Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    33 - நியாயப்பிரமாணப் புத்தகம்

    பாபிலோனிய சிறையிருப்பு குறித்த தீர்க்கதரிசிகளின் செய்தி களால் ஆரவாரமற்ற, ஆனால் வல்லமையான தாக்கங்கள் உருவா யின். யோசியாவினுடைய ஆட்சியின் பதினெட்டாம் வருடத்தில், சீர்திருத்தத்திற்கான வழியை ஆயத்தம் பண்ண அவை அதிகம் உத் வின. சம்பவிக்க இருந்ததாகச் சொல்லப்பட்ட நியாயத்தீர்ப்புகள் சில காலம் தாமதிப்பதற்கு இந்தச் சீர்திருத்த நடவடிக்கை ஏதுவா யிருந்தது. வேதாகமத்தின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டு, வாசி க்கப்பட்டதின் மூலம் முற்றிலும் எதிர்பாராத வகையில் இது நிகழ்ந் தது. ஏனெனில், அந்த வேதாகம பகுதி அநேக வருடங்களாக தொலைந்தோ, தவறியோ போயிருந்தது.தீஇவ 392.1

    கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன், எசேக்கியா ராஜா முதல் பஸ்கா பண்டிகையை ஆசரித்தபோது, நியாயப்பிரமாண புத்த கத்தை ஜனங்கள் கேட்க ஆசாரியர்கள் அனுதினமும் வாசித்து, போதிக்க வேண்டுமென ஏற்பாடு செய்யப்பட்டது. உபாகமப் புத்த கத்தில் காணப்படுகிறதும், உடன்படிக்கை புத்தகத்தில் பிரத்தியேக மாகக் கொடுக்கப்பட்டுள்ளதும், மோசேயால் பதிவு செய்யப்பட் டுள்ளதுமான நியமங்களைக் கைக்கொண்டதால் தான், எசேக்கியா வின் ஆட்சியில் செழிப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த நியமங்களை ஒதுக்கத் துணிந்தான் மனாசே ; அவனுடைய ஆட்சியில் தேவா லயத்திலிருந்த நியாயப்பிரமாண புத்தகத்தின் பிரதியைக் கவனிக் காமல் விட்டுவிட்டதால்தான், அது தொலைந்துபோனது. அத னால், அநேகவருடங்களாக மக்கள் அதன் போதனைகளைப் பெற முடியாமல் இருந்தனர்.தீஇவ 392.2

    தேவாலயக் கட்டிடத்தைப் பராமரிக்கும் பணி யோசியா ராஜா வின் திட்டப்படி, பெருமளவில் நடைபெற்றுவந்தபோது, வெகு நாட்களாக தொலைந்திருந்த அந்த மூலபிரதியை பிரதான ஆசாரிய னான இலக்கியா கண்டெடுத்தான். விலையேற்றப்பெற்ற அந்தத் தொகுப்பை வேதபாரகரான சாப்பானிடத்தில் கொடுத்தான் பிரதான ஆசாரியன். அவன் அதனை வாசித்து, ராஜாவிடம் கொண்டு சென்று, அது கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தைக் கூறினான்.தீஇவ 393.1

    அந்த முற்கால மூலப்பிரதியில் சொல்லப்பட்டிருந்த எச்சரிப்பு களையும் அறிவுரைகளையும் முதன்முதலாக வாசிக்கக் கேட்ட போது, மிகவும் பரவசமடைந்தான் யோசியா. தேவன் இஸ்ரவேல ருக்கு முன்பாக வைத்திருந்த ‘ஜீவனையும் மரணத்தையும், ஆசீர் வாதத்தையும், சாபத்தையும் ‘ இத்தனை தெளிவாக இதற்குமுன் அவர் உணர்ந்திருக்கவில்லை . உபா 30:19. அவர்கள் சகல தேசத் தாருக்கும் ஆசீர்வாதமாகவும் பூமியில் புகழோடும் விளங்க, ஜீவ னுக்கேதுவான வழியைத் தெரிந்துகொள்ளுமாறு எத்தனையோ முறை அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். ‘’நீங்கள் பலங் கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக் கவும் வேண்டாம்.’‘ ‘’உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோ டேகூட வருகிறார்; அவர் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை’‘ என்று மோசே மூலம் இஸ்ரவே லருக்கு அறிவுறுத்தப் பட்டது. உபாகமம் 31:6.தீஇவ 393.2

    தம்மில் முழுவதுமாக நம்பிக்கை கொள்கிறவர்களை முற்று முடிய இரட்சிக்க தேவன் சித்தங்கொண்டிருப்பது குறித்த வாக்குத் தத்தங்கள் ஏராளமாக அப்புத்தகத்தில் இருந்தன. எகிப்தின் அடி மைத்தனத்திலிருந்து அவர்களை விடுவித்ததுபோல, வாக்குத்தத்த தேசத்தில் அவர்களை நிலைநிறுத்தவும் பூமியின் தேசங்களுக்கு முதன்மையாக அவர்களை வைக்கவும் வல்லமையாகக் கிரியை செய்ய அவர் ஆயத்தமாயிருந்தார்.தீஇவ 393.3

    கீழ்ப்படிதலின் பெலனாகக் கொடுக்கப்பட்டிருந்த வாக்குறுதி கள் போலவே கீழ்ப்படியாமைக்கு எதிரான நியாயத்தீர்ப்புகள் குறித்த தீர்க்கதரிசனங்களும் அதில் கொடுக்கப்பட்டிருந்தன. தேவ னுடைய வார்த்தைகளை ராஜா கேட்டபோது, அச்சமயம் தன்னு டைய ராஜ்யத்தில் நிலவி வந்த காரியங்களுக்கு ஏற்றவாறு அதில் சொல்லப்பட்டிருந்ததை அறிந்துகொண்டார். தேவனை விட்டு விலகுவதால் ஏற்படும் நிலை குறித்துச் சித்தரித்த அத்தீர்க்கதரிசன வார்த்தைகளில், இறுதி அழிவின் நாள் விரைவில் வரவிருந்ததா கவும், அதிலிருந்து எவரும் தப்பிக்கக்கூடாதென்றும் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்ததைக் கண்டு, அதிர்ச்சியடைந்தார். சந்தேகத் திற்கு இடமின்றி அந்த வார்த்தைகள் தெளிவாகச் சொல்லப்பட் டிருந்தன. இஸ்ரவேலரைத் தேவன் வழிநடத்தும் விதம் பற்றியும், வருங்கால நிகழ்ச்சிகள் பற்றியும் அந்தத் தொகுப்பின் இறுதியில் சுருக்கமாகவும் மிகத் தெளிவாகவும் விவரங்கள் சொல்லப்பட்டிருந் தன . இஸ்ரவேலர் அனைவரும் கேட்டுக்கொண்டிருக்க இப்படி யாக மோசே சொன்னார்:தீஇவ 394.1

    வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன்;
    பூமியே, என் வாய்மொழிகளைக் கேட்பாயாக.
    மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல்,
    என் தேசம் பொழியும்;

    பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல,
    என் வசனம் இறங்கும்.
    கர்த்தருடைய நாமத்தைப் பிரசித்தம்பண்ணுவேன்;
    நம்முடைய தேவனுக்கு மகத்துவத்தைச் செலுத்துங்கள்.
    அவர் கன்மலை;

    அவர் கிரியை உத்தமமானது;
    அவர் வழிகளெல்லாம் நியாயம்,
    அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்,
    அவர் நீதியும் செம்மையுமானவர்’
    தீஇவ 394.2

    உபாகமம் 32:1-4,

    “பூர்வநாட்களை நினை;
    தலைமுறை தலைமுறையாகச் சென்ற வருஷங்களைக்
    கவனித்துப் பார்;
    உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான்;
    உன் மூப்பர்களைக் கேள்,
    அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள். உன்னதமானவர் ஜாதிகளுக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டு,
    ஆதாமின் புத்திரரை வெவ்வேறாய்ப் பிரித்த காலத்தில்,
    இஸ்ரவேல் புத்திரருடைய தொகைக்குத்தக்கதாய்,
    சர்வஜனங்களின் எல்லைகளைத் திட்டம்பண்ணினார்.
    கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு;
    யாக்போபு அவருடைய சுதந்தர வீதம்.

    “பாழான நிலத்திலும்
    ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும்
    அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார்,
    அவனை உணர்த்தினார்,
    அவனைத் தமது கண்மணியைப்போலக் காத்தருளினார்.
    தீஇவ 394.3

    வசனங்க ள் 7-10.

    “ஆனால் இஸ்ரவேலோ,தேவனை விட்டு,
    தன் ரட்சிப்பின் கன்மலையை அசட்டைபண்ணினான்.
    அந்நிய தேவர்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்;
    அவருவருப்பானவை களினாலே அவரைக் கோபப்படுத்தினார்கள்.
    அவர்கள் தேவனுக்குப் பலியிடவில்லை;
    தாங்கள் அறியாதவைகளும்,
    தங்கள் பிதாக்கள் பயப்படாதவைகளும்,
    நூதனமாய்த் தோன்றிய புது தெய்வங்களுமாகியபேய்களுக்கே பலியிட்டார்கள்.
    உன்னை ஜெநிப்பித்த கன்மலையை நீ நினையாமற்போனாய்
    உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய்.

    “கர்த்தர் அதைக்கண்டு, தமது குமாரரும் தமது குமாரத்திகளும்
    தம்மைக் கோபப்படுத்தினதினிமித்தம் மனமடிவாகி, அவர்களைப் புறக்கணித்து,
    என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்;
    அவர்களுடைய முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்பேன்;
    அவர்கள் மகா மாறுபாடுள்ள சந்ததி;
    உண்மையில்லாத பிள்ளைகள்.
    தெய்வம் அல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலை மூட்டி,
    தங்கள் மாயைகளினால் என்னைக் கோபப்படுத்தினார்கள்,
    ஆகையால் மதிக்கப்படாத ஜனங்களினால்
    அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி,
    மதிகெட்ட ஜாதியினால் அவர்களைக் கோபப்படுத்துவேன்”

    “தீங்குகளை அவர்கள்மேல் குவிப்பேன்; என்னுடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் பிரயோகிப்பேன்.
    அவர்கள் பசியினால் வாடி, எரிபந்தமான உஷ்ணத்தினாலும்,
    கொடிய வாதையினாலும் மாண்டுபோவார்கள்,

    “அவர்கள் யோசனை கெட்ட ஜாதி,
    அவர்களுள் உணர்வு இல்லை.
    அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து,
    தங்கள் முடிவைச் சிந்தித்துக் கொண்டால் நலமாயிருக்கும் என்றார்.
    அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும்,
    கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால்,
    ஒருவன் ஆயிரம் பேரைத் துரத்தி,
    இரண்டுபேர் பதினாயிரம் பேரை ஒட்டுவதெப்படி?
    தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று
    நம்முடைய சத்துருக்களே தீர்மானிக்கிறார்கள்.

    “இது என்னிடத்தில் வைத்துவைக்கப்பட்டு,
    என் பொக்கிஷங்களில் இது முத்திரை போடப்பட்டிருக்கிற தில்லையோ?

    பழி வாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது;
    ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்;
    அவர்களுடைய ஆபத்து நாள் சமீபமாயிருக்கிறது;
    அவர்களுக்கு நேரிடும் காரியங்கள் தீவிரித்து வரும்.”
    தீஇவ 395.1

    வசனங்க ள் 15-21, 23,24, 28-31, 34,35.

    தம் மக்கள் மேல் தேவன் கொண்டுள்ள அன்பையும் பாவத் தின்மேல் அவர் கொண்டுள்ள அருவருப்பையும் இவ்வசனங் களும் இதுபோன்ற மற்ற வசனங்களும் யோசியாவுக்கு வெளிப் படுத்தின. கலகத்திலேயே தரித்திருப்பவர்கள்மேல் சம்பவிக்கும் வேகமான நியாயத்தீர்ப்புப் பற்றி ராஜா வாசித்தபோது, வருங் காலத்தை எண்ணி நடுங்கினார். யூதாவின் மாறுபாடு மிக அதிகமா யிருந்தது; அந்தத் தொடர்ச்சியான அவ பக்தியால் விளைய இருந் ததுதான் என்ன?தீஇவ 396.1

    அங்கு நிலவிவந்த தேவ விரோதமான போக்கை முந்தைய வருடங்களில் ராஜா கண்டுகொள்ளவில்லை. அவர் தன் ராஜ்யத் தின் எட்டாம் வருஷத்தில், தான் இன்னும் இளவயதாயிருக்கையில் ‘‘ தேவனுடைய சேவைக்காக தன்னை முற்றிலும் பரிசுத்தப்படுத்தி னார். நான்கு வருடங்கள் கழித்து, தன்னுடைய இருபதாம் வயதில், ‘’மேடைகள் தோப்புகள் சுரூபங்கள் விக்கிரகங்கள் ஆகிய இவை கள் அற்றுப்போகும்படி, யூதாவையும் எருசலேமையும் சுத்திகரித்து’‘ அத்தகைய பாவச் சோதனைகளைத் தன் குடிமக்களிடமிருந்து அகற்ற பெருமுயற்சி எடுத்துக்கொண்டார். அவனுக்கு முன்பாகப் பாகால்களின் பலி பீடங்களை இடித்தார்கள்; அவைகளின் மேலிருந்த சிலைகளை வெட்டி, விக்கிரகத் தோப்புகளையும் வார்ப்பு விக்கிரகங்களையும் வெட்டு விக்கிரகங்களையும் உடைத்து நொறுக்கி, அவைகளுக்குப் பலியிட்டவர்களுடைய பிரேதக்குழி களின் மேல் தூவி, பூஜாசாரிகளின் எலும்புகளை அவர்களுடைய பீடங்களின் மேல் சுட்டெரித்து, இவ்விதமாய் யூதாவையும் எருச லேமையும் சுத்திகரித்தான். ‘’2 நாளாகமம் 34:3-5.தீஇவ 396.2

    யூதா தேசத்தில் வேலையை முழுவீச்சில் முடுக்கிவிட்டதோடு அந்த வாலிப மன்னன் திருப்தியடைந்துவிடவில்லை. முன்பு இஸ்ர வேலின் பத்துக் கோத்திரத்தாருக்குச் சொந்தமாயிருந்ததும் இப் போது அவர்களில் வெகுசிலரே மீதமாயிருந்ததுமான பலஸ்தீனா வின் பகுதிகளிலும் தன் முயற்சியை மேற்கொண்டார். ‘’அப்படியே அவன் மனாசே எப்பிராயீம் சிமியோன் என்னும் பட்டணங்களிலும், நப்தலி மட்டும், பாழான அவைகளின் சுற்றுப்புறங்களிலும் செய் தான்’‘ என்கிறது வேதாகமம். பாழாய் போன வீடுகள் நிறைந்த அந்தப் பகுதியில் நெடுக்கும் குறுக்குமாக அலைந்து, ‘’இஸ்ரவேல் தேசம் எங்குமுள்ள பலிபீடங்களையும், விக்கிரத்தோப்புகளையும் தகர்த்து, விக்கிரகங்களை நொறுக்கித் தூளாக்கி, எல்லாச் சிலை களையும் வெட்டிப்போட்ட பிறகுதான் எருசலேமுக்குத் திரும் பினார். வசனங்கள் 6, 7.தீஇவ 398.1

    இப்படியாக, தன் இளம்பிராயம் முதலே தன் ராஜ பதவியைப் பயன்படுத்தி தேவனுடைய பரிசுத்த பிரமாணத்தின் நியதிகளை மேன்மைப்படுத்த பெருமுயற்சி எடுத்துக்கொண்டார் யோசியா. அந்தத் தொகுப்பைச் சாப்பான் வாசித்தபோது தேசத்தில் எத்தகைய சீர்திருத்த பணி நடைபெற வேண்டுமென்று ராஜா விரும்பியிருந் தாரோ அதற்கான அறிவுப் பொக்கிஷமும், பலத்த துணையும் அந்த நியாயப்பிரமாண புத்தகத்தில் இருந்ததை அவர் கண்டுகொண்டார். அதன் போதனைகளின் வெளிச்சத்தில் நடக்கத் தீர்மானித்தார். மேலும் அதன் போதனைகளைத் தன் மக்களிடத்தில் பரிட்சயமாக்கி, அவர்களில் பய பக்தி ஏற்படவும், பரலோகப் பிரமாணத்தின்மேல் அன்பு ஏற்படவும் அவர்களை வழிநடத்த தன் திராணிக்குத்தக்க அனைத்தையும் செய்யத் தீர்மானித்தார்.தீஇவ 398.2

    ஆனால், தேவையான சீர்திருத்தத்தைக் கொண்டுவருவது முடிந்த காரியமாயிருந்ததா? கிட்டத்தட்ட தேவ பொறுமையின் எல்லைக்கே வந்திருந்தனர் இஸ்ரவேலர். தம் நாமத்திற்கு இகழ்ச்சி உண்டு பண்ணினவர்களைத் தேவன் சீக்கிரத்தில் தண்டிக்கவிருந் தார். ஏற்கனவே மக்களுக்கு எதிராக தேவகோபம் மூண்டிருந்தது. கலக்கமும் வருத்தமும் நிறைந்தவராய் தன் வஸ்திரங்களைக் கிழித் துக்கொண்டு, ஆத்தும் வியாகுலத்தோடு தேவனுக்கு முன்பாகப் பணிந்து, மனந்திருந்தாத அத்தேசத்திற்காக மன்னிப்பு வேண்டிக் கொண்டார் யோசியா.தீஇவ 398.3

    அச்சமயத்தில் உல்தாள் எனும் பெண் தீர்க்கதரிசி எருசலேமின் தேவாலயத்திற்கு அருகே வசித்து வந்தாள். வரக்கூடிய தீமையைக் குறித்த வருத்தத்தால் நிறைந்திருந்த யோசியாவின் மனது அந்த ஊழியக்காரியின் பக்கமாகத் திரும்பியது. அழிவின் விளிம்பி லிருந்த துன்மார்க்க யூதாவை எவ்விதத்திலாவதுதான் காப்பாற்றக் கூடுமோவென்று அந்த ஊழியக்காரி மூலம் கர்த்தரிடத்தில் விசா ரிக்க அவர் தீர்மானித்தார்.தீஇவ 399.1

    சூழ்நிலையின் முக்கியத்துவமும் அந்தப் பெண் தீர்க்கதரிசி மேல் அவர் வைத்திருந்த மரியாதையும்தான், அப்பெண்ணிடம் தன் ராஜ்யத்தின் பிரதானிகளைத் தூதுவர்களாக அனுப்ப அவரை வழி நடத்தியது. ‘’கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தின் வார்த்தை களினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் ஜனத்திற்காகவும் யூதாவனைத்திற்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; நமக்காக எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்ய நம்முடைய பிதாக் கள் இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளுக்குச் செவிகொடாதபடி யினால், நம் மேல் பற்றியெரிந்த கர்த்தருடைய உக்கிரம் பெரியது’‘ என்று அவர் கட்டளையிட்டார். 2 இராஜாக்கள் 22:13.தீஇவ 399.2

    எருசலேமின் அழிவு தவிர்க்க முடியாததென்று உல்தாள் மூல மாக யோசியாவிடம் சொன்னார் தேவன். தேவனுக்கு முன்பாக மக் கள் தங்களைத் தாழ்த்தினாலும் கூட, தண்டனையிலிருந்து அவர் கள் தப்பிக்கக் கூடாத நிலை ஏற்பட்டிருந்தது. வெகுகால தீய செய்கையால் அவர்களுடைய புலன்கள் உணர்விழந்திருந்தன். இப்பொழுதும் அவர்கள்மேல் நியாயத்தீர்ப்பு சம்பவிக்காதிருந் தால், அதே பாவ மார்க்கத்திற்கு விரைவிலேயே அவர்கள் திரும்பக்கூடும்.தீஇவ 399.3

    ’’உங்களை என்னிடத்தில் அனுப்பினவரிடத்தில் நீங்கள் போய் : இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: இதோ, யூதாவின் ராஜா வாசித்த புஸ்தகத்தின் வார்த்தைகளிலெல் லாம் காட்டியிருக்கிற பொல்லாப்பை நான் இந்த ஸ்தலத்தின் மேலும், அதின் குடிகளின் மேலும் வரப்பண்ணுவேன். அவர்கள் என்னை விட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபமுண்டாக்கவேறேதேவர்களுக்குத்தூபங்காட்டினபடியினால், என் உக்கிரம் இந்த ஸ்தலத்தின் மேல் பற்றியெரியும்; அது அவிந்து போவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லுங்கள்’‘ என்றாள் தீர்க்க தரிசி. வசனங்கள் 15-17.தீஇவ 399.4

    தேவனுக்கு முன்பாக இராஜா தன் இருதயத்தைத் தாழ்த்தியதி னிமித்தம், பாவமன்னிப்பையும் இரக்கத்தையும் பெற அவர் ஆயத்த மாயிருந்ததைத் தேவன் ஆமோதிக்க விரும்பினார். எனவே, இப்படியாக அவருக்குச் சொல்லப்பட்டது. நான் இந்த ஸ்தலத்திற் கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக, அவர்கள் பாழும் சாபமுமா வார்கள் என்று சொன்னதை நீ கேட்டபொழுது, உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தி, உன் வஸ்திரங் களைக் கிழித்துக்கொண்டு, எனக்கு முன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன். ஆகையால், இதோ, நான் உன்னை உன் பிதாக்களண்டையிலே சேர்த்துக்கொள்ளுவேன்; நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்வாய்; நான் இந்தஸ்லத் தின்மேல் வரப்பண்ணும் சகல பொல்லாப்பையும் உன் கண்கள் காண்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். “வசனங்கள் 19, 20.தீஇவ 400.1

    வருங்கால நிகழ்வுகளைத் தேவனிடத்தில் ராஜா விட்டுவிட வேண்டியிருந்தது; யேகோவாவின் நித்திய ஆணைகளை மாற்ற அவரால் கூடாது. பரலோகத்தின் நியாயமான நியாயத்தீர்ப்புகள் கொடுக்கப்பட்ட போதிலும் மனந்திருந்தவும் சீர்திருத்தவும் தேவை யான தருணத்தைத் தேவன் எடுத்துப்போடவில்லை. தேவன் இரக் கத்தோடு தம் நியாயத்தீர்ப்புகளை மிருதுவாக்க சித்தங்கொண்டிருந் ததை அறிந்து, தேவையான சீர்த்திருத்தங்களை ஏற்படுத்த தன்திரா ணிக்குத்தக்க அனைத்தையும் செய்ய அவர் உறுதி கொண்டார். உடனே, மக்கள் ஒன்றுதிரண்டுகூட ஏற்பாடு செய்தார். அதில், பொது மக்களோடு சேர்ந்து கலந்து கொள்ளுமாறு எருசலேம் மற்றும் யூதா வின் மூப்பர்களும் நியாயதிபதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களோடு சேர்ந்து, லேவியரும் ஆசாரியரும் தேவாலயப் பிர காரத்திலிருந்த ராஜாவினிடத்தில் வந்தனர்.தீஇவ 400.2

    திரளாகக் கூடியிருந்தவர்கள் மத்தியில், ‘’கர்த்தருடைய ஆல யத்தில் கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கை புஸ்தகத்தின் வார்த்தை களையெல்லாம் “ராஜாதாமே வாசித்துக் காண்பித்தார். 2 இராஜாக் கள் 23:2. ராஜா அதிக தாக்கத்திற்குள்ளானவராக, நொறுங்குண்ட இருதயத்தின் உருக்கத்தோடு தான் செய்தியை அறிவித்தார். அதன் னைக் கேட்டவர்கள் வெகுவாக அசைக்கப் பட்டனர். ராஜாவினு டைய முகபாவனையில் ஏற்பட்ட உணர்வின் தீவிரமும், அந்தச் செய்தியின் ஆழ்ந்த கருத்தும், சமீபித்திருந்த நியாயத்தீர்ப்பு பற்றிய எச்சரிப்பும் மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தன. அநே நியாயப்பிரமாண புத்தகம் கர் ராஜாவோடு சேர்ந்து பாவமன்னிப்பு வேண்டிக்கொள்ள தீர் மானித்தார்கள்.தீஇவ 400.3

    உறுதியான மாற்றங்களை ஏற்படுத்துவதில் ஒருவரோடு ஒரு வர் ஒத்துழைப்பதாக மக்களோடு சேர்ந்து உயரதிகாரிகளும் தேவ னுக்கு முன்பாக உண்மையோடு உடன்படிக்கைபண்ண வேண்டும் மென கேட்டுக்கொண்டார் யோசியா. ‘’அப்பொழுது ராஜா, தூண் அருகே நின்று, கர்த்தரைப் பின்பற்றி நடக்கவும், அவருடைய கற் பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்ட ளைகளையும் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கைக் கொள்ளவும், அந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அந்த உடன் படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றவும் கர்த்தருடைய சந்நி தியில் உடன்படிக்கைபண்ணினான்; ஜனங்கள் எல்லாரும் உடன் படிக்கைக்கு உட்பட்டார்கள்.” வசனம் 3.தீஇவ 401.1

    அதனைத் தொடர்ந்த சீர்த்திருத்தத்தில், சிலை வழிபாட்டிற்கு அடையாளமாக அங்கு காணப்பட்ட ஒவ்வொரு தடயத்தையும் அழிப்பதில் ராஜா கவனம் செலுத்தினார். கல்லாலும் மரத்தாலும் செய்யப்பட்ட சொரூபங்களைப் பணிந்து கொள்வதில், வெகுகால மாக சுற்றிலுமிருந்த தேசத்தாரின் பழக்கங்களையே தேசத்தின் குடி கள் பின்பற்றி வந்தனர். எனவே, அந்தப் பாவச் செய்கையின் ஒவ் வொரு தடயத்தையும் அழிப்பது மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட தாகத் தோன்றியது. ஆனால், தேசத்தைச் சுத்திகரிக்கும் தன் முயற்சி யில் விடாப்பிடியாயிருந்தார் யோசியா. ‘’மேடைகளில் ஆசாரியர் களையெல்லாம் கொன்று போட்டு “சிலைவழிபாட்டை ஒழித்துக் கட்டினார். ‘’ஆசாரியனாகிய இலக்கியா கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுத்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிற நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை நிறைவேற்றும்படிக்கு, யோசியா அஞ்சனக்காரரை யும், குறிசொல்லுகிறவர்களையும், சுரூபங்களையும் நரகலான விக் கிரங்களையும், யூதாதேசத்திலும் எருசலேமிலும் காணப்பட்ட எல்லா அருவருப்புகளையும் நிர்மூலமாக்கினான்.’‘ வசனங்கள் 20, 24.தீஇவ 401.2

    சில நூற்றாண்டுகளுக்கு முன் ராஜ்யம் பிரிக்கப்பட்ட நாட் களில், நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் இஸ்ரவேலின் தொழுகைக்குரியவரான தேவனுக்கு எதிராகத் துணிந்து, எருச லேமின் தேவாலய ஆராதனைகளிலிருந்து மக்களின் இருதயங் களைத் திருப்பி, அவர்களைப் புதுவிதத் தொழுகை முறைகளில் ஈடுபடுத்த பெருமுயற்சி எடுத்துக்கொண்டார்; தெய்வ நிந்தனை யான ஒரு பலி பீடத்தையும் பெத்தேலில் ஏற்படுத்தினார். பின்னான வருடங்களில் அநேகரைச் சிலைவழிபாட்டிற்குள் இழுக்கவிருந்த அந்தப் பலிபீடத்தின் பிரதிஷ்டையின்போது, தேவமனிதன் ஒரு வன் யூதேயாவிலிருந்து திடீரென அங்கு வந்து, பரிசுத்தமற்ற அந்த நிகழ்ச்சிகளைக் கண்டித்துப் பேசினான். அவன் அந்தப் பலி பீடத்தை நோக்கி:தீஇவ 401.3

    ’’பலிபீடமே, பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடு வான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என் பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையை” கூறினான். 1 இராஜாக்கள் 13:2. கர்த்தர் சொன்ன வார்த்தைகளையே அவன் அறிவித்தான் என்பதற்கு ஓர் அடையாளமும் கொடுக்கப் பட்டது.தீஇவ 402.1

    மூன்று நூற்றாண்டுகள் கடந்தன. தான் மேற்கொண்டிருந்த சீர் திருத்தத்தின்போது, அந்த முற்காலப் பலிபீடமிருந்த பெத்தேலுக்கு யோசியா ராஜா சென்றிருந்தார். அநேக வருடங்களுக்கு முன்பாக யெரொபெயாமின் முன்னிலையில் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசன மானது, இப்பொழுது அப்படியே நிறைவேற இருந்தது.தீஇவ 402.2

    ’’இஸ்ரவேலைப் பாவஞ் செய்யப் பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் பெத்தேலில் உண்டாக்கியிருந்த பலிபீடமும் மேடையும் ஆகிய அவ்விரண்டையும் அவன் இடித்து, அந்த விக்கிரகத் தோப்பையும் சுட்டெரித்தான்.தீஇவ 402.3

    ’’யோசியா திரும்பிப்பார்க்கிறபோது அங்கே அந்த மலையி லிருக்கிற கல்லறைகளைக் கண்டு, ஆட்களை அனுப்பி, அந்தக் கல்லறைகளிலுள்ள எலும்புகளை எடுத்து வரச் செய்து, இப்படி நடக்கும் என்று தேவனுடைய மனுஷன் கூறின கர்த்தருடைய வார்த் தையின்படியே, அவைகளை அந்தப் பலிபீடத்தின் மேல் சுட்டெ ரித்து அதைத் தீட்டாக்கினான்.தீஇவ 402.4

    ’’அப்பொழுது அவன், நான் காண்கிற அந்தக் குறிப்படை யாளம் என்ன? என்று கேட்டதற்கு, அந்தப் பட்டணத்து மனுஷர், அது யூதாவிலிருந்து வந்து, நீர் செய்த இந்தக் கிரியைகளைப் பெத் தேலின் பலிபீடத்திற்கு விரோதமாய்க் கூறி, அறிவித்த தேவனுதீஇவ 402.5

    நம்முடைய தேவனுக்கு மகத்துவத்தைச் செலுத்துங்கள்.
    அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது;
    அவர் வழிகளெல்லாம் நியாயம்,
    அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்,
    அவர் நீதியும் செம்மையுமானவர்.
    தீஇவ 404.1

    உபாகமம் 32:3, 4. டைய மனுஷனின் கல்லறை என்றார்கள். அதற்கு அவன் ; இருக்கட் டும், ஒருவனும் அவன் எழும்புகளைத் தொடவேண்டாம் என் றான்; அப்படியே அவன் எலும்புகளைச் சமாரியாவிலிருந்து வந்த தீர்க்கதரிசியின் எலும்புகளோடு விட்டுவிட்டார்கள்.’‘ 2 இராஜாக் கள் 23:15-18.

    யேகோவாவின் ஆலயம் மோரியா மலைமேல் இருந்தது. அதற்கு எதிரேயிருந்த ஒலிவமலையின் தென்புறச் சரிவுகளில்தான், சாலொமோன் தன் அஞ்ஞான மனைவிகளைச் சமாதானப்படுத்த ஏற்படுத்தியிருந்த சொரூபங்களும் கோவில்களும் இருந்தன. பார்க்கவும்:1 இராஜா 11:6-8. மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக ‘நாசமலை மேல் நின்றிருந்த பெரிதும் விகாரமுமான சொரூபங்கள், ஞானமிக்க இஸ்ரவேல் ராஜாவின் அவபக்திக்கு அமைதியான சாட் சியாக நின்றிருந்தன. அவற்றையும் அழித்து, அப்புறப்படுத்தினான் யோசியா.தீஇவ 405.1

    நியாயப்பிரமாணப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்த ஏற்பாடு களுக்கு இணங்க, மாபெரும் பஸ்கா பண்டிகையை நடத்தவும் தங் கள் பிதாக்களின் தேவன்மேல் யூதாவின் விசுவாசத்தை நிலை நிறுத்தவும் ராஜா அதிகம் முயன்றான். தேவாலயப் பணியில் இருந் தவர்கள் அதற்கான ஏற்பாட்டைச் செய்தனர். அந்த மாபெரும் பண் டிகையின் நாளில், காணிக்கைகள் தாராளமாகக் கொடுக்கப்பட் டன. ‘’இஸ்ரவேலை நியாயம் விசாரித்த நியாயதிபதிகளின் நாட் கள் தொடங்கி, இஸ்ரவேலின் ராஜாக்கள், யூதாவின் ராஜாக்கள் ஆகிய அவர்களுடைய சகல நாட்களிலும் இந்தப் பஸ்காவைப் போல் பஸ்கா ஆசரிக்கப்படவில்லை . ‘2இராஜாக்கள் 23:22.தீஇவ 405.2

    யோசியாவின் அத்தகைய வைராக்கியம் தேவனுக்கு ஏற்ப புடையதாக இருந்தாலும், முந்தைய தலைமுறையினரின் பாவங் களை அதனால் நிவிர்த்தி செய்ய முடியவில்லை ; ராஜாவைப் பின் பற்றின வர்களிடம் வெளிப்பட்ட பக்தியாலும்கூட, அநேகரின் இருதயங்களில் நன்மையான மாற்றத்தைக் கொண்டுவர முடிய வில்லை. ஏனெனில், சிலைவழிபாட்டிலிருந்து விலகி, மெய்யான தேவனை வழிபட அவர்கள் பிடிவாதமாக மறுத்தார்கள்.தீஇவ 405.3

    பஸ்காப்பண்டிகை ஆசரிப்புக்குப்பிறகு, பத்தாண்டுகளுக்கு மேல், யோசியா ஆட்சி செய்தார். தன்னுடைய முப்பத்தொன்பதாம் வயதில் எகிப்திய சேனைகளோடான யுத்தத்தில் அவர் மரித்து, ’’தன் பிதாக்களின் கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டார்” 2 நாளாகமம் 35:24. ‘’யூதாவிலும் எருசலேமிலுள்ள யாவரும் யோசி யாவுக்காகத்துக்கங்கொண்டாடினார்கள். எரேமியா யோசியாவின் மேல் புலம்பல் பாடினான்; சகல பாடகரும் பாடகிகளும் இந்நாள் வரைக்கும் தங்கள் புலம்பல்களில் யோசியாவின் மேல் பாடுகிறார் கள்; அவைகள் இந்நாள் வரைக்கும் இஸ்ரவேலிலே வழங்கிவரு கிறது; அவைகள் புலம்பலின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது’’. 2 நாளாகமம் 35:25. ‘’கர்த்தரிடத்துக்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழுப்பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த் தான்; அவனைப் போலொத்த ராஜா அவனுக்கு முன் இருந்தது மில்லை, அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை. ஆகிலும், மனாசே கர்த்தருக்குக் கோபமுண்டாக்கின சகல காரியங்களினிமித்தமும் அவர் யூதாவின் மேல் கொண்ட தம்முடைய மகா கோபத்தின் உக் கிரத்தை விட்டுத் திரும்பவில்லை . ‘’2 இராஜாக்கள் 23:25, 26.தீஇவ 405.4

    எருசலேம் முற்றிலுமாக அழிக்கப்படவும், அதன் குடிகள் பாபிலோனுக்குச் சிறையாகக் கொண்டு செல்லப்படுவதற்கும் நேரம் வேகமாக நெருங்கிக்கொண்டிருந்தது. அதிக சாதகமான சூழ் நிலைகளில் அவர்கள் கற்றுக்கொள்ள மறுத்த பாடங்களை அங் குப்போய்க் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.தீஇவ 406.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents