Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    21 - எலிசாவின் கடைசி ஊழியங்கள்

    ஆகாப் ஆட்சியில் தீர்க்கதரிசன ஊழியத்திற்கு அழைக்கப்பட் டான் எலிசா. இஸ்ரவேல் ராஜ்யத்தில் அநேக மாற்றங்கள் ஏற்பட்ட டதை தன் வாழ்நாளில் கண்டான். தேவனை மறந்த தேசத்திற்குச் சாட்டையாயிருக்கும்படி அபிஷேகம் பண்ணப்பட்ட அசீரியனான ஆசகேலின் காலங்களில் இஸ்ரவேலர் தண்டனைமேல் தண்டனை அடைந்தார்கள். யெகூவின் சீர்திருத்த நடவடிக்கைகளின் விளை வாக ஆகாபின் வீட்டார் அனைவரும் கொல்லப்பட்டார்கள். யெகூ விற்குப்பின் வந்த யோவகாஸ் , சீரியர்களோடான தொடர் யுத்தங் களில், யோர்தானுக்குக் கிழக்கிலிருந்த சில நகரங்களை இழந்தான். எலியா துவக்கின சீர்திருத்த இயக்கம் எலிசாவால் தொடர்ந்து வளர்க்கப்பட்டது. ராஜ்யம் முழுவதும் சீரியர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் போல் தோன்றியபோது, தேவனை ஆராய்ந்தறியும்படி அநேகரை அந்தச் சீர்திருத்தம் வழிநடத்தியது. பாகாலின் பலிபீடங் கள் புறக்கணிக்கப்பட்டன. முழுஇருதயத்தோடு தேவனைச் சேவிக் கும்படி தீர்மானித்தவர்களின் வாழ்வில் தேவநோக்கம் படிப்படி யாகவும் உறுதியாகவும் நிறைவேற்றப்பட்டது.தீஇவ 254.1

    இஸ்ரவேலர் பாவம் செய்தபோதிலும் அவர்கள்மேல் தமக் கிருந்த அன்பினாலேயே அவர்களுக்குச் சாட்டையாயிருக்கும் படி சீரியரை அனுமதித்தார் தேவன். ஒழுக்கத்தில் பெலவீனர்கள்மேல் தமக்கிருந்த மனதுருக்கத்தினாலேயே துன்மார்க்க யேசபேலையும் ஆகாபின் வீட்டார் அனைவரையும் கொல்லும் படி யெ கூவை எழும்பப்பண்ணினார். கிருபைமிக்க தேவசெயலால், பாகால் மற்றும் அஸ்தரோத்தின் தீர்க்கதரிசிகள் ஒழிக்கப்பட்டார்கள்; அந் நியப் பலிபீடங்கள் தகர்த்தெறியப்பட்டன. பாவம் செய்யத் தூண் டும் காரியம் அகற்றப்பட்டால் சிலர் அஞ்ஞான மார்க்கத்தை உதறி விட்டு, பரலோகத்தை நோக்கி முகங்களைத் திருப்புவார்கள் என்று தேவன் தம் ஞானத்தினால் முன்னுணர்ந்தார். இதனாலே, அவர் களுக்கு அழிவுமேல் அழிவு ஏற்பட அனுமதித்தார். அவர் நியாயத் தீர்ப்புகளில் இரக்கம் புதைந்திருந்தது; தம் நோக்கம் நிறைவேறின போது, தம்மைப் பற்றி விசாரிக்கத் தெரிந்து கொண்டவர்களுக்குச் சாதகமாக, காலத்தை வாய்க்கச் செய்தார்.தீஇவ 254.2

    நன்மையான செல்வாக்குகளும் தீமையான செல்வாக்குகளும் ஒன்றின் மேல் ஒன்று ஆதிக்கம் செலுத்தப் போராடின காலம் அது. ஆகாப் மற்றும் யேசபேலின் ஆட்சிக்காலத்தில், தன் அழிவு வேலையை முழுமையாக்கத் தன் வல்லமையால் சாத்தான் செயல் பட்ட காலமும் கூட. ஆனாலும், தொடர்ந்து சாட்சி பகர்ந்து வந்தான் எலிசா . எதிர்ப்புகளைச் சந்தித்தான்; ஆனால் அவனுடைய வார்த் தைகளை எவராலும் மறுத்துப் பேச முடியவில்லை. ராஜ்யம் முழு வதிலும் அவனுக்கு மதிப்பும் மரியாதையும் உண்டாயிருந்தது. அநேகர் அவனிடம் ஆலோசனை கேட்டு வந்தார்கள். யேசபேல் இன்னும் உயிரோடிருக்கையில், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராம் அவனிடம் ஆலோசனை கேட்டான். அவன் தமஸ்குவில் இருந்தபோது, ஒரு முறை சீரிய ராஜாவான பெனாதாத்தின் வேலைக் காரர் அவனைச் சந்தித்தனர். ஏனெனில், அப்போது பெனாதாத் வியாதிப்பட்டிருந்தான். அதனால் தான் மரிக்கக்கூடுமோ’ என்று கேட்டறிய விரும்பினான். எத்திக்கிலும் சத்தியம் புரட்டப்பட்டு, பெரும்பாலான மக்கள் வெளிப்படையாகக் கலகம் செய்த ஒரு காலக்கட்டத்தில், எல்லோரிடமும் உண்மையோடு சாட்சி பகர்ந்தான் அந்தத் தீர்க்க தரிசி.தீஇவ 255.1

    தாம் தெரிந்து கொண்ட ஊழியனை தேவன் ஒருபோதும் கைவிடவில்லை. சீரியர்களின் முற்றுகையின்போது ஒருசமயம், சீரியாவின் ராஜா எலிசாவைக் கொல்ல வகைதேடினான். ஏனெ னில், தங்கள் திட்டங்களை இஸ்ரவேலின் ராஜாவிடம் அவன் அறி வித்து வந்ததற்காக அவ்வாறு திட்டமிட்டான். சீரியாவின் ராஜா தன் ஊழியக்காரர்களோடு ஆலோசனைபண்ணி, ‘’இன்ன இன்ன ஸ்தலத்திலே பாளயமிறங்குவேன்” என்றான். இந்தத் திட்டத்தை கர்த்தர் எலிசாவுக்கு வெளிப்படுத்தினார். அவர், ‘இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி, ‘’இன்ன இடத்துக்குப் போகாத படிக்கு எச்சரிக்கையாயிரும்; சீரியர் அங்கே இறங்குவார்கள்” என்று சொல்லச் சொன்னான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனு டைய மனுஷன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச் சொன்ன ஸ்தலத்திற்கு மனுஷரை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேகந்தரம் தன்னைக் காத்துக்கொண்டான்.’தீஇவ 255.2

    ’இந்தக் காரியத்தினிமித்தம் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் ஊழியக்காரரை அழைத்து, ‘’நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவுக்கு உளவாயிருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்க மாட்டீர்களா?’ என்று கேட்டான். அப்பொழுது அவன் ஊழியக்காரரில் ஒருவன், ‘’அப்படியில்லை , என் ஆண்டவர் னாகிய ராஜாவே, நீர் உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான்” என்றான்.’தீஇவ 256.1

    தீர்க்கதரிசியை ஒழித்துக் கட்டத் தீர்மானித்தவனாய், ‘’நான் மனுஷரை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள்’‘ என்றான் சீரிய ராஜா. தீர்க்கதரிசி தோத்தானில் இருந்தான். அதனை அறிந்த ராஜா, ‘அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தை யும் அனுப்பினான்; அவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்து கொண்டார்கள். தேவனுடைய மனுஷனின் வேலைக் காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக் கொண்டிருக்கக் கண்டான்’.தீஇவ 256.2

    பீதிக்குள்ளான எலிசாவின் வேலைக்காரன் அவனிடம் ஓடி, ‘’ஐயோ, என் ஆண்டவனே, என்ன செய்வோம்?’‘ என்று கேட் டான்.தீஇவ 256.3

    ’’பயப்படாதே” என்று பதிலளித்த தீர்க்கதரிசி, அவர்களோ டிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்’‘ என்றான். பிறகு, அந்த ஊழியக்காரனே கண்கூடாக அதனை அறிந்துகொள்ளும்படி, ‘எலிசா விண்ணப்பம் பண்ணி, ‘’கர்த் தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும்” என்றான். ‘’உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந் தார்; இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளா லும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண் டான்.’ தேவனுடைய ஊழியக்காரனுக்கும் எதிரிகளின் சேனை களுக்கும் நடுவே, பரலோகத்தூதர்களின் கூட்டம் அவனைச் சுற்றி லும் நின்றது. அழிப்பதற்கோ வணக்கத்தைப் பெறுவதற்கோ அல்ல, பெலவீனரும் உதவியற்றவர்களுமானதேவபிள்ளைகளைச் சுற்றிலும் நின்று உதவுவதற்கே மிகுந்த வல்லமையோடு அவர்கள் வந்திருந்தனர்.தீஇவ 256.4

    தேவனுடைய பிள்ளைகள் கடுமையான சூழ்நிலைகளுக்குக் கொண்டுவரப்பட்டு, அவற்றிலிருந்து தப்பிக்க வழியே இல்லை யென்று தோன்றும்போது, தேவனை மாத்திரமே அவர்கள் சார்ந் திருக்க வேண்டும்.தீஇவ 257.1

    சீரிய வீரர்களின் சேனையானது, கண்ணுக்குப் புலப்படாது நின்ற பரலோக சேனைகள் அங்கு இருப்பதை அறியாமல் முன் னேறியபோது, எலிசா விண்ணப்பம்பண்ணி, ‘’இந்த ஜனங் களுக்குக்கண்மயக்கம் உண்டாகும்படி செய்யும்” என்றான்; எலிசா வுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண் டாகும்படி செய்தார். அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி, ‘’இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பிறகே வாருங் கள்; நீங்கள் தேடுகிற மனுஷனிடத்தில் நான் உங்களை வழிநடத்து வேன்’‘ என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டு போனான்.தீஇவ 257.2

    ’அவர்கள் சமாரியாவில் வந்தபோது, எலிசா, ‘’கர்த்தாவே, இவர்கள் பார்க்கும்படிக்கு இவர்கள் கண்களைத் திறந்தருளும்” என்றான்; பார்க்கும்படிக்குக் கர்த்தர் அவர்கள் கண்களைத் திறந்த போது, இதோ, அவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள். இஸ்ரவேலின் ராஜா அவர்களைக் கண்டதும், எலிசாவைப் பார்த்து, ‘’என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப் போடலாமா?” என்று கேட்டான். அதற்கு அவன், ‘’நீர் வெட்ட வேண்டாம்; நீர் உம் முடைய பட்டயத்தாலும், உம்முடைய வில்லினாலும் சிறையாக்கிக் கொண்டவர்களை வெட்டுகிறீரோ? இவர்கள் புசித்துக் குடித்து, தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போகும்படிக்கு, அப்பமும் தண்ணீ ரும் அவர்களுக்கெதிரில்வையும்” என்றான். அப்பொழுது அவர் களுக்குப் பெரிய விருந்துபண்ணி, அவர்கள் புசித்துக்குடித்தபின்பு, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்கள் ஆண்டவனிடத் துக்குப் போய்விட்டார்கள். 2இராஜா 6.தீஇவ 257.3

    இதன்பிறகு சீரியர்களின் தாக்குதல்களிலிருந்து இஸ்ரவேல் சில காலம் தப்பியிருந்தது. பிறகு, இஸ்ரவேலைப் பிடிப்பதில் உறுதி யோடும் துடிப்போடும் விளங்கின் ஆசகேலின் கீழ் சீரிய சேனைகள் சமாரியாவைச் சூழ்ந்துகொண்டு அதனை முற்றுகையிட்டன. அந்த முற்றுகையின் நாட்களில் இஸ்ரவேலுக்கு ஏற்பட்ட பெருந்துன்பம் போன்று, ஒருபோதும் ஏற்பட்டதில்லை. பிதாக்களின் பாவங்கள் மெய்யாகவேபிள்ளைகளிடத்திலும் பிள்ளைகளின் பிள்ளைகளிடத் திலும் விசாரிக்கப்படுகின்றன. நெடுநாட்கள் நீடித்த பஞ்சத்தின் கொடுமைகள், மூர்க்கமான நடவடிக்கை எடுக்கும்படி இஸ்ரவே லின் ராஜாவைத் தூண்டின. அப்போதுதான், மறுநாளில் அவர் களுக்குக் கிடைக்க இருந்த விடுதலை பற்றிச் சொன்னான் எலிசா .தீஇவ 258.1

    மறுநாள், விடிந்துவருகின்ற காலை வேளையிலே, ‘ஆண்ட வர் சீரியரின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலை யும் கேட்கப்பண்ணினார். ‘ பயத்தால் பீடிக்கப்பட்ட அவர்கள், ‘இருட்டோடே எழுந்திருந்து தங்கள் கூடாரங்களையும் தங்கள் குதிரைகளையும் தங்கள் கழுதைகளையும் தங்கள் பாளயத்தையும் அவைகள் இருந்த பிரகாரமாகவிட்டு ஓடிப்போனார்கள். அங்கு அதிகளவில் உணவுப்பொருட்களும் இருந்தன. அவர்கள் தங்கள் பிராணன்மாத்திரம் தப்பும்படி ஓடி யோர்தானைக் கடக்கும் மட்டும் நிற்கவில்லை .தீஇவ 258.2

    அவர்கள் ஓடிப்போன அன்று இரவிலே, பட்டணத்தின் வாசலிலிருந்த நான்கு குஷ்டரோகிகள், பசியால் துணிச்சலடைந்து, சீரியரின் பாளயத்தைச் சென்று பார்வையிடவும் அவர்களின் இரக் கத்தை வேண்டி நிற்கவும் தீர்மானித்தனர். அதன்மூலம் அவர்களி டம் பரிதாபத்தை ஏற்படுத்தி, உணவு பெற நினைத்தனர். பாளயத் திற்குள்ளாக நுழைந்ததும், ‘அங்கே ஒருவரும் இல்லாதிருந்தது தான்’ அவர்களின் ஆச்சரியத்திற்குக் காரணமாயிருந்தது. தொல்லை தரவோ தடை செய்யவோ யாரும் இல்லாததால், ‘ஒரு கூடாரத்திற்குள் பிரவேசித்து புசித்துக் குடித்து, அதிலிருந்து வெள்ளியையும் பொன்னையும் வஸ்திரங்களையும் எடுத்துக் கொண்டுபோய் ஒளித்துவைத்து, திரும்பி வந்து, வேறொரு கூடாரத்திற்குள் பிரவேசித்து, அதிலிருந்தும் அப்படியே எடுத்துக் கொண்டுபோய் ஒளித்துவைத்தார்கள். பின்பு, அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி, ‘’நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்’‘ என்றார்கள். அந்த மகிழ்ச்சியான செய்தி யோடே அவர்கள் நகரத்திற்குத் திரும்பினார்கள்.தீஇவ 258.3

    கொள்ளைப்பொருள் மிகுதியாயிருந்தது; உணவுப் பொருட் களின் ஏராளத்தினால், முந்தின நாளில் எலிசாவால் முன்னுரைக்கப் பட்டது போல, ‘ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும் இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்பட் டது.’’கர்த்தருடைய வார்த்தையின்படியே’ இஸ்ரவேலின் தேவனு டைய தீர்க்கதரிசிமூலம் பிரதேசத்தாருக்கு முன்பாக தேவனுடைய நாமம் மீண்டுமாக உயர்த்தப்பட்டது. 2இராஜா 7:5-16.தீஇவ 259.1

    இப்படியாக, தேவனுடைய மனிதன் வருடாவருடம் தம் ஊழி யத்தைத் தொடர்ந்தான். உண்மையான ஊழியத்தால் மக்களிடம் நெருக்கமானான். இக்கட்டான சமயங்களில் ஞானமான ஆலோச கனாக ராஜாவின் பக்கம் நின்றான். அரசர்களும் மக்களும் சிலை வழிபாட்டால் வெகுநாட்கள் சீர்கேடாய் நடந்ததே, தீமையான காரி யங்கள் நடைபெறுவதற்குக் காரணமாயிருந்தது. அந்த அவபக்தி யின் அந்தகாரம் அங்குத் தொடர்ந்து நிலவிவந்தது. ஆனாலும், பாகாலுக்கு முன் முழங்காலை முடக்க உறுதியாக மறுத்தவர்கள் அங்குமிங்கும் இருக்கவே செய்தனர். எலிசாவின் தொடர்ச்சியான சீர்திருத்தப் பணியால், அநேகர் அஞ்ஞான மார்க்கத்தைவிட்டு வெளியேறினர்; இவர்கள் மெய்தேவனைச் சேவிப்பதில் களிகூரக் கற்றுக்கொண்டனர். தெய்வீக கிருபையின் இந்த அற்புதங்களால் மனமகிழ்ந்தான் தீர்க்கதரிசி. இருதயத்தில் உண்மையோடிருக்கும் அனைவரையும் சந்திக்கும்படி தூண்டப்பட்டான். தான் இருந்த இடங்களில் எல்லாம் நீதியைப் போதிக்க பெருமுயற்சி எடுத்துக் கொண்டான்.தீஇவ 259.2

    இன்று பூமியின் அந்தகாரப் பகுதியில் ஊழியம் செய்துவரும் தேவனுடைய ஊழியர்கள் சந்திக்க வேண்டிய நிலை போலவே அன்று இஸ்ரவேல் தேசத்தில் ஆவிக்குரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்துவது மனித பார்வைக்கு இயலாததாகத் தோன்றியது. ஆனால், சத்தியத்தை அறிவிப்பதற்கான தேவ ஏற்பாடுதான் சபை; அது ஒரு விசேஷித்த பணிக்காக தேவனால் அதிகாரம் பெற்ற றிருக்கிறது; அது தேவனுக்கு உண்மையாயிருந்து, அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தால், தெய்வீகவல்லமையின் மேன்மை அதினுள் வாசஞ்செய்யும். தேவனைத் தொழுகிற காரியத்தில் அது உண்மையாயிருந்தால், அதற்கு எதிராக எந்த வல்லமையாலும் நிற்கமுடியாது. சுழற்காற்றை எதிர்த்து, பதர் நிற்கமுடியாதது போல, சத்துருவின் படைகளால் அதனை என்றுமே மேற்கொள்ள முடி யாது.தீஇவ 259.3

    உலகப் பிரகாரமான சகல தொழுகையிலிருந்தும் விலகி, கிறிஸ்துவின் நீதியென்னும் வஸ்திரத்தைச் சபை தரித்துக் கொள் ளும், பிரகாசமும் மகிமையுமான ஒரு விடியலின் நாள் சபை முன் காத்திருக்கிறது.தீஇவ 260.1

    அவநம்பிக்கையும் அவிசுவாசமும் உள்ளவர்களுக்குத் தைரி யம் தரவேண்டும். அதைச் செய்யும்படி, தம்மில் நம்பிக்கையும் உண்மையும் உள்ளவர்களை தேவன் அழைக்கிறார். நம்பிக்கை யுடன் காத்திருக்கும் சிறைக்கைதிகளே, தேவனிடம் திரும்புங்கள். ஜீவனுள்ளவராம் அந்தத் தேவனிடம் புகலிடம் நாடுங்கள். நம்மை இரட்சிக்க அவர் விரும்புகிறார். அவருடைய வல்லமை மேல் தடு மாற்றமற்ற, தாழ்மையான விசுவாசத்தைக் காண்பியுங்கள். விசு வாசத்தால் அவருடைய பெலனை நாம் பற்றிக்கொள்வோமானால், நம் நிலைபிரயோஜனமற்றதாகவும் நம்பிக்கையற்றதாகவும் தோன்றி னாலும் அவர் அதை மாற்றுவார், அற்புதமாக மாற்றுவார். தம் நாமத்தின் மகிமைக்காக அவர் இதைச் செய்வார்.தீஇவ 260.2

    இஸ்ரவேலின் ராஜ்ஜியம் முழுவதிலும் ஒவ்வொரு இடமாக எலிசா சென்றுவந்த வரையிலும், தீர்க்கதரிசிகளின் பள்ளிக்கூடங் களை முன்னேற்ற உற்சாகமாகவும் ஆர்வத்தோடும் தொடர்ந்து செயல்பட்டான். அவன் எங்கு இருந்தாலும், தேவன் அவனோடி ருந்து, பேசுவதற்கு வார்த்தைகளையும் அற்புதங்கள் செய்வதற்கு வல்லமையையும் அவனுக்கு அருளினார். ஒரு சமயம், தீர்க்கதரிசி களின் புத்திரர் எலிசாவை நோக்கி, ‘’இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாய் இருக்கிறது. நாங்கள் யோர்தான் மட்டும் போய், அவ்விடத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உத்திரத்தை வெட்டி, குடியிருக்க அங்கே எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவோம்’‘ என்றார்கள். அதற்கு அவன், ‘’போங்கள்” என்றான். 2இராஜா 6:1, 2. எலிசாவும் அவர்களோடு யோர்தானுக்குச் சென்று, தன்னுடைய வருகையால் அவர்களை ஊக்கப்படுத்தினான். அவர்களுக்கு ஆலோசனை வழங்கினான். அவர்களுடைய வேலையில் அவர்களுக்கு உதவ ஓர் அற்புதமும் செய்தான். ‘ஒருவன் ஒரு உத்திரத்தை வெட்டி விழுத்துகையில் கோடரி தண்ணீரில் விழுந்தது; அவன், ‘’ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே” என்று கூவினான். தேவனுடைய மனுஷன் ‘’அது எங்கே விழுந்தது?’‘ என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது, ஒரு கொம்பை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கப்பண்ணி, ‘’அதை எடுத் துக்கொள்” என்றான்; அப்படியே அவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டான்.’ வச.5-7.தீஇவ 260.3

    வாலிபனான யோவாஸ் ராஜா, ஒரு சிலைவழிபாட்டுக்கார னாக இருந்தபோதிலும், தேவன்மேல் சிறிது மதிப்பும் கொண்டிருந் தான். எலிசா மரணப்படுக்கையில் கிடந்தபோது, அவனை இஸ்ர வேலின் தந்தையாக அவன் கண்டான்; தீர்க்கதரிசிதங்கள் மத்தியில் இருந்தது இரதங்களையும் குதிரை வீரர்களையும் காட்டிலும் அதிக பயனுள்ளதாக இருந்ததாக யோவாஸ் ராஜா ஒத்துக்கொண்டான். வேதாகமம் இவ்வாறு சொல்கிறது: ‘அவன் நாட்களில் எலிசா மர ணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தான்; அப்பொழுது இஸ்ர வேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்துக்குப் போய், அவன் மேல் விழுந்து அழுது, என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ர வேலுக்கு இரதமும் குதிரை வீரருமாயிருந்தவரே’‘ என்றான். 2இராஜாக்கள் 13:14.தீஇவ 261.1

    உதவி வேண்டி, கலங்கின ஆத்துமாவோடு வந்த அநேகருக்கு ஒருஞானமான , இரக்கமுள்ள தந்தையாகச் செயல்பட்டான் எலிசா . இப்போதும், தான் வகித்த நம்பிக்கையான பதவிக்கு தகுதியற்றி ருந்தும், ஆலோசனை வேண்டி தனக்கு முன் நின்ற பக்தியற்ற அந்த வாலிபனிடமிருந்து அவன் திரும்பிக்கொள்ளவில்லை. கடந்தகால தப்பிதங்களைச் சரிசெய்வதற்கும் தன்னுடைய ராஜ்யத்தை அனு கூலமான ஒரு நிலையில் வைக்கவும் அந்த ராஜாவுக்குத் தேவன் தம் முன்னறிவினால் ஒரு தருணத்தைக் கொடுத்தார். யோர்தானுக் குக் கிழக்கேயிருந்த பகுதிகளை ஆக்கிரமித்திருந்த சீரியரை விரட்டி யடிக்க வேண்டியிருந்தது. தவறு செய்துவந்த இஸ்ரவேலரின் சார் பாக மீண்டும் ஒருமுறை தேவ வல்லமை வெளிப்பட வேண்டி யிருந்தது.தீஇவ 261.2

    மரணப்படுக்கையில் கிடந்த தீர்க்கதரிசி அந்த ராஜாவிடம், ‘‘ வில்லையும் அம்புகளையும் பிடியும்” என்றான். அப்படியே செய் தான் யோவாஸ் . பிறகு தீர்க்கதரிசி, ‘’உம்முடைய கையை வில்லின் மேல் வையும்” என்றான். யோவாஸ், ‘தன் கையை வைத்தபோது, எலிசா தன் கைகளை ராஜாவுடைய கைகள்மேல் வைத்து, ‘யோர்தா னுக்கு அப்பால் சீரியர்களின் கட்டுப்பாட்டிலிருந்த நகரங்களை நோக்கி, ‘’அம்புகளைப் பிடியும்’‘ என்றார். கிழக்கே இருந்த ஜன் னலை ராஜா திறந்தபிறகு, அதனை எய்யுமாறு எலிசா கட்டளையிட் டான். அம்பானது சீறிச் சென்ற போது, அது கர்த்தருடைய இரட்சிப்பின் அம்பும் சீரியரினின்று விடுதலையாக்கும் இரட்சிக் கும் அம்புமானது; நீர் ஆப்பெக்கிலே சீரியரைத் தீர முறிய அடிப் பீர்’‘ என்று சொல்லும்படி ஏவப்பட்டான் தீர்க்கதரிசி. தீஇவ 261.3

    இப்பொழுது ராஜாவின் விசுவாசத்தைச் சோதித்தான் தீர்க்க தரிசி. அம்புகளைப் பிடிக்குமாறு யோவாசுக்குக் கட்டளையிட்டு, ‘’தரையிலே அடியும்” என்றான். ராஜா மூன்று தரம் தரையிலே அடித்து நின்றான். நீர் ஐந்து ஆறுவிசை அடித்தீரானால் அப்பொழுது சீரி யரைத் தீர முறியடிப்பீர்; இப்பொழுதோ சீரியரை மூன்று விசை மாத்திரம் முறிய அடிப்பீர்’‘ என்று கலக்கத்தோடு சொன்னான் தீர்க்க தரிசி.தீஇவ 262.1

    நம்பிக்கையான பதவிகளை வகிக்கும் அனைவருக்குமுரிய பாடம் இது. ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்து முடிக்க தேவன் வழியைத் திறந்து, வெற்றியின் நிச்சயத்தைத் தரும்போது, உறுதி யான அந்த விளைவைக் கொண்டுவர தேவனால் தெரிந்துகொள் ளப்பட்ட கருவிகள் தங்கள் திராணிக்குத் தக்க அனைத்தையும் செய்யவேண்டும். எந்த அளவுக்கு உற்சாகத்தோடும் விடாமுயற்சி யோடும் அந்த வேலை செய்யப்படுகிறது என்பதை வைத்துதான் வெற்றி அருளப்படும். தேவனுடைய மக்கள் தங்கள் பங்கிற்குத் தளரா ஆற்றலோடு செயல்படும்போதுதான் அவரால் அற்புதங் களைச் செய்யமுடியும். ஆத்துமாக்களின்மேல் தீவிர அன்பும் ஒரு போதும் குன்றாத ஊக்கமும் கொண்ட அர்ப்பணிப்புமிக்க மனி தரையும் ஒழுக்கத்துணிவு உள்ளவர்களையும் தேவன் தம் பணிக்கு அழைக்கிறார். அத்தகைய ஊழியர்கள் எந்த வேலையையும் கடின மானதாகவோ, எந்த வாய்ப்பையும் நம்பிக்கையற்றதாகவோ நினைக்கமாட்டார்கள். தோல்வியாகத் தோன்றுவது மகிமையான வெற்றியாக மாறும் மட்டும் சோர்வில்லாமல் அவர்கள் உழைப்பார் கள். தேவனுடைய ராஜ்யத்தின் மேன்மைக்காக அவரோடு சேர்ந்து உழைக்கும் அவர்களின் நோக்கத்திலிருந்து சிறைச்சுவர்களோ, அதற்கும் அப்பாலுள்ள மரணமேடையோ அவர்களைத் தடுக்கமுடி யாது.தீஇவ 262.2

    யோவாசுக்கு ஆலோசனையும் ஊக்கமும் கொடுத்ததோடு எலிசாவின் வேலை முடிவடைந்தது. எலியாவின்மேல் தங்கி யிருந்த ஆவியை முழுதளவில் தன் மேல் பெற்றிருந்தவன் கடைசி மட்டும் உண்மையோடிருந்தான். ஒருபோதும் அவன் தடுமாற வில்லை. சர்வவல்லவரின் வல்லமையின் மேல் தனக்கிருந்த நம் பிக்கையைஒருபோதும் அவன் இழக்கவில்லை. தனக்கு முன்னிருந்த பாதை முற்றிலும் அடைபட்டதாக தோன்றினபோதெல்லாம் அவன் விசுவாசத்தோடு முன்னேறினான். அவனுக்கிருந்த நம் பிக்கையைத் தேவன் கனம்பண்ணி, அவனுக்கு முன்பாக வழியைத் திறந்தார்.தீஇவ 263.1

    தன்னுடைய எஜமானைப்போல, அக்கினிமயமான ஒரு இர தத்தில் எடுத்துக்கொள்ளப்படும் பாக்கியம் எலிசாவுக்கு அருளப் படவில்லை. குணமடையாத வியாதி அவனைத் தாக்கும் படி தேவன் அனுமதித்தார். பெலவீனத்திலும் துன்பத்திலும் நேரம் நீண்ட தாகத் தெரியும், அப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் விசுவாசத்தோடு தேவ னுடைய வாக்குத்தத்தங்களை உறுதியாகப் பற்றியிருந்தான்; சமாதானத்தையும் ஆறுதலையும் கூறிவந்த பரலோகத் தூதர்கள் எப்போதும் தன் பக்கத்தில் இருந்ததைக் கண்டான். சூழ்ந்து நின்ற பரலோகச் சேனைகளையும் இஸ்ரவேலின் அக்கினி இரதங்களைதீஇவ 263.2

    யும் குதிரை வீரர்களையும் தோத்தானின் உச்சியிலிருந்து கண்டது போல, இரக்கம் நிறைந்த தூதர்கள் தன் பக்கத்திலிருந்ததை உணர்ந் திருந்தான். அது அவனைத் தாங்கியது. தன் வாழ்நாள் முழுவதிலும் உறுதியான விசுவாசத்தோடிருந்தான். தேவனுடைய முன்னேற் பாடுகள் பற்றியும் அவருடைய அன்பிரக்கங்கள் பற்றியும் அறிந்து, அவன் முன்னேறியபோது, தன் தேவனில் நிலைத்திருக்கும் நம் பிக்கையாக அவனுடைய விசுவாசம் மாறியது. எனவே, மரணம் தன்னை அழைத்தபோது, தன்னுடைய பிரயாசங்களிலிருந்து ஓய்வு பெற அவன் ஆயத்தமாக இருந்தான்.தீஇவ 264.1

    ’கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது. ‘சங்கீதம் 116:15. நீதிமானோ தன் மரணத்திலே நம் பிக்கையுள்ளவன். ‘ நீதி 14:32. சங்கீதக்காரனோடு சேர்ந்து எலிசா வும், தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார்’ என்று சகல நம்பிக்கையோடும் சொல்லியிருக்கக்கூடும். சங்கீதம் 49:15. சந் தோஷத்தோடே, ‘என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கி றேன்’ என்று அவன் சாட்சி பகர்ந்திருக்கக்கூடும். யோபு 19:25. ‘நானோ ரீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக் கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.’ சங்கீதம்17:15.தீஇவ 264.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents