Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    24 - அறிவில்லாமையால் சங்காரம்

    இஸ்ரவேலருக்கு தேவன் காட்டின தயவானது கீழ்ப்படிதலை நிபந்தனையாகக் கொண்டதாகும். சீனாய் மலையின் அடிவாரத்தில், ‘சகல ஜனங்களிலும் அவருடைய தனிச்சிறப்புடைய சம்பத்தாக’ அவரோடு ஓர் உடன்படிக்கை உறவுக்குள் அவர்கள் நுழைந்தனர். கீழ்ப்படிதலின் பாதையில் நடப்பதாகப் பயபக்தியுடன் வாக்குரைத் தார்கள். ‘’கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம்” என் றனர். யாத் 19:5, 8. சிலநாட்களுக்குப் பின், சீனாய்மலைமேல்நியாயப் பிரமாணம் கொடுக்கப்பட்டது. பின்னர், நியமங்களாகவும் கட்டளை களாகவும் போதனைகள் பல மோசேயின் மூலம் கொடுக்கப் பட்டன. அப்போது மீண்டும்,’’கர்த்தர் அருளின எல்லா வார்த்தை களின்படியும் செய்வோம்’‘ என்று ஒருமனதோடு கூறினர் இஸ்ர வேலர். சட்டப்படி உடன்படிக்கை உறுதி செய்யப்பட்டபோது, ஜனங் கள் மீண்டுமாக ஒரு மனப்பட்டு, கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம்” என்று உறுதி கூறினார்கள். யாத் 24:3, 7. தேவன் இஸ்ரவேலைத் தம் ஜனங்களாகத் தெரிந்து கொண் டார்; அவர்கள் அவரைத்தங்கள் ராஜாவாகத் தெரிந்துகொண்டனர்.தீஇவ 293.1

    வனாந்தரயாத்திரை முடிவில், உடன்படிக்கையின் நிபந்தனை கள் மீண்டுமாகக் கூறப்பட்டன. வாக்குத்தத்த தேசத்தின் எல்லை களிலிருந்த பாகால்பேயாரின், வஞ்சகமான பாவத்தூண்டல் களுக்கு அநேகர் இரையானபோது, அங்கே உண்மையோடிருந் தவர்கள் தங்கள் விசுவாசப்பிரமாணத்தை மீண்டுமாகப் புதுப்பித் தனர். எதிர்காலத்தில் அவர்களைப் பாதிக்கக்கூடிய பாவத்தூண்டல் கள் குறித்து மோசே அவர்களை எச்சரித்தான். சுற்றிலுமிருந்த தேசத் தாரைவிட்டுப் பிரிந்திருக்குமாறும், தேவனை மாத்திரமே தொழுது கொள்ளுமாறும் அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டது.தீஇவ 294.1

    ’இஸ்ரவேலரே, நீங்கள் பிழைத்திருக்கும்படிக்கும், உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத் திலே நீங்கள் பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக் கொள்ளும்படிக் கும், நீங்கள் கைக்கொள்வதற்கு நான் உங்களுக்குப் போதிக்கிற கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள். நான் உங்களுக் குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங் கள் கைக்கொள்ளும்படி, நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத் தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம். ஆகையால், அவைகளைக்கைக்கொண்டு நடவுங்கள்; ஜனங்களின் கண்களுக்கு முன்பாகவும் இதுவே உங் களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய ஜாதியே ஞான மும் விவேகமுள்ள ஜனங்கள் என்பார்கள்’ என்று இஸ்ரவேல ருக்குப் புத்தி சொன்னான் மோசே. உபா 4:1-6.தீஇவ 294.2

    தேவ கற்பனைகளை மறந்துவிடக் கூடாதென இஸ்ரவேலர் விசேஷமாக அறிவுறுத்தப்பட்டனர். அவற்றிற்குக் கீழ்ப்படிவதில் தான் அவர்கள் பெலத்தையும் ஆசீர்வாதத்தையும் பெறவிருந்தனர். ‘உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும், உன் ஜீவ னுள்ள நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தைவிட்டு நீங்காத படிக்கும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவை ஜாக்கிரதை யாய்க் காத்துக்கொள்; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய்’ என்பதே மோசேயின் மூலமாக அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகளாயிருந்தன. உபாகமம் 4:10. சீனாயில் பிரமாணம் கொடுக்கப்பட்டபோது நிகழ்ந்த ஆச்சரியமான காட்சிகள் ஒரு போதும் மறக்கப்படக்கூடாதவைகளாய் இருந்தன. அண்டை தேசத் தாரின் மத்தியிலே நிலவிவந்த சிலைவழிபாட்டுச் சடங்காச்சாரங் களுக்கு எதிராக, தெளிவும் உறுதியுமான எச்சரிப்புகள் இஸ்ரவேல ருக்குக் கொடுக்கப்பட்டன. நீங்கள் உங்களைக் கெடுத்துக்கொண்டு யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக் காதபடிக்கும், உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங் களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வசேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும் உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.’ ‘நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை மறந்து, உங்கள் தேவ னாகிய கர்த்தர் வேண்டாம் என்று விலக்கின எவ்விதச் சாயலான விக்கிரகத்தையும் உங்களுக்கு உண்டாக்காதபடிக்கு எச்சரிக்கையா யிருங்கள்’ என்பதே அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆலோச னையாயிருந்தது. வச 15, 16, 19, 23.தீஇவ 294.3

    யேகோவாவின் கட்டளைகளிலிருந்து விலகுவதால் உண் டாகக் கூடிய தீமைகளைச் சித்தரித்துக் காட்டினான் மோசே. ‘வாக் குத்தத்த தேசத்தில் குடியேறி, காலம் சென்ற பிறகு, கேடான தொழுகைமுறைகளுக்கு தங்களை அறிமுகப்படுத்தி, வார்க்கப் பட்ட சொரூபங்களுக்கு முன்பாகப் பணிந்து, மெய்யான தேவ னைத் தொழுது கொள்வதை மீண்டும் மறுதலிப்பார்களானால், தேவகோபம் எழும்பும்’ என்றும், ‘அவர்கள் சிறைக்கைதிகளாகக் கொண்டு போகப்பட்டு, அஞ்ஞான மக்கள் மத்தியில் சிதறடிக்கப் படுவார்கள்’ என்றும் வானத்தையும் பூமியையும் சாட்சியாகக் கொண்டு கூறினான் மோசே. ‘’நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந் தரிக்கப்போகிறதேசத்தில் இராமல், சீக்கிரமாய் முற்றிலும் அழிந்து போவீர்கள் என்று இந்நாளில் உங்களுக்கு விரோதமாய் வானத் தையும் பூமியையும் சாட்சி வைக்கிறேன்; நீங்கள் அதிலே நெடு நாள் இராமல் நிர்மூலமாக்கப்படுவீர்கள். கர்த்தர் உங்களைப் புறஜாதி களுக்குள்ளே சிதறடிப்பார்; கர்த்தர் உங்களைக் கொண்டுபோய் விடப்போகிற ஜாதிகளிடத்திலே கொஞ்ச ஜனங்களாய் மீந்திருப் பீர்கள். அங்கே காணாமலும் கேளாமலும் சாப்பிடாமலும் முகரா மலும் இருக்கிற மரமும் கல்லுமான, மனுஷர் கைவேலையாகிய தேவர்களைச் சேவிப்பீர்கள்’‘ என்று அவன் எச்சரித்தான். வச 26-28தீஇவ 295.1

    நியாயாதிபதிகளின் நாட்களில் இந்தத் தீர்க்கதரிசனம் கொஞ் சம் நிறைவேறினது; ஆனால், இஸ்ரவேல் தேசம் அசீரியரிடமும் யூதா தேசம் பாபிலோனியரிடமும் சிறைப்பட்டுச் சென்றபோது, சொல்லப் பட்டபடியே அது முழுமையாக நிறைவேறியது. தீஇவ 296.1

    இஸ்ரவேலின் வழிவிலகல் படிப்படியாக நேர்ந்தது. தெரிந்து கொள்ளப்பட்ட தேசத்தார் தாங்கள் என்றென்றும் கைக்கொள்வதாக வாக்குரைத்திருந்த ‘கட்டளைகளையும் கற்பனைகளையும் நியா யங்களையும் ‘ அவர்கள் மறந்துபோகும் படி அவர்களை மாற்ற சந்ததி தோறும் மீண்டும் மீண்டுமாக முயற்சிகளை மேற்கொண்டான் சாத்தான். உபா 6:1. இஸ்ரவேலர் தேவனை மறந்து, அவர்கள் ‘வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவித்து, அவர் களைப் பணிந்துகொள்ளும்படி’ வழிநடத்தப்பட்டால் மாத்திரமே அவர்கள் நிச்சயமாய் அழிவார்கள்’ என்பதை அவன் அறிந்திருந் தான். உபா8:19.தீஇவ 296.2

    ஆனாலும், ‘குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாதவர்’ ‘இரக்கமும் கிருபையும் நீடிய சாந்தமும் மகா தயையும் சத்தியமும் ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கம் காக்கிறவரும் அக்கிரமத்தை யும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவருமாக’ இருக்கிறார். அது மனதுருக்கமுள்ளவரின் மகிமையான தன்மையாகும். பூமியி லுள்ள தேவசபைக்குச் சத்துருவானவன் அதனை உணர்வதில்லை. யாத் 34:6, 7. இஸ்ரவேலருக்கான தேவநோக்கத்தைக் கெடுக்கச் சாத்தான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு மத்தியிலும், அவர்களும் டைய வரலாற்றின் மோசமான காலக்கட்டத்திலும், தீயசக்திகள் வெற்றி அடைவதாகத் தோன்றினபோது, ஆண்டவர் கிருபையாக தம்மை வெளிப்படுத்தினார். தேசத்தின் நலனுக்கான காரியங்களை இஸ்ரவேலருக்கு முன்பாக விளக்கினார். என் வேதத்தின் மகத்து வங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந் நிய காரியமாக எண்ணினார்கள்.’ ‘நான் எப்பிராயீமைக் கைப் பிடித்து நடக்கப் பழக்கினேன்; ஆனாலும், நான் தங்களைக் குண மாக்குகிறவரென்று அறியாமற்போனார்கள்’ என்று ஓசியாவின் மூலம் அவர் அறிவித்தார். ஓசியா8:12;11:3. ஆண்டவர் கனிவோடு அவர்களுடன் வாசம்பண்ணி, தம்முடைய தீர்க்கதரிசிகளின் மூலம் கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமு மாக அவர்களுக்குப் போதித்தார்.தீஇவ 296.3

    தீர்க்கதரிசிகளின் போதனைகளுக்கு இஸ்ரவேலர் செவிசாய்த் திருப்பார்களானால், அவர்களுக்கு ஏற்படவிருந்த அழிவிலிருந்து தப்புவிக்கப்பட்டிருப்பார்கள். அவருடைய பிரமாணத்தை விட்டு விலகுவதில் அவர்கள் நிலைத்திருந்ததாலேயே அவர்கள் சிறைப் பட்டுப்போவதை அனுமதிக்கவேண்டிய கட்டாயத்திற்குள்ளானார் தேவன். என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்’ என்பதே ஓசியாவின் மூலம் கொடுக்கப்பட்ட தேவ செய்தியாயிருந் தது. ‘நீ அறிவை வெறுத்தாய், ஆகையால், நானும் உன்னை வெறுத்து விடுவேன். நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய்.’ ஓசியா 4:6.தீஇவ 297.1

    தேவ பிரமாணத்தை மீறுவது, ஒவ்வொரு யுகத்திலும் இதே விளைவைத்தான் கொண்டுவருகிறது. நோவாவின் நாட்களில், நன்னடத்தையின் ஒவ்வொரு நியதியும் மீறப்பட்டு, அக்கிரமம் எங் கும் அதிகமாகப் பரவியிருந்ததால் தேவனால் அதனை மேலும் பொறுக்கக்கூடாமல் போயிற்று. எனவே, ‘’நான் சிருஷ்டித்த மனு ஷனைப் பூமியின் மேல் வைக்காமல் நிக்கிரகம் பண்ணுவேன்” என்று ஆணையிட்டார். ஆதியாகம் 6:7. ஆபிரகாமின் காலத்தில் சோதோ மின் மக்கள் தேவனுக்கும் அவருடைய பிரமாணத்திற்கும் வெளிப் படையாக எதிர்த்து நின்றார்கள். ஜலப்பிரளயக் காலத்திற்கு முன் காணப்பட்ட அதே துன்மார்க்கமும் அதே சீர்கேடும் கட்டுக்கடங்கா அதே சிற்றின்பத்தோய்வும் அங்குக் காணப்பட்டது. சோதோமின் குடிமக்கள் தேவ பொறுமையின் எல்லையைத் தாண்டினார்கள். தேவகோபமென்னும் அக்கினி அவர்களுக்கு எதிராகத் தூண்டப் பட்டு, பற்றியெரிந்தது.தீஇவ 297.2

    இஸ்ரவேலின் பத்துக் கோத்திரத்தார் சிறைப்பட்டுச் சென்றதற்கு முன்பான காலத்திலும் இதைப்போன்றே கீழ்ப்படியாமையும் இதே துன்மார்க்கமும் காணப்பட்டது. தேவபிரமாணம் பிரயோஜனமற்ற தாக எண்ணப்பட்டது; இது அக்கிரமம் எனும் மதகுகளை இஸ்ரவே லில் திறந்துவிட்டது. ‘’தேசத்துக்குடிகளோடேகர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அதேனென்றால் தேசத்திலே உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை; தேவனைப்பற்றிய அறிவும் இல்லை. பொய் யாணையிட்டு, பொய்சொல்லி, கொலை செய்து, திருடி, விபசாரம் பண்ணி, மிஞ்சிமிஞ்சிப்போகிறார்கள்: இரத்தப் பழிகளோடே இரத் தப்பழிகள் சேருகிறது’‘ என்றான் ஓசியா. ஓசியா 4:1,2. தீஇவ 297.3

    ஆமோஸம் ஓசியாவும் சொன்ன நியாயத்தீர்ப்பு குறித்த தீர்க்க தரிசனங்களோடு எதிர்கால மகிமை குறித்த தீர்க்கதரிசனங்களும் சொல்லப்பட்டன. பாவத்தை உணராது நீண்ட நாட்கள் கலகம் செய்த பத்துக்கோத்திரத்தார், முன்பு பலஸ்தீனாவில் தாங்கள் பெற் றிருந்த வல்லமையை மீண்டும் முழுமையாகப் பெறுவார்களென அவர்களுக்கு எவ்வித வாக்குத்தத்தமும் கொடுக்கப்படவில்லை. முடிவு காலம் மட்டும் அவர்கள் அந்நிய ‘ஜாதிகளுக்குள்ளே அலைந்து திரிய வேண்டியதாயிருந்தது. ஆனால், பூலோகவரலாற் றின், முடிவில் ராஜாதி ராஜாவாகவும் கர்த்தாதி கர்த்தாவுமாககிறிஸ்து வரும்போது, இறுதியாக மீட்கப்படும் தேவ மக்களோடு பங்கு கொள்ளும் சிலாக்கியமானது ஓசியாவுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசனத்தின் மூலம் அவர்களுக்குத் தெரிவிக்கப் பட்டது. பத்துக்கோத்திரத்தாரும் அநேக நாள் ராஜா இல்லாமலும், அதிபதி இல்லாமலும், பலி இல்லாமலும், சிலை இல்லாமலும், ஏபோத்வஸ் திரம் இல்லாமலும், தேராபீம் இல்லாமலும்’ தரித்திருக்க வேண்டு மென உரைத்தான் தீர்க்கதரிசி.தீஇவ 298.1

    ’’பின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பி, தங்கள் தேவனாகிய கர்த்தரையும், தங்கள் ராஜாவாகிய தாவீதையும் தேடி, கடைசி நாட் களில் கர்த்தரையும், அவருடைய தயவையும் நாடி அஞ்சிக்கை யாய் வருவார்கள்” என்றான் தீர்க்கதரிசி. ஓசியா 3:4, 5.தீஇவ 298.2

    வாக்குத்தத்த தேசத்தில் இஸ்ரவேலர் அவருக்கு உண்மையா யிருந்த நாட்களில் அவர்களுக்கு அருளப்பட்ட ஆசீர்வாதங்களை, பூமியின் தேவசபையில் இணைய விரும்பும் மனந்திரும்பிய ஒவ் வோர் ஆத்துமாவிற்கும் மீண்டும் அருளும் தேவதிட்டம் பற்றி உரு வகமான வார்த்தைகளால் பத்துக் கோத்திரத்தாருக்கும் தெரிவித் தான் ஓசியா. இஸ்ரவேலுக்குத் தாம் இரக்கம் காட்ட விரும்புவ தாகக் குறிப்பிட்ட கர்த்தர், ‘’ஆயினும், இதோ, நான் அவளுக்கு நயங்காட்டி, அவளை வனாந்தரத்தில் அழைத்துக்கொண்டு போய், அவளோடே பட்சமாய்ப் பேசி, அவ்விடத்திலிருந்து அவளுக்கு அவளுடைய திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசம் லாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்; அப்பொழுது அவள் அங்கே, தன் இளவயதின் நாட்களிலும், தான் எகிப்து தேசத் திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள். அக்காலத்தில் நீ என்னை இனி பாகாலி (என் ஆண்டவரே)’ என்று சொல்லாமல், ஈஷி’ ‘(என் புருஷரே)“என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக் கிறார். பாகால்களுடைய நாமங்களை அவள் வாயிலிருந்து அற்றுப் போகப் பண்ணுவேன்; இனி அவைகளின் பேரைச் சொல்லி, அவைகளை நினைக்கிற நினைப்பும் இல்லாமற்போகும்” என்றார். ஓசியா 2:14-17.தீஇவ 298.3

    இப்பூலோக வரலாற்றின் இறுதி நாட்களில், தேவனுடைய கற் பனைகளைக் கைக்கொள்ளும் மக்களோடு அவருடைய உடன் படிக்கையைப் புதுப்பிக்க வேண்டியிருக்கிறது. ‘’அக்காலத்தில் நான் அவர்களுக்காகக் காட்டு மிருகங்களோடும், ஆகாயத்துப் பறவைகளோடும், பூமியிலே ஊரும் பிராணிகளோடும், ஒரு உடன் படிக்கை பண்ணி, வில்லையும் பட்டயத்தையும் யுத்தத்தையும் தேசத் திலே இராதபடிக்கு முறித்து, அவர்களைச் சுகமாய்ப் படுத்துக்கொண் டிருக்கப் பண்ணுவேன். நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்: நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன். உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீ கர்த் தரை அறிந்துகொள்ளுவாய்.தீஇவ 299.1

    ’’அக்காலத்தில் நான் மறுமொழி கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானங்களுக்கு மறுமொழி கொடுப்பேன்; அவைகள் பூமிக்கு மறுமொழி கொடுக்கும். பூமி தானியத்துக்கும் திராட்சரசத்துக்கும் எண்ணெய்க்கும் மறுமொழி கொடுக்கும், இவை கள் யெஸ்ரயேலுக்கும் மறுமொழி கொடுக்கும். நான் அவளை எனக் கென்று பூமியிலே விதைத்து, இரக்கம் பெறாதிருந்தவளுக்கு இரங் குவேன்; என் ஜனமல்லாதிருந்தவர்களை நோக்கி, ‘நீ என் ஜனம்’ என்று சொல்லுவேன்; அவர்கள், ‘என் தேவனே’ என்பார்கள்’‘ என்றார். வச.18- 23.தீஇவ 299.2

    ’அக்காலத்திலே, இஸ்ரவேலில் மீதமானவர்களும் யாக்கோ பின் வம்சத்தில் தப்பினவர்களும் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த் தரையே உண்மையாய்ச் சார்ந்துகொள்வார்கள்!’ ஏசா 10:20.தீஇவ 299.3

    ’தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்பு கொடுக்கும் வேளைவந்தது’ எனும் செய்திக்குச் சந்தோஷமாக இணங்குகிறவர்கள் ‘சகல ஜாதிகளிலும் பாஷைக் காரரிலும் கோத்திரத்தாரிலும் ஜனக்கூட்டத்தாரிலும்’ சிலர் இருப் பார்கள். பூமியோடு தங்களைக் கட்டுகிற ஒவ்வொரு விக்கிரகத் தையும் விட்டு அவர்கள் விலகி, ‘வானத்தையும் பூமியையும் சமுத் திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுது கொள்வார்கள். ஒவ்வொரு சிக்கலிலுமிருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொண்டு, தேவ இரக்கத்தின் நினைவுச்சின்னங்களாக உலகிற்கு முன் நிற்பார்கள். தேவநிபந்தனைகளுக்குக் கீழ்ப்படிந்து, ‘தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத் தையும் காத்துக்கொள்கிறவர்களாக’தூதராலும் மனிதராலும் அடை யாளம் கண்டுகொள்ளப்படுவார்கள். வெளி 14:6, 7, 12.தீஇவ 299.4

    ’’இதோ, உழுகிறவன் அறுக்கிறவனையும், திராட்சப் பழங் களை ஆலையாடுகிறவன் விதைக்கிறவனையும் தொடர்ந்து பிடித்து, பர்வதங்கள் திராட்சரசமாய் வடிகிறதும், மேடுகளெல்லாம் கரை கிறதுமான நாட்கள் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார். என் ஜன் மாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப்புசிப்பார்கள். அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லை யென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்” என்கிறான் ஆமோஸ். ஆமோஸ் 9:13-15.தீஇவ 300.1