Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    அணிந்துரை

    கிறிஸ்து இயேசுவுக்குள் அன்பான சகோதர-சகோதரிகளே!தீஇவ 5.1

    சாலொமோன் காலத்திலிருந்து இஸ்ரவேல் தேசத்தை அரசாண்ட இஸ்ரவேல்தேச இராஜாக்களைப்பற்றியும், யூத்தேச இராஜாக்களைப்பற்றி யும் 1இராஜாக்கள், இராஜாக்கள், 1 நாளாகமம், 2நாளாகமம் ஆகிய புத்தகங் களில் வாசிக்கிறோம். சாலொமோனுக்குப்பிறகு, தேசமானது இஸ்ரவேல், யூதா எனும் இரண்டு தேசங்களாகப் பிரிந்தது. இஸ்ரவேலை வடதேசம் என் றும், யூதாவை தென்தேசம் என்றும் அழைப்பார்கள். அசீரியா ராஜாவாகிய தில்காத்பில் நேசரின் காலத்தில் வட தேசமாகிய இஸ்ரவேல் தேசமானது அசீரியாவுக்குச் சிறைப்பட்டுப்போனது. கல்தேய ராஜாவாகிய நேபுகாத்நேச் சார்காலத்தில் தென்தேசமாகிய யூதா தேசம் பாபிலோனுக்குச் சிறைப்பட்டு போனது. மேதிய - பெர்சிய ராஜாவாகிய கோரேசின் காலத்தில் யூதர்கள் விடுதலை பெற்று, எருசலேமுக்குத் திரும்பிவந்தார்கள். அக்காலங்களில் தேவன் தமது தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தி, அந்தத் தேச மக்களோடும் நிர்வாகிகளோடும் பேசினார். இவை அனைத்தையும் பற்றிய விளக்கங்களை இந்தப் புத்தகத்தில் நீங்கள் வாசிக்கலாம்.தீஇவ 5.2

    இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித் தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன்விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன். மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிட வில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனை யைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும் படியான போக்கையும் உண்டாக்குவார். 1கொரி 10:11-13.தீஇவ 5.3

    இந்த நன்மைகளை நீங்கள் பெற்று அனுபவிப்பதற்காக, இந்தப் புத்தகம் வெளியிடப்படுகிறது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.தீஇவ 5.4

    பா. அந்தோணிதாஸ்,
    தலைவர்,
    ஓரியண்டல் வாட்ச்மேன் பப்ளிஷிங் ஹவுஸ்

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents