Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    56 - நியாயப்பிரமாணத்தில் தேறினவன்

    அது எக்காளப் பண்டிகையின் சமயம். அநேகர் எருசலேமில் கூடியிருந்தார்கள். ஆனால், வருத்தகரமான ஒரு சூழ்நிலையே அங்குத் தென்பட்டது. எருசலேமின் மதில் திரும்பக் கட்டப்பட்டா யிற்று; வாசல்களும் வைக்கப்பட்டிருந்தன; ஆனால், நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் இன்னமும் சீரழிந்த நிலையில் கிடந்தன.தீஇவ 661.1

    விஸ்தாரமான தெருக்கள் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த மர மேடையில், முதிர்வயதான எஸ்றா நின்றுகொண்டிருந்தான். யூதா வின் முந்தைய மகிமைக்குறித்து எண்ணி, வருந்தினவர்கள் அந்த மேடையைச்சுற்றி எங்கிலும் நின்றிருந்தார்கள். அவனுடைய வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் அவனுடைய லேவிய சகோதரர் கள் நின்றிருந்தார்கள். மேடையிலிருந்து அவர்கள் பார்த்தபோது அவர்களின் கண்களுக்குக் கடலளவிலான தலைகள் தென்பட் டன. சுற்றிலுமிருந்த சகல பகுதிகளிலிருந்தும் உடன்படிக்கையின் புத்திரர் அங்குக் கூடியிருந்தார்கள்.தீஇவ 661.2

    ’’அப்பொழுது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்தான்; ஜனங்களெல்லாரும் தங்கள் கைகளைக் குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென் ஆமென் என்று சொல்லி, குனிந்து முகங்குப்புற விழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்’‘தீஇவ 661.3

    இஸ்ரவேலின் பாவத்திற்கான ஓர் அறிகுறியை அங்குக் காண முடிந்தது. அதாவது, அம்மக்கள் பிற தேசத்தாரோடு கலப்புத் திரு மணம் செய்ததால், எபிரெய பாஷை சீர்கெட்டிருந்தது. எனவே, அங்குப் பேசினவர்கள் அனைவரும் பிறருக்கு விளங்கும்படியான பாஷையில் நியாயப்பிரமாணத்தை எடுத்துரைப்பது அவசியமாய் இருந்தது. எஸ்றாவோடு லேவியர்களும் ஆசாரியர்கள் சிலரும் சேர்ந்து, நியாயப்பிரமாணத்தின் நியதிகளை எடுத்துரைத்தார்கள். ‘’அவர்கள் தேவனுடைய நியாயப் பிரமாணப் புஸ்தகத்தைத் தீர்க்க மாக வாசித்து, அர்த்தஞ் சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங் கப்பண்ணினார்கள்’’.தீஇவ 662.1

    ’’சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவன மாய் செவிகொடுத்தார்கள்’’. உன்னதமானவரின் வார்த்தைகளைத் தீவிரமாகவும் பயபக்தியுடனும் கேட்டார்கள். நியாயப்பிரமாணத் தைக்கேட்டபோது அவர்கள் தங்கள் குற்றங்களை உணர்ந்தார்கள்; தங்கள் மீறுதல்களின் நிமித்தம் துக்கித்தார்கள். ஆனால், அது ஒரு பண்டிகை நாள், மகிழ்ச்சியின் நாள், பரிசுத்த சபைகூடும் நாள். அந் நாளை மக்கள் சந்தோஷத்தோடும் மகிழ்ச்சியோடும் கைக்கொள்ள வேண்டுமென்று தேவன் கட்டளையிட்டிருந்தார்; இதைக் கருத்தில் கொண்டு, தங்கள் வேதனையை அடக்கிக்கொள்ளுமாறும், தேவன் தங்களுக்குக்காட்டின் மிகுந்த இரக்கத்தின் நிமித்தம் களிகூருமாறும் மக்களைக் கேட்டுக்கொண்டார்கள்.தீஇவ 662.2

    ’’ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தை களைக் கேட்டபோது, அழுதபடியால்திர்ஷாதா என்னப்பட்ட நெகே மியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், ஜனங் களுக்கு விளக்கிக் காட்டின லேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த மானநாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள். பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமை யானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக் குப் பங்குகளை அனுப்புங்கள்: இந்த நாள் நம்முடைய ஆண்டவருக் குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.’‘ நெகே மியா 8:9, 10.தீஇவ 662.3

    கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்;
    அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.
    கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும்
    இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.
    தீஇவ 664.1

    சங்கீ தம் 121:7, 8.

    அந்நாளின் முதற்பகுதி, சபை ஆராதனைகளை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டிருந்தது; மீதியான நேரத்தை, தேவனுடைய ஆசீர் வாதங்களை நன்றியோடு எண்ணிப்பார்ப்பதிலும், அவர் அருளின் ஏராளமான கிருபைகளுக்காகக் களிகூருவதிலும் மக்கள் செலவிட் டனர். சமைத்துண்ண வழியில்லாதிருந்தோருக்குப் பங்குகள் அனுப் பப்பட்டன. நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகள் வாசிக்கப்பட்டு, அர்த்தம் சொல்லப்பட்டதின் நிமித்தம் அங்கு மிகுந்த மகிழ்ச்சி உண் டாயிருந்தது.தீஇவ 665.1

    நியாயப்பிரமாணத்தை வாசித்து, அர்த்தம் சொல்வது மறுநாளி லும் தொடர்ந்தது. நியமிக்கப்பட்டிருந்த நாளில், அதாவது, ஏழாம் மாதம் பத்தாம் நாளில், பாவ நிவாரண நாளின் பரிசுத்த ஆராதனை கள் ஏறெடுக்கப்பட்டன.தீஇவ 665.2

    அம்மாதத்தின் பதினைந்தாம் நாளிலிருந்து இருபத்திரெண் டாம் நாள் வரையிலும், மக்களும் அவர்களுடைய பிரபுக்களும் மீண்டும் ஒருமுறை கூடாரப்பண்டிகையைக் கொண்டாடினார்கள். ‘’ஆகையால் எழுதியிருக்கிறபடி கூடாரங்களைப் போடும் படிக்கு, நீங்கள் மலைகளுக்குப் புறப்பட்டுப் போய், ஒலிவக்கிளைகளை யும், காட்டு ஒலிவக்கிளைகளையும், மிருதுச் செடிகளின் கிளை களையும் பேரீச்ச மட்டைகளையும், அடர்ந்த மரக்கிளைகளையும் கொண்டு வாருங்கள் என்று தங்களுடைய சகல பட்டணங்களிலும், எருசலேமிலும் கூறிப் பிரசித்தப்படுத்தினார்கள். இப்படியே ஜனங் கள் வெளியே போய் அவைகளைக் கொண்டுவந்து, அவரவர் தங் கள் வீடுகள் மேலும், தங்கள் முற்றங்களிலும், தேவனுடைய ஆல யப்பிராகாரங்களிலும், தங்களுக்குக் கூடாரங்களைப் போட்டார் கள். மிகுந்த சந்தோஷமுண்டாயிருந்தது. முதலாம் நாள் தொடங்கிக் கடைசி நாள் மட்டும், தினம் தினம் தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகம் வாசிக்கப்பட்டது ‘’.தீஇவ 665.3

    நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை ஒவ்வொரு நாளும் மக்கள் கேட்டு வந்ததால், அவர்கள் தங்கள் அக்கிரமங்கள் குறித் தும் முந்தைய தலைமுறைகளில் தங்கள் தேசத்தாரின் பாவங்கள் குறித்தும் அவர்கள் உணர்த்தப்பட்டார்கள். தேவனைவிட்டு வில கியதின் நிமித்தமே அவருடைய பாதுகாக்கும் கிருபை நீக்கப்பட்ட தென்பதையும், ஆபிரகாமின் புத்திரர்கள் அந்நிய தேசங்களில் சித றப்பட்டார்களென்பதையும் அவர்கள் உணர்ந்தார்கள்; அவருடைய இரக்கத்தை வேண்டவும், அவருடைய கற்பனைகளில் நடக்க தங் களை அர்ப்பணிக்கவும் தீர்மானித்தார்கள். கூடாரப் பண்டிகை முடிந்து இரண்டாம் நாளில் நடைபெற்ற இந்தப் பரிசுத்த ஆராதனை யில் பிரவேசிப்பதற்கு முன்பாக, தங்கள் மத்தியிலிருந்த புறஜாதி யாரை விலக்கினார்கள்.தீஇவ 665.4

    தங்கள் பாவங்களை அறிக்கை செய்தும், மன்னிப்பு வேண்டி யும் தேவனுக்கு முன்பாக சாஷ்டாங்கமாக மக்கள் விழுந்தபோது, தேவன் தம் வாக்குத்தத்தத்தின்படியே அவர்களுடைய ஜெபங் களைக் கேட்டதை விசுவாசிக்குமாறு தலைவர்கள் அவர்களை ஊக்கப்படுத்தினார்கள். அழுவதும் புலம்புவது மனந்திரும்புவதும் மாத்திரமல்ல, தேவன் தங்களை மன்னித்ததையும் அவர்கள் விசு வாசிக்க வேண்டியிருந்தது. அவருடைய இரக்கங்களை எண்ணிப் பார்த்து, அவருடைய தயவிற்காக அவரைப் போற்றியும் அவர்கள் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்த வேண்டியிருந்தது. “நீங்கள் எழுந்திருந்து, அநாதியாய் என்றென்றைக்குமிருக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்’‘ என்றனர் போதகர்கள்.தீஇவ 666.1

    அந்தக் கூட்டத்தார், வானத்திற்கு நேராக தங்கள் கரங்களை உயர்த்தி நின்றபோது, அவர்கள் நடுவிலிருந்து இந்தப் பாட்டு புறப் பட்டது:தீஇவ 666.2

    எந்தத் துதிஸ்தோத்திரத்துக்கும் மேலான
    உம் மகிமையுள்ள நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
    நீர் ஒருவரே கர்த்த ர் :
    நீர் வானங்களையும், வானாதி வானங்களையும்,
    பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும்,
    சமுத்திரங்களையும் உண்டாக்கினீர்;
    அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்,
    வானசேனைகள் உம்மைப் பணிந்துகொள்ளுகிறது.
    தீஇவ 666.3

    துதியின் பாடல் முடிவடைந்தது. சபையின் தலைவர்கள் இஸ்ர வேலின் வரலாற்றை எடுத்துரைத்து, தேவன் அவர்கள்மேல் எவ் வளவாய்த் தயவு காட்டினார் என்பதையும், அதற்கு அவர்கள் எவ் வளவு அதிகமாய் நன்றிகெட்டிருந்தார்கள் என்பதையும் விவரித் தார்கள். தேவனுடைய சகல கற்பனைகளையும் கைக்கொள்வதாக மொத்த சபையாரும் உடன்படிக்கைபண்ணிக்கொண்டார்கள். தங் கள் பாவங்களுக்கான தண்டனையை அவர்கள் அனுபவித்திருந் தார்கள்; இப்பொழுதும் தேவன் தங்களை நீதியோடு நடத்தினதை அவர்கள் ஒத்துக்கொண்டார்கள்; அவருடைய பிரமாணங்களுக்குக் கீழ்ப்படியவும் தங்களை அர்ப்பணித்தார்கள். அது உறுதியான உடன்படிக்கையாக இருக்கவும், அது நிரந்தரமாகப் பாதுகாக்கப் படவும், அதனைத் தங்கள் கடமையாக தாங்கள் ஏற்றுக்கொண்ட தற்கு அது ஒரு நினைவுச்சின்னமாக இருக்கவும், அது எழுதப்பட்டு, ஆசாரியர்கள், லேவியர்கள் மற்றும் பிரபுக்களால் முத்திரைபோடப் பட்டது.தீஇவ 666.4

    கடமையை நினைப்பூட்டவும், சோதனைக்கு எதிரான ஒரு தடுப்பாகவும் அது பங்காற்ற வேண்டியிருந்தது. தேவனுடைய தாசனாகிய மோசேயைக் கொண்டு கொடுக்கப்பட்டதேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நடந்துகொள்வோம். எங்கள் ஆண்ட வராகிய கர்த்தரின் கற்பனைகளையும் சகல நீதி நியாயங்களையும் கட்டளைகளையும் எல்லாம் கைக்கொள்வோம்’‘ என்று மக்கள் ஆணையிட்டுப் பிரமாணம்பண்ணினார்கள். தேசத்தின் மக்களோடு கலப்புத் திருமணம் கூடாதென்ற ஒரு வாக்குறுதியும், அப்போது செய்யப்பட்ட ஆணையில் அடங்கியிருந்தது.தீஇவ 667.1

    தேவனிடத்தில் திரும்ப, தங்களுக்கிருந்த உறுதியை மக்கள் இன்னும் அதிகமாக வெளிப்படுத்தினார்கள். அதாவது, ஓய்வு நாளைப் பரிசுத்த குலைச்சலாக்குவதை விட்டுவிடுவதாக வாக்குறுதி யளித்தார்கள். பிறதேசத்து வியாபாரிகள் எருசலேமிற்குள் வந்து வியாபாரம் செய்யாதபடி பிற்காலத்தில் நெகேமியா தடுத்தது போல், இப்போது அப்படிச் செய்யவில்லை. ஆனால் சோதனையில் விழாது மக்களைக் காப்பாற்றும் ஒரு முயற்சியாக, ஓய்வுநாளில் அந்த வியாபாரிகளிடமிருந்து வாங்கி, ஓய்வுநாளை மீறாதபடிக்கு அவர் களைக் கட்டுப்படுத்தினான்; அதன்மூலம் அந்த வியாபாரிகள் அதைரியப்பட்டு, அவர்களுடைய வியாபாரத்திற்கு முடிவுகட்டப் படும் என்று நம்பினார்கள்.தீஇவ 667.2

    ஆலயப் பொது ஆராதனைகளைத் தாங்கவும் ஏற்பாடு செய்யப் பட்டது. தசமபாகம்போக, பரிசுத்தஸ்தல ஆராதனைக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வருடாவருடம் செலுத்துவதாக சபையார் வாக்குறுதி கொடுத்தார்கள். ‘’நாங்கள் வருஷந்தோறும் எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கு எங்கள் தேசத்தின் முதற்பலனையும், சகலவித விருட்சங்களின் எல்லா முதற்கனிகளையும் கொண்டுவர வும் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே, எங்கள் குமா ரரில் முதற்பேறுகளையும், எங்கள் ஆடுமாடுகளாகிய மிருகஜீவன் களின் தலையீற்றுகளையும் கொண்டுவரவும் திட்டம் பண்ணிக் கொண்டோம்’’.தீஇவ 667.3

    இஸ்ரவேலர் தங்கள் சீர்கேட்டின் நிமித்தம் மிகவும் வருந்தி தேவனிடத்திற்குத் திரும்பினார்கள். புலம்பலோடும் துக்கிப்போ டும் அவர்கள் பாவ அறிக்கை செய்தார்கள். தேவன் தங்களை நீதி யோடு அணுகினதை ஒத்துக்கொண்டு, அவருடைய பிரமாணத்திற் குக் கீழ்ப்படிவதாக உடன்படிக்கை செய்தார்கள். இப்பொழுது அவருடைய வாக்குத்தத்தங்களில் தங்கள் விசுவாசத்தை வெளிப் படுத்தவேண்டும். அவர்களுடைய மனந்திரும்புதலைத் தேவன் ஏற்றுக்கொண்டார்; தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டதையும் தாங்கள் மீண்டும் தேவதயவிற்குள் கொண்டுவரப்பட்டதையும் நிச்சயித்து இப்பொழுது அவர்கள் களிகூரவேண்டியிருந்தது.தீஇவ 667.4

    அவர்கள் மீண்டும் மெய்தேவனையே தொழுதுகொள்ளும் படி நெகேமியா எடுத்த முயற்சிகள் வெற்றிகரமாக அமைந்தன. மக்கள் தாங்கள் செய்த ஆணைக்கு உண்மையாயிருக்கும் வரையி லும், தேவவார்த்தைக்கு அவர்கள் கீழ்ப்படியும் வரையிலும், தேவ னும் அவர்கள்மேல் பரிபூரண ஆசீர்வாதங்களை ஊற்றி, தம் வாக் குத்தத்தங்களை நிறைவேற்றயிருந்தார்.தீஇவ 668.1

    தங்கள் பாவத்தை உணர்ந்து, தங்கள் தகுதியின்மை பற்றிய உணர்வால் இளைத்து போவோருக்கு ஒரு முக்கிய பாடமும், ஒரு நம்பிக்கையும் இந்தச் சம்பவத்தில் உள்ளது. இஸ்ரவேலின் தேவ துரோக விளைவுகளை வேதாகமம் ஒளிவு மறைவின்றிப் பேசு கிறது; ஆனால், அவர்கள் தேவனிடம் திரும்பின காலங்களில் உண் டான அதிக மனத்தாழ்மை, மனந்திரும்புதல், ஊக்கமான அர்ப் பணிப்பு, தாராளமான ஈகை போன்றவற்றையும் அது சித்தரிக்கிறது.தீஇவ 668.2

    தேவனிடத்தில் மெய்யாகத் திரும்புவது ஓர் உயிரோட்டமான மகிழ்ச்சியை வாழ்வில் கொண்டுவருகிறது. பரிசுத்த ஆவியான வரின் செல்வாக்கிற்கு ஒரு பாவி தன்னை அர்ப்பணிக்கும்போது, தன்னுடைய பாவ நிலையையும், இருதயத்தை ஆராய்கிற மகத்துவ ரின் பரிசுத்தத்திற்கு மாறான தன் அசுத்தத்ததையும் அவன் கண்டு கொள்கிறான். ஓர் அக்கிரமக்காரனாக, தான் குற்றவாளியாக நிற் பதை அவன் காண்கிறான். ஆனால், இதினிமித்தம் அவன் நம்பிக்கை இழந்து போகவேண்டிய அவசியமில்லை, ஏனெனில் அவனுக்கான மன்னிப்பு ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. பாவங்கள் மன்னிக்கப்பட்டதென்ற உணர்விலும், மன்னிக்கவல்ல பரலோகப் பிதாவின் அன்பிலும் அவன் களிகூரலாம்.தீஇவ 668.3

    பாவநிலையிலிருந்து மனந்திரும்பும் மனிதர்களைத் தம் அன் பின் கரங்களில் அரவணைப்பதும், அவர்களின் காயங்களைக் கட்டு வதும், பாவத்திலிருந்து சுத்திகரிப்பதும், இரட்சிப்பின் வஸ்திரங் களை அவர்களுக்குத் தரிப்பதும் தேவனுக்கு மகிமையாகும்.தீஇவ 668.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents