Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    10 - கண்டிப்பின் குரல்

    கேரீத் ஆற்றருகே இருந்த மலைகளில் சில காலம் மறைந்திருந் தான் எலியா. அங்கே பல மாதங்கள் அற்புதமாக அவன்போஷிக்கப் பட்டான். பிறகு, தொடர்ந்து நீடித்து வந்த வறட்சியால் ஆறு வற்றிய போது, அஞ்ஞான தேசம் ஒன்றில் தஞ்சமடையுமாறு தேவன் தம் ஊழியனுக்குக் கட்டளையிட்டார். ‘நீ எழுந்து, சீதோ னுக்கடுத்த ச ாறி பாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளை யிட்டேன்’ என்று அவனிடம் கூறினார். சாறிபாத்தை புதிய ஏற்பாடு சரெப்தா என்கிறது.தீஇவ 129.1

    அந்தப் பெண் இஸ்ரவேல் தேசத்தாள் கிடையாது. தேவன் தெரிந்துகொண்ட ஜனங்கள் பெற்ற ஆசீர்வாதங்களையும் சிலாக் கியங்களையும் அவள் ஒருபோதும் பெற்றதும் கிடையாது. ஆனால், மெய்யான தேவனை விசுவாசித்தாள்; தன் பாதையில் பிரகாசித்த வெளிச்சத்தின்படியெல்லாம் நடந்தாள். இப்பொழுதும், இஸ்ரவேல் தேசத்தில் எலியாவுக்குப் பாதுகாப்பில்லாதபோது, அப்பெண்ணின் வீட்டில் தஞ்சம் பெற அவனை அவளிடத்திற்கு அனுப்பினார் தேவன்.தீஇவ 129.2

    ’அப்படியே அவன் எழுந்து, சாறி பாத்துக்குப் போனான்; அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்; அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, ‘’நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டு வா” என்றான். கொண்டுவர அவள் போனபோது அவன் அவளை நோக்கிக் கூப் பிட்டு, ‘’கொஞ்சம் அப்ப மும் உன் கையிலே எனக்குக் கொண்டு வா” என்றான்.’தீஇவ 130.1

    வறுமையால் பீடிக்கப்பட்டிருந்த அக்குடும்பம் பஞ்சத்தால் மேலும் வேதனைக்குள்ளானது. அங்கிருந்த சிறிதளவு உணவும் தீர்ந்து போகும் தருவாயில் இருந்தது. வாழ்க்கைப் போராட்டத்தை நிறுத்த வேண்டியதுதானா?’ என்று அந்த விதவை பயந்திருந்தாள். ‘ஜீவனுள்ள தேவன் என் தேவைகளைச் சந்திக்க வல்லவர்’ எனும் அவளுடைய விசுவாசம் முழு அளவில் சோதிக்கப்பட்டது. அன் றைக்கே அங்கு வந்தான் எலியா. அவளிடமிருந்த கடைசி உணவுத் துண்டிலும் தனக்குக் கொஞ்சம் தரும்படி கேட்ட அந்நியனுக்கு உதவினாள். அதன் மூலம் தன்னுடைய துன்பத்தின் உச்சக்கட்டத் திலும் தன் விசுவாசத்திற்குச் சாட்சி பகர்ந்தாள்.தீஇவ 130.2

    அப்பமும் தண்ணீரும் கேட்ட எலியாவுக்குப் பிரதியுத்தரமாக அந்த விதவை, ‘பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ் சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என் குமாரனும் சாப் பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப் படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன்’‘ என்றாள். உடனே எலியா அவளிடம், ‘’பயப்படாதே; நீ போய் உன் வார்த் தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும், முதலில் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி, என்னிடத்தில் கொண்டு வா; பின்பு, உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம். கர்த்தர் தேசத்தின் மேல் மழையைக் கட்டளையிடும் நாள் மட்டும் பானையின் மா செல வழிந்து போவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்து போவ தும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லு கிறார்’‘ என்றான். தீஇவ 130.3

    விசுவாசத்தைப் பரிசோதிக்க இதைவிடப் பெரிய சோதனை தேவையில்லை . இதுவரையிலும் சகல அந்நியர்களிடமும் இரக்கத் தோடும் தாராள குணத்தோடும் அந்த விதவை நடந்து கொண்டவள். இப்பொழுதும், தானும் தன் குமாரனும் சாப்பாடில்லாமல் சாகக் கிடந்த நேரத்தில், தன்னுடைய சகல தேவைகளுக்கும் இஸ்ர வேலின் தேவனை நம்பி, எலியாவின் சொற்படிச் செய்தாள். விருந் தோம்பும் நற்பண்பிற்கு ஏற்பட்ட அந்த மேலான சோதனையில் அவள் வெற்றி பெற்றாள்.தீஇவ 130.4

    தேவனுடைய தீர்க்கதரிசியிடம் பெனிக்கேயாவின் பெண் காட்டிய விருந்தோம்பல் அற்புதமானது. அவளுடைய விசுவாசத் திற்கும் தாராள குணத்திற்கும் பதில் கிடைத்த விதமும் அற்புத மானதுதான். ‘அவளும் இவனும் அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள். கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தை யின்படியே, பானையிலே மா செலவழிந்து போகவும் இல்லை; கல சத்தின் எண்ணெய் குறைந்து போகவும் இல்லை’.தீஇவ 131.1

    ’இவைகள் நடந்த பின்பு, வீட்டுக்காரியாகிய அந்தஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான்; அவனுடைய சுவாசம் போகு மட் டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. அப் பொழுது அவள் எலியாவை நோக்கி, ‘தேவனுடைய மனுஷனே, எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப் பண்ண வும், என் குமாரனைச் சாகப்பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர்?’‘ என்றாள்.தீஇவ 131.2

    ’அதற்கு அவன், ‘’உன் குமாரனை என்னிடத்தில் தா” என்று சொல்லி, அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக் கிறமேல் வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன் கட்டிலின்மேல் வைத்தான். அந்தப் பிள்ளையின் மேல் மூன்றுதரம் குப்புற விழுந்து, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான்.’தீஇவ 131.3

    ’அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ் வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவன் தாயி னிடத்தில் கொடுத்து, பார், உன் பிள்ளை உயிரோடிருக்கிறான்’‘ என்று சொன்னான். அப்பொழுது அந்த ஸ்திரீ எலியாவை நோக்கி, ‘’நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும், இதனால் இப் போது அறிந்திருக்கிறேன்” என்றாள்’.தீஇவ 131.4

    சாறி பாத்தின் அந்த விதவை தன்னிடமிருந்த சிறிதளவு உண வையும் எலியாவோடு பகிர்ந்துகொண்டாள். அதற்குப் பதிலாக அவளுடைய ஜீவனும் அவளுடைய குமாரனின் ஜீவனும் காக்கப் பட்டன. வேதனையும் வறுமையுமான காலங்களில், தங்களைவிட அதிக தேவையில் இருப்போருக்கு இரங்கி, உதவும் யாவருக்கும் தேவன் மேன்மையான ஆசீர்வாதத்தை வாக்களித்திருக்கிறார். அவர் மாறாதவர். எலியாவின் நாட்களில் இருந்ததை விட இன்று அவருடைய வல்லமை எவ்விதத்திலும் குறைந்து போகவில்லை. ‘ தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக் கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்.’ மத் தேயு 10:41.தீஇவ 131.5

    ’அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு. ‘எபி 13:2. இந்த வார்த்தைகள் முற்காலத்தில் எழுதப்பட்டபோதிலும் இவைதங்கள் மகிமையை இழந்து போகவில்லை. மாறுவேடம் பூண்டு வருகிற ஆசீர்வாதமான தருணங்களை நம் பரலோகப் பிதா இன்றும் தம் பிள்ளைகள் செல்லும் பாதையில் வைத்து வருகிறார். அந்தத் தரு ணங்களைப் பயன்படுத்திக்கொள்கிறவர்கள் மேன்மையான சந் தோஷத்தைக் கண்டடையலாம். ‘பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்து மாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக் கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்த காரம் மத்தியானத்தைப் போலாகும். கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகாவறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தி யாக்கி, உன் எலும்பு களை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச் சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்பாய்.’ ஏசா 58:10, 11.தீஇவ 132.1

    இன்று தமக்கு உண்மையோடிருக்கும் ஊழியர்களை நோக்கி, ‘’உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளு கிறான்; என்னை ஏற்றுகொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்’‘ என்று சொல்கிறார் கிறிஸ்து. அவரு டைய நாமத்தை முன்னிட்டுச் செய்யப்படும் இரக்கமான செயல் கள் எதையும் தேவன் கண்டுகொள்ளாமல் விடுவது இல்லை; அதற்கு அவர் பலனளிக்காமல் விடுவதில்லை. தேவ குடும்பத்தில் எளியவர்களை யும் சிறுமையானவர்களையும் இதே கனிவோடு நோக்கிப்பார்க்கிறார் இயேசு கிறிஸ்து. அதனால்தான், ‘’இந்தச் சிறியரில் ஒருவனுக்கு, அதாவது, கிறிஸ்துவைப்பற்றின அறிவி லும் விசுவாசத்திலும் சிறு பிள்ளை போல் இருப்போருக்கு, ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல் லுகிறேன்’ என்கிறார். மத்தேயு 10:40, 42.தீஇவ 132.2

    இஸ்ரவேரின் இருதயம் சிலைவழி பாட்டிலிருந்து திரும்பி தேவன் மேல் பற்றுக்கொள்ளவேண்டுமென்று பல்லாண்டு நடித்த பஞ்ச , வறட்சிக் காலம் நெடுகிலும் எலியா ஊக்கத்தோடு ஜெபித்து வந்தான். பஞ்சத்தால் பீடிக்கப்பட்டிருந்த தேசத்தின்மேல் கர்த்த ருடைய கரம் பெலமாய் இறங்கியிருந்ததால், பொறுமையோடு காத்திருந்தான் தீர்க்கதரிசி. எங்கும் வறுமை பெருகினதையும், வேதனைக்கான அறிகுறிகள் தென்பட்டதையும் கண்டபோது, அவனுடைய இருதயம் துக்கத்தால் வேதனையடைந்து; சீர்திருத்தம் உண்டு பண்ணக்கூடிய வல்லமை சீக்கிரத்தில் வெளிப் படவேண்டும் மென்று ஏங்கினான். ஆனால், தேவன்தாமே தம் திட்டத்தை நிறை வேற்றிக் கொண்டிருந் தார். எனவே, உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் வரைக்கும் விசுவாசத்தோடு ஜெபித்து, காத்திருப் பதுதான் தேவ ஊழியக்காரன் செய்யக் கூடியதாக இருந்தது.தீஇவ 133.1

    அநேக வருடப் பாவ வாழ்க்கையின் விளைவாகவே அத்த கைய அவ பக்தி ஆகாபின் நாட்களில் நிலவி வந்தது. கொஞ்சம் கொஞ்ச மாக, வருடத்திற்கு வருடம் செம்மையான வழியைவிட்டு இஸ்ரவேலர் விலகிக்கொண்டிருந்தனர். தாங்கள் செல்லும் பாதையை நேராக்க, தலைமுறை தலைமுறையாக அவர்கள் மறுத்து விட்டனர். கடைசியில், பெரும்பாலான ஜனங் கள் அந்தகாரச் சக்திகளின் வழி நடத்துதலுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தனர்.தீஇவ 133.2

    ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், ராஜாவாகிய தாவீதின் ஆளு கையின்கீழ், இஸ்ரவேலர் சந்தோஷமாக ஒன்றுகூடி, அனுதின் கிருபைகளுக்காக முற்றிலும் அவரையே தாங்கள் சார்ந்திருப்பதை உணர்ந்து, உன்னதமானவருக்குத் துதியின் பாடலை ஏறெடுத்தார் கள். அப்பொழுது அவர்கள் பாடிய பாடல்களிலுள்ள துதியின் வார்த்தைகளைக் கவனியுங்கள்:தீஇவ 133.3

    எங்கள் இரட்சிப்பின் தேவனே,
    காலையையும் மாலையையும்
    களிகூரப்பண்ணுகிறீர்.
    தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்;
    தண்ணீர் நிறைந்த தேவநதியினால்
    அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்;
    இப்படி நீர் அதைத் திருத்தி,
    அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர். அதின் வரப்புகள் தணியத்தக்கதாய்
    அதின் படைச்சால்களுக்குத் தண்ணீர் இறைத்து,
    அதை மழைகளால் கரையப்பண்ணி, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர்.
    வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்,
    உமது பாதைகள் நெய்பாய்ப் பொழிகிறது.
    வனாந்தர தாவரங்களிலும் பொழிகிறது;
    மேடுகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கிறது.
    மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது;
    பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது;
    அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது.
    தீஇவ 133.4

    சங்கீ தம் 65:5,8-13.

    ’பூமியை அதன் ஆதாரங்கள்மேல் ஸ்தாபித்தவர்’ தேவனே என்பதை இஸ்ரவேலர் அப்போது உணர்ந்திருந்தனர். தங்களு டைய விசுவாசத்தின் வெளிப்பாடாக பின்வருமாறு அவர்கள் பாடி னார்கள்:தீஇவ 134.1

    அதை வஸ்திரத்தினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்,
    பர்வதங்களின்மேல் தண்ணீர்கள் நின்றது.
    அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி,
    உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துபோயிற்று.
    அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி,
    நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது.
    அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி
    கடவாதிருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர்.’
    தீஇவ 134.2

    சங்கீ தம் 104:5-9.

    நித்தியருடைய மகத்துவ வல்லமையால் மாத்திரமே வானத் திலும் பூமியிலும் சமுத்திரத்திலும் உள்ள இயற்கையின் சக்திகள் தங்கள் வரம்புக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தம் சிருஷ்டி களின் சுக வாழ்விற்காக அவர் இவற்றைப் பயன்படுத்துகிறார். ‘ஏற்ற காலத்தில் மழை பெய்யவும்’ மனிதர் கையிட்டுச் செய்யும் ‘வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும்’ அவருடைய ‘நல்ல பொக்கிஷங்கள் இலவசமாக அருளப்படுகின்றன. உபா 28:12.தீஇவ 134.3

    அவர் பள்ளதாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்;
    அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது.
    அவைகள் வெளியின் ஜீவன்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்;
    அங்கே காட்டுக்கழுதைகள் தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்.
    அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப் பறவைகள் சஞ்சரித்து, கிளைகள் மேலிருந்து பாடும்...
    பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி,
    அவர் மிருகங்களுக்குப் புல்லையும்,
    மனுஷருக்கு உபயோகமான பயிர் வகைகளையும் முளைப்பிக்கிறார்.
    மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும்,
    அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயை யும்,
    மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார்.

    ’கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது!
    அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்,
    பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.
    பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது;

    அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான
    எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு.
    ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று
    அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.
    நீர் கொடுக்க அவைகள் வாங்கிக்கொள்ளும்;

    ’நீர் உம்முடைய கையைத் திறக்க
    அவைகள் நன்மையால் திருப்தியாகும்.’
    தீஇவ 134.4

    சங்கீ தம் 104:10-15, 24-28.

    இஸ்ரவேலர் களிகூருவதற்கு ஏராளமான காரணங்கள் இருந் தன். கர்த்தர் அவர்களைக் கொண்டுவந்த தேசமானது பாலும் தேனும் ஓடுகிற தேசமாயிருந்தது. அவர்கள் வனாந்தரத்தில் அலைந்து கொண்டிருந்த சமயத்தில், ‘’மழைத் தட்டுப்பாடே இல் லாததேசத்திற்குள் உங்களை வழிநடத்திச் செல்வேன்” என்று தான் தேவன் அவர்களிடம் உறுதியளித்திருந்தார். ‘’நீ சுதந்தரிக்கப் போகிற தேசமோ நீ விட்டு வந்த எகிப்து தேசத்தைப்போல் இராது; அங்கே நீ விதையை விதைத்து, கீரைத் தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சு கிறது போல உன் காலால் நீர்ப்பாய்ச்சி வந்தாய். நீங்கள் சுதந்தரிக் கப்போகிற தேசமோ, மலைகளும் பள்ளத்தாக்குகளுமுள்ள தேசம்; அது வானத்தின் மழைத்தண்ணீரை குடிக்கும் தேசம்; அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், வருஷத்தின் துவக்க முதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்’‘ என்று தேவன் அவர்களிடம் கூறியிருந்தார்.தீஇவ 135.1

    கீழ்ப்படிதலுக்கான நிபந்தனையின் பேரிலேயே, மிகுதியான மழை குறித்த வாக்குத்தத்தம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. ’’நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் உங்கள் முழு இருத யத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து, அவ ரைச் சேவிக்கும்படி, நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற என் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தால், நீ உன் தானியத்தையும் உன் திராட்சரசத்தையும் உன் எண்ணெயையும் சேர்க்கும்படிக்கு, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியை யும் பெய்யப் பண்ணி, மிருகஜீவன்களுக்காக உன் வெளிகளிலே புல் முளைக்கும்படிச் செய்வேன், நீ சாப்பிட்டுத் திருப்தியடைவாய்” என்கிறார்.தீஇவ 135.2

    ’’உங்கள் இருதயம் வஞ்சிக்கப்படாமலும், நீங்கள் வழிவிலகி அந்நிய தேவர்களைச் சேவித்து அவர்களை நமஸ்கரியாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள். இல்லாவிடில் கர்த்தரு டைய கோபம் உங்கள்மேல் மூண்டு, மழை பெய்யாமற் போகவும், தேசம் தன் பலனைக் கொடாமலிருக்கவும் வானத்தை அடைத்துப் போடுவார்; கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரத்தில் அழிந்துபோவீர்கள்” என்று தம் ஜனங்களுக்கு கர்த்தர் அறிவுறுத்தினார். உபா 11:10-17.தீஇவ 136.1

    ’’இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரு டைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவி கொ டாதே போனாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல் லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும். உன் தலைக்கு மேலுள்ள வானம் வெண்கலமும், உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாய் இருக் கும். உன் தேசத்து மழையைக் கர்த்தர் புழுதியும் மண்ணுமாக பெய் யப்பண்ணுவார்; நீ அழியுமட்டும் அப்படியே வானத்திலிருந்து உன் மேல் இறங்கி வரும்’‘ என்று இஸ்ரவேலர் எச்சரிக்கப்பட்டனர். உபா 28:15, 23, 24.தீஇவ 136.2

    முற்கால இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட யேகோவா வின்ஞானமான ஆலோசனைகளுள் இவைகளும் அடங்கும். தாம் தெரிந்து கொண்டஜனங்களிடத்தில், நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவை களை உங்கள் கையின் மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண் களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து, அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டிலே உட்கார்ந்திருக்கிற போதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிற போதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசுவீர் களாக” என்று கட்டளையிட்டார். உபா 11:19, 20. இக்கட்டளைகள் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனாலும் காலம் செல்லச் செல்ல, ஒவ்வொரு தலை முறையினரும் தங்கள் ஆவிக்குரிய நலனுக்கான முன்னேற்பாடுகளை மறந்தனர். தேவகிருபையின் தடுப்புச் சுவர்களை வழிவிலகலின் மோசமான பாதிப்புகள் தகர்த்து விடப்போவதாக அச்சுறுத்தியது.தீஇவ 136.3

    இந்நிகழ்வுகளால்தான் தம்முடைய மக்களைக் கடுமையான நியாயத்தீர்ப்புகளால் விசாரித்தார்தேவன். எலியா முன்னுரைத்தது மிகக் கொடூரமாக நிறைவேறிக்கொண்டிருந்தது. இக்கட்டு பற்றிய செய்தியைச் சொன்ன அவரை மூன்று வருடங்கள் பட்டணங்கள் தோறும் தேசங்கள்தோறும் தேடினார்கள். முன்பின் தெரியாதவ ரான அத்தீர்க்கதரிசிதங்கள் நாட்டின் எப்பகுதியிலும் இல்லையென அரசர்கள் பலர், ஆகாப் கேட்டுக்கொண்டதின் பேரில், சத்தியம் பண்ணினார்கள். ஆனாலும் தேடுதல் தொடர்ந்தது. யேசபேலும் பாகாலின் தீர்க்கதரிசிகளும் எலியாவை மிகவும் அதிகமாக வெறுத்ததால், அவரைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரு வதற்கான முயற்சி எதையும் விட்டுவைக்கவில்லை. இன்னமும் அங்கு மழையில்லாமல் இருந்தது.தீஇவ 137.1

    கடைசியாக, ‘அநேக நாள் சென்ற பிறகு, கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி, ‘நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி; நான் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன்’ என்று சொன்னார்.தீஇவ 137.2

    அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவனாய், எலியா ஆகாபுக் குத் தன்னைக் காண்பிக்கப் போனான்’. தீர்க்கதரிசியானவர் சமாரியா வுக்குப் புறப்பட்ட சமயத்தில், ஆகாப் தனது அரமனை விசாரிப்புக் காரனாகிய ஒபதியாவிடம் , இரையின்றித் தவித்த தங்கள் ஆடு மாடு முதலான கால்நடைகளுக்குப் புல் சேகரிக்கும் நோக்கத்தில், ஆறு கள் அல்லது நீரூற்றுகள் இருந்த ஒவ்வோர் இடத்திற்கும் தேடிப் போகுமாறு சொல்லியிருந்தான். நீண்ட நாட்களாக வறட்சி நீடித்த தால், ராஜாவின் அரண்மனையில் கூட அது பாதிப்பை ஏற்படுத்தி யிருந்தது. தன்னுடைய வீட்டாரின் நிலை கண்டு மிகவும் வருந்திய ராஜா, தனிப்பட்ட முறையில் தனது ஊழியக்காரனுடன் சேர்ந்து புல்லுள்ள இடம் தேடிச் செல்ல தீர்மானித்தான். ‘அப்படியே தேசத்தைச் சுற்றிப் பார்க்கும்படி, அதைப் பகுத்துக் கொண்டு, ஆகாப் ஒருவழி யாயும், ஒபதியா வேறொரு வழியாயும் போனார்கள்’.தீஇவ 137.3

    ’வழியில், ஒபதியாவுக்கு எலியா எதிர்ப்பட்டான்; அவன் இவனை இன்னான் என்று அறிந்து, முகங்குப்புற விழுந்து, நீர் என் ஆண்டவனாகிய எலியா அல்லவா?” என்று கேட்டான்’.தீஇவ 138.1

    இஸ்ரவேலர் தேவனை மறந்த நாட்களிலும், ஒபதியா உண்மையாயிருந்தான். ஜீவனுள்ள தேவன் மேலிருந்த பற்றிலி ருந்து அவன் எஜமானாகிய ராஜாவால் கூட அவனை மாற்ற முடிய வில்லை . அதனால், நீ போய், இதோ, எலியா வந்திருக்கிறான் என்று உன் ஆண்டவனுக்குச் சொல்” என்று எலியாவிடமிருந்து கட் டளை பெறும் பாக்கியத்தை இப்பொழுது பெற்றான்.தீஇவ 138.2

    இதனால் பெரும் பீதிக்குள்ளான ஒபதியா, ‘’ஆகாப் என்னைக் கொன்று போடும் படிக்கு, நீர் உமது அடியானை அவன் கையில் ஒப்புக்கொடுக்க நான் என்ன பாவம் செய்தேன்?” என்று கேட்டான். இதை ஆகாபிடம் சொல்வது, நிச்சய மரணத்தை நாடுவதுதான். எனவே, தீர்க்கதரிசியிடம் அவன், ‘’உம்மைத் தேடும்படி என் ஆண்ட வன் மனுஷரை அனுப்பாத ஜாதியும் ராஜ்யமும் இல்லை என்று உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக் கொண்டு சொல்லு கிறேன்; ‘நீர் இல்லை’ என்று அவர்கள் சொன்னபோது, அவன் அந்த ராஜ்யத்தையும் அந்த ஜாதியையும் உம்மைக் காணவில்லை’ என்று சத்தியம் வாங்கிக்கொண்டான். இப்போதும் நீபோய், ‘’உன் ஆண்டவனுக்கு, இதோ, எலியா வந்திருக்கிறேனென்று சொல்” என்று நீர் சொல்லுகிறீரே. நான் உம்மைவிட்டுப் போனவுடனே ஒருவேளை கர்த்தருடைய ஆவியானவர் உம்மை எடுத்து, நான் அறியாத இடத்திற்குக் கொண்டுபோவார்; அப்பொழுது நான் ஆகாபிடத்திற்குப் போய் அறிவித்த பின்பு, அவன் உம்மைக் காணாவிட்டால், என்னைக் கொன்றுபோடுவானே’‘ என்றான்.தீஇவ 138.3

    தன்னை வற்புறுத்த வேண்டாமென தீர்க்கதரிசியினிடத்தில் ஊக்கமாக வேண்டினான் ஒபதியா. ‘’உமது அடியானாகிய நான் சிறு வயது முதல் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறவன். யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைக் கொன்று போடுகிறபோது, நான் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளில் நூறு பேரை ஒவ்வொரு கெபியிலே ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து பராமரித்து வந்த என்னுடைய செய்கை என் ஆண்ட வனுக்கு அறிவிக்கப்படவில்லையோ? இப்போதும் என் ஆண்டவன் என்னைக் கொன்று போடும்படியாக, நீர், ‘இதோ, எலியா வந்திருக்கிறேனென்று போய் அவனுக்குச் சொல்’ என்று சொல்லுகிறீரே’‘ என்றான்.தீஇவ 138.4

    ஆனால், இந்த முறை அவர் தூது செல்வது பயனில்லாமல் போகாது’ என உறுதியான முறையில் ஆணையிட்டான் தீர்க்கதரிசி. ‘அதற்கு எலியா, இன்றைக்கு என்னை அவனுக்குக் காண் பிப்பேன் என்று சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்” என்று உறுதிய ளித்தார். அப்பொழுது ஒபதியா போய், ஆகாபுக்கு அதை அறி வித்தான்.தீஇவ 139.1

    தனக்கு அச்சத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்திக்கொண் டிருந்த ஒரு மனிதனிடமிருந்து வந்த செய்தியைப் பயம் கலந்த திகைப்போடு கேட்டான் ராஜா. அவன் இடைவிடாமல் தேடி வந்தது எலியாவைத்தான். ராஜாவாகிய தன்னைச் சந்திப்பதற்காக, எலியா தன் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைக்குள் வரமாட்டான் என்பது ராஜாவுக்குத் தெரியும். ‘அவன் இஸ்ரவேலுக்கு எதிராக இன்னொரு சாபமிட வருகிறானோ?’ எனும் எண்ணம் இராஜாவின் இருதயத்தில் திகிலை உண்டாக்கியது. யெரொபெயாமின் மரத்துப் போனகரம் அவன் நினைவிற்கு வந்தது. எலியாவின் அழைப்புக்கு ஆகாபால் கீழ்ப்படியாமல் இருக்கவும் முடியவில்லை; தேவ ஊழியரை எதிர்த்து தன் கரத்தை உயர்த்தவும் துணிய வில்லை. பாதுகாப்பு வீரர்கள் புடைசூழ, தீர்க்கதரிசியைச் சந்திக்க நடுக்கத் தோடு சென்றான்.தீஇவ 139.2

    இராஜாவும் தீர்க்கதரிசியும் நேருக்கு நேராக நின்றார்கள். கோபமும் வெறுப்பும் கொண்டிருந்தபோதிலும், எலியாவுக்கு முன்பாக துணிவும் வலிமையும் அற்றவனாகக் காணப்பட்டான் ஆகாப். எனவேதான் எடுத்த எடுப்பிலேயே, ‘’இஸ்ரவேலைக் கலங்கப் பண்ணுகிறவன் நீயல்லவா?’‘ என்று தடுமாற்றமாகப் பேசி, தன்னை அறியாமலேயே தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்த உணர்வுகளை வெளிப்படுத்தினான். தேவனுடைய வார்த்தை யின்படிதான் வானம் வெண்கலம் போலாயிற்று என்பதை அறி வான் ஆகாப். ஆனாலும், தேசத்தின்மேல் உண்டான பரலோக நியாயத்தீர்ப்புகளுக்குக் காரணம் தீர்க்கதரிசியே என்று தீர்க்கதரிசி யின்மேல் பழிபோட முயன்றான்.தீஇவ 139.3

    நீதியின் வழியைவிட்டு விலகுவதால் ஏற்படும் நிச்சயவிளை வான பேரழிவுக்கு தேவ ஊழியர்களைக் காரணராக்குவது துன் மார்க்கரின் இயல்பாயிருக்கிறது. சாத்தானுடைய வல்லமைக்குள் தங்களை ஒப்புக்கொடுப்பவர்களால், தேவன் பார்க்கிற பிரகாரம் காரியங்களைப் பார்க்கமுடிவதில்லை. சத்தியம் எனும் கண்ணா டியை அவர்களுக்கு முன்பாகக் கொண்டு சென்றதும், தங்கள் குற்றங்களை அது சுட்டிக்காட்டுமே என்றெண்ணி, சீற்றங்கொள் கின்றனர்; பாவத்தால் குருடராகி, மனந்திரும்ப மறுக்கின்றனர். ‘தேவ ஊழியர்கள் தங்களை எதிர்க்கிறார்கள்’ என்றும், ‘அவர்கள் ளிடம் கடுமையாக நடந்து கொள்வது தகும்’ என்றும் நினைக் கிறார்கள்.தீஇவ 139.4

    தன்னில் குற்றமில்லை என்கிற உணர்வோடு ஆகாபின்முன் நின்ற எலியா, ராஜாவை முகஸ்துதி செய்யவோ, எவ்வித சாக்குப் போக்கும் சொல்லவோ முயலவில்லை. ‘கிட்டத்தட்ட பஞ்சம் முடியப் போகிறது’ என்ற நற்செய்தியைச் சொல்லி, ராஜாவின் கோபத்திலிருந்து தப்பவும் முயலவில்லை . அவர் எவ்வித மன்னிப்பும் கோரவில்லை. தேவமகிமைக்கென பேரார்வமும் சீற்றமும் கொண்டவனாய், ஆகாபின் குற்றச்சாட்டை அவன் மேலேயே திருப்பினான். ‘’உம்முடைய பாவமும் உம்முடைய பிதாக்களின் பாவமுமே இஸ்ரவேலின்மேல் இத்தகைய கொடிய அழிவைக் கொண்டு வந்தது’‘ என்று ராஜாவிடம் கூறினான். ‘’இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல ; கர்த்தரின் கட்டளைகளைவிட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப் பண்ணு கிறவர்கள்” என்று துணிச்சலுடன் பேசினான் எலியா.தீஇவ 140.1

    இத்தகைய தீவிர கண்டிப்பின் சத்தம் இன்றும் அவசியமாயிருக் கிறது. ஏனெனில், பயங்கரமான பாவங்களால் மக்கள் தேவனை விட்டுப் பிரிந்துள்ளனர். மதநம்பிக்கை இழப்பது வேகமாக நடை முறையாகி வருகிறது. ‘’இவன் எங்கள்மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லை” என்பதே ஆயிரக்கணக்கானோரின் சொல் லாயிருக்கிறது. லூக்கா 19:14. காதுக்கு இனிமையாகச் செய்யப் படும் பிரசங்கங்கள் பெரும்பாலும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்த வில்லை; எக்காளம் தெளிவான சத்தத்தை உண்டு பண்ணவில்லை; தேவவார்த்தையின் தெளிவான, கூர்மையான சத்தியங்களால் மனிதரின் இருதயங்கள் ஊடுருவப்படவில்லை .தீஇவ 140.2

    தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அநே கர், தங்கள் உண்மையான எண்ணங்களை வெளிப்படுத்த நேரிடு மானால், அதிக வெளிப்படையாகப் பிரசங்கிப்பதால் என்ன பயன்?’ என்றுதான் சொல்லுவார்கள். மேலும், ‘விரியன் பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?’ என்று யோவான் ஸ்நானன் பரிசேயர் களிடம் சொல்லவேண்டியதின் அவசியம் என்ன? லூக்கா 3:7. ‘ஏரோது தன் சகோதரனின் மனைவியோடு வாழ்வது ஒழுக்க மற்றது’ என்று சொல்லி, ஏரோதியாளின் கோபத்தைத் தூண்ட வேண்டியதின் அவசியம் என்ன? வெளிப்படையாகப் பேசின தால் கிறிஸ்துவின் முன்னோடியான ஸ்நானன் சாக நேரிட்டது. பாவத்தில் வாழ்ந்தவர்களின் அதிருப்திக்கு உள்ளாகாதவாறு ஏன் அவன் வாழ்ந்திருக்கக்கூடாது?தீஇவ 140.3

    தேவபிரமாணத்தின் மெய்க்காவலர்களாய் நின்றிருக்கவேண் டியவர்கள் இவ்வாறு வாதாடுகிறார்கள். விளைவு? தேவனை மற வாமல் இருந்திருக்கவேண்டியவர்கள் தங்கள் வாதங்களின் வச திக்குள் மறைகிறார்கள்; பிறர் பாவங்களைக் கண்டிக்க மறக்கிறார் கள். சத்தியவான்களின் கண்டிப்பை மீண்டும் சபையில் எப்போது கேட்கமுடியும்?தீஇவ 141.1

    ’’நீயே அந்த மனுஷன்” என்று வெளிப்படையாக தாவீதிடம் நாத்தான் பேசிய வார்த்தைகள் போன்று மேடைகளில் இன்று அதிகம் கேட்கமுடியவில்லை ; புத்தகங்களில் பார்க்கமுடியவும் இல்லை . 2சாமு 12:17. அத்தகைய வார்த்தைகள் அதிகமாகக் கேட்டிருக்குமானால், மனிதர் மத்தியில் தேவ வல்லமை அதிகமாக வெளிப்படுவதை நாம் கண்டிருப்போம். பாராட்டுப் பெறவேண்டும் மென்கிற ஆசையாலும் மனிதரைத் திருப்திப்படுத்த வேண்டு மென்கிற ஆசையாலும் தேவ ஊழியர்கள் சத்தியத்தைச் சொல் லாதிருக்கிறார்கள். அவைகளிலிருந்து அவர்கள் மனந்திரும் பாதவரைக்கும், ‘’எங்கள் முயற்சிகளால் பலனில்லை ‘‘ என்று அவர்கள் சொல்லக்கூடாது.தீஇவ 141.2

    ’’சமாதானம்” என்று தேவன் சொல்லாதபோது, ‘’சமாதானம், சமாதானம்” என்று மனிதரைத் திருப்திப்படுத்தும் வகையில் பேசும் போதகர்கள், தேவனுக்கு முன்பாக தங்கள் இருதயங்களைத் தாழ்த்தி, தங்கள் வஞ்சகத்தன்மைக்காகவும், ஒழுக்கத் துணிவின் மைக்காகவும் அவரிடம் மன்னிப்பு வேண்டுவது நல்லது. பிறர் மேல் கொண்ட அன்பினால் அல்ல; தங்கள் சுயநலத்திற்காகவும் சொகுசு வாழ்விற்காகவுமே தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட செய் தியைப் பூசி மெழுகுகிறார்கள். தேவனுக்கு மதிப்பு கொடுப்பதை யும், ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதையுமே மெய்யன்பு முதலா வது நாடுகிறது. தாங்கள் வெளிப்படையாகப் பேசுவதால் ஏற்ப டும் பிரச்சனைகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளும்படி இத்தகைய அன்புள்ளவர்கள் சத்தியத்தை மறைக்க மாட்டார்கள். ஆத்துமாக்கள் அழிவிலிருக்கும் போது, தேவ ஊழியர்கள் சுயத் தை நாடமாட்டார்கள். பாவத்தைக் குறைத்துக்காட்டி, சாக்குப் போக்குச் சொல்ல இடங்கொடாமல், பேசுமாறு தங்களுக்குக் கொடுக்கப்பட்டதைப் பேசுவார்கள்.தீஇவ 141.3

    ’தங்கள் பணி புனிதமானது ; ஊழியம் பரிசுத்தமானது’ என்பதை ஒவ்வொரு போதகரும் உணர்ந்து, எலியாவைப் போன்று துணிவு காட்டினால் நலமாயிருக்கும். போதகர்கள் தேவனால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள். அவர்கள் ‘எல்லா நீடிய சாந்தத் தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்தி சொல்ல வேண்டும். 2தீமோ 4:2. அவர்கள் கிறிஸ்துவின் சார் பில், பரலோக ரகசியங்களின் உக்கிராணக்காரராகப் பணிபுரிய வேண்டும்; கீழ்ப்படிவோரை ஊக்கப்படுத்த வேண்டும், கீழ்ப்படி யாதோரை எச்சரிக்க வேண்டும். உலக நியதிகளுக்கு அவர்கள் எவ்வித மதிப்பும் தரக்கூடாது. அவர்கள் எந்த வழியில் நடக்க வேண்டுமென இயேசு கட்டளையிட்டாரோ, அதிலிருந்து அவர் கள் விலகக்கூடாது. மேகம் போன்ற திரளான சாட்சிகளால் தாங் கள் சூழப்பட்டுள்ளதை நினைவில் வைத்து, விசுவாசத்தோடு முன்னேற வேண்டும். அவர்கள் தங்கள் சொந்த வார்த்தைகளைப் பேசக்கூடாது. மாறாக, பூமியின் மன்னர்களுக்கெல்லாம் மேலா னவர் பேசச் சொல்லும் வார்த்தைகளையே பேசவேண்டும்.’ என்று கர்த்தர் சொல்கிறார்’ என்பதே அவர்களின் செய்தியாக இருக்க வேண்டும். எலியா, நாத்தான், யோவான் ஸ்நானன் போன்று விளைவுகளைப் பொருட்படுத்தால், உண்மையோடு தம் செய்தியைக் கொண்டுசெல்லும் மனிதர்களையும், தங்களுக்கு உண்டான யாவற்றையும் தியாகம் செய்ய நேரிடினும் சத்தியத்தைத் துணிவோடு பேசும் மனிதர்களையும் தேவன் அழைக்கிறார்.தீஇவ 142.1

    ஆபத்துக்காலத்தில், சகல பெலத்தோடும் துணிவோடும் செல் வாக்கோடும் செயல்படவேண்டும். அந்நேரத்தில், உறுதியோடு நீதி மார்க்கத்தில் நிற்க அஞ்சுகிற மனிதர்களை தேவனால் பயன் படுத்தமுடியாது. உன்னதங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின்சேனை களுக்கு எதிராகவும், இவ்வுலக அந்தகார அதிபதிகளுக்கு எதிராகவும், துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் எதிராகவும், தீமைக்கு எதிராகவும் உண்மையாய் யுத்தம் செய்யும் மனிதர்களையே அவர் அழைக்கிறார். அப்படிப்பட்டவர்களிடமே, ‘நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, உன் எஜமானுடைய சந்தோஷத் திற்குள் பிரவேசி’ என்று சொல்கிறார். மத்தேயு 25:23தீஇவ 142.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents