Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    19 - சமாதானத் தீர்க்கதரிசி

    ஒரு தீர்க்கதரிசியாக எலிசாவின் ஊழியம், எலியாவின் ஊழி யத்திலிருந்து சில வகைகளில் மாறுபட்டிருந்தது. நியாயத்தீர்ப்பு மற்றும் தண்டனை குறித்த செய்திகள் எலியாவிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தன. ராஜாவையும் மக்களையும் பயமின்றி கடிந்து, தீய வழிகளிலிருந்து திரும்புமாறு அவர்களுக்கு எதிராக அவன் தன் சத்தத்தை உயர்த்தினான். ஆனால், எலிசாவின் ஊழியமோ அதிக சமாதானத்துடன் விளங்கியது. எலியா ஆரம்பித்த வேலையை அவர் கட்டவும், பெலப்படுத்தவும், தேவ வழியை மக்களுக்குப் போதிக்கவும் வேண்டியிருந்தது. அவர் மக்களோடு தனிப்பட்ட விதத்தில் தொடர்பு கொண்டிருந்ததாகவும் தீர்க்கதரிசிகளின் புத் திரர்களுடனே இருந்து வந்ததாகவும், அவர்தம் அற்புதங்களாலும் ஊழியத்தாலும், வியாதி யஸ்தரைக் குணப்படுத்தி, மகிழ்ச்சியைக் கொண்டு வந்ததாகவும் வேதாகமம் அவனைச் சித்தரிக்கிறது.தீஇவ 235.1

    தாழ்மையும் இரக்கமுமான ஆவிகொண்டவன் எலிசா. ஆனா லும், அவன் பெத்தேலுக்குப் போகும் வேளையில் பட்டணத்தி லிருந்துவந்த பக்தியற்றவாலிபர்கள் அவனைக் கேலி செய்தபோது, அவன் நடந்தவிதம், அவனும் கண்டிப்பவனாய் இருந்ததைத் தெரி விக்கிறது. எலியா பரமேறின்தை அந்த வாலிபர்கள் கேள்விப்பட் டிருந்தனர். அந்த உன்னத நிகழ்ச்சியைப் பரியாசமாக, “மொட்டைத் தலையா ஏறிப்போ, மொட்டைத்தலையா ஏறிப்போ” என்றார்கள். அந்த ஏளன வார்த்தைகளைக் கேட்டு, திரும்பிப் பார்த்து, சர்வ வல்லவரின் ஏவுதலினால் அவர்களைச் சபித்தான் தீர்க்கதரிசி. அதைத் தொடர்ந்து பயங்கர நியாயத்தீர்ப்பைக் கட்டளையிட்டார் தேவன். ‘உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டுவந்து, அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் பீறிப்போட்டது. 2 இராஜா 2:23, 24.தீஇவ 235.2

    அந்த ஏளனப் பேச்சை எலிசா கண்டுகொள்ளாமல் விட்டிருந் தால், தீயவர்களின் கேலிக்கும் அவதூறுக்கும் தொடர்ந்து ஆளாகி யிருப்பான். மிகப்பெரும் அழிவிலிருந்து அத்தேசத்தைக் காப் பாற்றவும், அவர்களுக்குப் போதிக்கவும் அச்சமயத்தில் நிய மிக்கப் பட்டிருந்த அவன் ஊழியம் தோற்றுப்போயிருக்கும். அவன் வாழ்க்கை முழுவதும் அவனுக்கு மரியாதையைப் பெற்றுத் தர அந்த ஒரு சம்பவமே போதுமானதாயிருந்தது. ஐம்பது வருடங் கள் பெத்தேலுக்குள் வருவதும் போவதுமாய் இருந்தான். தேசத் தில் அங்குமிங்கும், நகரம் நகரமாகவும் சென்றான். சோம்பேறி களும் முரடரும் ஒழுக்கமற்றவருமான வாலிபக்கும்பலைக் கடந்து சென்றான். ஆனால், அவனை எவரும் கேலிபண்ணவும் இல்லை; உன்னதமானவரின் தீர்க்கதரிசி என்ற அவனுடைய தகுதியை அற்ப மாக எண்ணவும் இல்லை.தீஇவ 236.1

    இரக்கம் காட்டுவதில் எல்லை வேண்டும். அதிகாரம் செலுத்து வதில் உறுதியான கண்டிப்பு வேண்டும். அல்லது அநேகர் அதனை ஏளனமாக, பரியாசமாகக் கருதுவார்கள். நயமாகப் பேசி, தண்டிக் காமல் இருப்பதைக் கனிவான செயல் என்றழைத்து, வாலிபப் பிள்ளைகளிடம் பெற்றோரும் பாதுகாவலர்களும் அவ்வாறு நடந்துகொள்வது அவர்களுக்கு இழைக்கும் மோசமான தீமை களில் ஒன்றாகும். உறுதியான தீர்மானமும், நன்மைக்கேதுவான நிபந்தனைகளும் ஒவ்வொரு குடும்பத்திலும் அவசியமாகும்.தீஇவ 236.2

    எலிசாவைக் கேலி செய்த வாலிபர்களிடம் பய பக்தி காணப் படவில்லை. பிள்ளைகளிடத்தில் மிகக்கவனத்துடன் வளர்க்கப்பட வேண்டிய ஓர் இனிய பண்பு அது. தேவனிடம் மெய்ப்பக்தி காட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் போதிக்க வேண்டும். அவர் நாமத்தை இழிவாகவோ, முன்னறிவின்றியோ ஒருபோதும் பேசிவிடக் கூடாது. தூதர்கள் தங்கள் முகங்களை மூடிக்கொண்டுதான் தேவ நாமத்தை உச்சரிக்கிறார்கள். அப்படியானால், விழுந்து போனவர் களும் பாவிகளுமான நாம் எத்துனை பயபக்தியோடு அதனை உச் சரிக்க வேண்டும்!தீஇவ 236.3

    தேவனுக்காகப் பேசவும் செயல்படவும் அழைக்கப்படுகிற அவருடைய பிரதிநிதிகளான ஊழியர்கள், போதகர்கள், பெற் றோர்களிடம் பயபக்தியோடு நடந்துகொள்ளவேண்டும். அவர் களுக்கு மரியாதை காட்டும்போது தேவன் கனப்படுகிறார்.தீஇவ 237.1

    எல்லாராலும் பேணி வளர்க்கப் பட வேண்டிய ஆவியின் இனிய பண்புகளில் மரியாதைப் பண்பும் ஒன்றாகும். அது நம் இயல்புகளை மிருதுவாக்கும் வல்லமையுடையது. அது இல்லை யானால் நாம் கரடுமுரடான இயல்பை வளர்க்க நேரிடும். கிறிஸ்து வைப் பின்பற்றுவதாக சொல்லிக்கொண்டே முரட்டுத்தனமுடன் மரியாதையற்றுக் காணப்படுகிறவர்கள் இயேசுவிடமிருந்து கற்றுக் கொள்ளாத வர்களாய் இருக்கிறார்கள். அவர்களிடம் சந்தேகத் திற்கு இடமின்றி நேர்மை இருக்கலாம்; அல்லது, கேள்விக்கு இடமற்ற நீதி இருக்கலாம். ஆனால், இரக்கமும் மரியாதைப் பண்பும் இல்லாத இடத்தை நேர்மையாலும் நீதியாலும் ஈடுசெய்ய முடியாது.தீஇவ 237.2

    இஸ்ரவேலிலிருந்த அநேகருடைய வாழ்வில் பலத்ததொரு தாக்கத்தை ஏற்படுத்தும்படி எலிசாவிடம் காணப்பட்ட இரக்கக் குணமானது, சூனேம் ஊரில் வசித்துவந்த ஒரு குடும்பத்தோடு அவன் நட்போடு பழகின சம்பவத்திலும் வெளிப்படுகிறது. ராஜ் யம் முழுவதிலும் அவன் அங்குமிங்குமாகச் சென்றுவந்த நாட் களில் ஒரு நாள் எலிசா சூனே முக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம் பொருந்திய ஒரு ஸ்திரீ அவனிடம் போஜனம் பண்ணும்படி வருந்திக் கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பயணப்பட்டு வருகிறபோதெல்லாம் போஜனம் பண்ணும் படி அங்கே வந்து தங்குவான். ‘தேவனுடைய மனுஷனாகிய எலிசா ‘பரிசுத்தவான்’ என்று அந்த வீட்டு எஜமானி கண்டாள். எனவே அவள் தன் கணவனிடம், ‘’நாம் மெத்தையின்மேல் ஒரு சிறிய அறைவீட்டைக் கட்டி, அதில் அவனுக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவன் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம்’ என்றாள். அதிக அமைதலோடு காணப்பட்ட அந்த வீட்டிற்கு எலிசா அடிக்கடி வந்து தங்குவதுண்டு. அந்தப் பெண்ணின் இரக்கக் குணத்தை, தேவனும் கண்டுகொள்ளாமல் விடவில்லை. அவளுக்குக் குழந்தை இல்லை. இப்பொழுதும் அவளுக்கு ஒரு குமாரனை ஈவாகக் கொடுத்து, அவளுடைய விருந்தோம்பும் பண்புக்குப் பலனளித்தார் தேவன்.தீஇவ 237.3

    வருடங்கள் கடந்தன. வயலில் அறுவடை செய்கிறவர்களைப் பார்வையிடுமளவிற்கு அக்குழந்தை வளர்ந்தது. ஒருநாள், உஷ் ணத்தினால் தாக்குண்ட அவன், ‘’தன் தகப்பனைப் பார்த்து, என் தலை நோகிறது. என் தலைநோகிறது” என்றான். அவனை அவன் தாயிடம் கொண்டுசெல்லுமாறு ஒருவனுக்குக் கட்டளையிட்டான் தகப்பன். ‘அவனை எடுத்து, அவன் தாயினிடத்தில் கொண்டுபோன போது, அவன் மத்தியானமட்டும் அவள் மடியில் இருந்து செத்துப் போனான். அப்பொழுது அவள் ஏறிப்போய், அவனை தேவனு டைய மனுஷனின் கட்டிலின் மேல் வைத்து, அவன் வைக்கப்பட்ட அறையின் கதவைப் பூட்டிக்கொண்டுபோனாள்’.தீஇவ 238.1

    வேதனையடைந்து, எலிசாவிடம் போய் உதவிகேட்கத் தீர் மானித்தாள் சூனேமியாள். அச்சமயத்தில் கர்மேல் மலையில் இருந் தான் தீர்க்கதரிசி. அவள் தன் வேலைக்காரனை அழைத்துக்கொண்டு, உடனே புறப்பட்டாள். “தேவனுடைய மனுஷன் தூரத்திலே அவள் வரக்கண்டு, தன் வேலைக்காரனாகிய கேயாசியைப் பார்த்து, அதோ சூனேமியாள் வருகிறாள். நீ அவளுக்கு எதிர்கொண்டு ஓடி, ‘’நீ சுகமாயிருக்கிறாயா? உன் புருஷன் சுகமாயிருக்கிறானா? அந்தப் பிள்ளை சுகமாயிருக்கிறதா என்று அவளிடத்தில் கேள்” என்றான். சொன்னது போலவே வேலைக்காரனும் செய்தான். ஆனாலும், எலிசாவின் பக்கம் வரும் வரையிலும் தன் துக்கத்திற்கான காரணத்தை அந்தத் தாய் வெளிப்படுத்தவில்லை. அவள் தன் மகனை இழந்ததைக் கேள்விப்பட்டதும், கேயாசியிடம் எலிசா, ‘’நீ உன் இடையைக் கட்டிக்கொண்டு, என் தடியை உன் கையில் பிடித்துக்கொண்டு, வழி யில் எவனைச் சந்தித்தாலும் அவனை வினவாமலும், உன்னை எவன் வினவினாலும் அவனுக்கு மறு மொழி சொல்லாமலும் போய், என் தடியை அந்தப் பிள்ளையின் முகத்தின்மேல் வை” என்று சொன்னான்.தீஇவ 238.2

    ஆனால், எலிசா தன்னோடு வரும்வரையிலும் அந்தத் தாய் திருப்தியடைவில்லை. அவளோ, ‘’நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன்” என்றாள். அப்பொழுது அவன் எழுந்திருந்து அவள் பின்னே போனான். கேயாசி அவர்களுக்கு முன்னே போய், அந்தத் தடியைப் பிள்ளையின் முகத்தின்மேல் வைத்தான்; ஆனா லும் சத்தமும் இல்லை, உணர்ச்சியும் இல்லை; ஆகையால் அவன் திரும்பி அவனுக்கு எதிர்கொண்டு வந்து, ‘’பிள்ளை விழிக்க வில்லை” என்று அவனுக்கு அறிவித்தான்.’தீஇவ 238.3

    அவர்கள் வீட்டை வந்தடைந்தும், இறந்த அந்தப் பிள்ளை கிடத்தப்பட்டிருந்த அறைக்குள்ளாக எலிசா சென்று, ‘உள்ளே போய்த் தங்கள் இருவருக்கும் பின்னாக அவன் கதவைப் பூட்டி, கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்து, கிட்டப்போய், தன் வாய் பிள்ளையின் வாயின் மேலும், தன் கண்கள் அவன் கண்களின் மேலும், தன் உள்ளங்கைகள் அவன் உள்ளங்கைகளின் மேலும் படும்படியாக அவன் மேல் குப்புறப்படுத்துக்கொண்டான்; அப் பொழுது பிள்ளையின் உடல் அனல் கொண்டது. அவன் எழுந்து, அறைவீட்டில் இங்கும் அங்கும் உலாவி, திரும்பக் கிட்டப்போய் அவன்மேல் குப்புறப்படுத்தான்; அப்பொழுது அந்தப்பிள்ளை ஏழுதரம் தும்மித் தன் கண்களைத் திறந்தான்’.தீஇவ 239.1

    கேயாசியை அழைத்து அந்தத் தாயைத் தன்னிடம் அனுப்பு மாறு பணித்தான் எலிசா. ‘அவள் அவனிடத்தில் வந்தபோது; அவன், ‘’உன் குமாரனை எடுத்துக்கொண்டு போ” என்றான். அப் பொழுது அவள் உள்ளே போய், அவன் பாதத்திலே விழுந்து, தரை மட்டும் பணிந்து, தன் குமாரனை எடுத்துக்கொண்டு வெளியே போனாள்.’தீஇவ 239.2

    இப்படியாக அந்தப் பெண்ணின் விசுவாசத்திற்குப் பதில் கிடைத்தது. ஜீவனைக் கொடுக்கும் மகத்துவரான கிறிஸ்து அவளு டைய குமாரனை அவளுக்குத் திரும்பக் கொடுத்தார். அதுபோல, அவருடைய வருகையிலும் மரணத்தின் கூர் ஒடிக்கப்பட்டு, பாதா ளத்தால் உரிமை கொண்டாடப்பட்டு வந்த ஜெயமானது பறிக்கப் படும்போது, அவருடைய உண்மைவான்களுக்கு பலன் கிடைக் கும். அப்பொழுது, மரணத்தால் பறிக்கப்பட்ட தம் ஊழியர்களின் குழந்தைகளை அவர் அவர்களுக்குத் திரும்பக் கொடுப்பார். ‘ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள் ளைகள் இல்லாதபடியால் அவைகள் நிமித்தம் ஆறுதல் அடையா திருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாத படிக்கு கண்களைக் காத்துக் கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் சத்துருவின் தேசத் திலிருந்து திரும்பிவருவார்கள். உன் முடிவைப்பற்றி உனக்கு நம் பிக்கை உண்டு; உன் பிள்ளைகள் தங்கள் தேசத்துக்குத் திரும்பி வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.’ எரேமியா 31:15-17.தீஇவ 239.3

    மரணத்தை எண்ணித் துன்புறும் நம்மை நித்திய நம்பிக்கையின் செய்தியால் தேற்றுகிறார் இயேசு.தீஇவ 240.1

    ’அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்;
    அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன். மரணமே, உன் வாதைகள் எங்கே?
    பாதாளமே, உன் சங்காரம் எங்கே?’
    தீஇவ 240.2

    ஓசியா 13:14.

    ‘மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்,நான்
    மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரியதிறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்’
    தீஇவ 240.3

    வெளிப்படுத்தல் 1:18. ‘

    கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும் பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ
    எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்; அப்பொழுது கிறிஸ்து
    வுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும்
    நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட
    ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே
    கூட இருப்போம்.
    தீஇவ 240.4

    1தெசலோனிக்கேயர் 4:16, 17.

    மனித இனத்தின் இரட்சகரை முன்மாதிரியாக வைத்து, அவர் போல குணமாக்கியும், போதனை செய்தும், மனிதர்மத்தியில் ஊழி யம் செய்தான் எலிசா . நீண்டகாலம் வல்லமையுடன் பிரயாசப்பட் டான். தீர்க்கதரிசிகளின் பள்ளிகளில் நடைபெற்று வந்த முக்கியக் கல்விப் பணியைப் பேணி வளர்ப்பதிலும் முன்னேற்றுவதிலும் எலியா உண்மையுடனும் உற்சாகத்துடனும் செயல்பட்டான். தனக்கு முன் கூடியிருந்த வாலிபர்களுக்குத் தேவனுடைய நடத்துதலின்படி வார்த்தைகளைப் போதித்தான். அதனைப் பரிசுத்த ஆவியானவரும் அவர்கள் உள்ளங்களில் உறுதிப்படுத்தினார். அவன் யேகோவா வின் ஊழியக்காரன் என்பது வேறு ஆதாரங்களினாலும் சந்தேகத் திற்கு இடமின்றி அவ்வப்போது வெளிப்பட்டது.தீஇவ 240.5

    கில் காலில் நிறுவப்பட்டிருந்த பள்ளிக்கு ஒருசமயத்தில் அவன் சென்றிருந்தபோதுதான் விஷம் கலந்திருந்த கூழைச் சரிப் படுத்தினான். ‘ தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தீர்க்கதரிசிகளின் புத்திரர், அவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்தார்கள். அவன் தன் வேலைக்காரனை நோக்கி, ‘நீ பெரிய பானையை அடுப்பிலே வைத்துத் தீர்க்கதரிசிகளின் புத்திரருக்குக் கூழ்க்காய்ச்சு” என்றான். ஒருவன் கீரைகளைப் பறிக்க வெளியிலேபோய், பேய்க் கொம்மட் டிக்கொடியைக் கண்டு, அதன் காய்களை மடிநிறைய அறுத்து வந்து, அவைகளை அறிந்து கூழ்ப்பானையிலே போட்டான்; அது இன்ன தென்று அவர்களுக்குத் தெரியாதிருந்தது. சாப்பிட அதை ஜனங் களுக்கு வார்த்தார்கள்; அவர்கள் அந்தக் கூழில் எடுத்துச் சாப்பிடு கிறபோது, அதைச் சாப்பிடக்கூடாமல், தேவனுடைய மனுஷனே, பானையில் சாவு இருக்கிறது” என்று சத்தமிட்டார்கள்.தீஇவ 240.6

    அப்பொழுது அவன், மாவைக் கொண்டு வரச் சொல்லி, அதைப் பானையிலே போட்டு, ‘’ஜனங்கள் சாப்பிடும்படி, அவர் களுக்கு வார்” என்றான்; அப்புறம் பானையிலே தோஷம் இல்லா மற்போயிற்று.’தீஇவ 241.1

    மேலும், தேசத்திலே பஞ்சம் நிலவி வந்த சமயத்தில், ‘பாகால் சலீஷாவிலிருந்து ஒரு மனுஷன்’ அவருக்கு வெகுமதியாகக் கொடுத்த ‘முதற்பலனான வாற்கோதுமை அப்பம் இருப்பதையும் தாள்கதிர்களையும் வைத்து, கில் காலில் நூறு பேரைப் போஷித்தான் எலிசா. சாப்பாடின்றி அதிகமாகக் கஷ்டப்பட்டவர்களும் அங்கு அவனோடு இருந்தார்கள். எனவே, அந்தக் காணிக்கையைப் பெற்றுக்கொண்டதும், அவன் தன் வேலைக்காரனிடம், ‘’ஜனங் களுக்குச் சாப்பிடக் கொடு” என்றான். அதற்கு அவனுடைய பணி விடைக்காரன், ‘இதை நான் நூறு பேருக்கு முன்வைப்பது எப் படி?” என்றான். அதற்கு அவன், ‘அதை ஜனங்களுக்குச் சாப்பிடக் கொடு; சாப்பிட்ட பிற்பாடு இன்னும் மீதியுண்டாயிருக்கும்’ என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது அவர்களுக்கு முன் பாக அதை வைத்தான்; கர்த்தருடைய வார்த்தையின்படியே அவர் கள் சாப்பிட்டதுமன்றி மீதியும் இருந்தது.’ 2இராஜா 4:43, 44.தீஇவ 241.2

    பசித்தோரின் பசிதீர்க்க, தம் ஊழியக்காரன்மூலம் இந்த அற் புதத்தைச் செய்த கிறிஸ்துவின் கருணைதான் என்னே! அச்சமயம் முதல், மனிதரின் தேவையைச் சந்திக்க மீண்டும் மீண்டுமாக ஆண்ட வராகிய இயேசு செயல்பட்டார். ஆனால் அது குறிப்பிடத்தக்க விதத்திலோ, புரிந்து கொள்ளத்தக்க விதத்திலோ செய்யப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் நாம் தெளிவான ஆவிக்குரிய பகுத்தறி வைப் பெற்றிருந்தோமானால், மனதுருக்கமுள்ள தேவன் பிறமனி தரை அணுகுவது போலவே நம்மையும் அணுகுவதை உடனடியாகக் கண்டுகொள்ளலாம்.தீஇவ 241.3

    சிறிய அளவிலான தேவ கிருபையே எல்லாவற்றிற்கும் போதுமானதாய் இருக்கிறது. தேவ கரத்தால் அதனை நூறு மடங் காகப் பெருக்கமுடியும். தம்முடைய சத்துருக்களிலிருந்து அவர் வனாந்தரத்தில் ஒரு பந்தியை ஆயத்தம் பண்ணுகிறார். அவர் தம் முடைய கரத்தால் தொட்டு, சொற்ப அளவிலான பொருட்களையும் எல்லாருக்கும் போதுமானதாக்க முடியும். தீர்க்கதரிசிகளின் புத்திர ரின் கரங்களிலிருந்த அப்பங்களையும் கதிர்களையும் அவருடைய வல்லமையே பெருகச் செய்தது.தீஇவ 241.4

    கிறிஸ்துவின் பூலோக ஊழியக்காலத்தில், பெருங் கூட்ட ஜனங்களைப் போஷிக்க இத்தகைய அற்புதத்தை அவர் செய்த போதும், முற்காலத் தீர்க்கதரிசிகளோடு இருந்தவர்கள் செய்தது போல, அவநம்பிக்கை எழுப்பப்பட்டது. இதை நான் நூறு பேருக்கு முன் வைப்பது எப்படி?’‘ என்று கேட்டான் எலிசாவின் வேலைக்காரன். அந்தத் திரளான ஜனங்களுக்குப் போஜனங் கொடுக்குமாறு இயேசு தம் சீடர்களிடம் கட்டளையிட்டபோதும், ‘’எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் மாத்திரமே உண்டு, இந்த ஜனங்களெல்லாருக்கும் போஜனங்கொடுக்க வேண் டியதானால், நாங்கள் போய் வாங்கிக்கொண்டு வரவேண்டுமே’‘ என்று கேட்டார்கள் சீடர்கள். லூக் 9:13. இந்நிலைதானே இன்று எல்லோர் மத்தியிலும் காணப்படுகிறது?தீஇவ 242.1

    எல்லாக் காலங்களிலுமுள்ள தேவ பிள்ளைகளுக்கு இது ஒரு பாடமாகும். ஆண்டவர் ஒரு வேலையைக் கொடுத்து, செய்யச் சொல்லும்போது, ‘அந்தக் கட்டளை அர்த்தமானதா?’ என்றோ, ‘அதற்குக் கீழ்ப்படிய முயல்வதால் என்ன நிகழுமோ?’ என்றோ விசாரிக்க மனிதர் நின்றுவிடாதிருப்பார்களாக. சந்திக்கப்பட வேண்டிய தேவைகளைக் காட்டிலும் அவர்களுடைய கரங்களில் லிருக்கும் பொருட்கள் குறைவாகத் தோன்றலாம்; ஆனால் தேவ கரங்களிலோ தேவையைக் காட்டிலும் அதிகமானதாக அது விளங் கும். அந்தப் பணிவிடைக்காரன், அவர்களுக்கு முன்பாக அதை வைத்தான்; கர்த்தருடைய வார்த்தையின்படியே அவர்கள் சாப் பிட்டதுமின்றி மீதியும் இருந்தது’.தீஇவ 243.1

    தேவன் தம்முடைய குமாரன் எனும் ஈவினால் தாம் சம்பாதித்த வர்களோடு தாம் கொண்டிருக்கும் உறவை முழுவதுமாக உணர்வ தும், இப்பூமியில் அவருடைய நோக்கம் வேகமாக நிறைவேறி வருவதை அதிகமாக விசுவாசிப்பதுமே இன்றைய சபையின் பெரும் தேவையாயிருக்கிறது. காண்பதற்குச் சொற்ப அளவே உள்ள வழிகளைக் குறித்துப் புலம்புவதில் எவரும் நேரத்தை வீண டித்திட வேண்டாம். வெளியே பார்ப்பதற்கு வெற்றி வாய்ப்பில்லா ததுபோல் தோன்றலாம். ஆனால், தேவன் மேல் நம்பிக்கைவைத்து உற்சாகத்தோடு செயல்பட்டால் அவர் வழிவகைகளை உண்டுபண் ணுவார். தம்மால் ஆசீர்வதிக்கப்படும்படி ஜெபத்தோடும் ஸ்தோத் திரத்தோடும் தம்மிடம் கொண்டுவரப்படும் வெகுமதியை, தீர்க்க தரிசிகளின் புத்திரருக்கும் களைத்துப்போயிருந்த ஜனக்கூட்டத்திற் கும் கொடுக்கப்பட்ட உணவைப்போலப் பெருகச் செய்வார்.தீஇவ 243.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents