Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    22 - மா நகரமாகிய நினிவே

    இஸ்ரவேல் பிரிந்துகிடந்த நாட்களில், உலகின் அப்போதைய மாபெரும் நகரங்களில் நினிவேயும் ஒன்றாகும். அது அசீரிய ஆட் சிப்பகுதிகளின் தலைநகரமாக விளங்கியது. பாபேல் கோபுரத்தி லிருந்து மக்கள் பிரிந்து சென்றதும், டைகிரிஸ் ஆற்றின் வளமான கரையோரம் அது நிறுவப்பட்டது. மூன்று நாள் பிரயாண விஸ்தார் மான மகா பெரிய நகரமாக’ வளருமளவிற்கு அது செழித்தது. யோனா 3:3.தீஇவ 265.1

    உலகரீதியாக அது செழித்தோங்கிய நாட்களில், பாவச் செயல் களுக்கும் துன்மார்க்கத்திற்கும் மையமாக விளங்கியது நினிவே. ‘இரத்தப் பழிகளின் நகரம் வஞ்சகத்தினால் நிறைந்திருக்கிறது; கொள்ளை ஓயாமல் நடக்கிறது’ என்று வேதாகமம் அதனைச் சுட் டிக்காட்டியது. நினிவே பட்டணத்தாரைக் கடும் பசியுள்ள கொடும் சிங்கத்திற்கு ஒப்பிட்டு, உருவகப்படுத்துகிறான் நாகூம் தீர்க்கதரிசி. ‘உன் பொல்லாப்பு எந்நேரமும் யார் பேரிலேதான் பாயாமற் போயிற்று?” என்றான் அவன். நாகூம் 3:1, 19.தீஇவ 265.2

    நினிவே துன்மார்க்கமானபோதிலும், முற்றிலும் தீங்கிற்குள் விழவில்லை. எல்லா மனுபுத்திரரையும் காண்கிறவர், ‘விலை உயர்ந்த எல்லாவற்றையும் காண்கிறவர் சிறப்பானதும் மேன்மை யானதுமான ஒன்றை அந்நகரத்தின் அநேகர் நாடிச் செல்வதை உணர்ந்தார். சங் 33:13; யோபு 28:10. ஜீவனுள்ள தேவனை2 அறியும் வாய்ப்பு வழங்கப்பட்டால் அவர்கள் தங்கள் பாவச் செயல்களை விட்டு விலகி, அவரைத் தொழுவார்கள் எனக் கண்டார். எனவே, அவர்களை அறிவுறுத்தவும், முடிந்தால் மனந்திரும்பச் செய்யவும் சந்தேகத்திற்கு இடமின்றி தேவன் தம்மை அவர்களுக்கு வெளிப் படுத்தினார்.தீஇவ 265.3

    அந்தப் பணிக்காக அமித்தாயின் குமாரனாகிய யோனா தீர்க்க தரிசியை அவர் கருவியாகத் தெரிந்துகொண்டார். அவனுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, ‘’நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களு டைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது’‘ என்று சொல் லப்பட்டது. யோனா 1:1,2.தீஇவ 266.1

    அந்தப் பணியைச் செய்வது சாத்தியமற்றதாகவும் அதில் பிரச் சனைகள் இருப்பதாகவும் யோசித்த தீர்க்கதரிசி, தன் அழைப்பின் ஞானத்தைக் கேள்வி கேட்கத் துணிந்தான். அகந்தை கொண்ட அந்தப் பட்டணத்தாரிடம் அப்படியொரு செய்தியை அறிவித்து எதையும் சாதிக்க முடியாது போலவே மனித பார்வைக்குத் தோன் றியது. தான் சேவிப்பவர் சர்வஞானமும் சர்வவல்லமையும் நிறைந் தவர் என்பதை அக்கணத்தில் அவன் மறந்தான். இன்னமும் சந்தே கித்து அவன் தயங்கிக்கொண்டிருக்கையில், அதைரியப்படுத்தி அவனை மேற்கொண்டான் சாத்தான். பேரச்சம் நிறைந்தவனாய், ‘தர்ஷீசுக்கு ஓடிப் போகும்படி எழுந்தான்’. யோப்பாவுக்குச் சென்று, அங்குப் புறப்படத் தயாராக இருந்த ஒரு கப்பலைக்கண்டு, ‘கூலி கொடுத்து, அவர்களோடேதாஷசுக்குப்போகக்கப்பல் ஏறினான்’. வச3.தீஇவ 266.2

    யோனாவுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையில், ஒரு கடின மான பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது; ஆனாலும், அங்குச் செல்லுமாறு அவனுக்குக் கட்டளையிட்டிருந்தவர் தம் ஊழியக்காரனைத் தாங்கி, அவனுக்கு வெற்றியை அருள வல்ல வராயிருந்தார். தீர்க்கதரிசி சந்தேகிக்காமல் கீழ்ப்படிந்திருப் பானானால், கசப்பான பல அனுபவங்களிலிருந்து அவன் காக்கப் பட்டிருப்பான்; அபரிதமாக ஆசீர்வதிக்கப்பட்டிருப்பான். ஆனால், யோனா நம்பிக்கையை இழந்த போதிலும் ஆண்டவர் அவனைக் கைவிடவில்லை. தொடர்ச்சியாக ஏற்பட்ட சோதனைகளாலும் புதிரான தேவசெயல்களாலும் தீர்க்கதரிசியானவர் தேவன்மேலும், இரட்சிக்கும் அவருடைய அளவில்லா வல்லமை மேலும் கொண் டிருந்த நம்பிக்கை புதுப்பிக்கப்பட இருந்தது.தீஇவ 266.3

    தனக்கு அழைப்பு கொடுக்கப்பட்டதும் முதல் காரியமாக, நிதானித்து அமைதியாக சிந்தித்துப் பார்த்திருப்பானானால், தன்னி டம் ஒப்படைக்கப்பட்டிருந்த பொறுப்பிலிருந்து எவ்வகையிலா வது தப்பிக்க தான் முயல்வது எத்தனை மூடத்தனமானது என்பதை யோனா கண்டுகொண்டிருந்திருக்கக்கூடும். ஆனால், கீழ்ப்படி யாமல் ஓடின காரியத்தில் அதிக நேரம் அவர் நிம்மதியோடு இருக்க வில்லை. ‘கர்த்தர் சமுத்திரத்தின் மேல் பெரும் காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்கதாக, பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று. அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல் செய்து, பாரத்தை லேசாக்கும்படி, கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத் தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த் தட்டில் இறங்கிப் போய்ப்படுத்துக் கொண்டு, அயர்ந்த நித்திரை பண்ணினான். ‘வச 4,5.தீஇவ 267.1

    தங்களுக்கு உதவும்படிதங்கள் தங்கள் தெய்வங்களிடம் கப் பற்காரர்கள் வேண்டிக்கொண்டிருக்கையில், கப்பல் மாலுமி, கடும் துக்கங்கொண்டவனாய் யோனாவிடம் வந்து, ‘’நீ நித்திரைபண்ணு கிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத் தருளுவார்” என்றான். வச 6.தீஇவ 267.2

    ஆனால், கடமைப் பாதையிலிருந்து விலகினவனுடைய ஜெபத்தால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. ‘இனங்காண முடியா வகையில் மூர்க்கமாக வீசின பெருங்காற்றானது தங்கள் தெய்வங் களின் கோபத்திற்கு அறிகுறி என்று உணர்ந்த கப்பற்காரர்கள், கடைசி முயற்சியாக அவர்கள், ‘’யார் நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாம் அறியும் படிக்குச் சீட்டுப் போடுவோம் வாருங் கள்” என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு, சீட்டுப்போட் டார்கள்; யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது. அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி, ‘’யார் நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழி லென்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான்” என்று கேட்டார்கள். யோனா 1:8.தீஇவ 267.3

    அதற்கு அவன், ‘’நான் எபிரெயன்; சமுத்திரத்தையும் பூமியை யும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன்” என்றான்.தீஇவ 268.1

    அவன் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகிஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனுஷர் மிகவும் பயந்து, அவனை நோக்கி, “நீ ஏன் அதைச் செய்தாய்?’ என்று கேட்டார்கள்.தீஇவ 268.2

    பின்னும் சமுத்திரம் அதிகமாய்க் கொந்தளித்துக் கொண்டி ருந்தபடியால், அவர்கள் அவனை நோக்கி, ‘’சமுத்திரம் நமக்கு அமரும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டும்?’‘ என்று கேட்டார்கள். அதற்கு அவன், ‘’நீங்கள் என்னை எடுத்துச் சமுத் திரத்திலே போட்டுவிடுங்கள்; அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும்; என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங் கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன்” என்றான்.தீஇவ 268.3

    ’அந்த மனுஷர் கரைசேரும்படி வேகமாய்த்தண்டு வலித்தார் கள்; ஆனாலும் சமுத்திரம் வெகு மும்முரமாய்க் கொந்தளித்துக் கொண்டேயிருந்தபடியால் அவர்களால் கூடாமற்போயிற்று. அப் பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, ‘’ஆ கர்த்தாவே, இந்த மனுஷனுடைய ஜீவனிமித்தம் எங்களை அழித்துப் போடா தேயும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதே யும்; தேவரீர் கர்த்தர்; உமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறீர்” என்று சொல்லி, யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட் டார்கள்; சமுத்திரம் தன்மும்முரத்தைவிட்டு அமர்ந்தது. அப்பொழுது அந்த மனுஷர் கர்த்தருக்கு மிகவும் பயந்து, கர்த்தருக்குப் பலியிட்டுப் பொருத்தனைகளைப் பண்ணினார்கள்.தீஇவ 268.4

    யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத் தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்று நாள் இருந்தான்.தீஇவ 268.5

    அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனாதன் தேவனாகிய கர்த் தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.தீஇவ 268.6

    ’என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்;
    அவர் எனக்கு உத்தரவு அருளினார்;
    நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன்
    நீர் என் சத்தத்தைக் கேட்டீர். ’சமுத்திரத்தின் நடுமையமாகிய
    ஆழத்திலே நீர் என்னை தள்ளிவிட்டீர்,
    நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது;

    உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது.
    நான் உமது கண்களுக்கு எதிரே இராதபடிக்குத் தள்ளப்பட்டேன்;
    ஆகிலும் இன்னும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன்.
    தண்ணீர்கள் பிராணபரியந்தம் என்னை நெருக்கினது;

    ஆழி என்னைச் சூழ்ந்து;
    கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது.
    பர்வதங்களின் அடிவாரங்கள் பரியந்தமும் இறங்கினேன்;
    பூமியின் தாழ்ப்பாள்கள் என்றைக்கும் என்னை அடைக்கிறதாய் இருந்தது;

    ’ஆனாலும் என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் பிராணனை
    அழிவுக்கு தப்புவித்தீர்.
    என் ஆத்துமா என்னில் தொய்ந்துபோகையில்
    கர்த்தரை நினைத்தேன்;
    அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்தில்
    உம்மிடத்தில் வந்து சேர்ந்தது.

    ’பொய்யான மாயையைப் பற்றிகொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபை
    யைப் போக்கடிக்கிறார்கள்.
    நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்;
    நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்;
    இரட்சிப்பு கர்த்தருடையது.
    தீஇவ 268.7

    வசனங்கள் 7- 2:9 ‘‘

    இரட்சிப்பு கர்த்தருடையது’ என்பதை இறுதியில் கற்றுக் கொண்டான்யோனா.சங்3:8. தேவனுடைய இரட்சிக்கும் கிருபையை உணர்ந்து, தவறுக்காக மனம் வருந்திய பிறகுதான் விடுதலை கிடைத்தது. மகா ஆழத்தின் ஆபத்துகளிலிருந்து விடுவிக்கப்பட்ட யோனா, வறண்ட நிலத்தின்மேல் போடப்பட்டான்.தீஇவ 269.1

    நினிவேயை எச்சரிக்குமாறு மீண்டுமாக தேவ ஊழியனுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது. இரண்டாந்தாரம் கர்த்தருடை வார்த் தை யோனாவுக்கு உண்டாகி, அவர், ‘’நீ எழுந்து மகாநகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்கு கற்பிக்கும் வார்த்தைகளை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி’‘ என்றார். இப்பொழுது அவன் கேள்விகேட்கவோ சந்தேகிக்கவோதாமதிக்கவில்லை; தயக்கமின்றி கீழ்ப்படிந்தான். அவன் எழுந்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான். யோனா 3:1-3.தீஇவ 269.2

    யோனா நகரத்தில் பிரவேசித்து, ‘’இன்னும் நாற்பது நாள் உண்டு. அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப் போகும்” என்று உடனடியாகக் கூற ஆரம்பித்தான். வச. 4. அவன் தெருத்தெருவாகச் சென்று, அந்த எச்சரிப்பின் செய்தியைத் தெரிவித்தான்.தீஇவ 270.1

    அந்தச் செய்தி வீணாய்ப் போகவில்லை. தேவனற்ற அந்த நகரத்தின் தெருக்களில் ஒலித்த அந்த அதிர்ச்சியான செய்தியை நக ரத்தார் அனைவரும் கேள்விப்படும் வரைக்கும் அது ஒருவருக்கொரு வர்வாய்மூலமாகப் பரவியது. அந்தச் செய்தியால் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் ஆவியானவர் உணர்வடையச் செய்தார். அந்தத் திரளான ஜனங்கள் தங்கள் பாவங்களினிமித்தம் நடுங்கி, மிகுந்த தாழ்மையோடு மனந்திரும்பும்படியும் செய்தார்.தீஇவ 270.2

    ’நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உப் வாசஞ் செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர் முதல் சிறியோர் மட்டும் இரட்டுடுத்திக் கொண்டார்கள். இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டின்போது, அவன் தன் சிங்காசனத்தை விட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான். மேலும் ராஜா, தானும் தன் பிரதானிகளும் நிர்ணயம் பண்ணின கட்டளையாக, நினிவேயி லெங்கும் மனுஷரும் மிருகங்களும் மாடுகளும் ஆடுகளும் ஒன் றும் ருசிபாராதிருக்கவும் மேயாமலும் தண்ணீர் குடியாமலும் இருக் கவும், மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள். யாருக்குத் தெரியும்; நாம் அழிந்து போகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனஸ்தாபப்பட்டு, தம்மு டைய உக்கிரகோபத்தை விட்டுத் திரும்பினாலும் திரும்புவாரென்று கூறச்சொன்னான்.’ வச.5-9.தீஇவ 270.3

    ராஜாக்களும் பிரபுக்களும், பொதுமக்களில் உயர் அந்தஸ் தில் இருந்தவர்களும் கீழானவர்களும், யோனாவின் பிரசங்கத் தைக் கேட்டு மனந்திரும்பி, பரலோக தேவனுடைய இரக்கம் தங்க ளுக்கு அருளப்படவேண்டுமென்று ஒருமுகமாய் வேண்டிக்கொண் டார்கள். மத் 12:41. ‘அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்கள் என்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்றும் சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு அதைச் செய்யாதிருந்தார்.’ யோனா 3:10. அவர்களின் அழிவு விலக்கப்பட்டது, இஸ்ரவே லின் தேவன் உயர்த்தப்பட்டு, அஞ்ஞான தேசங்கள் முழுவதிலும் கனப்படுத்தப்பட்டான். அவருடைய பிரமாணம் பயபக்தியோடு கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், அதிலிருந்து சில வருடங்களில், நினிவேதன் அகந்தையான கர்வத்தினாலும், தேவனை மறந்ததினா லும் சுற்றிலுமிருந்த தேசங்களுக்கு இரையாக இருந்தது. (அசீரியா வின் வீழ்ச்சி பற்றின விபரத்திற்கு 30 ஆம் அத்தியாயத்தைப் பார்க் கவும்)தீஇவ 270.4

    துன்மார்க்கராக இருந்த நகரத்தார், இரட்டுடுத்திக்கொண்டு, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்ப வழிநடத்தப்பட்டார்கள். அவர்களைத் தப்புவிக்க தேவன் விரும்பியதை அறிந்ததும், அவ ருடைய ஆச்சரியக் கிருபையையும் நினைத்து யோனாதான் முதன் முதலில் சந்தோஷப்பட்டிருக்க வேண்டும். மாறாக, தன்னை ஒரு கள்ளத்தீர்க்கதரிசியென்று நினைப்பார்களோ என்ற எண்ணம் அவனை வாட்டியது. தன் சுயமரியாதையைப் பெரிதாக எண்ணி, அந்தப் பட்டணத்திலிருந்த பரிதாபமான ஆத்துமாக்களின் ஈடு இணையற்ற மதிப்பைக் காணமறந்தான். மனந்திரும்பிய நினி வே பட்டணத்தார் மேல் தேவன் மனதுருகினது, யோனாவுக்கு மிகவும் விசாரமாயிருந்தது. அவன் கடுங்கோபங்கொண்டான். உடனே கர்த்தரை நோக்கி, ‘’கர்த்தாவே, நான் என் தேசத்திலிருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன் ; நீர் இரக்கமும் மனவுருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப் படுகிறவருமான தேவனென்று அறிவேன்’‘ என்றான் யோனா. யோனா 4:1, 2.தீஇவ 271.1

    மீண்டும் ஒருமுறை கேள்விகேட்கவும், சந்தேகிக்கவும் தூண் டப்பட்டான்; மீண்டும் ஒருமுறை சோர்வுக்குள்ளானான் பிறர் நலன் மேல் அக்கறை காட்ட மறந்தான். அந்தப் பட்டணம் தப்புவிக்கப்பட்ட தைப் பார்த்துக்கொண்டு வாழ்வதைக்காட்டிலும் செத்துப்போவதை மேலானதாக நினைத்தான். தன்னுடைய அதிருப்தியின் நிமித்தம், ‘’இப்போதும் கர்த்தாவே, என் பிராணனை என்னைவிட்டு எடுத்துக் கொள்ளும்; நான் உயிரோடு இருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும்’‘ என்று விசனப்பட்டான்.தீஇவ 271.2

    அதற்குக் கர்த்தர், ‘’நீ எரிச்சலாக இருக்கிறது நல்லதோ?’‘ என்றார். பின்பு, யோனா நகரத்திலிருந்து புறப்பட்டு, நகரத்துக்குத் கிழக்கே போய் அங்கே தனக்கு ஒரு குடிசையைப் போட்டு, நகரத் துக்குச் சம்பவிக்கப் போகிறதை தான் பார்க்குமட்டும் அதின் நிழ லின்கீழ் உட்கார்ந்திருந்தான். யோனாவுடைய தலையின்மேல் நிழ லுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனமடிவுக்கு நீங் கலாக்கவும் தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்குச் செடியை முளைக் கக் கட்டளையிட்டு, அதை அவன் மேல் ஓங்கி வளரப்பண்ணினார்; அந்த ஆமணக்கின் மேல் யோனா மிகவும் சந்தோஷப்பட்டான். வச.3-6.தீஇவ 272.1

    பிறகு ஒரு எடுத்துக்காட்டின் மூலம் யோனாவுக்குப் பாடம் கற் பித்தார் தேவன். அவர், ‘ஒரு பூச்சியைக் கட்டளையிட்டார். அது ஆமணக்குச் செடியை அரித்துப்போட்டது; அதினால் அது காய்ந்து போயிற்று; சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார். அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சேர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி, ‘நான் உயிரோடு இருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக் கும்” என்றான்.தீஇவ 272.2

    மீண்டுமாக தேவன் தம் தீர்க்கதரிசியினிடத்தில், ‘’நீ ஆமணக் கின் நிமித்தம் எரிச்சலாயிருக்கிறது நல்லதோ?” என்று கேட்டார். அதற்கு அவன், ‘’நான் மரணபரியந்தம் எரிச்சலாயிருக்கிறது நல்லது’‘ என்றான்.தீஇவ 272.3

    அதற்குக் கர்த்தர், ‘நீ பிரயாசப் படாததும் நீ வளர்க்காததும், ஒரு ராத்திரியிலே முளைத்ததும், ஒரு ராத்திரியிலே அழிந்துபோனது மான் ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே. வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசமறியாத மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகாநகரமாகிய நினி வேக்காக நான் பரிதபியாமலிருப் பேனோ ?” என்றார். வச 7-11.தீஇவ 272.4

    நினிவேயைத் தப்புவித்ததில் தேவ நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாமல், குழம்பி, குறுகிப்போனாலும், அந்த மகா நக ரத்தை எச்சரிக்குமாறு தனக்குக்கொடுக்கப்பட்ட பணியை நிறைவேற் றினான் யோனா. முன்னுரைக்கப்பட்ட நிகழ்ச்சி நிகழவில்லை என் றாலும், தேவன் கொடுத்த எச்சரிப்பின் செய்தி விருதாவாக இருக்க வில்லை. எதனை நிறைவேற்ற தேவன் திட்டமிட்டிருந்தாரோ, அந்த நோக்கத்தை அது நிறைவேற்றியது. அவருடைய கிருபையின் மகிமை பிற மக்கள் மத்தியிலே வெளிப்பட்டது. வெகு நாட்களாக அந்தகாரத்திலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத் திலும் இருப்பிலும் கட்டுண்டு கிடந்தவர்கள் தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார். அந்தகாரத்திலும் மரண இரு ளிலுமிருந்து அவர்களை வெளிப்படப்பண்ணி, அவர்கள் கட்டு களை அறுத்தார். அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார். சங்கீதம் 107:11, 13, 14, 20.தீஇவ 272.5

    கிறிஸ்து தம் பூலோக ஊழியத்தின்போது, யோனாவின் பிரசங் கத்தால் நினிவேயில் ஏற்பட்ட நன்மையைக் குறிப்பிட்டுக் காட்டி னார். மேலும், தம் காலத்தில், தங்களைத் தேவ மக்களென சொல் லிக்கொண்டவர்களை துன்மார்க்க நினிவேயின் மக்களோடு ஒப் பிட்டார். ‘’நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள். யோனாவின் பிரசங் கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்” என்று சொன்னார். மத்தேயு 12:41, 42. வியாபாரக் கோஷங்களும் வர்த்த கத்தால் ஏற்படும் வாய்ச்சண்டைகளும் நிறைந்திருந்ததும், மனிதர் சகலத்தையும் தங்களுக்கெனப் பெற முயல்கிறதுமான ஒரு தேசத் தில், அந்தக் குளறுபடியான சத்தங்களுக்கு மேலாக, தேவ எக்கா ளம் போல கிறிஸ்துவுடைய சத்தம் கேட்டது: ‘’மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ் டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவ னுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?’‘ மாற்கு 8:36, 37.தீஇவ 273.1

    யோனாவின் பிரசங்கம் நினிவே பட்டணத்தாருக்கு ஓர் அடை யாளமாக இருந்ததுபோல், கிறிஸ்துவின் பிரசங்கம் அவர் காலத் தலைமுறையினருக்கு ஓர் அடையாளமாக இருந்தது. ஆனால், வார்த்தையை ஏற்றுக்கொண்டதில்தான், இரு பட்டணத்தாருக்கு மிடையே எத்தனை மாறுபாடு கருத்துவேறுபாட்டிற்கும் ஏளனத்திற் கும்மத்தியில், தம் ஊழியப்பணியை நிறைவேற்றுவதற்கு நம் இரட் சகர் தொடர்ந்து பிராயசப்பட்டார்.தீஇவ 274.1

    இன்றைய தேவ ஊழியர்களுக்கும் இது ஒரு பாடமாகும். மெய்த்தேவனுடைய நோக்கங்களையும் சாற்றுப் பண்புகளையும் பற்றிய அறிவு முற்கால நினிவே பட்டணத்தாருக்குத் தேவையா யிருந்தது போல, இன்றைய தேசங்களின் நகரத்தாருக்கும் மெய்யா கவே அவசியமாயிருக்கிறது. பலரும் மறந்துபோன மேன்மையான உலகை கிறிஸ்துவின் தூதுவர்கள் மனிதருக்குச் சுட்டிக்காட்ட வேண்டும். தேவனால் கட்டப்பட்டு, உருவாக்கப்படும் நகரம் மாத் திரமே நிலைத்து நிற்குமென பரிசுத்த வேதவாக்கியங்கள் போதிக் கின்றன. தேவனுடைய வற்றாத மகிமையால் பரலோகம் நிறைந்து, ததும்புவதை விசுவாசக் கண்ணால் மனிதன் காணலாம். அழிவில் லாச் சுதந்தரத்தைப் பெறவேண்டுமென்ற பரிசுத்த குறிக்கோளோடு போராட வேண்டுமென ஆண்டவராகிய இயேசு தம் ஊழியக்காரர் மூலம் மனிதரை அழைக்கிறார். தேவனுடைய சிங்காசனத்திற்கு அருகே பொக்கிஷத்தைச் சேர்க்க வேண்டுமென அவர் வற்புறுத்து கிறார்.தீஇவ 274.2

    துன்மார்க்கத்தின் நிலையான பெருக்கத்தால், நகரவாசிகளின் மேல் உலகளாவிய ஒரு குற்றம் உண்டாகி வருகிறது. தற்போது நிலவி வரும் கேடானது, மனித எழுத்துகளால் விவரிக்கமுடியாத அளவிற்கு ஆற்றல் மிக்கதாயிருக்கிறது. சச்சரவு, லஞ்சம், பித்த லாட்டம் போன்றவை ஒவ்வொருநாளும் புதுப்புது விதத்தில் வெளிப்படுகின்றன. வன்முறை, சட்டவிரோதம், பிறர் துன்பத்தில் அக்கறையின்மை மனிதஉயிரைமிருகத்தனமாகவும் கொடூரமாகவும் பறித்தல் போன்றவருத்தமான காரியங்கள் ஒவ்வொருநாளும் நடை பெறுகிறது. வெறித்தனமும் கொலையும் தற்கொலையும் அதி கரித்து வருவதை ஒவ்வொருநாளும் சாட்சியிடுகிறது.தீஇவ 275.1

    யேகோவாவின் நன்மையான திட்டங்களை மனிதர் அறியக் கூடாதென்று காலம் காலமாக சாத்தான் அவற்றை மறைத்து வருகி றான். தேவ பிரமாணத்தின் மேன்மையான காரியங்களான நீதி மற் றும் இரக்கத்தின் நியதிகளையும் அவற்றிற்குள்ளாகப் புதைந்திருக் கும் அன்பையும் அவர்களுடைய பார்வையிலிருந்து அகற்ற அவன் பெருமுயற்சி எடுத்துக் கொள்கிறான். இன்று நாம் வாழ்கிற காலக் கட்டத்தின் அற்புத அறிவையும் முன்னேற்றத்தையும் கண்டு மனி தர் பெருமை பாராட்டுகிறார்கள்; ஆனால், ‘பூமி அக்கிரமத்தாலும் வன்முறையாலும் நிறைந்திருப்பதாக தேவன் காண்கிறார், ‘தேவ பிரமாணம் ஒழிந்துபோனது’ என்றும், ‘வேதாகமம் நம்பத்தகுந்தது அல்ல’ என்றும் மனிதர் கூறுகின்றனர். அதன் விளைவாக, நோவா வின் காலத்திலும் இஸ்ரவேலர் அவ பக்தி கொண்டிருந்த காலத்தி லும் இருந்ததும், அதன் பிறகு இல்லாதிருந்த அளவிற்குத் , தீமை யின் அலையானது, உலகம் முழுவதிலும் வீசிவருகிறது. விலக்கப் பட்ட காரியங்களின் மேலான இச்சையை நிறைவேற்றும்படி, மன நேர்மையும் நன்மையும் பக்தியும் தூரே எறியப்படுகின்றன. ஆதா யத்திற்காகச் செய்யப்படும் குற்றங்கள் பற்றிய செய்திகள், இரத் தத்தை உறையச் செய்கிறவைகளாகவும் மனதைப் பயங்கரத்தால் நிரப்புகிறவைகளாகவும் இருக்கின்றன.தீஇவ 275.2

    நம் தேவன் இரக்கத்தின் தேவன். தம் பிரமாணத்தை மீறுகிற வர்களை நீடிய பொறுமையோடும் இரக்கமான உருக்கத்தோடும் அவர் அணுகுகிறார். பரிசுத்த ஆகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தெய்வீக பிரமாணத்தை நன்கு கற்றறிவதற்கான அநேக வாய்ப்பு களை இன்றைய கால ஆண்களும் பெண்களும் பெற்றிருந்தாலும், வன்முறையும் குற்றங்களும் மிகுந்திருக்கும் நகரங்களைப் பார்த் துக்கொண்டு சர்வலோகத்தின் ராஜாவால் எவ்விதத்திலும் பொறுத் துக்கொள்ள முடியாது. கீழ்ப்படியாமையிலே நிலைத்திருப்போர் தேவ பொறுமையின் எல்லையை வேகமாக நெருங்கி வருகின்றனர்.தீஇவ 275.3

    விழுந்துபோன உலகத்தாரை மாட்சிமிகு அரசர் அணுகும் முறையில் எதிர்பாராமல் திடீரென்று ஒரு மாற்றம் ஏற்படும்போது மனிதர் ஆச்சரியமடைய வேண்டுமோ? குற்ற அதிகரிப்பையும் மீறு தலையும் தொடர்ந்து தண்டனை கொடுக்கப்படும்போது அவர்கள் ஆச்சரியமடைய வேண்டுமோ? ஏமாற்றத்தாலும் வஞ்சகத்தாலும் சட்டவிரோதமான முறையில் ஆதாயங்களைப் பெற்றவர்கள்மேல் தேவன் அழிவையும் மரணத்தையும் கொண்டு வரும்போது அவர் கள் ஆச்சரியப்பட வேண்டுமா? தேவ நிபந்தனைகள் குறித்த அதி கமான வெளிச்சம் தங்கள் பாதையில் பிரகாசிக்கிறபோதிலும் யேகோவாவின் ஆளுகையைக் கண்டுகொள்ள அநேகர் மறுக் கிறார்கள்; பரலோக அரசாங்கத்திற்கு எதிராகச் சகலகலகத்தையும் உருவாக்குகிறவனின் அந்தகாரக் கொடியின் கீழ் இருக்கத் தெரிந்து கொள்கின்றனர்.தீஇவ 276.1

    தேவனுடைய பொறுமை மிகப்பெரியது. அவருடைய பரி சுத்த கட்டளைகள் தொடர்ச்சியாக அவமதிக்கப்படுவதை எண் ணிப்பார்த்தோமானால், தேவன் எவ்வளவுக்குப் பொறுமையாயி ருக்கிறார் என்பதை நாம் அறியலாம். சர்வவல்லவர் தம்முடைய தன்மைகளைக் கட்டுப்படுத்தி வந்திருக்கிறார். ஆனாலும், பத்துக் கட்டளைகளின் நீதியான கோரிக்கைகளைத் துணிகரமாக மறுதலிக் கும் துன்மார்க்கரைத் தண்டிக்க அவர் நிச்சயம் எழுந்தருளுவார்.தீஇவ 276.2

    தேவன் ஒரு தவணையின் காலத்தை மனிதருக்கு அனுமதிக்கி றார். ஆனால், ஒரு நிலைக்குமேல் தேவனுடைய பொறுமை முற்றுப் பெறும்; தேவனுடைய நியாயத்தீர்ப்பு நிச்சயமாகப் பின்தொடரும். தம் கோபத்திலிருந்து மனிதரையும் நகரங்களையும் காப்பாற்ற இரக்கத் தோடு அவர்களை எச்சரித்து, நீண்டகாலமாக அவர்களைச் சகித்துக் கொள்கிறார் தேவன். ஆனால், இரக்கம்வேண்டி ஏறெடுக்கப்படும் வேண்டுதல்கள் கேட்கப்படாத ஒரு காலம் வரும்; சத்தியத்தின் ஒளியைத் தொடர்ந்து மறுதலிக்கிற கலகக் கூட்டத்தார் பூண்டோடு அழிவார்கள். அது அவர்களுக்கு நன்மையாக இருக்கும்; அவர் களின் முன்மாதிரியால் ஏதாவது வகையில் பாதிக்கப்பட வாய்ப் புள்ளவர்களுக்கும் நன்மையானதாக இருக்கும்.தீஇவ 276.3

    மனிதரின் எவ்விதத் தைலத்தாலும் குணமாக்க முடியாத துக்க மானது உலகில் உண்டாகும் காலம் சமீபித்திருக்கிறது. தேவ ஆவி யானவர் விலக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். கடலிலும் நிலத்தில் லும் உண்டாகும் பேரழிவுகள் அடுத்தடுத்து வேகமாக நிகழ்கின் றன. மிகுந்த உயிர்ச்சேதத்தையும் பொருட்சேதத்தையும் உண்டாக் கும் பூமியதிர்ச்சிகளாலும் புயல் காற்றுகளாலும் தீயாலும் வெள்ளத் தாலும் உண்டாகும் அழிவுகளையும் பற்றி எவ்வளவு அதிகமாக நாம் கேள்விப்படுகிறோம்! முற்றிலும் மனிதனுடைய கட்டுப்பாட் டிற்கு அப்பாற்பட்டு, இயற்கை விதிக்குட்படாத இயற்கைச் சக்தி களின் தாறுமாறான தாக்குதல்களினால்தான் இந்த அழிவுகள் உண் டாகின்றன என்பது தெளிவு. ஆனால், அவை அனைத்திலும் தேவ நோக்கத்தைக் கண்டு கொள்ளலாம். ஆண்களும் பெண்களும் தங் கள் ஆபத்தறிந்து விழிப்படைய வேண்டும். அதற்காக அவர் கைக் கொள்ளும் வழிமுறைகளில் அவைகளும் அடங்கும்.தீஇவ 277.1

    பெரும் நகரங்களில் இரட்சிப்பின் நற்செய்தியை அறிவிக்க தேவஊழியர்கள் பெரிதாக முயல்கிறபோது, தாங்கள் சந்திக்க வேண்டியதிருக்கும் துன்மார்க்கத்தையும் அநீதியையும் சீர்கேட்டை யும் கண்டு அதைரியமடையக் கூடாது. துன்மார்க்க நகரமான கொரிந்துவிலிருந்த அப்போஸ்தலனாகிய பவுலிடம், ‘’நீ பயப் படாமல் பேசு, மவுனமாயிராதே; நான் உன்னுடனேகூட இருக்கி றேன், உனக்குத் தீங்கு செய்யும்படி ஒருவனும் உன் மேல் கை போடு வதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு’‘ என்று சொன்ன ஆண்டவர், அதே செய்தியால் தம் ஊழியர் ஒவ் வொருவரையும் தேற்றுவார். அப்போஸ்தலர் 18:9, 10. தேவவார்த்தை யின் ஆலோசனைக்கு அநேகர் செவிகொடுக்கமாட்டார்கள் என்றா லும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் கொண்ட இரட்சகரையும், சத்தியத்தையும் ஒளியையும் உலகத்தார் அனைவருமே புறக் கணிக்கப் போவதில்லை என்பதை ஆத்துமாக்களின் இரட்சிப்புக் கேதுவான ஊழியத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டும். வன்முறையும் குற்றமும் நிறைந்திருக்கும் நகர மானாலும், சரியான போதனையால் இயேசுவைப் பின்பற்றத் தெரிந்துகொள்ளக்கூடியவர் கள் அங்கும் இருக்கவே செய்கிறார் கள். அப்படியாக, இரட்சிக்கும் சத்தியத்தை ஆயிரக்கணக்கானோ ரிடம் கொண்டுசெல்ல முடியும்; அவர்கள் கிறிஸ்துவைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் படி வழிநடத்தமுடியும்தீஇவ 277.2

    இன்றைய பூமியின் குடிமக்களுக்கான தேவசெய்தி என்ன வெனில், நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வரு வார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்’ என்பதே. மத்தேயு 24:44. சமுதாயத்திலும், குறிப்பாக தேசங்களிலுள்ள பெரும் நகரங் களிலும் தற்போது நிலவும் சூழ்நிலைகள், ‘தேவ நியாயத்தீர்ப்பு வந்துவிட்டது’ என்பதையும், ‘உலகப்பிரகாரமான சகல காரியங் களுக்கும் முடிவு சமீபத்திருக்கிறது’ என்பதையும் இடிமுழக்கத் தொனியோடு அறிவிக்கின்றன. யுகங்களின் இக்கட்டான காலக் கட்டத்தில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். தீ, வெள்ளம், பூமிய திர்ச்சி, யுத்தம், இரத்தம் சிந்துதல் என ஒன்றன்பின் ஒன்றாக தேவ நியாயத்தீர்ப்புகள் வேகமாக நடைபெறப்போகின்றன. பெரிதும் வஞ்சகமுமான இக்காலக் கட்டத்தின் நினைவுகளால் நாம் ஆச்சரிய மடையக்கூடாது. ஏனெனில், மனந்திரும்பாதவர்களைப் பாதுகாக்க இரக்கத்தின் தூதுவனால் நெடுநாட்கள் பொறுத்திருக்க முடியாது.தீஇவ 278.1

    ’இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப் பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலை செய்யப்பட்டவர்களை இனிமூடாதிருக்கும்.’ ஏசாயா 26:21. தேவ கோபமெனும் புயல் அதிகரித்துக் கொண்டிருக் கிறது. நோவாவின் பிரசங்கத்தைக் கேட்டதும் நினிவே பட்டணத் தார் செய்ததுபோல, இரக்கத்தின் அழைப்புகளுக்கு இணங்கி, தெய்வீக அரசரின் பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிவதால் பரிசுத்த மாக்கப்படுகிறவர்கள் மாத்திரம்தான் நிலைத்து நிற்கமுடியும். பாழ்க் கடிப்பு கடந்துபோகும் மட்டும் நீதிமான்கள் மாத்திரமே கிறிஸ்து வோடு தேவனுக்குள்ளாக மறைக்கப்படுவார்கள். தீஇவ 278.2

    ’வல்ல தேவரீர் அல்லால்
    வேறே தஞ்சம் இல்லையே;
    கைவிடாம்
    ஆற்றித் தேற்றித் தாங்குமே, நீரே என்றன் நம்பிக்கை
    நீர் சகாயம் செய்குவீர்; ஏதுமற்ற ஏழையைச்
    செட்டையாலே மூடுவீர்.”
    என்பதே ஆத்துமாவின் பாடலாயிருக்கட்டும்.
    தீஇவ 278.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents