Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    27 - ஆகாஸ்

    ஆகாஸ் ராஜா சிங்காசனம் ஏறினதும், யூதா ராஜ்யத்தில் இது வரையிலும் எவரும் சந்தித்திராத மிகமோசமான சூழ்நிலைகளை ஏசாயாவும் அவனுடைய தோழர்களும் நேருக்கு நேர் சந்திக்கும் படி நேரிட்டது. சிலைவழிபாட்டுச் சடங்குகளின் மருட்சியான செல் வாக்கிற்கு எதிர்த்து நின்ற அநேகர் இப்போது அஞ்ஞான தெய்வங் களின் வழிபாட்டில் கலந்துகொள்ள வற்புறுத்தப்பட்டனர். இஸ்ர வேலின் பிரபுக்கள் தங்கள் பொறுப்புக்குத் தகுதியற்றவர்களாகக் காணப்பட்டனர். வழிவிலகச் செய்யும் செய்திகளுடன் பொய்த் தீர்க்கதரிசிகள் எழுந்துகொண்டிருந்தார்கள்; ஆசாரியர்களில் சிலர் கூட ஆதாயத்திற்காகப் போதகம் செய்தார்கள். தலைவர்கள் அவ பக்தியில் திளைத்தார்கள். ஆனாலும், தேவ ஆராதனையின் முறை களையும் கைக்கொண்டு வந்தனர்; தாங்களும் தேவமக்களென்று சொல்லிக்கொண்டனர்.தீஇவ 322.1

    இக்கட்டான அக்காலக்கட்டங்களில் தன்னுடைய சாட்சியைப் பகிர்ந்து கொண்டான் மீகா தீர்க்கதரிசி. சீயோனின் பாவிகள் ‘கர்த் தரைச் சார்ந்துகொண்டுள்ளதாகச் சொல்லி, ‘கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது’ என்று தூஷணமாகப் பெருமை பாராட்டிக்கொள்ளும் வேளையில், சீயோனை இரத்தப் பழியினாலும், எருசலேமை அநியாயத்தினாலும் கட்டுவதைத்’ தொடர்கிறார்கள் என்றார். மீகா 3:11,10. இந்தத் தீமைகளுக்கு எதிராக ஏசாயா தீர்க்கதரிசி தன் சத்தத்தை உயர்த்தி, மிகவும் கடிந்து கொண்டான். ‘சோதாமின் அதிபதிகளே, கர்த்தருடைய வார்த்தை யைக் கேளுங்கள்; கொமோராவின் ஜனமே, நமது தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள். உங்கள் பலிகளின்திரள் எனக்கு என்னத்துக்கு?’‘ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீங்கள் என் சந்நிதி யில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டும் மென்று உங்களிடத்தில் கேட்டது யார்?’ என்கிறான். ஏசா1:10 - 12.தீஇவ 322.2

    ’துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் துர்ச்சித் தையோடே செலுத்தினாலோ எத்தனை அதிகமாய் அருவருக்கப் படும்?’ என்கிறது வேதாகமம். நீதி 21:27. பரலோகத்தின் தேவன் ‘தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக் கண்ணராய்’ இருக்கிறார்; அவரால் அநியாயத்தை நோக்கிக் கொண்டிருக்க முடியாது. ஆப் கூக் 1:13. மன்னிக்க தமக்குச் சித்தமில்லாததால் அக்கிரமக்காரனிட மிருந்து அவர் திரும்பிக்கொள்கிறதில்லை; கிருபையின் பரிபூரண ஏற்பாட்டைப் பயன்படுத்திக்கொள்ள அவன் மறுப்பதாலேயே அவனைப் பாவத்திலிருந்து அவரால் விடுவிக்க முடிவதில்லை. ‘இரட்சிக்கக் கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவு மில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவும் மில்லை. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவ னுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங் களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.’ஏசா 59:1,2.தீஇவ 323.1

    ’ராஜா சிறு பிள்ளையாய், இருக்கப்பட்ட தேசமே, உனக்கு ஐயோ!’ என்று எழுதியுள்ளான் சாலொமோன். பிரசங்கி 10:16. யூதா தேசத்தின் நிலையும் அப்படியே இருந்தது. தொடர்ந்து அக்கிரமம் செய்ததால் அத்தேசத்தில் அரசர்கள் குழந்தைகளைப் போலானார் கள். பூமியின் தேசங்களிலேயே பெலவீனமான நிலையில் தாங்கள் இருப்பதை ஜனங்களுடைய கவனத்திற்குக் கொண்டுவந்து, ‘மேடான இடங்களில் செய்யப்பட்ட துன்மார்க்கமே அதற்குக் கார ணம்’ என்பதைச் சுட்டிக்காட்டினான் ஏசாயா. ‘இதோ, சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் எருசலேமிலிருந்தும் யூதாவிலிருந்தும் சகலவிதமான ஆதரவுகளாகிய அப்பமென்கிற எல்லா ஆதரவை யும், தண்ணீரென்கிற எல்லா ஆதரவையும், பராக்கிரமசாலியையும், யுத்த வீரனையும், நியாயதிபதியையும், தீர்க்கதரிசியையும், சாஸ்திரியை யும், மூப்பனையும், ஐம்பது பேருக்கு அதிபதியையும், கனம் பொருந் தினவனையும், ஆலோசனைக்காரனையும், தொழில்களில் சாமர்த் தியமுள்ளவனையும், சாதுரியனையும் விலக்குவார். வாலிபரை அவர்களுக்கு அதிபதிகளாகத் தருவேன் என்கிறார், பிள்ளைகள் அவர்களை ஆளுவார்கள்.’ ‘ஏனென்றால் எருசலேம் பாழாக்கப் பட்டது, யூதா விழுந்துபோயிற்று; அவர்கள் நாவும், அவர்கள் கிரி யைகளும், கர்த்தருடைய மகிமையின் கண்களுக்கு எரிச்சல் உண் டாக்கத்தக்கதாக அவருக்கு விரோதமாயிருக்கிறது. ‘ஏசா3:1-4, 8தீஇவ 323.2

    மேலும், ‘’உன்னை நடத்துகிறவர்கள் உன்னை மோசம் போக்கி, நீ நடக்கவேண்டிய வழியை அழித்துப்போடுகிறார்கள்” என்றான். ஏசா 3:12. எழுதப்பட்ட பிரகாரமே, ஆகாஸின் ஆட்சிக்காலத்தில் இது உண்மையாயிருந்தது; ஏனெனில், அவனைப்பற்றி இப்படியாக எழுதப்பட்டுள்ளது; அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழிகளில் நடந்து, பாகால்களுக்கு வார்ப்பு விக்கிரகங்களைச் செய்தான். அவன் இன்னோம் குமாரரின் பள்ளத்தாக்கிலே தூபங்காட்டி, கர்த்தர் இஸ்ர வேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்பு களின் படியே தன் குமாரனை முதலாய்த் தீக்கடக்கப்பண்ணினான்.’ 2நாளா 28:2,3; 2இராஜா 16:3.தீஇவ 324.1

    தெரிந்துகொள்ளப்பட்ட தேசத்திற்கு மெய்யாகவே அது மிகுந்த ஆபத்தான ஒரு காலக்கட்டமாக இருந்தது. இன்னும் ஒரு சில வரு டங்கள்தாம் எஞ்சி இருந்தன. அதன்பிறகு இஸ்ரவேல்ராஜ்யத்தின் பத்துக் கோத்திரத்தாரும் பிற தேசங்களின் மத்தியில் சிதறடிக்கப்பட இருந்தனர். யூதா ராஜ்யமும் இருண்ட நிலையில்தான் இருந்தது. நன்மைக்கேதுவான சக்திகள் வேகமாகக் குறைந்துகொண்டிருந் தன். தீமைக்கேதுவான சக்திகள் பெருகிக் கொண்டிருந்தன. அந்த தச் சூழ்நிலையைக் கண்ட மீகா தீர்க்கதரிசி, தேசத்தில் பக்தியுள்ள வன் அற்றுப்போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை. அவர்களில் நல்லவன் முட்செடிக்கொத்தவன், செம்மையானவன் நெரிஞ்சிலைப் பார்க்கிலும் கடுங்கூர்மையானவன்’‘ என்று சொல் லும் படித்தூண்டப்பட்டான். மீகா 7:2, 4. சேனைகளின் கர்த்தர் நமக் குக் கொஞ்சம் மீதியை வைக்காதிருந்தாரானால், நாம் சோதோம் கொமோராவுக்கு ஒத்திருப்போம்.’ என்றான் ஏசாயா. ஏசா 1:9.தீஇவ 324.2

    ஒவ்வொரு காலக்கட்டத்திலும் உண்மையாய் இருப்பவர் களின் நிமித்தமாகவும், பாவிகளுக்குத் தம்முடைய அளவில்லா அன்பைக் காண்பிக்கும் பொருட்டாகவும் கலகக்காரர்மேல் தேவன் அதிக பொறுமையோடிருக்கிறார். மேலும், தங்கள் தீய வழியை விட்டு விலகி தம்மிடம் திரும்புமாறு அவர்களை வேண்டிக் கொள் கிறார். தாம் நியமிக்கும் மனிதர்கள் மூலம், ‘கற்பனையின் மேல் கற்பனையும் பிரமாணத்தின்மேல் பிரமாணமும் இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சமும்’ சொல்லி, அக்கிரமக்காரருக்கு நீதியின் வழி யைப் போதிக்கிறார். ஏசாயா 28:10.தீஇவ 325.1

    ஆகாஸின் ஆட்சிக்காலத்திலும் அப்படியே நடந்தது. யேகோ வாவைத் தொழுது கொள்ளத் திரும்புமாறு பாவத்தில் கிடந்த இஸ்ர வேலுக்கு அழைப்புமேல் அழைப்பு கொடுக்கப்பட்டது. தீர்க்கதரி சிகள் மிகவும் கனிவுடன் வேண்டிக்கொண்டனர். அவர்கள் ஜனங் களுக்கு முன்பாக நின்று, மனந்திரும்பி, சீர்ப்படுமாறு ஊக்கத்தோடு புத்தி கூறினார்கள்; அவர்களுடைய வார்த்தைகள் தேவ மகிமைக் கேற்ற பெலனைத் தந்தன.தீஇவ 325.2

    ’கர்த்தர் சொல்லுகிறதைக் கேளுங்கள்: நீ எழுந்து, பர்வதங் களுக்கு முன் உன் வழக்கைச் சொல் ; மலைகள் உன் சத்தத்தைக் கேட்கக்கடவது. பர்வதங்களே, பூமியின் உறுதியான அஸ்திபாரங் களே, கர்த்தருடைய வழக்கைக் கேளுங்கள்; கர்த்தருக்கு அவர் ஜனத்தோடே வழக்கு இருக்கிறது; இஸ்ரவேலோடே அவர் வழக் காடுவார்.’தீஇவ 325.3

    ’என் ஜனமே , நான் உனக்கு என்ன செய்தேன்? நான் எதனால் உன்னை விசனப் படுத்தினேன்? எனக்கு எதிரே உத்தரவு சொல். நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி, அடிமைத்தன் வீட்டிலிருந்த உன்னை மீட்டுக்கொண்டு, மோசே ஆரோன் மீரியாம் என்பவர்களை உனக்கு முன்பாக அனுப்பினேன்.’தீஇவ 325.4

    ’என் ஜனமே , மோவாபின் ராஜாவாகிய பாலாக் பண்ணின் யோசனை இன்னதென்றும், பேயோரின் குமாரனான பிலேயாம் அவனுக்குப் பிரதியுத்தரமாகச் சொன்னது இன்னதென்றும், நீகர்த்த ருடைய நீதிகளை அறிந்து கொள்ளும்படி நினைத்துக்கொள்’ எனும் அருமையான வேண்டுகோள் மீகாவின் மூலம் கொடுக்கப் பட்டது. மீகா 6:1-5.தீஇவ 325.5

    நாம் சேவிக்கும் தேவன் நீடிய சாந்தமுள்ளவர். அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை ‘. புலம்பல் 3:22. ஜீவனின் ஈவைப் பெற்றுக்கொள்ளுமாறு, தவணையின் நாட்கள் முழுவதிலும் தம் ஆவியானவர் மூலம் மனிதரை வேண்டிக்கொண்டார். ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் நான் துன்மார்க்கனுடைய மர ணத்தை விரும்பாமல், துன்மார்க்கன்தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன்” என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்’ எசே 33:11. மனிதனைப் பாவத்திற்குள் வழி நடத்தி, அதன் பிறகு உதவியற்றவனாகவும் நம்பிக்கையற்றவனா கவும் அதில் நிறுத்தி, தேவனிடம் மன்னிப்பு கேட்க அவனை பயங்கொள்ளச் செய்வது சாத்தானின் விசேஷித்த உபாயமாய் இருக்கிறது. ‘அவன் என் பெலனைப் பற்றிக்கொண்டு என்னோடே ஒப்புரவாகட்டும்; அவன் என்னோடே ஒப்புரவாவான்’. ஏசா 27:5. கிறிஸ்துவுக்குள் ஒவ்வொரு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது; ஒவ் வொரு ஊக்கமும் அருளப்பட்டிருக்கிறது.தீஇவ 325.6

    யூதாவும் இஸ்ரவேலும் அவபக்தியில் திளைத்த நாட்களில் ‘’என்னத்தைக்கொண்டு நான் கர்த்தருடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்துகொள்வேன்? தகன பலிகளைக் கொண்டும், ஒருவயது கன்றுக்குட்டிகளைக் கொண் டும் அவர் சந்நிதியில் வரவேண்டுமோ? ஆயிரங்களான ஆட்டுக் கடாக்களின் பேரிலும், எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின் பேரிலும், கர்த்தர் பிரியமாயிருப்பாரோ? என் முதற் பேறானவனையும், என் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க என் கர்ப்பக்கனியையும் கொடுக்கவேண்டுமோ?’‘ என்று அநேகர் கேள்வி எழுப்பினர். பயனுள்ள பதிலைத் தெளிவாகத் தந்தார் தேவன். ‘மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறி வித்திருக்கிறார்; நியாயஞ் செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்?’ மீகா 6:6-8.தீஇவ 326.1

    பல நூற்றாண்டுகளுக்கு முன் இஸ்ரவேலுக்குக் கொடுத்த ஆலோசனையையே மீண்டும் சொல்லி, பக்தியான வாழ்வின் முக் கியத்துவத்தை வலியுறுத்தினான் தீர்க்கதரிசி. வாக்குத்தத்த தேசத் திற்குள் அவர்கள் பிரவேசிக்கவிருந்த சமயத்தில், மோசே மூலம் கொடுக்கப்பட்ட தேவவார்த்தை இதுதான்: இப்பொழுதும் இஸ்ர வேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளி லெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத் தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனை களையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டா கும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்? ‘உபா 10:12,13. ஒவ்வொரு காலக்கட்டத்திலும், சம்பிரதாயங்களில் சிக்கி, இரக்கம் காட்ட மறந்தோருக்கு இந்த ஆலோசனைகளையே யேகோ வாவின் ஊழியர்கள் மீண்டும் மீண்டும் சொன்னார்கள். கிறிஸ்துவின் பூலோக ஊழியத்தின் போது, நியாயசாஸ்திரி ஒருவன், ‘போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது?” என்று கேள்வி எழுப்பினான். இயேசு அவனிடம், ‘’உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோ டும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்ன வென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கி யிருக்கிறது” என்றார். மத் 22:36-40.தீஇவ 326.2

    எஜமானும் தீர்க்கதரிசிகளும் சொன்ன இந்தத் தெளிவான வார்த்தைகளை, ஒவ்வோர் ஆத்துமாவுக்குமான தேவ வார்த்தை யாக நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒடுக்கப்பட்டு, கஷ்டப்படு கிறவர்களுக்கு இரக்கமும், கனிவும், முன்யோசனையும் கிறிஸ்தவ பணிவும் கூடிய செயல்களைச் செய்யக் கிடைக்கும் எந்தத் தருணத் தையும் நாம் இழந்துவிடக்கூடாது. தேவனை அறியாதோருக்கு நாம் உதவ முடியாத நிலையில், நம்பிக்கையும் ஊக்கமும் தரும் வார்த்தைகளை அவர்களிடம் பேசலாம்; அன்போடும் பரிவோடும் அவர்களை மிக எளிதில் அணுகலாம்.தீஇவ 327.1

    பிறர் வாழ்க்கையில் சந்தோஷத்தையும் ஆசீர்வாதத்தையும் ஏற்படுத்தும் தருணங்களை விழிப்போடு எதிர்நோக்கி இருப்போ ருக்குக் கொடுக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தங்கள் ஏராளம். ‘பசி யுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப் போலாகும். கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ள தாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்பாய். ஏசா 58:10, 11.தீஇவ 327.2

    தீர்க்கதரிசிகளின் ஊக்கமான வேண்டுகோள்களுக்கு மத்தியி லும், சிலைவழிபாட்டிற்கேதுவான ஆகாசின் போக்கு, ஒரே ஒரு விளைவைத்தான் வரவழைத்தது. கர்த்தருடைய கடுங்கோபம் யூதா வின் மேலும் வந்து, அவர் இவர்களை துயரத்துக்கும் திகைப்புக் கும் பழிப்புக்கும் ஒப்புக்கொடுத்தார்.’ 2 நாளா 29:8. ராஜ்யம் வேக மாக வீழ்ச்சிக்குள்ளானது. படையெடுத்து வந்த சேனைகளால் அது நிலை கொள்ளாதபடி, இடருக்குள்ளானது. ‘சீரியாவின் ராஜாவாகிய ரேத் சீனும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெலியாவின் குமாரன் பெக்காவும், எருசலேமின்மேல் யுத்தம் பண்ணவந்து ஆகாசை முற்றுகை போட்டார்கள்’ 2 இராஜா 16:5.தீஇவ 328.1

    ஆகாசும் அவனுடைய ராஜ்யத்தின் பிரதானிகளும் உன்னத மானவருக்கு உண்மையான பிரதானிகளாய் இருந்திருப்பார்களா னால் அவர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட மோசமான கூட்ட ணியைக் கண்டு எவ்வித பயமும் அடைந்திருக்க மாட்டார்கள். ஆனால், மறுபடியும் மறுபடியும் அக்கிரமம் செய்ததால், அவர்கள் பெலன் குன்றிப்போயிருந்தது. புண்பட்ட தேவனின் நீதியான நியா யத்தீர்ப்புகளால் புதுமையான ஒரு பயம் அவர்களைப் பீடித்தது. அதினால், ராஜாவின் இருதயமும், அவன் ஜனத்தின் இருதயமும் காட்டிலுள்ள மரங்கள் காற்றினால் அசைகிறது போல் அசைந்தது.’ ஏசா 7:2. இந்நிலையில் கர்த்தருடைய வார்த்தை ஏசாயாவுக்கு உண் டாயிற்று. நடுங்கிக்கொண்டிருந்த ராஜாவைச் சந்தித்து, பின் வரு மாறு சொல்லும் படி அவனுக்குக் கட்டளையிடப்பட்டது:தீஇவ 328.2

    ’‘ நீ பயப்படாமல் அமர்ந்திருக்கப் பார்; உன் இருதயம் துவள வேண்டாம். சீரியர் எப்பிராயீமோடும், ரெமலியாவின் மகனோடும் உனக்கு விரோதமாகத் துராலோசனைபண்ணி, நாம் யூதாவுக்கு விரோதமாய்ப் போய், அதை நெருக்கி, அதை நமக்குள்ளே பங்கிட் டுக் கொண்டு, அதற்குத் தபேயாலின் குமாரனை ராஜாவாக ஏற் படுத்துவோம் என்று சொன்னான். கர்த்தராகிய ஆண்டவர், அந்த ஆலோசனை நிலைநிற்பதில்லை, அதின்படி சம்பவிப்பதுமில்லை” என்றார். இஸ்ரவேல் மற்றும் சீரிய ராஜ்யங்கள் சீக்கிரத்தில் முடி வுக்கு வருமென தீர்க்கதரிசி அறிவித்தான். ‘’எப்பிராயீமின் தலை சமாரியா, சமாரியாவின் தலை ரெலியாவின் மகன்; நீங்கள் விசு வாசியாவிட்டால் நிலை பெறமாட்டீர்கள்” என்றான். வச.4-7, 9.தீஇவ 329.1

    அதனைப் பரலோகத்தின் செய்தியாக ஆகாஸ் ஏற்றுக்கொண் டிருந்தால், யூதராஜ்யத்திற்கு அது நன்மையாய் அமைந்திருக்கும். ஆனால், மாம்சபுயத்தைச் சார்ந்திருக்கத் தெரிந்துகொண்டான்; பிற தேசத்தாரின் உதவியை நாடினான். விரக்தியில் அசீரிய ராஜாவாகிய திகிலாத்பிலே சரிடத்திற்கு ஆளனுப்பி, ‘’நான் உம்முடைய அடியா னும் உம்முடைய குமாரனுமாயிருக்கிறேன்; நீர் வந்து, எனக்கு விரோதமாயெழும்பின் சீரியா ராஜாவின் கைக்கும், இஸ்ரவேல் ராஜாவின் கைக்கும் என்னை நீங்கலாக்கிவிடும்” என்று வேண்டி னான். அதோடு ராஜாவின் பொக்கிஷத்திலிருந்தும் தேவாலயப் பொக்கிஷத்திலிருந்தும் அதிக வெகுமதியும் அனுப்பப்பட்டது. 2இராஜா 16:7.தீஇவ 329.2

    வேண்டிக்கொண்ட உதவி கிடைத்தது. ராஜாவாகிய ஆகாசுக் குத் தற்காலிக நிவாரணம் கிடைத்தது. ஆனால், அதற்கு யூதா கொடுத்த விலைதான் என்ன! செலுத்தப்பட்ட கப்பம், அசீரியா வின் பேராசையைத் தூண்டிவிட்டது. விரைவிலேயே அந்த வஞ்ச கத் தேசத்தார் யூதாவை ஆக்கிரமித்து, அதனை அழிக்கும் அபா யத்தை ஏற்படுத்தினர். ஆகாசும், நிம்மதியிழந்த அவருடைய குடி மக்களும் அந்தக் கொடிய அசீரியரின் கரங்களில் விழுந்துவிடு வோமோ’ என்ற பயத்தால் வாதிக்கப்பட்டார்கள்.தீஇவ 329.3

    தொடர்ச்சியான அக்கிரமத்தின் நிமித்தம் ‘கர்த்தர் யூதாவைத் தாழ்த்தினார். சிட்சிக்கப்பட்ட அந்தக் காலக்கட்டத்திலும் அவன் மனந்திரும்பமால் மீறுதல் செய்து, ‘கர்த்தருக்கு விரோதமாக மிக வும் துரோகம் பண்ணினான். எப்படியெனில், தமஸ்குவின் தெய் வங்களுக்கு அவன் பலியிட்டான். ‘’சீரியா ராஜாக்களின் தெய் வங்கள் அவர்களுக்குத் துணை செய்கிறபடியினால், அவர்கள் எனக்கும் துணை செய்ய அவர்களுக்குப் பலியிடுவேன்’‘ என்று சொன்னான் ஆகாஸ். 2 நாளா 28:19, 22, 23.தீஇவ 330.1

    தேவதுரோகத்தில் திளைத்துவந்த ஆகாஸ் ராஜா தன்னுடைய ஆட்சியின் முடிவில் தேவாலயக் கதவுகளை மூடும்படிச் செய்தான். பரிசுத்த ஆராதனைகள் தடைபட்டன. அதன்பிறகு, பலிபீடத்திற்கு முன்பாக குத்துவிளக்குகள் எரியவில்லை; ஜனங்களின் பாவங் களுக்காக பலிகள் ஏறெடுக்கப்படவில்லை; காலை- மாலை பலி நேரத்தில் சுகந்த வாசனை மேலே எழும்பவில்லை. தேவனுடைய வீட்டின் பிராகாரங் களைப் புறக்கணித்து, அதன் கதவுகளை இறுகலாகப் பூட்டிவிட்டு, அஞ்ஞான தெய்வங்களை வழிபட எருச லேம் முழுவதிலும், தெருக்களின் மூலை முடுக்குகளில் எல்லாம் தேவனற்ற அந்நகரத்தார் துணிவுடன் பலிபீடங்களை அமைத்தார் கள். அஞ்ஞான மார்க்கம் மேலோங்கியதாகத் தோன்றியது; அந்த காரவல்லமை கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் பரவியிருந்தது.தீஇவ 330.2

    ஆனால் யேகோவாவின் மேல் மெய்ப்பற்றோடு விளங்கி வந்த சிலர் யூதாவில் இருந்தனர்; சிலைவழிபாட்டிற்கு எதிராக அவர்கள் உறுதியுடன் இருந்தனர். ஆகாசின் கடைசி நாட்களில் ஏற்பட்டிருந்த அழிவைக் கண்டபோது, ஏசாயாவும் மீகாவும் அவர்களின் சகாக் களும் இவர்களைத்தான்நம்பிக்கையோடு நோக்கினர். அவர்களின் ஆசரிப்புஸ்தலம் மூடப்பட்டது; ஆனால், ‘தேவன் எங்களோடு இருக்கிறார்’ எனும் நிச்சயத்தை அந்த மெய் விசுவாசிகள் பெற்றிருந் தனர். ‘சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம் பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக. அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார். ஏசா 8:13,14தீஇவ 330.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents