Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    57 - சீர்திருத்தம்

    தேவ பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதாக வெளிப்படையாகவும் உண்மையாகவும் யூதா மனிதர் வாக்குப்பண்ணினார்கள். ஆனால், எஸ்றாவும் நெகேமியாவும் ஏற்படுத்தின செல்வாக்கு சில காலம் இல்லாதிருந்தபோது அநேகர் தேவனைவிட்டுப் பின்வாங்கினார் கள். நெகேமியா மீண்டும் பெர்சியாவிற்குச் சென்றிருந்தான். எரு சலேமில் அவன் இல்லாதிருந்தபோது, தீமை மீண்டும் நுழைந்தது; தேசத்தை மாறுபாடுக்குள்ளாக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது. சிலை வழிபாட்டுக்காரர்கள் நகரத்திற்குள் காலூன்றினதுமட்டுமல்லாமல், தங்கள் வருகையால் ஆலயப் பிராகாரங்களைத் தீட்டுப்படுத்தி னார்கள்.தீஇவ 669.1

    கலப்புத் திருமணத்தின் மூலம், இஸ்ரவேலின் கொடிய எதிரி யான அம்மோனியனாகிய தொபியாவுக்கும், பிரதான ஆசாரிய னாகிய எலியாசிப்புக்கும் இடைய ஓர் உறவு ஏற்பட்டிருந்தது. பரி சுத்தமற்ற இந்தச் சம்பந்தத்தின் விளைவாக, ஆலயத்தைச் சேர்ந்த ஓர் அறையில் தொபியாதங்கிக்கொள்ளஎலியாசிப் அனுமதித்தான். அதுவரைக்கும் அந்த அறை ஜனங்களுடைய காணிக்கைகளையும் தசமபாகங்களையும் வைக்கப் பயன்பட்டு வந்தது. தீஇவ 669.2

    இஸ்ரவேலர்மேல் அம்மோனியரும் மோவாபியரும் கொண் டிருந்த கடூரம் மற்றும் வஞ்சகத்தின் நிமித்தம் தம் ஜனங்களின் சபை யிலிருந்து அவர்களை என்றென்றுமாக ஒதுக்கவேண்டுமென்று மோசேயின் மூலம் தேவன் கட்டளையிட்டிருந்தார். உபா 23:3-6ஐப் பார்க்கவும். இந்த வார்த்தைக்கு மாறாக, தடைசெய்யப்பட்ட ஓர் இனத்தைச் சேர்ந்தவனுக்கு இடமுண்டாக்கும்படி, தேவாலய அறையில் சேமிக்கப்பட்டிருந்த காணிக்கைகளை வெளியே எறிந் தான் பிரதான ஆசாரியன் . தேவனுக்கும் அவருடைய சத்தியத்திற் கும் சத்துருவான் அவனுக்கு அப்படியொரு சிலாக்கியத்தை வழங் கினதைக் காட்டிலும் தேவனுக்கு அதிக அவமதிப்பை ஏற்படுத்தி னது வேறெதுவும் இருக்கமுடியாது.தீஇவ 670.1

    பெர்சியாவிலிருந்த திரும்பினதும், துணிவான இந்தத் தெய்வ நிந்தனை குறித்து அறிந்தார் நெகேமியா. உள்ளுக்குள் ஊடுருவின் வனை வெளியேற்றத் தக்க நடவடிக்கை எடுத்தான். ‘அதினால் நான் மிகவும் மனமடிவாகி, தொபியாவின் வீட்டுத்தட்டுமுட்டுகளை யெல்லாம் அந்த அறையிலிருந்து வெளியே எறிந்துவிட்டேன். பின்பு நான் அறைவீடுகளைச் சுத்திகரிக்கச் சொல்லி, தேவனுடைய ஆலயப்பணிமுட்டுகளையும் காணிக்கைகளையும் சாம்பிராணி களையும் அங்கே திரும்பக் கொண்டுவந்து வைத்தேன்” என்று அவன் சொன்னான்.தீஇவ 670.2

    ஆலயம் தெய்வ நிந்தனைக்குள்ளானது மாத்திரமல்ல, காணிக் கைகளும் தவறாகப் பயன்படுத்தப்பட்டன. மக்கள் தாராளமாகக் கொடுக்கத் தயங்குவதற்கு இது காரணமாயிற்று. ஆர்வமும்வைராக் கியமும் குறைந்தது ; தசமபாகங்களைச் செலுத்த மனதில்லாமல் போனது. தேவாலயப் பொக்கிஷ சாலைகளில் தட்டுப்பாடு ஏற்பட் டது; ஆலய ஆராதனைப் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்த அநேக பாட கர்களும் மற்றவர்களும், போதுமான வாழ்வாதாரம் கிடைக்காத தால், தேவபணியை விட்டுவிட்டு வேறு வேலை தேடிச் சென்றார்கள்.தீஇவ 670.3

    இந்தச் சீர்கேடுகளைச் சீராக்கும் பணியில் இறங்கினான் நெகே மியா. தேவாலய பணியிலிருந்து விலகினவர்களை அவன் மீண்டும் சேர்த்து, ‘’அவரவர் நிலையில் அவர்களை வைத்தான். இதனால் மக்களுக்கு நம்பிக்கைப் பிறந்தது; யூதர் எல்லாரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளில் தசமபாகத்தைக் கொண்டு வந்தார்கள். ‘’உண்மையுள்ளவர்கள்” என்று எண்ணப்பட்டவர்கள் ‘’பொக்கிஷ அறைகளின்மேல் விசாரிப்புக்காரராக வைக்கப்பட் டார்கள். ‘’தங்கள் சகோதரருக்கு பங்கிடுகிறவேலை அவர்களுக்கு ஒப்புவிக்கப்பட்டது’’.தீஇவ 670.4

    இஸ்ரவேலரைப் பிரதேசத்தாரிடமிருந்து மெய்தேவனைத் தொழுகிறவர்களெனப் பிரித்துக்காட்டியது ஓய்வுநாள்தான். சிலை வழிபாட்டுக்காரரோடு சம்பந்தங்கலந்ததின் மற்றுமொரு விளை வாக அதற்கும் அவமதிப்பை ஏற்படுத்தினார்கள். சுற்றிலுமுள்ள பகுதிகளிலிருந்த யூதரல்லாத வியாபாரிகளும் வர்த்தகர்களும் எருசலேமிற்குள் வந்து, ஓய்வுநாளில் வர்த்தகத்தில் ஈடுபடுமாறு இஸ்ரவேலரில் அநேகரைத் தூண்டிவிட்டார்கள். நியதியைப் பலி கொடுக்க இணங்காத சிலர் இருக்கத்தான் செய்தார்கள்; ஆனால், மற்றவர்களோமீறுதல் செய்து, அதிக பயபக்திக்குரிய கட்டளையை அவமதிக்கும் முயற்சியில், அஞ்ஞானிகளோடு இணைந்தார்கள். ஓய்வுநாளை வெளிப்படையாகவே மீற அநேகர் தைரியங்கொண் டார்கள். அந்த நாட்களில் நான் யூதாவிலே ஓய்வுநாளில் சிலர் ஆலைகளை மிதிக்கிறதையும், சிலர்தானியப் பொதிகளைக் கழுதை கள்மேல் ஏற்றிக்கொண்டு வருகிறதையும், திராட்சரசம், திராட்சப் பழம், அத்திப்பழம் முதலானவைகளின் பற்பல சுமைகளை ஓய்வு நாளிலே எருசலேமுக்குக் கொண்டுவருகிறதையும் கண்டேன். மீனையும் சகலவித சரக்குகளையும் கொண்டுவந்து, ஓய்வுநாளிலே யூதாபுத்திரருக்கும் எருசலேமில் இருக்கிறவர்களுக்கும் விற்கிற சில தீரியரும் உள்ளே குடியிருந்தார்கள்” என்று எழுதுகிறான் நெகேமியா.தீஇவ 671.1

    அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இத்தகைய காரியங்களை எல்லாம் தவிர்த்திருக்கலாம்; ஆனால், தங்கள் சுய நலன்களைப் பெருக்குவதில் மாத்திரமே அக்கறை கொண்டதால், தேவபயமற்றோருக்குத்தயவுகாட்ட ஏதுவானார்கள். கடமையைப் புறக்கணித்ததின் நிமித்தம் அவர்களைத் தயக்கமின்றிகடிந்துகொண் டான் நெகேமியா. ‘’நீங்கள் ஓய்வு நாளைப் பரிசுத்த குலைச்சலாக் குகிற இந்தப் பொல்லாத செய்கை என்ன?’ என்று கண்டிப்புடன் கேட்டான். ‘’உங்கள் பிதாக்கள் இப்படிச் செய்ததினாலல்லவா, நமது தேவன் நம்மேலும் இந்த நகரத்தின் மேலும் இந்தத் தீங்கை யெல்லாம் வரப்பண்ணினார்; நீங்களோவென்றால் ஓய்வு நாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறதினால், இஸ்ரவேலின் மேலிருக்கிற உக்கிரத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்கள்’‘ என்று கண்டிப்புடன் கேட்டான். ஆகையால், ஓய்வுநாளுக்கு முன்னே எருசலேமின் பட்டணவாசலில், மாலை மயங்கும்போது கதவுகளைப் பூட்டவும்’‘ ஓய்வு நாள் முடியுமட்டும் அவைகளைத் திறவாதிருக்கவும் கட்ட ளையிட்டான். தன் கட்டளைகளை அமுல்படுத்த, நியாயாதிபதி களால் நியமிக்கப்பட இருந்தவர்களைக் காட்டிலும், தன்னுடைய வேலைக்காரரில் நம்பிக்கை வைத்து, அவர்களை வாசலண்டை யிலே நிறுத்தினான்.தீஇவ 671.2

    அவ்வாறு செய்ய மனதில்லாதிருந்த, ‘’வர்த்தகரும், சகலவித சரக்குகளை விற்கிறவர்களும், இரண்டொருதரம் எருசலேமுக்குப் புறம்பே இராத்திங்கினார்கள். அதன் மூலம், நகரவாசிகளிடம் அல் லது தேசத்தின் ஜனங்களிடம் வியாபாரம் பண்ண வாய்ப்பு கிடைக்கு மென நம்பினார்கள். அவ்வாறு தொடர்ந்து செய்தால் அவர்கள் தண்டிக்கப்படக்கூடுமென நெகேமியா எச்சரித்தான். நீங்கள் அலங் கத்தண்டையிலே இராத்தங்குகிறது என்ன? நீங்கள் மறுபடியும் இப்படிச் செய்தால், உங்கள் மேல் கைபோடுவேன்’‘ என்று அவர் களோடே சொன்னார். அதுமுதல் அவர்கள் ஓய்வு நாளில் வரா திருந்தார்கள்’’. பொதுமக்களைவிட லேவியர்கள் அதிக மரியாதை யோடு நடத்தப்படக்கூடும் என்பதால், வாசல்களைக் காவல் காக் கும்படியும் அவர்களுக்குக் கட்டளையிட்டான். மேலும், தேவ பணியில் அவர்களுக்கிருந்த பிணைப்பால், அவருடைய பிரமா ணத்திற்கு மக்களைக் கீழ்ப்படியச் செய்வதில் அவர்கள் அதிக ஆர்வங் காட்டுவார்கள் என்று அவன் எதிர்பார்த்ததிலும் அர்த்தமிருந்தது.தீஇவ 672.1

    சிலைவழிபாட்டுக்காரரோடு நடந்த கலப்புத்திருமணம் போன்ற தொடர்புகள் மூலம் இஸ்ரவேலை மீண்டும் அச்சுறுத்தின ஆபத் திற்கு, தன் கவனத்தைத் திரும்பினார். ‘’அஸ்தோத், அம்மோன், மோவாப் ஜாதிகளான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்ட சில யூதரை யும் அந்த நாட்களில் கண்டேன். அவர்கள் பிள்ளைகள் பேசின பேச்சில் பாதி அஸ்தோத் பாஷையாயிருந்தது; இவர்கள் அந்தந்த ஜாதிகளின் பாஷையைத் தவிர, யூதபாஷையைத் திட்டமாய் அறி யாதிருந்தார்கள்.’‘தீஇவ 673.1

    பிரமாணத்திற்குப் புறம்பான இத்தகைய சம்பந்தங்கள் இஸ்ர வேலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தன. அவ்வாறு சம்பந் தம் செய்தவர்களில் சிலர் அதிகாரம் படைத்தவர்களாய் இருந்தார் கள்; அவர்களை ஒரு சிறந்த முன்மாதிரியாகவும் ஆலோசகர்களா கவும் கருத மக்களுக்கு உரிமையிருந்தது. அந்தத் தீமை தொடர அனு மதிக்கப்பட்டால், தேசத்திற்கு உண்டாகும் அழிவை முன்னறிந்த நெகேமியா, அவ்வாறு தவறு இழைத்தவர்களுக்கு உணர்வுண்டா கும் விதத்தில் பேசினார்.தீஇவ 673.2

    சாலொமோனின் வாழ்வைச் சுட்டிக்காட்டி, “சகல தேசங்களி லும் அவரைப்போல ஒரு ராஜா எழுந்ததில்லை” என்றும், ‘’அவ ருக்கு மகத்தான ஞானத்தை தேவன் அருளியிருந்தார்” என்றும், ‘’சிலைவழிபாட்டுக்காரப் பெண்கள் அவருடைய இருதயத்தைத் தேவனிடமிருந்து விலக்கினார்கள்’ என்றும், ‘அவருடைய முன் மாதிரி இஸ்ரவேலைச் சீர் கெடச் செய்தது’ என்றும் அவர்களுக்கு நினைவூட்டினார். இந்தப் பொல்லாப்பையெல்லாம் செய்யும்படி, உங்களுக்கு இடங்கொடுப்போமா? நீங்கள் அவர்கள் குமாரத்தி களில் ஒருவரையும் உங்கள் குமாரருக்காகிலும் உங்களுக்காகிலும் கொள்ளாமலும் இருக்கவேண்டும்’‘ என்று கண்டிப்புடன் கூறினார்.தீஇவ 673.3

    தேவனுடைய கட்டளைகளையும், எச்சரிப்புகளையும், இதே பாவத்திற்காக முன்பு இஸ்ரவேலில் ஏற்பட்ட மோசமான நியாயத் தீர்ப்புகளையும் அவர்களுக்கு முன்பாக எடுத்துவைத்தான். ஒரு சீர்திருத்த பணி தொடங்கியது. அது தேவ கோபத்தை விலக்கியது. அவருடைய அங்கீகாரத்தையும் ஆசீர்வாதத்தையும் கொண்டுவந்தது.தீஇவ 673.4

    பரிசுத்தப் பணியிலிருந்த சிலர், தங்களிலிருந்த தங்கள் அஞ் ஞான மனைவிமாரைத் தங்களிடமிருந்து விலக்க முடியாதென அவர்களுக்காக வேண்டிக்கொண்டார்கள். ஆனால், நெகேமியா யாருக்கும் பட்சபாதம் காட்டவில்லை; பதவிக்கோ அந்தஸ்திற்கோ அக்காரியத்தில் செவிசாய்க்கவும் இல்லை. ஆசாரியர்களிலும் அதிகாரிகளிலும் யாரெல்லாம் சிலைவழிபாட்டுக்காரரோடு தங் கள் தொடர்பைத் துண்டிக்க மறுத்தார்களோ, அவர்கள் உடனடியாக தேவபணியிலிருந்து விலக்கப்பட்டார்கள். தீயவனான சன் பல்லாத் தின் குமாரத்தியைத் திருமணம் பண்ணியிருந்த, பிரதான ஆசாரிய னின் குமாரன் ஒருவன் தன் பணியிலிருந்து மாத்திரமல்ல, இஸ்ர வேலிலிருந்தே உடனடியாக அகற்றப்பட்டான். ‘’என் தேவனே , அவர்கள் ஆசாரிய ஊழியத்தையும், ஆசாரிய ஊழியத்துக்கும் லேவியருக்கும் இருக்கிற உடன்படிக்கையும் தீட்டுப்படுத்தினார் கள் என்று அவர்களை நினைத்துக்கொள்ளும்’‘ என்று ஜெபித்தார் நெகேமியா.தீஇவ 674.1

    அந்தக் கடுமையான நடவடிக்கை தேவனுடைய உண்மை ஊழியனுக்கு எவ்வளவு ஆத்தும் வேதனையை உண்டாக்கியிருக் கும் என்பதை நியாயத்தீர்ப்பு மாத்திரமே வெளிப்படுத்த முடியும். எதிரான காரியங்களோடு எப்போதும் அங்குப் போராட்டம் இருந்து வந்தது. உபவாசத்தாலும் பணிவாலும் ஜெபத்தாலும் மாத்திரமே அங்கு முன்னேற்றம் ஏற்பட்டது.தீஇவ 674.2

    சிலைவழிபாட்டுக்காரரைத் திருமணம் பண்ணியிருந்த அதே கர், அவர்களோடு பிற தேசங்களுக்குச் செல்வதைத் தெரிந்து கொண் டனர்; இவர்களும், சபையிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களும் சமாரியர்களோடு சேர்ந்துகொண்டார்கள். அங்குச் சென்றவர் களில், தேவ பணியில் உயர் பதவி வகித்தவர்களும் இருந்தனர். அவர்களில் சிலர் சில காலத்திலேயே அவர்களோடு தங்களை முற் றிலும் இணைத்துக் கொண்டார்கள். அக்கூட்டணியைப் பெலப் படுத்த விரும்பின சமாரியர்கள், யூதரின் விசுவாசத்தையும் பழக்க வழக்கங்களையும் முற்றிலும் அனுசரிப்பதாக வாக்குப்பண்ணினார் கள்; துரோகம் பண்ணிச் சென்றவர்கள் தங்கள் முன்னாள் சகோத ரரை விஞ்சத் தீர்மானித்து, எருசலேமின் தேவாலயத்திற்கு எதிரே, கெரிசீம் மலையில் ஓர் ஆலயத்தைக் கட்டினார்கள். யூத மார்க்கமும் அஞ்ஞானமார்க்கமும் கலந்ததாகவே அவர்களுடைய மதம் தொடர்ந்து இருந்துவந்தது; தாங்கள் தேவமக்களென்று அவர்கள் சொல்லிக்கொண்டது, கருத்துவேறுபாட்டிற்கும், போட்டி மனப்பான் மைக்கும், தலைமுறை தலைமுறையாக இரு தேசங்களுக்கும் இடையே பகைநிலவுவதற்கும் காரணமாக அமைந்தது.தீஇவ 674.3

    இன்று நடைபெற வேண்டிய சீர்திருத்தப் பணியில், பாவத்திற் குச் சாக்குப்போக்குச் சொல்லாத, பாவத்தைப் பூசி மெழுகாத, தேவ மகிமையை நிலைநாட்டும் வரையிலும் ஓயாத எஸ்றா போன்றும் நெகேமியா போன்றும் ஆட்கள் அவசியம். இந்தப் பணியின் சுமை யார்மேல் சுமத்தப்பட்டுள்ளதோ அவர்கள், தவறு நிகழும்போது அமைதியாக இருக்கமாட்டார்கள்; அன்பென்னும் போர்வையால் தீமையை மறைக்கவும் மாட்டார்கள். தேவன் பட்சபாதமுள்ளவர் அல்ல என்பதையும், சிலரைக் கண்டிப்பதால் அநேகர் இரக்கம் பெறும்படி வழி ஏற்படும் என்பதையும் உணர்ந்துகொள்வார்கள். தீமையைக் கடிந்துகொள்கிறவனில்தான் கிறிஸ்துவின் ஆவி எப் போதும் வெளிப்படும் என்பதையும் அவர்கள் நினைவுகூருவார்கள்.தீஇவ 675.1

    எஸ்றாவும் நெகேமியாவும் தங்கள் ஊழியத்தில் தேவனுக்கு முன்பாக தங்களைத் தாழ்த்தினார்கள்; தங்களுடைய பாவங்களை யும் தங்கள் மக்களுடைய பாவங்களையும் அறிக்கை செய்தார்கள். தாங்களே குற்றவாளிகள் போல பாவமன்னிப்பு வேண்டினார்கள். பொறுமையோடு உழைத்தார்கள்; ஜெபித்தார்கள்; பாடுபட்டார்கள். யூதரல்லாதோரின் வெளிப்படையான பகை அல்ல, நண்பர்கள் போல நடித்தோரின் ரகசிய எதிர்ப்புகள்தாம் அவர்கள் பணியை மிகவும் கடினமாக்கின. சிலர் தீய பணிக்காக தங்கள் செல்வாக்கைச் செலவழித்த செயல் பிற தேவ ஊழியர்களின் சுமையைப் பத்து மடங்கு அதிகரித்தது. தேவனுடைய சத்துருக்கள் அவன் மக்கள் மேல் போர்தொடுப்பதற்கான பொருட்களை இந்த வஞ்சகர்கள் கொடுத்தார்கள். அவர்களின் தீய உணர்வுகளும், கலகச் சித்தர் களும் தேவனுடைய திட்டமான நிபந்தனைகளுக்கு எதிரானவை களாகவே இருந்தன.தீஇவ 675.2

    ஜெபம், விசுவாசம், ஞானம், சுறுசுறுப்பான செயல் போன்ற வற்றால் என்ன சாதிக்கலாம் என்பதைத்தான் நெகேமியாவின் முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றி சுட்டிக்காட்டுகிறது. நெகே மியா ஓர் ஆசாரியன்; அவன் ஒரு தீர்க்கதரிசியும் அல்லன்; உயரதி காரத்திற்கு உரியவனாக அவன் பாசாங்கு பண்ணவும் இல்லை. ஒரு முக்கியக் காலக்கட்டத்தில் எழுப்பப்பட்ட சீர்திருத்தவாதியாக இருந்தான். தீஇவ 675.3

    தன் மக்களைத் தேவனுக்கு முன் சீர்ப்படுத்துவதே அவன் குறிக்கோளாயிருந்தது. ஒரு மாபெரும் நோக்கத்திற்காக ஏவப் பட்டு, அதனை நிறைவேற்றத் தன்னிலிருந்த சக்தி அனைத்தையும் செலவழித்தான். மேலான , நெகிழாத ஒழுக்கமே அவன் முயற் களில் முக்கியமானது. தீமையையும் நீதியானதில் எதிர்ப்பையும் எதிர்கொண்டபோது, அவன் உறுதியாக நின்றான். அதனால், ஆர்வத்தோடும் துணிவோடும் பிரயாசப்பட மக்கள் விழித்தெழுந் தார்கள். அவனுடைய தேவபக்தியையும், தேசப்பற்றையும், தேவன் மேல் அவன் வைத்திருந்த ஆழமான அன்பையும் அவர்களால் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியவில்லை. இதனை அறிந்ததால், அவன் வழிநடத்தும் இடத்திற்கு அவனைப் பின்பற்ற ஆயத்தமா யிருந்தார்கள்.தீஇவ 676.1

    தேவன் நியமித்த கடமைகளைக் களைப்பின்றி நிறைவேற்று வது மெய்ப்பக்தியின் ஒரு முக்கிய அம்சமாகும். தேவ சித்தத்தை நிறைவேற்றக் கிடைக்கும் தருணங்களை அவருடைய கருவிகளாக மனிதர் பிடித்துக்கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் துரிதமும் தீர்மானமுமாகச் செயல்பட்டால், மகிமையான வெற்றிகளைப் பெறலாம். தாமதமும் அலட்சியமும் தோல்வியையும் தேவனுக்கு அவமதிப்பையும் கொண்டுவரும். சத்தியத்தின் நோக்கத்திற்காக நிற்கும் தலைவர்கள், அக்கறையற்றும் குறிக்கோளற்றும் இருந்து, வைராக்கியம் காட்டாவிட்டால் சபையும் அக்கறையற்று, சுறுசுறுப் பின்றி விளங்கும்; சிற்றின்ப நாட்டம் கொள்ளும். தேவனையும் அவரை மாத்திரமுமே சேவிக்கும் பரிசுத்த நோக்கத்தால் அவர்கள் நிறைந்திருந்தால், மக்களும் ஒருங்கிணைந்து, நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் காணப்படுவார்கள்.தீஇவ 676.2

    தேவவார்த்தை கூர்மையானது; தெளிவும் நிறைந்தது. பாவ மும் பரிசுத்தமும் அருகருகே வைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்த்து, ஒன்றை நாம் தெரிந்துகொள்ளலாம். இன்னொன்றை விலக்கிவிடலாம். சன்பல்லாத்து மற்றும் தொபியாவின் வஞ்சகத் தையும் பொய்களையும் பகையையும் குறித்து விவரிக்கும் அதே பக்கங்களில் எஸ்றா மற்றும் நெகேமியாவின் தற்தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் உண்மையையும் பற்றிய விவரங்கள் உள்ளன. அவர்களில் யாரைப் பின்பற்றப் போகிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளும் சுதந்தரம் நம்முடையது. தேவ கற்பனைகளை மீறு வதால் ஏற்படும் மோசமான விளைவுகளும், கீழ்ப்படிதலால் கிடைக் கும் ஆசீர்வாதங்களும் எதிர் எதிரே வைக்கப்பட்டுள்ளன. ஒன்றால் உபத்திரவம் அனுபவிக்கப்போகிறோமா? அல்லது மற்றொன்றால் சந்தோஷம் அனுபவிக்கப்போகிறோமா? என்பதை நாம்தாம் தீர் மானித்தாகவேண்டும்.தீஇவ 676.3

    சிறையிருப்பிலிருந்து திரும்பின செருபாபேல், எஸ்றா நெகே மியா ஆகியோரின் தலைமையின் கீழ் கட்டுமானப்பணியும், சீர் திருத்தப் பணியும் நிறைவேற்றப்பட்டன; பூலோகவரலாற்றின் இந்த முடிவுநாட்களில் செய்யப்படவேண்டிய ஓர் ஆவிக்குரிய மறுமலர்ச் சிப் பணியை அவர்களுடைய பணிகள் விவரித்துக் காட்டுகின்றன. இஸ்ரவேலில் மீதமானவர்கள் வெகு சிலராய் இருந்தார்கள்; தங் கள் சத்துருக்களால் அழிக்கப்பட ஏதுவாகியிருந்தார்கள். ஆனால், அவர்கள் மூலமாக இப்பூமியில் தம்மைப் பற்றியும், தம் பிரமா ணம் பற்றியும் ஓர் அறிவைப் பாதுகாக்கத் தேவன் நோக்கங்கொண் டார். அவர்கள் மெய்த் தொழுகையின் பாதுகாவலர்களும், பரிசுத்த உபதேசங்களைக் கைக்கொள்ளுகிறவர்களுமாய் இருந்தார்கள். எருசலேமின் மதிலையும் தேவாலயத்தையும் மீண்டும் கட்டின் போது, பலதரப்பட்ட அனுபவங்கள் அவர்களுக்கு ஏற்பட்டன; அவர்கள் கடுமையான எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்தப் பணியில் பளுவான சுமைகளைத் தலைவர்கள் தாங்க வேண்டியிருந்தது. ஆனால், சத்தியத்திற்கான நோக்கத்தில் தேவனே ஜெயம் தருவார் என்று நம்பி, அசையாத நம்பிக்கையோடும் தாழ் மையான ஆவியோடும்தேவன்மேல் உறுதியான நம்பிக்கையோடும் அவர்கள் முன்னேறினார்கள். எசேக்கியா ராஜாவைப்போல நெகே மியாவும் ‘கர்த்தரை விட்டுப் பின் வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான். ஆகை யால், கர்த்தர் அவனோடிருந்தார்.’’2 இராஜாக்கள் 18:6, 7.தீஇவ 677.1

    நெகேமியா நாட்களில் நடைபெற்ற பணியால் உண்டான ஆவிக்குரிய மறுமலர்ச்சியானது, ஏசாயாவின் வார்த்தைகளுக்கு அடையாளமாயிருக்கிறது. அவர்கள் நெடுங்காலம் பாழாய்க் கிடந்தவைகளைக் கட்டி, பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப் பித்து, தலைமுறை தலைமுறையாய் இடிந்து கிடந்த பாழான பட்ட ணங்களைப் புதிதாய்க் கட்டுவார்கள். அவர்கள் ‘பூர்வ முதல் பாழாய்க் கிடந்தஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலை முறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பா னதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும் படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.“ஏசாயா 61:4; 58:12.தீஇவ 677.2

    சத்தியத்திலிருந்தும் நீதியிலிருந்தும் விலகும் நிலை எவ்விடங் களிலும் ஏற்படும்போது, தேவராஜ்யத்தின் அடிப்படை நியதிகளை மீண்டும் நிலைநிறுத்த முயலும் ஒரு கூட்ட மக்கள் பற்றி தீர்க்கதரிசி இங்குக் கூறுகிறார். தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு ஒரு பாதுகாப்பாக தேவன் தம் நியாயப்பிரமாணத்தை அவர்களைச் சுற்றிலும் ஒரு மதில்போல வைத்துள்ளார். அதிலுள்ள நீதியும் சத் தியமும் பரிசுத்தமுமான கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும்போது, அது அவர்களுக்கு நித்திய பாதுகாப்பாக விளங்கும். இவர்கள் அந்த நியாயப்பிரமாணத்தில் ஏற்பட்டுள்ளதிறப்பை அடைக்கிறவர் களாக இருக்கிறார்கள்.தீஇவ 678.1

    மதிலைக் கட்டிவந்த இந்த மீதமான மக்களின் பிரத்தியேகப் பணி குறித்து, தெள்ளத்தெளிவான வார்த்தைகளில் தீர்க்கதரிசிஏசாயா குறிப்பிடுகிறார். என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின் படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப் பேச்சைப் பேசாமலுமிருந்து, ஓய்வுநாளை மன மகிழ்ச்சி யின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்தநாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால், அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப் பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.“ஏசாயா 58:13,14. தேவ னால் ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொன்றும் இந்தக் கடைசிக்காலத்தில் மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும். மனிதன் ஓய்வுநாளை மாற் றிப்போட்ட காலத்தில், தேவ பிரமாணத்தில் ஏற்பட்ட திறப்பைச் செப்பனிட வேண்டியுள்ளது. உலகின் முன் சீர்திருத்தவாதிகளாக நிற்கும் தேவனுடைய மீதமான மக்கள், நிரந்தரமான சகல சீர் திருத்தத்திற்கு தேவபிரமாணமே அடித்தளம்” என்பதையும்,’‘ சிருஷ் டிப்பின் ஒரு நினைவுச்சின்னமாகவும் தேவவல்லமையை எப் போதும் நினைவுபடுத்துவதாகவும் நான்காம் கற்பனையின் ஓய்வு நாள் விளங்கவேண்டும்’‘ என்பதையும் விளங்கப்பண்ணியாக வேண்டும். பத்துக் கற்பனையின் சகல கட்டளைகளுக்கும் கீழ்ப் படிய வேண்டியதின் அவசியத்தைத் தெளிவானதும் புரியக் கூடி யதுமான சொற்களில் சொல்லவேண்டும். கிறிஸ்துவின் அன்பால் நெருக்கி ஏவப்பட்டு, பாழான நிலங்களைக் கட்டுவதில் அவரோடு ஒத்துழைக்க வேண்டும். அதில் வசிக்கும்படியாக, திறப்பை அடைக் கிறவர்களாகவும் பாதைகளைச் செவ்வைப்படுத்துகிறவர்களா கவும் அவர்கள் விளங்கவேண்டும். வச 12 ஐப் பார்க்கவும்.தீஇவ 678.2