Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    49 - எஸ்தர் ராஜாத்தி காலத்தில்

    கோரேஸ் தங்கள்மேல் தயவுகாட்டி, தாங்கள் எருசலேமிற்குத் திரும்பிச் செல்ல அனுமதித்து வழங்கிய கட்டளையைச் சிறையி ருப்பிலிருந்த புத்திரரில் ஏறத்தாழ ஐம்பதாயிரம் பேர் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டனர். மேதிய - பெர்சியா மாகாணங்கள் முழுவதிலும் சிதறியிருந்த நூறாயிரம் பேர்களோடு ஒப்பிடும்போது, இவர்கள் சொற்ப அளவிலேயே இருந்தனர். பாழாய்க் கிடந்த தங் கள் வீடுகளையும் நகரங்களையும் திரும்ப ஸ்தாபிப்பதிலும், அங் குத் திரும்பிச் செல்வதிலுமிருந்த கஷ்டங்களை அனுபவிப்பதைப் பார்க்கிலும் தாங்கள் சிறைப்பட்டிருந்த தேசத்திலேயே தங்கியிருப் பதை பெரும்பாலான இஸ்ரவேலர்கள் தெரிந்துகொண்டனர்.தீஇவ 598.1

    ஏறத்தாழ இருபது வருடங்கள் கடந்திருந்தன. அப்போதைய மன்னனான தரியு ஹிஸ்டாஸ்பெஸ் இரண்டாம் கட்டளையைப் பிறப்பித்தான். அது முதலாம் கட்டளையைப் போலவே அனுகூல மானதாக இருந்தது. மேதிய பெர்சிய ஆட்சிப் பகுதிகளில் இருந்த யூதர்கள் தங்கள் பிதாக்களின் தேசத்திற்குத் திரும்பிச் செல்ல, தேவன் தம் இரக்கத்தினால் இன்னொரு தருணத்தைக் கொடுத்தார். ஜெர்ஜெஸின் ஆட்சிக்காலத்தில், அதாவது எஸ்தர் புத்தகத்தின் அகாஸ்வேருவின் ஆட்சிகாலத்தில் ஏற்படவிருந்த இக்கட்டான காலங்களை தேவன் முன்னறிந்திருந்தார். எனவே, அதிகாரத்தி லிருந்தோரின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த மாத்திரம் தேவன் செயல்படவில்லை; எருசலேமிற்குத் திரும்பிச் செல்ல சிறைப் பட்டிருந்தோரிடம் வேண்டிக்கொள்ளுமாறும் அவர் சகரியாவை ஏவி னார்.தீஇவ 598.2

    தங்கள் சொந்த தேசத்திலிருந்து சிறையுண்டு, வெகுதூரத்தில் பல நாடுகளில் சிதறுண்டு, குடியிருந்துவந்த இஸ்ரவேல் கோத் திரத்தாருக்குக் கொடுக்கப்பட்ட செய்தி, ‘ஓகோ, நீங்கள் எழும்பி வடதேசத்திலிருந்து ஓடி வாருங்கள்’ என்பதே. ‘ஆகாயத்து நான்கு திசைகளிலும் உங்களை நான் சிதறப் பண்ணினேன் என்று கர்த்தர் சொல்கிறார். பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள். பிற்பாடுமகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளை யிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடு கிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான். இதோ, நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக அசைப்பேன்; அதினால் அவர்கள் தங்கள் அடிமைகளுக்குக் கொள்ளையாவார்கள்; அப் பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை அனுப்பினாரென்று அறி வீர்கள்’ சகரியா 2:6-9.தீஇவ 599.1

    தம்முடைய மக்கள் தம் நாமத்திற்கு மகிமையாக, பூமியில் புகழப் பட்டிருக்க வேண்டுமென்று, ஆதியில் அவர் கொண்ட நோக்கமே அப்பொழுதும் அவருடைய நோக்கமாயிருந்தது. அவர்கள் தம்மில் மீண்டும் மெய்ப்பற்றுக்கொள்ள, அவர்களுடைய நீண்டகாலச் சிறை யிருப்பின்போது, அநேகதருணங்களை அவர்களுக்குக் கொடுத்தார். அதற்குச் செவிகொடுத்து அறிவடைய சிலர் தெரிந்துகொண்டனர்; இடுக்கண்களுக்கு மத்தியில் சிலர் இரட்சிப்பைக் கண்டடைந்தனர். அவர்களில் அநேகர், அங்கிருந்து எருசலேமுக்குப் புறப்பட்ட கூட் டத்தார் மத்தியில் எண்ணப்படவும் இருந்தனர். ‘உயரமும் உன்னத முமான ஒரு பர்வதத்தின் மேல் நாட்டப்பட இருந்ததும் ‘இஸ்ரவே லின் உயரமான பர்வத்திலே’ நாட்டப்பட இருந்ததுமான ‘உயர்ந்த கேதுருவின் நுனிக்கிளைகளுக்குத் தேவன் அவர்களை ஒப்பிட்டார். எசே 17:22, 23.தீஇவ 599.2

    ’எவர்கள் ஆவியை தேவன் ஏவினாரோ’ அவர்கள் கோரே ஸின் கட்டளைக்கிணங்கத் திரும்பிச் சென்றனர். எஸ்றா 1:5 . ஆனா லும், தங்கள் சிறையிருப்பின் தேசத்திலேயே தங்கியிருக்க விரும் பினவர்களை தேவன் ஓயாது வேண்டிக்கொண்டார். அவர்களும் திரும்பிச் செல்லும்படி, எண்ணற்ற வழிகளில் அதை அவர்களுக்கு ஏதுவாக்கினார். ஆனாலும் எண்ணற்றவர்கள் கோரேஸின் கட் டளைக்கு இணங்க மறுத்தார்கள்; அதன்பின் உண்டான செல்வாக்கு களுக்கும் உணர்ச்சியற்று இருந்தனர். கொஞ்சமும் தாமதிக்காமல் பாபிலோனிலிருந்து தப்பியோடுமாறு சகரியா அவர்களை எச்சரித்த போதும், அந்த அழைப்புக்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை.தீஇவ 600.1

    அச்சமயத்தில், மேதிய - பெர்சியா ஆட்சிப்பகுதிகளில் நிலமை கள் வேகமாக மாறிவந்தன. தரியு ஹிஸ்டாஸ்பெஸின் ஆட்சிக் காலத்தில்தான், யூதருக்கு விசேஷ இரக்கம் பாராட்டப்பட்டது. அவனைத் தொடர்ந்து மகா அகாஸ்வேரு அரியணை ஏறினான். விடு தலையின் செய்திக்குச் செவிகொடுக்க மறுத்த யூதர்கள் அவனு டைய ஆட்சிக் காலத்தில் தான் ஓர் இக்கட்டான சூழ்நிலையைச் சந் திக்க வேண்டியதாயிற்று. தப்பிச் செல்ல தேவன் ஏற்படுத்திக் கொடுத்த வழியைச் சாதகப்படுத்த மறுத்ததால், இப்பொழுது மர ணத்தை முகமுகமாகச் சந்திக்கும்படி கொண்டு வரப்பட்டனர்.தீஇவ 600.2

    மேதிய-பெர்சியாவில் உயரதிகாரம் பெற்றிருந்த ஒரு கொடூர மனிதனான ஆகாகியனாகிய ஆமான்மூலம், தேவநோக்கங்க ளுக்கு எதிராக சாத்தான் அப்பொழுது கிரியை செய்தான். யூதனான மொர்தெகாய்க்கு எதிராகக் கொடும் பகையை வளர்த்து வந்தான் ஆமான். மொர்தெகாய் ஆமானுக்கு எந்தவொரு தீங்கும் விளை வித்ததில்லை. ஆனால், தொழுகைக்குரிய பய பக்தியை அவனுக் குக்காட்ட அவன் மறுத்தான். எனவேதான், மொர்தெகாயின் மேல் மாத்திரம் கைபோடுவதை’ அற்பமாக எண்ணி, ‘ராஜ்யமெங்கும் இருக்கிற மொர்தெகாயின்ஜனமாகிய யூதரையெல்லாம் சங்கரிக்க’ அவன் திட்டம் தீட்டினான். எஸ்தர் 3:6.தீஇவ 600.3

    ஆமானின் பொய்யறிக்கையால் ஏமாந்த அகாஸ்வேரு, மேதிய - பெர்சியா ராஜ்யத்தின் சகல நாடுகளிலுள்ள ஜனங்களுக்குள்ளே சிதறுண்டு பரம்பியிருந்த’ சகல யூதர்களையும் படுகொலை செய் யும்படி ஒரு கட்டளை இயற்றத் தூண்டப்பட்டான். வச8. யூதர்கள் கொல்லப்படவும், அவர்களின் உடமைகள் கொள்ளையிடப்பட வும் ஒரு குறிப்பிட்ட நாள் நியமிக்கப்பட்டது. அந்தக் கட்டளையை முற்றிலுமாக நிறைவேற்றுவதால், கூடவே ஏற்படும் நெடுந்தூர் விளைவுகளை ராஜா கொஞ்சமும் உணரவில்லை. அந்தத் திட்டத் தில் மறைமுகமாகச் செயல்பட்ட சாத்தான்தான், மெய்த்தேவனைப் பற்றின அறிவைப் பாதுகாக்கும்படி வைக்கப்பட்டிருந்த ஜனங் களைப் பூமியிலிருந்து அகற்ற முயன்று கொண்டிருந்தான்.தீஇவ 600.4

    ’ராஜாவின் உத்தரவும், அவனுடைய கட்டளையும் போய்ச் சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் ஸ்தலத்திலுமுள்ள யூதருக்குள்ளே மகாதுக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாய், அநேகர் இரட்டுடுத்திச் சாம்பலில் கிடந்தார்கள்’ எஸ்தர் 4:3. மேதி யர் மற்றும் பெர்சியர்களின் கட்டளை மாற்றப்படத்தக்கதல்ல; எனவே இஸ்ரவேலருக்கு அங்கு எவ்வித நம்பிக்கையும் இல்லாதி ருந்தது; அவர்கள் அனைவருமே அழிவுக்குள்ளாகச் சிக்கியிருந்த னர்.தீஇவ 601.1

    ஆனால் மனுபுத்திரர் மத்தியில் ஆளுகை செய்யும் ஒரு வல்ல மையால் சத்துருவின் சதித்திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டன. உன்னத மானவருக்குப் பயந்த ஒரு யூதப் பெண்மணியான எஸ்தர் மேதிய - பெர்சிய ராஜ்யத்தின் ராணியானாள். அது தேவசெயலாயிருந்தது. அவளுக்கு மிகவும் நெருங்கிய உறவினன் மொர்தெகாய். அதோ கதியான நிலையில் தங்கள் ஜனங்களுக்காக அகாஸ்வேருவிடம் வேண்டிக்கொள்ள அவர்கள் தீர்மானித்தனர். அதற்குப் பரிந்து பேசுபவளாக அவருடைய சமூகத்திற்கு எஸ்தர் செல்லவேண்டி யிருந்தது. நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும்” என்றான் மொர்தெகாய். வச 14தீஇவ 601.2

    எஸ்தருக்கு ஏற்பட்டிருந்த அந்த இக்கட்டான நிலையில், மிக வும் துரிதமான, தீவிரமான நடவடிக்கை அவசியமாயிருந்தது; ஆனால் தங்கள் நிமித்தமாக தேவன் வல்லமையாகச் செயல்படாத பட்சத்தில், தங்கள் சொந்த முயற்சிகளால் பயனேதுமில்லை என் பதை இருவருமே உணர்ந்திருந்தனர். எனவே, தன் பெலனின் ஆதார் மான தேவனோடு பேச நேரம் எடுத்துக்கொண்டாள் எஸ்தர். ‘நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக் காக உபவாசம் பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்; இவ்விதமாகச் சட்டத்தை மீறி, ராஜாவினி டத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன்” என்று மொர்தெகா யிடம் கூறினாள். வசனம் 4:16.தீஇவ 601.3

    ’இராஜாவுக்கு முன்பாக எஸ்தர் சென்றது, அவளுக்குத் தாட் சணியம் காட்டப்பட்டது, ராஜா மற்றும் ராணியின் விருந்தில் ஒரே விருந்தாளியாக ஆமான் பங்கு பெற்றது, நித்திரை வராமல் ராஜா துன்புற்றது, மொர்தெகாய்க்கு ஊரறிய கனம் செலுத்தப்பட்டது, ஆமானின் கொடிய சதித்திட்டம் கண்டுபிடிக்கப்பட்டது, அவன் தாழ்ச்சியும் வீழ்ச்சியும் அடைந்தது’ என ஒன்றன்பின் ஒன்றாக வேக மாக நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பிரபலமான சம்பவமே. மனந்திரும்பின தம் மக்களுக்காக தேவன் அற்புதமாகச் செயல்பட் டார்; அவர்கள் போரிட்டு தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அனுமதித்து முதலாம் ஆணைக்கு எதிராக இன்னொரு கட்டளை பிறப்பித்தான் ராஜா. அது, ராஜ்யத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் அஞ்சற்காரர்களால் வேகமாகக் கொண்டுசெல்லப்பட்டது. ஏனெனில் அவர்கள், ‘ராஜாவின் வார்த்தையினாலே ஏவப்பட்டு, தீவிரத்தோடே புறப்பட்டுப் போனார்கள். ‘’ராஜாவின் வார்த்தை யும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த எல்லா நாடுகளிலும், எல்லாப் பட்டணங்களிலும், யூதருக்குள்ளே அது மகிழ்ச்சியும், களிப்பும், விருந்துண்டு கொண்டாடும் நல்ல நாளுமாயிருந்தது; யூதருக்குப் பயப்படுகிற பயம் தேசத்து ஜனங்களைப் பிடித்ததினால், அவர்களில் அநேகர் யூத மார்க்கத்தில் அமைந்தார்கள்’. எஸ்தர்8:14,17.தீஇவ 602.1

    அவர்களை அழிக்க நியமிக்கப்பட்டிருந்த நாளில், ‘யூதர் அகாஸ்வேருராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்குப் பொல்லாப்பு வரப்பண்ணப் பார்த்தவர்கள்மேல்கை போடக்கூடிக்கொண்டார்கள்; ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கக்கூடாதிருந்தது; அவர்களைப்பற்றிச் சகல ஜனங்களுக்கும் பய முண்டாயிற்று. ‘தேவமக்கள் தங்கள் பிராணனைத் தற்காக்க’ நின்ற வேளையில், அவர்களைப் பாதுகாக்குமாறு, பெலத்தில் பராக் கிரமரானதூதர்களுக்கு தேவன் கட்டளையிட்டிருந்தார். எஸ்தர்9:2, 16.தீஇவ 602.2

    முன்னர் ஆமான் வகித்த உயர்பதவி மொர்தெகாய்க்குக் கொடுக் கப்பட்டது. அவன் ‘அகாஸ்வேருக்கு இரண்டாவதானனும், யூத ருக்குள் பெரியவனும், தன் திரளான சகோதரருக்குப் பிரியமான வனுமாயிருந்தான்’ இஸ்ரவேலின் நலனை மேம்படுத்த நாடினான். எஸ்தர் 10:3. இப்படியாகதேவன், தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டதீஇவ 602.3

    உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து,
    எந்நாளும் கெம்பீரிப்பார்களாக;
    நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்;
    உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள்
    உம்மில் களிகூருவார்களாக.
    தீஇவ 604.1

    சங்கீ தம் 5:II. மக்களுக்கு மேதிய - பெர்சியா அரசவையில் மீண்டும் தயவு கிடைக்கச் செய்தார்; அவர்களை அவர்களின் சொந்த தேசத்தில் கொண்டு சேர்க்கும் தம் நோக்கத்தை நிறைவேற்ற வழிசெய்தார். ஆனால், அதன்பிறகு ஏழு வருடங்கள் கழித்துதான், அதாவது மகா அகாஸ் வருவுக்குப் பின் வந்த முதலாம் அர்தசஷ்டாவின் ஏழாம் வருடத்தில்தான் குறிப்பிடத்தக்க அளவிலான மக்கள் எஸ்றாவின் தலைமையில் எருசலேமுக்குத் திரும்பினார்கள்.

    எஸ்தரின் நாட்களில் தேவமக்களுக்கு ஏற்பட்ட சோதனை யான அனுபவங்கள் அக்காலத்திற்கு மாத்திரம் உரியதல்ல. நாட் களின் முடிவுமட்டுமுள்ள காலங்களைத் தரிசனமாகக் கண்டவெளிப் படுத்துலின் யோவான், வலுசர்ப்பமானது ஸ்திரீயின் மேல் கோபங் கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக்கைக் கொள்ளுகிறவர்கள் ளும், இயேசுகிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியை உடையவர்களுமா கிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம் பண்ணப் போயிற்று’ என்கிறார். வெளி 12:17. இன்று பூமியில் வாழும் சிலர் இவ்வார்த்தைகள் நிறைவேறுவதைக் காண்பார்கள். முற்காலங்களில் மெய்யான சபையைத் துன்புறுத்தும்படி மனிதரை வழிநடத்தின அதே ஆவிதான், தேவன்மேல் மெய்ப்பற்றோடு விளங்குகிறவர் களை இதே நிலைக்கு ஆளாக்க வருங்காலங்களிலும் மனிதரைத் தூண்டிவிடும். இந்த இறுதிப் பெரும் போராட்டத்திற்கான ஆயத் தங்கள் இப்பொழுதே நடந்துவருகின்றன.தீஇவ 605.1

    தேவனுடைய மீதமான மக்களுக்கு எதிராக இறுதியில் கொண்டு வரப்படும் கட்டளையானது, யூதர்களுக்கு எதிராக அகாஸ்வேரு வால் பிறப்பிக்கப்பட்ட கட்டளைக்கு ஒத்திருக்கும். அன்று, அரண் மனை வாசலில் நின்ற மொர்தெகாய்போல், இன்று ஓய்வுநாள் கட்ட ளையைக் கைக்கொண்டுவரும் சிறு கூட்டத்தாரை மெய்ச்சபையின் சத்துருக்கள் பார்க்கிறார்கள். தேவபிள்ளைகள் அவருடைய பிர மாணத்தின் மேல் பயபக்தியுடன் காணப்படுவது, தேவபயத்தை மறந்தோரையும், அவருடைய ஓய்வுநாளைக் காலின்கீழ் போடு வோரையும் தொடர்ந்து கண்டிப்பதாக இருக்கிறது.தீஇவ 605.2

    பிரசித்தமான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் ஏற்றுக் கொள்ள மறுக்கும் சிறுபான்மையினருக்கு எதிராகச் சாத்தானுடைய உக்கிரம் எழும்பும். தேவமக்களுக்கு எதிராக ஆலோசனைபண்ண, உயரதிகாரத்தில் உள்ளோரும், நன்மதிப்பிற்குரியோரும், சட்ட விரோதமானவர்களோடும் இழிவானவர்களோடும் சேர்ந்துகொள் வார்கள். இவர்கள் அதிக செல்வமும் அறிவும் கல்வியும் பெற்றி ருப்பார்களானால், தேவமக்களை மேலும் நிந்திப்பார்கள். உபத்திரவ முண்டாக்கும் ஆட்சியாளரும், ஊழியரும், சபை அங்கத்தினர் களும் அவர்களுக்கு எதிராகச் சதிசெய்வார்கள்; பேசியும் எழுதி யும் பெருமை பாராட்டியும் மிரட்டியும் ஏளனஞ் செய்தும் அவர் களுடைய விசுவாசத்தைப் போக்க முயல்வார்கள். பொய்யான அடையாளங் காட்டியும், கோபமாகப் பேசியும் ஜனங்களுடைய உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவார்கள். வேதாகம ஓய்வுநாளுக்கு எதிராக வாதாட, ‘ என்று வேதாகமம் சொல்கிறது’ என்று எதையும் காண்பிக்க முடியாமல், அதனை மூடிமறைக்கும்படி, கடுமையான சட்டங்களை இயற்றுவார்கள். சட்டம் இயற்றுபவர்கள் புகழையும் ஆதரவையும் பெறும்படி, ஞாயிறு ஆசரிப்புச் சட்டத்திற்கு ஆதரவளிப் பார்கள். ஆனால் தேவனுக்குப் பயப்படுகிறவர்களோ, பத்துக் கற்பனையின் போதனையை மீறும் எந்த ஏற்பாட்டையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். சத்தியத்திற்கும் பொய்க்கும் இடையேயான போராட்டத்தின் கடைசி யுத்தம் ஓய்வுநாள் கட்டளையை மீறுதல்’ எனும் போர்க்களத்தில்தான் நடைபெறும். இந்தக் காரியத்தில் எவ் விதச் சந்தேகமும் கொள்ளும்படியாக நாம் விடப்படவில்லை. எஸ் தர் மற்றும் மொர்தெகாயின் நாட்களைப் போலவே, இன்றைய நாட்களிலும் தேவன் தம் மக்களையும் தம் சத்தியத்தையும் குற்ற மற்றவையாக நிறுத்துவார்.தீஇவ 605.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents