Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    60 - எதிர்கால மகிமையின் தரிசனம்

    சபையின் கொடிய அந்தகார நாட்களானதீமையுடனான நீண்ட காலப் போராட்டத்தில், யேகோவாவின் நித்திய நோக்கம் குறித்த வெளிப்பாடுகள் சபைக்குக் கொடுக்கப் பட்டன. தற்காலச் சோத னைகளையும் தாண்டி, வருங்கால வெற்றிகளை நோக்கிப்பார்க்கிற வாய்ப்பு அவருடைய பிள்ளைகளுக்கு அருளப்பட்டது. வருங் காலத்தில், போராட்டம் நிறைவுற்று, மீட்கப்பட்டவர்கள் வாக்குத் தத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். காலங்காலமாக நடை பெற்று வரும் போராட்டம் சடுதியில் முடிவடைந்து, வாக்குத்தத்த ஆசீர்வாதங்கள் விரைவிலேயே பூரணமாக நிறைவேறப்போகின் றன. அந்த வருங்கால மகிமை குறித்த இந்தத் தீர்க்கதரிசனங்கள், அதாவது, தேவகரத்தால் வரையறுக்கப்பட்ட இந்தக் காட்சிகள், இன்றுள்ள அவருடைய சபையினருக்கு மிகவும் பிரியமானவை களாக இருக்கவேண்டும்.தீஇவ 722.1

    முற்காலத் தீர்க்கதரிசிகளால் சபைக்குக் கொடுக்கப்பட்ட ஆறு தலின் செய்திகள் ஏராளம். ‘’என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங் கள்’‘ என்பதே ஏசாயாவுக்குத் தேவகட்டளையாயிருந்தது. ஏசாயா 40:1. அந்தக் கட்டளையோடுகூட அருமையான தரிசனங்கள் கொடுக்கப்பட்டன. அதன்பிறகான காலங்கள் முழுவதிலும் விசு வாசிகளின் நம்பிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் அவை விளங்கி வருகின்றன. ஒவ்வொரு காலத்திலுமே தேவ பிள்ளைகள் மனிதரால் புறக்கணிக்கப்படுகின்றனர்; உபத்திரவத்திற்குள்ளாகின் றனர், கைவிடப்படுகின்றனர். ஆனாலும், அவருடைய நிச்சய வாக் குத்தத்தங்கள் அவர்களைத் தாங்கிவருகின்றன. ‘’உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சி யாகவும் வைப்பேன்’‘ எனும் நிச்சயத்தை அவர்தம் சபைக்கு நிறை வேற்றும் காலத்தை அவர்கள் விசுவாசத்தோடு எதிர்நோக்கி இருக் கின்றனர். ஏசாயா 60:15.தீஇவ 722.2

    போராட்டச் சபை வீரர்கள் உபத்திரவத்தையும் வேதனையை யும் சகிக்க அழைக்கப்படுகின்றனர். ஏனெனில், மும்முரமான யுத்த மில்லாமல் சபைக்கு வெற்றி கிடைப்பதில்லை. ‘’துன்பத்தின் அப்ப மும், உபத்திரவத்தின் தண்ணீருமே’’நம் அனைவருக்குமான பாடா யிருக்கிறது. ஏசாயா 30:20. ஆனாலும், விடுவிக்கவல்ல ஒருவரில் தங்கள் நம்பிக்கையை வைக்கும் எவரும் முற்றிலும் மேற்கொள்ளப் படுவதில்லை. இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்த வரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே. உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர் சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன். நீதண் ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறு களைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக் கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினி ஜுவாலை உன்பேரில் பற்றாது. நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்ச கருமாயிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மீட்கும் பொரு ளாக எகிப்தையும் உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபா வையும் கொடுத்தேன். நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம் பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால், உனக் குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களை யும் கொடுப்பேன்.” ஏசாயா 43:1-4.தீஇவ 723.1

    தேவனிடம் பாவமன்னிப்பு உண்டு; நமக்காகச் சிலுவையில் மரித்து, உயிர்த்தெழுந்த நம் ஆண்டவராகிய இயேசுவின் புண்ணி யங்களால் நாம் முற்றிலும் இலவசமாக ஏற்றுக்கொள்ளப்படுகி றோம். தாம் தெரிந்துகொண்டவர்களுக்குத் தேவன் அறிவிப்பதாக ஏசாயா கேட்ட வார்த்தைகள் இவைகளே: ‘’நான், நானே உன் மீறு தல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன். நாம் ஒருவரோடொருவர் வழக்காடும்படி எனக்கு நினைப்பூட்டு; நீ நீதிமானாக விளங்கும் படி உன் காரியத்தைச் சொல்.’‘ ‘’கர்த்தராகிய நான் இரட்சகரென் றும், யாக்கோபின் வல்லவர் உன் மீட்பரென்றும் அறிந்துகொள் வாய்.’‘ வசனங்க ள் 25, 26:60:16.தீஇவ 723.2

    ’’தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்” என்றார் தீர்க்கதரிசி. அவர்களைப் பரிசுத்த ஜன மென்றும், கர்த்தரால் மீட்கப்பட்டவர்களென்றும் சொல்லுவார் கள்.’‘ ‘’சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும் அவர்கள் தங்கள் மகிமைக் கென்று நாட்டின் நீதியின் விருட்சங்களென்னப்படவும்” அவன் நியமிக்கப்பட்டார்.தீஇவ 724.1

    “எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்;
    பரிசுத்த நகரமாகிய எருசலமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்,
    விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும்
    இனி உன்னிடத்தில் வருவதில்லை.

    “தூசியை உதறிவிட்டு எழுந்திரு;
    எருசலேமே, வீற்றிரு;
    சிறைப்பட்டுப் போன சீயோன் குமாரத்தியே,
    உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு”

    ’’சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே,
    தேற்றரவற்றவளே , இதோ, நான் உன் கல்லுகளைப் பிரகாசிக்கும்படி வைத்து,
    நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி,

    “உன் பலகணிகளைப் பளிங்கும்,
    உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் உச்சிதமான கற்களுமாக்குவேன்.

    “உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்;
    உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.
    நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்

    “கொடுமைக்குத் தூரமாவாய் பயமில்லாதிருப்பாய்;
    திகிலுக்குத் தூரமாவாய் அது உன்னை அணுகுவதில்லை . இதோ, உனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடினால்,
    அது என்னாலே கூடுகிற கூட்டமல்ல;
    எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ,
    அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள்....

    “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்;
    உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்
    இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களு
    டைய நீதியுமாய் இருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்.”
    தீஇவ 724.2

    ஏசாயா 25:8; 62:12; 61:3; 52:1,2; 54:1-17.

    சபையானது கிறிஸ்துவின் நீதியெனும் போர்க்கவசத்தை அணிந்துகொண்டு, இறுதிப் போராட்டத்திற்குள் நுழைய வேண்டும். ‘’சந்திரனைப் போல அழகும், சூரியனைப்போலப் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளதாய்’‘ ஜெயிக் கிறதாகவும் ஜெயிப்பதாகவும் அது உலகம் முழுவதிற்கும் செல்ல வேண்டும். உன்னதப்பாட்டு 6:10.தீஇவ 725.1

    சபையின் இறுதி விடுதலைக்குச் சற்று முன்னான காலம்தான், தீயவல்லமைகளோடான போராட்டத்தில் அதற்கு ஏற்படும் மிகுந்த அந்தகாரமான காலமாயிருக்கும். ஆனால் தேவனில் நம்பிக்கை கொள்ளும் எவரும் பயப்படத் தேவையில்லை; ஏனெனில்,தீஇவ 725.2

    கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள் எத்தைப் போல் இருக்கையில் “தேவன் தம்முடைய சபைக்கு பெரு வெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமாய்” இருப்பார். ஏசாயா 25:4.தீஇவ 725.3

    அந்த நாளில்தானே நீதிமான்களுக்கு விடுதலை கிடைக்கு மென்று வாக்களிக்கப்பட்டிருக்கிறது. சீயோனிலுள்ள பாவிகள் திகைக்கிறார்கள்; மாயக்காரரை நடுக்கம் பிடிக்கிறது; பட்சிக்கும் அக்கினிக்கு முன்பாக நம்மில் தரித்திருப்பவன் யார்? நித்திய ஜுவாலைக்கு முன்பாக நம்மில் தாபரிப்பவன் யார் என்கிறார்கள். நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய் வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காத படிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ் சிந்துவதற்கான யோசனை களைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ, அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண் கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவ னுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும். “ஏசாயா 33:14-16.தீஇவ 725.4

    ’’என் ஜனமே, நீ போய் உன் அறைக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள். இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்மு டைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்’‘ என்பதே தமக்கு உண்மையாயிருப்பவர்களுக்கு தேவன் சொல்லும் வார்த்தைகளா கும். ஏசாயா 26:20, 21.தீஇவ 726.1

    மகத்தான நியாயத்தீர்ப்பின் நாளைப்பற்றின தீர்க்கதரிசனத் தில், தங்கள் தேவனைச் சமாதானத்தோடு சந்திக்க ஆயத்தமாயிரா தோரின் அபாயநிலை குறித்த காட்சிகள் யேகோவாவின் தூதுவர் களுக்குக் கொடுக்கப்பட்டன.தீஇவ 726.2

    ’’இதோ, கர்த்தர் தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து, அதின் குடிகளைச் சிதறடிப்பார். அவர்கள் நியாயப்பிர மாணங்களை மீறி, கட்டளையை மாறுபாடாக்கி, நித்திய உடன்படிக் கையை முறித்தார்கள். இதினிமித்தம் சாபம் தேசத்தைப் பட்சித்து, அதின் குடிகள் தண்டிக்கப்பட்டார்கள். மேளங்களில் சந்தோஷம் ஓயும், களிகூருகிறவர்களின் சந்தடி ஒழியும், வீணையின் களிப்பு நின்றுபோம். “ஏசாயா 24:1-8.தீஇவ 726.3

    “அந்த நாளினிமித்தம் ஐயோ!
    கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது;
    அது சங்காரம்போலச் சர்வவல்லவரிடத்திலிருந்து வருகிறது.
    விதையானது மண்கட்டிகளின்கீழ் மக்கிப்போயிற்று;
    பயிர் தீய்ந்து போகிறதினால் பண்டசாலைகள் பாழாகிக்
    களஞ்சியங்கள் இடிந்துபோயின.
    மிருகங்கள் எவ்வளவாய்த் தவிக்கிறது;
    மாட்டுமந்தைகள் தங்களுக்கு மேய்ச்சல் இல்லாததினால் கலங்குகிறது;
    ஆட்டுமந்தைகளும் சேதமாய்ப்போயிற்று.
    திராட்சச்செடி வதங்கி,
    அத்தி மரம் சாரமற்றுப்போகிறது;
    மாதளை, பேரீச்சம், கிச்சலி முதலிய வெளியின் செடிகள் எல்லாம் வாடிப்போயின;
    சந்தோஷம் மனுபுத்திரரைவிட்டு ஒழிந்துபோயிற்று.
    தீஇவ 726.4

    ” யோவேல் 1:15-18, 12.

    பூலோக வரலாற்றின் முடிவில் உண்டாகும் அழிவைக் கண்டு, ‘’நான் பேசாமல் அமர்ந்திருக்கக்கூடாது; என் ஆத்துமாவே, எக் காளத்தின் சத்தத்தையும், யுத்தத்தின் ஆர்ப்பரிப்பையும் கேட்டாயே. நாசத்துக்கு மேல் நாசம் வருகிறதாகக் கூறப்படுகிறது; தேசமெல் லாம் பாழாகிறது’‘ என்று கூக்குரலிட்டார் எரேமியா. எரே 4:19, 20.தீஇவ 727.1

    தேவனுடைய பழிதீர்க்கும் நாள் குறித்து, ‘’நரரின் மேட்டிமை தாழ்ந்து, மனுஷரின் வீறாப்புத் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நா ளில் உயர்ந்திருப்பார். விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோம். பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும் அந்நாளிலே அவ ருடைய பயங்கரத்திற்கும் அவருடைய மகிமைப் பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் வெடிப்புகளிலும் குன்றுகளின் சந்துகளில் லும் புகுந்துகொள்ளும்படிக்கு, மனுஷன் பணிந்துகொள்ளத் தனக்கு உண்டாக்கியிருந்ததன் வெள்ளி விக்கிரகங்களையும், தன் பொன் விக்கிரகங்களையும், மூஞ்சூறுகளுக்கும் துரிஞ்சில்களுக்கும் எறிந்து விடுவான்’‘ என்கிறார் ஏசாயா. ஏசா 2:17-21.தீஇவ 727.2

    மனிதனின் அகந்தைதாழ்த்தப்படும் மறுரூப நாளைக்குறித்து,தீஇவ 727.3

    “பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது;
    வானங்களைப் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது.
    பர்வதங்களைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன;
    எல்லாக் குன்றுகளும் அசைந்தன.
    பின்னும் நான் பார்க்கும்போது, மனுஷனில்லை;
    ஆகாசத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின.
    பின்னும் நான் பார்க்கும்போது, கர்த்தராலும்,
    அவருடைய உக்கிர கோபத்தாலும் பயிர்நிலம் வனாந்தரமாயிற்று;
    அதின் பட்டணங்களெல்லாம் இடிந்துபோயின.
    ஐயோ! அந்தநாள் பெரியது;
    அதைப் போலொத்த நாளில்லை;
    அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்;
    ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்”
    என்று சாட்சியிடுகிறார் எரேமியா.
    தீஇவ 727.4

    எரேமியா 4:23-26; 307.

    தேவனுடைய சத்துருக்களுக்கு நேரிடும் கோபாக்கினையின் நாள்தான், அவருடைய சபைக்கு இறுதி விடுதலையின் நாளாயிருக் கும். தீர்க்கதரிசி இப்படியாகச் சொல்கிறார்:தீஇவ 728.1

    ’தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி,
    தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.
    மனம் பதறுகிறவர்களைப்பார்த்து;
    நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்;

    இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும்,
    உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்;
    அவன் வந்து உங்களை இரட்சிப்பார்
    என்று சொல்லுங்கள்.’
    தீஇவ 728.2

    ’’அவன் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கி விடு வார்; கர்த்தரே இதைச் சொன்னார். “ஏசாயா 35:3, 4; 25:8. பூமியின் ஜாதிகளிலிருந்து மீதமான சபையைக் கூட்டிச்சேர்க்க, மகிமையின் தேவன் பரிசுத்த தூதர்கள் அனைவரோடும், பரலோகத்திலிருந்து இறங்கி வருவதைத் தீர்க்கதரிசி கண்டபோது, அவருக்காகக் காத் திருந்தவர்கள் பின்வருமாறு ஒருமனதோடும் ஆனந்தக் களிப்போ டும் சொன்னதையும் அவன் கேட்டார்.தீஇவ 728.3

    “இதோ, இவரே நம்முடைய தேவன்;
    இவருக்காகக் காத்திருந்தோம்;
    இவர் நம்மை இரட்சிப்பார்,
    இவரே கர்த்தர்,
    இவருக்காகக் காத்திருந்தோம்;
    இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம்.’‘
    தீஇவ 728.4

    ஏசாயா 25:9.

    நித்திரையிலிருந்த பரிசுத்தவான்களைத் தேவகுமாரன் அழைக் கும் சத்தம் கேட்டது; மரணத்தின் சிறையிலிருந்து அவர்கள் வெளி யேறுவதைத் தீர்க்கதரிசிகண்டபோது, இப்படியாக அவன் சத்தமிட் டார்: ‘மரித்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடைய வர் களோடேகூட எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர் களே விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பூண்டுகளின் மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; மரித்தோரைப் பூமி புறப்படப் பண்ணும்.’‘தீஇவ 728.5

    “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு,
    செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்.
    அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்;
    ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்.’‘
    தீஇவ 729.1

    ஏசாயா 26:19; 35:5, 6

    பாவத்தையும் மரணத்தையும் வென்றவர்கள் தங்கள் சிருஷ்டி கரின் பிரசன்னத்தில் சந்தோஷத்துடன் காணப்பட்டதையும், ஆதி யில் மனிதன் தேவனோடு பேசினது போல சுதந்தரமாகப் பேசிக் கொண்டிருந்ததையும் தரிசனங்களில் கண்டார் தீர்க்கதரிசி. ‘’நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களி கூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன். நான் எருசலேமின் மேல் களிகூர்ந்து, என் ஜனத்தின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட் கப்படுவதில்லை. வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.தீஇவ 729.2

    “வனாந்தரத்திலே தண்ணீர்களும்,
    கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.
    வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும்,
    வறண்ட நிலம் நீருற்றுகளுமாகும்.”

    “முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும்,
    காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச் செடி எழும்பும்”

    “அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்;
    அது பரிசுத்த வழி எனப்படும்;
    தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை;
    அந்த வழியில் நடக்கிறவர்கள்
    பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.”
    தீஇவ 729.3

    ’’எருசலேமுடன் பட்சமாய்ப் பேசி, அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள். “ஏசாயா 65:18, 19;33:24;35:6, 7; 55:13; 35:8; 40:2.தீஇவ 729.4

    மீட்கப்பட்டவர்கள் பாவத்திலிருந்தும், சாபத்தின் சகல அடை யாளங்களிலிருந்தும் விடுதலை பெற்றவர்களாக, தேவனுடைய நகரத்தில் வசித்ததைத் தீர்க்கதரிசி கண்டபோது, பெருமகிழ்ச்சி யடைந்து இப்படியாகச் சொன்னார்: ‘’எருசலேமை நேசிக்கிற நீங் களெல்லாரும் அவளோடேகூடச் சந்தோஷப்பட்டு, அவளைக் குறித்துக் களிகூருங்கள்;தீஇவ 730.1

    ’’இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும்
    உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது;
    உன் மதில்களை இரட்சிப்பென்றும்,
    உன்வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய்

    “இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும்,
    சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும்,
    கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும்,
    உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.

    “உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை;
    உன் சந்திரன் மறைவதுமில்லை;
    கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்,
    உன் துக்க நாட்கள் முடிந்துபோம்.

    “உன் ஜனங்கள் யாவரும் நீதிமான்களும்,
    என்றைக்கும் பூமியைச் சுதந்தரிக்குங் குடிகளும்,
    நான் நட்ட கிளைகளும்,
    நான் மகிமைப்படும்படி
    என் கரங்களின் கிரியைகளுமாயிருப்பார்கள்’‘
    தீஇவ 730.2

    ஏசாயா 66:10; 60:18-21.

    தேவனுடைய தீர்க்கதரிசனங்களில் அன்றி, எந்த மனிதனும் கேட்டிராத அல்லது உள்ளத்தால் உணர்ந்திராத இசையும் பாடலும் போன்ற இசையையும் பாடலையும் தீர்க்கதரிசி அங்குக் கேட்டார். ‘’கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலை யின் மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ் சலமும் தவிப்பும் ஓடிப்போம்.’‘ ‘’ஆடுவாரும் பாடுவாரும் அங் கிருப்பார்கள்.’‘ ‘’அவர்கள் சத்தமிட்டுக் கெம்பீரிப்பார்கள்; கர்த்த ருடைய மகத்துவத்தினிமித்தம் ஆர்ப்பரிப்பார்கள். “ஏசாயா 35:10; 51:3; சங்கீ தம் 87:7; ஏசா 24:14.தீஇவ 730.3

    ஆதியில் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் சந்தோஷத்தைக் கொடுத்த இனிய அலுவல்களையே மீட்கப்பட்டவர்கள் புதிதாக் கப்பட்ட பூமியில் செய்வார்கள். வயல்கள், தோட்டங்கள் என ஏதேனின் வாழ்க்கையை அங்கு வாழலாம். வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொ ருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை ; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்து கொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அனுபவிப்பார்கள். “ஏசாயா 65:21, 22.தீஇவ 731.1

    அங்கே ஒவ்வொரு ஆற்றலும் வளர்ச்சியடையும், ஒவ்வொரு திறனும் பெருகும். மேன்மையான முயற்சிகளை மேற்கொள்வார் கள். உயர்வான ஆசைகள் நிறைவேறும், உன்னதமான குறிக்கோள் களுக்குச் செயலுருவம் கிடைக்கும், வெல்ல வேண்டிய சிகரங்கள் அங்கு இருக்கும்; விஞ்சவேண்டிய புதிய அற்புதங்களும் இருக் கும். புரிந்துகொள்ள வேண்டிய புதிய சாத்தியங்கள் அங்கு இருக் கும். ஆவி, ஆத்துமா, சரீரத்தை ஒருங்கிணைத்துப் படிக்கவேண் டிய புதிய காரியங்களும் இருக்கும்.தீஇவ 731.2

    இந்த மகத்தான காட்சிகள் எந்தத் தீர்க்கதரிசிகளுக்கெல்லாம் வெளிப்படுத்தப்பட்டனவோ, அவர்கள் எல்லோரும் இவற்றின் முழு அர்த்தத்தையும் அறிய விரும்பினார்கள். அவர்கள், ‘’கருத் தாய் ஆராய்ந்து பரிசோதனை பண்ணினார்கள். தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர். இன்ன காலத்தைக் குறித்தாரென்ப தையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந் தார்கள். தங்கள் நிமித்தமல்ல, நமது நிமித்தமே இவைகளைத் தெரி வித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது; பரலோகத் திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப் பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. ‘’1பேதுரு 1:10 - 12.தீஇவ 731.3

    இவை நிறைவேறப்போகும் காலத்தின் விளிம்பில் இருக்கும் நமக்கு, அவை குறித்த விளக்கங்கள் எத்தகைய உயிரோட்டமான ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்; நமது காலத்தின் அருமை பற்றிய எத்தகைய உணர்வை உண்டாக்கவேண்டும்! நம் முதல் பெற்றோர் ஏதேனைவிட்டு வெளியேறியது முதல், தேவபிள்ளைகள் இந்த நிகழ்ச்சிகளைத்தான் எதிர்பார்த்து, காத்து, ஜெபித்து வருகிறார்கள்.தீஇவ 732.1

    சக பயணியே, நாம் இன்னமும் பூலோகச் செயல்பாடுகளின் இருளிலும், குழப்பத்திலும் தான் இருந்துவருகிறோம்; ஆனால் நமக்கு விடுதலையையும் இளைப்பாறுதலையும் தர, நம் மீட்பர் சீக் கிரத்தில் வரவிருக்கிறார். தேவகரம் சித்தரித்திருக்கிற பாக்கியத்தை இது முதல் நாம் விசுவாசத்தோடு எதிர்நோக்கி இருப்போம். உல கத்தாரின் பாவங்களுக்காக மரித்தவர், தம்மேல் விசுவாசம் வைக் கிற யாவருக்கும் பரதீசின் விசாலமான கதவுகளைத் திறக்கிறார். சீக்கிரமே யுத்தம் முடிந்து, ஜெயம் கிடைக்கும். யாரை மையமாக வைத்து நித்திய வாழ்விற்கான நம் நம்பிக்கை இருக்கிறதோ, அவரை நாம் சீக்கிரத்தில் காண்போம். அவருடைய பிரசன்னத்தில் இந்த வாழ்வின் உபத்திரவங்களும் சோதனைகளும் ஒன்றுமில்லாத வைகளாகத் தோன்றும். முந்தினவைகள் இனி நினைக்கப்படுவது மில்லை , மனதிலே தோன்றுவதுமில்லை .’‘ ‘’ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான் உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள். நீங் கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப் பட்டதைப் பெறும் படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதா யிருக்கிறது. வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம் பண்ணார்.’’’’இஸ்ரவேலோ, கர்த்தராலே நித்திய இரட்சிப் பினால் இரட்சிக்கப்படுவான்; நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்.’‘ ஏசாயா 65:17; எபிரெயர் 10:35-37; ஏசாயா 45:17.தீஇவ 732.2

    நிமிர்ந்து பாருங்கள், நிமிர்ந்து பாருங்கள். உங்கள் விசுவாசம் தொடர்ந்து பெருகுவதாக. மீட்கப்பட்டவர்களுக்காக ஆயத்தப்பட்ட டிருக்கும் பெரிதும் , விசாலமும், அளவற்ற மகிமையும் கொண்ட நகரத்தின் வாசல்களை நோக்கிச் செல்லும் குறுகலான பாதையில் இந்த விசுவாசமே உங்களை வழிநடத்திச் செல்வதாக. இப்படி யிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங் கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடைய வேண்டு மென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமை யோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.’‘ யாக்கோபு 5:7, 8.தீஇவ 732.3

    பரலோகப் பிரமாணம் தவிர வேறு எந்தப் பிரமாணமும் தங் களுக்குத் தெரியாது எனும் நிலையில் இரட்சிக்கப்பட்ட தேசத்தார் இருப்பார்கள். ஸ்தோத்திரத்தின் வஸ்திரங்களையும், துதியின் வஸ் திரங்களையும் தரித்த அனைவரும் ஒன்று பட்டு, சந்தோஷமாக இருக்கிற ஒரு குடும்பமாகத் திகழ்வார்கள். அத்தகைய காட்சி யோடுங்கூட, விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஒன்றுகூடிப் பாடு வார்கள், தேவபுத்திரர் ஆனந்தத்தால் கெம்பீரிப்பார்கள். அதே வேளையில், தேவனும் கிறிஸ்துவும் ஒருசேர , ” இனிப் பாவமும் மரணமும் உண்டாயிருப்பதில்லை’‘ என்று சொல்வார்கள்.தீஇவ 733.1

    ’’அப்பொழுது மாதந்தோறும், ஓய்வு நாள்தோறும், மாம்ச மான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுது கொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.’’கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும்.’‘ ‘’கர்த்தராகிய ஆண்டவர் எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கப் பண்ணுவார்.’‘ ‘’அக்காலத்திலே சேனைகளின் கர்த்தர் தமது ஜனத்தின் மீதியானவர்களுக்கு மகிமையான கிரீடமாகவும் அலங்காரமான முடியாகவும் இருப்பார்’‘தீஇவ 733.2

    ’’கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்வார்; அவன் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச் செய்து, அதின் அவாந்தர வெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப் போலவும் ஆக்குவார்.’‘ ‘’லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்.’‘ ‘ நீஇனிக்கைவிடப்பட்ட வன் என்னப்படாமலும், உன் தேசம் இனிப்பாழான தேசமென்னப் படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல் லப்படும் மணவாளன் மணவாட்டியின் மேல் மகிழ்ச்சியாயிருப்பது போல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.’‘ ஏசாயா 66:23:40:5; 61:11; 28:5; 51:3; 35:2:62:4, 5.தீஇவ 733.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents