Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    39 - பாபிலோன் அரசவையில்

    எழுபதுவருட சிறையிருப்பின் துவக்கத்தில் பாபிலோனுக்குச் சிறைக்கைதிகளாகக் கொண்டுசெல்லப்பட்ட இஸ்ரவேல் புத்திரரில் விசுவாச வீரர்களும் இருந்தனர். இரும்பைப்போல உறுதியான கொள்கையோடிருந்த அவர்கள் சுயநலத்தால் தங்களைத் தீட்டுப் படுத்தாமல், சகலத்தையும் இழக்க நேரிடினும் தேவனையே கனப் படுத்த விரும்பினார்கள். யேகோவாவைப்பற்றின அறிவால் கிடைக்கும் ஆசீர்வாதங்களை தாங்கள் சிறைப்பட்டிருந்த தேசத்தில் அந்த அஞ்ஞானிகளுக்குத் தெரிவித்து, தேவ நோக்கத்தை நிறை வேற்ற இருந்தார்கள். அவருடைய பிரதிநிதிகளாக அவர்கள் விளங்க இருந்தார்கள். ஒருபோதும் சிலைவழிபாட்டுக்காரரோடு சமரசம் செய்துகொள்ள அவர்கள் விரும்பவில்லை; தங்கள் விசு வாசத்தையும், ஜீவனுள்ள தேவனைத் தொழுதுகொள்கிறவர்கள் எனும் தங்கள் அடையாளத்தையும் அவர்கள் மதிப்பு வாய்ந்தவை களாகக் கருதினார்கள். வாழ்விலும் தாழ்விலும் அவர்கள் தேவ னைக் கனப்படுத்தினார்கள்; தேவனும் அவர்களைக் கனப்படுத்தி னார்.தீஇவ 479.1

    யேகோவாவைத் தொழுது கொண்டவர்களான அந்த மனிதர் பாபிலோனில் சிறைக்கைதிகளாக இருந்ததாலும், எருசலேம் தேவா லயத்தின் பாத்திரங்கள் பாபிலோனிய தேவர்களின் ஆலயத்தில் வைக்கப்பட்டதாலும், தங்களுடைய மதமும் சம்பிரதாயங்களும் எபிரெயரின் மதத்தையும் சம்பிரதாயங்களையும் விட மேன்மை வாய்ந்ததாக தங்கள் வெற்றிமிதப்பில் பாபிலோனியர் கூறிக்கொண் டார்கள். தேவனைவிட்டு விலகியதால் இஸ்ரவேல் தனக்கு வரும் வித்துக்கொண்டதாழ்ச்சிகள் மூலம், தம்முடைய மகத்துவத்திற்கான ஆதாரத்தையும், தம்முடைய நிபந்தனைகளின் பரிசுத்தத்தையும், கீழ்ப்படியாமையின் நிச்சயவிளைவுகளையும் பாபிலோனியருக்குத் தேவன் தெரியப்படுத்தினார். தமக்கு உண்மையோடு இருந்தவர் கள் மாத்திரமே அத்தகைய சாட்சியைக் கொடுக்கமுடியும் என்பது போல, அவர்கள் மூலமாக அந்தச் சாட்சியைக் கொடுத்தார்.தீஇவ 479.2

    தேவன் மேலிருந்த தங்கள் மெய்ப்பற்றைக் காத்துக்கொண்ட வர்களில் தானியேலும் அவருடைய மூன்று நண்பர்களும் அடங்கு வர். ஞானமும் வல்லமையுமுள்ள தேவனோடு இணையும் மனிதர் களால் என்ன செய்யக்கூடும் என்பதற்கு அவர்கள் எடுத்துக்காட்டா யிருக்கிறார்கள். இராஜகுலத்தைச் சேர்ந்த அந்த வாலிபர்கள் தங்க ளுடைய சாதாரண யூதக்குடியிருப்பிலிருந்து மிகவும் ஒய்யாரமான நகரங்களுக்கும், உலகிலேயே வல்லரசனாகத் திகழ்ந்தவரின் அரச வைக்கும் கொண்டுசெல்லப்பட்டார்கள். அப்பொழுது நேபுகாத் நேச்சார், ‘’இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர் களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர் களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரைக் கொண்டுவர தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்குக் கற்பித்தான்’‘தீஇவ 480.1

    ’’அவர்களுக்குள் யூதா புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பர்கள் இருந்தார்கள். அந்த வாலிபர் களிடம் விசேஷித்த திறமைக்கான அறிகுறியைக் கண்ட நேபுகாத் நேச்சார், தன்னுடைய ராஜ்யத்தின் முக்கிய பதவிகளில் அவர்களை அமர்த்தும்படி அவர்களைப் பயிற்றுவிக்க தீர்மானித்தான். தங்கள் வாழ்நாள் பணிக்காக அவர்கள் முற்றிலும் தகுதிப்படும்படி, அவர் கள் கல்தேயரின் பாஷையைக் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தான்; தன்ராஜ்யத்தின் பிரபுக்களுக்கு வழங்கப்படும் விசேஷித்த கல்விப் பயன்களை அவர்களுக்கும் வழங்க மூன்று வருடங்கள் ஒதுக்கி னான்.தீஇவ 480.2

    கல்தேயரின் தேவர்களைச் சுட்டிக்காட்டும் விதத்தில் தானி யேல் மற்றும் அவருடைய நண்பர்களின் பெயர்கள் மாற்றப்பட்டன. எபிரெய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டும் பெயர் களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். தங்கள் பிள்ளை களில் எத்தகைய குணநலன்கள் வளர வேண்டுமென்று பெற்றோர் விரும்பினார்களோ அதன்படியே பெயர் சூட்டினார்கள். அந்த இளம் அடிமைகள் எந்தப் பிரபுவின் கட்டுப்பாட்டில் விடப்பட்டிருந் தார்களோ அவன், ‘’தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என் றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான்’’.தீஇவ 481.1

    அந்த எபிரெய வாலிபர்கள் சிலைவழிபாட்டிற்கு ஆதரவாக தங்கள் விசுவாசத்தை மறுதலிக்கவேண்டுமென்று ராஜா அவர் களைக் கட்டாயப்படுத்தவில்லை ; ஆனால், படிப்படியாக அவர் களை அதற்குள் கொண்டுவர நினைத்தான். சிலைவழிபாட்டை முக்கியப்படுத்தும் விதத்தில் அவர்களுக்குப் பெயரிட்டதாலும், சிலை வழிபாட்டுச் சம்பிரதாய நடவடிக்கைகளில் அனுதினமும் அவர் களை நெருக்கமாக ஈடுபடுத்தியதாலும், அஞ்ஞான தொழுகையின் கவர்ச்சிமிக்க சடங்காச்சாரத்தாக்கத்திற்கு அவர்களை உட்படுத்தி யதாலும், இஸ்ரவேலின் மதத்தை அவர்கள் புறக்கணிக்குமாறு செய்யவும் பாபிலோனியர்களின் தொழுகையில் அவர்களை இணையச் செய்யவும் அவன் எண்ணினான்.தீஇவ 481.2

    அவர்களுடைய அனுபவத்தின் ஆரம்பத்திலேயே அவர்களு டைய குணவியல்பைத் தீர்மானிப்பதற்கான ஒரு சோதனை ஏற்பட் டது. இராஜாவின் பந்தியில் பரிமாறப்படும் போஜனத்தை அவர் கள் புசிக்கவும் திராட்சரசத்தைப் பானம் பண்ணவும் ஏற்பாடு செய் யப்பட்டது. அதன்மூலம் அவர்கள்மேல் தனக்கிருந்த தயவையும் அவர்களுடைய நலனில் தனக்கிருந்த அக்கறையையும் வெளிப் படுத்த ராஜா நினைத்தான். ஆனால், ராஜாவின் பந்தியிலிருந்து வந்த அந்த உணவின் ஒரு பகுதி சிலைகளுக்குப் படைக்கப்பட்டிருந் தது; அதனை உண்பது சிலைவழிபாட்டிற்கு ஏதுவானதாயிருந்ததது; அதில் போஜனம் பண்ணினவன் பாபிலோனின் தேவர்களுக்குத் தலைவணங்கினதாகிவிடும். தானியேலுக்கும் அவனுடைய நண் பர்களுக்கும் யேகோவாவின் மேல் இருந்த மெய்ப்பற்றானது அத் தகைய தொழுகையில் அவர்களை ஈடுபடவிடவில்லை. அந்தப் போஜனத்தைப் புசித்தது போலவும் அல்லது அந்தத் திராட்சரசத் தைப்பானம்பண்ணினதுபோலவும் வெறுமனே நடித்திருந்தால்கூட, தங்கள் விசுவாசத்தை அவர்கள் மறுதலித்ததாகவே ஆகியிருக்கும். அப்படிச் செய்வது அவர்கள் தங்களை அஞ்ஞானமார்க்கத்தோடு இணைத்துக்கொண்டு, தேவபிரமாணத்தின் நியதிகளுக்கு அவ மதிப்பைக் கொண்டு வந்ததற்கு ஏதுவாகியிருக்கும்.தீஇவ 481.3

    சுகபோக வாழ்வின் சுகபோகத்தையும் சரீர, மன், ஆவிக்குரிய வளர்ச்சியைக் கெடச் செய்யும் காரியத்தையும் அனுபவிக்க அவர் கள் துணிய வில்லை. நாதாப் மற்றும் அபியுவின் இச்சையடக்க மின்மை குறித்த விபரமும் அதன் விளைவுகள் குறித்த விபரமும் பஞ்சாகமத் தோற்சுருளில் பாதுகாக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து அந்தச் சம்பவத்தை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர்; திராட்சரசம் பானம் பண்ணுவதால் தங்கள் சரீர, மன ஆற்றல் வெகுவாகப் பாதிக் கப்படும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.தீஇவ 482.1

    தானியேலும் அவருடைய நண்பர்களும் அதிக இச்சையடக் கத்தோடு நடந்து கொள்ளும்படியாக தங்கள் பெற்றோரால் பயிற்று விக்கப்பட்டிருந்தனர். அவர்களுடைய திறமைகள் குறித்துத் தேவன் கணக்குக் கேட்பார்’ என்றும், அதனால் தங்கள் வலிமையைக் குன் றச் செய்யும் அல்லது பெலவீனப்படுத்தும் எதையும் செய்யக்கூடாது’ என்றும் அவர்கள் போதிக்கப்பட்டிருந்தனர். தானியேலும் அவரு டைய நண்பர்களும் பெற்றிருந்த இத்தகைய பயிற்சிதான் பாபிலோன் அரசவையின் ஒழுக்கக்கேடான செல்வாக்குகளுக்கு மத்தியில் அவர்களைப் பாதுகாக்கும் வழிவகையாயிருந்தது. சுகபோகமும் சீர்கேடும் கொண்ட அந்த அரசவையின் பாவத்தூண்டல்கள் பெல மிக்கவையாயிருந்தன; ஆனாலும், அவர்கள் தங்களைப் தீட்டுப் படுத்தாமல் பார்த்துக்கொண்டனர். தேவவார்த்தையையும் அவ ருடைய கிரியைகளையும் படித்ததால், தங்கள் வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்தில் அவர்கள் கற்ற நியதிகளிலிருந்து எந்த வல்ல மையாலும் செல்வாக்காலும் அவர்களை அசைக்க முடியவில்லை.தீஇவ 482.2

    தானியேல் விரும்பியிருந்தால், இச்சையடக்கமிக்க பழக்க வழக்கங்களிலிருந்து பின்வாங்கி தன் சுற்றுப்புறங்களிலிருந்து அதற்கான சாக்குப்போக்குகளைத் காண்பித்திருக்கமுடியும். தான் ராஜாவின் தயவைச் சார்ந்திருந்ததாலும் அவனுடைய அதிகாரத் துக்குக் கீழ்ப்பட்டிருந்ததாலும், ராஜாவின் போஜனத்தைப் புசித்து, அவனுடைய திராட்சரசத்தைப் பானம்பண்ணுவதைத் தவிர தனக்கு வேறு வழி தெரியவில்லை என அவனால் வாதிட்டிருக்கமுடியும்; தேவபோதனைக்கு ஒத்துப்போவதால், அவன் ராஜாவின் அதிருப் திக்கு ஆளாகி, தன் பதவியையும் உயிரையும் இழந்து போகக்கூடிய நிலையும் இருந்தது. தேவனுடைய கட்டளைகளை அவமதித்தால், ராஜாவின் தயவைத் தக்கவைத்து, உலகப்பிரகாரமான ஆதாயங் களையும் வசதிகளையும் பெறக்கூடிய நிலையும் இருந்தது.தீஇவ 482.3

    ஆனால், தானியேல் மசியவில்லை. வல்லமைவாய்ந்த பூலோக அரசனைக்காட்டிலும் தேவனால் அனுமதிக்கப்பட்ட காரியங்களில் தான் அவன் அதிக பிரியம் வைத்தான்; தன் ஜீவனைவிட முக்கிய மானவைகளாகக் கருதினான். விளைவு என்னவாக இருந்தாலும், தன்னுடைய ஒழுக்கத்தில் உறுதியாயிருக்கத் தீர்மானித்தான். ‘தானி யேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவன் பானம் பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டான். தானியேல் 1:8. அந்தத் தீர்மானத்தில் அவனுடைய மூன்று நண்பர்களும் அவனுக்கு உறுதுணையாயிருந்தார்கள்.தீஇவ 483.1

    இப்படித் தீர்மானித்த அந்த எபிரெய வாலிபர்கள் தங்களை நம்பாமல் தேவன்மேல் உறுதியான நம்பிக்கையுடன் செயல்பட்டார் கள். ஒத்துப்போகாதவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக அல்ல; தேவனுக்கு அவமதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே ஒத்துப்போகாதவர்களாக இருக்கத் தெரிந்துகொண்டனர். சூழ் நிலைகளின் அழுத்தத்திற்கு இணங்கி, பாவத்தோடு சமரசமாகி யிருந்தால், நன்னெறியிலிருந்து விலக நேரிட்டிருக்கும்; நீதி குறித்த அவர்களின் அறிவும், பாவம் குறித்த அருவருப்பும் அவர்களில் பெலவீனப்பட்டுப் போயிருக்கும்; பரலோகத்தோடு அவர்கள் உறவு துண்டிக்கப்படும் மட்டும் அநேகதவறுகளுக்கு அத்தவறான தீர்மானம் வழிநடத்தியிருக்கும்; பாவத்தூண்டலால் வாரிக்கொள் ளப்பட்டிருப்பார்கள்.தீஇவ 483.2

    ’’தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படிச் செய்தார். தன்னைத் தீட்டுப் படுத்தாதபடிக்கு அவர் விடுத்த வேண்டுகோள் மதிப்போடு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனாலும் அதற்குச் சம்மதிக்க அத்தலைவன் தயங்கினான். பிரதானிகளின் தலைவன், ‘’உங்களுக்குப் போஜனத் தையும் பானத்தையும் குறித்திருக்கிற ராஜாவாகிய என் ஆண்டவர் னுக்கு நான் பயப்படுகிறேன்; அவர் உங்களோடொத்த வாலிபரின் முகங்களைப் பார்க்கிலும் உங்கள் முகங்கள் வாடிப்போனவை களாகக் காணவேண்டியதென்ன? அதினால் ராஜா என்னைச் சிரச்சேதம் பண்ணுவாரே” என்று தானியேலிடம் கூறினான்.தீஇவ 483.3

    பிறகு, ராஜா புசிக்கும் போஜனத்திலிருந்தும் அவன் பானம் பண்ணும் திராட்சரசத்தில் இருந்தும் தங்களுக்கு விலக்களிக்குமாறு, எபிரெய வாலிபர்களுக்கு விசேஷக் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த மேல்ஷார் என்பவனிடத்தில் வேண்டிக் கொண்டான் தானியேல். அந்தக் காரியத்தில் பத்து நாட்கள் தங்க ளைச் சோதிக்குமாறும் கேட்டுக்கொண்டான். அந்நாட்களில் அந்த எபிரெயவாலிபர்களுக்குச் சாதாரண உணவுவகைகளே வழங்கப்பட் டன; ஆனால் அவர்களோடிருந்த மற்றவர்களோராஜாவின்ருசியான ஆகாரங்களைச் சாப்பிட்டார்கள்.தீஇவ 484.1

    அந்த வேண்டுகோளுக்கு இணங்குவதால் தான் ராஜாவின் அதிருப்திக்கு ஆளாகக்கூடுமோ என்று மேல்ஷார் பயந்தாலும், அதற்குச் சம்மதித்தான்; ஆனால் அக்காரியத்தில் தனக்கு வெற்றி நிச்சயமென தானியேல் அறிந்திருந்தான். பத்து நாள் சோதனைக் குப்பின் ஏற்பட்ட விளைவானது, அந்த அதிகாரி பயந்ததற்கு எதி ரிடையாக இருந்தது. ‘ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலி பரைப் பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது. ‘தங்களோடிருந்த மற்றவர்கள் ளைக்காட்டிலும் அந்த எபிரெய வாலிபர்கள் குறிப்பிடத்தக்க விதத் தில் மிகப்பொலிவுடன் காணப்பட்டனர். அதன் விளைவாக தானி யேலும் அவனுடைய நண்பர்களும் தங்கள் பயிற்சிக் காலம் முழு வதிலும் அந்தச் சாதாரண ஆகாரத்தையே தொடர அனுமதிக்கப் பட்டனர்.தீஇவ 484.2

    அந்த எபிரெய வாலிபர்கள் மூன்று வருடங்களாக ‘கல்தேய ரின் எழுத்தையும் பாஷையையும் கற்றுக்கொண்டார்கள்.’‘ அக் காலக் கட்டத்தில், தேவன் மேலான மெய்ப்பற்றில் அவர்கள் உறுதி யாயிருந்தார்கள்; அவருடைய வல்லமையில் தொடர்ந்து நிலைத் திருந்தார்கள். தன்னலத்தை மறுக்கும் குணங்களோடு, நோக்கத் திலும், விடாமுயற்சியிலும், உறுதியிலும் அதிக அக்கறை கொண் டிருந்தனர். தேவனை அறியாமலும் அவருக்குப் பயப்படாமலும் இருந்தவர்களோடு தோழமை கொள்ளும்படி, ராஜாவின் அரச வைக்குள் அவர்களைக் கொண்டு வந்தது அவர்களுடைய பெரு மையோ ஆசையோ அல்ல; புதியதொரு தேசத்தில் சிறைக்கைதி களாக இருந்தவர்களை அளவற்றஞானமுள்ள தேவன்தாமே அங் குக்கொண்டு சேர்த்தார். தங்கள் குடும்பத்தார் மத்தியிலிருந்தும், பரிசுத்தச் சூழலிலுமிருந்தும் பிரிக்கப்பட்ட அவர்கள், தாங்கள் யாருக்குத் தாசர்களாய் இருந்தார்களோ அவர் மகிமைப்படவும், மிதியுண்ட தங்கள் ஜனங்கள் மேன்மையடையவும் தாங்கள் மரி யாதைக்குரியவர்களாக நடந்துகொள்ள நாடினார்கள்.தீஇவ 484.3

    அந்த எபிரெய வாலிபர்களுடைய நோக்கத்தின் தூய்மையை யும் அவர்களுடைய சுயமறுப்பு மற்றும் உறுதியையும் நன் மதிப் போடு தேவன் ஏற்றுக்கொண்டார். தேவன் அவர்களுக்கு ‘சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத் தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங் களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார். என்னைக் கனம் பண்ணு கிறவர்களை நான் கனம் பண்ணுவேன்’ என்கிற வாக்குத்தத்தம் நிறைவேறியது. 1 சாமு 2:30. அசையா உறுதியுடன் தேவனைப் பற்றிக்கொண்டதால், தீர்க்கதரிசன ஆவியின் வரத்தைப் பெற்றுக் கொண்டான் தானியேல். அரசவைவாழ்வின் பொறுப்புகள் குறித்து மனிதனிடமிருந்து அவன் கற்றுக்கொண்டான். அதேவேளையில் வருங்காலத்தின் மறைபொருள்களை அறியவும், உலகின் முடிவு மட்டும் நிகழும் வரலாறு நிகழ்வுகளை உருவகங்களாலும் அடை யாளங்களாலும் வருங்காலத் தலைமுறையினருக்குப் பதிவுசெய்து வைக்கவும் தேவன் அவனுக்குப் போதித்தார்.தீஇவ 485.1

    பயிற்சிக் காலத்திலிருந்த அந்த வாலிபர்கள் சோதிக்கப்படும் நாள் வந்தபோது, மற்ற வாலிபர்களோடு சேர்த்து அந்த எபிரெயர் களும் பரிசோதிக்கப்பட்டனர். ராஜ்யத்தில் பணிபுரிய அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருந்தனர். ஆனால் அவர்கள் எல்லாருக்குள் ளும்தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களைப் போல வேறொருவரும் காணப்படவில்லை. அவர்களின் கூரிய அறிவும், தெளிவான புத்தியும், தேர்ந்தெடுத்து பேசத்தக்க சரியான பேச்சும் அவர்களுடைய மன வலிமையின் குறைவற்ற பெலத்தை யும் வீரியத்தையும் குறித்துச் சாட்சியிட்டன. ‘ஞானத்துக்கும் புத் திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசா ரித்தானோ, அதிலே தன்ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்து மடங்கு சமர்த்தராகக் கண்டான்.’ ‘ஆகையால் இவர்கள் ராஜசமுகத்தில் நின்றார்கள்’.தீஇவ 485.2

    சகல தேசங்களின் பிரதிநிதிகளும், சிறந்த தாலந்துகளுடைய மனிதரும், இயற்கைவரங்களில் சிறந்த மேதைகளும், உயர் கலாச்ச ாரத்தினரென உலகால் கருதப்பட்டோரும் பாபிலோன் அரசவை யில் கூடியிருந்தார்கள்; அவர்கள் அனைவரிலும் அந்த எபிரெய வாலிபர்களுக்கு இணையாக எவருமில்லை. உடல் வலிமையிலும் பொலிவிலும், மனதிடத்திலும், இலக்கிய அறிவிலும் நிகரற்றவர் களாக அவர்கள் நின்றார்கள். நிமிர்ந்த உருவம், உறுதியான அழ கிய முகச்சாயல், மங்காத அறிவுத்திறன், களங்கமற்ற பேச்சு போன்ற இவையாவும் நல்ல பழக்கவழக்கங்களின் சான்றிதழ்கள்; தன் சட் டங்களுக்குக் கீழ்ப்படிவோருக்கு இயற்கை அளிக்கும் உயரிய அடையாளங்கள்.தீஇவ 485.3

    பாபிலோனியரின் ஞானத்தைக் கற்றுக்கொண்டதில், தங்கள் சக மாணவர்களைக் காட்டிலும் அதிக திறமையுள்ளவர்களாக தானி யேலும் அவனுடைய நண்பர்களும் திகழ்ந்தனர்; ஆனால், அந்த அறிவு அவர்களுக்குத் தானாகவே வந்துவிடவில்லை. பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின் கீழ், உண்மையோடு தங்கள் திறமை களைப் பயன்படுத்தியதால்தான் அந்த அறிவைப் பெற்றார்கள். தேவனைப் பற்றிய அறிவைத் தங்கள் கல்வியின் அடித்தளமாக வைத்து, சகலஞானத்திற்கும் ஆதாரமானவரோடு தொடர்புகொள் கிறவர்களாக தங்களைப் பார்த்துக்கொண்டனர். ஞானம் வேண்டி விசுவாசத்தோடு ஜெபித்தார்கள்; தங்கள் ஜெபங்களின்படி வாழ்ந் தார்கள். தேவன் தங்களை ஆசீர்வதிக்கக்கூடிய நிலையில் தங்களை வைத்துக் கொண்டார்கள். தங்கள் திறன்களை மங்கச் செய்யும் எதையும் தவிர்த்தார்கள்; சகல கல்வியிலும் அறிவோடு விளங்கும் படியானஒவ்வொரு தருணத்தையும் பயன்படுத்திக்கொண்டார்கள். அறிவுத்திறனைத் தவறாது வழங்கும் வாழ்வின் நியதிகளைப் பின் பற்றினார்கள். தாங்கள் தேவனை மகிமைப்படுத்த வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோட அறிவைப் பெற நாடினார்கள். அஞ்ஞானி களின் பொய் மார்க்கங்களுக்கு மத்தியில் மெய்யான மார்க்கத்தின் பிரதிநிதிகளாக நிற்பதற்கு, தெளிந்த அறிவையும் ஒரு பூரண கிறிஸ் தவ தன்மையையும் தாங்கள் பெற்றிருக்கவேண்டியதை உணர்ந்திருந் தார்கள். தேவன் தாமே அவர்களின் ஆசிரியராயிருந்தார். இடைவிடா மல் ஜெபித்து, அதரிசனமானவரோடு தொடர்புவைத்து, ஏனோக் கைப்போல தேவனோடு நடந்தார்கள்.தீஇவ 486.1

    எவ்வகையான பணியாக இருந்தாலும், அதில் மெய்யான வெற்றியானது தானாகவோ எதிர்பாராத விதமாகவோ, முன்கூட் டியே தீர்மானிக்கப்பட்ட விதமாகவோ கிடைக்காது. தேவ செய் லின் நிகழ்வுகளாலும், விசுவாசம், மதிநுட்பம், ஒழுக்கம், விடா முயற்சி’ போன்றவற்றாலுமே அது கிடைக்கும். மிகச்சிறந்த மன இயல்புகளும், உயரியஒழுக்கப் பண்புகளும் எதிர்பாராதவிதமாகக் கிடைத்துவிடாது. தேவன் தருணங்களைத் தருகிறார்; அவற்றைப் பயன்படுத்துவதைச் சார்ந்தே வெற்றி அமைகிறது.தீஇவ 486.2

    தேவன் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி’ தானியேல் மற்றும் அவன் நண்பர்களிடம் கிரியை செய்தபோது, தங்கள் இரட் சிப்புக்கு ஏதுவாக அவர்களும் பிரயாசப்பட்டார்கள். பிலி 2:13. நம்மோடு ஒத்துழைப்பதில் தேவ நியதியின் செயல்பாடு இதில் வெளிப்படுகிறது. அதாவது, நம் ஒத்துழைப்பு இல்லையேல், மெய் யான வெற்றியைப் பெற முடியாது. தேவவல்லமை இல்லாமல் மனித முயற்சியால் பயனேதுமில்லை. மனிதர் முயற்சி செய்யவில்லை என்றால், தேவ முயற்சி அநேகரில் பயனற்றதாகவே இருக்கும். தேவகிருபையை நமக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நம் பங்கிற்கு நாம் முயல வேண்டும். நம்மில் விருப்பத்தையும் செய்கையையும் உண்டாக்கவே அவருடைய கிருபை அருளப்படுகிறது. ஆனால், நம்முடைய முயற்சிக்கு மாற்றுப் பொருளாக அது ஒருபோதும் அரு ளப்படுவதில்லை .தீஇவ 487.1

    தானியேல் மற்றும் அவனுடைய நண்பர்களுடன் தேவன் ஒத் துழைத்ததுபோலவே, தம்முடைய சித்தப்படி செய்யப் போராடும் ஒவ்வொருவரோடும் அவர் ஒத்துழைப்பார். தம்முடைய ஆவியை அருளுவதன் மூலம் ஒவ்வொரு மெய்யான நோக்கத்தையும் ஒவ் வொரு நேர்மையான தீர்மானத்தையும் அவர் பெலப்படுத்துவார். கீழ்ப்படிதலின் பாதையில் நடப்பவர்கள் அநேக தடைகளைச் சந் திக்க நேரிடலாம். பலத்த வஞ்சகமான செல்வாக்குகள் உலகப் பிரகாரமாக அவர்களைக் குருடாக்கலாம்; ஆனால், தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களைத் தோற்கடிக்கக் கிரியை செய்யும் ஒவ் வொரு காரியத்தையும் அவமாக்க தேவன் வல்லவராயிருக்கிறார்; அவருடைய பெலத்தால் ஒவ்வொரு சோதனையையும் அவர்கள் மேற்கொள்ளலாம்; ஒவ்வொரு பிரச்சனையை யும் ஜெயிக்கலாம்.தீஇவ 487.2

    சிலைவழிபாட்டுத் தேசத்தாரின் மத்தியில் அவருடைய குண லட்சணத்தின் பிரதிநிதிகளாக தானியேலையும் அவர் நண்பர்களை யும் பாபிலோனின் பிரதானி களோடு நட்புறவுகொள்ளும்படி கொண்டுவந்தார் தேவன். அத்தகைய மேன்மையும் நம்பிக்கைக்கு உகந்ததுமான பொறுப்புக்கு அவர்களால் எவ்வாறு தகுதிப் பட முடிந்தது? சிறுசிறு காரியங்களில் உண்மையோடு இருந்ததுதான் அவர்களுடைய மொத்த வாழ்க்கையையும் பொலிவாக்கியது. சிறுசிறு கடமைகளிலும் பெரிய பொறுப்புகளிலும் அவர்கள் தேவனைக் கனப்படுத்தினார்கள்.தீஇவ 487.3

    பாபிலோனில் தமக்குச் சாட்சி பகரும் படி தானியேலைத் தேவன் அழைத்ததுபோல, இன்றைய உலகில் தமக்காகச் சாட்சி பகரும்படி நம்மை அவர் அழைக்கிறார். வாழ்வின் பெரிய காரி யங்களிலும், சிறிய காரியங்களிலும் தம்முடைய ராஜ்யத்தின் நியதி களை மனிதருக்கு நாம் வெளிப்படுத்த வேண்டுமென்று அவர் விரும்புகிறார். பெரியதொரு பணி செய்ய தாங்கள் அழைக்கப்பட அநேகர் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், தேவன் மேலுள்ள விசுவாசத்தை அனுதினமும் வெளிப்படுத்த கிடைக்கும் தருணங் களை இழந்துபோகிறார்கள்; வாழ்வின் சிறுசிறு கடமைகளை அனு தினமும் நிறைவேற்ற முடியாதவர்களாகிறார்கள். தங்களில் மிகப் பெரும் தாலந்துகள் இருப்பதாக எண்ணி, அவற்றை உபயோகித்து, தங்கள் பேராசையை நிறைவேற்றக்கூடிய பெரும் பணிக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்களுடைய நாட்களோ கடந்து போகின் றன.தீஇவ 487.4

    மெய்க்கிறிஸ்தவனின் வாழ்வில் அவசியமற்றதென்று எதுவு மில்லை. சர்வவல்லவரின் பார்வையில் ஒவ்வொரு பொறுப்பும் முக்கியமானதே. சேவை செய்ய கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப் பையும் தேவன் சரியாகக் கணக்குப் பார்க்கிறார். பயன்படுத்தப்பட்ட தருணங்களோடுங்கூட பயன்படுத்தப்படாத திறமைகள் குறித்தும் கணக்குக் கேட்கப்படும். செய்யும்படி நமக்குத் திராணியிருந்தும், தேவமகிமைக்காக நம் ஆற்றல்களைப் பயன்படுத்தாமல் நாம் நிறைவேற்றத் தவறின காரியங்களை வைத்துதான் நாம் நியாயம் தீர்க்கப்படுவோம்.தீஇவ 488.1

    மேன்மையான குணம் எதிர்பாராத விதத்தில் கிடைத்துவிடாது; அது விசேஷித்த கிருபையையும், தேவனுடைய ஈவையும் சார்ந்த தும் கிடையாது. மனிதனுடைய சேவைக்காகவும் தேவனுடைய சேவைக்காகவும் சுயத்தை அர்ப்பணித்து, இழிவான இயல்பை மேலான இயல்புக்குக் கீழ்ப்படுத்தி, சுய ஒழுக்கத்தோடு இருப்பதால் அது கிடைக்கிறது.தீஇவ 488.2

    இச்சையடக்க நியதிகளில் எபிரெய வாலிபர்கள் காட்டின் உறுதி யின் மூலமாக இன்றைய வாலிபர்களிடத்தில் தேவன் பேசுகிறார். நீதிக்காக தைரியங்கொண்டு செயல்பட, தானியேலைப் போன்ற மனிதர்கள் தேவை. சுத்தமான இருதயங்களும், வலுவான கரங் களும், அச்சமற்ற துணிவும் அவசியமாயிருக்கின்றன; நன்மைக் கும் தீமைக்கும் இடையேயான போராட்டத்தில் ஓயாத விழிப்பு அவசியம். இன்பம் அனுபவித்தல் எனும் காரியத்தில் அநேக மருட்சியான விதங்களில் ஒவ்வொரு ஆத்துமாவையும் சாத்தான் சோதிக்கிறான்.தீஇவ 488.3

    மேன்மையான குணத்தைப் பெறமனதும் ஆத்துமாவும் வளர்ச்சி யடைவதற்குச் சரீரம் ஒரு முக்கிய ஊடகமாக இருக்கிறது. எனவே தான், ஆத்துமாவின் சத்துருசரீரவல்லமைகளைப் பெலவீனப்படுத்தி, சீர்கெடுக்கும் வகையில், சோதனைகளைக் கொடுக்கிறான். இதில் அவனுக்கு வெற்றி கிடைத்தால், மனிதன் முழுவதுமாக தீமைக்கு அடிமையாகிவிடுவான். ஓர் உன்னதமான வல்லமைக்கு அடிபணி யாத பட்சத்தில், சரீர சுபாவ இயல்புகள் நிச்சயமாகவே அழிவுக்கும் சாவுக்கும் ஏதுவாகவே செயல்படும். சரீரமானது மனிதனைவிட உன்னதமான வல்லமைகளுக்குக் கீழ்ப்படியும் படி கொண்டு வரப் படவேண்டும். கட்டுக்கடங்கா உணர்வுகள் மனத்திட்பத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும்; அந்த மனத்திட்பம் தேவனுக்குக் கீழ்ப் பட்டிருக்கவேண்டும். தேவ கிருபையால் சுத்திகரிக்கப்பட்ட பகுத் தறிவானது ராஜவல்லமையாக விளங்கி, வாழ்க்கையில் ஆட்சி செலுத்தவேண்டும். மனவலிமையும் சரீரபெலமும் நீண்ட ஆயுளும் உறுதியான கொள்கைகளைச் சார்ந்தே இருக்கின்றன. இந்தக் கொள்கைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம், தங்களையே வென்றவர் களாக, தங்கள் மனப்போக்கை வென்றவர்களாக, துரைத்தனங் களையும் அதிகாரங்களையும் இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகா திபதிகளையும் ‘’வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளையும்’ வென்றவர்களாக மனிதர் நிற்கமுடியும். எபே 6:12.தீஇவ 489.1

    சுவிசேஷத்தை அடையாளப்படுத்தின முற்காலச் சமயச் சடங்குகளில், குறையுள்ள பலி எதையும் தேவ பலிபீடத்திற்குக் கொண்டுவரக் கூடாதிருந்தது. கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டின் பலி யானது பழுதற்றதாக இருக்கவேண்டியதாயிருந்தது. அவருடைய பிள்ளைகள் ‘ஜீவபலியாக’’பரிசுத்தமும் பிழையற்றதுமாக விளங்க வேண்டுமென்று தேவவார்த்தை சுட்டிக்காட்டுவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. ரோமர் 12:1; எபே 5:27.தீஇவ 489.2

    அந்த எபிரெய ஒழுக்கச் சீலர்கள் நம்மைப்போலபாடுள்ளவர் கள்தாம்; ஆனால், பாபிலோனிய அரசவையின் ஈர்க்கும் செல் வாக்குகளுக்கு மத்தியில் உறுதியாக நின்றார்கள். ஏனெனில், பெலத் தில் மகத்துவமானவரை அவர்கள் சார்ந்திருந்தார்கள். தேவனுடைய தயவு மற்றும் நன்மைகுறித்தும், கிறிஸ்துவின் அன்புகுறித்தும், ஒரு விளக்கப்பாடத்தை அந்த அஞ்ஞான தேசத்தார் கண்டார்கள். ‘சோதனையை வென்ற நியதி’, ‘சீர்கேட்டை வென்ற மெய்ப்பற்று மற்றும் அர்ப்பணிப்பு’ போன்றவற்றிற்கு ஓர் எடுத்துக்காட்டை அவர்கள் அனுபவத்தில் காண்கிறோம்.தீஇவ 489.3

    தானியேல் பெற்றிருந்த அதே ஆவியைத்தான் இன்றைய வாலிபர்களும் பெற்றிருக்கவேண்டியுள்ளது; சூழ்நிலைகள் சாத கமாக இல்லாத பட்சத்திலும் தானியேலின் பெலனாயிருந்தவரி டமிருந்து அவர்களும் பெலன் பெறலாம்; அதே தன்னடக்கவல்ல மையைப் பெறலாம்; அதே கிருபையைத் தங்கள் வாழ்க்கையில் வெளிப்படுத்தலாம். இன்றைய பெரும் நகரங்களில் ஒவ்வொரு வகையான சிற்றின்பத்திளைத்தலுக்கும் வழி எளிதாக்கப்பட்டுள் ளது; கவர்ச்சிகரமாக்கப்பட்டுள்ளது. சிற்றின்பத்தைத் தூண்டும் சோதனைகள் சூழ்ந்திருந்தாலும், தேவனைக் கனப்படுத்த வேண்டும் மென்ற அவர்களுடைய நோக்கம் தேவகிருபையால் உறுதிப்படக் கூடும். ஆத்துமாவைத் தாக்கும் ஒவ்வொரு சோதனையையும் உறுதி யான தீர்மானத்தாலும் எச்சரிப்புமிக்க விழிப்பாலும் அவர்கள் மேற் கொள்ளலாம். ஆனாலும், நீதியான ஒன்றை நெறிபிறழாமல் செய் யத் தீர்மானிக்கிறவன் மாத்திரமே வெற்றிபெற முடியும்.தீஇவ 490.1

    உண்மைமிக்க அந்த எபிரெயரின் வாழ்க்கைப் பணிதான் எத்த கையது! தாங்கள் பிறந்த இடத்தைவிட்டு விடைபெற்றபோது, தங் களுடைய எதிர்காலம் பற்றி கொஞ்சங்கூட அவர்கள் அறிந்திருந் திருக்க மாட்டார்கள். தங்கள் மூலமாக தேவன் தம் நோக்கத்தை நிறைவேற்றும்படிக்கு, விசுவாசத்தோடும் உறுதியோடும் தேவனு டைய வழிநடத்துதலுக்குத் தங்களை ஒப்படைத்தார்கள்.தீஇவ 490.2

    அவர்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட அதே வல்லமை யான சத்தியங்கள் இன்றைய வாலிபர்கள் மூலமாகவும், சிறுவர் கள் மூலமாகவும் வெளிப்படவேண்டுமென்று தேவன் விரும்பு கிறார். தேவனிடத்தில் தங்களை ஒப்புக்கொடுப்போருக்கும், அவர் நோக்கத்தை நிறைவேற்ற முழு மனதோடு முயற்சிக்கிறவர் களுக்கும் அவர் என்ன செய்ய முடியும் என்பதற்கு தானியேலின் வாழ்வும் அவனுடைய நண்பர்களின் வாழ்வும் எடுத்துக் காட்டு களாக உள்ளன.தீஇவ 490.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents