Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    37 - பாபிலோனியச் சிறையிருப்பு

    சிதேக்கியாவினுடைய ஆளுகையின் ஒன்பதாம் வருடத்தில், ‘பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து ‘ அந்த நகரை முற்றுகையிட்டார்கள். 2இராஜா 25:1. யூதாவின் நிலை நம்பிக்கை யற்றதுபோல் தோன்றியது. ‘’இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, கர்த்தராகிய நான் என் பட்டயத்தை அதின் உறையிலிருந்து உருவினேன். அது இனி உறைக்குள் திரும்புவதில்லை. அதினால், இருதயங்களெல்லாம் உருகி, கைகளெல்லாம் தளர்ந்து, மனமெல் லாம் தியங்கி, முழங்கால்களெல்லாம் தண்ணீரைப்போல அலை வுண்ணும்.’‘ ‘’என் சினத்தை உன்மேல் ஊற்று வேன்; நான் என் மூர்க்கத்தின் அக்கினியை உன்மேல் ஊதி, மிருக குணமுள்ளவர் களும், அழிக்கிறதற்குத் திறமையுள்ளவர்களுமாகிய மனுஷரின் கையில் உன்னை ஒப்புக்கொடுப்பேன்” என்று தேவன் தாமே எசேக் கியேலின் மூலமாக அறிவித்தார். எசே 21:3, 5-7,31.தீஇவ 452.1

    முற்றுகையிடப்பட்ட அந்த நகரை அங்குச் சென்று காப்பாற்ற எகிப்தியர் பெரிதும் முயன்றனர். அவர்களை வரவிடாமல் பண்ண விரும்பின கல்தேயர்கள், யூதேயாவின் தலைநகரை முற்றுகையிடு வதை சில காலம் கைவிட்டனர். சிதேக்கியாவின் உள்ளத்தில் நம்பிக்கை துளிர்த்தது. எபிரெய தேசத்திற்காக தேவனிடம் ஜெபிக்கு மாறு வேண்டி, எரேமியாவிடம்ஓர் தூதுவனை அவன் அனுப்பினான்.தீஇவ 452.2

    கல்தேயர்கள் மறுபடியும் வந்து நகரத்தை அழிப்பார்களெனும் பயங்கரச் செய்தி ஒன்றைத் தெரிவித்தான் தீர்க்கதரிசி. தேவனிடம் மிருந்து ஏற்கனவே ஆணை பிறந்துவிட்டது; மனந்திருந்தாத தேசத் தார் இனியும் தேவனுடைய நியாயத்தீர்ப்புகளைக் காலந்தாழ்த்த முடியாது. ‘’நீங்கள் மோசம் போகாதிருங்கள்.’‘ ‘’கல்தேயர் போவ தில்லை. உங்களோடே யுத்தம் பண்ணுகிற கல்தேயருடைய சேனை யையெல்லாம் நீங்கள் முறிய அடித்தாலும், மீந்தவர்கள் எல்லாரும் காயம் பட்டவர்களாயிருந்தாலும், அவர்கள் தங்கள் கூடாரங் களிலிருந்து எழும்பி, இந்த நகரத்தை அக்கினியால் சுட்டெரிப்பார் கள்” என்று தம் மக்களை எச்சரித்தார் தேவன். எரே 37:9, 10. யூதா வின் மீதமானவர்கள் அதிக சாதகமான சூழ்நிலைகளில் தாங்கள் கற்றுக்கொள்ள மறுத்த பாடங்களைக் கஷ்டத்தின் மத்தியில் கற்கும் படியாக, சிறைப்பட்டுச் செல்ல வேண்டியிருந்தது. பரிசுத்த கண் காணிப்பாளரின் இந்த ஆணைக்கு மேல் முறையீடு செய்ய இயலா திருந்தது.தீஇவ 453.1

    எருசலேமில் இன்னமும் நீதியாய் வாழ்ந்து வந்தவர்களுக்குத் தேவநோக்கம் தெளிவாக்கப்பட்டிருந்தது. அவர்களில் சிலர் பத்துக் கற்பனைகள் எழுதப்பட்டிருந்த கற்பலகைகள் அடங்கிய உடன் படிக்கைப் பெட்டியைக் கொடியவர்களின் கரங்களில் அகப்படா மல் செய்யத் தீர்மானம் பண்ணினார்கள். அதன்படியே செய்தார்கள். புலம்பலோடும் துக்கிப்போடும் அந்தப் பெட்டியை ஒரு குகையில் இரகசியமாக மறைத்துவைத்தார்கள். இஸ்ரவேல் மற்றும் யூதா மக்களுடைய பாவங்களினிமித்தம் அங்கு அது மறைக்கப்பட வேண்டியதாயிற்று. அதன்பிறகு, ஒருபோதும் அவர்கள் அதனைப் பெறவில்லை. அந்தப் பரிசுத்த பெட்டி இன்னமும் மறைக்கப்பட்டிருக் கிறது. அது மறைக்கப்பட்ட நாள் முதல் அதனை எவரும் கண்டு பிடிக்கவில்லை .தீஇவ 453.2

    தேவனுக்கு ஒரு மெய்யான சாட்சியாக அநேக வருடங்கள் மக்கள் முன் நின்றிருந்தான் எரேமியா. இப்பொழுதும், அந்நகரமா னது அஞ்ஞானிகளின் கரங்களுக்குள் செல்லவிருந்த அவலநிலை ஏற்பட்டிருந்ததால், தன்னுடைய பணி முடிந்ததாகக் கருதிய அவன் அங்கிருந்து செல்ல எத்தனித்தான். ஆனால், கள்ளத்தீர்க்கரிசிகளில் ஒருவனுடைய குமாரன் ஒருவன் அவனைத் தடுத்து நிறுத்தி, எரே மியா பாபிலோனியரைச் சேரப்போவதாகவும், அவர்களுக்கு அடி பணியுமாறு யூதாவின் மனிதரை அவன் அடிக்கடி நிர்பந்தப்படுத் தினதாகவும் கூறினான். அந்தப் பொய்யான குற்றச்சாட்டைத் தீர்க்க தரிசி மறுத்தான். ஆனபோதிலும், ‘பிரபுக்கள் எரேமியாவின்பேரில் கடுங்கோபங்கொண்டு, அவனை அடித்து, காவற்படுத்தினார்கள்’. வசனம் 15.தீஇவ 453.3

    நேபுகாத்நேச்சாரின் படைகள் எகிப்தியரை எதிர்கொள்வதற் காக, தென்திசையில் திரும்பியதும், மக்களுடைய உள்ளங்களிலும் பிரபுக்களின் உள்ளங்களிலும் துளிர்த்த நம்பிக்கை விரைவிலேயே மண்ணோடு மண்ணானது. ‘எகிப்தின் மன்னனான பார்வோனே, நான் உனக்கு விரோதமானவன்’ என்பதே கர்த்தருடைய வார்த்தை யாயிருந்தது. முறிந்த நாணலுக்கு ஒப்பாக எகிப்தின் வல்லமை இருந்தது. அப்பொழுது எகிப்து தேசத்தின் குடிகளெல்லாரும் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்; அவர்கள் இஸ்ரவேல் வம் சத்தாருக்கு நாணற்கோலாயிருந்தார்களே.’ ‘’பாபிலோன் ராஜா வின் புயங்களைப் பெலப்படுத்துவேன்; பார்வோனின் புயங்களோ விழுந்து போம்; என் பட்டயத்தை நான் பாபிலோன் ராஜாவின் கை யில் கொடுக்கும் போதும், அவன் அதை எகிப்து தேசத்தின் மேல் நீட்டும் போதும் நான் கர்த்தரென்று அறிந்துகொள்வார்கள்” என் றார் தேவன். எசேக்கியேல் 29:3; 29:6; 30:25, 26.தீஇவ 454.1

    யூதாவின் பிரபுக்கள் உதவி வேண்டி, வீணாக இன்னமும் எகிப்தை எதிர்பார்த்திருக்கையில், வரும் தீங்கால் கலங்கியிருந்த சிதேக்கியாராஜா, சிறையில் தள்ளப்பட்ட தேவனுடைய தீர்க்கதரிசி குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தான். அநேக நாட்களுக்குப்பிறகு, ராஜா அவனிடத்தில் ரகசியமாக ஆளனுப்பி, ‘’கர்த்தரிடமிருந்து ஏதா வது வார்த்தை வந்திருக்கிறதா?’‘ என்று கேட்டான். எரே 37:17. அதற்கு எரேமியா, ‘’உண்டு, பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக் கொடுக்கப்படுவீர்’‘ என்று பதிலளித்தான்.தீஇவ 454.2

    ’பின்னும் எரேமியா, சிதேக்கியாராஜாவை நோக்கி, “நீங்கள் என்னைக் காவல் வீட்டிலே அடைப்பதற்கு, நான் உமக்கும் உம்மு டைய ஊழியக்காரருக்கும் இந்த ஜனத்துக்கும் விரோதமாக என்ன குற்றஞ் செய்தேன்? பாபிலோன் ராஜா உங்களுக்கும் இந்தத் தேசத் துக்கும் விரோதமாக வருவதில்லையென்று உங்களுக்குத் தீர்க்கதரிச னம் சொன்ன உங்களுடைய தீர்க்கதரிசிகள் எங்கே? இப்போதும், ராஜாவாகிய என் ஆண்டவனே, எனக்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பத்துக்குத் தயை செய்து, என்னைச் சம்பிரதியாகிய யோனத் தானுடைய வீட்டிற்குத் திரும்ப அனுப்பவேண்டாம்: அனுப்பினால் நான் அங்கே செத்துப்போவேன்’‘ என்றான். ‘எரே 37:18-20.தீஇவ 454.3

    அதனால், சிதேக்கியா எரேமியாவைக் காவற்சாலையின் முற்றத்திலே காக்கவும், நகரத்திலே அப்பமிருக்குமட்டும் அப்பஞ் சுடுகிறவர்களின் வீதியிலே தினம் ஒரு அப்பத்தை அவனுக்கு வாங்கிக் கொடுக்கவும் கட்டளையிட்டான்; அப்படியே எரேமியா காவற் சாலையின் முற்றத்தில் இருந்தான். வச. 21.தீஇவ 455.1

    எரேமியாவின் வார்த்தைகளில் வெளிப்படையாக எவ்வித நம்பிக்கையையும் வெளிக்காட்ட ராஜா துணியவில்லை. பயத்தால் தான் அவனிடம் சென்று விபரமறிய தூண்டப்பட்டான். இருந்தா லும், தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டபடி, தேவனுடைய சித்தத்துக் குக்கீழ்ப்படிந்து, தன்னுடைய மக்களின் தவறான அபிப்பிராயங்களை யும், பிரபுக்களின் தவறான அபிப்பிராயங்களையும் எதிர்க்கும் விற்கு அவனுக்குத் துணிவில்லை.தீஇவ 455.2

    பாபிலோனிய ஆட்சிக்குக் கீழ்ப்படியுமாறு, சிறைச்சாலை முற் றத்திலிருந்து தொடர்ந்து புத்தி சொல்லிவந்தான் எரேமியா. அதற்கு எதிர்த்து நிற்பது, நிச்சயமாக மரணத்தை வருவித்துக்கொள்வதா யிருந்தது. இந்த நகரத்திலே தரித்திருக்கிறவன், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளை நோயாலும் சாவான்; கல்தேயரிடத்துக்குப் புறப்பட்டுப்போகிறவனோ உயிரோடிருப்பான்; அவனுடைய பிரா ணன் அவனுக்குக் கிடைத்த கொள்ளையுடைமையைப் போலிருக் கும்; அவன் பிழைப்பானென்பதைக் கர்த்தர் உரைக்கிறார்’ என்பதே யூதாவுக்குக் கொடுக்கப்பட்ட தேவ செய்தியாயிருந்தது. எசே38:1. எரேமியாவின் வார்த்தைகள் தெளிவும் உறுதியுமாக இருந்தன. ‘’இந்த நகரம் பாபிலோன் ராஜாவினுடைய இராணுவத்தின் கை யில் நிச்சயமாக ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் அதைப் பிடிப்பா னென்பதைக் கர்த்தர் உரைக்கிறார்” என்று கர்த்தருடைய நாமத் தினால் துணிவோடு அறிவித்தான் தீர்க்கதரிசி. எரேமியா 38:2,3.தீஇவ 455.3

    கடைசியாக, எரேமியாவின் ஓயாத ஆலோசனைகளால் பிர புக்கள் ஆக்ரோஷமடைந்தார்கள். ஏனெனில், அவற்றிற்குக் கீழ்ப் படியாதிருக்க அவர்கள் உறுதிகொண்டிருந்தார்கள். எனவே, தீர்க்க தரிசியானவன் தேசத்தின் எதிரி’ என்றும், ‘அவனுடைய வார்த்தை களே மக்களின் கரங்களைத் திடனற்றுப்போகப்பண்ணி, அவர் களுக்கு அவல நிலையைக் கொண்டுவந்தன’ என்றும், ஆகையால் அவன் கொல்லப்பட வேண்டும்’ என்றும் ராஜாவுக்கு முன்பாக கடும் அமளிபண்ணினார்கள்.தீஇவ 455.4

    அக்குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பது கோழை ராஜா வுக்குத் தெரியும்; ஆனால் தேசத்தில் செல்வாக்குமிக்க உயர் பதவி யிலிருந்தோரைத் திருப்திப்படுத்த, அவர்களின் பொய்களை நம்பி னவன்போல, அவர்களின் விருப்பத்தின்படியே எரேமியாவை அவர்களுடைய கரங்களில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் எரேமி யாவைப் பிடித்து, அவனைக் காவற்சாலையின் முற்றதிலிருந்த அம்மெலேக்கின் குமாரனாகிய மல்கியாவினுடைய துரவிலே போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதிலே இறக்கி விட்டார்கள்; அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையா யிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான். வச 6. ஆனால், தேவன் அவனுக்குச் சிநேகிதர்களை எழும்பச் செய்தார். அவர்கள் அவனுடைய சார்பாக ராஜாவினிடத்தில் வேண்டி, அவனை மீண்டும் காவற்சாலையின் முற்றத்திற்குக் கொண்டு வந்தார்கள்.தீஇவ 456.1

    இராஜா மீண்டும் ஒருமுறை எரேமியாவை இரகசியமாக அழைத்தனுப்பி, எருசலேமைக்குறித்த தேவ நோக்கத்தை உள்ள படி சொல்லக் கட்டளையிட்டான். எரேமியா அதற்குப் பதிலாக, ‘’அதை உமக்கு அறிவித்தால் என்னை நிச்சயமாய்க் கொலை செய் வீரல்லவா? நான் உமக்கு ஆலோசனை சொன்னாலும், என் சொல் லைக் கேட்கமாட்டீர்” என்றான். தீர்க்கதரிசியோடு இராஜா ஓர் இரக சிய உடன்படிக்கை செய்து, ‘’நான் உன்னைக் கொல்லாமலும், உன் பிராணனை வாங்கத் தேடுகிற இந்த மனுஷர்கையில் உன்னை ஒப் புக்கொடாமலும் இருப்பேன் என்பதை, நமக்கு இந்த ஆத்துமாவை உண்டு பண்ணின கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லு கிறேன்” என்று வாக்களித்தான். வச 15, 16.தீஇவ 456.2

    யேகோவாவின் எச்சரிப்புகளுக்குச் செவிகொடுக்க சித்தங் கொள்ளவும், அதன் மூலம் தேசத்திலும் நகரத்திலும் சம்பவித்துக் கொண்டிருந்த நியாயத்தீர்ப்புகளில் இரக்கம் காண்பிக்கப்படசெய்ய வும் அப்போதும் ராஜாவுக்குத் தருணமிருந்தது. ‘ நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களண்டைக்குப் புறப்பட்டுப் போவீரானால், உம் முடைய ஆத்துமா உயிரோடிருக்கும்; இந்தப் பட்டணம் அக்கினி யால் சுட்டெரிக்கப்படுவதில்லை; நீரும் உம்முடைய குடும்பமும் உயி ரோடிருப்பீர்கள். நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடத்திற்குப் புறப் பட்டுப் போகாவிட்டால், அப்பொழுது இந்த நகரம் கல்தேயர் கையில் ஒப்புக்கொடுக்கப்படும், அவர்கள் இதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்; நீர் அவர்களுக்குத் தப்பிப்போவதில்லை’ என் பதே ராஜாவுக்குக் கொடுக்கப்பட்ட செய்தியாகும்.தீஇவ 456.3

    அதற்கு ராஜா, ‘’கல்தேயர் தங்களைச் சேர்ந்துபோன யூதரின் கையிலே என்னை பரியாசம் பண்ண ஒப்புக்கொடுப்பார்களோ என்று நான் ஐயப்படுகிறேன்’‘ என்றான். அதற்கு எரேமியா, ‘’உம்மை ஒப்புக்கொடார்கள்; நான் உம்மிடத்தில் சொல்லுகிற கர்த் தருடைய வார்த்தைக்குச் செவிகொடும், அப்பொழுது உமக்கு நன் மையாயிருக்கும், உம்முடைய ஆத்துமா பிழைக்கும்” என்றான். வச.17- 20தீஇவ 457.1

    தம்முடைய நீதியான நிபந்தனைகளுக்குக் கீழ்ப்படிய தெரிந்து கொள்கிறவர்கள் மேல் இரக்கங்காட்ட தாம் சித்தங் கொண்டிருந்த தைக் கடைசிநேரம் மட்டும் தேவன் தெளிவுபடுத்தினார். அதற்குக் கீழ்ப்படிய ராஜாதீர்மானித்திருந்தால், ஜனங்களுடைய உயிர் தப்பு விக்கப்பட்டிருக்கும்; நகரமும் எரிந்து போகாமல் பாதுகாக்கப்பட்ட டிருக்கும். ஆனால் திரும்பிவர முடியாத அளவிற்கு தான் தூரம் சென்றுவிட்டதாக அவன் நினைத்தான். அவன் யூதர்களுக்குப் பயந் தான்; அவர்கள் பரியாசம் பண்ணுவார்களோ எனப் பயந்தான்; தன் உயிருக்கும் பயந்தான். அநேக வருடங்கள் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்ததால், எரேமியா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டபடி, கர்த்தருடைய வார்த்தையை நான் ஏற்றுக்கொண்டேன்; இத்தனை எச்சரிப்புகளுக்கு மத்தியில் எதிரிகளிடம் யுத்தத்திற்குச் செல்ல நான் தயாரில்லை’ என்று தன் ஜனங்களிடம் சொல்வதை மிக இழிவாகக் கருதினான்சிதேக்கியா. தீஇவ 457.2

    சிதேக்கியா தன்னையும் தன் மக்களையும் காப்பாற்றிக்கொள் ளுமாறு கண்ணீரோடு வேண்டினான் எரேமியா. ‘தேவனுடைய ஆலோசனைக்கு அவன் செவிகொடுக்காத பட்சத்தில், அவன் உயிரோடு தப்பமுடியாது’ என்றும், அவனுடைய உடைமைகள் யாவும் பாபிலோனியரின் கரங்களில் விழுந்துவிடும்’ என்றும் ஆத் தும வியாகுலத்தோடு அவன் வலியுறுத்தினான். ஆனால், தவறான பாதையில் சென்றுவிட்டான்ராஜா; அதிலிருந்து அவனால் பின்வாங்க முடியவில்லை. தங்களுடைய விருப்பங்களுக்கு அவன் உடனே இணங்கிவருவதால் அவன் பெலவீனம் குறித்துக் கேலி செய்தவர் கள் இருந்தார்கள். அவர்களை அவன் உண்மையிலேயே வெறுத் தான். இருந்தாலும், அவர்களுடைய ஆலோசனையையும் கள்ளத் தீர்க்கதரிசிகளின் ஆலோசனையையும் பின்பற்ற அவன் தீர்மானித் தான். ஓர் அரசனாக தனக்கிருந்த மேலான உரிமைகளை இழந்து, பிறர் அபிப்பிராயங்களுக்கு அடிமையானான். தீமை செய்ய வேண்டு மென்றஉறுதியான நோக்கம் எதுவும் அவனிடம் இல்லாதபோதிலும், நீதிக்காக உறுதியோடு நிற்கவும் அவன் தீர்மானிக்காதிருந்தான். எரேமியாவால் சொல்லப்பட்ட ஆலோசனையின் முக்கியத்துவத் தால் அவன் உணர்த்தப்பட்டாலும், அதற்குக் கீழ்ப்படியுமளவிற்கு அவனிடம் ஒழுக்கத்திறன் இல்லை . அதன் விளைவாக, தவறான திசையிலேயே தொடர்ந்து சென்று கொண்டிருந்தான்.தீஇவ 457.3

    தான் எரேமியாவோடு ஆலோசனைபண்ணினது தன் அரசவை யினருக்கும் மக்களுக்கும் தெரிந்துவிடக்கூடாது என்னுமளவிற்கு பெலவீனனாயிருந்தான் ராஜா. இப்படியாக, மனிதரைக் குறித்த பயம் அவன் உள்ளத்தில் முற்றிலும் நிறைந்திருந்தது. தீர்க்கதரிசியின் வார்த்தைகள் ஏற்கனவே பாதி நிறைவேறியிருந்த நிலையில் அவற்றை தான் நம்புவதாக சிதேக்கியா தைரியத்தோடு அறிவித்திருப்பானா னால், எத்தனை பெரும் அழிவு தவிர்க்கப்பட்டிருக்கும்! ‘நான் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, கொடிய அழிவிலிருந்து நகரத்தைக் காப்பாற்றப்போகிறேன். மனித தயவுக்காகவோ, மனிதர் குறித்த பயத்தின் நிமித்தமோ தேவகட்டளைகளை அவமதிக்க நான் துணிவ தில்லை. நான் சத்தியத்தை நேசிக்கிறேன். பாவத்தை வெறுக்கிறேன். இஸ்ரவேலின் மகத்துவருடைய ஆலோசனையைப் பின்பற்றுவேன்’ என்று அவன் சொல்லியிருக்கவேண்டும்.தீஇவ 458.1

    அப்பொழுது, அவனுடைய மனதிடத்தை மக்கள் மதித்திருப் பார்கள்; விசுவாசத்திற்கும் அவிசுவாசத்திற்கும் இடையே தடு மாறிக் கொண்டிருந்தவர்கள் நீதிக்காக உறுதியோடு நின்றிருந் திருப்பார்கள். பயமின்மையும் நீதியும் கொண்ட அத்தகைய மார்க் கம், அவன் குடிமக்கள் விசுவாசத்தன்மையோடும் வியப்போடும் அவனைக் காணும் படியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். போதுமான ஆதரவு அவனுக்குக் கிடைத்திருக்கும்; படுகொலையா லும் பஞ்சத்தாலும் தீவிபத்தாலும் ஏற்படவிருந்த கடும் வேதனையி லிருந்து யூதா பாதுகாக்கப்பட்டிருக்கும்.தீஇவ 458.2

    சிதேக்கியாவின் பெலவீனம் ஒரு பாவம். அதற்கு அவன் பயங்கர விலை கொடுக்கவேண்டியிருந்தது. தடுக்க இயலா பனிப் பாறைச் சரிவு போல, பெருக்கெடுத்து வந்த எதிரிகள் நகரை நாசம் பண்ணினார்கள். குழப்பம் கொண்ட எபிரெய படைகள் துரத்தியடிக் கப்பட்டன. தேசம் பிடிபட்டது. சிதேக்கியா சிறைப்படுத்தப்பட்டான்; அவர்குமாரர்கள் அவனுடைய கண்களுக்கு முன்பாக வெட்டிக்கொல் லப்பட்டனர். எருசலேமிலிருந்து ஒரு சிறைக்கைதியாக ராஜா கொண்டு செல்லப்பட்டான். அவனுடைய கண்கள் பிடுங்கப்பட்டன; பாபிலோனில் போய்ச் சேர்ந்த பிறகு கொடுமையான மரணத்தைச் சந்தித்தான். நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாக சீயோன் மலை உச்சியை அலங்கரித்துக் கொண்டிருந்த அழகிய தேவாலயமும் கல்தேயரிடமிருந்து தப்பவில்லை. அவர்கள் தேவனுடைய ஆல் யத்தைத் தீக்கொளுத்தி, எருசலேமின் அலங்கத்தை இடித்து, அதின் மாளிகைகளை எல்லாம் அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த திவ்வியமான பணிமுட்டுகளை யெல்லாம் அழித்தார்கள். ‘2 நாளா 36:19.தீஇவ 459.1

    இறுதியாக எருசலேமை நேபுகாத்நேச்சார் அழித்த சமயத்தில், அந்த நீண்டகால முற்றுகையிலிருந்து தப்பிக்க முயன்ற அநேகர், பட்டயத்தால் மடிந்தார்கள். பின்னும் அங்கு மீதமாக இருந்தவர் களில் சிலர் குறிப்பாக, அரசவைப் பிரபுக்களும் அதிகாரிகளும் ஆசாரியர்களும் பாபிலோனுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, சதி காரர்கள் என தீர்க்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். மற்றவர் களோ, ‘கர்த்தர் எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறும் படிக்கு, பெர்சியா ராஜ்ய பாரம் ஸ்தாபிக்கப்படு மட்டும் ‘ நேபுகாத்நேச்சாருக்கும் அவருடைய குமாரருக்கும் அடிமைகளாக வாழ, சிறைப்பிடிக்கப்பட்டு, பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வச 20, 21.தீஇவ 459.2

    ’பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் காவற்சேனாதி பதியாகிய நேபுசராதானை நோக்கி, ‘நீ அவனை அழைப்பித்து அவனுக்கு ஒரு பொல்லாப்பும் செய்யாமல், அவனைப் பத்திர மாய்ப் பார்த்து, அவன் உன்னோடே சொல்லுகிறபடியெல்லாம் அவனை நடத்து’‘ என்று கட்டளை கொடுத்தான்’ என்று எரேமி யாவை நடத்தவேண்டிய விதம் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. எரே 39:11,12.தீஇவ 460.1

    பாபிலோனிய அதிகாரிகளால் சிறையிலிருந்து விடுவிக்கப் பட்ட தீர்க்கதரிசி, கல்தேயரால் ‘திராட்சத் தோட்டக்காரராகவும் பயிரிடுங் குடிகளாகவும்’ விடப்பட்டிருந்த ‘தேசத்தாரில் ஏழை களான சிலரோடு ‘ தன் வாழ்நாளைக் கழிக்கத் தெரிந்துகொண்டான். அவர்கள்மேல் அதிகாரியாக கெதலியா என்பவனைப் பாபிலோ னியர்கள் நியமித்தார்கள். ஒரு சில மாதங்களே சென்றிருந்தன. மக்கள்மேல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தவன் வஞ்சகமாக அதற்குள் கொலை செய்யப்பட்டான். அதிக உபத்திரவங்களைக் கடந்து வந்த அந்த ஏழை மக்கள் இறுதியாக எகிப்தில் தஞ்சம் புகுமாறு தங்கள் தலைவர்களால் வற்புறுத்தப்பட்டனர். இந்தத் திட்டத்திற்கு எதிராக எரேமியா தன் சத்தத்தை உயர்த்தினான். ‘எகிப்திலே தங்கும்படிக்கு அங்கே போகாதிருங்கள்’ என்று வேண் டிக் கொண்டான். ஆனாலும் தேவனுடைய அந்த ஆலோசனைக்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை. மீதியான யூதரெல்லாரும், புரு ஷரும், ஸ்திரீகளும், குழந்தைகளும்’ எகிப்திற்குப் புறப்பட்டார்கள். அவர்கள் கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாமல், தக்பானேஸ் மட்டும் போய்ச் சேர்ந்தார்கள். ‘எரே 43:2, 5-7.தீஇவ 460.2

    எகிப்திற்குப் போக புறப்பட்டு, நேபுகாத்நேச்சாருக்கு விரோத மாகக் கலகம் செய்த மீதமானவர்களுக்கு எதிராக அவகள் அழி வார்களென்று தீர்க்கதரிசனமாக உரைத்தான் எரேமியா. ஆனால், அவர்கள் தங்கள் மதியீனத்தைவிட்டு மனந்திரும்பி, எருசலேமிற் குத் திரும்ப ஆயத்தமாயிருந்தால் அவர்களுக்கு மன்னிப்பு வழங் கப்படுவதற்கான வாக்குத்தத்தங்களும் அத்தீர்க்க தரிசனத்தில் கொடுக்கப்பட்டிருந்தன. தம்முடைய ஆலோசனையைவிட்டு, எகிப் தின் சிலைவழிபாட்டின் மருட்சியான ஈர்ப்புகளுக்குத் திரும்பினவர் களை தேவனால் தப்புவிக்க இயலாமல் இருந்தபோதிலும், தமக்கு உண்மையோடும் விசுவாசத்தோடும் திகழ்கிறவர்கள் மேல் இரக்கம் காட்ட அவர் விரும்பினார். ‘ஆனாலும் பட்டயத்துக்கு தப்புகிறவர்கள் எகிப்து தேசத்திலிருந்து யூதா தேசத்துக்குக் கொஞ் சம்பேராய்த் திரும்புவார்கள்; அப்படியே எகிப்து தேசத்திலே தங்கி யிருக்க வந்த யூதாவில் மீதியான அனைவரும் அக்காலத்திலே தங் களுடைய வார்த்தையோ, என் வார்த்தையோ, யாருடைய வார்த்தை மெய்ப்படும் என்று அறிவார்கள். ‘எரே 44:28.தீஇவ 461.1

    உலகிற்கு ஆவிக்குரிய வெளிச்சமாக இருக்கவேண்டியவர் களின் கொடிய மாறுபாட்டின் நிமித்தம் தீர்க்கதரிசி அடைந்த வேத னையும், சீயோனின் நிலையை நினைத்தும், பாபிலோனுக்குச் சிறை யாக்கிக் கொண்டுசெல்லப்பட்டவர்கள் குறித்தும் அவர் கொண்ட வேதனையும் அவர் எழுதிவைத்துள்ள புலம்பல்களில் வெளிப் படுத்தப்பட்டுள்ளன; யேகோவாவின் ஆலோசனைகளைவிட்டு மனித ஞானத்தை நாடுவதின் மதியீனத்திற்கு இது ஒரு நினைவுச் சின்னமாக இருக்கிறது. அங்கு ஏற்பட்ட அழிவின் மத்தியிலும், ‘நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே’ என்று எரேமியாவால் சொல்லமுடிந்தது. ‘நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்’ என்பதே அவருடைய ஓயாத ஜெபமாயிருந்தது. புலம்பல் 3:22, 40. யூதா வானது தேசங்களின் ராஜ்யமாக இன்னமும் விளங்கி வருகையில், ‘யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ? சீயோன் உம்முடைய ஆத்துமா வுக்கு அரோசிகமாயிற்றோ ?’ என்று அவர் தன் தேவனிடம் கேட் டார். ‘உம்முடைய நாமத்தினிமித்தம் எங்களை அருவருக்காதிரும்’ என்று வேண்டிக்கொள்ளவும் துணிந்தான். எரே 14:19, 21. குழப் பத்தைச் சரி செய்யவும், தம்முடைய குணாதிசயங்களான நீதியை யும் அன்பையும் பூமியின் தேசங்களுக்கும் சர்வலோகத்திற்கும் விவரித்துக்காட்டவும் தேவன் கொண்டுள்ள நித்திய நோக்கத்தைத் தீர்க்கதரிசி முற்றிலுமாக விசுவாசித்தான். பாவத்தைவிட்டு நீதிக் குத் திரும்பக்கூடியவர்களுக்காக அவன் நம்பிக்கையோடு மன்றாட அதுவே வழிவகுத்தது.தீஇவ 461.2

    இப்பொழுதும் சீயோன் முற்றிலுமாக அழிக்கப்பட்டது; தேவ மக்கள் தங்கள் சிறையிருப்பில் சிக்கியிருந்தனர். அதைப்பற்றிய வேதனையில் நிறைந்தவனாய்: ஐயோ! ஜனம் பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே! விதவைக்கு ஒப்பானாளே! ஜாதிகளில் பெரியவளும் சீமைகளில் நாயகியுமாயிருந்தவள் கப் பங்கட்டுகிறவளானாளே! இராக்காலத்திலே அழுதுக்கொண்டிருக் கிறாள். அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது; அவளுடைய நேசர் எல்லாருக்குள்ளும் அவளைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை ; அவளுடைய சிநேகிதர் எல்லாரும் அவளுக் குத் துரோகிகளும் சத்துருக்களுமானார்கள்.தீஇவ 462.1

    ’யூதா ஜனங்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமை வேலை செய்யவும் சிறைப்பட்டுப்போனார்கள். அவள் புறஜாதி களுக்குள்ளே தங்குகிறாள். இளைப்பாறுதல் அடையாள்; அவளைத் துன்பப்படுத்துகிற யாவரும் அவளை இடுக்கமான இடங்களிலே தொடர்ந்து பிடித்தார்கள். பண்டிகைக்கு வருவார் இல்லாததினால், சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது; அவள் வாசல்கள் எல்லாம் பாழாய்க்கிடக்கிறது; அவள் ஆசாரியர்கள் தவிக்கிறார் கள்; அவள் கன்னிகைகள் சஞ்சலப்படுகிறார்கள்; அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது. அவள் சத்துருக்கள் தலைமையானார் கள். அவள் பகைஞர் சுகித்திருக்கிறார்கள்; அவளுடைய திரளான பாதகங்களின் நிமித்தம் கர்த்தர் அவளைச் சஞ்சலப்படுத்தினார்; அவள் பிள்ளைகள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனார் கள்.’தீஇவ 462.2

    ’ஐயோ! ஆண்டவர் தமது கோபத்தில் சீயோன் குமாரத்தியை மந்தாரத்தினால் மூடினார்; அவர் தமது கோபத்தின் நாளிலே தமது பாதபீடத்தை நினையாமல் இஸ்ரவேலின் மகிமையை வானத்தி லிருந்து தரையிலே விழத்தள்ளினார். ஆண்டவர் தப்பவிடாமல் யாக்கோபின் வாசஸ்தலங்களையெல்லாம் விழுங்கினார்; அவர் யூதா குமாரத்தியின் அரண்களையெல்லாம் தமது சினத்திலே இடித்து, தரையோடே தரையாக்கிப்போட்டார்; ராஜ்யத்தையும் அதின் பிரபுக்களையும் பரிசுத்தக் குலைச்சலாக்கினார். அவர் தமது உக்கிரகோபத்திலே இஸ்ரவேலின் கொம்பு முழுவதையும் வெட்டிப் போட்டார்; சத்துருவுக்கு முன்பாக அவர் தமது வலதுகரத்தை பின்னாகத் திருப்பி, சுற்றிலும் இருப்பதைப் பட்சிக்கிற அக்கினி ஜுவாலையைப்போல் யாக்கோபுக்கு விரோதமாக எரிந்தார். பகைஞனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்; சத்துருவைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டி நின்று, கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப் போட்டார்; சீயோன் குமாரத்தியின் கூடாரத்திலே தம்முடைய உக்கிரத்தை அக்கினியைப்போல் சொரியப்பண்ணினார்.’தீஇவ 462.3

    ’’எருசலேம் குமாரத்தியே, நான் உனக்குச் சாட்சியாக என் னத்தைச் சொல்லுவேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? சீயோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நான் உன்னைத் தேற்றும்படிக்கு உன்னை எதற்கு நிகர் சொல்லுவேன்? உன் காயம் சமுத்திரத்தைப் போல் பெரிதாயிருக்கிறதே, உன்னைக் குணமாக்குகிறவன் யார்?தீஇவ 463.1

    ’’கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்; எங் கள் நிந்தையை நோக்கிப்பாரும். எங்கள் சுதந்தரம் அந்நியர் வச மாகவும், எங்கள் வீடுகள் புறத்தேசத்தார்வசமாகவும் தாண்டிப் போயின. திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை; எங்கள் தாய் கள் விதவைகளைப் போல இருக்கிறார்கள். எங்கள் பிதாக்கள் பாவஞ் செய்து மாண்டு போனார்கள்; நாங்கள் அவர்களுடைய அக் கிரமங்களைச் சுமக்கிறோம். அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்; எங்களை அவர்கள் கையிலிருந்து விடுவிப்பாரில்லை. அதினால் எங்கள் இருதயம் பலட்சயமாயிற்று; அதினால் எங்கள் கண்கள் இருண்டுபோயின.’‘தீஇவ 463.2

    ’’கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும். தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நெடுங்காலமாக எங்களைக் கை விட்டிருப்பதென்ன? கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக் கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; பூர்வ காலத்திலிருந்தது போல, எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்” என்றான் தீர்க்க தரிசி. புலம்ப ல் 1:1-5; 2:1-4, 13; 5:1-3, 7, 8, 17.தீஇவ 463.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents