Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    51 - ஆன்மிக எழுப்புதல்

    எஸ்றாவின் வருகை எருசலேமிற்கு அனுகூலமாய் அமைந் தது. அவன் வருகையால் ஏற்படும் செல்வாக்கு மிக அவசியமான தாயிருந்தது. நீண்டகாலம் கஷ்டங்களை அனுபவித்துவந்த அநே கரின் உள்ளங்களில், அவனுடைய வருகை நம்பிக்கையையும் தைரியத்தையும் கொண்டுவந்தது. எழுபது வருடங்களுக்கு முன்பு, செருபாபேல் மற்றும் யோசுவாவின் தலைமையின்கீழ், சிறையிருப் பிலிருந்து முதல் கூட்டத்தார் அங்கு வந்ததிலிருந்து அநேக காரியங் கள் நிறைவேற்றப்பட்டிருந்தன. ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டிருந் தது; நகரத்தின் மதில்கள் பாதியளவு செப்பனிடப்பட்டிருந்தன. ஆனாலும், இன்னும் செய்யப்படவேண்டியது இன்னுமிருந்தது.தீஇவ 618.1

    முந்தைய நாட்களில் எருசலேமிற்குத் திரும்பிவந்தவர்களில், தங்கள் வாழ்நாளெல்லாம் தேவனுக்கு உண்மையோடிருந்தவர்கள் அநேகர் இருந்தார்கள். ஆனால், குறிப்பிடத்தக்க அளவிலான அவர்களுடைய பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும் தேவபிரமாணத்தின் பரிசுத்தத்தை மறந்து போனார்கள். நம்பிக்கை யான பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்த சிலர்கூட, வெளிப் படையாகப் பாவத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். தேவ நோக் கத்தை நிறைவேற்றப் பிறர் மேற்கொண்ட முயற்சிகளை, இவர் களின் போக்கு பெரிதும் தடை செய்தது ; மனமறிந்து தேவ பிரமா ணத்தை மீறுவது கண்டிக்கப்படாமல் விடப்படும் வரைக்கும், பர லோக ஆசீர்வாதம் மக்கள்மேல் தங்கவே முடியாது.தீஇவ 618.2

    எஸ்றாவோடு எருசலேமிற்குச் சென்றவர்கள், தேவனைத் தேட விசேஷித்த நாட்களை நியமிக்க வேண்டுமென்பது தேவனு டைய முன்யோசனையில் இடம் பெற்றிருந்தது. மனித ஆற்றலுக் குட்பட்ட பாதுகாப்பு ஏதுமில்லாமல் சமீபத்தில்தான் அவர்கள் பாபி லோனிலிருந்து பயணப்பட்டு வந்திருந்தார்கள். அந்த அனுபவமா னது, விலைமதிக்க முடியா ஆவிக்குரிய பாடங்களை அவர்களுக் குப் போதித்திருந்தது. அநேகர் விசுவாசத்தில் பெலப்பட்டிருந்தார் கள் எருசலேமில் அதைரியத்தோடும், அலட்சியத்தோடும் இருந்த வர்க ளோடு இவர்கள் சேர்ந்துகொண்டதும், அதன்பிறகு ஏற்பட்ட சீர்திருத்தத்தில் இவர்களின் செல்வாக்கு ஒருவல்லமையான காரணி யாக விளங்கியது.தீஇவ 619.1

    அவர்கள் வந்துசேர்ந்த நான்காம் நாளில், வெள்ளியும் பொன் னும் தேவாலய ஆராதனைப் பணிக்கான பணிமுட்டுகளும், ஒன்று கூட குறையாமல், சாட்சிகளின் முன்னிலையில், ஆலய அதிகாரி களின் கரங்களில் பொருளாளர்களால் ஒப்படைக்கப்பட்டன. ஒவ் வொரு பொருளும் நிறையின்படியே நிறுத்து ஒப்புவிக்கப்பட்டது. எஸ்றா 8:34.தீஇவ 619.2

    எஸ்றாவோடு எருசலேமிற்குத் திரும்பிவந்த சிறையிருப்பின் புத்திரர், தங்கள் பயணக்காலத்தில் தங்களுக்கு அருளப்பட்ட பரி சுத்த தூதர்களின் பாதுகாவலுக்காக ஸ்தோத்திரத்தையும் நன்றியை யும் ஏறெடுக்கும்படியும், குற்ற நிவராணப் பலி செலுத்தும்படியும், ‘இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி னார்கள்.’ ‘பின்புராஜாவின் சன்னதுகளை நதிக்கு இப்புறத்திலிருக் கிற ராஜாவின் தேசாதிபதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் ஒப்புவித் தார்கள்; அப்பொழுது அவர்கள் ஜனங்களுக்கும் தேவனுடைய ஆலயத்துக்கும் உதவியாயிருந்தார்கள்’. வச 35,36.தீஇவ 619.3

    அதன்பிறகு சில நாட்களிலேயே இஸ்ரவேலின் தலைவர்களில் சிலர் ஒரு முக்கியக் குற்றச்சாட்டோடு எஸ்றாவிடம் வந்தனர். ‘இஸ்ர வேல் ஜனங்களிலும் ஆசாரியரிலும், லேவியரிலும் ‘சிலர், சுற்றிலும் மிருந்த மக்களோடு கலப்புத்திருமணம் செய்துகொள்ளும் அள விற்கு யேகோவாவின் பரிசுத்த கட்டளைகளை வெகுவாக அவ மதித்திருந்தார்கள். ‘எப்படியென்றால், அவர்களுடைய குமாரத்தி களிலே தங்களுக்கும் தங்கள் குமாரருக்கும் பெண்களைக் கொண் டார்கள்; இப்படியே பரிசுத்த வித்து தேசங்களின் ஜனங்களோடே கலந்து போயிற்று; பிரபுக்களின் கையும், அதிகாரிகளின் கையும், இந்தக் குற்றத்தில் முந்தினதாயிருக்கிறது’ என்று எஸ்றாவிடம் சொல் லப்பட்டது. எஸ்றா 9:1,2.தீஇவ 619.4

    இஸ்ரவேலர் புறஜாதியாரின் தேசத்தாரோடு கலந்ததுதான் அவர்களின் வழிவிலகலுக்குப் பெரிதும் காரணமாயிருந்தது. பாபி லோனியச் சிறையிருப்புக்கு அவர்களை வழிநடத்தின் காரணங் களை ஆராய்ந்தபோது எஸ்றா இதை அறிந்தான். அவர்கள் தங் களைச் சுற்றிலுமிருந்த தேசத்தாரிடமிருந்து தங்களை விலக்கி, தேவ னுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருப்பார்களானால், வருத்தமும் அவமானமுமான அநேக அனுபவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டி ருப்பார்கள். அவர்கள் இத்தகைய பாடங்களை முன்பு பெற்றிருந் தும், தேவதுரோகத்திலிருந்து தப்பிக்கொள்ளும்படி கொடுக்கப்பட் டிருந்த பிரமாணங்களை மீற முக்கியப் பிரமுகர்கள் துணிந்ததை அறிந்தபோது, அவனுடைய உள்ளம் அவனுக்குள் கலங்கிற்று. தம் முடைய ஜனங்களைத் தங்கள் சொந்த தேசத்தில் மீண்டும் கால் பதிக்கச் செய்ததில் தேவன் காட்டியதயவை அவன் எண்ணிப்பார்த் தான். அவர்களுடைய நன்றிகெட்ட தன்மையால், நீதியான கோபத்தாலும் துக்கத்தாலும் மேற்கொள்ளப்பட்டான். ‘இந்த வர்த்தமானத்தை நான் கேட்ட பொழுது, என் வஸ்திரத்தையும் என் சால்வையையும் நான் கிழித்து, என் தலையிலும் என் தாடியிலுமுள்ள மயிரைப் பிடுங்கி, திகைத்தவனாய் உட்கார்ந்திருந்தேன்.’தீஇவ 620.1

    ’அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத் தினிமித்தம் இஸ்ரவேலுடைய தேவனின் வார்த்தைகளுக்கு நடுங் குகிற யாவரும் என்னோடேகூடிக்கொண்டார்கள்; நானோ அந்திப் பலி செலுத்தப்படுமட்டும் திகைத்தவனாய் உட்கார்ந்து கொண் டிருந்தேன்’. வச3, 4.தீஇவ 620.2

    அந்திப்பலி நேரத்திலே எஸ்றா எழுந்து, மீண்டும் ஒருமுறை தன் வஸ்திரத்தையும் சால்வையையும் கிழித்துக்கொண்டு, முழங் காற்படியிட்டு, பரலோகத்தை நோக்கி விண்ணப்பம் செய்து தமது ஆத்துமப் பாரத்தைக் கொட்டினான். கர்த்தரை நோக்கிக் கரங்களை விரித்து அவர் சொன்னதாவது: ‘’என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்கு கிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்கு மேலாகப் பெரு கிற்று, எங்கள் குற்றம் வான பரியந்தம் வளர்ந்து போயிற்றுதீஇவ 620.3

    ’எங்கள் பிதாக்களின் நாட்கள் முதல் இந்நாள் மட்டும் நாங்கள் பெரிய குற்றத்துக்கு உள்ளாயிருக்கிறோம்; எங்கள் அக்கிரமங்களி னிமித்தம் நாங்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் ஆசாரியர் களும், இந்நாளிலிருக்கிறதுபோல, அந்நிய தேச ராஜாக்களின் கையிலே பட்டயத்துக்கும், சிறையிருப்புக்கும், கொள்ளைக்கும், வெட்கத்துக்கும் ஒப்புக்கொடுக்கப்பட்டோம். இப்பொழுதும் எங் கள் தேவனாகிய கர்த்தர் எங்களிலே தப்பின சிலரை மீதியாகவைக் கவும், தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தில் எங்களுக்கு ஒரு குச்சைக் கொடுக்கவும், இப்படியே எங்கள் தேவன் எங்கள் கண்களைப் பிர காசிப்பித்து, எங்கள் அடிமைத்தனத்திலே எங்களுக்குக் கொஞ்சம் உயிர்கொடுக்கவும், அவராலே கொஞ்ச நேரமாவது கிருபை கிடைத் தது. நாங்கள் அடிமைகளாயிருந்தோம்; ஆனாலும் எங்கள் அடி மைத்தனத்திலே எங்கள் தேவன் எங்களைக் கைவிடாமல், எங்க ளுக்கு உயிர்கொடுக்கவும்; நாங்கள் எங்கள் தேவனுடைய ஆல யத்தை எடுப்பித்து, பாழாய்ப்போன அதைப் புதுப் பிக்கும் படிக்கும் எங்களுக்கு யூதாவிலும் எருசலேமிலும் ஒரு வேலியைக் கட்டளை யிடும் படிக்கும், பெர்சியாவின் ராஜாக்கள் சமுகத்தில் எங்களுக்குத் தயைகிடைக்கச் செய்தார்.தீஇவ 621.1

    ’இப்பொழுதும் எங்கள் தேவனே, நாங்கள் இனி என்ன சொல் லுவோம்? தேவரீர் உமது ஊழியக்காரனாகிய தீர்க்கதரிசிகளைக் கொண்டு கற்பித்த உமது கற்பனைகளை விட்டுவிட்டோம். இப் பொழுதும் எங்கள் தேவனே, எங்கள் பொல்லாத செய்கைகளி னாலும், எங்கள் பெரிய குற்றத்தினாலும், இவைகளெல்லாம் எங் கள்மேல் வந்தும், தேவரீர் எங்கள் அக்கிரமத்துக்குத்தக்க ஆக்கி னையை எங்களுக்கு இடாமல், எங்களை இப்படித் தப்பவிட்டிருக் கையில், நாங்கள் உமது கற்பனைகளை வீணாக்கவும், இந்த அரு வருப்புகளுள்ள ஜனங்களோடே சம்பந்தங்கலக்கவும் தகுமோ? அப்படிச் செய்தால், எங்களில் ஒருவரும் மீந்து தப் பாதபடிக்கு, தேவரீர் எங்களை நிர்மூலமாக்குமட்டும் எங்கள்மேல் கோபமாயிருப் பீரல்லவோ? இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் நீதியுள்ள வர்; ஆகையால் இந்நாளில் இருக்கிறது போல, நாங்கள் தப்பிமீந் திருக்கிறோம்; இதோ, நாங்கள் உமக்கு முன்பாகக் குற்றத்திற்குள் ளானவர்கள்; இதினிமித்தம் நாங்கள் உமக்கு முன்பாக நிற்கத்தக்க வர்கள் அல்லர்’ என்று பிரார்த்தித்தான்.தீஇவ 621.2

    தேவபணியின் மையத்திற்கேநயவஞ்சகமாய் நுழைந்துவிட்ட தீமைகளின் நிமித்தம் எஸ்றாவும் அவனுடைய கூட்டாளிகளும் அடைந்த வேதனை, மனமாற்றத்தை ஏற்படுத்தியது. பாவம் செய்த அநேகர் ஆழமாகத் தாக்குதலடைந்தனர். ‘ஜனங்கள் மிகவும் அழு தார்கள். ‘எஸ்றா 10:1. பாவத்தின் கொடூரம் பற்றியும், தேவன் அதனை எத்தனை அருவருப்போடு பார்க்கிறார் என்பது பற்றியும் ஓரளவுக்கு அவர்கள் உணர ஆரம்பித்தார்கள். சீனாயில் கொடுக்கப்பட்ட பிர மாணத்தின் பரிசுத்தத்தை அவர்கள் கண்டார்கள். தங்கள் மீறுதல் களை எண்ணி, அநேகர் நடுக்கங்கொண்டார்கள்.தீஇவ 622.1

    அங்கிருந்தவர்களில் ஒருவனான செக்கனியா என்பவன், எஸ்றாவால் பேசின் அனைத்து வார்த்தைகளும் உண்மையென ஒத்துக்கொண்டான். நாங்கள் தேசத்து ஜனங்களிலுள்ள அந்நிய ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்டதினால், எங்கள் தேவனுக்கு விரோ தமாகப் பாவஞ் செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத் திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு” என்று அறிக்கை செய்தான். மீறுதல்பண்ணின யாவரும், தங்கள் பாவங்களை விட்டு விடவும், ‘நியாயப்பிரமாணத்தின்படியே செய்யவும் தேவனோடு ஓர் உடன்படிக்கைபண்ணவேண்டுமென்று ஆலோசனை கூறினான். ‘’எழுந்திரும்; இந்தக் காரியத்தை நடப்பிக்கிறது உமக்கு அடுத்தது; நாங்களும் உம்மோடேகூட இருப்போம்; நீர் திடன்கொண்டு இதைச் செய்யும்’‘ என்று எஸ்றாவிடம் கேட்டுக்கொண்டான். அப்பொழுது எஸ்றா எழுந்திருந்து, ஆசாரியரிலும் லேவியரிலும் பிரதானமான வர்களும் இஸ்ரவேல் அனைவரும் இந்த வார்த்தையின்படி செய் யும் படிக்கு, அவர்களை ஆணையிடச் சொன்னான்; அவர்கள் ஆணையிட்டார்கள்’. வச 2-5.தீஇவ 622.2

    ஓர் அற்புதச் சீர்திருத்தத்திற்கு இது ஆரம்பமாயிருந்தது. சம் பந்தப்பட்ட ஒவ்வொரு தனிநபரின் நலனையும் உரிமைகளையும் கருத்தில்கொண்டும், மனந்திரும்பின இஸ்ரவேலரைச் சரியான பாதையில் நடத்த அளவற்றப் பொறுமையோடும் நுண்ணறிவோ டும், எஸ்றாவும் அவனுடைய கூட்டாளிகளும் அதிக முயற்சி எடுத் துக் கொண்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, நியாயப்பிரமா ணத்தைப் போதிக்கிறவராய் இருந்தான் எஸ்றா. ஒவ்வொருவரின் விஷயத்தையும் ஆராய்வதில் அவர் தனிக்கவனம் செலுத்தி, பிரமா ணத்தின் பரிசுத்தத்தையும் கீழ்ப்படிதலால் வரும் ஆசீர்வாதங்களை யும் அவர்களிடத்தில் முக்கியப்படுத்த முயற்சி எடுத்துக்கொண் டான்.தீஇவ 622.3

    எஸ்றா வேலை செய்த இடங்களிலெல்லாம், வேதவார்த்தையை ஆராய்வதில் ஓர் எழுப்புதல் உண்டானது. மக்களுக்குப் போதிக்கப் போதகர்கள் நியமிக்கப்பட்டார்கள்; தேவனுடைய பிரமாணம் மேன்மைப்படுத்தப்பட்டு, கனப்படுத்தப்பட்டது. தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் கண்டெடுக்கப்பட்டன; சோர்ந்தும் களைத்துப்போன அநேக இருதயங்களுக்கு மேசியாவின் வருகை குறித்து முன்னுரைக் கும் வாக்கியங்கள், நம்பிக்கையையும் ஆறுதலையும் கொண்டுவந் தன்.தீஇவ 623.1

    ’கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும் எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தினான். ‘எஸ்றா 7:10. அதன்பிறகு இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாகக் கடந்து விட்டன. காலங்கள் கடந்தாலும், அவனுடைய பக்திமிக்க முன் மாதிரி ஏற்படுத்திய தாக்கம் குறுகிப்போகவில்லை. பரிசுத்தமான அவனுடைய வாழ்க்கை வரலாறு, காலங்கள் நெடுகிலும் அநேகரை ஊக்குவித்து, அவர்கள், ‘கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும்’ தீர்மானிக்கும்படி செய்கிறது.தீஇவ 623.2

    எஸ்றாவின் நோக்கங்கள் உன்னதமும் பரிசுத்தமுமாய் இருந் தன். ஆத்துமாக்கள் பேரில் அவன் கொண்ட ஆழமான அன்புதான், அவன் செய்த எல்லாவற்றிலும் அவனை ஊக்குவித்தது. வேண்டு மென்றோ, அறியாமையாலோ பாவம் செய்தவர்கள்மேல் அவன் காட்டின் மனதுருக்கமும் கனிவும், சீர்திருத்தத்தை ஏற்படுத்த விரும் புகிற யாவருக்கும் ஒரு விளக்கப்பாடமாக இருக்கவேண்டும். நீதி யான் நியதிகள் சம்பந்தப்பட்டுள்ள காரியங்களில் எல்லாம், தேவ ஊழியர்கள் கற்பாறைபோல் உறுதியாக இருக்கவேண்டும். அதே சமயத்தில் பரிவையும் சகிப்புத்தன்மையையும் அவர்கள் வெளிப் படுத்தவேண்டும். மீறுதல் செய்வோருக்கு நீதியான சகல செய்கைக் கும் அடித்தளமான நியதிகளைச் சிறிது சிறிதாகப் புகட்டி, எஸ் றாவைப் போல வாழ்வின் வழியைப் போதிக்கவேண்டும்.தீஇவ 623.3

    தேவபிரமாணத்தின் நியாயமான கோரிக்கைகளைப் பார்க்க முடியாதவாறு ஆண்களையும் பெண்களையும் குருடாக்க, எண் ணற்ற வழிகளின் மூலம் சாத்தான் முயன்றுகொண்டிருக்கும் இன் றைய காலக்கட்டத்தில், அநேகரை நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்கச் செய்யக்கூடிய மனிதர்கள் தேவையாயிருக்கிறார்கள். எஸ்றா 10:3. பிரமாணத்தைக் கொடுத்த மகத்துவரைப் பாவிகளுக் குச் சுட்டிக்காட்டி, ‘கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்து மாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது’ என்று அவர்களுக்குப் போதிக்கும் மெய்யான சீர்திருத்தவாதிகள் தேவை. சங்.19:7. வேத வாக்கியங்களில் புலமை பெற்ற மனிதர்களும், தங்கள் ஒவ்வொரு வார்த்தையாலும் செயலாலும் யேகோவாவின் கற்பனைகளை உயர்த் துகிற மனிதர்களும், விசுவாசத்தைப் பெலப்படுத்த நாடும் மனிதர் களும் தேவை. வேதவாக்கியங்களில் பயபக்தியும் பிரியமும் கொள் ளும்படி இருதயங்களை ஊக்குவிப்பவர்கள், அதிகமாய்த் தேவை!தீஇவ 623.4

    வேதவாக்கியங்களை ஆராய்வதையும், அதற்குக் கீழ்ப்படிவம் தையும் மக்கள் மறந்துவிட்டார்கள் அதனால்தான், இன்று எங்கும் அக்கிரமம் பரவியிருக்கிறது. தேவவார்த்தையை ஒதுக்கும்போது, சுபாவ இருதயத்தின் தீய உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் அதன் வல்லமையையும் புறக்கணிக்கிறோம். மனிதர் மாம்சத்தில் விதைக் கிறார்கள், மாம்சத்திலிருந்து தீமையை அறுக்கிறார்கள்.தீஇவ 624.1

    வேதாகமத்தை ஒதுக்குவதால், தேவபிரமாணத்தை விட்டு உடனடியாக விலகுகிறோம். ‘தேவ போதனைகளுக்குக் கீழ்ப்படி வதிலிருந்து மனிதர் விடுவிக்கப்பட்டு விட்டார்கள்’ எனும் கொள் கையானது, நன்னெறி சார்ந்த கடமைப் பொறுப்புகளைப் பெல வீனப்படுத்தி, உலகத்திற்குள் அக்கிரமத்தின் மதகுகளைத் திறந்து விட்டுள்ளது. சட்டத்துக்குக் கீழ்ப்படியாமையும், ஒழுக்கக்கேடும், நேர்மையின்மையும் அடங்கா வெள்ளம் போல அடித்துக் கொண்டு வருகின்றன. எங்கும் பொறாமையும், தீய எண்ணங்களும், மாய் மாலமும், பேதங்களும், போட்டிகளும், சண்டைகளும், பரிசுத்த கடமைகளை மீறுவதும், இச்சை நாட்டமுமே காணப்படுகின்றன. சமுதாய வாழ்வின் அடித்தளத்தையும் வகைதுறையையும் அமைக்க வேண்டிய சகல மத நியதிகளும் கொள்கைகளும் தள்ளாடி, விழுந்து நொறுங்க ஆயத்த நிலையில் இருப்பதுபோல் தெரிகின்றது.தீஇவ 624.2

    சீனாய் மலையிலிருந்து பேசின அதே சத்தம், பூலோக வரலாற் றின் கடைசி நாட்களிலும், ‘என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்’ என்று சொல்லுகிறது. யாத் 20:3. தேவ சித்தத்திற்கு எதிராக மனிதனுடைய விருப்பம் அமைகின்றது. ஆனால், அவருடைய கட்டளையின் வார்த்தையை அவனால் அமைதிப்படுத்த முடியாது. உன்னதமான ஒரு வல்லமைக்கு, தான் ஆற்றவேண்டிய கடமையிலிருந்து தப்பித்துக்கொள்ள மனித சிந் தையால் இயலாது. கொள்கைகளும், ஊகங்களும் பெருகலாம்; வெளிப்பாடுகளுக்கு எதிராக அறிவியலை நிறுத்தி, தேவ பிரமா ணத்தைவிட்டு மனிதர் விலகலாம்; ஆனாலும், ‘உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக’ எனும் கட்டளை உறுதிமேல் உறுதியாக அறிவிக்கப் படுகிறது. மத்தேயு 4:10.தீஇவ 624.3

    யேகோவாவின் பிரமாணத்தைப் போன்று பெலப்படுத்தக் கூடியதோ, பெலவீனப்படுத்தக்கூடியதோ எதுவுமில்லை. அது இருந்து வருகிறது போலவே இருக்கிறது. அது எப்பொழுதும் தன் னில் தானே பரிசுத்தமும், நீதியும், நன்மையும், பூரணமும் உள்ளதாக விளங்கி வருகிறது; இனியும் அப்படியே விளங்கும். அதனை மாற் றவோ, நீக்கவோ முடியாது. அது நித்திய கனமுடையதால், அதற் குக் ‘கனம்’ என்பதும், ‘கனவீனம்’ என்பதும் மனிதரின் பேச்சளவில் தான் இருக்கும்.தீஇவ 625.1

    சத்தியத்திற்கும் பொய்க்கும் இடையேயான மாபெரும் இறுதிப் போராட்டமானது, மனிதனுடைய சட்டங்களுக்கும் யேகோவாவின் போதனைகளுக்கும் இடையே ஏற்படுகிறதாகவே இருக்கும். இந்த யுத்தத்திற்குள்தான் இப்பொழுது நாம் நுழைந்துகொண்டிருக்கி றோம். முதலிடத்தைப் பெற்ற இரண்டு எதிரிச்சபைகளுக்கு நடுவே நடக்கும் யுத்தமல்ல இது. வேதாகமமதத்திற்கும் கட்டுக்கதையையும் பாரம்பரியத்தையும் உடைய மதங்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் இது. சத்தியத்திற்கு எதிராக இணைந்துள்ள வல்லமைகள் இப்பொழுது முழுமூச்சுடன் செயல்பட்டு வருகின்றன. அதிக உபத் திரவத்தையும் இரத்தஞ்சிந்துதலையும் விலையாகக் கொடுத்து, நம் கரங்களில் கொடுக்கப்பட்டுள்ள தேவனுடைய பரிசுத்த வார்த்தை அற்பமாக எண்ணப்படுகிறது. அதனை வாழ்வின் விதியாக மெய் யாகவே ஏற்றுக்கொள்ளும் சிலர் இருக்கின்றனர். ஆனால் விசுவாச மின்மைதான் பெருமளவில் நிலவுகிறது. உலகத்தில் மாத்திரமல்ல, சபையிலும் அப்படியே. கிறிஸ்தவ விசுவாசத்தின் மெய்த்தூண் களான கொள்கைகளை அநேகர் மறுக்கிறார்கள். சிருஷ்டிப்புப் பற்றி வேதாகம எழுத்தாளர்கள் சொல்லியுள்ள மகத்தான உண்மைகளையும், மனிதனின் விழுகை பாவ நிவாரணம்’ ‘பிரமாணத்தின் நிலையான தன்மை போன்றவற்றையும் கிறிஸ்தவர்களெனச் சொல்லிக்கொள் ளும் அநேகர் நடைமுறையில் புறக்கணிக்கிறார்கள். தங்கள் அறி வில் பெருமை பாராட்டும் ஆயிரக்கணக்கானோர், வேதாமகத்தில் முழு நம்பிக்கை கொள்வதைப் பெலவீனத்திற்கான ஓர் ஆதாரம் என்றும், வேத வாக்கியங்களை ஆட்சேபித்து, அதன் முக்கியச் சத்தியங்களைத் தெய்வீகத்திற்குரிய தெனச் சொல்லி, அதன் வலுவைக் குறைப்பதை அறிவிற்கு ஓர் ஆதாரம் என்றும் கருது கிறார்கள்.தீஇவ 625.2

    திடீரென உலகில் சம்பவிக்கப்போகும் ஒரு காரியத்திற்காகக் கிறிஸ்தவர்கள் ஆயத்தப்பட்டிருக்கவேண்டும். அவர்கள் தேவ வார்த்தையை தளராத ஊக்கத்தோடு படித்து, அதனுடைய ஒழுக்க விதிகளுக்கு ஒத்ததாக தங்கள் வாழ்க்கையை மாற்றுகிற ஆயத்தத் தைச் செய்யவேண்டும். நித்தியத்தோடு சம்பந்தப்பட்ட மேலான காரியங்கள் கற்பனையான மதத்திற்கும் அப்பாற்பட்ட காரியங் களைக் கோருகிறது. வெறும் வார்த்தைகளையும் முறைமைகளை யும் பெற்று, சத்தியத்தை முற்றத்தில் நிறுத்தும் மதமே கற்பனையான மதம். தேவனோ ஓர் எழுப்புதலையும் ஒரு சீர்திருத்தத்தையும் விரும்புகிறார். வேதாகமமும், வேதாகம வார்த்தைகள் மாத்திர முமே பிரசங்க மேடையில் கேட்கப்பட வேண்டும். ஆனால், வேதா கமத்தின் வல்லமையோ குறைத்துப் பேசப்படுகிறது. அதன் விளை வாக, ஆவிக்குரிய வாழ்வின் தொனி குறைவாக ஒலிக்கிறது. இன் றைய பிரசங்கங்கள் பலவற்றில், மனச்சாட்சியைத் தட்டியெழுப்பி, ஆத்துமாவிற்கு ஜீவனைக் கொண்டுவரும் தெய்வீக வெளிப்பாடு காணப்படுவதில்லை. வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக் கியங்களை நமக்கு விளங்கக் காட்டின் பொழுது, நம்முடைய இரு தயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?’ என்று பிர சங்கத்தைக் கேட்பவர்களால் சொல்லமுடிவதில்லை. லூக்கா 24:32. ஜீவனுள்ள தேவனுக்காகக் கதறி, தெய்வீக பிரசன்னத்திற்காக ஏங்கும் அநேகர் இருக்கிறார்கள். தேவவார்த்தை உள்ளத்தில் பேசட்டும். பாரம்பரியத்தையும் மனிதரின் கொள்கைகளையும் மட்டுமே கேட்டு வந்தவர்கள் இப்போது ஜீவனுக்கேதுவாக ஆத்து மாவைப் புதுப்பிக்கக்கூடியவரின் சத்தத்தையும் கேட்கட்டும்.தீஇவ 626.1

    கோத்திரப்பிதாக்கள் மற்றும் தீர்க்கதரிசிகளிடமிருந்து மகத் தான வெளிச்சம் பிரகாசித்துள்ளது. தேவ நகரமாகிய சீயோனைக் குறித்து மகிமையான காரியங்கள் பேசப்பட்டுள்ளன. ஆகவே, இன் றும் தம்முடைய பின்னடியார்கள் மூலமாக வெளிச்சம் பிரகாசிக்க வேண்டுமென்று தேவன் திட்டமிட்டுள்ளார். பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள், மெய்ப் பற்றிற்கான பிரகாசமான சாட்சிகளாகத் திகழ்ந்திருக்க, காலம் காலமாக வீசிவரும் ஒளித்திரளால் வெளிச் சம் பெறுவோர், சத்தியத்தின் வல்லமைக்கான அதிமுக்கியச் சாட்சி களாகத் திகழவேண்டாவா? தீர்க்கதரிசனங்களின் மகிமை தங்கள் ஒளியை நம் பாதையில் பிரகாசிக்கின்றன. தேவகுமாரனின் மர ணத்தில், அசலானது சாயலை ஒழியப்பண்ணியது. கிறிஸ்து மரணத் திலிருந்து எழுந்து, உடைந்த கல்லறையின்மேல் நின்று, ‘’நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்’‘ என்றார். யோவான் 11:25. சகல காரியங்களையும் நம் நினைவுக்குக் கொண்டுவரும்படி, தம் ஆவியானவரை அவர் உலகத்திற்கு அனுப்பினார். எழுதப்பட்ட வார்த்தையை, அற்புதமான ஒருவல்லமையால், காலங்கள் நெடுகி லும் அவர் பாதுகாத்தார்.தீஇவ 626.2

    சீர்திருத்தவாதிகளின் கண்டனக் குரல்தான் நமக்குப் புரொட்டஸ் டண்ட் என்ற பெயரைப் பெற்றுத்தந்தது. சுவிசேஷத்தின் ஒளியை உலகிற்கு அருளவே தேவன் தங்களை அழைத்ததாக அந்தச் சீர் திருத்தவாதிகள் நினைத்தார்கள். அதனைச் செய்யும் முயற்சியில், தங்கள் உடைமைகளையும் தங்கள் சுதந்தரத்தையும் தங்கள் ஜீவ னையும் இழந்து போகவும் தயாராயிருந்தார்கள். உபத்திரவத்திற் கும் மரணத்திற்கும் மத்தியில் சுவிசேஷத்தை சமீபத்திலும் தொலை விலும் அறிவித்தார்கள். தேவவார்த்தையை மக்களிடம் கொண்டு சென்றார்கள். உயர்ந்தோர், தாழ்ந்தோர், ஏழை, பணக்காரர், கற் றோர் - கல்லாதோர் எனச் சகல வகுப்பினரும் தாங்களாகவே அதனை ஆர்வத்தோடு படித்தார்கள். மாபெரும் போராட்டத்தின், இறுதி யுத்தத்தில் இருக்கிற நாம், ஆதிகாலச் சீர்திருத்தவாதிகள் தங் களிடம் தேவன் ஒப் படைத்த நம்பிக்கைக்குப் பாத்திரவான்களாக இருந்தது போல, நம்மிடம் தேவன் ஒப்படைத்துள்ள நம்பிக்கைக்கு நாம் பாத்திரவான்களாக இருக்கவேண்டுமல்லவா?தீஇவ 627.1

    ‘ சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாச நாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள். ஜனத்தைக் கூட்டுங்கள், சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள், முதியோரைச்சேருங் கள், பிள்ளைகளைக் கூட்டுங்கள். கர்த்தரின் பணிவிடைக்காரரா கிய ஆசாரியர்கள் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அழுது, ‘’கர்த்தாவே, நீர் உமது ஜனத்தைத் தப்பவிட்டுப் புறஜாதிகள் அவர் களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது சுதந்தரத்தை ஒப்புக்கொடா திரும்” என்பார்களாக’’நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்க மும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார். ஒரு வேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, ஆசீர்வாதத்தைத் தந் தருளுவார்.’ யோவேல் 2:15-17;12-14.தீஇவ 627.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents