Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    26 - இதோ, உங்கள் தேவன்

    ஏசாயாவின் நாட்களில், தேவனைக் குறித்த தவறான எண் ணத்தால் மனிதரின் ஆவிக்குரிய அறிவு இருளடைந்திருந்தது. துன் பத்தையும், மரணத்தையும், பாவத்தையும் கொடுத்தவர் சிருஷ்டிகர் என்பதுபோல அவரைப் பார்க்கும்படி மனிதரை வழிநடத்த வெகு காலம் முயன்று வந்தான் சாத்தான். அவனால் வஞ்சிக்கப்பட்ட வர்கள், தேவனைக் கடினமானவராகவும் கடுமையானவராகவும் கற்பனை செய்தார்கள். பாவிக்கு உதவக்கூடாதபடி சட்டப் பூர்வ மான காரணம் இருக்குமட்டும் அவர் அவனை ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லையென்றும், அவர் அவனைப் புறக்கணித்து, தண் டிப்பதாகவும் அவர்கள் கருதினார்கள். எத்தகைய அன்பின் பிரமா ணத்தின் மூலம் பரலோகத்தில் ஆட்சி செலுத்தப்படுகிறதோ, அதனைச் ‘சந்தோஷத்திற்கு எதிரானது’ என்றும், ‘பாரமான நுகம்’ என்றும், ‘அதிலிருந்து தப்பிப்பதில் மகிழலாம்’ என்றும் திரித்துக்காட்டினான் வஞ்சகத்தின் தலைவன். அதன் போதனைகள் கீழ்ப்படியக் கூடா தவை’ என்றும், ‘மீறுதலுக்காக வழங்கப்படும் தண்டனைகள் யாவும் கொடுங்கோன்மையானவை என்றும் கூறினான்.தீஇவ 311.1

    யேகோவாவின் மெய்யான குணத்தைக் கண்டுகொள்ள மறந்த தற்கு, இஸ்ரவேலர் சாக்குப்போக்குச் சொல்ல இடமில்லாதிருந்தது. ‘ இரக்கமும் மனவுருக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபை யும், சத்தியமும் ‘ நிறைந்த ஒருவராக தேவன் தம்மை அவர்களுக்கு அடிக்கடி வெளிப்படுத்தினார். சங் 86:15. இஸ்ரவேல் இளைஞ் னாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என் னுடைய குமாரனை வரவழைத்தேன்” என்று உறுதி கூறினார். ஓசியா 11:1.தீஇவ 312.1

    எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலை விடுவித்ததி லும் வாக்குத்தத்த தேசத்திற்கு நேராக அவர்களை வழிநடத்தியதி லும் தேவன் அவர்களைக் கனிவுடன் கையாண்டார். ‘’அவர்களு டைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; அவரு டைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார்; அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும், அவர் களை மீட்டு, பூர்வ நாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்து வந்தார். ஏசாயா 63:9.தீஇவ 312.2

    ’என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும்’ என்பதே வனாந் தரத்தின் வழியாகப் பயணம் செய்தபோது கொடுக்கப்பட்ட வாக் குத்தத்தம். யாத்திராகமம் 33:14. இந்த நிச்சயத்தோடுகூட யேகோ வாவின் குணம் பற்றி ஓர் அற்புத வெளிப்பாடும் கொடுக்கப்பட்டது. தேவ தயவு குறித்து இஸ்ரவேல் அனைத்திற்கும் போதிப்பதற்கும், அதரிசனமான தங்கள் ராஜாவின் தன்மைகள் குறித்து அவர்களுக் குக் கற்பிப்பதற்கும் மோசேக்கு அது உறுதுணையாயிருந்தது. கர்த் தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது அவர், ‘’கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன் னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாதவர்” என்று கூறினார். யாத்திராகமம் 34:6, 7.தீஇவ 312.3

    வாக்குத்தத்தத் தேசத்தின் எல்லைகளில், தேவகட்டளைக்குக் கீழ்ப்படிந்து முன் செல்ல இஸ்ரவேலர் மறுத்தபோது, யேகோவா வின் நீடிய பொறுமையையும், அவருடைய அளவில்லா அன்பை யும் இரக்கத்தையும் பற்றி தான் நன்றாக அறிந்திருந்ததால் தான், இஸ்ரவேலரின் ஜீவனுக்காக ஓர் அருமையான வேண்டுகோளை ஏறெடுத்தார் மோசே. அவர்களின் கலகம் உச்சநிலையை அடைந்த போது, ‘’நான் அவர்களைக் கொள்ளை நோயினால் வாதித்து, சுதந் தரத்துக்குப் புறம்பாக்கிப் போடுவேன்’‘ என்றார் தேவன். மேலும், மோசேயின் சந்ததியை அவர்களைப் பார்க்கிலும் பெரிதும் பலத் ததுமான ஜாதியாக்குவேன்” என்றும் சொன்னார். எண்ணாகமம் 14:12. ஆனால், தேவ மகத்துவ முன்னேற்பாடுகளையும் வாக்குத் தத்தங்களையும் சொல்லி, தெரிந்துகொள்ளப்பட்ட தேசத்தின் சார் பாகவே வேண்டிக்கொண்டார் தீர்க்கதரிசி. அதன்பிறகு, சகல வேண்டுதல்களுக்கும் முத்தாய்ப்பாக, விழுந்துபோன மனிதனுக் கான தேவ அன்பை அவர் வேண்டினார். வச. 17-19.தீஇவ 312.4

    ’’உன் வார்த்தையின்படியே மன்னித்தேன்” எனக்கிருபையா கப் பதிலளித்தார் தேவன். பிறகு, இஸ்ரவேலின் இறுதி வெற்றி குறித்த தம்முடைய நோக்கம் பற்றிய அறிவை, ஒரு தீர்க்கதரிசனப் படிவத்தில் மோசேக்கு அருளினார். ‘’பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்’‘ என்றார். வசனங்கள் 20, 21. இஸ்ர வேலை முன்னிட்டு மோசேவேண்டிக்கொண்ட தேவனுடைய மகி மையும், அவருடைய குணமும், அவருடைய இரக்கமான உருக்க மும், கனிவான அன்பும் மனித இனம் முழுவதிற்கும் வெளிப்பட இருந்தது. யேகோவாவின் இந்த வாக்குத்தத்தமானது இன்னும் ஒரு முறை நிச்சயப்படுத்தப்பட்டது; அது ஓர் ஆணையால் உறுதிப்படுத் தப்பட்டது. மெய்யாகவே தேவன் ஜீவிப்பதாலும், அரசாளுகிறதா லும் ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையும் சகல ஜனங்களுக்குள் ளும் அவருடைய அதிசயங்களும் அறிவிக்கப்படவேண்டும். சங்கீ தம் 96:3.தீஇவ 313.1

    இந்தத் தீர்க்கதரிசனம் எதிர்காலத்தில் நிறைவேற இருந்ததைக் குறித்தே, ‘பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக் கிறது’ என்று சிங்காசனத்திற்கு முன்பாக ஜொலிக்கும் சேராபீன்கள் பாடினதைக் கேட்டார் ஏசாயா. ஏசாயா 6:3. இந்த வார்த்தைகள் மேலிருந்த நம்பிக்கையால்தான், கல்லினாலும் மரத்தினாலும் செய் யப்பட்ட சொரூபங்களைப் பணிந்து கொண்டவர்கள் குறித்து, ‘’அவர் கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத் தையும் காண்பார்கள்’‘ என்று துணிவோடு அறிவித்தார் தீர்க்கதரிசி. ஏசா 35:2.தீஇவ 313.2

    இன்று இந்தத் தீர்க்கதரிசனம் வேகமாக நிறைவேறிவருகிறது. பூமியிலுள்ள தேவ சபையின் நற்செய்திப் பணிகளால் மிகுந்த பலன் விளைந்து வருகிறது. சுவிசேஷச் செய்தி விரைவிலேயே சகலதேசத் தாருக்கும் அறிவிக்கப்படும். அவர் தம்முடைய கிருபையின் மகி மைக்குப் புகழ்ச்சியாக’‘ ‘’கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத் தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகாமேன் மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச் செய்வதற் காக” சகல இனத்தாரிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் உள்ள ஆண்களும் பெண்களும் இயேசு கிறிஸ்துவின் மூலம் பிரியமான வருக்குள் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ளப்பட் டனர். ‘’எபேசியர் 1:5; 2:6. ‘’இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த் தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங் களைச் செய்கிறவர். அவருடைய மகிமை பொருந்திய நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக, பூமி முழுவதும் அவ ருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. சங்கீதம் 72:18, 19.தீஇவ 313.3

    ஆலயப்பிராகாரத்தில் ஏசாயாவுக்குக் கொடுக்கப்பட்டதரிசனத் திலே, இஸ்ரவேலின் தேவனுடைய குணம் பற்றிய ஒரு தெளிவான காட்சி அவருக்குக் காட்டப்பட்டது. ‘‘ நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் மிகுந்த மாட்சியோடு அவருக்கு முன் தரிசனமானார்; ஆனாலும் தன் ஆண்டவரின் உருக்கமான குணத்தைத் தீர்க்கதரிசிக்கு விளக்க வேண்டியதாயிற்று. ‘’உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம் பண்ணுகிறவர்’’’‘ பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கு, நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்தில் “வாசம் பண்ணு கிறவராய் இருக்கிறார். ஏசாயா 57:15. ஏசாயாவின் உதடுகளைத் தொடுமாறு கட்டளை பெற்றதூதன், ‘’உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது ” என்ற செய்தியை அவரிடம் தெரிவித்தான். ஏசாயா 6:7.தீஇவ 314.1

    தமஸ்குவின் வாசலில் தர்சுவின் சவுலுக்கு ஏற்பட்ட நிலையே, தன் தேவனைக் கண்ட தீர்க்கதரிசிக்கு ஏற்பட்டது. அங்கு அவரு டைய இழிநிலை காட்டப்பட்டது மட்டுமல்ல, அவருடைய தாழ் மையான இருதயத்தில் பாவமன்னிப்பின் நிச்சயம் முழுவதும் இல வசமாக அருளப்பட்டது; மாறுபட்ட ஒரு மனிதனாக அவர் எழுந் திருந்தார். அவர் தன் ஆண்டவரைக் கண்டார். தெய்வீககுணத்தின் அருமை குறித்த காட்சியை இமைப்பொழுதில் பெற்றார். அளவில்லா அன்புடையவரை நோக்கிப் பார்ப்பதன் மூலம் ஏற்படும் மாற்றம் குறித்துச் சாட்சி பகரக்கூடியவரானார். ஆகையால், பாவத்தில் கிடந்த இஸ்ரவேலர் தங்கள் பாவத்தின் தண்டனையிலும் பாரத்திலும் மிருந்து விடுதலையடைவதைக் காணவேண்டுமென்ற ஏவுதலைப் பெற்றார் தீர்க்கதரிசி. ‘’இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்பட வேண் டும்? உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமை செய்தலைவிட்டு ஓயுங்கள். வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத் தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும். நன்மை செய் யப்படியுங்கள்.’’ஏசாயா 1:5,18,16,17.தீஇவ 314.2

    தேவனை தாங்கள் சேவிப்பதாகச் சொல்லிக்கொண்டு, அவ ருடைய குணம் பற்றி அவர்கள் தவறாகப் புரிந்திருந்தாலும். அவரே ஆவிக்குரிய நோய்தீர்க்கும் பூரண மருத்துவர் என்று அவர் கள்முன் காண்பிக்கப்பட்டது. தலையெல்லாம் வியாதியும், இரு தய மல்லாம் பலட்சயமுமாய் இருந்தால்தான் என்ன? உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் சுகமே இல்லாமலும், அது காயமும் வீக்கமும் நொதிக்கிற இரணமுமாய் இருந்தால்தான் என்ன? (பார்க்க: ஏசாயா 1:6.) தன்னுடைய இருதயத்தின் போக்கின்படி கட்டுப்பாடில்லாமல் நடக்கிறவன், ஆண்டவரிடம் திரும்பினால் சுகம் பெறமுடியும். அவர்கள் வழிகளை நான் பார்த்து, அவர் களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும் அவர் களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன். தூரமாயிருக்கிறவர்களுக்கும் சமீபமாயிருக்கிறவர் களுக்கும் சமாதானம் சமாதானம் என்று கூறும் உதடுகளின் பல னைச் சிருஷ்டிக்கிறேன் : அவர்களைக் குணமாக்குவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். ஏசாயா 57:18, 19.தீஇவ 315.1

    சகலத்திற்கும் சிருஷ்டிகரென்று தேவனை மகிமைப்படுத்தி னார் தீர்க்கதரிசி. இதோ, உங்கள் தேவன்” என்பதே யூதாவின் பட்டணத்தாருக்கு அவரின் செய்தியாயிருந்தது. ‘’வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தி யாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்.’‘ ‘ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன். நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின் மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன். ‘’ஏசாயா 42:5; 44:24:45:7, 12. இப்படி யிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக் குவீர்கள்?” என்று பரிசுத்தர் சொல்லுகிறார். ‘’உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர் பேராக அழைக்கிறவராமே; அவரு டைய மகாபெலத்தினாலும் அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.’’ஏசாயா 40:25, 26.தீஇவ 315.2

    தாங்கள் தேவனிடம் திரும்பினாலும் அவர் தங்களை ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று பயந்தவர்களிடம்,தீஇவ 316.1

    ’’யாக்கோபே, இஸ்ரவேலே, ‘என் வழி கர்த்தருக்கு மறை வாயிற்று’ என்றும், ‘என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது’ என்றும் நீ சொல்வானேன்? பூமியின் கடையாந்தரங் களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்து போவது மில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது. சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லா தவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். இளைஞர் இளைப் படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்’‘ என்றார் தீர்க்கதரிசி. வச. 27- 31.தீஇவ 316.2

    சாத்தானின் கண்ணிகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள சக்தியற்றவர்களென்று உணர்கிறவர்களுக்காக, அளவில்லா அன் பாகிய அவரின் உள்ளம் ஏங்கி நிற்கிறது. தமக்காக வாழும்படி அவர் அவர்களுக்குக் கிருபையாகப் பெலனளிக்கிறார். ‘’நீ பயப் படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணு வேன்; என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன். உன் தேவனாயிருக்கிறகர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து, ‘பயப்படாதே; நான் உனக்குத் துணை நிற்கிறேன்’ என்று சொல்லு கிறேன். ‘யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறு கூட் டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணை நிற்கிறேன்’ என்று கர்த் தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்” என்று அவர்களைத் தேற்றினார். ஏசாயா 41:10,13,14.தீஇவ 316.3

    யூதாவின் குடிமக்கள் யாவரும் தகுதியற்றிருந்த போதிலும் தேவன் அவர்களை விட்டுவிடவில்லை . அவர்கள் மூலமாக அவ ருடைய நாமம் புறஜாதியார் மத்தியில் உயர்த்தப்பட இருந்தது.தீஇவ 316.4

    நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்;
    திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி
    உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலது கரத்தினால்
    உன்னைத் தாங்குவேன்.உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான்
    உன் வலதுகையைப் பிடித்து, பயப்படாதே; நான் உனக்குத்
    துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.
    தீஇவ 318.1

    ஏசாயா 41:10, 13. அவருடைய குணநலன்கள் குறித்து முற்றிலும் அறியாதிருந்தவர்கள் தெய்வீக குணத்தின் மகிமையை இன்னும் காணவேண்டியிருந்தது. தம்முடைய இரக்கமான திட்டங்களைத் தெளிவுபடுத்தும் நோக்கத் துடனே, ‘’உங்களில் அவனவன் தன்தன் பொல்லாதவழியை விட் டுத்திரும்புங்கள்’‘ என்கிற செய்தியோடு தீர்க்கதரிசிகளாகிய தம் ஊழியக்காரரை அனுப்பிக்கொண்டே இருந்தார். எரேமியா 25:5. ‘’என் நாமத்தின் நிமித்தம் என் கோபத்தை நிறுத்திவைத்தேன்; உன் னைச் சங்கரிக்காதபடிக்கு நான் என் புகழ்ச்சியினிமித்தம் உன்மேல் பொறுமையாயிருப்பேன்.’‘ ‘’என்னிமித்தம், என்னிமித்தமே, அப் படிச் செய்வேன்; என் நாமத்தின் பரிசுத்தம் எப்படிக் குலைக்கப்பட லாம்? என் மகிமையை நான் வேறொருவருக்குங் கொடேன்’‘ என்று ஏசாயா மூலம் அறிவித்தார். ஏசாயா 48:9,11.

    மனந்திரும்புதலுக்கான அழைப்பு சந்தேகத்திற்கு இடமற்ற தெளிவோடு ஒலித்தது. தேவனிடம் திரும்புமாறு அனைவருமே அழைக்கப்பட்டனர். ‘கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக் கிக் கூப்பிடுங்கள். துன்மார்க்கன்தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயைபெருத்திருக் கிறார்” என்று வேண்டினார் தீர்க்கதரிசி. ஏசாயா 55:6, 7.தீஇவ 319.1

    இதை வாசிக்கும் வாசகரே, நீங்கள் சுயவழியைத் தெரிந்து கொண்டீர்களா? தேவனைவிட்டு வெகுதூரம் சென்றிருக்கிறீர் களா? மீறுதலின் கனிகளைப் புசிக்க நாடி, அது உங்கள் உதடுகளில் சாம்பலாய்ப் போகக் கண்டிருக்கிறீர்களா? இப்பொழுதும், உங்கள் வாழ்க்கைத் திட்டங்கள் தகர்ந்து, உங்கள் நம்பிக்கை வாடிவதங் கிப்போன நிலையில் தனிமையிலும் வெறுமையிலும் விடப்பட் டிருக்கிறீர்களா? உங்கள் இருதயத்தில் வெகுகாலமாகப் பேசிக் கொண்டிருந்தும், நீங்கள் கேட்க மறுத்த அந்தச் சத்தமானது, தெளி வோடும் உறுதியோடும் உங்களிடத்தில் வருகிறது. ‘’எழுந்திருந்து போங்கள்; இது நீங்கள் இளைப்பாறும் இடம் அல்ல, இது தீட்டுப் பட்டது, இது உங்களை நாசப்படுத்தும், அந்த நாசம் மிகவும் கொடிய தாயிருக்கும். ‘மீகா 2:10. உங்கள் தகப்பனின் வீட்டிற்கே திரும்புங் கள். என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன். ‘‘ ‘’என்னிடத்தில் வாருங்கள்; கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும், தாவீதுக்கு அருளின் நிச்சயமான கிருபை களை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்” என்று சொல்லி அவர் உங்களை அழைக்கிறார். ஏசாயா 44:22; 55:3தீஇவ 319.2

    உங்களை நீங்கள் நல்லவர்களாக்கிக் கொள்ளுமட்டும், அல் லது தேவனிடம் வருமளவிற்கு நீங்கள் நல்லவர்களாகுமட்டும் நீங் கள் கிறிஸ்துவிடமிருந்து விலகியிருக்க வேண்டுமென்று சத்துரு தருகிற ஆலோசனைக்குச் செவிகொடுக்காதீர்கள். அதுவரைக்கும் நீங்கள் காத்திருந்தால், பின்னர் ஒருபோதும் வரமாட்டீர்கள். கந்தையான உங்கள் வஸ்திரங்களைச் சுட்டிக்காட்டும் சாத்தானிடம், ‘’என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” எனும் இரட்சகரின் வாக்குத்தத்தத்தைச் சுட்டிக்காட்டுங்கள். யோவான் 6:37. இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகலபாவத்திலுமிருந்து சுத்திகரிக்கிறது என்பதைச் சத்துருவிடம் சொல்லுங்கள். ‘’நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என் னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்’‘ எனும் தாவீதின் ஜெபத்தை உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். சங்கீதம் 51:7.தீஇவ 320.1

    ஜீவனுள்ள தேவனை நோக்குமாறும், அவருடைய கிருபை யான ஈவுகளை ஏற்றுக்கொள்ளுமாறும் யூதாவுக்குத் தீர்க்கதரிசி கொடுத்த அறிவுரை வீணாகவில்லை. அதற்கு ஊக்கமாய்ச் செவி கொடுத்து, தங்கள் சிலைவழிபாட்டைவிட்டுத் திரும்பி, யேகோவா வைத் தொழுதுகொண்ட சிலர் அங்கிருந்தனர். அவர்கள் தங்கள் சிருஷ்டிகரின் அன்பையும் இரக்கத்தையும் கனிவான உருக்கத்தை யும் காணக் கற்றுக்கொண்டார்கள். யூதாவின் வரலாற்றில் வர விருந்த அந்தகார நாட்களில், மீதமான ஒரு கூட்டத்தார் மாத்திரமே தேசத்திலே மிஞ்சியிருந்தனர். அப்போது, உறுதியான சீர்திருத் தத்தை ஏற்படுத்துவதில் தீர்க்கதரிசியின் வார்த்தைகள் தொடர்ந்து கனிகொடுக்கவேண்டியதாயிருந்தது. அக்காலத்திலே மனுஷன் தன்கைகளின் கிரியையாகிய பீடங்களை நோக்காமலும், தன் விரல் கள் உண்டுபண்ணின தோப்பு விக்கிரகங்களையும், சிலைகளையும் நோக்காமலும், தன்னை உண்டாக்கினவரையே நோக்குவான், அவன் கண்கள் இஸ்ரவேலின் பரிசுத்தரையே நோக்கிக் கொண் டிருக்கும்” என்றார் ஏசாயா. ஏசாயா 17:7,8.தீஇவ 320.2

    பதினாயிரம் பேர்களில் சிறந்தவரை, பூரண அழகுள்ளவரை அநேகர் கண்டுகொள்ள இருந்தார்கள். ‘’உன் கண்கள் ராஜாவை மகிமை பொருந்தினவராகக் காணும்” என்பதே அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கிருபையான வாக்குத்தத்தமாயிருந்தது. ஏசாயா 33:17. அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட இருந்தன. தேவனில் மாத்திரம் அவர்கள் பெருமை பாராட்ட இருந்தனர். சிலைவழிபாட் டிலிருந்து அவர்கள் மீட்கப்படும் அந்தச் சந்தோஷமான நாளில், ‘’மகிமையுள்ள கர்த்தர் அங்கே நமக்கு விசாலமான நதிகளும் ஆறு களுமுள்ள ஸ்தலம்போல் இருப்பார்’’.’’கர்த்தர் நம்முடைய நியா யாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்மு டைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்’‘ என்று அவர்கள் மகிழ இருந்தனர். வசனங்கள் 21, 22.தீஇவ 320.3

    தீய வழிகளிலிருந்து திருந்த முடிவு செய்தவர்களுக்கு ஏசாயா எடுத்துச் சொன்ன செய்திகள் முற்றிலும் ஆறுதலும் ஊக்கமும் நிறைந்தவைகளாய் இருந்தன. தேவனுடைய தீர்க்கதரிசியின் மூல மாகச் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கவனியுங்கள்:தீஇவ 321.1

    “யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை;
    நீ என் தாசன்;
    நான் உன்னை உருவாக்கினேன்;
    நீ என் தாசன்; இஸ்ரவேலே,
    நீ என்னால் மறக்கப்படுவதில்லை.
    உன் மீறுதல்களை மேகத்தைப் போலவும்,
    உன் பாவங்களைக் கார்மேகத்தை போலவும் அகற்றிவிட்டேன்;
    என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.”
    தீஇவ 321.2

    ஏசாயா 44:21,22

    ‘’அக்காலத்திலே நீ சொல்வது;
    கர்த்தாவே, நான் உம்மைத் துதிப்பேன்;
    நீர் என்மேல் கோபமாயிருந்தீர்;
    ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கிற்று; நீர் என்னைத் தேற்றுகிறீர்.’

    “இதோ, தேவனே என் இரட்சிப்பு;
    நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்;
    கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்,
    அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.

    ’’கர்த்தரைக் கீர்த்தனம் பண்ணுங்கள், அவர் மகத்துவமான கிரியைகளைச்
    செய்தார்;
    இது பூமியெங்கும் அறியப்படக்கடவது.
    சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி )
    இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.”
    தீஇவ 321.3

    ஏசாயா 12.

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents