெல்லாம் தேவன் தந்தது; இந்த வல்லமையான தூதன் அதை தன்னோடு தொடர்புடையதாக எண் ணினான். பரலோகச் சேனைக்கு மேலாகக் கனம் பெற்றிருந்தான்; ஆனாலும், தனது நிலையில் அவனுக்குத் திருப்தி இல்லை . சிருஷ்டிகருக்கு மட்டுமே உரிய மதிப்பை இச்சித்தான். அனைத்து சிருஷ்டிகளின் பாசத்திலும் விசுவாசத்திலும் தேவனை உயர் வானவராக வைக்கவகை தேடுவதற்குப்பதிலாக, அவர்களுடைய சேவையையும் விசுவாசத்தையும் தனக்கு ஆதாயப்படுத்திக்கொள்ளுவது அவனுடைய முயற்சியாயிற்று. நித்திய பிதா தமது குமாரன் மேல் வைத்திருந்த மகிமையை இச்சித்து, கிறிஸ்துவிற்கு மட்டுமே உரித்தான வல்லமையை இந்த தூதர்களின் தலைவன் விரும்பினான்.PPTam 10.2

    இப்போது பரலோகத்தின் பூரணமான இசைவு குலைந்தது. தனது சிருஷ்டிகருக்குப்பதிலாக தன்னையே சேவிக்கிற லூசிபரின் மனநிலை தேவனுடைய மகிமையே உயர்ந்தது என்று எண்ணியிருந்தவர்களால் கவனிக்கப்பட்ட போது ஒரு பய உணர்வை உண்டாக்கியது. தேவகுமாரன் சிருஷ்டிகருடைய மேன்மையையும் நற்குணத்தையும் நீதியையும் அவருடைய பிரமாணத்தின் புனிதத்தையும் மாறாத தன்மையையும் அவன் முன்பாக எடுத்துக் காண் பித்தார். தேவன் தாமே பரலோகத்தின் ஒழுங்குமுறையை ஸ்தா பித்திருக்கிறார்; அதிலிருந்து விலகுவதினால் லூசிபர் தனது சிருஷ்டிகரை கனவீனப்படுத்தி, தன்மீது அழிவைக் கொண்டு வரு வான் என்று கூறினார். எல்லையில்லாத அன்புடனும் கிருபை யுடனும் கொடுக்கப்பட்ட எச்சரிப்பு எதிர்க்கிற ஆவியையே தூண்டிவிட்டது. கிறிஸ்துவின் மேலிருந்த பொறாமை தன்னை மேற்கொள்ள அனுமதித்து, லூசிபர் அதிக தீர்மானமுள்ளவனா னான்.PPTam 10.3

    தேவகுமாரனுடைய மேன்மையை சர்ச்சைக்குள்ளாக்கி, இப்படியாக சிருஷ்டிகருடைய ஞானத்தையும் அன்பையும் கண்டனத்துக்குள்ளாக்குவது இந்த தூதர்களின் தலைவனுடைய நோக்கமாகியது. இதைச் செய்யும் படி கிறிஸ்து விற்கு அடுத்தபடியாக தேவனுடைய சேனைகளில் முதன்மையாயிருந்த அந்த சாதுரிய மனதின் வல்லமைகளை அவன் வளைத்துக் கொண்டுவரவிருந்தான். ஆனால் தமது சிருஷ்டிகளின் சுயாதீனத்தை விரும்பின் தேவன், மீறுதலை நியாயப்படுத்திக்காட்டும் மலைக்க வைக்கிற நயவுரைக்கு எவரையும் பாதுகாப்பில்லாமல் வைக்க வில்லை. இந்த போட்டி வெளியாகுமுன் யாருடைய ஞானமும் நன்மையும் அவர்கள் அனைவருடைய அனைத்து மகிழ்ச்சிக்கும் ஊற்றாயிருக்கிறதோ, அவருடைய சித்தத்தைக் குறித்த தெளிவான வெளிப்பாட்டைப் பெறவேண்டும்.PPTam 11.1

    தமது குமாரனுடைய மெய்யான நிலையை முன்வைக்கவும், அனைத்து சிருஷ்டிகளுடனும் தாம் கொண்டிருக்கிற உறவை காண்பிக்கவும் ஏதுவாக சர்வலோகத்தின் இராஜா பரலோக சேனைகளை தம்முன் கூட்டினார். தேவகுமாரன் பிதாவினுடைய சிங்காசனத்தை பகிர்ந்து கொண்டிருந்தார். நித்தியமும் தமக்குத்தாமே ஜீவனையும் உடையவருடைய மகிமை இருவரையும் சுற்றியிருந்தது. அந்த சிங்காசனத்தைச் சுற்றி எண்ணக்கூடாத பெருந்திரளான கூட்டத்தில், பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவு மிருந்த (வெளி 5:11), மிகவும் உயர்த்தப்பட்டிருந்த, பணிவிடைக் காரர்களாகவும் பிரஜைகளாகவுமிருந்த தூதர்கள், தேவனுடைய சமுகத்திலிருந்து தங்கள் மேல் விழுந்த ஒளியினால் மகிழ்ச்சி யடைந்தவர்களாக கூடினார்கள். கூடி வந்த பரலோகவாசிகளுக்கு முன்பாக, தேவனுடைய ஒரேபேரானவராகிய கிறிஸ்துமாத்திரமே தமது நோக்கங்களுக்குள் முழுமையாக நுழையமுடியும் என்றும், தமது சித்தத்தின் வல்லமையான ஆலோசனைகளை நடப்பிப்பது அவரிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்றும் அரசன் அறிவித் தார். பரலோக சேனை முழுவதையும் சிருஷ்டித்ததில் தேவகுமாரன் பிதாவினுடைய சித்தத்தை நடப்பித்தார். அவருக்கு தேவனைப் போலவே கனமும் விசுவாசமும் உரித்தாயிருக்கிறது. பூமியையும் அதன் குடிகளையும் சிருஷ்டிப்பதில், கிறிஸ்து இன்னமும் தெய்வீக வல்லமையை செயல்படுத்தவிருந்தார். இவையெல்லாவற்றிலும் தேவனுடைய திட்டத்திற்கு எதிராக, வல்லமையையோ உயர் வையோ தனக்காகத் தேடாமல், பிதாவினுடைய மகிமையை உயர்த்தி, அன்பும் நன்மையும் உள்ள அவருடைய நோக்கங்களை அவர் செயல்படுத்துவார்.PPTam 11.2

    கிறிஸ்துவின் மேலாதிக்கத்தை தூதர்கள் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு, அவர் முன் விழுந்து, தங்களுடைய அன்பையும் வணக்கத்தையும் ஊற்றினார்கள். லூசிபரும் அவர்களோடு சே ர்ந்து வணங்கினான். ஆனால் அவனுடைய இருதயத்தில் ஒரு அந்நியமான பயங்கரமான போராட்டம் இருந்தது. வெறுப்பிற்கும் பொறாமைக்கும் எதிராக சத்தியமும் நீதியும் உண்மையும் போரா டியது. பரிசுத்த தூதர்களின் செல்வாக்கு சற்று நேரம் அவனை அவர்களோடு கொண்டு சென்றதைப்போன்று இருந்தது. இரம் மியமான இசையில் துதியின் கீதங்கள் உயர எழும்பி, மகிழ்ச்சியான ஆயிரம் குரல்களால் உயர்ந்த போது, தீமையின் ஆவி அழிந்து போனதைப்போன்று தோன்றியது. சொல்லமுடியாத அன்பு அவனுடைய முழு சரீரத்தையும் சிலிர்க்கச் செய்தது. தொழுது கொண்டிருந்த பாவமில்லாதவர்களோடு இசைந்து பிதாவின் மேலும் குமாரன் மேலும் இருந்த அன்பினால் அவனுடைய ஆத்துமாவும் சென்றது. ஆனால் மீண்டும் தனது சொந்த மகிமை யைக் குறித்த பெருமையினால் அவன் நிரப்பப்பட்டான். மேலாதிக் கத்திற்கான அவனுடைய விருப்பம் திரும்பியது. கிறிஸ்துவின் மேல் இருந்த வெறுப்பு இன்னும் ஒருமுறை திளைக்கப்பட்டது. லூசிபரின் மேல் வைக்கப்பட்டிருந்த உயர்ந்த கனம் தேவனுடைய விசேஷ அன்பளிப்பாக போற்றப்படவில்லை. எனவே தன்னை சிருஷ்டித்தவருக்கு அது எந்த நன்றியையும் கொண்டுவரவில்லை. தனது பிரகாசத்தைக் குறித்தும் உயர்வைக் குறித்தும் மேன்மை பாராட்டி, தேவனுக்குச் சமமாயிருக்க அவன் ஆசைப்பட்டான். அவன் நேசிக்கப்பட்டவனும், பரலோக சேனையால் கனப்படுத்தப் பட்டவனுமாயிருந்தான். அவனுடைய கட்டளைகளை செயல்படுத் துவதில் தூதர்கள் விருப்பத்தோடிருந்தனர். அவர்கள் அனைவரையும் விட அவன் ஞானத்தாலும் மகிமையாலும் போர்த்தப்பட்டிருந்தான். என்றாலும், தேவகுமாரன் அவனுக்கு மேலாக, பிதாவுடைய வல்லமையும் அதிகாரமும் கொண்ட ஒருவராக உயர்த்தப்பட்டிருந்தார். லூசிபர் பிதாவினுடைய நோக்கங்களில் நுழையக்கூடாமலிருந்த போது, குமாரன் பிதாவினுடைய ஆலோசனைகளில் பங்கு பெற்றிருந்தார். ஏன் கிறிஸ்து மேலாதிக்கம் பெற வேண்டும்? என்று இந்த வல்லமையான தூதன் வினா எழுப்பினான். ஏன் அவர் லூசிபருக்கு மேலாக கனப்படுத்தப்பட வேண்டும்?PPTam 12.1

    பிதாவினுடைய சமுகத்திலிருந்த தன் இடத்தைவிட்டு, தூதர்களுக்கு இடையே அதிருப்தியின் ஆவியை பரப்பும்படியாக லூசிபர் சென்றான். மர்மமான இரகசியத்தோடு அவன் கிரியை செய்தான். தேவனுக்கு பயபக்தியைக் காண்பிக்கும் தோற்றத்தில் தனது உண்மையான நோக்கத்தை அவன் சிலகாலம் மறைத்திருந் தான். உலகக் குடிகளுக்கு பிரமாணங்கள் அவசியமாயிருக்கலாம், என்றாலும், மிக அதிகமாக உயர்த்தப்பட்டிருப்பதால் தூதர்களுக்கு அப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் அவசியமில்லை எனவும், அவர் களுடைய சொந்த ஞானமே அவர்களுக்குப் போதுமான வழிகாட்டியாக இருக்கும் எனவும் கூறி, பரலோகவாசிகளை ஆட்சி செய்த பிரமாணங்களைக்குறித்த சந்தேகங்களை கொஞ்சம் கொஞ்சமாக உட்புகுத்தத் துவங்கினான். அவர்கள் தேவனுக்கு கனவீனத்தைக் கொண்டு வருகிறவர்கள் அல்ல என்றும், அவர்களுடைய அனைத்து நினைவுகளும் பரிசுத்தமாயிருக்கின்றன என்றும், தேவனால் எப்படி தவறு செய்யக்கூடாதோ, அதேபோல் தவறு செய்வது அவர்களுக்கும் கூடாத ஒன்று என்றும் கூறினான். பிதாவுக்கு இணையாக தேவகுமாரன் உயர்த்தப்படுவது, கனத்திற்கும் பயபக்திக்கும் தானும் தகுதிப்படுத்தப்பட்டிருக்கிறேன் என்று உரிமை பாராட்டின் லூசிபருக்கு இழைக்கப்படும் அநீதி என்று எடுத்துக்காட்டப்பட்டது. இந்த தூதர்களின் அதிபதி அவனுடைய உண்மையான உயர்த்தப்பட்ட பெறக்கூடுமானால், முழு பரலோக சேனைக்கும் மிகப்பெரிய நன்மை உண்டாகும், ஏனெனில் அனைவருக்கும் சுதந்திரத்தைப் பெற்றுத்தருவதுதான் அவனுடைய நோக்கம்; ஆனால் இப்பொழுது இதுவரையிலும் அவர்கள் அனுபவித்து வந்த சுதந்திரமும் முடிவுக்கு வந்திருக்கிறது; ஏனெனில் ஒரு சர்வாதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார்; அவருடைய அதிகாரத்திற்கு அனைவரும் பணியவேண்டும், இப் படிப்பட்ட தந்திரமான வஞ்சகங்கள் தான் லூசிபரின் உபாயங்களினால் பரலோக பிராகாரங்களில் வேகமாக பரவிக்கொண்டிருந்தது.PPTam 13.1

    கிறிஸ்துவின் நிலையிலோ அல்லது அதிகாரத்திலோ எந்தவித மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. லூசிபரின் பொறாமையும் தவறான காட்டுதலும், தான் கிறிஸ்துவிற்கு சமமாக இருப்பதாக அவன் பாராட்டின் உரிமையும் தான் தேவகுமாரனுடைய மெய்யான நிலையை எடுத்துச் சொல்லும் வார்த்தைகளை அவசியமாக்கிற்று. அது ஆதியிலிருந்தே அவ்வாறு இருந்தது. என்றாலும், அநேக தூதர்கள் லூசிபரின் வஞ்சகத்தினால் குருடாகிப்போனார்கள்.PPTam 14.1

    தனது கட்டளைக்குக் கீழிருந்த பரிசுத்தவான்கள் தன்மீது வைத்திருந்த அன்பையும் விசுவாசத்தையும் சாதகமாக்கிக்கொண்டு, தனது சொந்த அவிசுவாசத்தையும் அதிருப்தியையும் அவர்களுடைய மனங்களில் மிக தந்திரமாக அவன் நிலைநிறுத்தினான். அதனால் அவனுடைய வேலை பகுத்துணரப்படாமற்போயிற்று. பிரிவினையும் அதிருப்தியும் உண்டாக்குவதற்கேதுவாக தேவ னுடைய நோக்கங்களை சிதைத்து, அவைகளுக்கு தவறான விளக் கங்கொடுத்து, தவறான வெளிச்சத்தில் அவைகளை வழங்கினான். தங்களுடைய உணர்வுகளுக்கு வார்த்தைகள் கொடுக்கும்படியாக தன்னைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களை அவன் தந்திரமாக நடத்தினான். பின்னர் அவனுடைய நோக்கங்களுக்கு பயன்படும் நேரங்களில், தேவனுடைய அரசாங்கத்துடன் தூதர்கள் நல் இணக்கத்தோடு இல்லை என்பதற்குச் சான்றாக, அந்த வார்த்தைகள் திரும்ப அவனால் உபயோகிக்கப்பட்டது. தான் தேவனுக்குப் பூரண விசுவாசத்தோடு இருப்பதாகக் கூறிக்கொண்டிருந்த அதே நேரம், தெய்வீக அரசாங்கம் உறுதியாவதற்கேதுவாக பரலோக ஒழுங்கிலும் பிரமாணங்களிலும் மாற்றங்கள் அவசியம் என்று வற்புறுத்தினான். இவ்வாறு, தேவனுடைய பிரமாணங்கள் மேல் எதிர்ப்பை ஊக்குவிக்கவும் தனக்குக் கீழிருந்த தூதர்களின் மனங்களிற்குள்ளாக தனது சொந்த வெறுப்பை பதிக்கவும் வேலை செய்து கொண்டிருந்த அதே நேரம், அதிருப்தியை நீக்கவும் அதிருப்தியடைந்த தூதர்களை பரலோக ஒழுங்கிற்குத் திரும்பக் கொண்டு வரவும் மேம்போக்காகத் தேடிக்கொண்டிருந்தான். விரோதத்தையும் மீறுதலையும் இரகசியமாக தூண்டிக்கொண்டிருந்த அதே நேரம், முழுமையான தந்திரத்தோடு, விசுவாசத்தை மேம்படுத்துவதும் பூரண இணக்கத்தையும் சமாதானத்தையும் பாதுகாப்பதும்தான் தனது நோக்கம் என்பது போலக் காணச் செய்தான்.PPTam 14.2

    இவ்வாறு தூண்டப்பட்ட அதிருப்தியின் ஆவி தனது தீங்கின் வேலையைச் செய்துகொண்டிருந்தது. வெளிப்படையான கலகம் உண்டாகாதபோதும், உணர்வுகளின் பிரிவு தூதர்களின் நடுவே புலப்படாமல் வளர்ந்தது. தேவனுடைய அரசாங்கத்துக்கு எதிரான லூசிபரின் அவதூறுகளை சாதகமாகப் பார்த்த சிலர் அங்கே இருந்தார்கள். இதற்கு முன்புவரை தேவன் ஸ்தாபித்திருந்த ஒழுங்கோடு அவர்கள் பூரணமாக இணங்கியிருந்தபோதிலும், அவருடைய ஆராய்ந்து முடியாத ஆலோசனைகளுக்குள் நுழைய முடியாத காரணத்தினால் இப்போது முறுமுறுத்து, சந்தோஷமின்றி இருந்தனர். அவர்கள் கிறிஸ்துவை உயர்த்தும் அவரது குறிக் கோளில் அதிருப்தியடைந்தனர். லூசிபர் கோரின் தேவனுடைய குமாரனுக்கு இணையான அதிகாரத்தை ஆதரிக்க இவர்கள் ஆயத்தமாக இருந்தனர். ஆனால் உண்மையும் விசுவாசமுமாக இருந்த தூதர்கள், தெய்வீக சட்டத்தின் ஞானத்தையும் நீதியையும் பராமரித்து, அதிருப்தியடைந்தவர்களை தேவனுடைய சித்தத்திற்கு மீண்டும் கொண்டுவரபிரயத்தனப்பட்டனர். கிறிஸ்து தேவனுடைய குமாரனாக இருந்தார். தூதர்கள் படைக்கப்படுமுன்பே அவர் பிதாவோடு ஒருவராக இருந்தார். அவர் எப்போதும் பிதாவினுடைய வலதுபாரிசத்தில் நின்றிருந்தார். நன்மை பயக்கும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் வந்த அனைவருக்குமான ஆசீர்வாதங்களால் நிரம்பியிருந்த அவருடைய மேலாண்மை இதுவரை கேள்வி கேட்கப்படவில்லை . பரலோக இணக்கம் ஒரு போதும் குறுக்கிடப் படவில்லை. இப்போது ஏன் இந்த முரண்பாடு? இந்த முரண்பாட்டிலிருந்து பயங்கரமான விளைவுகளையே விசுவாசமுள்ள தூதர்களால் காண முடிந்தது . ஊக்கமான மன்றாட்டுகளோடு, தங்கள் நோக்கங்களை கைவிட்டு தேவனுடைய அரசாங்கத்துக்கு நம்பகமாக இருப்பதன் வழியாக அவருக்கு உண்மையானவர் களென்று காண்பிக்கும்படி அதிருப்தியடைந்தவர்களுக்கு அவர்கள் ஆலோசனை கூறினார்கள்.PPTam 14.3

    மிகுந்த கிருபையினால் தம்முடைய தெய்வீகக் குணத்தின்படி தேவன் லூசிபரிடம் அதிக காலம் பொறுமையாயிருந்தார். முறுமுறுப்பு அதிருப்தி ஆகியவைகளின் ஆவி இதுவரை பர லோகத்தில் ஒருபோதும் அறியப்படாதிருந்தது. இது ஒரு புதிய காரியமாக, அபூர்வமான, இரகசியமான, விளக்கக் கூடாத காரியமாக இருந்தது. லூசிபர்தானும் தனது உணர்வுகளின் மெய்யான இயல்பை முதலில் அறியாதிருந்தான். சில காலம் அவன் மனதின் எண்ணங்களையும் செய்கைகளையும் வெளிக்காட்ட பயந்திருந்தான். என்றாலும், அவைகளை அவன் நிராகரிக்க வில்லை. தான் எங்கே அலைந்து கொண்டிருக்கிறோம் என்பதை அவன் காணவில்லை. எல்லையில்லாத அன்பும் ஞானமும் மட்டுமே வடிவமைக்கக்கூடிய முயற்சிகள் அவனுக்கு அவனுடைய தவறை உணர்த்தும் படியாக எடுக்கப்பட்டன. அவனுடைய அதிருப்தி காரணமில்லாதது என்று நிரூபிக்கப்பட்டது. கலகத்தில் தொடர்ந்து நிலைப்பதன் விளைவு என்னவாயிருக்கும் என்பதையும் காண நடத்தப்பட்டான். தான் தவறில் இருப்பதை லூசிபர் நம் பினான். கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார் (சங்கீதம் 145:17) என்றும், பரலோகப் பிரமாணங்கள் நீதியானவைகள் என்றும் கண்டான். அவைகளை அவ்வாறாகவே பரலோகம் முழுவதற்கும் முன்பாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதையும் அவன் கண்டான். அவன் அதைச் செய்திருந்தால், தன்னைக் காப்பாற்றி, அநேக தூதர்களையும் காப்பாற்றியிருந்திருப்பான். தேவன்மேல் கொண்டிருந்த பற்றை இந்த நேரத்தில் அவன் முற்றிலும் தள்ளியிருக்கவில்லை. காப்பாற்றுகிற கேரூபின் என்கிற தனது பதவியை விட்டிருந்தபோதிலும், தேவனிடம் திரும்பி, தனது சிருஷ்டிகருடைய ஞானத்தை ஒப்புக்கொண்டு, தேவனுடைய மாபெரும் திட்டத்தில் தனக்கு நியமிக்கப்படும் இடத்தை நிரப்ப திருப்தியடைந்திருந்தானாகில், அவனுடைய பதவியில் திரும்ப அமர்த்தப்பட்டிருப்பான். கடைசி தீர்மானம் எடுக்கும் வேளை வந்தது. தெய்வீக ஆட்சிக்கு தன்னை முழுமையாக ஒப்படைக்க வேண்டும், அல்லது வெளிப்படையான கலகத்தில் ஈடுபட வேண்டும். திரும்பும் தீர்மானத்திற்கு ஏறக்குறைய வந்துவிட்டான். ஆனால் பெருமை அவனைத் தடுத்துவிட்டது. மிக உயர்வாக கனப்படுத்தப்பட்டிருந்த ஒருவனுக்கு தான் தவறில் இருந்தோம் என்றும் தனது நினைவுகள் தவறாயிருந்தது என்றும் அறிக்கை செய்வதும், அநீதியுள்ளது என்று தான் நிரூபிக்க வேலை செய்து கொண்டிருந்த அதிகாரத்திடம் சரணடைவதும் மிகப்பெரிய தியாக மாக இருந்தது.PPTam 15.1

    இரக்கமுள்ள சிருஷ்டிகர், லூசிபர் மேலும் அவனைப் பின்பற்றுபவர் மேலும் கொண்ட ஆழ்ந்த பரிதாபத்தினால், அவர்கள் அமிழவிருந்த அழிவின் படுகுழியிலிருந்து அவர்களை மீட் டெடுக்க வகைபார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் அவருடைய கிருபை தவறாக அர்த்தப்படுத்தப்பட்டது. தேவனுடைய நீடிய பொறுமையை தனது சொந்த மேன்மையின் சான்றாகவும், சர்வ லோகத்தின் அதிபதி இன்னமும் அவனுடைய நிபந்தனைகளுக்கு இணங்குவார் என்பதற்கான அடையாளமாகவும் அவன் சுட்டிக்காட்டினான். தூதர்கள் தன்னோடு உறுதியாக நிற்பார்களென் றால், தாங்கள் விரும்பின் அனைத்தையும் இன்னும் அடையலாம் என்று அறிவித்தான். தன் வழிமுறையை தொடர்ந்து பாதுகாத்து, தன்னை உண்டாக்கினவருக்கு எதிரான போராட்டத்திற்கு தன்னை முற்றிலும் ஒப்புக்காடுத்தான். இப்படியாகவே வெளிச்சத்தை கொண்டு செல்லும் லூசிபர், தேவனுடைய மகிமையில் பங்கு கொண்டிருந்தவன், அவருடைய சிங்காசனத்திற்கு முன் ஊழி யஞ்செய்தவன், மீறுதலினாலே சாத்தானாக, தேவனுக்கும் பரிசுத்தவான்களுக்கும் சத்துருவாக, அவனுடைய வழிகாட்டுதலுக்கும் பாதுகாப்பிற்கும் கீழ் பரலோகம் வைத்திருந்தவர்களை அழிக்கிற வனாக மாறினான்.PPTam 16.1

    விசுவாசமான தூதர்களின் விண்ணப்பங்களையும் வாதங்களையும் அலட்சியமாக நிராகரித்து, அவர்களை ஏமாற்றப்பட்ட அடிமைகள் என்று அவன் கண்டனம் செய்தான். கிறிஸ்துவிற்குக் காட்டப்பட்ட முக்கியத்துவம் தனக்கும் அனைத்து பரலோக சேனைக்கும் காட்டப்பட்ட அநீதி என்று அறிவித்து, தனது மற்றும் அவர்களுடைய உரிமைகளில் நுழைவதை தான் இனிமேல் அனு மதிக்க முடியாது என்று அறிவித்தான். கிறிஸ்துவின் மேலாதிக்கத்தை இனி ஒருபோதும் ஒப்புக்கொள்ளமாட்டான். அவனுக்குக் கொடுக் கப்பட்டிருக்க வேண்டிய கனத்தை உரிமை கோரவும் தன்னை பின் பற்ற விரும்பும் அனைவரையும் ஆட்சி செய்யவும் தீர்மானித்தான். தன் தலைமையின் கீழ் வந்தவர்களுக்கு அனைவரும் சுதந்தரத்தை அனுபவிக்கக்கூடிய புதியதும் மேன்மையானதுமான அரசாங்கத்தை வாக்குப்பண்ணினான். அதிக எண்ணிக்கையிலான தூதர்கள் அவனைத் தங்கள் தலைவனாக ஏற்றுக்கொள்ளும் தங்களது நோக்கத்தை வெளிக்காட்டினார்கள். அவன் வைத்த ஒவ்வாரு அடியும் அவனுடைய முன்னேற்றம் ஒவ்வொன்றும் எவ்வளவு விருப்பமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்கிறதில் பெருமை கொண்டு, தேவனுக்குத்தானே சமமாக ஆவதற்கும், பரலோக சேனை முழுவதும் கீழ்ப்படிவதற்கும் ஏதுவாக அனைத்து தூதர்களையும் தன்பக்கம் வெற்றிகொள்ள நம்பினான்.PPTam 17.1

    அவனையும் அவனுக்காக பரிதபித்தவர்களையும் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும் படி விசுவாசமான தூதர்கள் இன்னமும் வேண்டினார்கள். அவர்களுடைய வல்லமைகளை அகற்றி, அவர்களுடைய தைரியமான மீறுதலை அவர்களை உண்டாக்கின வரால் குறிப்பாகத் தண்டிக்க முடியும். தேவனைப்போலவே பரிசுத்தமாயிருக்கிற தேவனுடைய பிரமாணங்களை எந்தத்தூதனும் எதிர்க்கமுடியாதென்று சொல்லி, மறுப்பதினால் வரவிருக் கும் தவிர்க்கமுடியாத விளைவுகளை அவர்கள் முன்வைத்தார்கள். லூசிபருடைய வஞ்சிக்கும் காரணங்களுக்கு எதிராக தங்களுடைய காதுகளை மூடிக்கொள்ள அனைவரையும் எச்சரித்து, தாமதமின்றி தேவனுடைய சமுகத்தைத் தேடி, அவருடைய ஞானத்தையும் அதிகாரத்தையும் கேள்வி கேட்டதற்காக பாவ அறிக்கை செய்யச் சொல்லி அவனையும் அவன்பின் சென்றவர்களையும் அவர்கள் நிர்பந்தித்தார்கள்.PPTam 17.2

    அநேகர் இந்த ஆலோசனைக்குச் செவிகொடுத்து, தங்களுடைய அதிருப்திக்காக மனம் வருந்தி, பிதா மற்றும் குமாரனுடைய தயவிற்குள் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட விரும்பினார்கள். ஆனால் லூசிபர் மற்றொரு வஞ்சகத்தை ஆயத்தமாக வைத்திருந் தான். தன்னோடு சேர்ந்திருந்த தூதர்கள் திரும்பி வரக்கூடாத தூரத்திற்குச் சென்று விட்டனரெனவும், தனக்கு தெய்வீகப் பிர மாணத்தோடு தொடர்பிருப்பதாகவும், தேவன் மன்னிக்கமாட்டார் என்று தனக்குத் தெரியுமென்றும் இந்த வல்லமையான கலகக்காரன் இப்போது அறிவித்தான். பரலோக அதிகாரத்திற்கு பணிந்து போகும் அனைவரிடமிருந்தும் அவர்களுடைய கனம் பிடுங்கப்பட்டு, அவர்கள் தங்கள் பதவிகளிலிருந்து தாழ்த்தப்படுவார்கள் என்று அறிவித்தான். தன்னைப்பொறுத்தமட்டில், இனி ஒருபோதும் கிறிஸ்துவின் அதிகாரத்தை ஒத்துக்கொள்ளக்கூடாது என்று தீர் மானித்திருக்கிறதாக அறிவித்தான். தனக்கும் தன்பின்னடியார்களுக் கும் மீந்திருக்கிற ஒரே வழி, தங்கள் சுதந்தரத்தை வலியுறுத்தி, மனப்பூர்வமாக அவர்களுக்குக் கொடுக்கப்படாத உரிமைகளை பலவந்தமாக அடைவதுதானென்றும் அறிவித்தான்.PPTam 18.1

    சாத்தானைப் பொறுத்தவரை, அவன் திரும்பக்கூடாத தூரத்திற்குச் சென்று விட்டான் என்பது உண்மையாக இருந்தது. ஆனால் அவனால் குருடாக்கப்பட்டவர்களுக்கு அப்படியில்லை. விசுவாச மான தூதர்களின் ஆலோசனைகளும் விண்ணப்பங்களும் அவர்களுக்கு ஒரு நம்பிக்கையின் கதவைத்திறந்தது. எச்சரிப்புக்குச் செவிகொடுத்திருந்தால், சாத்தானுடைய கண்ணியை உடைத்திருப் பார்கள். ஆனால் அகந்தையும், தங்கள் தலைவன் மேலிருந்த அன்பும், கட்டுப்பாடற்ற சுதந்தரத்தின் மேலிருந்த வாஞ்சையும் மேற்கொள்ளும்படி அனுமதிக்கப்பட்டது. தெய்வீக அன்பு மற்றும் இரக்கத்தின் வேண்டுதல்கள் முடிவாக நிராகரிக்கப்பட்டது.PPTam 18.2

    அதிருப்தியின் ஆவி, கலகச் செயலாக முதிரும் வரைக்கும் தன் வேலையைத் தொடர்ந்து செய்யும்படி சாத்தானை தேவன் அனுமதித்தார், அவைகளின் இயல்பும் தன்மையும் அனைவராலும் பார்க்கப்படுவதற்கேதுவாக அவனுடைய திட்டங்கள் முழுமையாக வேண்டியது அவசியமாயிருந்தது. அபிஷேகம் பண்ணப்பட்ட கேரூபாக, லூசிபர் மிகவும் உயர்த்தப்பட்டிருந்தான். பரலோகவாசி களால் அவன் அதிகமாக நேசிக்கப்பட்டிருந்தான். அவர்கள் மேலிருந்த அவனுடைய செல்வாக்கு பலமாக இருந்தது. தேவ னுடைய அரசாங்கம் பரலோகவாசிகளை மாத்திரமல்ல, அவர் சிருஷ்டித்த அனைத்து உலகங்களையும் உள்ளடக்கியிருந்தது. எனவே, பரலோக தூதர்களைத் தன்னுடன் மீறுதலில் கொண்டு செல்ல முடியுமென்றால் மற்ற அனைத்து உலகங்களையுங்கூட கொண்டு செல்ல முடியும் என்று லூசிபர் முடிவு செய்தான். தனது நோக்கங்களை காப்பதற்காக நயவஞ்சகத்தையும் பொய்யையும் உபயோகித்து, தன் சார்பான வாதங்களை அவன் தந்திரமாக எடுத்துக்காட்டினான். வஞ்சிப்பதற்கான அவனுடைய வல்லமை மிகப் பெரியதாக இருந்தது. பொய்யை வேஷம் ஆடையாகத் தரித்து, ஒரு அனுகூலத்தை சம்பாதித்தான். அவனுடைய செயல் களெல்லாம் மர்மத்தால் மூடப்பட்டிருந்ததால், அவனுடைய செயலின் மெய்யான இயல்பை தூதர்களுக்கு வெளிப்படுத்துவது கடினமாக இருந்தது. முழுமையாக வளரும் வரையில் அதன் மெய்யான தீய இயல்பை காண்பிக்க முடியாதிருந்தது. அவனுடைய அதிருப்தி கலகமாக பார்க்கப்படாது. விசுவாசமான தூதர்களால் கூட அவனுடைய குணத்தை முழுமையாக அறிந்துகொள்ளவோ அல்லது, அவனுடைய வேலை எதற்குக் கொண்டு செல்லும் என் பதைக் காணவோ முடியவில்லை.PPTam 18.3

    லூசிபர் முதலில் தனது சோதனைகளை தன்னை அர்ப்பணிக் காது நடத்தி வந்தான். தன்பக்கத்திற்கு முழுமையாக கொண்டுவரக் கூடாத தூதர்களை பரலோவாசிகளின் மேன்மையில் ஈடுபாடு இல் லாதவர்கள் என்று குற்றஞ்சாட்டினான். தான் செய்து கொண்டிருந்த அதே வேலையை விசுவாசமுள்ள தூதர்கள் மேல் சாட்டினான். தேவனுடைய நோக்கங்கள் குறித்தவைகளை தந்திரமான வாதங்களால் குழப்புவது அவனுடைய கொள்கையாக இருந்தது. எளிமை யாக இருந்த ஒவ்வொன்றையும் மர்மத்தினால் மூடி, தந்திரமான வேறுபாடுகளால் யெகோவாவின் வெளிப்படையான வார்த்தை களின் மேல் சந்தேகத்தை விரித்தான். தெய்வீக அரசாங்கத்தோடு நெருக்கமாக இணைக்கப்பட்டிருந்த அவனுடைய உயர்ந்த பதவி அவனுடைய எடுத்துக்காட்டுகளுக்கு அதிகமான வல்லமையைக் கொடுத்தது.PPTam 19.1

    உண்மையோடும் நீதியோடும் இணைந்து போகிற வழிகளையே தேவனால் பிரயோகிக்க முடியும். தேவனால் உபயோகிக்க முடியாத - புகழாரத்தையும் வஞ்சகத்தையும் சாத்தானால் உபயோகிக்க முடியும். தேவனுடைய வார்த்தைகளை பொய்யாக்கி, தூதர்கள் மேல் சட்டம் போடுவதினால் தேவன் நியாயமுள்ளவரல்ல என்றும், தமது சிருஷ்டிகளிடமிருந்து பணிவையும் கீழ்ப்படிதலையும் வேண்டுகிறதினால் அவர் தம்மை உயர்த்தவே தேடுகிறார் என்றும் வாதாடி, அவருடைய அரசாங்க திட்டங்களை தவறாக எடுத்துக் காட்ட அவன் வகைதேடினான். எனவே, பரலோகவாசிகளுக்கு முன்பாகவும் மற்ற அனைத்து உலகவாசிகளுக்கு முன்பாகவும் தேவனுடைய அரசாட்சி நியாயமானது என்பதற்கும் அவருடைய கட்டளை பூரணமானது என்பதற்கும் செயல் விளக்கம் கொடுப்பது அவசியமாக இருந்தது. சர்வலோகத்தின் நன்மையை மேற்கொண்டுவரவே தான் தேடிக்கொண்டிருப்பதாக சாத்தான் தோன் றச் செய்தான். வஞ்சகனின் உண்மையான குணமும், அவனுடைய மெய்யான நோக்கமும் அனைவராலும் புரிந்து கொள்ளப்பட வேண்டும், தனது துன்மார்க்க வேலைகளினால் தன்னை வெளிக் காட்ட அவனுக்கு காலம் வேண்டும்.PPTam 20.1

    தனது சொந்த நடக்கை பரலோகத்திலே கொண்டு வந்த முரண்பாட்டிற்கான காரணத்தை தேவனுடைய அரசாங்கத்தின் மேல் சாற்றினான். அனைத்து தீமைகளும் தெய்வீக நிர்வாகத்தின் விளைவே என்று அறிவித்தான். யெகோவாவின் பிரமாணங்களை மேம்படுத்துவதே தனது நோக்கம் என்று உரிமை பாராட்டினான். எனவே அவன் வாதிட்ட உரிமைகளின் இயல்பை செயல்விளக் கப்படுத்தவும், தெய்வீக பிரமாணத்தில் தான் கொண்டு வர நினைத்த மாற்றங்களை செயல்படுத்திக் காண்பிக்கவும் தேவன் அவனை அனுமதித்தார். அவனுடைய சொந்த கிரியைகளே அவனை கண்டிக்க வேண்டும். முதலில் இருந்தே, தான் கலகம் செய்யவில்லை என்று அவன் வாதித்துக்கொண்டிருந்தான். ச ர்வலோக மும் வஞ்சகனின் முகத்திரை கிழிய அவனைக் காணவேண்டும்.PPTam 20.2

    பரலோகத்திலிருந்து தள்ளப்பட்ட பின்பும் முடிவில்லாத ஞானமுள்ளவர் சாத்தானை அழிக்கவில்லை. அன்பின் சேவை மாத்திரமே, தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுமாகையால், தமது சிருஷ்டிகளின் பற்றுறுதி அவருடைய நீதியையும் நன்மையையும் குறித்த உணர்வின்மேல் தங்கியிருக்க வேண்டும். பரலோகவாசி களும், மற்ற உலகவாசிகளும் பாவத்தின் தன்மையையோ அல்லது விளைவையோ புரிந்து கொள்ள ஆயத்தமாக இல்லாதிருந்த படியால், சாத்தானின் அழிவில் தேவனுடைய நீதியை கண்டிருக்க முடியாது. அவன் உடனடியாக இல்லாது போயிருந்திருப்பானாகில், சிலர் அன்பினால் அல்லாது, பயத்தினால் தேவனுக்கு ஊழியஞ் செய்திருப்பார்கள். வஞ்சகனின் செல்வாக்கு முழுமையாக அழிக்கப்பட்டிருக்காட்டாது ; கலகத்தின் ஆவி முற்றிலுமாக அழிக் கப்பட்டிருக்க மாட்டாது. தெய்வீக அரசாங்கத்திற்கு எதிரான அவனுடைய குற்றச்சாட்டுகள் அவைகளின் மெய்யான ஒளியில் அனைத்து சிருஷ்டிகளாலும் பார்க்கப்படவும், தேவனுடைய நீதியும் இரக்கமும், அவருடைய பிரமாணத்தின் அசையாத்தன்மையும் அனைத்து கேள்விகளையும் தாண்டி என்றென்றுமாக வைக்கப்படவும், முடிவில்லாத காலங்களிலும் சர்வலோகத்தின் நன்மைக்காக அவன் தனது கொள்கைகளை முழுமையாக விருத்தியாக்க வேண்டும்.PPTam 20.3

    வரக்கூடிய யுகங்கள் அனைத்திலும் சாத்தானுடைய கலகம் சர்வலோகத்திற்கும் ஒரு பாடமாக பாவத்தின் இயல்பிற்கும் பயங்கரமான அதன் விளைவுகளுக்கும் நித்திய சாட்சியாக வேண்டும். சாத்தானின் ஆட்சி செயல்படுத்தப்படுவதும், மனிதர்கள் மேலும் தூதர்கள் மேலும் அது ஏற்படுத்திய பாதிப்பும், தெய்வீக அதி காரத்தை தள்ளிவைப்பதின் கனி என்னவாக இருக்கவேண்டும் என்பதைக் காண்பிக்கும். தேவனுடைய அரசாங்கத்தோடு அவர் உண்டாக்கின் அனைத்து சிருஷ்டிகளின் நன்மையும் கட்டப்பட்டிருக்கிறது என்பதற்கு அது சாட்சி பகரும். இவ்வாறாக, மீறுதலின் இயல்பைக் குறித்து வஞ்சிக்கப்படுதிலிருந்து அவர்களைத் தடுக் கவும், பாவம் செய்வதிலிருந்தும் அதன் தண்டனையை அனுபவிப் பதிலிருந்தும் அவர்களைக் காக்கவும் இந்த பயங்கரமான சோதனையின் வரலாறு பரிசுத்தவான்கள் அனைவருக்கும் நித்திய பாதுகாப்பாக இருக்கவேண்டும்.PPTam 21.1

    பரலோகத்தில் ஆட்சி செய்கிறவர், முடிவை முதலிலேயே காண்கிறவர். அவருக்கு முன் கடந்தகாலத்தின் மற்றும் வருங்காலத் தின் இரகசியங்களெல்லாம் ஒரேவிதமாக விரிக்கப்பட்டிருக்கிறது. பாவம் நடப்பித்த ஆபத்திற்கும் இருளிற்கும் அழிவிற்கும் அப் பால், தமது அன்பின் - ஆசீர்வாதத்தின் சொந்த நோக்கங்கள் நிறைவேறுவதைக் காண்கிறவர். மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது, என்ற போதும் நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம். சங்கீதம் 9:2. இதை விசுவாசமான விசு வாசமற்ற சர்வலோகத்தின் குடிகள் அனைவரும் ஒருநாள் புரிந்து கொள்வார்கள். அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல் லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சாத்தியமுள்ள தேவன், அவர் நீதியும் செம்மையுமானவர் - உபாகமம் 32:4.PPTam 21.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents