Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    28 - எசேக்கியா

    ஆகாசின் தாறுமாறான ஆட்சிக்கு நேர் எதிராக அவனுடைய மகனின் வளமிக்க ஆட்சியில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. வடராஜ்யத்தை ஆக்கிரமித்திருந்த ஆபத்துகளிலிருந்து யூதாவைக் காப்பாற்ற தன் திராணிக்கு உட்பட்ட அனைத்தையும் செய்யும் தீர் மானத்தோடு சிங்காசனம் ஏறினான் எசேக்கியா. அறைகுறை நட வடிக்கைகளை ஊக்கப்படுத்தி தீர்க்கதரிசிகளில் எவருமே பேசின் தில்லை. வரவிருந்த முழு அளவிலான சீர்த்திருத்தத்தால் மாத்திரமே நியாயத்தீர்ப்புகளைத் தவிர்க்கக் கூடிய நிலை இருந்தது.தீஇவ 331.1

    இந்த இக்கட்டான நிலையில், வாய்ப்பைப் பயன்படுத்துபவ னாய்த் திகழ்ந்தான் எசேக்கியா. சிங்காசனம்ஏறினதுமே திட்டமிட்டுக் காரியங்களைச் செயல்படுத்த ஆரம்பித்தான். வெகுநாட்களாகப் புறக்கணிக்கப்பட்டிருந்த தேவாலய ஆராதனை முறைகளை மீண் டும் செயல்படுத்துவதில் முதலாவது தன் கவனத்தைத் திரும்பினான்; அதற்காக, தங்கள் பரிசுத்த அழைப்பிற்கு உண்மையோடிருந்த ஒரு கூட்ட ஆசாரியர்கள் மற்றும் லேவியர்களின் ஒத்துழைப்பை அவன் ஊக்கமாக நாடினான். அவர்கள் உண்மையோடு ஆதரிப்பார்களென நம்பி, உடனடியாகச் செய்யப்படவேண்டியிருந்த விரிவான சீர்திருத் தங்கள் குறித்துத் தாராளமாக அவர்களோடு பேசினான். ‘நம்மு டைய பிதாக்கள் துரோகம் பண்ணி, நம்முடைய தேவனாகிய கர்த்த ருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, அவரை விட்டு விலகி, தங்கள் முகங்களைக் கர்த்தருடைய வாசஸ்தலத்தை விட்டுத் திருப்பினார்கள். ‘’இப்போதும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்த ருடைய உக்கிர கோபம் நம்மைவிட்டுத் திரும்பும் படிக்கு, அவ ரோடே உடன்படிக்கைபண்ண என் மனதிலே நிர்ணயித்துக்கொண் டேன்” என்று சொன்னான். 2நாளா 29:6, 10தீஇவ 331.2

    தேவாலயம் மூடப்பட்டு, ஆராதனை முறைமைகளும் அதன் சடங்காச்சாரங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. நகரத்தின் தெருக்களி லும், ராஜ்யம் முழுவதிலும் சிலைவழிபாடு வெளிப்படையாக நடைபெற்று வந்தது. யூதாவின் தலைவர்கள் மக்களுக்கு முன் ஒரு சிறந்த முன்மாதிரியை ஏற்படுத்தியிருந்தால், அநேகர் தேவனுக்கு உண்மையோடு இருந்திருப்பார்கள். ஆனால், இப்போது அவர்கள் அவபக்தியில் இருந்தார்கள், சுற்றிலுமிருந்த தேசத்தாரின் பார்வை யில் மரியாதையை இழந்திருந்தார்கள். இவை அனைத்தையும் சொல்லவேண்டிய விதத்தில் எடுத்துக் கூறினான் ராஜா. வடராஜ்யம் வேகமாக சுக்குநூறாக உடைந்து கொண்டிருந்தது; அநேகர் பட்டயத் தால் மடிந்து கொண்டிருந்தனர்; ஏராளமானோர் ஏற்கனவே சிறைக் கைதிகளாகக் கொண்டுசெல்லப்பட்டிருந்தனர். விரைவிலேயே இஸ்ரவேல் முற்றிலுமாக அசீரியரின் கரங்களில் விழுந்து, முற்றி லும் அழிக்கப்பட இருந்தது; தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் தேவன் வல்லமையாகக் கிரியை செய்யாவிட்டால், இதே நிலைதான் நிச்சயமாக யூதாவுக்கும் சம்பிவிக்க இருந்தது.தீஇவ 332.1

    தேவையான சீர்திருத்தங்களைச் செய்ய தன்னோடு ஒத்துழைக் கும்படி ஆசாரியர்களிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்தான் எசேக்கியா. இப்பொழுது அசதியாயிராதேயுங்கள்; நீங்கள் கர்த் தருக்குப் பணிவிடை செய்யும்படி அவருக்கு முன்பாக நிற்கவும், அவருக்கு ஊழியஞ் செய்கிறவர்களும் தூபங்காட்டுகிறவர்களும் மாயிருக்கவும். உங்களை அவர் தெரிந்துகொண்டார்.’‘ ‘’நீங்கள் இப்போது உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொண்டு, உங்கள் பிதாக் களின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைப் பரிசுத்தம் பண் ணுங்கள்” என்று அறிவுறுத்தினான். 2 நாளா 29:11, 5.தீஇவ 332.2

    உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டிய காலக்கட்டமாக அது இருந்தது. அந்த வேலையை உடனே ஆரம்பித்தார்கள் ஆசாரியர் கள். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாவிட்டாலும், தங்களைச் சேர்ந்தவர்களின் ஒத்துழைப்புடன் தேவாலயத்தைச் சுத் திகரித்து, பரிசுத்தப்படும் பணியில் மனப்பூர்வமாக ஈடுபட்டனர். பலவருடப் புறக்கணிப்பு மற்றும் தெய்வ நிந்தனையின் நிமித்தம், அந்த வேலையைச் செய்வதில் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால், லேவியரும் ஆசாரியர்களும் களைத் துப்போகாமல் பிரயாசப்பட்டனர். ஒரு சில நாட்களிலேயே தங்கள் வேலையை அவர்களால் செய்து முடிக்க முடிந்தது. தேவாலயக் கதவுகள் செப்பனிடப்பட்டு, திறக்கப்பட்டன. பரிசுத்தமான சகல பணிமுட்டுகளும் அதனதன் இடத்திலே ஒன்றாக அடுக்கிவைக்கப் பட்டன; பரிசுத்த ஸ்தல ஆராதனைகளை மீண்டும் ஆரம்பிக்க, சகல மும் தயார் நிலையில் இருந்தன.தீஇவ 332.3

    அங்கு நடைபெற்ற முதல் ஆராதனையில், ராஜாவாகிய எசேக் கியாவோடும் ஆசாரியர்களோடும் லேவியர்களோடும் பட்டணத் தின் பிரபுக்கள் இணைந்து, தேசத்தின் பாவங்களுக்காக மன்னிப்பு வேண்டினார்கள். ‘இஸ்ரவேல் அனைத்திற்கும் பாவ நிவர்த்தி உண்டாக்க’ பலிபீடத்தின்மேல் பாவநிவாரண பலிகள் ஏறெடுக்கப் பட்டன. அவர்கள் ‘பலியிட்டுத் தீர்ந்தபோது, ராஜாவும் அவனோ டிருந்த அனைவரும் தலைகுனிந்து பணிந்து கொண்டார்கள்’ 2நாளா 29:29. ஆலயப்பிராகாரங்களில் மீண்டுமாகத் துதியின் சத்தமும் தொழு கையின் சத்தமும் எதிரொலித்தன. பாவத்தின் அடிமைத்தனத்தி லிருந்தும் அவபக்தியிலிருந்தும் தாங்கள் விடுவிக்கப்படுகிறதைத் தொழுதுகொள்கிறவர்கள் உணர்ந்தபோது, தாவீதின் சங்கீதங் களும் ஆசாபின் சங்கீதங்களும் சந்தோஷத்தோடு பாடப்பட்டன. இந்தக் காரியத்தைச் சடுதியாய்ச் செய்வதற்குத் தேவன் தமது ஜனத்தை ஆயத்தப்படுத்தினதற்காக எசேக்கியாவும், ஜனங்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். வச. 24,29,36.தீஇவ 333.1

    அவபக்தியின் போக்குத் தடை செய்யப்படும்படி, உறுதியான ஒரு சீர்திருத்த இயக்கத்தைச் செயல்படுத்த, யூதாவிலுள்ள பிர தானிகளின் இருதயங்களை ஆயத்தப்படுத்தினார் தேவன். தாம் தெரிந்துகொண்டஜனங்களுக்குத் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலம் ஊக்கமான வேண்டுதலின் செய்திகளை மீண்டும் மீண்டும் அனுப்பி வந்தார். அப்போது எதிரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த இஸ்ர வேல் ராஜ்யத்தின் பத்துக் கோத்திரத்தார் அச்செய்திகளைப் புறக் கணித்தும் மறுதலித்தும் வந்திருந்தனர். ஆனால், தேவனுக்குப் பயந்த மீதமான ஒரு கூட்டத்தார் யூதாவில் இருந்தார்கள். தீர்க்க தரிசிகள் தொடர்ந்து அவர்களிடம் வேண்டுகோள் விடுத்து வந்தனர். ‘’இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் முற்றிலும் விட்டு விலகினவரிடத்தில் திரும்புங்கள்” என்று ஏசாயா வலியுறுத்தினான். ஏசா 31:6. ‘’நானோ வென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவ னுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார். என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார். நான் கர்த்தருக்கு விரோத மாகப் பாவஞ் செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி, என் நியா யத்தை விசாரிக்குமட்டும் அவருடைய கோபத்தைச் சுமப்பேன்; அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டு வருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன்” என்று நம்பிக்கையோடு அறிவித்தான் மீகா. மீகா 7:7-9.தீஇவ 333.2

    முழு இருதயத்தோடுதம்மிடம் திரும்புகிறவர்களை மன்னித்து, ஏற்றுக்கொள்ள தேவன் விரும்புகிறாரென்பதை வெளிப்படுத்தும் இச்செய்திகளும் இதுபோன்ற மற்ற செய்திகளும், தேவாலயக் கத வுகள் மூடப்பட்டிருந்த அந்தகாரமான நாட்களில் மங்கிப்போயிருந்த அநேக ஆத்துமாக்களுக்கு நம்பிக்கையைக் கொண்டுவந்தன. இப் பொழுதும், தலைவர்கள் சீர்திருத்தத்தை ஆரம்பித்தபோது, பாவ அடிமைத்தனத்தால் சோர்ந்துபோயிருந்த பெருங்கூட்ட ஜனங்கள் மெய்யாகவே அதற்குச் செவி சாய்த்தனர்.தீஇவ 334.1

    பாவமன்னிப்பு வேண்டியும், யேகோவாவின்பேரில் மெய்ப் பற்றுக் கொள்வதாக மீண்டும் பொருத்தனை செய்யவும் ஆலயப் பிராகாரங்களில் பிரவேசித்தவர்கள், வேதாகமத்தின் தீர்க்கதரிச னப் பகுதிகளில் கொடுக்கப்பட்டிருந்த உன்னதமான ஊக்கங் களைப் பெற்றுக்கொண்டார்கள். சமஸ்த இஸ்ரவேலரும் கேட்டுக் கொண்டிருக்க, சிலைவழிபாட்டிற்கு எதிரான உயர்வான எச்சரிப்பு கள் மோசேயின் மூலம் கொடுக்கப்பட்டன. அதோடு சேர்த்து, அவ பக்தி நிலவும் நாட்களில் தேவனை முழு இருதயத்தோடு நாடுகிற வர்களுக்குச் செவிகொடுக்கவும் மன்னிக்கவும் அவர் விரும்புகிறா ரென்பதைக் குறித்த தீர்க்கதரிசனங்களும் கொடுக்கப்பட்டன. “நீ வியாகுலப்பட இவைகளெல்லாம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும் போது, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பி அவர் சத்தத்திற் குக் கீழ்ப்படிவாயானால், உன் தேவனாகிய கர்த்தர் இரக்கமுள்ள தேவனாயிருக்கிறபடியால், அவர் உன்னைக்கைவிடவுமாட்டார், உன்னை அழிக்கவுமாட்டார், உன் பிதாக்களுக்குத் தாம் ஆணை யிட்டுக் கொடுத்த உடன்படிக்கையை மறக்கவுமாட்டார் ” என்றான் மோசே . உபா 4:30, 31.தீஇவ 334.2

    தேவாலயப் பிரதிஷ்டையின்போது ஏறெடுக்கப்பட்ட தீர்க்க தரிசன ஜெபத்தில், ‘உம்முடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ததினிமித்தம் சத்துருவுக்கு முன் பாக முறிந்துபோய், உம்மிடத்திற்குத் திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, இந்த ஆலயத்துக்கு நேராக உம்மை நோக்கி விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால், பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்கள் பிதாக்களுக்கு நீர் கொடுத்த தேசத் துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவீராக’ என்று ஜெபித்தான் சாலொமோன். 1இராஜா 8:33, 34. அந்த ஆலயத்தின் ஆராதனை முறைமைகளைத்தான் இப்போது எசேக்கியாவும் அவரோடிருந்த வர்களும் மீண்டும் ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். அந்த ஜெபத் தைத் தேவன் ஆமோதித்தார். ஏனெனில், அதன் முடிவில் வானத் திலிருந்து அக்கினி இறங்கி, சர்வாங்க தகனபலிகளையும் மற்ற பலிகளையும் பட்சித்துப்போட்டது. கர்த்தருடைய மகிமையும் ஆல யத்தை நிரப்பிற்று. பார்க்க : 2நாளா 7:1. சாலொமோனின் ஜெபம் கேட்கப்பட்டதை இரவில் ஒரு தரிசனத்தில் அவரிடம் சொன்னார் தேவன். என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழி களை விட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத் துக்கு சேஷமத்தைக் கொடுப்பேன்’ எனும் நிச்சயம் கிருபையாகக் கொடுக்கப்பட்டது. 2நாளா 7:14.தீஇவ 335.1

    எசேக்கியாவின்கீழ் நடைபெற்ற சீர்திருத்தத்தின்போது இந்த வாக்குத்தத்தங்கள் அபரிதமாக நிறைவேறின.தீஇவ 335.2

    தேவாலயம் சுத்திகரிக்கப்பட்ட போது ஏற்பட்ட நல்ல ஆரம் பத்தைத் தொடர்ந்து, விரிவான ஓர் இயக்கம் உருவானது. அதில் இஸ்ரவேலும் யூதாவும் கலந்துகொண்டன. தேவாலய ஆராதனை களைஜனங்களுக்குஒருமெய்யான ஆசீர்வாதமாக மாற்றவேண்டும் என்ற பேராவலோடு, பஸ்காப் பண்டிகையை ஆசரிக்க இஸ்ரவேல் அனைத்தையும் ஒன்று கூட்டி, முற்காலச் சம்பிரதாயத்தைப் புதுப்பிப் பதில் உறுதியோடிருந்தான் எசேக்கியா.தீஇவ 335.3

    பஸ்காப் பண்டிகையை இவ்வாறு அநேக ஆண்டுகள் கடந்து சென்றுவிட்டன. சாலொமோனுடைய ஆளுகையின் முடிவில் ராஜ் யத்தில் ஏற்பட்ட பிளவால் ஒரு தேசியப் பண்டிகையாகக் கொண்டாடு வது இயலாத காரியமாகத் தோன்றியது. ஆனால், பத்துக் கோத்திரத்தா ருக்குச் சம்பவித்துக்கொண்டிருந்த கொடிய நியாயத்தீர்ப்புகள், நன் மையானவைகளைச் செய்யவேண்டுமென்ற வாஞ்சையைச் சில ருடைய இருதயங்களில் எழுப்பியிருந்தன. தீர்க்கதரிசிகளின் புரட்சி கரமான செய்திகள் பலன் தந்தன. எருசலேமின் பஸ்காப்பண்டிகை யில் கலந்து கொள்ளுமாறு தூர இடங்களிலும், எப்பிராயீம் மனாசே தேசங்களில் செபுலோன் மட்டுக்கும் ஊரூராகவும் அரசவை அஞ் சல்காரர்களால் அறிவிக்கப்பட்டது. கிருபையான அந்த அழைப் பைக் கொண்டு சென்றவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். தங்கள் தவறுக்கு வருந்தாதவர்கள் அதனை அலட்சியப்படுத்தினார்கள் ஆனாலும், சிலர் தேவனுடைய சித்தத்தைத் தெளிவாக அறிய வேண்டுமென்ற வாஞ்சையுடன் அவரை நாடி, ‘மனத்தாழ்மையாகி எருசலேமுக்கு வந்தார்கள்’. 2 நாளா 30:10, 11.தீஇவ 335.4

    யூதா தேசத்தில் பொதுவாக அனைவரும் அந்த அழைப்பிற்கு இணங்கினார்கள். ஏனெனில், ‘ராஜாவும் பிரபுக்களும் கட்டளை யிட்ட பிரகாரம் செய்கிறதற்கு, தேவனுடைய கரம் அவர்களை ஒரு மனப்படுத்திற்று. ‘ தீர்க்கதரிசிகளால் வெளிப்படுத்தப்பட்டபடி, அது தேவசித்தத்திற்கு இசைவான் ஒரு கட்டளையாயிருந்தது. வச 12.தீஇவ 337.1

    அங்குக் கூடியிருந்த திரளானவர்களுக்கு மிகுந்த ஆதாயம் தரும் ஒன்றாக அத்தருணம் அமைந்தது. ஆகாசின் ஆட்சியில் ஏற் படுத்தப்பட்டவையும் பட்டணத்தின் தெருக்களை அசுத்தப்படுத் தினவையுமான சிலை வழிபாட்டு ஸ்தலங்களை அங்கிருந்து அப் புறப்படுத்தினார்கள். நியமிக்கப்பட்ட நாளில் பஸ்காப் பண்டிகை கொண்டாடப்பட்டது. சமாதான பலிகளைச் செலுத்துவதிலும் தாங் கள் என்ன செய்வதை தேவன் விரும்பினாரோ, அதனைக் கற்றுக் கொள்வதிலும் அந்த வாரம் முழுவதையும் மக்கள் செலவிட்டனர். ‘கர்த்தருக்கு அடுத்த காரியத்தை’ அனுதினமும் லேவியர்கள் போதித் தனர். தேவனைத்தேடதங்கள் இருதயங்களை ஆயத்தப்படுத்தியவர் கள் மன்னிப்பைப் பெற்றுக்கொண்டனர். தேவனைத் தொழுது கொண்ட பெருந்திரளானவர்கள் அதிக சந்தோஷத்தைப் பெற்றுக் கொண்டார்கள்; ‘லேவியரும் ஆசாரியரும் தினந்தினம் கர்த்தருக் கென்று பேரோசையாகத் தொனிக்கும் கீதவாத்தியங்களால் அவ ரைத் துதித்துக் கொண்டிருந்தார்கள்.’ மிகுந்த கிருபையோடும் இரக் கத்தோடும் தம்மை வெளிப்படுத்தினவரை ஒருமனதோடு துதிக்க எல்லோரும் வாஞ்சைகொண்டார்கள். வச. 22, 21.தீஇவ 337.2

    பொதுவாக, பஸ் காப்பண்டிகையை ஆசரிக்க ஒதுக்கப்படும் அந்த ஏழு நாட்கள் வேகமாகச் சென்றன. தொழுதுகொள்ள வந்த வர்கள் கர்த்தருடைய வழிகளை முற்றிலுமாக அறியும்படி இன்னும் ஏழு நாட்கள் அங்கிருக்கத் தீர்மானித்தனர். போதகரான ஆசாரியர் கள் நியாயப்பிரமாணப் புத்தகத்திலிருந்து போதிக்கிற தங்கள் வேலையைத் தொடர்ந்து செய்தார்கள். ஸ்தோத்திரமும் துதியும் ஏறெடுக்கும்படியாக மக்கள் அனுதினமும் தேவாலயத்தில் கூடி னர். சிலைவழிபாடு எனும் அலையானது தன் முன்னிருந்த யாவற் றையும் வாரிக்கொள்வதாக அச்சுறுத்திய நிலையைத்தடுத்து நிறுத் தியதிலும் பின்வாங்கிய யூதாவை மனம் மாற்றியதிலும் தேவன் அற் புதமாகச் செயல்பட்டிருந்தார். அந்த மாபெரும் கூட்டத்தின் முடி வில் அது தெளிவாகத் தெரிந்தது. தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்ட மேன்மையான எச்சரிப்புகள் விருதாவாகப் போகவில்லை. ‘அப்ப டியே எருசலேமில் மகாசந்தோஷம் உண்டாயிருந்தது; தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலுடைய ராஜாவின் நாட்கள் முதற்கொண்டு இப்படி எருசலேமில் நடந்ததில்லை.’ 2நாளா 30:26.தீஇவ 337.3

    தொழுதுகொள்ள வந்தவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் நேரம் வந்தது. ‘லேவியரான ஆசாரியர்கள் எழுந்து நின்று, ஜனத்தை ஆசீர்வதித்தார்கள்; அவர்களுடைய சத்தம் கேட்கப் பட்டு, அவர்களுடைய விண்ணப்பம் அவருடைய பரிசுத்த வாச ஸ்தலமாகிய பரலோகத்தில் வந்து எட்டினது’. 2நாளா 30:27. நொறுங்குண்ட இருதயங்களோடு தங்கள் பாவங்களை அறிக்கை செய்தவர்களையும், உறுதியான மனதோடு பாவ மன்னிப்பும் உதவி யும் வேண்டி தம்மிடம் திரும்பினவர்களையும் தேவன் ஏற்றுக் கொண்டார்.தீஇவ 338.1

    இப்பொழுது, அங்கு ஒரு முக்கியமான வேலை செய்யவேண்டி யிருந்தது. தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் அதில் ஒரு முக்கியப் பங்காற்ற வேண்டியிருந்தது. மேலும், அந்த வேலையை நிறைவேற்றுவதுதான், அங்கு ஏற்பட்ட சீர்திருத்தத்தின் நிஜத்தன்மைக்கு அத்தாட்சியாக இருந்தது. வேதாகமம் இவ்வாறு சொல்கிறது: ‘வந்திருந்த இஸ்ரவேலர் எல்லாரும் யூதாவின் பட்ட ணங்களுக்குப் புறப்பட்டுப் போய், யூதாபென்யமீனெங்கும் எப்பி ராயீமிலும் மனாசேயிலுங் கூட உண்டான சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மேடைகளை யும் பீடங்களையும் இடித்து, அவைகளையெல்லாம் தகர்த்துப் போட்டார்கள்; பின்பு இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் அவரவர் தங்கள் ஊர்களிலிருக்கிற தங்கள் காணியாட்சிக்குத் திரும்பினார்கள்.’’2 நாளா 31:1.தீஇவ 338.2

    ராஜ்யத்தின் ஆவிக்குரிய நலன்களையும் லெளகீக நலன்களை யும் மேம்படுத்த, எசேக்கியாவும் அவனோடிருந்தவர்களும் பல் வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார்கள். ‘’இந்தப் பிரகார மாக எசேக்கியா யூதாவெங்கும் நடப்பித்து, தன் தேவனாகிய கர்த் தருக்கு முன்பாக நன்மையும் செம்மையும் உண்மையுமானதைச் செய்தான். அவன் என்ன செய்யத் தொடங்கினானோ, அதையெல் லாம் தன் முழு இருதயத்தோடும் செய்து சித்திபெற்றான். அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் மேல் வைத்த நம்பிக்கையிலே அவன் கர்த்தரை விட்டுப் பின் வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக்கைக் கொண்டு நடந்தான். ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அநுகூலமாயிற்று. ‘வச. 20, 21; 2இராஜா 18:5-7.தீஇவ 338.3

    இஸ்ரவேலின் தேவன் தம் மக்களோடிருந்தார் என்பதைச் சுற் றிலுமுள்ள தேசத்தாருக்கு வெளிப்படுத்தின அநேக தேவ செயல் கள் எசேக்கியாவின் ஆட்சியில் நடைபெற்றிருந்தன. அவனுடைய ஆளுகையின் ஆரம்பக்கட்டத்தில், சமாரியாவைக் கைப்பற்றியதி லும், பத்துக்கோத்திரத்தாரில் மீதமானவர்களை ஜாதிகளின் மத்தி யில் சிதறடித்ததிலும் அசீரியர்கள் பெற்றிருந்த வெற்றியானது, எபி ரெயரின் தேவனுடைய வல்லமை குறித்து அநேகர் கேள்வி எழுப்ப வழியுண்டாக்கியது. தங்கள் வெற்றியால் துணிவுகொண்ட நினிவே பட்டணத்தார், யோனாவின் செய்தியைப் புறக்கணித்து வெகு நாட் களாகியிருந்தது; பரலோகநோக்கங்களை எதிர்ப்பதில் கடினமடைந் திருந்தார்கள். சமாரியாவீழ்ந்து சில வருடங்களுக்குப் பிறகு, வெற்றி வாகை சூடியிருந்த அசீரியச்சேனை மீண்டுமாக பலஸ்தீனாவிற்குள் நுழைந்தது. இம்முறை, யூதாவின் அரணான பட்டணங்களுக்கு எதிராக அந்தப் படைகள் வந்தன. அதில் ஓரளவு வெற்றியும் கண்ட னர். ஆனால், அவர்களுடைய ராஜ்யத்தின் வேறு பகுதிகளில் ஏற் பட்ட பிரச்சனைகளின் நிமித்தம் சில காலம் அவர்கள் திரும்பிச் சென் றிருந்தனர். ஆனால், சில வருடங்களுக்குப் பிறகு, எசேக்கியாவி னு டைய ஆளுகையின் முடிவில், ‘அஞ்ஞான தெய்வங்கள் இறுதி யில் வெற்றிபெறப் போகின்றனவா?’ என்பது பூமியின் தேசங்க ளுக்கு முன்பாகக் காட்டப்பட இருந்தது.தீஇவ 339.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents