Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    13 - இங்கே உனக்கு என்ன வேலை?

    ஓரேப் மலைக்கு எலியா ஓடிப்போனது மனிதர் எவருக்கும் தெரியாவிட்டாலும் தேவனுக்குத் தெரிந்திருந்தது. களைப்பும் சோர் வும் அடைந்திருந்த தீர்க்கதரிசி, தன்னை அழுத்திக்கொண்டிருந்த அந்தகாரச் சக்திகளோடு தனியாகப் போராடுமாறு தேவன் அவனை விட்டுவிடவில்லை. எலியாவின் தேவைகளை விசாரிக் கவும், இஸ்ர வேலுக்கான தேவதிட்டத்தை அவருக்கு விவரிக்க வும், தேவனால் அனுப்பப்பட்ட பலத்த தூதன் ஒருவன் மூலம் அவர் தங்கியிருந்த குகைவாசலில் அவனைச் சந்தித்தார் தேவன்.தீஇவ 167.1

    எலியா முற்றிலும் தேவனை நம்ப வேண்டியிருந்தது. அப் போதுதான், பாகால் தொழுகைக்குள்ளாகச் சிக்குண்டவர்களிடத் தில் அவன் தன் ஊழியத்தை முழுமையாக நிறைவேற்றக்கூடும். கர்மேலின் உச்சியில் கிடைத்த முக்கிய வெற்றி, மேலும் அநேக வெற்றிகளுக்கு வழி உண்டாக்கியது. தனக்கு முன் அற்புத வாய்ப்பு கள் உண்டாயிருக்க, யேசபேலின் மிரட்டல்களால் வழிமாறினான். அப்போது அவன் இருந்த பெலவீன மான நிலையையும், அவனுக்கு கர்த்தர் கொடுக்க விரும்பின் வாய்ப்பான நிலையையும் அந்தத் தேவமனிதன் ஒப்பிட்டு அறிந்துகொள்ளவேண்டியிருந்தது. தீஇவ 167.2

    (1இராஜாக்கள் 19:9-18 இன் அடிப்படையில் இந்த அத்தியாயம் அமைந்துள்ளது.) தீஇவ 167.3

    சோதிக்கப்பட்ட தம் ஊழியனைச் சந்தித்த தேவன், ‘’எலி யாவே, இங்கே உனக்கு என்ன காரியம்? கேரீத் நதியண்டைக்கும் அதன்பிறகு சாறிபாத் விதவையிடமும் நான் உன்னை வழிநடத்தி னேன். இஸ்ரவேலுக்குத் திரும்பிச் சென்று, கர்மேலில் சிலை வழி பாட்டுக்காரரான பூசாரிகளை வெல்லுமாறு நான் உனக்குக் கட்டளை யிட்டேன். யெஸ்ரயேலின் வாசலண்டைக்கு ராஜாவின் இரதத்தை வழிநடத்த நான் உன்னை என் பெலத்தால் இடைகட்டினேன். அவசர அவசரமாக வனாந்தரம் நோக்கி உன்னை ஓடிவரச் சொன் னது யார்? இங்கே உனக்கு என்ன வேலை?’‘ என்று கேட்டார்.தீஇவ 168.1

    ஆத்துமாக்கசப்போடு தன் குறையைத் தெரிவித்தான் எலியா. ‘’சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக் கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளி விட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம் முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்று போட்டார்கள்; நான் ஒருவன் மட்டும் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள்’‘ என்று வெதும்பினான்.தீஇவ 168.2

    கெபியைவிட்டு வெளியே வந்து, மலையின்மேல் கர்த்தருக்கு முன்பாக நின்று, கர்த்தருடைய வார்த்தைக்குச் செவிகொடுக்குமாறு தீர்க்கதரிசியிடம் தூதன் சொன்னான். ‘அப்பொழுது அவர், ‘’நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில்” என்றார்; அப்பொழுது இதோ, கர்த்தர் கடந்து போனார்; கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக் கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆனாலும் அந்தக் காற்றில் கர்த்தர் இருக்கவில்லை; காற்றிற்குப்பின் பூமியதிர்ச்சி உண்டாயிற்று: பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை. பூமி யதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லிய சத்தம் உண் டாயிற்று. அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, கெபியின் வாசலில் நின் றான்.’தீஇவ 168.3

    தெய்வீகவல்லமையின் மகத்தான வெளிப்பாடுகளில் அல்ல, அமர்ந்த மெல்லிய சத்தத்தில் தம்மைத் தமது அடியானுக்கு வெளிப் படுத்த தேவன் முடிவு செய்தார். ‘’எப்பொழுதும் மகத்தான காரியம் செய்வது மட்டுமே தேவநோக்கத்தை நிறைவேற்றுவதற்கான சிறந்த வழியாக இருக்கவேண்டியது இல்லை” என்பதை எலியாவுக்கு அவர் கற்றுக்கொடுக்க விரும்பினார். கர்த்தருடைய வெளிப் பாட்டை எலியா எதிர்பார்த்திருந்த வேளையில், பலத்த புயல் வீசி னது; மின்னல் வெட்டியது; அக்கினி பாய்ந்தது. ஆனால், அவற்றி லெல்லாம் தேவன் இருக்கவில்லை. அதன்பிறகு அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டாயிற்று, கர்த்தருடைய பிரசன்னத்திற்கு முன் தன் முகத்தை மூடிக்கொண்டான். அவனுடைய எரிச்சல் அடங்கியது. அவனுடைய ஆத்துமா மென்மையாகி, இளகியது. உறுதியான விசுவாசத்தோடு, தேவனை முற்றிலும் சார்ந்திருந்தால், இக்கட் டான சமயத்தில் அனுகூலமான சகாயத்தைக் கண்டுகொள்ளலாம் என்பதை இப்போது அவன் கண்டுகொண்டான்.தீஇவ 168.4

    தேவ சத்தியத்தை நன்கு படித்துப் போதிப்பதால் மட்டும், ஆத்துமாக்களுக்குப் பாவத்தை உணர்த்திவிடவோ, மனந்திரும்பச் செய்துவிடவோ முடியாது; நாவன்மையாலும் பகுத்தறிவாலும் அது கூடாது; குணத்தை மாற்றி, வளரச் செய்வதற்காக அமைதியாகவும் உறுதியாகவும் செயல்படுகிற பரிசுத்தாவியின் இனிய தூண்டுதல் களால் மட்டுமே மனிதரின் இருதயங்களைச் சென்றடைய முடியும். தேவ ஆவியானவரின் அமர்ந்த, மெல்லிய சத்தமே இதயத்தை மாற்றுவதற்கான வல்லமை பொருந்தியதாகும்.தீஇவ 169.1

    ’’எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம்?” என்ற சத்தம் கேட்டது. மீண்டுமாக, சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய தீர்க்கதரிசி களைப் பட்டயத்தினால் கொன்று போட்டார்கள், நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடு கிறார்கள்” என்று பதிலளித்தான் தீர்க்கதரிசி.தீஇவ 169.2

    ’இஸ்ரவேலிலுள்ள துன்மார்க்கர் தண்டிக்காமல் விடப்படுவ தில்லை ‘ என எலியாவுக்குப் பதிலுரைத்தார் ஆண்டவர். அந்தச் சிலைவழிபாட்டுத் தேசத்தாரைத் தண்டிப்பதற்கு, தேவனால் விசே ஷமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர் மூலம் அவர் நோக்கம் நிறை வேறவிருந்தது. தேவன் பக்கம் சேர அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்கும்படியாக, கண்டிப்புமிக்க ஒரு பணி செய்யப்படவேண்டி யிருந்தது. எலியாதாமே இஸ்ரவேலுக்குத் திரும்பிச் சென்று, ஒரு சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதற்கான பாரத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தது.தீஇவ 169.3

    ’’நீதமஸ்குவின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப் போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணு. பின்பு, நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணு. அதன்பின்னர் ஆபேல் மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவை உன் ஸ்தானத் திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம் பண்ணு, அதன்பிறகு சம்பவிப் பதாவது: ஆசகேலின் பட்டயத்திற்குத் தப்பினவனையெகூ கொன்று போடுவான்; யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனை எலிசா கொன்றுபோடுவான்’‘ என்று எலியாவுக்குக் கட்டளையிட்டார் கர்த்த ர்.தீஇவ 169.4

    தான் மட்டுமே இஸ்ரவேலின் மெய்யான தேவனைத் தொழுது வந்ததாக, எலியா நினைத்திருந்தான். ஆனால், நெடுநாட்களாக நீடித்த வழிவிலகலின் மத்தியிலும் பலர் தேவனுக்கு உண்மையா யிருந்தார்கள். சகல மனிதர்களின் உள்ளங்களையும் வாசிக்கிறவர் தீர்க்கதரிசிக்கு அதை வெளிப்படுத்தினார். எலியாவிடம் தேவன், ‘’பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ் செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம் பேரை இஸ்ரவேலில் மீதியாக வைத்திருக்கிறேன்’‘ என்று சொன்னார்.தீஇவ 170.1

    ஏமாற்றமும் தோல்வியுமாகத் தெரிந்த அந்தக் காலக்கட்டங் களில், எலியாவுக்கு ஏற்பட்ட அனுபவத்திலிருந்து கற்கவேண்டிய பாடங்கள் அநேகம் உண்டு. பொதுவாக, நீதியானதிலிருந்து வில கும் நிலை காணப்படும் இக்காலக்கட்டங்களில் தேவதாசருக்குத் தேவையான பாடங்கள் இவை; விலைமதிப்பிட முடியாதவை. எலியா தீர்க்கதரிசியின் நாட்களில் இஸ்ரவேலில் பரவியிருந்த வழி விலகலைப் போன்றுதான் இன்றைய காலத்திலும் உள்ளது. தேவ னுக்கு மேலாக மனிதரை உயர்த்துவதிலும், தலைவர்களைப் புகழ் வதிலும், பணம் எனும் கடவுளை வழிபடுவதிலும், சத்தியத்தின் வெளிப்பாடுகளுக்கு மேலாக அறிவியலின் போதனைகளை உயர்த்துவதிலும் ஏராளமானோர் இன்று பாகாலைப் பின்பற்று கிறார்கள். அவநம்பிக்கையும் அவிசுவாசமும் அவர்கள் மனதில் தீமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும், தேவனுடைய நியமங்களுக்குப் பதிலாக மனிதருடைய கொள்கைகளைப் புகுத்து கிறார்கள். தேவவார்த்தையின் போதனைகளுக்கு மேலாக மனித ரின் பகுத்தறிவைப் போற்றவேண்டிய காலம் வந்துவிட்டதாகப் பகிரங்கமாகப் போதிக்கிறார்கள். ‘’நீதிக்கு அளவுகோல் தேவனு டைய பிரமாணம்” என்கிறார்தேவன். இவர்களோ, ‘பிரமாணத்தால் பயன் ஏதும் இல்லை என்கிறார்கள். சகல ஆண்களும் பெண்களும் தேவனுக்குக் கொடுக்கவேண்டிய இடத்தை மனிதரின் ஏற்பாடு களுக்குக் கொடுக்கும்படி அவர்களை, வஞ்சக வல்லமை யோடு சாத்தான் தூண்டிவருகிறான். மனிதரின் சந்தோஷத்திற்கும் இரட் சிப்பிற்கும் தேவன் நியமித்தவற்றை அவர்கள் மறந்துவிடவேண்டு மென்பதே அவன் ஆசை. சகல சத்தியத்திற்கும் எதிரியான அவன் அதற்கு முயன்று வருகிறான்.தீஇவ 170.2

    இத்தகைய வழிவிலகல் எங்கும் பரவிவருகிறபோதிலும் இது மனித இனம் முழுவதையும் பாதித்துவிடுவதில்லை . உலகத்திலுள்ள அனைவருமே பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமல், பாவஞ் செய்து, சத்துருவுடன் சேர்ந்துவிடவில்லை . பாகால் முன் முழங்காலிடாத, அவனுக்குப் பணியாத அநேகமாயிரம் பேர் உள்ளனர்; கிறிஸ்து வையும் பிரமாணத்தையும் அதிகம் அறிய விரும்புகிறவர்கள் ஏராளமாக உள்ளனர்; ‘இயேசு சீக்கிரம் வந்து, பாவம் - மரணத்தின் ஆளுகையை முறித்துப் போடுவார்’ என்று நம்பிக்கையோடு எதிர்பார்த்திருக்கிறவர்கள் அநேகர் உள்ளனர். இவர்கள் தேவ னோடு இருக்கிறவர்கள். ஆனால், தங்களை அறியாமல் பாகா லைத் தொழுவோரும் உண்டு; அவர்களோடு தேவ ஆவியானவர் இன்னும் போராடிவருகிறார்.தீஇவ 171.1

    தேவனையும் அவர் வார்த்தையின் வல்லமையையும் உணர்ந் தவர்களின் நேரடி உதவி இவர்களுக்குத் தேவை. இத்தகைய சம யங்களில் தேவபிள்ளைகள் ஒருவருக்கொருவர் உற்சாகத்தோடு உதவ வேண்டும். வெளிச்சத்தைக் காண ஏங்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உதவ, வேத சத்தியத்தை அறிந்தவர்கள் முயலும் போது, அவர்களுக்குத் தேவதூதர்கள் துணை செய்வார்கள். இவ் வாறு தூதர்கள் முன் செல்லும்போது, ஊழியர்கள் எதற்கும் பயப் படத் தேவையில்லை. அபிஷேகம் பெற்ற ஊழியர்கள் செய்கிற மெய் ஊழியத்தின் விளைவால், அநேகர் சிலைவழிபாட்டிலிருந்து விலகி, ஜீவனுள்ள தேவனைத் தொழுது கொள்வார்கள். மனிதரால் ஏற்படுத்தப் பட்ட காரியங்களுக்கு முக்கியத்துவம் தருவதை நிறுத்திவிட்டு, தேவன் பக்கத்தில் அவருடைய பிரமாணத்திற்காக நிற்பதற்கான தீர்மானத்தை அநேகர் எந்தப் பயமுமில்லாமல் எடுப் பார்கள்.தீஇவ 171.2

    உண்மையும் உத்தமமானவர்களின் இடைவிடாத சேவை யைச் சார்ந்து நடப்பவை ஏராளம். எனவேதான், கீழ்ப்படிவோர் மூலமாக நிறைவேற வேண்டிய தேவ நோக்கத்தைத் தகர்த்துப் போட தன்னால் இயன்ற எல்லா வழிகளிலும் சாத்தான் முயன்று வருகிறான்; தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பரிசுத்தமான உன் னத நோக்கத்தைக் காணமுடியாதவர்களாய்ச் சிலரை மாற்றி, இவ்வாழ்வின் சிற்றின்பங்களினால் திருப்தியடையச் செய்கிறான். இலகுவான வாழ்வைத் தேடி அவர்களை ஓடவைக்கிறான்; அல் லது, நன்மை செய்யக்கூடிய இடத்திலிருந்து, உயர்வான உலக ஆதாயத்தை நாடி ஓடச் செய்கிறான். வேறு சிலருக்கு உபத்திரவம் அல்லது எதிர்ப்பைத் தந்து, அதைரியப்படுத்தி, தங்கள் கடமையை விட்டு ஓடச்செய்கிறான். அப்படிப்பட்ட அனைவரையும் உருக்க மான இரக்கத்தோடே பரலோகம் உற்றுநோக்குகிறது. பேசவிடா மல் ஆத்துமாக்களின் எதிரி தடுத்துள்ள ஒவ்வொரு தேவ பிள்ளை யிடமும், ‘’இங்கே உனக்கு என்ன காரியம்?’‘ என்கிற கேள்வி கேட்கப்படுகிறது. ‘’உலகம் முழுவதற்கும் சென்று, சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, கர்த்தரின் நாளுக்காக மக்களை ஆயத்தப் படுத்துமாறு நான் உனக்குக் கட்டளையிட்டேன். நீ இங்கு என்ன செய்கிறாய்? இங்கு உன்னை அனுப்பியது யார்?” என்று தேவன் கேட்கிறார்.தீஇவ 171.3

    பாவிகளின் இரட்சிப்பில் கிறிஸ்துவுக்கு முன் வைக்கப்பட்ட டிருந்த சந்தோஷம்தான், அவருடைய பாடு -மரணத்தின் மத்தியில் அவரைத் தாங்கின சந்தோஷமாயிருந்தது. இதுவே அவரைப் பின் பற்றும் ஒவ்வொருவரின் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும். இதுவே அவர்களைச் செயலாற்றத் தூண்டும் குறிக்கோளாக இருக்கவேண்டும். தங்களுக்கும் தங்கள் சகமனிதருக்கும் மீட்பு எத்தனை அவசியம் என்பதை ஓரளவாவது உணர்ந்துகொள்கிற வர்களால்தான் மனித இனத்தின் பெருந்தேவையை ஓரளவு புரிந்து கொள்ளமுடியும். பேரழிவின் நிழலில் இருக்கும் ஆயிரக்கணக் கானோர் ஒழுக்க நலனும் ஆவிக்குரிய நலனும் அற்றவர்களாய் இருப்பதைக் காணும்போது அவர்கள் மனதுருகுவார்கள். ஏனெ னில், அந்த நலன்களோடு ஒப்பிடும்போது, உலகப்பாடுகள் இலே சானவைகளாய்த் தெரியும்.தீஇவ 172.1

    ’இங்கே உங்களுக்கு என்ன காரியம்?’ என்கிற இதே கேள்வி குடும்பங்களிடமும் தனிப்பட்ட நபர்களிடமும் கேட்கப்படுகிறது. தேவவார்த்தையின் சத்தியங்களை நன்கு அறிந்த குடும்பங்கள் இன்று பல சபைகளில் உண்டு. அவர்கள் என்ன ஊழியம் செய்ய முடியுமோ, அந்த ஊழியம் தேவைப்படும் இடங்களுக்கு அவர் கள் குடிபெயரும்போது, தங்கள் செல்வாக்கின் எல்லையை விஸ்தார மாக்கலாம். பூமியின் அந்தகாரப் பகுதிகளுக்குச் சென்று, ஆவிக் குரிய இருளால் முற்றிலும் சூழப்பட்டுள்ளவர்களுக்காக, புத்தி யோடும் விடாமுயற்சியோடும் ஊழியம் செய்யுமாறு கிறிஸ்தவக் குடும்பங்களை தேவன் அழைக்கிறார். இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளத் தேவை சுயதியாகமே. ஒவ்வொரு தடையும் நீங்கட்டும் என்று அநேகர் காத்திருக்கும் வேளையில், தேவனற்றவர்களாய் நம்பிக்கையற்றவர்களாய் ஆத்துமாக்கள் மடிந்துகொண்டிருக்கி றார்கள். உலக ஆதாயத்தையும் விஞ்ஞான அறிவையும் பெற, மோசமான பகுதிகளுக்குக்கூடத்துணிந்து செல்லவும், கடுமையான துன்பம் அனுபவிக்கவும், தீங்கனுபவிக்கவும் மனிதர் ஆயத்தமாயி ருக்கின்றனர். ஆனால், பிறர் நலனை முன்னிட்டு அவர்களுக்கு இரட்சகரை அறிவிக்க, அதுபோன்று செய்ய ஆயத்தமாயிருப்போர் யார்?தீஇவ 172.2

    ஆவிக்குரிய பெலமிக்கவர்கள் கஷ்டமான சூழ்நிலைகளில் அளவுக்கு மீறி சோதிக்கப்படுவதால் அதைரியம் ஏற்படலாம்; நம்பிக்கை இழக்கலாம்; வாழ்வில் எதுவுமே அனுகூலமாய் இல்லையென நினைக்கலாம். இதில் புதுமையோ விந்தையோ எது வும் இல்லை. வல்லமையான தீர்க்கதரிசி ஒருவரே ஒரு பெண்ணின் கோபத்திலிருந்து தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தப்பியோடி னான்’ என்பதை அப்படிப்பட்ட அனைவரும் நினைவில் வைத்தி ருக்க வேண்டும். நெடுந்தூரம் ஓடினான்; களைத்துப் போனான்; சோர் வடைந்தான்; மிகுந்த ஏமாற்றத்தால் அவன் ஆத்துமா நொறுங்கிப் போனது; ‘’நான் சாகவேண்டும்” என்று கோரினான். நம்பிக்கை யிழந்து, தோல்வியால் தன் ஊழியப்பணிக்கு ஆபத்து ஏற்பட்ட தாகத் தோன்றியபோதுதான், வாழ்க்கை பற்றிய உன்னத பாடத் தைக் கற்றுக் கொண்டான். மிகுந்த இக்கட்டான சூழ்நிலைகளில் தேவனை நம்பவேண்டியதின் அவசியத்தையும், அப்படி நம்பலா மென்பதையும், தாம் பெலவீனமடைந்திருந்த நேரத்தில்தான் கற்றுக்கொண்டான்.தீஇவ 173.1

    தன்னலமற்ற தியாகப்பணிக்காக தங்கள் ஆற்றலைச் செல்ல விடுகிறவர்களுக்கு மனச்சோர்வும் அவநம்பிக்கையும் வரும் போது, எலியாவின் அனுபவத்திலிருந்து அவர்கள் ஊக்கம் பெற லாம். தேவ ஊழியர்களின் வைராக்கியத்தை, பிறர் தவறாகப் புரிந்துகொள்கிறார்களா? அவர்களை மற்றவர்கள் அவமதிக்கிறார் களா? அவர்களுடைய ஆலோசனைகளையும் கடிந்துரைகளை யும் பிறர் புறக்கணிக்கிறார்களா? அவர்களுடைய சீர்திருத்த முயற்சி களுக்கு எதிர்ப்பு ஏற்படுகிறதா? அதனால் பகையும் ஏற்படுகிறதா? அவர்கள் தேவன்மேல் வைத்திருக்கிற அன்பும் வல்லமையும் அக்கறையும் அத்தகைய நிலையில் ஊழியர்கள் மேல் விசேஷமாக வெளிப்படும்தீஇவ 173.2

    ஆத்துமா மிகவும் பெலவீனப்பட்டிருக்கிற நேரத்தில்தான் கடு மையான பாவத் தூண்டல்களால் சாத்தான் அதைத் தாக்குகிறான். அவ்வாறுதான் தேவகுமாரனை மேற்கொள்ள அவன் நினைத்தான்; ஏனெனில், இதே திட்டத்தால் மனிதர்மேல் அவன் அதிக வெற்றி களைப் பெற்றிருக்கிறான். மன உறுதியின் வல்லமை பெலவீன மடைந்து, விசுவாசம் தோற்கும்போது, நீதிக்காக நெடுநாட்கள் நின்ற மாவீரர்கள் கூட பாவத்தூண்டல்களுக்கு இடமளித்து விடு கிறார்கள். நாற்பது வருட அலைச்சலையும் அவிசுவாசத்தையும் கண்டுகளைப்படைந்த மோசே, சர்வவல்லவரின் மேலான பற்றை ஒருகணம் தவறவிட்டு விடுகிறான். வாக்குத்தத்த தேசத்தின் எல்லை மட்டும் வந்த பிறகு, அவன் தோற்றுப்போகிறான். அப்படித்தான் எலியாவும். வறட்சியும் பஞ்சமும் நீடித்த நாட்களெல்லாம் தன் விசு வாசத்தைக் காத்துக்கொண்டவன், சிறிதும் அச்சமின்றி ஆகாபை எதிர்கொண்டவன், மெய்யான தேவனுக்கு ஒரே சாட்சியாக கர்மேல் மலைமேல் இஸ்ரவேல் தேசத்தார்முன் நின்றவன் ஒரு கணம் தளர்ச்சியடைந்து, தேவன்பேரிலுள்ள தன் விசுவாசத்தை மேற் கொள்ள மரண பயத்துக்கு இடங்கொடுத்துவிடுகிறான்.தீஇவ 174.1

    அதுபோல்தான் இன்றும் இருக்கிறது. சந்தேகம் நம்மை வளைந்து, சூழ்நிலைகள் குழப்பமாகும்போது, வறுமையும் துயர மும் வேதனைப்படுத்தும்போது, யேகோவாவின் மேலுள்ள நமது நம்பிக்கையை நொறுக்க முயல்கிறான் சாத்தான். அப்போதுதான் அவன் நம் தவறுகளை நமக்கு முன்பாகக் கொண்டுவந்து, தேவனை நம்பாதிருக்கவும், அவருடைய அன்பைக் குறித்துக் கேள்வி கேட்க வும் நம்மைத் தூண்டுகிறான். நம் ஆத்துமாவை அதைரியப்படுத்தி, தேவன் மேலுள்ள நம் பற்றை உடைக்க முயல்கிறான்.தீஇவ 174.2

    போராட்டத்தின் முன்னணியில் நிற்பவர்கள் ஒரு விசேஷித்த பணி செய்யும்படி பரிசுத்த ஆவியானவரால் தூண்டப்படுகிறார்கள். அந்தத் தூண்டுதல் குறையும்போது சோர்ந்துபோகிறார்கள். அதி தீரவிசுவாசத்தையும் மனச்சோர்வு அசைத்து விடுகிறது; உறுதியான மன தைரியத்தையும் பெலவீனப்படுத்திவிடுகிறது. ஆனால், தேவன் அதைப் புரிந்துகொள்கிறார்; இந்நிலையிலும் அவர் அன்பும் இரக்கமும் காட்டுகிறார். இருதயத்தின் சிந்தைகளையும் நோக்கங்களையும் அவர் வாசிக்கிறார். சகலமும் இருளாய்த் தோன்றும்போது தேவனை நம்பி, பொறுமையோடு காத்திருப்பதே தேவபணியில் உள்ள தலைவர்கள் கற்கவேண்டிய பாடமாயிருக் கிறது. அவர்களுடைய இக்கட்டான நாளில் பரலோகம் அவர்களைக் கைவிடாது. ஓர் ஆத்துமாதன் வெறுமையை உணர்ந்து தன் தேவனை முற்றிலும் சார்ந்து நிற்கும்போது, அந்த ஆத்துமாவை எவரும் வெல்ல இயலாது. பெலனற்ற ஆத்துமாவானது பெலன் பெற்று வெல்லும்.தீஇவ 174.3

    சோதனை நேரத்தில் தேவனை எவ்வாறு நம்ப வேண்டும்? இதுபற்றி எலியாவின் அனுபவம் கற்றுத்தருகிறது. அதிக பொறுப் பான பதவிவகிப்பவர்களுக்கு மாத்திரம் உரியதல்ல இந்தப் பாடம். போராட்டத்தைச் சந்திக்கிற பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் உரி யது இந்தப் பாடம். எத்துணை பெலவீனராக இருந்தாலும், அவர் களைத் தூக்கி நிறுத்த எலியாவின் பெலனானவர் வல்லவராக இருக்கிறார். ஒவ்வொருவரிடமும் அவர் உத்தமத்தை எதிர்பார்க் கிறார். அவரவர் தேவைப்படி அவரவருக்கு அவர் வல்லமை வழங் குகிறார். மனிதன் தன் சுயபெலத்தில் பெலவீனன். தேவ பெலத்திலோ தீமையை மேற்கொள்ளப் பெலவான்; பிறர் தங்கள் பாவங்களை மேற்கொள்ள அவர்களுக்கு உதவவும் அவன் பெலம்பொருந் தியவன். தேவனைத் தன் அரணாகக் கொண்டவன்மேல் சாத்தான் வெற்றிபெற முடியாது. ‘கர்த்தரிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமை யுமுண்டென்று அவனவன் சொல்லி, அவரிடத்தில் வந்து சேருவான்.’ ஏசா 45:24.தீஇவ 175.1

    உடன் கிறிஸ்தவரே, சாத்தானுக்கு உங்கள் பெலவீனம் தெரி யும். ஆகவே, இயேசுவைப் பற்றிக்கொள்ளுங்கள். தேவ அன் பில் தரித்திருப்பதால், ஒவ்வொரு சோதனையையும் எதிர்கொள்ள லாம். உலகத்தைப் புரட்டும் பாவ அலையைத் தடுப்பதற்கான வல் லமையை கிறிஸ்துவின் நீதியே உங்களுக்குத் தரமுடியும். உங்கள் அனுபவத்தில் விசுவாசம் காணப்படட்டும். விசுவாசம் சகல பாரங் களையும் இலகுவாக்கி, சகல சோர்வுகளையும் நீக்குகிறது. தேவ நடத்துதல்கள் இப்போது புதிராகத் தோன்றலாம்; அவரில் தொடர்ந்து நம்பிக்கைவைப்பதால் அவற்றையும் புரிந்துகொள்ளலாம். அவர் காட்டும் பாதையில் விசுவாசத்தோடு செல்லுங்கள். சோதனை வரலாம். அது ஓடிவிடும்; விசுவாசம் பெலப்படும்; சேவைக்கு ஏற்றவர்களாக உங்களை மாற்றும். நாம் வெறுமனே வாசித்து மகிழ்வதற்காக, பரிசுத்த வரலாறுகள் கொடுக்கப்படவில்லை ; முற் கால தேவமக்களின் வாழ்வில் நடைபெற்ற அதே விசுவாசக் கிரி யைகள் நம் வாழ்விலும் நடைபெறவே அவை எழுதப்பட்டுள்ளன. தேவவல்லமையின் வாய்க்கால்களாக விளங்கும் இதயங்கள் எங் கெல்லாம் உள்ளனவோ, அங் கெல்லாம் கர்த்தர் நிறைவான கிரி யைகளைச் செய்துவருகிறார்.தீஇவ 175.2

    ’’கோதுமையைச் சுளகினால் புடைக்கிறது போல உங்களைப் புடைக்கிறதற்கு சாத்தான் உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக் கொண்டேன்’‘ என்று பேதுருவிடம் சொன்ன வார்த்தைகளையே நம்மிடமும் சொல்கிறார். லூக் 22:31, 32. கிறிஸ்து நமக்காக மரித் தார்; அவர் நம்மை ஒருபோதும் கைவிடார். பாவத்தூண்டலால் மேற்கொள்ளப்பட்டு, நாம் அவரை விட்டுவிடலாம். ஆனால், தம் ஜீவனையே மீட்கும் பொருளாகக் கொடுத்து, நம்மை மீட்டவர் நம்மைவிட்டு ஒருபோதும் விலகுவதில்லை. நம் ஆவிக்குரிய கண் திறக்கப்படுமானால், ஆத்துமாக்கள் அந்திமுன் அடிபணிவதை யும், அரிக்கட்டு சுமக்கும் வண்டிபோல துக்கத்தால் நிறைந்திருப் பதையும், ஏமாற்றத்தால் மரிக்கும் தருவாயில் இருப்பதையும் நாம் காணலாம். அவர்களுக்கு உதவியாக, தூதர்கள் வேகமாகப் பறந்து சென்று, அவர்களைச் சூழ்ந்துள்ள தீய சேனைகளை விரட்டி யடிப்பதையும், அவர்கள் பாதங்களை உறுதியான அடித்தளத்தில் நிலைநிறுத்துவதையும் நாம் காணலாம். இவ்வுலகப் படைகளுக்கு மத்தியில் நடக்கும் யுத்தம் போலவே அவ்விரண்டு சேனைகளுக்கும் நிஜயுத்தம் நடைபெற்றுவருகிறது. ஆனால், ஆவிக்குரிய யுத்தத்தில் தான் மனிதனின் நித்திய எதிர்காலம் சம்பந்தப்பட்டுள்ளது.தீஇவ 176.1

    எசேக்கியேல் தீர்க்கதரிசிக்குக் கொடுக்கப்பட்டதரிசனத்தில், கேருபீன்களின் சிறகுகளுக்குக் கீழே ஒருகரம் தெரிந்தது. தெய்வீக வல்லமையால்தான் ஜெயமுண்டு என்பதை தேவ ஊழியர்களுக்குப் போதிப்பதே இதன் நோக்கம். தேவனால் தம் ஊழியர்களாக நிய மிக்கப்பட்டவர்கள், அந்த ஊழியம் தங்களைச் சார்ந்திருப்பதாக எண்ணக் கூடாது. இத்தகைய பொறுப்பின் பணி, அநித்தியமான வர்களிடம் விடப்படவில்லை . ஒருபோதும் உறங்காமல், தமது திட் டங்களை நிறைவேற்றச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் தேவன் தாமே தம் பணியை நிறைவேற்றுவார். தம் மக்களுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டுவோரின் ஆலோசனைகளை அதமாக்கி, துன் மார்க்கரின் நோக்கங்களை அவர் குலைத்துப் போடுவார். சேனை களின் கர்த்தரும் கேரூபின்கள் நடுவே வாசஞ் செய்பவருமான ராஜா, இந்தத் தேசத்தின் குழப்பங்களுக்கும் சச்சரவுகளுக்கும் மத்தியிலும் தம் பிள்ளைகளைப் பாதுகாக்கிறார். ராஜாக்களின் அரண்கள் உடைக்கப்பட்டு, கோபாக்கினையின் அம்புகள் அவரு டைய சத்துருக்களின் இருதயங்களை ஊடுருவும்போது, அவரு டைய மக்கள் அவருடைய கரங்களில் சுகமாயிருப்பார்கள்.தீஇவ 176.2